Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
நாமெல்லாம் கேரட் தின்று வளர்ந்த பரம்பரை!
Page 1 of 1 • Share
நாமெல்லாம் கேரட் தின்று வளர்ந்த பரம்பரை!
கற்காலத்தில் இருந்து கணினி யுகம் வரை பல்லாயிரம்
ஆண்டுகளாக மனித குலம், நாகரிகத்தை நோக்கி மெள்ள
மெள்ள நகர்ந்துகொண்டிருக்கிறது.
ஆனாலும், நிறம், இனம், மதம் என்று பல்வேறு காரணங்களால்
மனிதர்களிடையே உள்ள பாகுபாடுகளும் பரஸ்பர
வெறுப்புகளும் இன்னமும் மறையவில்லை. கற்காலத்தின்
காட்டுமிராண்டித்தனங்கள் எப்போதும் வேண்டுமானாலும்
விழித்துக்கொள்ளும் ஆபத்து நாகரிகத்தின் அடியில்
உயிர்ப்புடன் இருக்கிறது.
இவ்வாறான பாகுபாடுகள், வேறுபாடுகள், பகைமைகள் என்று
எதுவும் இல்லாமல் அன்புடன் ஒற்றுமையாக வாழ்ந்தால் அந்த
உலகம் எப்படி இருக்கும்?
அது சாத்தியமானால் நன்றாக இருக்கும் என்று
தோன்றுகிறதுதானே? அவ்வாறான ஓர் உணர்வை, விலங்குகளின்
கதை வழியாக அழுத்தமாகவும் ஜாலியாகவும் பதியவைக்கிறது,
ஜூடோபியா (Zootopia).
2016-ம் ஆண்டில் வெளியான திரைப்படங்களில் அதிக வசூலை
ஈட்டிய பட்டியலில் நான்காவது இடத்தைப் பெற்றுள்ள இந்தத்
திரைப்படம், ‘அனிமேஷன்’ பிரிவில் கோல்டன் குளோப் விருதைப்
பெற்றுள்ளது. ஆஸ்கர் விருதுக்கான நாமினேஷன் பட்டியலிலும்
உள்ளது.
நாகரிக வளர்ச்சியும் சமூக நல்லிணக்கமும் மேம்பட்டிருக்கும்
காலம். இரையை வேட்டையாடும் விலங்குகளும் அவற்றுக்கு
இரையாகும் விலங்குகளும் தங்களின் பாரம்பரிய குணங்களை
மறந்து ஒற்றுமையாக வாழும் உலகம் அது.
அந்த உலகத்தில், ரூடி என்கிற சிறிய முயல்குட்டிக்கு இளம் வயது
முதலே ஒரு கனவு இருக்கிறது. காவல்துறையில் பணிபுரிய
வேண்டும் என்பதே அது. ‘ஓங்கி அடிச்சா ஒன்றரை டன் வெயிட்டுடா’
என்று துரைசிங்கமாக முழங்க விரும்பும் அந்த முயல்குட்டியின்
உயரம் ஒன்றரை அடிகூட இல்லை.
ஆனால், ரூடிக்கு அதெல்லாம் ஒரு தடையே இல்லை. தீமையை
எங்குப் பார்த்தாலும் தட்டிக் கேட்கிறது. உதை வாங்கினாலும்
தன் கனவை மாற்றிக்கொள்ள அது தயாராக இல்லை. இந்த
உலகத்தின் நல்ல மாற்றங்களுக்கு தானும் ஒரு காரணமாக இருக்க
என வேண்டும் நினைக்கிறது. ஆனால், ரூடியின் பெற்றோர்களுக்கு
கவலை.
‘நாமெல்லாம் கேரட் தின்று வளர்ந்த பரம்பரை. நமக்கு எதற்கு
பொல்லாப்பு? இருக்கிற இடம் தெரியாம வளரணும்டா செல்லம்’
என்று பழைய நடைமுறையை விளக்கி அறிவுறுத்துகிறார்கள்.
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Re: நாமெல்லாம் கேரட் தின்று வளர்ந்த பரம்பரை!
ரூடி அதையெல்லாம் காதில் வாங்காமல் கடுமையான
பயிற்சிகளைத் தாண்டி காவல் துறையில் இணையும் தகுதியைப்
பெற்றுவிடுகிறது. மிடுக்கான நடையுடன் நகரத்தை நோக்கி
செல்கிறது. காட்டெருமை, யானை என்று பிரமாண்டமான அளவில்
உள்ள காவல் துறை பணியாளர்களுக்கு இடையில், அப்பாவி ரூடி
இன்னமும் சிறியதாக தெரிகிறது.
அதை அலட்சியமான புன்னகையுடன் பார்க்கும் அதிகாரி ‘பார்க்கிங்
டிக்கெட்’ பணியைத் தருகிறார். சாகச உலகை எதிர்பார்த்து வந்த
ரூடிக்கு இது ஏமாற்றமாக இருந்தாலும், அந்தச் சாதாரண பணியிலும்
சிறப்பாகப் பணிபுரிகிறது. போகும் வழியில் நிக் என்கிற நரி
ஏமாற்றுச் செயல்களை செய்து, பணம் சம்பாதிப்பதை பார்த்து
கண்டிக்கிறது.
ஆனால், ஆதாரம் எதுவும் இல்லாததால் அதை எதுவும் செய்ய
முடியவில்லை.
‘தன்னுடைய கணவரை காணோம்’ என்று கண்ணீரும் கம்பலையுமாக
வந்து நிற்கிறது ஒரு நீர்க்கரடி. ‘இந்த கேஸையாவது என்னிடம்
தாருங்களேன்’ என கெஞ்சுகிறது ரூடி. அனுமதி மறுக்கப்படுகிறது
என்றாலும், துணை மேயரின் பரிந்துரையின் பேரில் அந்த வழக்கை
கையாள அனுமதி தருகிறார் தலைமை அதிகாரி.
’48 மணி நேரத்துக்குள் இதைக் கண்டுபிடிக்க வேண்டும். இல்லை
என்றால் வேலையை ராஜினாமா செய்துவிட்டு ஓட வேண்டும்,
சின்ன முயலே சம்மதமா?” என்கிறார்.
-
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Re: நாமெல்லாம் கேரட் தின்று வளர்ந்த பரம்பரை!
‘டீல்’ என்று சொல்லிவிட்டு, ‘சிங்கம் ஒன்று புறப்பட்டதே’ என்று கெத்தாக
கிளம்புகிறது. ஆனால், எங்கிருந்து ஆரம்பிப்பது என்று குழப்பம்.
காணாமல்போனது ஒரு விலங்கு மட்டுமல்ல, மொத்தம் 14 விலங்குகள்.
நரியான நிக்கின் உதவியைக் கேட்கிறது. அது அலட்டலாக மறுக்க,
அதன் வாயில் இருந்தே பிடுங்கிய வாக்குமூலத்தின் மூலம் மடக்கி
தன்னுடன் வரவைக்கிறது
. விலங்குகள் காணாமல்போனதற்கு பின்னால் மிகப்பெரிய சதித்
திட்டம் இருக்கிறது. ரூடியும் நிக்கும் இணைந்து சில பல சாகசங்களுக்குப்
பின்னால் உண்மையைக் கண்டுபிடிக்கின்றன. ஆனாலும் அது பாதி
உண்மை மட்டுமே என்று தெரியவருகிறது.
தவறான ஆள் கைது செய்யப்பட்ட சூழலில் உண்மையான சதிகாரன்
வேறு. அந்தச் சதித்திட்டம் என்ன, முயலும் நரியும் இணைந்து அதை
எவ்வாறு கண்டுபிடித்தார்கள், உண்மையான குற்றவாளி யார் என்கிற
விறுவிறுப்பான காட்சிகளுடன் மீதமுள்ள படம் நிறைகிறது.
ஒரு அனிமேஷன் திரைப்படம் சிறப்பாக அமைவது
முதன்மையானது அதன் கற்பனை. இரண்டாவது காரணம், அதன்
உருவாக்கம். இந்த வகையில் ஜூடோபியா திரைப்படத்தை
உருவாக்கிருப்பதை அதிகம் விளக்காமல் ஒரே வரியில் சொல்லி
விடலாம்.
அனிமேஷன் திரைப்படங்களின் பிதாமகரான ‘வால்ட் டிஸ்னி’யின்
அனிமேஷன் ஸ்டூடியோ இதை உருவாக்கியிருக்கிறது என்பதே
இதன் சிறப்பை விளக்க போதுமானதாக இருக்கும். வண்ணமயமான,
அபாரமான உருவாக்கம். வரைகலைநுட்பத்தின் உச்சத்தை
இந்தத் திரைக்கதையின் கற்பனைக்கு மிகச் சிறப்பாக பயன்
படுத்தி இருக்கிறார்கள். மிக ஜாலியான, சுவாரஸ்யமான இந்தத் த
திரைப்படத்தை இயக்கி இருப்பவர்கள்
Byron Howard மற்றும் Rich Moore.
துறுதுறுப்பான ரூடியின் தோற்றமும் சாகசங்களும் நம்மை
கவர்கின்றன. விசாரணைக்காக முயலும் நரியும் ஒரு மாஃபியா
தாதாவைச் சந்திக்கின்றன. ‘காட்பாதர்’ மார்லன் பிராண்டாவை
நினைவுப்படுத்தும் காட்சிகளாக அந்தப் பாத்திரம் அமைந்திருப்பது
ரகளையான நகைச்சுவை. நரியான ‘நிக்’ ஏமாற்றிப் பிழைப்பது
போலத் தெரிந்தாலும், அதற்குப் பின்னாலும் ஒரு சோகமான
பிளாஷ்பேக் இருக்கிறது.
ஆம். ரூடியைப் போலவே அதுவும் இளம் வயதில் காவல் துறையில்
சேர விரும்பியது. ஆனால், நரி என்றாலே ஏமாற்றுக் குணமுடையதாக
இருக்கும் என்கிற முன்தீர்மான எண்ணத்தினால் வெளியே துரத்தப்
படுகிறது. ‘போங்கடா’ என்று ஏமாற்றும் தொழிலில் குதித்திருக்கிறது
நரி.
எந்தவோர் இனத்தையும், சமூகத்தைச் சார்ந்த நபரையும் முன்
தீர்மானத்தோடு அணுகக் கூடாது என்கிற செய்தி மிக அழுத்தமாக ந
ம்முன் வந்து விழுகிறது. இதுபோல சமூக மாற்றத்துக்கும்
நல்லிணத்துக்கும் அடிப்படையான பல விஷயங்கள், பிரச்சாரத் தொனி
இல்லாமல் இயல்பாக திரைப்படத்தில் கலந்திருக்கிறார்கள்.
சிறுவர்களுக்கான சினிமாக்களில் தனித்த இடம் ஜூடோபியாவுக்கு
தனி இடம் உண்டு
.-
————————————————
நன்றி- விகடன்
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Similar topics
» செய்திகள் தின்று தின்று... - ருத்ரா
» நாமெல்லாம் எவ்ளோ புத்திசாலி?!
» டுவிட்டர் (Twitter) வளர்ந்த கதை
» சிங்கப்பூர் வளர்ந்த கதை : தொடர்
» பழம் தின்று ....?
» நாமெல்லாம் எவ்ளோ புத்திசாலி?!
» டுவிட்டர் (Twitter) வளர்ந்த கதை
» சிங்கப்பூர் வளர்ந்த கதை : தொடர்
» பழம் தின்று ....?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|