Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
தம்பிதுரை ஓட்டம்; மத்திய அமைச்சர் கைவிரிப்பு : விவசாயிகள் போராட்டம் நீடிப்பு
Page 1 of 1 • Share
தம்பிதுரை ஓட்டம்; மத்திய அமைச்சர் கைவிரிப்பு : விவசாயிகள் போராட்டம் நீடிப்பு
--
புதுடெல்லி :
தமிழக விவசாயிகளை நேற்று நேரில் சந்திக்க சென்ற
மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, விவசாயிகளுடன்
ஏற்பட்ட வாக்குவாதத்தை அடுத்து ஏமாற்றத்துடன் அங்கிருந்து
புறப்பட்டு சென்றார்.
வறட்சி நிவாரணம், காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது
உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக
விவசாயிகள் டெல்லியில் கடந்த 30 நாட்களுக்கும் மேலாக
போராடி வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம், தம்பிதுரையின் அழைப்பின்
பேரில் அவரது வீட்டிற்கு அய்யாக்கண்ணு உட்பட 5 விவசாயிகள்
நேரில் சென்று சந்தித்தனர்.
அப்போது, கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு அவற்றை
பிரதமர், மத்திய நிதியமைச்சர், மத்திய விவசாயத்துறை
அமைச்சர் ஆகியோரிடம் சமர்ப்பித்து அவர்கள் அளிக்கும்
உறுதிமொழியை காண்பிப்பதாகவும், அதனை ஏற்று விவசாயிகள்
போராட்டத்தை முடித்துக் கொள்ள வேண்டும் எனவும் தம்பிதுரை
உறுதியளித்ததாக தெரிகிறது.
ஆனால், நேற்று நண்பகல் போராட்டக்களத்திற்கு வந்த தம்பிதுரை,
விவசாயிகளின் கோரிக்கைகள் அடங்கிய மனுவை சம்பந்தப்பட்ட
அமைச்சர்களின் அலுவலகத்தில் ஒப்படைத்துவிட்டதாகக் கூறி
அதற்கான அத்தாட்சி கடிதத்தை விவசாயிகளிடம் காட்டியுள்ளார்.
ஆனால், கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கான உறுதிமொழி
கடிதம் தான் வேண்டும். மனுக்களை பெற்றுக் கொண்டதற்கான
கடிதத்தை காட்டி போராட்டததை கைவிடுமாறு ஏன் கேட்கிறீர்கள்?
என கூறி தம்பிதுரையிடம் விவசாயிகள் வாக்குவாதம் செய்தனர்.
இதனால் கோபமடைந்த அவர் அங்கிருந்து விருட்டென கிளம்பி
சென்றார்.
மத்திய அமைச்சர் கைவிரிப்பு:
தம்பிதுரை திரும்பி சென்ற சில மணி நேரத்தில் மாலை
5.30 மணியளவில் மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்
விவசாயிகளை சந்திக்க ஜந்தர் மந்தருக்கு வந்தார்.
அப்போது, விவசாயிகளிடையே பேசிய அமைச்சர்
பொன்.ராதாகிருஷ்ணன், “கோரிக்கை மனுக்களை என்னிடம்
அளிக்குமாறு தெரிவித்தும் இதுவரை நீங்கள் அளிக்கவில்லை.
நாடாளுமன்ற கூட்டத்தொடர் முடிந்துவிட்டதால், அமைச்சர்கள்
சொந்த தொகுதிகளுக்கு சென்று விட்டனர். இதனால் அவர்களிடம்
மனுக்களை சேர்க்க முடியவில்லை. இருப்பினும் உங்களது
கோரிக்கைகளை சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்களுக்கு
தெரியப்படுத்திவிட்டேன். அவர்கள் ஏதேனும் பதில் தெரிவித்தால்
அவற்றை உங்களிடம் தெரிவிக்கிறேன்” என கூறிவிட்டு
அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.
இதைத் தொடர்ந்து, விவசாயிகளின் போராட்டத்துக்கு தலைமை
ஏற்றுள்ள அய்யாக்கண்ணு அளித்த பேட்டியில், ‘‘தம்பிதுரை
எங்களை ஏமாற்றிவிட்டார். அதேபோன்று, அமைச்சர்
பொன்.ராதா கிருஷ்ணன், எங்கள் மீது தவறான குற்றச்சாட்டை
கூறியுள்ளார்.
அவரிடம் இருந்து எங்களுக்கு எந்தவிதமான அழைப்பும்
வரவில்லை. அதனால் நாங்கள் அவரை சந்திக்க செல்லவில்லை.
மனு கொடுக்க தாமதம் செய்ததால் தன்னால் எதுவும் செய்ய
இயலவில்லை என அமைச்சர் இப்போது கூறுகிறார்.
இதற்கு முன்னதாக 4 முறை சம்பந்தப்பட்ட துறையில் மனுக்களை
கொடுத்துள்ளோம். ஆனால், அவர்கள் எந்த நடவடிக்கையும்
எடுக்கவில்லை. உண்மையில், அமைச்சரின் இயலாமையால்
எங்கள் மீது பழிபோட்டு தப்பிக்கவே இதுபோன்ற புகாரை கூறுகிறார்.
இது நியாயமானது அல்ல. எங்கள் போராட்டம் தொடர்ந்து நடக்கும்’’
என்றார்.
-
----------------------------
தினகரன்
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Similar topics
» டெல்லியில் முகத்தில் கரியை பூசி விவசாயிகள் போராட்டம்
» வறட்சி நிவாரணம் கோரி திருச்சியில் விவசாயிகள் எலிக்கறி உண்டு போராட்டம்
» மத்திய அமைச்சர் நிதின் கட்கரிக்கு நடிகர் கமல் கண்டனம்
» புதுதில்லி: மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர், இன்று சென்னை வருகிறார். இரண்டாண்டு க
» நீட் தேர்வு; தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வாய்ப்பில்லை: மத்திய அமைச்சர் அஸ்வினி குமார்
» வறட்சி நிவாரணம் கோரி திருச்சியில் விவசாயிகள் எலிக்கறி உண்டு போராட்டம்
» மத்திய அமைச்சர் நிதின் கட்கரிக்கு நடிகர் கமல் கண்டனம்
» புதுதில்லி: மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர், இன்று சென்னை வருகிறார். இரண்டாண்டு க
» நீட் தேர்வு; தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வாய்ப்பில்லை: மத்திய அமைச்சர் அஸ்வினி குமார்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum