Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
நிசப்தம்
Page 1 of 1 • Share
நிசப்தம்
தமிழ் சினிமா இன்னும் பெருமிதம் கொள்ள ஒரு படம் ‘நிசப்தம்’. இளம்பெண்களுக்கான பாதுகாப்புக்குக் கொஞ்சமும் உத்திரவாதம் இல்லை. இன்னும் மோசமாக பெண் குழந்தைகளும் எப்படி இந்த வல்லுறவுக்கு ஆளாகிறார்கள் என்பதே கதைக் கரு. வெறும் ஆக்ஷனும், காமமும், கேளிக்கையும் மட்டுமே அதிகம் புழங்கும் சினிமாவில் விழிப்புணர்வுக்கு வரவேற்பு குடை விரித்ததற்கு மைக்கேல் அருணுக்கு பூங்கொத்து!
அஜய்யும், அபிநயாவும் மனமொத்த தம்பதிகள். அவர்களது மகள் சாதன்யா பள்ளிக்குப் போய்க் கொண்டிருப்பதிலிருந்து தொடங்குகிறது கதை. ஒரு மழைநாளில் பள்ளிக்கு போகும்போது வக்கிரம் பிடித்த ஒருவனின் கண்ணில்பட நடக்கக் கூடாதது நடக்கிறது. இறுதியில் சாதன்யா சகஜ நிலைக்குத் திரும்பினாளா, தர்மசங்கடமான பெற்றோர்களின் நிலை என்ன என்பதே உலுக்கி எடுக்கும் இறுதி நிகழ்வு.
மிக மிக எளிமையான ட்ரீட்மென்ட். ஆனால், அவ்வளவு வலிமையான உணர்வுகள். சாதன்யாவின் அப்பாவாக அஜய். கேரக்டருக்கு அப்படியே பொருத்தம். குழந்தை தவிர்க்க முடியாமல் இந்த நிலைக்கு ஆளானபிறகு, தன் நிலைக்குத் திரும்புவது, கொந்தளித்து எழுவது, சூழ்நிலையைப் புரிந்துகொள்வது, மகளை மீட்பது என அச்சு அசல் அப்பாவாகவே வாழ்ந்திருக்கிறார்.
Last edited by rammalar on Tue Mar 28, 2017 11:23 am; edited 1 time in total
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Re: நிசப்தம்
எப்போதும் கண்ணில் பெரும் சோகத்தோடு, அப்பாவைப் பார்க்கவே மனம் கொள்ளாமல் மகள் முகத்தை மறைக்கும் வேளையில் அழுது, அரற்றி, உயிர் துடிக்கும் வகையில் துடிப்பது மாஸ்டர்பீஸ்! மனைவியாக அபிநயா நல்ல தேர்வு. ஆரம்பத்தில் அழுது துடிப்பவர், பின்பு சூழலை அனுசரித்து யதார்த்தத்திற்குத் திரும்பி, மகளை பழைய நிலைக்குத் திருப்புவது அழகு.
அஜய்க்கு துணை நிற்கும் பழனி, ஹம்சா, சாதன்யாவின் பள்ளித் தோழர்கள், உளவியல் நிபுணராக ருத்து என அத்தனை பேரும் அழகான தேர்வுகள். படம் முழுக்க இதயம் தொடும் வசனங்கள் பெரிய பலம். ‘நீங்க ரெண்டு பேரும் பிஸியாக இருப்பீங்கனுதான் 100க்கு போன் பண்ணிச் சொன்னேன்’ என நடந்த சம்பவத்திற்குப் பிறகு சாதன்யா பேசும்போது மெல்லிய இதயங்கள் உருகிக் கரைந்துவிடும்.
எவ்வளவு கொடியவர்களுக்கும் நீதி வளைந்து கொடுக்கத் தயாராகவும், அவர்களுக்கான நியாயங்களும் இருக்கின்றன என்பதைக் காட்டிய விதத்திலும் இயக்குநர் முத்திரை பதிக்கிறார். ஒவ்வொரு சூழ்நிலையிலும் பொதுவாழ்வின் மீதான அக்கறை தொனிப்பதற்கு கூடுதல் வணக்கம்! மறைந்த நா.முத்துக்குமாரின் பாடல்கள் நுண்ணிய உணர்வில் நெகிழ்த்துகின்றன.
நமக்கு அருகில் இருக்கிற வீட்டில் இத்தனை சம்பவங்கள் நடப்பது போன்ற நெருங்கிய உணர்வை ஏற்படுத்துகிறார் அறிமுக ஒளிப்பதிவாளர் எஸ்.ஜே. ஸ்டார். ஒவ்வொரு பதற்ற வேளையிலும்அறிமுக இசையமைப்பாளர் ஹான் ஜஸில் தன் கடமையை அற்புதமாகச் செய்கிறார். மனிதம் பேசும் படம்… நம் சிறார்களின் பாதுகாப்பை பேசும் ‘நிசப்த’த்திற்கு ஒரு ராயல் சல்யூட்!
-
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum