தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» தேர்தல் நாடகம்
by RAJU AROCKIASAMY

» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


வரலாற்றின் பரிமாணத்தில் பதிவான வெள்ளி மறைப்பு நிகழ்வுகள். . !

View previous topic View next topic Go down

வரலாற்றின் பரிமாணத்தில் பதிவான வெள்ளி மறைப்பு நிகழ்வுகள். . ! Empty வரலாற்றின் பரிமாணத்தில் பதிவான வெள்ளி மறைப்பு நிகழ்வுகள். . !

Post by பூ.சசிகுமார் Fri Dec 07, 2012 12:05 am

வெள்ளி மறைப்பு என்றால் என்ன?

வானில் வளைய வரும் வான் பொருட்களான சூரியன், சந்திரன், வெள்ளி மற்றும் புதன் போன்றவை ஒன்றை ஒன்று தொட்டு விளையாடுகின்றன. அவற்றின் உருவம் பெரிதாக இருந்து, ஒன்றை ஒன்று முழுமையாக மறைத்தால், அது கிரகணம். மறைக்க முயலும்/சூரிய பிம்பத்துக்குள் வரும் பொருள் சிறிதாக இருந்தால், அதனை மறைப்பு என்கிறோம். வெள்ளி மறைப்பு என்பது கிட்டத்தட்ட சூரிய கிரகண்ம் போலத்தான். எப்படி சூரிய கிரகணத்தில் பூமிக்கும், சூரியனுக்கும் இடையே நிலவு வருகிறதோ, அது போலவே, வெள்ளி மறைப்பில், பூமி, சூரியனுக்கு இடையில் வெள்ளியார் மிக மெதுவாக வலம் வருவார். முழு கிரகணத்தில் சூரியன் நிலவின் உருவால் மறைக்கப்படும்; இதில் வெள்ளி சின்ன கரும்புள்ளியாக சூரியனின் ஒரு ஓரத்தில் குறுக்கு மூலை பாய்ந்து ஓடும். இதனை நாம் பார்க்க முடியும். மறைப்பு என்பது குறைந்தது 6 மணி நேரம் நடைபெறும். கடந்த 2004 ல் நிகழ்ந்த வெள்ளி மறைப்பு 6 மணி நேரம் நிகழ்ந்தது.

[You must be registered and logged in to see this image.]

வெள்ளியின் விட்டம் (12,092 km (only 650 km less than the Earth's) /0. 949 9 Earths) சந்திரனை (3476 km /(0. 273 Earths ) விட 4 மடங்கு அதிகம். ஆனால் வெள்ளி( from Earth: its closest, Venus is 41840000 km), சந்திரனை (356400 km to 406700 km)விட மிகத் தொலைவில் உள்ளதால், பார்வைக்குச் சிறியதாகத் தெரிகிறது. மேலும் இது மிக மெதுவாகவே (224.7 Earth days) பயணிக்கும். இதன் ஒரு நாள் என்பது 244 பூமி நாட்கள். ஆனால் சூரியனை 224.7 பூமி நாட்களில் சுற்றிவிடுகிறது. இது ஒரு வருடம். என்ன தலையைச் சுற்றுகிறதா? இதுதான் வெள்ளியின் நிலை. எனவே வெள்ளி மறைப்பு என்பது சிறிய கடுகு ஒரு பெரிய தட்டின் ஓரத்தில் மெதுவாக ஓடுவதைப் போலிருக்கும். இந்த வெள்ளி மறைப்பை கவனித்ததின் மூலமாகத்தான், இடமாறு தோற்றப்பிழை கருத்தின் அடிப்படையிலேயே விஞ்ஞானிகள், சூரியனுக்கும், பூமிக்கு இடையிலுள்ள தொலைவைக் கணித்தனர்.

எப்போது வெள்ளி மறைப்பு நிகழும்?

வெள்ளி மறைப்பு என்பது கணிக்கப்படும் வானவியல் நிகழ்வுகளில் மிகவும் அரிதானதும், அற்புதமானதும் கூட. வெள்ளி சூரியனை, 225 நாட்களுக்கு ஒரு முறை வலம் வருகிறது. 548 நாட்களுக்கு ஒரு முறை, பூமிக்கு அண்மையில் வெள்ளி வந்தாலும் கூட, வெள்ளி கோள் மறைப்பு வெகு அரிதானது. வெள்ளியின் பாதை, 3.4 டிகிரி சாய்வாக அமைந்துள்ளது. ஆயிரம் ஆண்டுகளில் சராசரியாக 14-18 முறை வெள்ளி மறைப்பு நிகழும். ஆனால், புதன் மறைப்பு என்பது 100 ஆண்டுகளில் 13-14 நிகழும்.
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

வரலாற்றின் பரிமாணத்தில் பதிவான வெள்ளி மறைப்பு நிகழ்வுகள். . ! Empty Re: வரலாற்றின் பரிமாணத்தில் பதிவான வெள்ளி மறைப்பு நிகழ்வுகள். . !

Post by பூ.சசிகுமார் Fri Dec 07, 2012 12:05 am

வெள்ளிக் கோள்/சூரிய கிரகணம் எப்போதிலிருந்து பார்க்கப்பட்டது?

குறிப்பிட்ட பழங்கால நாகரிகங்களில் இந்த வெள்ளியின் மறைப்பு வந்துபோனது பற்றி எதுவும் குறிப்பிட்டதற்கான சான்றுகளே இல்லை. ஆனால் ஆதிகால அமெரிக்க நாகரிகங்களில் குறிப்பாக மாயன் நாகரிகத்திலும் வெள்ளியைப் பற்றி சிறப்பாக, பெரிய விண்மீன் மற்றும் வண்டு விண்மீன்(Wasp Star) என்றும் குறிப்பிடுகின்றனர். வெள்ளியை அவர்கள் குல்குல்கன் (Kukulkán) கடவுள் என்றும் அழைக்கின்றனர். மெக்சிகோவின் மற்ற பகுதிகளில் வெள்ளியை குகுமாட்ஸ் (Gukumatz)& க்வெட்ஸால்கோயட்ல் (Quetzalcoatl )என்றும் சொல்லப்படுகின்றது. டிரெஸ்டன் விதிகள் என்ற மாயன்களின் புத்தகத்தில் (இது 11 ம் நூற்றாண்டைச் சேர்ந்தது, ஆனால் அதற்கும் 4 நூற்றாண்டுகளுக்கு முன்பே இது எழுதப்பட்டதாம் ) மாயன்கள் வெள்ளியின் முழு சுழற்சி(cycle of venus)பற்றியும் அட்டவணைப்படுத்தியும் இருக்கின்றனர். வெள்ளியின் வரவுகளை மிகத் துல்லியமாகக் கூறியவர்கள், வெள்ளி மறைப்பு பற்றி எதுவும் குறிப்பிடவில்லை.

அரிஸ்டாட்டில் என்ற தத்துவ மேதை (கி.மு. 384 -322) பகுதி சூரிய கிரகணத்தை மரத்தின் அடியில் அமர்ந்து கவனித்ததாகப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அஸ்டெக் மற்றும் இன்கா நாகரிகங்களில் சூரியன் மற்றும் சூரிய கிரகணம் பற்றியும் சொல்லப்பட்டிருக்கிறது. வானவியல் நிகழ்வுகளைக் கண்டறிந்தபோதுதான், கணிதம் மூலம் கோள்களின் சுற்றுப்பாதை பற்றி விவரித்தனர். பின் கோள்கள் சூரிய விட்டம், வட்டத்தில் நுழைவதைப் பற்றி ஆராய்ந்தனர். அவைகளில் சந்திர, சூரிய கிரகணங்கள், வெள்ளி மறைப்பு மற்றும் புதன் மறைப்பு ஆகியவை முக்கியமானவை. முதல் சூரியப் புள்ளியை தொலைநோக்கி கண்டுபிடிக்கு முன், இங்கிலாந்தில் வோர்ஷ்டர்ஷிரின் சகோதரர், பிரியர் பிரதர் ஜன என்பவர் 1128, டிசம்பர் 8ம் நாள் பார்த்தார்.
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

வரலாற்றின் பரிமாணத்தில் பதிவான வெள்ளி மறைப்பு நிகழ்வுகள். . ! Empty Re: வரலாற்றின் பரிமாணத்தில் பதிவான வெள்ளி மறைப்பு நிகழ்வுகள். . !

Post by பூ.சசிகுமார் Fri Dec 07, 2012 12:05 am

வெள்ளி மறைப்புக் காணுவதன் முக்கியத்துவம் என்ன?

வெள்ளி மறைப்பு என்பது ஓர் அரிதான வானியல் நிகழ்வுதான் என்றாலும், விஞ்ஞானிகளின் ஆர்வம் என்பது, வெள்ளி நகர்வினால் சூரியனுக்கும் பூமிக்கும் இடையிலுள்ள தூரத்தை இடமாறு தோற்றப்பிழை மூலமும், கெப்ளரின் மூன்றாம் விதி மூலமும் அறிவது என்ற ஒரே குறிக்கோளாகத்தான் இருந்தது. இதிலுள்ள யுக்தி என்னவென்றால், வெள்ளிக் கோள் சூரிய பிம்பத்தில் நுழையத் துவங்கும் நேரத்தையும், அதிலிருந்து வெளியேறும் நேரத்தையும் கணக்கிட்டு, அதிலுள்ள மிக மெலிதான நேர வேறுபாட்டைத் துல்லியமாக அறிந்து, பூமியின் மேற்பரப்பிலிருந்து இவை எவ்வாறு பிரிந்துள்ளன என்பதை அறிவதே. வடிவியல் மூலம் சாய்கோணம் அறிந்து அதன் வழியே நூலேணியில் ஏறுவது போன்று பூமிக்கும், சூரியனுக்கும் இடையிலுள்ள தூரத்தை துல்லியமாக அளப்பதுதான்.

ஐரோப்பாவில் காணப்பட்ட வெள்ளி மறைப்பு நிகழ்வு. . !

வெள்ளி மறைப்பு/சூரியனின் பிம்பத்தில் நகர்வு என்பது 16ம் நூற்றாண்டிலேயே ஐரோப்பாவில் காணப்பட்டிருக்கிறது. இதனை நிகோலஸ் கோபர்நிகஸ் (Nicolus Copernicus , 1473 -1543) பார்த்திருக்கிறார். ஆனால் அதனை அவர் பதிவு செய்யவில்லை. பிறகு மற்றொரு வெள்ளி மறைப்பு நிகழ்வு 1526 ல் வந்திருக்கிறது. ஆனால் கோபர்நிகஸ் போலாந்து நாட்டின் வரைபட வேலையைக் கவனித்ததால், வெள்ளி மறைப்பை கவனிக்கவில்லை. பிறகு, ஜெர்மானிய வானவியலாளர் ஜோஹான்னஸ் கெப்ளர், 1631, நவம்பர் 7 ம் நாள் புதன் மறைப்பு சூரியனில் நிகழும் என்று சொன்னார். அதனைத் தொடர்ந்து அடுத்த மாதம் வெள்ளி மறைப்பு வரும் என்றார். ஆனால் 1631 ஏற்பட்ட வெள்ளி மறைப்பினை யாரும் பார்த்ததாக பதிவு செய்யப்படவில்லை. காரணம் என்னவெனில், அன்று ஐரோப்பா முழுமைக்கும் பெரிய சூறாவளி வீசி, சூரியனைக் காணமுடியாமல் மறைத்துவிட்டது. ஆனால் அடுத்த வெள்ளி மறைப்பு 1756ல் வரும் எனத் தவறாகக் கணித்தார் கெப்ளர்.
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

வரலாற்றின் பரிமாணத்தில் பதிவான வெள்ளி மறைப்பு நிகழ்வுகள். . ! Empty Re: வரலாற்றின் பரிமாணத்தில் பதிவான வெள்ளி மறைப்பு நிகழ்வுகள். . !

Post by பூ.சசிகுமார் Fri Dec 07, 2012 12:05 am

ஜொகான்னஸ் கெப்ளரும், வெள்ளி மறைப்பும். . !

17ம் நூற்றாண்டு வானவியலாளர்கள், சூரியனிலிருந்து ஒவ்வொரு கோளும் எத்தனை தொலைவில் உள்ளது என்றும் கணக்கிட்டனர். பூமிக்கும், சூரியனுக்கும் இடையிலுள்ள தூரம் ஒரு வானவியல் அலகு (an astronomical unit) என்றும் அறியப்பட்டு, கணக்கிடப்பட்டது. இருப்பினும், துல்லியமான அலகு இன்னும் அறியப்படவில்லை. வெள்ளி மறைப்பு நிகழ்வு வரப்போவது பற்றி முதன் முதல் கணித்துச் சொன்ன பெருமையும் புகழும் ஜோஹான்னஸ் கெப்ளரையே(Johannes Kepler) சேரும். வெள்ளி மறைப்பு என்ற அரிய வானவியல் நிகழ்வு 1631ல் வரப்போகிறது என்று உலக மக்களுக்கு அறிவித்தார் கெப்ளர். ஆனாலும் கூட, அவரது கணிப்பு முறை என்பது அவ்வளவு துல்லியமாக இல்லை. மேலும் அப்போது நிகழ்ந்த வெள்ளி மறைப்பை ஐரோப்பாவின் பெரும்பான்மையான இடங்களில் பார்க்க முடியவில்லை. அதனால் அப்போது அதனைப் பார்ப்பதற்கான எந்தவித ஏற்பாடும் அப்போது செய்யப்படவில்லை.

இருபது வயதில் வெள்ளி மறைப்பு ரசித்த ஜெரேமையா ஹோரோக்ஸ். . !

வெள்ளி மறைப்பை முதன் முதல் பார்த்த நிகழ்வை ஏற்பாடு செய்தவர் ஜெரேமையா ஹோரோக்ஸ் (Jeremiah Horrocks) என்ற இருபதே வயது நிரம்பிய இளம் விஞ்ஞானிதான். இவர் இங்கிலாந்தில் உள்ள பிரிச்டனுக்கு(Preston in England) அருகிலுள்ள மூச் ஹூல் (Carr House in Much Hoole) என்னும் ஊரிலுள்ள அவரது வீட்டிலிருந்து 1639, டிசம்பர் 4 ம் நாள்வெள்ளி மறைப்பைக் காண்பிக்க ஏற்பாடு செய்தார். ஆனால் அவரது நண்பர் வில்லியம் கிராப் த்ரீ ( William Crabtree) இதே வெள்ளி மறைப்பை மான்செஸ்டருக்கருகில் பொரௌக்டனில்( Broughton, near Manchester) கண்டு களித்தார். ஆனால் இதில் ஒரு துரதிருஷ்டம் நிகழ்ந்தது. என்ன தெரியுமா? 1631ல் வருகை தரப்போகும் வெள்ளி மறைப்பையும், 1761ல் தெரியப்பட இருக்கும் வெள்ளி மறைப்பையும் கணித்துச் சொன்ன ஜோஹான்னஸ் கெப்ளர், 1639ல் வரப்போகிற வெள்ளி மறைப்பை எப்படியோ கணிக்கத் தவறி விட்டார்.

ஹோரோக்ஸ், கெப்ளரின் வெள்ளி மறைப்பு பற்றிய கணக்கீட்டை சரி செய்தார். அவரே, இந்த வெள்ளி மறைப்பு 121 ஆண்டுகளுக்கிடையிலும், ஒரு முறை ஜோடி மறைப்புகளாக 8 ஆண்டுகளுக்கு ஒரு முறை வந்து குதிக்கிறது என்றும் கண்டறிந்து சொன்னார். ஹோரோக்ஸ்தான் ஆங்கிலேயே வானவியல் விஞ்ஞானிகளின் தந்தை என்றும் போற்றப்படுகிறார். இவர் அவரது நண்பர் வில்லியம் கிராப்த்ரீஎன்ற விண்மீன்களை ஆராயும் துணிவிற்பனை செய்பவருடன் இணைந்து இந்த கண்டுபிடிப்பை நிகழ்த்தினார். அதனால்தான் ஹோரோக்ஸ் 1639ல் வந்த வெள்ளி மறைப்பை ஐரோப்பிய மக்களுக்கு காண்பிக்கச் செய்து மகிழ்ந்தார். அவரால் எந்த நேரம் வரும் என்று துல்லியமாகக் கணிக்க முடியவில்லை என்றாலும், உத்தேசமாக மதியம் சுமார் 3 மணிக்கு வெள்ளி மறைப்புத் துவங்கும் என்றார்.

ஹோரோக்ஸ் வெள்ளி மறைப்பு நிகழ்வு நடைபெறும்போது, புத்திசாலித்தனமாக சூரியனின் பிம்பத்தை, எளிய தொலைநோக்கி மூலம் ஒருவெள்ளை அட்டைத் துண்டின் மேல் விழச் செய்து, (அன்றைக்கே மிகப் பாதுகாப்பாக) வெள்ளி மறைப்பை மக்களுக்குக் காண்பித்தார். அன்று இயற்கையின் அதிர்ஷ்டம் அவர் பக்கம் சாய்ந்து கொட்டியது. ஏனெனில் அன்று மேகமற்ற சூரியனை மாலை 3.15 லிருந்து 4.30 வரை அதாவது சூரிய மறைவு 5 மணி எனும்போது, அதற்கு அரை மணி நேரம் முன்பு வரை வெள்ளி மறைப்பு அழகாகத் தெரிந்தது. ஹோரோக்ஸின் வான்நோக்கு கணிப்பு என்பது சூரியனுக்கும், பூமிக்கும் இடையிலுள்ள தூரத்தைத் துல்லியமாக கணிக்க மிகவும் உதவியது. இதன் தூரம் 59.4 மில்லியன் மைல்கள், 0.639 வானவியல் அலகு. ஆனாலும் கூட, இந்த வானவியல் கணிப்பு 1661 வரையிலும், ஹோரோக்ஸ் இறக்கும் வரை வெளியிடப்ப‌டவே இல்லை.
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

வரலாற்றின் பரிமாணத்தில் பதிவான வெள்ளி மறைப்பு நிகழ்வுகள். . ! Empty Re: வரலாற்றின் பரிமாணத்தில் பதிவான வெள்ளி மறைப்பு நிகழ்வுகள். . !

Post by பூ.சசிகுமார் Fri Dec 07, 2012 12:06 am

கிரிகாரியின் வெள்ளி மறைப்புக் கணிப்பு

ஜேம்ஸ் கிரிகாரி என்ற ஸ்காட்டிஷ் கணிதவியலாளர் அவரது புத்தகத்தில் புதன் மறைப்பு பற்றி தெளிவாக எழுதி உள்ளார். சூரியனை, புதன் 88 நாட்களுக்கு ஒரு முறை சுற்றி வருகிறது. பூமி, புதன், சூரியன் ஆகியவை 116 நாட்களுக்கு ஒரு முறை நேர்க்கோட்டில் சந்தித்தாலும், கோள் மறைவு ஏற்படுவதில்லை. பூமியின் சுற்று வட்டப்பாதையில் இருந்து, புதன் ஏழு டிகிரி கோண சாய்வாக உள்ளது. புதனின் பாதை, பூமி வலம் வரும் தளத்தினை, இரண்டு புள்ளிகளில் தான் வெட்டும். அந்த புள்ளிகளில் ஏதேனும் ஒன்றில் சூரியன், பூமி மற்றும் புதன் ஆகியவை நேர்க்கோட்டில் சந்தித்தால் மட்டுமே புதன் மறைவு ஏற்படும். ஒரு நூற்றாண்டில், 13 முறை புதன் கோள் மறைப்பு ஏற்படும்.

புதன் மறைப்பு மூலமும் சூரியன் பூமிக்கு இடையில் உள்ள வானவியல் அலகைக் கணிக்க பயன்படுத்த முடியும் என்றும் தெரிவித்தார். இதன் உண்மைகளை உணர்ந்த எட்மன்ட் ஹாலி இதைப் போன்ற மறைப்பை செயின்ட் ஹெலேனாவிளிருந்து 1676ல் பார்த்தார். அடுத்த வெள்ளி மறைப்பு 1761ல் வரும் அதன் மூலம் சூரியன்-பூமி தொலைவை துல்லியமாகக் கணக்கிடலாம் என்று காத்திருந்தார். ஆனால் ஹாலி 1742ல் இந்த உலகைவிட்டு மறைந்தார். அவர் சொன்ன கணக்கீட்டை மனதில் கொண்டு, ஹாலி தெரிவித்தபடியே , 1761ல் உலகில் பல் விஞ்ஞானிகள் ஏராளமான ஏற்பாடுகள் செய்தன்ர். அதனால் முதன் முறையாக உலகின் பல பகுதிகளிலிருந்து சர்வதேச அறிவியலாளர்களின் உதவியுடன் ஒருங்கிணைப்பு செய்து வெள்ளி மறைப்பைக் கண்டு களித்தனர்.

இது போன்ற முதன் முதல் ஜோடி வெள்ளி மறைப்பை பிரிட்டன், ஆஸ்திரியா மற்றும் பிரான்ஸ் போன்ற நாடுகளிலிருந்த விஞ்ஞானிகள் பார்த்தும், பதிவு செய்யவும், சைபீரியா, நார்வே, நியூபவுன்ட்லாந்து மற்றும் மடகாஸ்கர் போன்ற இடங்களுக்குச் சென்றனர். அங்கிருந்து, வெள்ளி மறைப்பைப் பார்த்து ரசித்ததுடன் பதிவும் செய்தனர். பெரும்பாலோர் குறைந்த பட்சம் பகுதி மறைப்பையாவது பார்த்தனர். ஆனால் சிலர் வெற்றிகரமாக வெள்ளி மறைப்பை பார்த்தவர்களில் நன்னம்பிக்கை முனையிலிருந்து பார்த்த ஜெரேமையா டிக்சன் (Jeremiah Dixon ) மற்றும் சார்லஸ் மேசன்(Charles Mason ) என்பவர்கள் முக்கியமானவர்கள்.

வெள்ளியின் வளிமண்டலம் பார்த்த மிக்கைல். . !

பிட்டர்ஸ்பர்க் (Petersburg ) வானோக்கத்திலிருந்து 1761ல் வெள்ளி மறைப்பைப் பார்த்ததின் அடிப்படையில் மிக்கைல் லோமொனோசொவ்(Mikhail Lomonosov ) என்ற விஞ்ஞானி, வெள்ளிக் கோளில் வளிமண்டலம் இருப்பதை உறுதி செய்தார். மேலும் வெள்ளி மறைப்பின் போது நிகழ்ந்த சூரியக்கதிர்களின் ஒளி விலகலினால் வெள்ளியின் பகுதியும், அதன் மேல் வளையமான வளிமண்டலமும் தெரிந்தன. பின்னர் 1769ல் நடைபெற்ற வெள்ளி மறைப்பில், கனடாவிலுள்ள ஹட்சன் வளைகுடா, பாசா கலிபோர்னியா மற்றும் நார்வே பகுதிகளுக்கு விஞ்ஞானிகள் பயணித்து வெள்ளி மறைப்பைப் பார்த்தனர். அது மட்டுமல்ல, முதல் கப்பல் பயணம் செய்த கேப்டன் குக்கும்(Captain Cook) கூட தஹிதியிலிருந்து(Tahiti ) வெள்ளி மறைப்பைப் பார்த்தார். குக் பார்த்த இடம் இன்றும் கூட, வெள்ளியின் முனை ("Point Venus")என்றே அழைக்கப்பட்டு, அங்கே அதன் அடையாளச் சின்னமாக ஒரு தூண் வைக்கப்பட்டுள்ளது.

அப்போதே, செக்கோஸ்லோவாக்கிய விஞ்ஞானி, கிறிஸ்டியன் மேயர் கேத்தேரினால் அழைக்கப்பட்டு, செயின்ட் பீட்டர்ஸ்பார்க்கில் அன்டெர்ஸ் ஜொஹான் லேக்செல், ருஷ்ய அறிவியல் கழக உறுப்பினர்கள் போன்றோர் மேலும் 8 இடங்களுக்கு சென்று வெள்ளி மறைப்பைப் பார்த்தனர். பிலடெல்பியாவிலும், வெள்ளி மறைப்பைக் காண மூன்று தாற்காலிக வானோக்கு இடங்களும் மற்றும் இதனைப் பார்வையிட டேவிட் ரிட்டன்ஹௌஸ் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டு வெள்ளி மறைப்பைப் பார்க்க பிரமாதமான ஏற்பாடு செய்யப்பட்டது. இந்தப் பார்வையாளர்களின் கருத்துக்கள், பதிவுகள், தகவல்கள், முடிவுகள் போன்றவை 1771ல் தான் முதன் முதல் அச்சில் ஒரு தொகுப்பாக வந்தன. சாதாரண மக்களுக்கும் வெள்ளி மறைப்பு பற்றித் தெரிந்தது.
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

வரலாற்றின் பரிமாணத்தில் பதிவான வெள்ளி மறைப்பு நிகழ்வுகள். . ! Empty Re: வரலாற்றின் பரிமாணத்தில் பதிவான வெள்ளி மறைப்பு நிகழ்வுகள். . !

Post by பூ.சசிகுமார் Fri Dec 07, 2012 12:06 am

வெள்ளி மறைப்பைப் பார்த்த முதல் மன்னர் மூன்றாம் ஜார்ஜ். . !

ரிச்மன்ட் என்ற இடத்திலுள்ள ராயல் வான் நோக்ககம், சர் வில்லியம் சாம்பர்ஸ் என்பவரால் மூன்றாம் ஜார்ஜ் மன்னருக்காக வடிவமைக்கப்பட்டது. மன்னர் அறிவியலின் பல விஷயங்களிலும், குறிப்பாக வானவியலிலும் மிகுந்த ஆர்வம் உள்ளவர். இவர்தான் அரச குடும்பத்தில் உள்ளவர்களில், 1769ல் வந்த வெள்ளி மறைப்பைப் பார்த்து பரவசப்பட்டவர். அதன் பின் மன்னரும், அவரது அரச குடும்பமும் வெள்ளி மறைப்பு பற்றி விரிவாக தகவல் எழுதி வைத்தனர். அப்போது தொலைநோக்கியும், கடிகாரமும் இருந்ததால் 1769ல் வந்த வெள்ளிமறைப்பைப் பற்றி நல்ல பதிவினைச் செய்தனர்.

வெள்ளி மறைப்பும், சோக சித்திரமான கெல்லாமே லே ஜென்டிலும்..!

கெல்லாமே லே ஜென்டில் என்ற பிரெஞ்சு விஞ்ஞானியின் முழுப் பெயர் Guillaume Joseph Hyacinthe Jean-Baptiste Le Gentil de la Galaisière என்பதாகும். இப்படி மிக நீண்ட பிரெஞ்சுப் பெயருடைய பிரெஞ்சு விஞ்ஞானி ஜென்டில் வெள்ளி மறைப்பைப் பார்க்க சுமார் 8 ஆண்டுகள் கப்பலில் பயணம் செய்தார். அவர் வான நிகழ்வைப் பார்த்தாரோ இல்லையோ, நிறைய சோதனைகளையும், வேதனைகளையும் சந்தித்தார் விஞ்ஞானி ஜென்டில். அவர் 1760, மார்ச்சில் பாரிசிலிருந்து புறப்பட்டு சூலைமாதம் மொரீஷியஸ் அடைந்தார். பின் பாண்டிச்சேரி போனார். கொரமாண்டல் கடற்கரையைச் சுற்றிவர 1761ல் மீண்டும் பயணம். ஆனால் அப்போது பிரிடிஷ்காரர்கள் பாண்டியைப் பிடித்துக் கொள்ள, மீண்டும் பிரான்ஸ் நோக்கியே வந்தார்.

[You must be registered and logged in to see this image.]

அப்போது ஜூன் 6ம் நாள் வெள்ளி மறைப்பு வந்தது. வானம் நிர்மலமாய், மேகமின்றி சூரியப் பிரகாசத்துடன் காணப்பட்டது. ஆனால் அவர் வைத்திருந்த பாத்திரம் அப்போது உருண்டதால் வானியல் தகவல்களை எடுக்க முடியவில்லை. அதனால் ஜென்டில் இன்னும் 8 ஆண்டுகளில் வரவுள்ள அடுத்த வெள்ளி மறைப்பு வரை காத்திருந்து அதைப் பற்றி தகவல் சேகரிக்க எண்ணினார். ஆனால் நிகழ்ந்ததோ வேறு. விஞ்ஞானி ஜென்டில் மடகாஸ்கரில் தங்கி இருந்து, 1769ம் ஆண்டின் வெள்ளி மறைப்பை பிலிப்பைன்சின் மணிலாவிலிருந்து பதிவு செய்ய திட்டமிட்டார். ஆனால் ஸ்பானிஷ்ய பிரச்சினையினால், மீண்டும் பாண்டிச்சேரி செல்ல நேர்ந்தது. அங்கே சின்ன வானோக்ககம் அமைத்தார். எதற்குத் தெரியுமா? 1769 ஜூன் 4 ம் தேதி நிகழவுள்ள வெள்ளி மறைப்பு காண்பதற்காக.

1769, ஜூன் 4 ம் நாள் காலை முழுவதும் வானம் பளிச்சென்று துடைத்துவிட்டது போன்று இருந்தது. அதற்கு முன் மாதம் கூட வானம் அழகுடன் மிளிர்ந்தது. ஆனால் அன்று திடீரென்று மேகம் சூழ்ந்தது. ஜென்டிலால் எதனையும் பார்க்க முடியவில்லை. தனது துரதிருஷ்டம் எண்ணி மனம் நொந்து பிரான்ஸ் செல்ல முடிவு செய்தார். பயணத்தின் முதல் நாள் அவருக்கு வயிற்றுப்போக்கு. பயணம் தள்ளிப்போனது. பின்னர் அவரது கப்பல் புயலில் போர்பனில் மாட்டிக்கொண்டது. அங்கேயே ஸ்பானிஷ் கப்பல் வரும்வரை காத்திருந்தார். முடிவாக பாரிசுக்கு திரும்பியது 1771, அக்டோபர்.

ஆனால் அங்கே ஜென்டில் சட்டப்படி இறந்தவராக அறிவிக்கப்பட்டிருந்தார். என்ன கொடுமை! அவரது மனைவி அவர் இறந்துவிட்டார் என்று நினைத்து, மறுமணம் செய்து கொண்டார். அதன்பின் முயற்சி செய்து அறிவியலின் ராயல் கழக‌த்தில் சேர்ந்தார். அதன் பின்னர் ஜென்டில் மறுமணம் செய்து கொண்டு, அடுத்து 21 ஆண்டுகள் வரை உயிருடன் வாழ்ந்தபின்னரே உயிர் நீத்தார். ஆனால் அவரது ஆயுளில் அவர் 8 ஆண்டுகள் வெள்ளி மறைப்பைப் பார்க்க முயற்சித்தும், அதனைக் காணாமலேயே போனார். அவரை மையமாக வைத்து வெள்ளி மறைப்பு என்ற படம் மௌரீன் ஹன்டர் என்ற கனடா நாட்டுக்காரரால் எடுக்கப்பட்டு, 1992ல் வெளியானது.
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

வரலாற்றின் பரிமாணத்தில் பதிவான வெள்ளி மறைப்பு நிகழ்வுகள். . ! Empty Re: வரலாற்றின் பரிமாணத்தில் பதிவான வெள்ளி மறைப்பு நிகழ்வுகள். . !

Post by பூ.சசிகுமார் Fri Dec 07, 2012 12:06 am

வெள்ளி மறைப்பும், கருப்பு பின்புல விளைவும்..!

ஜெரோம் லலாண்டி என்ற பிரெஞ்சு விஞ்ஞானி 1761 & 1769 ஆண்டுகளின் வெள்ளி மறைப்பு பதிவுகளைக் கொண்டு, ஆய்வு செய்து ஒரு வானியல் அலகின் தொலைவு 15.3 கோடி கி.மீ (±1 million km) என 1771ல் கணித்தார். இதன் துல்லியத் தன்மை என்பது, அதன் வளிமண்டலத்தால் தெரியும் கருப்பு பின்புல விளைவால் (Black back drop) கொஞ்சம் குறைவாகவே உள்ளது. ஆனால் பின்னர் வந்த ஹாரோக்ஸ் கணக்குப்படி கொஞ்சம் முன்னேற்றம் அடைந்தது.

வெள்ளி மறைப்பில் பிரெஞ்சு விஞ்ஞானி ஜீனின் வேதனைகள்!

பிரெஞ்சு கடல் பயணத்தை மேற்கொண்ட ஜீன் சாபி டி ஆடோடோக்க் தலைமையிலான குழு ஒன்று 1761ல் நிகழவுள்ள வெள்ளி மறைப்பினைக் காண சைபீரியாவிலுள்ள டோபோல்ச்க் நோக்கி பயணித்தது. ஆனால் அந்தக் குழு ஒரு ஆற்றைக் கடக்கும்போது, பெரிய பிரச்சினையில் சிக்கித் தப்பித்தது. அது ஒரு நீண்ட, துன்பங்கள் பல இருந்த மோசமான பாதைகளில் மேற்கொண்ட கடினமான பயணம். இருப்பினும் வெள்ளி மறைப்பின் 6 நாட்களுக்கு முன்பே அங்கு சென்றுவிட்டனர். வெள்ளி மறைப்புக்குக் கொஞ்ச நேரம் முன்பு, ஜீன் அங்குள்ள உள்ளூர் மனிதர்களால் தாக்கப்பட்டார். காரணம் என்ன தெரியுமா? ஜீன் சூரியனின் கதிர்களை ஏதோ செய்து தடை செய்யப் போகிறார் என்றும், அதனால் அவர்களுக்கு வரவிருக்கும் வசந்தகால் நீரூற்றுக்கள் தடைபடும் என்றும் நம்பியதால் வந்த விளைவு இது.

ஆனாலும் வானவியல் குழுவினர் ஜீனைக் காப்பாற்றிவிட்டனர். பின்னர் அவர்கள் அருமையான வெள்ளி மறைப்பை தரிசனம் செய்தனர். பிரெஞ்ச் கழகம் 1761ல் கிடைத்த வெற்றி கண்டு மகிழ்ந்தது. மீண்டும் ஜீனை 1769ல் நிகழவுள்ள வெள்ளி மறைப்பைக் காண அனுப்பியது. அவர்கள் மெக்சிகோவிலுள்ள வீர க்ரூஸ் என்ற இடத்திற்குப் போனார்கள். அங்கு மக்கள் பிளேக் நோய் வந்து மிகவும் அல்லலுற்றனர். அங்கிருந்து அவர்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்லாமல், மக்களுடன் தங்கி அவர்களுக்கு உதவி செய்தனர். ஜீனும் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டு இறப்பின் எல்லை வரை சென்று அதன்பின் வெள்ளி மறைப்பை எந்த அட்ச ரேகையில் எந்த தீர்க்க ரேகையில் நிகழ்ந்தது என்றும் துல்லியமாகப் பதிவு செய்தார். அவரின் பதிவுதான் 1769ல் நிகழ்ந்த வெள்ளி மறைப்பின் மிக நல்ல பதிவென்றும் பாராட்டப்படுகிறது. பின்னர் வெள்ளி மறைப்பு நடந்த கொஞ்ச நாளிலேயே தனது 41 வயதில் காய்ச்சலினால் காலமானார்.
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

வரலாற்றின் பரிமாணத்தில் பதிவான வெள்ளி மறைப்பு நிகழ்வுகள். . ! Empty Re: வரலாற்றின் பரிமாணத்தில் பதிவான வெள்ளி மறைப்பு நிகழ்வுகள். . !

Post by பூ.சசிகுமார் Fri Dec 07, 2012 12:07 am

துருக்கியின் ஆண்டர்ஸ், வெள்ளி மறைப்பு பதிவுகள். . !

புத்திசாலியான வானவியலாளரும், இயற்கை தத்துவ பேராசிரியருமான ஸ்வீடிஷ் விஞ்ஞானியான ஆண்டர்ஸ் பிலான்மேன் துருக்கியின் பல்கலையின் பணிபுரிந்தார்.

18 ம் நூற்றாண்டில் நிகழ்ந்த வெள்ளி மறைப்புகளைப் பற்றி அவர் பார்த்தது உட்பட பல கட்டுரைகள் எழுதினார். பிலான்மேன் 1761 மற்றும் 1769 ல் ஏற்பட்ட வெள்ளி மறைப்புகளை பின்லாந்தின் கஜனேபோர்க் நகரிலிருந்து நன்கு கவனித்தவர். இந்திய வானவியலாலரான அன்கிட்டம் வேங்கட நரசிங்க ராவ் என்பவர் விசாகப்பட்டினத்தில் தனக்கென்று ஒரு வானவியல் கூடம் வைத்திருந்தார். அங்கிருந்து 1874ல் வந்த வெள்ளி மறைப்பை பதிவு செய்து, பின் அதனைப்பற்றி எழுதி ராயல் வானியல் கழகத்திற்கு சமர்ப்பித்தார். அந்த தகவல் 1875ல் வெளியிடப்பட்டது.

அதன் பின்னர் 1874 மற்றும் 1882ல் நிகழ்ந்த ஜோடி வெள்ளி மறைப்புகள் இன்னும் துல்லியமாய் கணிக்கப்பட்டும், பார்க்கப்பட்டும், பதிவு செய்யபட்டும் உள்ளன. இதில் 1874 டிசம்பர் 6ம் நாள் வந்த வெள்ளி மறைப்பும் முக்கியத்துவம் வாய்ந்தது. ஏனெனில் இந்த மறைப்புதான் முதன் முதல் படம் எடுக்கப்பட்டது. சார்லஸ் பர்ட்டன்(Charles Burton) என்பவர் இதனை படம் எடுத்தார். சார்லஸ் டப்ளினிலிருந்து இந்தியப் பெருங்கடலிலுள்ள ரோட்ரிகஸ் தீவுக்குப் பயணித்து இந்த பணியினைச் செய்தார். இந்தப் பயணம் கிரீன்விச்சிலுள்ள ராயல் வான் நோக்ககத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. உலகின் பல்வேறு நாடுகளில் 1874ம் ஆண்டு வெள்ளி மறைப்பைப் பார்த்தனர். அமெரிக்க வானவியலார் சைமன் நேயூகொம்ப் கடந்த 4 வெள்ளி மறைப்புத் தகவல்களை இணைத்து சூரிய-பூமி தூரம் என்பது 14.959 கோடி கி.மீ (±0. 31 million kilometers) என நிர்ணயித்தார். நவீன கருவிகள், தொழில்நுட்பங்கள் போன்றவை சூரியன் பூமி தூரத்தை ±30 மீட்டரில் என இப்போது துல்லியமாகக் கணக்க்கிட்டுவிட்டன.

சமீபத்தில் 2004 ஜூன் 8ல் நிகழ்ந்த வெள்ளி மறைப்பு ஒரு சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த வெள்ளி மறைப்பு என்றே சொல்லவேண்டும். ஏனெனில், ஊடகத்துறை வந்த பின்னர் நிகழ்ந்த முதல் வெள்ளி மறைப்பு இதுதான். இதற்கு முன் சரியாக 118 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த வெள்ளி மறைப்பு 1882, டிசம்பர் 6ம் நாள் அயர்லாந்துப் பகுதியில் மட்டும் தெரிந்தது. அங்கு ஆர்மக் வான் நோக்ககத்திலிருந்து (Armagh Observatory ) டாக்டர் ஜெல் டிரெயர் (Dr JLE Dreyer (of New General Catalogue) fame!) மற்றும் அவரது உதவியாளர் ரேவெரன்ட் சார்லஸ் பேரிஸ் (Rev. Charles Faris) கவனித்தனர். ஆனால் துவக்கத்தில் பனிப் பொழிவால் வெள்ளி மறைப்பைக் காண இயலவில்லை. டப்ளின் வான நோக்ககத்தில் சர்.ராபர்ட் பால் பார்த்தார். அங்கும் பனிப் பொழிவு வெள்ளி மறைப்பைக் காணவிடாமல் சதி செய்தது. ஆனால் தரமோனா ஆய்வகத்தில் வில்லியம் என்ற விஞ்ஞானி, வெள்ளி மறைப்பின் இறுதி நிகழ்வுகளைப் பார்த்ததுடன் நூற்றுக்கணக்கான படங்கள் எடுத்துப் பதிவும் செய்தார். ஆனால் அவற்றுள் ஒன்று கூட இன்று இல்லை என்பது வருத்தமான தகவல்தான். இது வெள்ளி மறைப்பு பற்றிய ஒரு புதிய பரிமாணத்தைத் தந்தது. வெள்ளி சூரியனின் மேல் ஊர்ந்து வலம் வரும்போது, சூரியப் பிரகாசம் என்பது குறைகிறது என்பதும் அப்போது அறியப்பட்டது. எவ்வளவு குறைகிறது என்றும் கணக்கிடப்பட்டது. வெள்ளி சூரியனின் ஒளியை 0.001 பிரகாசம் (magnitude) ஆகக் குறைக்கிறது என்பது தெரிந்தது. 2004ம் ஆண்டின் வெள்ளி மறைப்பை, ஐரோப்பா, ஆசியா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளின் மனிதர்கள் நன்கு கண்டு ரசித்தனர். வடகிழக்கு அமெரிக்கா வாழ் மக்கள், வெள்ளி மறைப்பு முடியும் தறுவாயில்தான் பார்த்தனர். வடமேற்கு அமெரிக்கா, ஹவாய் தீவு மனிதர்கள், நியூசிலாந்த்துக்காரர்கள் வெள்ளி மறைப்பைக் காணும் பாக்கியம் பெறவில்லை. அங்கெல்லாம் தெரியவில்லை.
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

வரலாற்றின் பரிமாணத்தில் பதிவான வெள்ளி மறைப்பு நிகழ்வுகள். . ! Empty Re: வரலாற்றின் பரிமாணத்தில் பதிவான வெள்ளி மறைப்பு நிகழ்வுகள். . !

Post by பூ.சசிகுமார் Fri Dec 07, 2012 12:07 am

கடந்த 400 ஆண்டுகளில் வருகை புரிந்த வெள்ளி மறைப்புகள். . !

விஞ்ஞானிகள் தொலைநோக்கி கண்டு பிடித்து வானை ஆராயத் துவங்கிய பின் வெறும் 7 வெள்ளி மறைப்புகளை மட்டுமே கண்டனர். அவை 1631 , 1639 ,1761, 1769, 1874, 1882 & 2004 ஆண்டுகளில் நடந்த வெள்ளி மறைப்புகளே. இவை 1631-1639 ஜோடி மறைப்புக்கள். அதுபோல 1761-1769 ஜோடி மறைப்புக்கள்; அதுவேதான் 1874-1881 ஜோடி மறைப்புக்கள்; பின்னர் இப்போது வந்த, வரப்போகும் 2004-2012 வெள்ளி மறைப்பு நிகழ்வுகளும் ஜோடி மறைப்புக்களே! கி.மு 2000த்திலிருந்து, கி.பி 4000 வரை 6000 ஆண்டுகளில் 81 வெள்ளி மறைப்பு நிகழ்வுகளே நடந்துள்ளன.

பொதுவாக வெள்ளி மறைப்பு 8 ஆண்டுகளில் ஒரு ஜோடி மறைப்புகள் என்றே உருவாகின்றன. அதுவும் கூட இப்படி ஜோடியாக அமையாத வெள்ளி மறைப்புகளும் உண்டு. 1396ம் ஆண்டு நிகழ்ந்த வெள்ளி மறைப்பு ஒத்தையாகவே வந்து போனது. அதற்கு ஜோடி 1404ல் வரவே இல்லை. அடுத்து 1508 வரை ஒரு வெள்ளி மறைப்பு. இனி அடுத்த ஒத்தை வெள்ளி மறைப்பு இன்னும் 1087 ஆண்டுகளுக்குப் பின் அதாவது, 3089ல் வரவிருக்கிறது.

வெள்ளி மறைப்பில் சில அரிதான சுவாரசியங்கள்!

விஞ்ஞானிகள் வேறு சூரிய மண்டலங்களின் வியாழன் போன்ற பெரிய கோள்களை வெள்ளி மறைப்பின் மூலம் அறிய முடியும் என்று நம்புகின்றனர். சூரிய கிரகணமும், வெள்ளி மறைப்பும் ஒரே காலக்கெடுவில் நிகழ்ந்து மக்களை ஆச்சரியத்தில் பிரமிக்க வைத்தும், மூழ்கடித்தும் இருக்கிறது. சுமார் 17,607 ஆண்டுகளுக்கு முன் இது போன்ற நிகழ்வு வந்தது. அதே போல இன்னும் 5,15,232 ஆண்டுகளுக்குப் பின் ஒரு வெயில் கால ஏப்ரல் மாதம் 5ம் நாள் சூரிய கிரகணமும், வெள்ளி மறைப்பும் கைகுலுக்க காத்திருக்கின்றன. அது மட்டுமல்ல வெள்ளி மற்றும் புதன் மறைப்புகளும் கூட ஒரே காலத்தில்/நேரத்தில் நிகழ்வதும் உண்டு. இரண்டும் பூமியின் உள்வட்டத்தில் வட்டமிடும் கோள்கள் அல்லவா?கி.மு. 3,73,173ல் வெள்ளியும், புதனும் ஒருங்கே சூரிய வட்டத்துக்குள் நுழைந்து ஓடிப்பிடித்து விளையாடின. அது போன்றதொரு அடுத்த நிகழ்வு, கி.பி 26,163ல் ஜூலை 26ம் நாள் நிகழ இருக்கிறது. ஒருக்கால் மனித இனம் இந்த மறைப்புகளை எல்லாம் பார்க்க பூமியைத் தாண்டி தொலைதூரம் சென்றிருந்தும் காணுமோ? அல்லது சூரியனைச் சுற்றி வட்டமடித்துப் பார்த்து ரசிப்பார்களோ? நாளை உருவாக உள்ள நவீன அறிவியல் முன்னேற்றம் எது வேண்டுமானாலும் செய்யும்.


நன்றி: கீற்று
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

வரலாற்றின் பரிமாணத்தில் பதிவான வெள்ளி மறைப்பு நிகழ்வுகள். . ! Empty Re: வரலாற்றின் பரிமாணத்தில் பதிவான வெள்ளி மறைப்பு நிகழ்வுகள். . !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics
»  தங்கம், வெள்ளி இவற்றுள் அதிகம் மதிப்பு வாய்ந்தது எது? வெள்ளி தான்!!!
» முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வரலாற்றின் துல்லியமான சில துளிகள்.!
» சென்னையில் ரகசிய கமராவில் பதிவான நிர்வாண கொள்ளையன்! (Photos)
» வெளிநாடுகளில் வாங்கிய சொத்துகள் மறைப்பு: ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது புகார் மனு தாக்கல்
»  அம்மனுக்கு உகந்த ஆடி வெள்ளி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum