Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
‘குற்றமே தண்டனை’ – சினிமா விமரிசனம்
Page 1 of 1 • Share
‘குற்றமே தண்டனை’ – சினிமா விமரிசனம்
[img][/img]
-
தமிழில் ஓர் உலக சினிமா’ என்கிற பின்னொட்டுடன்
விளம்பரப்படுத்தப்படும் தமிழ் சினிமாக்கள் பெரும்பாலும்
போலித்தனமான சுயபெருமிதத்துடனும், சந்தைப்படுத்தும்
உத்தியின் தந்திரத்துடனும் மட்டுமே இருந்திருப்பதைக்
கவனிக்கிறேன்.
அவ்வாறல்லாமல் உண்மையாகவே உலக சினிமாவின் தரத்தை
நோக்கி நகர முயலும் அசலான படைப்பாளியாக இயக்குநர்
மணிகண்டனைப் பார்க்க முடிகிறது.
இரானியத் திரைப்படங்களின் எளிமையின் அழகியலை
நினைவுப்படுத்தும் ‘காக்கா முட்டை’யும் ஹிட்ச்காக்கின் சஸ்பென்ஸ்
மற்றும் டோரண்டினோவின் அவல நகைச்சுவை வகையின் கலவை
முயற்சியில் உருவாகியிருக்கும் ‘குற்றமே தண்டனை’யும் அவ்வாறான
நம்பிக்கையைத் தருகின்றன.
சர்வதேசத் திரைவிழாக்களில் திரையிடப்படும் ஒரு சிறந்த படைப்பை
பார்த்துக் கொண்டிருக்கும் தோரயமான உணர்வைத் தருகிறது
‘குற்றமே தண்டனை’.
ஒரு குற்றத்துக்குப் பின் நிலைநாட்டப்படவேண்டிய நீதி என்னும்
கருத்தாக்கம், நடைமுறையில் அவ்வாறு அல்லாமல் குற்றம் என்பது
எவ்வாறு சமூகத்தின் பல்வேறு நிறுவனங்களாலும் தனி நபர்களாலும்
பொருளியல் ரீதியாக லாபம் ஈட்ட முனையும் நோக்குடன் ஒரு பண்டமாக,
சந்தர்ப்பமாக உருமாற்றப்படுகிறது என்பதை இத்திரைப்படம்
அபாரமாகப் பதிவு செய்திருக்கிறது.
‘வினை விதைத்தவன் வினையறுப்பான்’ என்கிற ஆதாரமான நீதி
பழமையானதாக இருந்தாலும் அது காலத்தாலும் எவராலும் மாற்றப்பட
முடியாத அறத்தின் அடையாளமாக நீடிப்பதையும் சுட்டிக்காட்டுகிறது.
சட்டம், நீதி என்கிற நடைமுறைகளிலிருந்து ஒருவன் சாமர்த்தியமாகத்
தப்பித்தாலும், அவனுடைய அகத்தில் பொருந்தியிருக்கும்
நீதிமன்றத்திலிருந்து எந்நாளும் அவன் தப்பிக்க முடியாது என்பதையும்
சரியாகவே பார்வையாளர்களுக்கு உணர்த்துகிறது.
***

rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Re: ‘குற்றமே தண்டனை’ – சினிமா விமரிசனம்
ரவி என்கிற இளைஞன் Tunnel Vision என்கிற பார்வைக் குறை
பாட்டினால் அவதியுறுகிறான். இயல்பான பார்வையுடைய ஒருவர்,
பைப்பின் வழியாக ஒன்றைப் பார்த்தால் எப்படித் தெரியுமோ, அப்படிப்பட்ட
குறுகிய எல்லையை மட்டுமே அவனுடைய இயல்பில் பார்க்க முடியும்.
மருத்துவமனைக்குச் சென்றால் மூன்று லட்சத்து இருபதாயிரம்
செலவாகும் என்கிறார்கள். இல்லையென்றால் சிறிது சிறிதாக அந்த
எல்லை குறைந்து ஒரு கட்டத்தில் பார்வையே போய்விடும் என்கிறார்கள்.
அவனுடைய சாதாரண பணியின் மூலம் அத்தனை பெரிய பணத்தைப்
புரட்ட முடியாது. என்ன செய்வது என அவன் தவித்துக் கொண்டிருக்கும்
போது ஒரு சந்தர்ப்பம் உருவாகிறது.
எதிர்வீட்டில் வசிக்கும் ஓர் இளம்பெண்ணை ரகசியமாகத் தொடர்ந்து
பார்த்துக்கொண்டிருப்பது இவனுடைய வழக்கம். அவ்வாறான ஒரு
தருணத்தில் சந்தேகப்படும் விதமாக அந்த வீட்டில் ஏதோ தெரியவே
விரைந்து சென்று பார்க்கிறான்.
அவ்வப்போது அங்கு வந்து செல்லும் ஒரு பணக்கார ஆசாமி வீட்டின்
உள்ளே திருதிருவென்று விழித்துக் கொண்டிருப்பதைப் பார்க்கிறான்.
இளம்பெண் கொலை செய்யப்பட்டு ரத்தச்சகதியில் இருப்பதையும்
பார்க்கிறான். இந்தச் சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்டு
தன்னுடைய மருத்துச் செலவை பணக்கார ஆசாமியிடமிருந்து கறக்க
முயல்கிறான்.
இதில் ஏற்படும் தடைகள் அனைத்தையும் ஒவ்வொன்றையும்
சாமர்த்தியமாக மீறுகிறான்.
அவனுடைய நோக்கம் நிறைவேறியதா, பணம் கிடைத்ததா,
கண்பார்வை சரியானதா என்கிற விஷயங்களைப் பரமபத ஏணி,
பாம்பு விளையாட்டின கதையாக மீதக்காட்சிகள் நிதானமாக நகரும்
சஸ்பென்ஸூடன் விவரிக்கின்றன.

பாடல்கள், நகைச்சுவைக் காட்சிகள், அதிரடி சண்டைகள் போன்ற
வழக்கமான செயற்கைத் திணிப்புகள் இல்லாமல் இருந்தாலே
ஒரு தமிழ் சினிமாவை ‘வித்தியாசமான திரைப்படம்’ என்று கருதிக்
கொள்வது நம் வழக்கம். அவ்வாறான போலி முயற்சிகளும் சில
இருக்கின்றன. ஆனால் இவ்வாறான அலைபாய்தல்களையும் தவிர்த்து
விட்டதோடு மட்டுமல்லாமல், நூல் பிடித்தாற் போல ஒரு நேர்மையான
திரைக்கதையுடன், நேரான கதைகூறல் முறையைப் பின்பற்றியிருக்கிறார்
இயக்குநர்.
சினிமா என்பது காட்சி ஊடகம் என்கிற அடிப்படையை இயக்குநர்
சரியாகப் புரிந்து கொண்டிருப்பதால் குறைவான வசனங்களோடு
காட்சிபூர்வமாகவே பெரும்பாலான படம் நகர்கிறது.
இதைப் போலவே அநாவசியமான காட்சிகளும் படத்தில் இல்லை.
கச்சிதமான 90 நிமிடங்களுக்குள் முடிந்துவிடுகிறது. சில நெருடல்கள்
தோன்றினாலும் ஒரு நல்ல திரைப்படத்தை பார்த்த முழுமையைத்
தருகிறது ‘குற்றமே தண்டனை’.
படத்தின் நாயகன் விதார்த் மிக அடக்கமாக நடித்திருக்கிறார்.
மிகப் பெரிய மருத்துவ செலவை எதிர்கொள்ள நேரும் ஒரு சராசரி நபரின்
அகம் சார்ந்த தத்தளிப்புகளை நன்றாகவே பிரதிபலித்திருக்கிறார்.
படத்தின் மிகப்பெரிய ஆச்சரியம் பூஜா தேவரியா. விதார்த்தின் மேலுள்ள
தன் காதலை அபாரமான முகபாவங்களின் வழியாகவே அவர்
வெளிப்படுத்தும் விதம் அத்தனை அழகாக இருக்கிறது.
இவர்கள் பணிபுரியும் எளிய கால்சென்டரின் உட்புறக் காட்சிகளும்
இயல்பாக பதிவாகியிருக்கின்றன. பணக்காரத் தோரணையுடன் இருக்கும்
ரஹ்மான் அந்தப் பாத்திரத்துக்கு அசலாகப் பொருந்துகிறார்.
சாட்சியைத் தங்களின் சார்பாக வளைக்க முயலும் ஜூனியர் வக்கீலாக
சோமசுந்தரம் அசத்தியிருக்கிறார். விதார்த்திடம் முதலில் சாமர்த்தியமாக
பேரம் பேச முயன்று பின்பு அசடு வழிவதும் ‘நீங்க செஞ்சதுதான்ஜி கரெக்ட்டு’
என்று பின்பு சேம் சைட் கோல் போடுவதும் என சிறிது நேரமே வந்தாலும்
அசத்தல். இன்ஸ்பெக்டராக வரும் மாரிமுத்து உள்ளிட்ட இதர பாத்திரங்களும்
இயல்பான ஒழுங்கில் இயங்குகின்றன.
ஒரு திரைப்படத்தின் அடிப்படையான விதிகளுடன் கதைகூறல் முறையை
நிகழ்த்த வேண்டும் என்கிற இயக்குநரின் நேர்மையான பிடிவாதத்தை
ஒருபுறம் பாராட்டித்தான் ஆகவேண்டும் என்றாலும் இன்னொருபுறம்
இந்த திரைக்கதையில் நாம் உணர்கிற நெருடல்கள் படத்துடன் முழுவதும்
ஒன்ற முடியாமல் சங்கடப்படுத்துகின்றன.
பாத்திரத்தின் வடிவமைப்புகளிலும் செயல்பாடுகளிலும் நம்பகத்தன்மை
என்னும் விஷயம் இன்னமும் மேம்பட்டிருக்கவேண்டும்.
–
—————————————-
தினமணி

Similar topics
» கட்டப்பாவ காணோம் – சினிமா விமரிசனம்
» கி & கா – திரைப்பட விமரிசனம்
» நண்பேன்டா – விமரிசனம்
» டிரான்ஸ்பார்மர்ஸ் தி லாஸ்ட் நைட் - திரைப்பட விமரிசனம்
» கற்பழிப்புக்கு தண்டனை

Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum