Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
கிறிஸ்மஸ் பண்டிகையின் வரலாறு
Page 1 of 1 • Share
கிறிஸ்மஸ் பண்டிகையின் வரலாறு
இறைமகன் இயேசு பிறந்தநாளே கிறிஸ்மஸ் பண்டிகை!
கன்னி மரியாவுக்கும் யோசேப்புக்கும் திருமண ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்த நிலையில் திடீரென ஒரு நாள் மரியா முன்பு கபிரியேல் தூதர் தோன்றி, அருள் மிகப் பெற்ற மரியாவே வாழ்க! ஆண்டவர் உம்மோடு இருக்கிறார்! என்று கூறினார். இந்த வாழ்த்தை கேட்டு மரியா கலங்கி நின்றார். உடனே வானதூதர், மரியாவை பார்த்து ''மரியாவே அஞ்ச வேண்டாம், கடவுளின் அருளைப் பெற்றுள்ளீர், இதோ கருவுற்று ஒரு மகனை பெறுவீர், அவருக்கு இயேசு என பெயரிடுவீர், அவர் உன்னத கடவுளின் மகனாவார். அவர் பெரியவராய் இருப்பார். அவரது ஆட்சிக்கு முடிவே இராது” என்று வானதூதர் கூறினார்.
உடனே மரியா, இது எப்படி நிகழும். நான் கன்னி ஆயிற்றே என்றார். அதற்கு வானதூதர், தூய ஆவி உம் மீது வரும். உன்னத கடவுளின் வல்லமை உம்மேல் நிழலிடும். ஆதலால் உம்மிடம் பிறக்கும் குழந்தை தூயது. அக்குழந்தை இறைமகன் எனப்படும். பின்னர் மரியா, நான் ஆண்டவரின் அடிமை. உம் சொற்படியே எனக்கு நிகழட்டும் என்றார். பின்னர் வனதூதர் திடீரென அவரை விட்டு மறைந்து விட்டார்.
இந்த நிலையில், கூடி வாழும் முன் மரியா கருவுற்றிருப்பதை அறிந்த யோசேப்பு நேர்மையானவரும் நீதிமானுமாய் இருந்ததால் மரியாவை இகழ்ச்சிபடுத்த விரும்பாமல் மறைவாக விலக்கிட நினைத்தார். அவர் தனிமையில் சிந்தித்துக் கொண்டிருக்கையில், வானதூதர் யோசேப்பின் கனவில் தோன்றி, தாவீதின் மகனே, மரியாவை ஏற்றுக் கொள்ள அஞ்சவேண்டாம். அவர் கருவுற்றிருப்பது தூய ஆவியால்தான், ஏனெனில் அவர் தம் மக்களை பாவங்களில் இருந்து மீட்பார் என்றார்.
''இதோ! கன்னி கருவுற்று ஓர் ஆண் மகனைப் பெற்றெடுப்பார், அக்குழந்தைக்கு இம்மானுவேல் எனப் பெயரிடுவார்'' என ஆண்டவர் உரைத்தது நிறைவேறவே இவையாவும் நிகழ்ந்தன. இம்மானுவேல் என்றால் கடவுள் நம்முன் இருக்கிறார் என பொருள்.
webdunia photo WD
யோசேப்பு தூக்கத்திலிருந்து விழித்தெழுந்து தூதர் பணித்தவாறே மரியாவை மனைவியாக ஏற்றுக் கொண்டார். அகுஸ்து சீசர், மக்கள் தொகையை கணக்கிட கட்டளையிட தம் பெயரை பதிவு செய்ய யோசேப்பு, மரியாயோடு யூதேயாவிலுள்ள பெத்லேகம் என்ற தாவீதின் ஊருக்குச் சென்றார். அந்நேரம் மரியாவுக்கு பேறுகாலம் வர, விடுதியில் இடம் கிடைக்காததால் மாட்டுத் தொழுவத்தில் தெய்வமகன் பிறந்தார். குழந்தையை துணிகளால் பொதிந்து தீவனத் தொட்டியில் கிடத்தினார்.
அப்பொழுது இடையர்கள் வயல்வெளியில் தங்கியருக்கும் போது தூதர் தோன்றி அஞ்சாதீர்கள். இதோ, எல்லா மக்களுக்கும் மகிழ்ச்சியூட்டும் நற்செய்தி ஒன்று, இன்று ஆண்டவராகிய மெசியா தாவீதின் ஊரில் பிறந்திருக்கிறார் என கூறினார். பின் இடையர்கள் மரியா, யோசேப்பு குழந்தையும் கண்டார்கள். பின் கடவுளை போற்றி புகழ்ந்து கொண்டே திரும்பிச் சென்றார்கள்.
எட்டாம் நாள் குழந்தைக்கு தடை செய்த போது கடவுளின் தூதர் அறிவித்தபடி இயேசு எனப் பெயரிட்டார்கள். உலக மக்களை பாவத்தில் இருந்து மீட்க மீட்பர் இயேசு பிறந்தார். இதை நினைவு கூறும் வகையில் கிறிஸ்மஸ் பெரு விழா உலகம் முழுவதும் மகிழ்வுடன் கொண்டாடப்பட்டு வருகிறது.
நன்றி: பேஸ்புக்

பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Similar topics
» கிறிஸ்மஸ் ஸ்பெஷல்
» கிறிஸ்மஸ் மற்றும் புதுவருட வாழ்த்து வினோதமான முறையில் வீடியோ
» இணைய உலக வரலாறு
» இணைய உலக வரலாறு
» வரலாறு: மிளகாய்

Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum