தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


அடிப்படை மருத்துவத்தை மீட்டெடுப்போம்!

View previous topic View next topic Go down

அடிப்படை மருத்துவத்தை மீட்டெடுப்போம்! Empty அடிப்படை மருத்துவத்தை மீட்டெடுப்போம்!

Post by பூ.சசிகுமார் Thu Dec 27, 2012 6:51 pm

இந்தியநாடு உலகின் மிகத் தொன்மையான நாடுகளுள் ஒன்று. அதன் பல்துறை அறிவும் ஆதிகாலம் தொட்டே வளர்ந்து வந்திருக்கிறது. பல்துறை அறிவின் பகுதியாக மருத்துவ அறிவும் அமைந்துள்ளது என சொல்லத்தேவையில்லை.

இந்திய மருத்துவத்துறை குறித்து அறியப்பட்ட வரலாறு சுமார் 5000 ஆண்டு காலத்தியதாகும் என அறிஞர் தேவி பிரசாத் சட்டோபாத்யாயா போன்றோர் கருதுகின்றனர்.

உலகை இயற்கையியலாளர்கள் வட கோளம், தென் கோளம் என இரண் டாக வகைப்படுத்து வர். உலகின் தலை சிறந்த நாகரீகங்கள்யாவும் தென்கோளத்திலே கருக்கொண்டதை நாமறிவோம். காரணம் என்ன வெனில், நிலநடுக்கோடும் மகரரேகையும் நிலவும் இப்பகுதியின் சமதட்ப வெப்ப நிலையே ஆகும். இதன்விளைவாக சிறந்த நீர்வளமும், விவசாய செழிப்பும், மூலிகை வளமும் தென்கோள நாடு ளில் இயற்கையின் கொடையாக வழங்கப்பட்டிருக்கின்றன. எடுத்துக்காட்டாக சுமார் 1500 வகையான நாட்டு தாவரங்களை கையாண்டுள்ளனர் எனவும், இவற்றில் 500க்கும் மேற்பட்டவை காய் வகைகள் எனவும் அறிய நேரிடுகிறது.

மருத்துவத்துறை அறிவின் தோற்றம் குறித்து ஆராய்கிறபோது, பொதுவாக அறிவு எங்கிருந்து வருகிறது என நாம் அறிந்து கொள்ள வேண்டியுள்ளது. “புறநிலை உலகின் எண்ணற்ற தோற்றப்பாடுகள் மனிதனின் கண், மூக்கு, காது, வாய், மெய் ஆகிய ஐம்புலன்கள் வாயிலாக மூளையில் பிரதிபலிக்கிறது. இதுவே அறிதலின் முதல் கட்டமாகும்” என பேராசான் மா சே துங் குறிப்பிடுவார். அதுதான் மருத்துவ அறிவின் முதற் கட்டத்துக்கு அவசியமான புறநிலை - தென் கோள நாடுகளில் குறிப்பாக இந்தியாவில் நிலவியதை மேலே கண்டோம்.

இயற்கை சார்ந்த நடைமுறை - அதுவே மருத்துவ அறிவு வளர்ந்து வந்த நிலையில் அன்றைய ஆதி கால மக்கள் எதிர்கொண்ட மிக முக்கிய மருத்துவ பிரச்சனை, நோய்களின் முழு பரிமாணத்தை கண்டறிவதையும், மருந்துப் பொருட்களைக் கையாள் வதில் உள்ள சிக்கலுமே இதன் காரணமாக அன்று எல்லா மருத்துவ நலப் பிரச்சனைகளுக்கும் முழுத் தீர்வு அளிக்க இயலா நிலையில் அவர்கள், நோய்களுக்கு காரணம் துர் தேவதைகள் எனவும், அதனை மகிழ்வித்து நலம் பெற பலியிடல், மந்திரம் சொல்லல் எனவுமான வழி வகைகளை மேற்கொண்டனர். இதன் எச்சங்கள் பலவும் இன்றும் நிலவுவதை நாம் அறிவோம்.
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

அடிப்படை மருத்துவத்தை மீட்டெடுப்போம்! Empty Re: அடிப்படை மருத்துவத்தை மீட்டெடுப்போம்!

Post by பூ.சசிகுமார் Thu Dec 27, 2012 6:51 pm

இப்படியாக துவங்கிய நமது மருத்துவ பாரம்பரியம் குறித்து ரிக்வேதம், யஜுர் வேதம் மற்றும் அதர்வண வேதத்தில் நிறைய குறிப்புகள் காணக்கிடைப்பதாக சொல்லப்படுகிறது. இவ்வேத காலத்திற்கு பின் தோன்றிய புத்த, சமண, சமய எழுச்சி மருத்துவத் துறைக்கு கணிசமான பங்களிப்பை செலுத்தியுள்ளது. புத்தரும், புத்த பிட்சுக்களும் மருத்துவர் களாகவும் செயல்பட்டுள்ளனர். இன்றும் திபெத்தில் புத்தரை நோய் தீர்க்கும் கடவுளாகவே வழிபடுவதாக அறிகிறோம்.

ஆயுர்வேதத்தின் முன்னோடிகளாக போற்றப்படும் தன்வந்திரி, சரகசம்கிதா நூலாசிரியர் ஜீவகன் நாகசேனா போன்றோர் புத்த சமயத்தை பின்பற்றியுள்ளனர். நமது வள்ளுவப் பெருந்த கையின் கருத்துகளிலே சமணத்தின் தாக்கம் இருப்பதாக மேஜர் தி.சா. இராசு அவர்கள் தெரி விக்கிறார்கள்.

புத்த, சமண சமய தத்துவப் புரிதல் யாதெ னில், உலகம், நீர், நிலம், காற்று, நெருப்பு, வானம் ஆகிய ஐம்பூதங்களால் ஆனது எனவும், இவைகளிலிருந்து வாதம், பித்தம், கபம் என மூன்று இயல்புகள் பிறப்பதாகவும், இவற்றிற்கு அதிபதிகள் வாயு, சூரியன், சந்திரன் எனவும் விளங்கப்படுகிறது. இம்மூன்றில் எதுவொன்று உடலில் மிகுந்தாலும் குறைந்தாலும் நோய் ஏற்படுவதாக கருதப்படுகிறது.

கல்தோன்றி மண் தோன்றா காலத்தே முன்தோன்றிய மூத்த குடியான தமிழ் மரபிலே, இதற்கு இணையான ஏன் இதற்கும் மேலான மருத்துவ பாரம்பரியம் நிலவியிருக்கக்கூடும். போதுமான வரலாற்று பதிவுகளும், ஆய்வுகளும் இல்லாததால் சித்தம் (வர்ம கலைகள்) பற்றி விரிவாக ஒன்றும் தெரியவில்லை.

எனினும், தமிழகச் சூழலில் சித்தர்கள் பணி குறித்து, நாம் ஆழ்ந்த கவனம் செலுத்த வேண்டியுள்ளது. சிவனே ஆதி சித்தர் என சொல்லப்படுகிறது. திருமூலர் போன்றோர் சித்தர் எனக் கருதப்படுகின்றனர். சித்தர்கள் குறித்தும் சரியான விபரங்கள் ஏதும் இல்லை. பாடல்களிலும் அநேக இடைச் செருகல்கள் இருக்கக் கூடுமென ஐயம் நிலவுகிறது.

சமீபத்திய சமூகப் பொருளாதார ஆய்வுகளின் பின்னணியில் சித்தர்கள் குறித்து புரிந்து கொள்ள முயல்கிற போதும் கீழ்க்காணும் முடிவுகளை நாம் மேற்கொள்ள வேண்டியுள்ளது. கி.மு. 10ம் நூற்றாண்டுக்குப் பிறகு தமிழகத்தில் நிலையான அரசுகள் ஏதும் இல்லை. பல்முனைத் தாக்குதலைக் கொண்ட படையெடுப்புகளால் விவசாயம் மிகக் கீழான நிலைக்கு சரிந்துவிட்டது. இந்நிலையில் பார்ப்பனிய எதிர்ப்பு வேளாளிய ஆதிக்கத்துக்கான முயற்சிகள் நடைபெறவும் சில பகுதிகளில் வெற்றி பெறவுமான நிலைமை.

இந்நிலையில் படையெடுப்பு தலைமைகள் பார்ப்பனிய, வேளாளிய தலைமைகளை எதிர்த்து அதிகார தகர்வு; மையப்படுத்தலுக்கான எதிர்ப்பு; உடமை மறுப்பு; கடவுள்களின் பெயராலான சுரண்டலுக்கு கண்டனம் பூவுலக மரபாக சித்தர்கள் எழுச்சி ஏற்பட்டுள்ளது. இவ்வெழுச் சியில் அதிகாரத்தோடு நேரடி தொடர்பு இல்லாத, சூத்திர சாதிகளைச் சேர்ந்த இடையர், கள்ளர், செம்படவர், வேடர், குயவர், உப்பு வணிகர் போன்றோர் பங்கேற்றுள்ளனர்.
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

அடிப்படை மருத்துவத்தை மீட்டெடுப்போம்! Empty Re: அடிப்படை மருத்துவத்தை மீட்டெடுப்போம்!

Post by பூ.சசிகுமார் Thu Dec 27, 2012 6:52 pm

இச்சித்தர்கள் தமது கருத்துகளை வெகு மக்களிடையே பரப்பி, அவர்களோடு இரண்டறக் கலப்பதற்கான கருவியாக எளிய மூலிகை மருத்து வத்தை கொண்டுள்ளனர்.

ஒரு சோற்றுப் பதமாக திருமூலரின் திருமந்தி ரம் குறித்து ஆராய்வது இங்கு பொருத்தமாக இருக்கும். இந்நூல் ஒன்பது பகுதிகளை உள்ளடக் கியது. இதில் உயிருக்கு அடிப்படை உடல் என்கிற வகையில் உடல் நலம் மனநலம் பேணுதல் தொடர்பாகவும் சமுதாய உறவுகளை கையாளுதல் தொடர்பாகவும் மருத்துவம் உள்ளடக்கமாக விரிவான வழிகாட்டுதல்கள் இடம் பெற்றுள்ளன. குறிப்பாக மூன்றாவது பகுதியில் உடல் நலம் பேண எண்ண செய்யவேண்டும் (இயமம்), என்ன செய்யக் கூடாது (நியமம்), உடற்பயிற்சி (ஆதனம்), மூச்சுப் பயிற்சி (பிராணயாமம்), மனதை நிலைப்படுத்துதல் (தாரணை) போன்றவை விளக்கப்பட்டுள்ளன.

இப்படி நீண்ட நெடிய மருத்துவப் பாரம்பரியத்தையும் பண்பாட்டையுமுடைய நமது நாடு இருநூறு கோடி உழைக்கும் கரங்களை உடமையாய் கொண்டது. காடு, மலை, காணி, கனிமம், நீர் ... என எந்த வளமும் குறைவிலாது கொண்ட நாடு. ஆனாலும் இருபத்தாறு கோடிப் பேர் வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழ்கின்றனர்.

நமது நாடு இன்னமும் ஒரு விவசாய நாடுதான். பெரும்பாலான மக்கள் கிராமப் புறங்களில் வாழ்கின்றனர். சரிபாதியினருக்கு விவசாயப் பொருளாதாரமே வாழ வழி அமைக்கிறது. கிராமப்புறங்களோ எந்தவிதமான அடிப்படை சுகாதார வசதியும் இன்றி உள்ளன. ஒவ்வொரு மழையும், வெயிலும் கிராமப்புற வாழ்வை அடியோடு தலைகீழாக புரட்டிப் போடுகின்றன. கிராமப்புற மருத்துவ வசதியோ மிகவும் கீழான நிலையில் உள்ளது. கழிப்பிடங்கள் இல்லை, சாக்கடை இல்லை, பாதுகாக்கப்பட்ட குடிநீர் இல்லை. மழை நீர் வடிகால் இல்லை, மருத்துவமனைகள் இல்லை, இருக்கும் மருத்துவமனைகளில் மருத்துவர் இல்லை. மருந்து இல்லை.

நகர்ப்புறங்களில் விரிவாக்கப்பட்ட பகுதிகளிலும், ஏழை எளிய மக்கள் வாழும் பகுதிகளிலும் ஏறக்குறைய இதே நிலைகள் தான். போதாதற்கு கொசுத் தொல்லை, மூட்டைப் பூச்சி துயரம், குடிக்க தகுதியற்ற நீர் வசதி, அதுவும் அதிக கட்டணம் செலுத்தி.

வாழ்நிலை இப்படியென்றால் மருத்துவ வசதி பற்றி சொல்லிமாளாது. அரசு மருத்துவ மனைகள் நலமாக்குகிறதோ இல்லையோ? நோய் பரப்புவது மட்டும் உண்மை. அவ்வளவு சுகாதார கேடு. மருத்துவத் துறையினர் கவனக்குறைவு, அலோபதியின் பின் விளைவுகள் பற்றி பேசாமலே விளங்கும், அத்துணை பிரசித்தம்.

இதுமட்டுமா, பெண்களின் உரிமைக்காக, நலவாழ்வுக்காக போராடும் எவ்வளவோ அமைப்புகள் உள்ளன. வன்புணர்ச்சியை விட மோசமான கொல்லுணர்ச்சியை அன்றாடம் நமது பெண்கள் எதிர்கொள்வது அடக்கி வைத்து அடக்கி வைத்து, அடிக்கடி எழுந்தமர்ந்து கடன் கழிக்கும் சாலையோர கழிப்பிடங்களில்தான், அதற்கும் இருள் கவியவேண்டும். மழைக்காலங் களிலோ பூச்சிப் புழுக்களோடு போராடவேண்டும். என்ன கொடுமை இது, சோறிடத்தான் வழி யில்லை - கழிப்பிடங்களுக்குமா?
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

அடிப்படை மருத்துவத்தை மீட்டெடுப்போம்! Empty Re: அடிப்படை மருத்துவத்தை மீட்டெடுப்போம்!

Post by பூ.சசிகுமார் Thu Dec 27, 2012 6:52 pm

நாட்டில் எல்லா இருப்புப் பாதையோரங் களுமே கழிப்பிடங்களாய்த்தான் உள்ளன. நகரங் களிலோ சுகாதாரக் கேடான பொதுக் கழிப்பிடங் களுக்கு இரண்டு ரூபாயும் மூன்று ரூபாயும் கட்டணம். இப்படி நமது பொதுசுகாதாரம் நாறிக் கிடக்கிறது.

மொத்தத்தில், நாட்டின் பெரும்பான்மை மக்களான கிராமப்புற மக்கள், நகர்ப்புற நடுத்தர ஏழை மக்கள் வாழ்வோ நரகம்தான். மருத்துவத் துறையினரின் மாற்றுப் போக்கை வாழ்நிலை ரீதியாக எதிர்பார்த்து காத்திருப்போர் இவர்கள் தான். ஆனால் இவர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள அன்றாடங்காய்ச்சி வாழ்வும் அறியாமையும் - இம்மக்களிடையே பொறுப்பின்மையையும் அக்கறையின்மையையும் வளர்த்து வைத்துள்ளன.

மருத்துவத்துறை அன்றாடம் வளர்ந்து வருவதாய் அறிஞர்கள் முழங்குகின்றனர். மருத்துவமனைகள் எண்ணிக்கையில் பெருகி வருகின்றன. மருத்துவக் கல்லூரிகளும் கூட, பொதுவாக மருத்துவம் வளர்ந்து வருகிறது. மருத்துவம் வளர்ந்தால் நோய்கள் ஒழிய வேண் டும் என்பதுதானே தர்க்க நியாயம். ஆனாலும் நோய்களும் அதிகரித்தே வருகிறது. அடுத்த ஆண்டுக்குள் இந்திய சர்க்கரை நோயாளிகள் எண்ணிக்கை ஆறு கோடியை எட்டிவிடுமாம். இந்த விஷயத்தில் உலகில் முதலிடம் நமக்குத்தான். இப்படி மருத்துவமும் நோய்களும் சேர்ந்தே கை கோர்த்து வளர்வது காணக் கிடைக்காத வேடிக்கையில்லையா? இது எப்படி நிகழ்கிறது?. இந்தக் கேள்வி நமக்கு மட்டுமல்ல உலக சுகாதார நிறுவனத்துக்கும் ஏற்பட்டுள்ளது. அவர்களும் இக்கேள்விக்கு விடை தேட முயன்றிருக்கிறார்கள். அதன் விளைவே இந்த ஆண்டின் உலக மருத்துவ நல அறிக்கை 2008 - முன்னெப்போதைக் காட்டி லும் இப்போது முக்கியத்துவம் பெறும் அடிப் படை மருத்துவ சேவை (Primary Health Care – New Morethan Over) என்பதாகும்.

அடிப்படை மருத்துவமானது, மருத்துவத் தின் மற்றைய நிலைகளைப் போல உயர் தொழில் நுட்பம் மற்றும் அதிகம் படித்த மருத்துவர்களைத் தேவையாய் கொண்டதல்ல. மக்கள் பங்கேற்பும் எளிய நுட்பங்களும் சாமான்ய அறிவும் சாதாரண பொருட்களும் கொண்டே முழுமையாக அடிப் படையாக மருத்துவத்தை மேற்கொள்ளலாம்.

குடிநீர்பாதுகாப்பு, பொது சுகாதாரம், வருமுன் காத்தல், சாலை பாதுகாப்பு, தொழிலிட பாதுகாப்பு, ஊட்டச்சத்து, தொற்றுநோய்களை கட்டுப்படுத்துதல், தாய் சேய் நலம், மன நலம், மதுபோதை மீட்பு, பற்களை பேணுதல், கண்பாதுகாப்பு, முதலுதவி, அவசர கால உதவி, நலவாழ்வுக் கல்வி போன்றவற்றை உள்ளடக்கியது அடிப்படை மருத்துவம்.
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

அடிப்படை மருத்துவத்தை மீட்டெடுப்போம்! Empty Re: அடிப்படை மருத்துவத்தை மீட்டெடுப்போம்!

Post by பூ.சசிகுமார் Thu Dec 27, 2012 6:52 pm

இந்த அடிப்படை நிலையை சரியாக நிறைவேற்றாவிட்டால் சாதாரண நோய்கள் கூட பெரு நோய்களாக பேருருக்கொள்ளும். இன்றைக்கேற்பட்டுள்ள பெருநோய்களில் 70% அளவிலானது அடிப்படை மருத்துவத்தை புறக்கணித்ததால் ஏற்பட்ட விளைவே என்றும் மருத்துவ செலவுகளால் ஆண்டுதோறும் 100 கோடி பேர் வறுமைக் கோட்டின் வாசலை வந்தடைகின்றனர் என்றும் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதனையே தும்பை விட்டுட்டு வாலை பிடிப்பது போல என கிராம மக்களும்,

இளைதாய் முள்மரம் கொல்க களையுநர்

கைகொல்லும் காழ்த்த இடத்து (879)

என வள்ளுவப் பெருந்தகையும் சொல்லியுள்ளனர்.

இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த அடிப்படை மருத்துவம் ஏன் புறக்கணிக்கப்படுகிறது? - இக்கேள்விக்கு விடை காண முதலாவதாக நாம் இன்றைய உலகின் முதன்மை மருத்துவமாக திகழும்; ஆங்கில மருத்துவத்தை புரிந்து கொள்ளவேண்டும். ஆங்கில மருத்துவம் தன்னை நவீன மருத்துவம் என்று அழைத்துக் கொண்டாலும் உலகின் புராதன மருத்துவங்களில் ஒன்றான கிரேக்க மருத்துவமே அது. சூரியன் அஸ்தமிக்காத காலணிய சாம்ராஜ்யத்தை உருவாக்கிய பிரிட்டன் வல்லாதிக்கம் உலகைச் சுரண்டிக் கொழிக்க, அடக்கி ஒடுக்க தனக்காக உருவாக்கிக் கொண்ட கருவிகளுள் ஒன்றாக ஆங்கில மருத்துவத்தையும் வடிவமைத்துக் கொண்டது. ஆங்கில மருத்துவம் அதற்கான உள்ளடக்கத்தை கொண்டிருந்ததும் ஒரு காரணம்.

சித்தா, ஆயுர்வேதம், யுனானி, அக்குபஞ்சர் போன்ற பாரம்பரிய மருத்துவங்களில் ஒன்றாக இருந்த கிரேக்க பாரம்பரிய மருத்துவமான அலோபதி இப்படியாகத்தான் தனது பாரம்பரிய தன்மையைக் களைந்து கொண்டு நவீன மருத்துவமாக - ஆதிக்க மருத்துவமாக உருக் கொண்டது. பிரிட்டிஷ் சாம்ராஜ்யத் தகர்வுக்குப் பிறகு உருவான அமெரிக்க ஏகாதிபத்யமும் பன்னாட்டு பகாசுர நிறுவனங்களும் ஆங்கில மருத்துவத்தை தமது ஆதிக்கத்திற்காக தத்தெடுத்துக் கொண்டன.

தற்போதைய ஆங்கில மருத்துவம் உள்ளடக் கத்திலேயே உயர் தொழில் நுட்ப உயர் அறிவு நுட்ப சார்பு பெரு மருத்துவமனைகளை மையம் கொண்டதாக உள்ளது. மருத்துவ சேவையை வணிகப் பண்டமாகவும் இயற்கைக்கு முரணனான வேதிப் பொருட்களை மருந்துகளாகவும் பெருவீத லாபத்தை நோக்கமாகவும் கொண்டுள்ளது.
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

அடிப்படை மருத்துவத்தை மீட்டெடுப்போம்! Empty Re: அடிப்படை மருத்துவத்தை மீட்டெடுப்போம்!

Post by பூ.சசிகுமார் Thu Dec 27, 2012 6:52 pm

ஆகவேதான் ஆங்கில மருத்துவத்தால் அடிப் படை மருத்துவத்தில் எந்த குறிப்பிடும்படியான பங்காற்றுதலையும் மேற்கொள்ள முடிவதில்லை. அடிப்படை மருத்துவத்தில் பெருவீத லாபம் கிடைக்காது. வெள்ளைக்காரர்கள் விட்டுச் சென்ற தீமைகளில் ஒன்றாக - நம்நாட்டின் முதன்மை மருத்துவமாக ஆங்கில மருத்துவம் தொடரும் வரை அடிப்படை மருத்துவ சேவை புறக்கணிப்புக்கு உள்ளாகவே செய்யும்.

1978ல் அல்மா அட்டா என்ற ரஷ்ய நகரில் உலக சுகாதார நிறுவனம் (W.H.O) கூட்டிய மாநாட்டின் இறுதியில் வெளியிடப் பட்ட அறிக்கை கி.பி. 2000க்குள் அனைவருக்கும் மருத்துவ நலம் வழங்க உறுதியளித்தது. இந்த உறுதிமொழி பிரகடனத்தில் இந்திய அரசும் கையொப்ப மிட்டிருந்தது.

அளித்த வாக்கு றுதியை அரசால் நிற வேற்ற முடியாமல் போனதற்குக் காரணம் ஆங்கில மருத்துவத்தை நம்பியதும், அக்கறை யின்மையும் தான்.

நம்மைப் போல வே அல்மா ஆட்டா பிரகடனத்தில் கையொப்பமிட்ட சீனா இப்போது தனது இலக்கை முழுமையாக எட்டியிருக்கிறதென உலக சுகாதார நிறுவனமே சான்றளித்துள்ளது.

அவர்களுக்கு சாத்தியமானது எப்படி? நம்மைப் போலவே காலனி ஆதிக்கத்துக்கு உட்பட்டு விடுதலை பெற்ற சீனா நம்மைவிட அதிக மக்கள் தொகையை கொண்டிருக்கும் நாடு. இது மருத்துவத் தன்னிறைவு பெறுவதற்கு காரணமாய் இருந்தது மூன்று : (1) தாயக மருத்துவத்தை பெருமளவு பயன்படுத்திக் கொண்டது, (2) வெறுங் கால் மருத்துவர் திட்டம் (3) மக்களையும் செயல்படத் தூண்டியது.

இந்நிலையில் அடிப்படை மருத்துவத்தைப் பாதுகாக்காமல் நோய்கள் பெருகுவதிலிருந்து மக்களைப் பாதுகாக்க இயலாது என்கிற புரிதலின் அடிப்படையில் நலம் பேரமைப்பு, மக்கள் நலனில் அக்கறை கொண்ட குடிநாயக அமைப்புகள், அரசியலாளர்கள், அறிஞர்கள், சமூக செயல்பாட்டாளர்கள் மற்றும் பொதுமக்க ளோடு இணைந்து அடிப்படை மருத்துவம் பாதுகாப்பு இயக்கம் ஒன்றை கட்டியெழுப்ப முயன்று வருகிறது. இதன் பொருட்டு அடிப்படை மருத்துவப் பாதுகாப்புக்கான குடிமக்கள் சாசனத்தை பிரகடனப்படுத்திய மாநாடு 2009 டிசம்பர் 18ம் நாள் ஞாயிறு அன்று முழுநாள் நிகழ்வாக சென்னையில் நடைபெற்றது.

(மாற்று மருத்துவம் ஜனவரி 2010 இதழில் வெளியான கட்டுரை)
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

அடிப்படை மருத்துவத்தை மீட்டெடுப்போம்! Empty Re: அடிப்படை மருத்துவத்தை மீட்டெடுப்போம்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum