Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
ஓடும் ரயிலில் திருமணம் செய்து கொண்ட இளம் ஜோடி
Page 1 of 1 • Share
ஓடும் ரயிலில் திருமணம் செய்து கொண்ட இளம் ஜோடி
ஓடும் ரயிலில் திருமணம் செய்து கொண்ட இளம் ஜோடி: சந்தித்த இரண்டு மணி நேரத்தில் ஒன்றாகிய இரண்டு மனங்கள்
புதுடில்லி:முன் பின் சந்தித்திராத இளம் ஜோடி, ரயிலில் சந்தித்து பேசிய,
இரண்டு மணி நேரத்திலேயே, ஒருவரை ஒருவர் பிடித்துப் போய், திருமணமும் செய்து
கொண்ட சம்பவம், டில்லி ரயிலில் நடந்துள்ளது.
"ஆயிரம் காலத்து பயிர்' என, வர்ணிக்கப்படும் திருமண உறவில், இரு உள்ளங்களை இணைக்க, ஜாதி, மதம், ஜாதகம், பொருத்தம் எ
ன,
பலவும் பார்க்கப்படுகின்றன. ஆனால், பார்த்த சில மணி நேரத்திலேயே, இரு
மனமும் ஒன்றாகி, திருமண பந்தம் வரை சென்றுள்ளது, உண்மையில் ஆச்சர்யமானது
தான்.முன்னெப்போதும் இது போன்ற சம்பவம் நடந்திராது என்று கூறும் அளவிற்கான
சம்பவம், டில்லி ரயிலில் நடந்துள்ளது.
கடந்த செவ்வாய் கிழமை
மதியம், டில்லி, நிஜாமுதீன் ரயில் நிலையத்திலிருந்து, ரயில் ஒன்று
புறப்பட்டது. இருக்கை வசதி கொண்ட அந்த ரயிலில், எதிரெதிர் இருக்கையில், ஒரு
இளம் பெண்ணும், இளைஞனும் அமர்ந்திருந்தனர். அவர்கள் இருவரும், முன் பின்
சந்தித்திராதவர்கள். ரயில் புறப்பட துவங்கியதும், ஒருவருக்கொருவர் பேசத்
துவங்கினர். அந்த இளைஞன், லக்னோ செல்ல டிக்கெட் எடுத்திருந்தார்; இளம்பெண்,
கான்பூர் செல்ல டிக்கெட் வாங்கியிருந்தார்.
"நீங்கள் எங்கே
செல்கிறீர்கள்?' என்று பேசத் துவங்கிய இந்த ஜோடி, ஒரு மணி நேரத்திற்குள்,
தங்களின் பணி, குடும்பம், அந்தரங்கம், ஆசாபாசம், திருமண விருப்பம்,
எதிர்காலம் என, அனைத்தையும் பேசித் தீர்த்து விட்டது. இதை, அருகில் இருந்த
சக பயணிகள், பார்த்துக் கொண்டே இருந்தனர்.இரண்டு மணி நேரம் முடிந்த
நிலையில், அலிகார் ஸ்டேஷனை, ரயில் அடைந்தது. இளம் ஜோடி, மிகவும்
நெருக்கமாகி விட்டது; இருவருக்கிடையே, அன்பும், காதலும், பாசமும் வெள்ளமென
பாய்ந்து கொண்டிருந்தது.எதிரே இருந்தவர்களை சாட்சியாக வைத்து, திருமணம்
செய்து கொள்ள, அந்த ஜோடி விரும்பியது. பெட்டியில் இருந்த மற்றவர்களிடம்,
இது குறித்து வேண்டுகோள் விடுத்தது.
முகத்தில் மகிழ்ச்சியுடனும்,
கண்களில் கனவுகளுடன் இருந்த அந்த இளம் ஜோடியின் வேண்டுகோளை மறுக்க முடியாத,
சக பயணிகள், திருமணம் நடத்தி வைக்க முன்வந்தனர். அங்கிருந்தவர்களில்
ஒருவர், "இன்னும் சில நிமிடங்களில், முகூர்த்த நேரம் முடியப் போகிறது' என,
கூறியதும், ஓடும் ரயிலிலேயே, திருமணத்திற்கு ஏற்பாடு
செய்யப்பட்டது.அவர்களில் ஒருவரே, புரோகிதர் போல அமர்ந்து, மந்திரங்கள்
சொல்ல, பயணிகளின் உற்சாக குரல், கைத்தட்டலில், மோதிரம் அணிந்து, அந்த ஜோடி
திருமணம் செய்து கொண்டது.இந்த தகவல், எப்படியோ, அடுத்து வந்த, துண்ட்லா
ரயில்வே ஸ்டேஷனுக்கு தெரிய வந்தது. அந்த ஸ்டேஷனில், ரயில் நின்றதும், இளம்
ஜோடி இருந்த ரயில் பெட்டிக்குள், போலீசார் நுழைந்தனர். "ரயிலிலேயே திருமணம்
செய்து கொண்டது யார்?' என கேட்டனர்.
இருவரும், தம்
விருப்பத்தையும், திருமணம் செய்து கொண்டதையும், தாங்கள், "மேஜர்'
என்பதையும், ஆதாரங்களுடன் போலீசாரிடம் கூறினர். முறைப்படி மாலை மாற்றி,
திருமணம் செய்து கொண்டதாகவும்; தாங்கள், கணவன் - மனைவி ஆகி விட்டதாகவும்
கூறினர். அவர்களை ஒன்றும் செய்ய முடியாத போலீசார், வேறு வழியின்றி, அடுத்த
ஸ்டேஷனில் இறங்கிச் சென்றனர்.இளம் ஜோடியாக ரயிலில் ஏறி, திருமண ஜோடியாக
இறங்கிச் சென்றதை, அந்த ரயில் பயணிகள், ஆர்வமாக பார்த்துக் கொண்டிருந்தனர்.
அந்த ஜோடி இறங்கி சென்று, நீண்ட நேரம் ஆன பிறகும், இப்படியும் நடக்குமா
என, பலருக்கும் ஆச்சர்யமாக இருந்தது."கனவு போல, அந்த ஜோடியின் திருமணம்
நடந்து முடிந்தது' என, சக பயணிகள், நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தனர்.
-தினமலர்
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Re: ஓடும் ரயிலில் திருமணம் செய்து கொண்ட இளம் ஜோடி
டிரெயின் ஏறிட வேண்டியதுதான்
ஏன்? ஊருக்கு ஒன்னு வேனும்னு ஆசையோ?
வீட்டுக்காரம்மா காதில போட்டுவைக்க வேண்டியதுதான்.
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: ஓடும் ரயிலில் திருமணம் செய்து கொண்ட இளம் ஜோடி
முரளிராஜா wrote:
எவ்வளவு வேகமா ஓடினாலும் பிடிக்க முடியாது முரளி.
ட்ரெயின் போயிடுச்சு...
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Re: ஓடும் ரயிலில் திருமணம் செய்து கொண்ட இளம் ஜோடி
அவரு வீட்டுக்காரம்மாக்கு பயந்து ஓடுறாரு.
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: ஓடும் ரயிலில் திருமணம் செய்து கொண்ட இளம் ஜோடி
mohaideen wrote:அவரு வீட்டுக்காரம்மாக்கு பயந்து ஓடுறாரு.
இப்ப இந்த விளக்கம் இங்க தேவையா?
Re: ஓடும் ரயிலில் திருமணம் செய்து கொண்ட இளம் ஜோடி
என்ன ஜேக் இப்படி பயப்படுறாரு.
தங்கச்சிட்ட கொஞ்சம் கருணை காட்டச்சொல்லுங்க
தங்கச்சிட்ட கொஞ்சம் கருணை காட்டச்சொல்லுங்க
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: ஓடும் ரயிலில் திருமணம் செய்து கொண்ட இளம் ஜோடி
நேத்து பஞ்சர்...
இன்னிக்கு டிஞ்சர்..
பயப்படாம என்ன செய்வார்?
பாவம்... பரிதாபப்படுவதை விட நமக்கு வேறு வழி தெரியவில்லை முஹை
இன்னிக்கு டிஞ்சர்..
பயப்படாம என்ன செய்வார்?
பாவம்... பரிதாபப்படுவதை விட நமக்கு வேறு வழி தெரியவில்லை முஹை
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Re: ஓடும் ரயிலில் திருமணம் செய்து கொண்ட இளம் ஜோடி
கொஞ்ச நஞ்ச சேட்டையா பண்ணியிருக்கிறார்?
இந்த வயசிலயும் தடுமாறத்தான் செய்றாரு.
இந்த வயசிலயும் தடுமாறத்தான் செய்றாரு.
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: ஓடும் ரயிலில் திருமணம் செய்து கொண்ட இளம் ஜோடி
மகா பிரபுவ பற்றி என்ன பேசிகிட்டு இருக்கீங்க இரண்டு பேரும்
Re: ஓடும் ரயிலில் திருமணம் செய்து கொண்ட இளம் ஜோடி
mohaideen wrote:கொஞ்ச நஞ்ச சேட்டையா பண்ணியிருக்கிறார்?
இந்த வயசிலயும் தடுமாறத்தான் செய்றாரு.
மீசை நரைத்தாலும் மனுஷனுக்கு ஆசை நரைக்கவில்லையே...
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Re: ஓடும் ரயிலில் திருமணம் செய்து கொண்ட இளம் ஜோடி
சமாளிக்கிறாராம். செய்றதயும் செய்துபுட்டு பேசுற பேச்ச பாரு பச்சபுள்ளயாட்டம்.
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: ஓடும் ரயிலில் திருமணம் செய்து கொண்ட இளம் ஜோடி
முரளிராஜா wrote:மகா பிரபுவ பற்றி என்ன பேசிகிட்டு இருக்கீங்க இரண்டு பேரும்
என்னா திருப்பு திருப்புறாய்யா மனுஷன்...??!!
ஆனாலம் என்ன... முடியாது....
முடியவே முடியாது...
யாருகிட்ட...
முஹை,... ஜேக்கிடமா?...
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Re: ஓடும் ரயிலில் திருமணம் செய்து கொண்ட இளம் ஜோடி
முரளிராஜா wrote:இப்ப எதுக்கு இங்க கை தட்றிங்கரானுஜா wrote:
தம்பதிகளுக்கு கை தட்டுறேன்
உங்க முகத்துல இருக்கிற தக்காளி சாஸை துடைங்க
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Re: ஓடும் ரயிலில் திருமணம் செய்து கொண்ட இளம் ஜோடி
நீங்க வீட்ல படுற கஸ்டத்தை நினைச்சு இவங்க சந்தோஸத்தில கை தட்டுறாங்க.
எங்க தலைவருடைய நிலைமை எல்லோருக்கும் விளையாட்டா போச்சு
எங்க தலைவருடைய நிலைமை எல்லோருக்கும் விளையாட்டா போச்சு
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: ஓடும் ரயிலில் திருமணம் செய்து கொண்ட இளம் ஜோடி
ரானுஜா wrote:முரளிராஜா wrote:இப்ப எதுக்கு இங்க கை தட்றிங்கரானுஜா wrote:
தம்பதிகளுக்கு கை தட்டுறேன்
உங்க முகத்துல இருக்கிற தக்காளி சாஸை துடைங்க
முகத்தில விழுந்த தக்காளி சாஸ் பற்றிய விபரம் தங்களுக்கும் தெரிந்து விட்டதா?
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Re: ஓடும் ரயிலில் திருமணம் செய்து கொண்ட இளம் ஜோடி
mohaideen wrote:நீங்க வீட்ல படுற கஸ்டத்தை நினைச்சு இவங்க சந்தோஸத்தில கை தட்டுறாங்க.
எங்க தலைவருடைய நிலைமை எல்லோருக்கும் விளையாட்டா போச்சு
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Similar topics
» 11 பேரை திருமணம் செய்து நகை, பணத்தை சுருட்டிய பலே பெண்
» 2வது திருமணம் செய்து கொண்ட ஐபிஎஸ் அதிகாரி 'டிஸ்மிஸ்'
» ஓடும் ரயிலில் இருந்து இளைஞர்களை தூக்கி வீசிய ராணுவத்தினர்
» இருக்கை ஒதுக்குவதில் ஏற்பட்ட தகராறில், ஓடும் ரயிலில் இருந்து ஒரு பயணியை கீழே தள்ளிவிட்டார் டிக்கெட்
» திருமணம் செய்து கொள்ள உடல் பரிசோதனை அவசியம்
» 2வது திருமணம் செய்து கொண்ட ஐபிஎஸ் அதிகாரி 'டிஸ்மிஸ்'
» ஓடும் ரயிலில் இருந்து இளைஞர்களை தூக்கி வீசிய ராணுவத்தினர்
» இருக்கை ஒதுக்குவதில் ஏற்பட்ட தகராறில், ஓடும் ரயிலில் இருந்து ஒரு பயணியை கீழே தள்ளிவிட்டார் டிக்கெட்
» திருமணம் செய்து கொள்ள உடல் பரிசோதனை அவசியம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum