Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
இன்பத்தை வழங்கும் கிருஷ்ண ஜெயந்தி
Page 1 of 1 • Share
இன்பத்தை வழங்கும் கிருஷ்ண ஜெயந்தி
[img][/img]
-
தன் தங்கை தேவகிக்கும், வசுதேவருக்கும் திரு மணம் முடிந்ததும்,
அவர்களை தேரில் வைத்து ஊர்வலமாக சென்று கொண்டிருந்தான்
கம்சன்.
அப்போது, ‘உன் தங்கைக்கு பிறக்கப்போகும் எட்டாவது ஆண்
குழந்தையால் உன் உயிர் போகும்’ என்று ஒரு அசரீரி ஒலித்தது.
தன் உயிர் போகும் என்ற வார்த்தையைக் கேட்டதும், தங்கை மீதான
பாசம் தரையில் வீழ்ந்து விட்டது. ‘தன் உயிர் போனால் என்ன?
தங்கையின் நலனே முக்கியம்’ என்று நினைக்க கம்சன் ஒன்றும்
அன்பை அடிநாதமாக கொண்டவன் அல்லவே, அரக்க குணம்
படைத்தவன்தானே. தன் உயிரா? தங்கையின் உயிரா? என்று வரும்
போது, அவனுக்கு தன் உயிரே பெரிதாகப்பட்டது.
ஆகையால்தான், பாசம் வைத்திருந்த தங்கையின் மீது வாளை வீசும்
முடிவுக்கு வந்திருந்தான்.
‘கம்சா! தேவகிக்கு பிறக்கப்போகும் எட்டாவது மகனால்தானே
உனக்கு அழிவு. அவளுக்கு பிறக்கும் அத்தனை குழந்தைகளையும்
உன்னிடம் ஒப்படைத்து விடுகிறேன். தேவகியை விட்டு விடு!’ என்று
மனைவியின் மீதான பாசத்தால் அவனிடம் மன்றாடிக் கொண்டிருந்தார்
வசுதேவர்.
அவர் கூறியதில் இருந்த உண்மையை உணர்ந்து, தேவகியை கொல்லும்
எண்ணத்தை கைவிட்டான் கம்சன்.
ஆனால் அக்கணமே, வசுதேவரையும் தேவகியையும் சிறையில் அடைத்து,
தன் கண் காணிப்பிலேயே வைத்துக் கொண்டான்.
தேவகிக்கு பிறந்த குழந்தைகளை தொடர்ச்சியாக கொன்றுவிட்டான்
கம்சன். ஆயிற்று… 7 குழந்தைகளின் உயிர் இதுவரை கம்சனின் வாளுக்கு
பலியாகி விட்டது. 8-வது குழந்தையின் கருவை தன் வயிற்றில்
சுமந்திருந்தாள் தேவகி. இந்த குழந்தையும் தன் அண்ணனின் கையால்
இறக்கப்போவதை எண்ணி, கர்ப்பவதியான தேவகி கண்ணீரில் கரைந்து
கொண்டிருந்தாள்.
ஒரு நள்ளிரவு நேரத்தில் தேவகிக்கு எட்டாவதாக ஆண் குழந்தை பிறந்தது.
அக்குழந்தையைப் பார்த்ததும் வசு தேவருக்கும், தேவகிக்கும் ஏற்பட்ட
மகிழ்ச்சி, மறுகணமே மறைந்து போனது. பொழுது விடிந்ததும் கம்சன்
வந்து குழந்தையை கொண்டுபோய்விடுவான் என்பதால் அவர்கள் கலக்கம்
கொண்டிருந்தனர்.
அப்போது குழந்தை, மகாவிஷ்ணுவாக சுய உருகொண்டு பேசத்
தொடங்கியது. ‘உங்களது முற்பலனால் நான் உங்கள் மகனாக பிறந்துள்ளேன்.
என்னை கோகுலத்திற்கு கொண்டு செல்லுங்கள். அங்கு வசுதேவரின்
நண்பரான நந்தகோபருக்கு பிறந்துள்ள பெண் குழந்தையை இங்கே கொண்டு
வந்து விடுங்கள். யசோதை என்னை வளர்க்கட்டும். உரிய நேரத்தில் எல்லாம்
நல்ல விதமாக நடக்கும்’ என்று கூறிய விஷ்ணு பகவான், மறுகணமே சாதாரண
குழந்தையாக மாறினார்.
குழந்தையை மாற்றுவதற்கு தோதாக, சிறையின் வாயில்கள் தானாக திறந்தன.
காவலர்கள் மயக்கமுற்றனர். வசுதேவர் சற்றும் தாமதிக்காமல், குழந்தையை
ஒரு கூடையில் எடுத்து வைத்தபடி கோகுலம் சென்றார். குழந்தையை மாற்றிக்
கொண்டு, பெண் குழந்தையை கொண்டு வந்தார்.
சிறை வாசல் அடைத்துக் கொண் டது; காவலர்கள் கண்விழித்தெழுந்தனர்.
அவர்களுக்கு என்ன நடந்தது என்பதே மறந்து போயிற்று. வசுதேவருக்கும்,
தேவகிக்கும் கூடத்தான்.
காலையில் தேவகிக்கு குழந்தை பிறந்த செய்தி கேட்டு வந்த கம்சன்,
பெண் குழந்தையைப் பார்த்ததும் வியப்படைந்தான். ஆண் குழந்தைதானே
பிறந்திருக்க வேண்டும் என்று எண்ணியவன் இறுதியில் எந்தக் குழந்தையாக
இருந்தாலும் அதை அழித்து விடுவது என்ற முடிவில், பெண் குழந்தையை
வாளால் வெட்ட ஓங்கினான்.
ஆனால் அந்தக் குழந்தை மேல் நோக்கி பறந்தது. துர்க்கையாக வடிவெடுத்தது.
‘ஏ! கம்சா! உன்னைக் கொல்லப்போகிறவன், வேறொரு இடத்தில் பத்திரமாக
இருக்கிறான். உரிய நேரத்தில் அவன் உன்னை அழிப்பான்’ என்று கூறி
மறைந்தது.
காலம் கடந்தது. உரிய காலத்தில் கம்சனை அழித்து மக்களை காப்பாற்றினார்
கண்ணன்.
கிருஷ்ண பகவான் பிறந்தது ஆவணி மாதம் தேய்பிறையில் வரும் அஷ்டமி
திதியில் ஆகும். அன்றைய தினம் கிருஷ்ண ஜெயந்தியாக கொண்டாடப்படுகிறது.
இந்த ஆண்டுக்கான கிருஷ்ண ஜெயந்தி வருகிற 25-ந் தேதி (வியாழக்கிழமை)
கொண்டாடப்பட உள்ளது.
–
———————————————————
தினத்தந்தி

rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Similar topics
» ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி
» இன்று அனுமன் ஜெயந்தி
» கிருஷ்ண பரமாத்மா எதற்காகக் கலங்கினார்?
» சூரிய ஜெயந்தி
» மே 23 தத்தாத்ரேய ஜெயந்தி

Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum