தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


மாமனிதர் மதுரை கிருஷ்ணன்

View previous topic View next topic Go down

மாமனிதர் மதுரை கிருஷ்ணன்  Empty மாமனிதர் மதுரை கிருஷ்ணன்

Post by மகா பிரபு Mon Dec 17, 2012 8:41 pm

கிருஷ்ணன் என்பவர் மதுரையில் அக்ஷய டிரஸ்ட் நடத்தி வருகிறார். இவரை நான்
நிறைய கேள்வி பட்டு இருக்குறேன் . எனது தந்தை கூட சில சமயம் இவரை மதுரை
ரயில்வே ஸ்டேஷன் அருகே உள்ள நடை பாதையில் உணவு வழங்கும் போது பார்த்து
இருக்கிறார். தற்போது இவர் அமெரிக்க CNN தொலைகாட்சியின் " THE HERO" -
நாயகன் ( தமிழ்பட கதாநாயகன் இல்ல ) உண்மையான நாயகன் என்ற தலைப்பில் இவரை
பற்றி எழுதி உள்ளனர் . அமெரிக்க வரை போய் உள்ள இந்த செய்தி.



இவரை பற்றி இட்லிவடை அன்றே சொன்னது ... எதோ உங்களுக்காக அந்த செய்து. தேதி ஆகஸ்ட் 15.. 2009

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~


[You must be registered and logged in to see this link.]"வாடிய பயிரை கண்டபோதெல்லாம் , வாடினேன்"
என்று பாடினார் வள்ளலார். பயிர்கள் வாடுவதையே தாங்கமுடியாத மனம்..உயிர்கள்
வாடுவதை தாங்கமுடியுமா ? இப்படிப்பட்ட மனம் நடைமுறையில் சாத்தியமா? இதற்கு
விடை தெரிந்துக்கொள்ள கீழே படிக்கவும்....

இந்தகாலத்திலும் வள்ளலார் மனம் கொண்ட ஒருவர் நம்மிடையே இருக்கிறார்.
அவர் மதுரை N.கிருஷ்ணன். CNN-IBN மற்றும் Reliance நிறுவனங்கள் இந்தியா முழுவதும் சமூகத்தில் 'நிஜ கதாநாயகர்களை'
அடையாளம் கண்டு வருடந்தோறும் விருது வழங்கிவருகிறது. அந்த விருதை தனது
தன்னலமற்ற சமூக சேவைகளுக்காக இந்த வருடம் பெற்று இருக்கிறார்
திரு.கிருஷ்ணன்.

அப்படி என்ன செய்கிறார் கிருஷ்ணன்?
”நான் பிச்சைக்காரர்களுக்கு உண்வு கொடுப்பதில்லை. அவர்களை அவர்களே
கவனித்துக்குக் கொள்வார்கள்.மனநிலை குன்றியவர்கள் தான் யாரிடமும் உணவோ,
காசோ கேட்க தெரியாது. அவர்களுக்கு உதவுகிறேன்” என்கிறார் கிருஷ்ணன்.

யார் இந்த கிருஷ்ணன்?

மதுரை மாநகர தெருக்களில், மனநிலை குன்றிய 400 பேருக்கு வருடம் 365
நாட்களும், நாளுக்கு மூணு வேளையுமாக உணவு வழங்கிக் கொண்டு இருக்கும்
இவருக்கு அப்படி ஒன்றும் வயதாகி விடவில்லை. வெறும் 28 தான். கடந்த ஏழு
வருடங்களாக, அக்‌ஷ்யா டிரஸ்ட் என்னும் தொண்டு நிறுவனம் மூலமாக இதை செய்து
வருகிறார்.

[You must be registered and logged in to see this link.]பெங்களூருவின் ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டலில், சமையலை தொழிலாக(செஃபாக)
செய்து வந்த அனுபவம் கைகொடுத்து இருக்க வேண்டும். சுத்ததிலும்,
பாத்திரங்கள் பளபளவென்று அடுக்கி வைக்கப்பட்டு இருக்கும் நேர்த்தியிலும ,
அரிசி பருப்பு, காய் கறி, மசாலா சாமான்களின் தரத்திலும் ஒரு ஐந்து
நட்சத்திர ஹோட்டலின் சமையலறையை ஒத்திருக்கிறது கிருஷ்ணனின் சமையலறை.

”தினமும் மெனுவை மாற்றி விடுவேன்.ஒரெ உணவை சாப்பிட்டால் அவஙகளுக்கு சலித்து
போயிடுமில்ல?” உற்சாகமான அவருடைய புன்னகை நம்மை எளிதில்
தொற்றிக்கொள்கிறது.

இரண்டு சமையல்காரர்களின் உதவியோடு, தினமும் மூன்று வேளையும் சமைத்து, தன்
வளர்ப்பு மக்களை தேடி தெருத்தெருவாக தானே எடுத்து செல்கிறார்.மனநிலை
குன்றியவர்கள அடிக்கடி இடம் பெயர்வதில்லையாம், தினமும் அதே இடத்தில் தான்
சந்திக்கிறாராம்.

ஒரு பெரிய பாத்திரத்தில் தயிர் சாதமும், சிறியது ஒன்றில் ஊறுகாயுமாக, ஒரு
மாருதி வேனில் கிளம்புகிறார். வேன்? மதுரையின் ஒரு தயாளர் தானமாக
கொடுத்தது. பத்து நிமிட பயணம். வேன், ஒரு சுவரின் அருகில் படுத்து
இருக்கும் மனிதரின் அருகில் நிற்கிறது,கிருஷ்ணன் தயிர்சாதத்தை அவர் அருகில்
வைக்க, அவர் அதை சீண்டக்கூட இல்லை. தண்ணீர் பாட்டிலை வாங்கி மட மட என்று
குடிக்கிறார்.”பாவம் ரொம்ப தாகம். கொஞ்சம் கழித்து சாப்பிடுவார்” இது
கிருஷ்ணன் சொன்னது.

வேனின் அடுத்த நிறுத்தம். தானே இலையில் சாதம் போட்டு, கொஞ்சம் எடுத்து ஒரு
மனிதருக்கு ஊட்டியும் விடுகிறார். இரண்டு கவளத்துக்கு பிறகு அவர் தன்னாலேயே
சாப்பிட ஆரம்பிக்கவும், கிளம்பி, அடுத்து ஒரு ட்ராஃபிக் சிக்னல்.
அழுக்கும், கிழிசலும், தாடியுமாக அந்த கூட்டத்தில் தனியாக தெரிந்த நாலு
பேர், வேனை நோக்கி வருகிறார்கள். அவர்களிடம் எந்த் பரபரப்பும் இல்லை, “இந்த
வேன் வந்தால் சாப்பாடு, கிருஷ்ணன் அவர்களுக்கு காத்திருப்பார்” என்பதை
அவர்களுடைய மனது அறிந்தே இருக்கிறது.
”அவர்களுக்கு தனக்கு தானே தண்ணீர் கூட எடுத்துக் கொள்ள தெரியாது” ஒரு
மரத்தடியில் அவர்களுக்கு சாப்பாடு பரிமாறி, தண்ணீரும் தந்து கொண்டே
சொல்கிறார்.

அக்‌ஷய பாத்திரம் காலி ஆகும் வரை நகர்வலம் வருகிறது கிருஷ்ணனின் மாருதி
வேன். மீண்டும் இரவு உணவுக்கு பாத்திரம் நிறையும். பயணம் துவங்கும்.

இத்தனைக்கும் சாப்பிட்ட ஒருவர் கூட கிருஷ்ணனுக்கு நன்றி சொல்வதில்லை. நன்றி
என்ன நன்றி? ஒரு புன்னகை? ஒரு தலையசைப்பு? ஒன்றும் கிடையாது. அவரவர்
வேலைகளை செய்வதற்கே நாமெல்லாம் நன்றியை எதிர்பார்க்கும் இந்த
காலத்தில்,கிருஷ்ணன் பாட்டுக்கு அவர் பணியை தொடர்கிறார்.

[You must be registered and logged in to see this link.]ஒரு
நாளைக்கு 12000 ரூபாய் செலவு ஆகிறதாம். “மாதத்தில் 22 நாட்களுக்கு
”Donars” இருக்கிறார்கள். மீதி நாட்களை நானே சமாளிக்கிறேன்” அயராமல்
சொல்வதோடு, “மீதி நாட்களுக்கும் கூடிய விரைவில் கிடைத்து விடுவார்கள்”
என்னும் குரலில் ஏராளமான நம்பிக்கை.அக்கவுண்டுகளை வெகு சிரத்தையாக
கையாள்கிறாராம். அக்‌ஷயா ஆரம்பித்த பிறகு, முதன்முதலாக,பலசரக்கு வாங்கிய
ரசீதை செண்டிமெண்டாக வைத்து இருக்கிறார்.பொருளாதார வீழ்ச்சி இவரையும்
விட்டு வைக்க வில்லை, 25 ஆக இருந்த Donars, 22 ஆக குறைந்து போய்
இருக்கிறார்க்ள்.

இன்ஃபோஸிஸ், டிவிஎஸ் நிறுவனங்கள் இவருடைய சேவைக்காக 3 ஏக்கர் நிலத்தை
தானமாக வழங்க, அதில் ஒரு காப்பகம் அமைக்க திட்டம் இட்டு, முதலில் 80 பேர்
தங்கும் அளவில் ஒரு பெண்கள் பகுதிக்கு அடித்தளம் மாத்திரம் கட்டிய
நிலையில், நிதி தட்டுப்பாட்டினால், அப்படியே கிடப்பில் இருக்கிறது.

கிருஷ்ணனின் எல்லை உணவு கொடுப்பதோடு முடிந்து விடவில்லை.இன்னும் பரந்து
இருக்கிறது. கேட்பாரற்று இருக்கும் அனாதை பிணங்களுக்கு இறுதி சடங்கு
செய்யும் பணியையும் செய்து வருகிறார் கிருஷ்ணன்.பிணத்தை claim செய்து,
குளிப்பாட்டி, உரிய முறையில் நல்லடக்கம் தருவதுமாக இருக்கும் இவரை, மதுரை
முனிசிபாலிடியில் இருந்தும், பொது மருத்துவமனையில் இருந்தும், இறுதி சடங்கு
செய்ய சொல்லி அழைக்கிறார்கள்.

நம் தேசபிதா காந்தியை கதராடை கட்டவைத்து 'மகாத்மா' ஆக காரணமாக இருந்த
மதுரையே இவரது மாற்றத்திற்கும் காரணம். இப்படி இப்பட்செய்ய தூண்டியது ?
என்ற கேள்விக்கு அவர் இவ்வாறு நினைவு கூர்கிறார் "பெங்களூருவில் ஒரு ஐந்து
நட்சத்திர ஹோட்டலில் பணிபுரிந்த நான், வெளிநாடு செல்வதற்கு முன் சொந்த ஊர்
மதுரைக்கு வந்தேன். டாக்ஸியில் ஏர்போர்ட் செல்லும் போது மனநலம்
பாதிக்கப்பட்ட ஒரு முதியவர் தன் மலத்தை தானே உண்ணும் அவலத்தை பார்த்து பதறி
அடித்து அருகில் இருந்த ஹோட்டலுக்கு ஓடி, அவருக்கு பத்து இட்லி வாங்கி
கொடுத்தேன். அரக்க பரக்க சாப்பிட்டு முடித்த அவர் என்னை பார்த்து ஒரு
சிரிப்பு சிரித்தார். அந்த சிரிப்பு தான் என்னை மீண்டும் மீண்டும் செய்ய
தூண்டியது, அதன்பின், இத்தகையவர்களுக்கு உணவிடுவதே தன் தொழில் என முடிவு
செய்துவிட்டேன்".

இவ்ருக்கு இன்னும் திருமணமாக வில்லை. "நாள் முழுக்க மற்றவர்களுக்கு சமைத்து
கொண்டு இருக்கும் என்னை யார் கல்யாணம் செய்து கொள்வார்கள்?" என்று
கேட்கிறார்.தன்னை திருமணம் செய்து கொள்பவர்,அவருடைய இந்த வாழ்க்கை முறைக்கு
ஒத்து வர வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார்.ஆரம்பத்தில்
அதிர்ச்சியான இவருடைய பெற்றோர்கள் கூட இப்போது இவருக்கு மிகவும் உறுதுணையாக
இருக்கிறார்கள்.


[You must be registered and logged in to see this link.]ஒரு
ஐந்து நட்சத்திர ஹோட்டலில் பார்த்துக்கொண்டு இருந்த வேலையை விட்டு விட்டு,
மனனலம் குன்றியவர்களுக்கு சமையலும், அனாதை பிணங்களுக்கு காரியமும்
செய்கிறீர்க்ளே? என்று ஆதங்கப்படுபவர்களுக்கு இவரது பதில், “எனக்கு இது
பிடித்து இருக்கிறது”.

இவர் மதுரையில் நடத்திவரும் [You must be registered and logged in to see this link.] சேவைமையத்திற்கு ஏழு வயதாகிறது.

தன் வயிறுபசித்தால் பாலுக்குகூட அழதெரியாத மனநலம் குன்றிய
குழந்தைகளுக்கு தேடிபோய், தானே சமைத்து உணவிடும்
'தாயுமான' கிருஷ்ணனுக்கு, உதவி செய்துவரும் பல கரங்களோடு,
இந்த நன்னாளில் நம் கரங்களையும் இணைப்போம்.
எல்லோருக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்.
ஜெய்ஹிந்த்.


நெல்லுக்கு இறைத்தநீர் வாய்க்கால் வழியோடிப்
புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம் - தொல்லுலகில்
நல்லார் ஓருவர் உளரேல் அவர்பொருட்டு
எல்லார்க்கும் பெய்யும் மழை - ஔவையார்


தகவல்/படங்கள் உதவி:
[You must be registered and logged in to see this link.]

பிகு: இந்த கட்டுரையை எழுத தூண்டிய குரு பிரசாத்துக்கும், இதை தமிழில் எழுத உதவிய இரண்டு நண்பர்களுக்கும் என் நன்றி.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
[You must be registered and logged in to see this link.]
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

மாமனிதர் மதுரை கிருஷ்ணன்  Empty Re: மாமனிதர் மதுரை கிருஷ்ணன்

Post by ஸ்ரீராம் Mon Dec 17, 2012 8:54 pm

இவரை பற்றி தெரியும் தம்பி, இவருக்காக நான் ஒட்டு போட்டேன். அப்போது உலக அளவில் நான்காவது சமூக சேவகராக இருந்தார்.

அமரிக்காவில் உயர்ந்த பதவியில் இருக்கவேண்டியவர், இவரின் கதை கல் மனதையும் கலங்க வைக்கும்.
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

மாமனிதர் மதுரை கிருஷ்ணன்  Empty Re: மாமனிதர் மதுரை கிருஷ்ணன்

Post by மகா பிரபு Mon Dec 17, 2012 9:06 pm

நேற்று தான் என் நண்பர் ஒருவர் இவரை பற்றி சொன்னார். அதனால் தான் இந்த பதிவு.
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

மாமனிதர் மதுரை கிருஷ்ணன்  Empty Re: மாமனிதர் மதுரை கிருஷ்ணன்

Post by சிவா Mon Dec 17, 2012 9:12 pm

பகிர்ந்து கொண்டதற்கு நன்றி அண்ணா
சிவா
சிவா
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 2455

http://www.onlytamil.in

Back to top Go down

மாமனிதர் மதுரை கிருஷ்ணன்  Empty Re: மாமனிதர் மதுரை கிருஷ்ணன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum