Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
அப்பாடா... இனி லைசென்ஸ், ஆர்சி புத்தகத்தை கையில் தூக்கிச் செல்ல வேண்டாம்!
Page 1 of 1 • Share
அப்பாடா... இனி லைசென்ஸ், ஆர்சி புத்தகத்தை கையில் தூக்கிச் செல்ல வேண்டாம்!
Play Store Link: https://play.google.com/store/apps/details?id=com.digilocker.android
வாகனங்களுக்கான ஆவணங்களை எந்நேரமும் கைவசம் வைத்திருக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது. இதனால் படும் அவஸ்தைகள் சொல்லி மாளாது. காரில் செல்வோர் பையில் வைத்து பத்திரமாக எடுத்துச் சென்றாலும், மறந்துவிட்டு சென்றால் பிரச்னைகளை சந்திக்க வேண்டியிருக்கும். இருசக்கர வாகனங்களில் பயணிப்போர், இந்த ஆவணங்களை பராமரிக்க தனி கவனம் செலுத்த வேண்டியிருக்கிறது. என்னதான் கவர் போட்டு எடுத்துச் சென்றாலும், தவிர்க்க முடியாத நிலைகளில் மழையிலும், வாட்டர் சர்வீஸ் செய்யும்போது நனைந்து அவை சேதமடைந்துவிடுகின்றன.
வாகன தணிக்கையின்போது இந்த ஆவணங்கள் இல்லையென்றால் என்னென்ன பிரச்னைகளை சந்திக்க வேண்டியிருக்கும் என்பது அறிந்ததுதான். இந்த பிரச்னைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ஒரு அசத்தலான வசதியை மத்திய அரசு அறிமுகம் செய்திருக்கிறது.
டிஜிலாக்கர் என்று அழைக்கப்படும் இந்த மின்னணு ஆவண பாதுகாப்பு பெட்டகத்திற்கான மொபைல் அப்ளிகேஷன் மூலமாக, அனைத்து தரப்பு மக்களுக்கும் பயன் தரும். இந்த வசதி மூலமாக, இனி அரசு துறைகளில் காகிதமில்லா ஆவண புரட்சிக்கு வித்திடும் என்று கருதப்படுகிறது.
குறிப்பாக, இந்த வசதி வாகன ஓட்டிகளுக்கு ஒரு வரப்பிரசாதமாகவே கூற முடியும். ஏனெனில், வாகன ஓட்டிகள் ஆவணங்களை பாதுகாக்கவும், பராமரிக்கவும் தேவைப்படும் நடைமுறை சிரமங்களை இந்த டிஜிலாக்கர் வசதி முற்றிலும் ஒழித்துவிடும்.
மத்திய போக்குவரத்து அமைச்சகமும், தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகமும் இணைந்து இந்த சேவையை வழங்குகின்றன.
அதாவது, இது ஆன்லைனில் நமது முக்கிய ஆவணங்களை பாதுகாப்பாக சேமித்து வைக்கும் தொழில்நுட்பம்தான் இந்த டிஜிலாக்கர். கூகுள் டிரைவ் போன்றே இந்த வசதி தற்போது அரசாங்கத்தால் வழங்கப்படுகிறது. எனவே, இது மிகவும் நம்பகமான ஆவண பாதுகாப்பு முறை.
மேலும், அரசாங்கத்தால் வழங்கப்படும் தனிநபர் சான்றுகள், ஆவணங்களை இந்த டிஜிலாக்கர் மூலமாகவே நேரடியாகவே பெற முடியும். இதன்மூலமாக, டிரைவிங் லைசென்ஸ் பெறுதல், வாகன பதிவு ஆவணம் போன்றவற்றை எளிதாக பெறும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதிலேயே பாதுகாத்து வைத்துக் கொள்ளலாம்.
இது பயன்பாட்டுக்கு வரும்போது கார், பைக்கில் செல்லும்போது இனி காகித ஆவணங்களை எடுத்துச் செல்ல வேண்டிய அவசியம் இருக்காது. வாகன தணிக்கையின்போது, உங்களது மொபைல்போனில் இருக்கும் டிஜிலாக்கர் செயலி மூலமாகவே ஆர்சி புக், டிரைவிங் லைசென்ஸ் போன்றவற்றை சம்பந்தப்பட்ட தணிக்கை அதிகாரியிடம் காட்டலாம்.
இதேபோன்று, சாலை விதிமுறைகளை மீறுவோர்க்கும் இந்த செயலி மூலமாகவே தகவல் அளித்து, அபராதத்தை செலுத்தும் நடைமுறையையும் கொண்டு வர திட்டமிடப்பட்டிருக்கிறது. இந்த டிஜிலாக்கரை மொபைல்போனில் பதிவிறக்கம் செய்து, அதில் உங்களது மொபைல்போன் எண் மற்றும் ஆதார் எண் உள்ளிட்ட விபரங்களை அளித்து கணக்கை துவங்கிக் கொள்ளலாம்.
உங்களது ஆவணங்களை அதிகாரி சரிபார்த்தபின், அந்த ஆவணங்களை நீங்கள் பாதுகாப்பாக பயன்படுத்த முடியும். இயற்கை சீற்றங்கள், ஆவணங்கள் காணாமல் போகும் பிரச்னைகளுக்கும் இது தீர்வாக அமையும்.
டிரைவிங் லைசென்ஸ், ஆர்சி புக் என்றில்லை, இதர அரசு ஆவணங்களை பெறுவதற்கும், தற்போதுள்ள ஆவணங்களை ஸ்கேனர் கருவி மூலமாக, சுய கையொப்ப அத்தாட்சியுடன் நீங்களே இதில் பதிவேற்றி பாதுகாக்கும் வசதியையும் அளிக்கும். பிரதமர் மோடியின் டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் இந்த புதிய சேவை அறிமுகம் செய்யப்படுகிறது.
ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன் வைத்திருப்பவர்கள் இந்த வசதியை பெற முடியும். தெலங்கானா மற்றும் டெல்லியில் இந்த வசதி முதலில் நடைமுறைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதேநேரத்தில், ஹேக்கர்கள் மூலமாக தகவல்கள் திருடப்படும் அபாயம் இருப்பதுதான் இந்த திட்டத்திற்கு மிகப்பெரிய சவாலாக இருக்கும் என்று கருதப்படுகிறது.
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: அப்பாடா... இனி லைசென்ஸ், ஆர்சி புத்தகத்தை கையில் தூக்கிச் செல்ல வேண்டாம்!
பயனுள்ள நல்ல தகவல் நன்றி ஸ்ரீராம்
ஆனால் இதை படிக்கும்போது மனதிற்குள் ஓடியது மொபைலில் சார்ஜ் இல்லை என்றால் என்ன செய்வது ???????????
ஆனால் இதை படிக்கும்போது மனதிற்குள் ஓடியது மொபைலில் சார்ஜ் இல்லை என்றால் என்ன செய்வது ???????????
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: அப்பாடா... இனி லைசென்ஸ், ஆர்சி புத்தகத்தை கையில் தூக்கிச் செல்ல வேண்டாம்!
ரானுஜா wrote:பயனுள்ள நல்ல தகவல் நன்றி ஸ்ரீராம்
ஆனால் இதை படிக்கும்போது மனதிற்குள் ஓடியது மொபைலில் சார்ஜ் இல்லை என்றால் என்ன செய்வது ???????????
இப்பதான் சென்னையில் எங்கேயும் Wifi இருக்கே அக்கா @ரானுஜா
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: அப்பாடா... இனி லைசென்ஸ், ஆர்சி புத்தகத்தை கையில் தூக்கிச் செல்ல வேண்டாம்!
ஸ்ரீராம் wrote:ரானுஜா wrote:பயனுள்ள நல்ல தகவல் நன்றி ஸ்ரீராம்
ஆனால் இதை படிக்கும்போது மனதிற்குள் ஓடியது மொபைலில் சார்ஜ் இல்லை என்றால் என்ன செய்வது ???????????
இப்பதான் சென்னையில் எங்கேயும் Wifi இருக்கே அக்கா @ரானுஜா
யார் சொன்னாங்க Wifi இருக்குனு ?
நான் சொன்னது மொபைலில் சார்ஜ் இல்லைனா எப்படி காட்டமுடியும்னு கேட்டேன்
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Re: அப்பாடா... இனி லைசென்ஸ், ஆர்சி புத்தகத்தை கையில் தூக்கிச் செல்ல வேண்டாம்!
ரானுஜா wrote:ஸ்ரீராம் wrote:ரானுஜா wrote:பயனுள்ள நல்ல தகவல் நன்றி ஸ்ரீராம்
ஆனால் இதை படிக்கும்போது மனதிற்குள் ஓடியது மொபைலில் சார்ஜ் இல்லை என்றால் என்ன செய்வது ???????????
இப்பதான் சென்னையில் எங்கேயும் Wifi இருக்கே அக்கா @ரானுஜா
யார் சொன்னாங்க Wifi இருக்குனு ?
நான் சொன்னது மொபைலில் சார்ஜ் இல்லைனா எப்படி காட்டமுடியும்னு கேட்டேன்
அவரே வருசத்துக்கு ஒரு போஸ்ட் போடுறாரு
இப்படியெல்லாம் கேள்வி கேட்டா ..........
Last edited by முரளிராஜா on Sat Sep 10, 2016 10:52 am; edited 1 time in total
Re: அப்பாடா... இனி லைசென்ஸ், ஆர்சி புத்தகத்தை கையில் தூக்கிச் செல்ல வேண்டாம்!
மேற்கோள் செய்திங்களே எதுவும் சொல்லலையா ?
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Re: அப்பாடா... இனி லைசென்ஸ், ஆர்சி புத்தகத்தை கையில் தூக்கிச் செல்ல வேண்டாம்!
அவரே வருசத்துக்கு ஒரு போஸ்ட் போடுறாரு
இப்படியெல்லாம் கேள்வி கேட்டா ..........
அக்கா நான் சொன்னது மேலே இதான்
அவரே வருசத்துக்கு ஒரு போஸ்ட் போடுறாரு
இப்படியெல்லாம் கேள்வி கேட்டா ..........
Re: அப்பாடா... இனி லைசென்ஸ், ஆர்சி புத்தகத்தை கையில் தூக்கிச் செல்ல வேண்டாம்!
நான் சொன்னது மொபைலில் சார்ஜ் இல்லைனா எப்படி காட்டமுடியும்னு கேட்டேன்
ஓ நீங்க அந்த சார்ஜ் சொன்னீங்களா? அதுக்கு எதுவும் செய்ய முடியாது அக்கா.
வேணும்னா Power Bank ஒன்று வாங்கி வைத்துக்கொள்ளுங்கள்.
அப்படி இல்லையா ட்ராஃபிக் போலீஸிடம் என்கிட்ட மொபைல் இருக்கு, டிஜிலாக்கர் ஆப் கூட இருக்கு, ஆனால் பவர் இல்லையே. உங்களிடம் பவர் பாங்க் இருந்தால் சொல்லுங்க ஆன் செய்து காண்பிக்கிறேன் என்று சொல்லுங்க.
அப்புறம் உங்களை கண்டாலே ஓடி விடுவார்கள்.
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: அப்பாடா... இனி லைசென்ஸ், ஆர்சி புத்தகத்தை கையில் தூக்கிச் செல்ல வேண்டாம்!
அக்கா நான் சொன்னது மேலே இதான்
அவரே வருசத்துக்கு ஒரு போஸ்ட் போடுறாரு
இப்படியெல்லாம் கேள்வி கேட்டா ..........
நானாவது வருஷம் ஒரு போஸ்ட் போடுறேன். உங்களை ...
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: அப்பாடா... இனி லைசென்ஸ், ஆர்சி புத்தகத்தை கையில் தூக்கிச் செல்ல வேண்டாம்!
முரளிராஜா wrote:அவரே வருசத்துக்கு ஒரு போஸ்ட் போடுறாரு
இப்படியெல்லாம் கேள்வி கேட்டா ..........
அக்கா நான் சொன்னது மேலே இதான்
அவரே வருசத்துக்கு ஒரு போஸ்ட் போடுறாரு
இப்படியெல்லாம் கேள்வி கேட்டா ..........
ஹா ஹா சரி சரி
ஆனா மண்டைக்குள்ள கேள்வி ஓடினா கேட்டுரனும்
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Re: அப்பாடா... இனி லைசென்ஸ், ஆர்சி புத்தகத்தை கையில் தூக்கிச் செல்ல வேண்டாம்!
ஸ்ரீராம் wrote:நான் சொன்னது மொபைலில் சார்ஜ் இல்லைனா எப்படி காட்டமுடியும்னு கேட்டேன்
ஓ நீங்க அந்த சார்ஜ் சொன்னீங்களா? அதுக்கு எதுவும் செய்ய முடியாது அக்கா.
வேணும்னா Power Bank ஒன்று வாங்கி வைத்துக்கொள்ளுங்கள்.
அப்படி இல்லையா ட்ராஃபிக் போலீஸிடம் என்கிட்ட மொபைல் இருக்கு, டிஜிலாக்கர் ஆப் கூட இருக்கு, ஆனால் பவர் இல்லையே. உங்களிடம் பவர் பாங்க் இருந்தால் சொல்லுங்க ஆன் செய்து காண்பிக்கிறேன் என்று சொல்லுங்க.
அப்புறம் உங்களை கண்டாலே ஓடி விடுவார்கள்.
அதெப்படி ஆப்ஸ் கண்டுபிடிச்சா இதுக்கும் பதில் இருக்கணும் அப்புறம் எதுக்கு அந்த ஆப்ஸ்.
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Re: அப்பாடா... இனி லைசென்ஸ், ஆர்சி புத்தகத்தை கையில் தூக்கிச் செல்ல வேண்டாம்!
அதெப்படி ஆப்ஸ் கண்டுபிடிச்சா இதுக்கும் பதில் இருக்கணும் அப்புறம் எதுக்கு அந்த ஆப்ஸ்.
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: அப்பாடா... இனி லைசென்ஸ், ஆர்சி புத்தகத்தை கையில் தூக்கிச் செல்ல வேண்டாம்!
ஆகாஸ்ரீராம் wrote:அதெப்படி ஆப்ஸ் கண்டுபிடிச்சா இதுக்கும் பதில் இருக்கணும் அப்புறம் எதுக்கு அந்த ஆப்ஸ்.
Similar topics
» ஆஸ்திரேலியாவில் சிறுவனை தூக்கிச் செல்ல முயன்ற கழுகால் பரபரப்பு! (விடியோ இணைப்பு)
» 20 ஆயிரம் என்.ஜி.ஓ., லைசென்ஸ் அதிரடி ரத்து
» சர்க்கரை நோய்க்கு மாத்திரை வேண்டாம், ஊசி வேண்டாம்.
» உள்துறை செயலர் எழுதிய புத்தகத்தை வெளியிட்டார் ராஜ்நாத் சிங்
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
» 20 ஆயிரம் என்.ஜி.ஓ., லைசென்ஸ் அதிரடி ரத்து
» சர்க்கரை நோய்க்கு மாத்திரை வேண்டாம், ஊசி வேண்டாம்.
» உள்துறை செயலர் எழுதிய புத்தகத்தை வெளியிட்டார் ராஜ்நாத் சிங்
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum