Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
அமெரிக்க வார இதழ் ஒன்றில்
Page 1 of 1 • Share
அமெரிக்க வார இதழ் ஒன்றில்
அமெரிக்க வார இதழ் ஒன்றில், இந்தியர்களைப் பற்றிய சுவையான தகவல் ஒன்றைப் படிக்க (உ.ஆ., உதவியால்) முடிந்தது, அமெரிக்காவில் உள்ள சிகாகோ மாநிலத்தில்,
16 ஆயிரத்திற்கும் மேற்பட்ட டாக்சி டிரைவர்கள் உள்ளனர். அவர்களில் சரி பாதி, இந்திய டாக்சி டிரைவர்கள்; மீதிப் பாதியில், பாகிஸ்தானியர்களும், தெற்கு ஆசிய நாடுகளைச் சேர்ந்தவர்களும் கணிசமாக உள்ளனராம்!
எல்லா செலவும் போக, வாரத்திற்கு 500 டாலர் (ஒரு டாலர் ரூ.46) வரை சம்பாதிக்கின்றனராம்! இவர்கள், பொதுவாக சொந்தமாக டாக்சி வாங்கி ஓட்டுவதில்லை; வாடகைக்கு எடுத்து ஒட்டுகின்றனர். வார வாடகை 250 முதல் 270 டாலர் வரை!
இந்த டாக்சி டிரைவர்களில் பலருக்கு, சரளமாக ஆங்கிலம் பேசத் தெரியாது என்பது குறிப்பிடத்தக்கது.
முபீன் ஹூசேன் போன்ற சில டாக்சி டிரைவர்களும் இருக்கத்தான் செய்கின்றனர். ஹூசேன், ஐதராபாத்காரர். 1985ல் அமெரிக்கா சென்றார். லயோலா பல்கலைக் கழகத்தில் எம்.பி.ஏ., பட்டம் பெற்றார். இப்போது டாக்சி ஓட்டுகிறார்.
"எம்.பி.ஏ., படித்த நீங்கள், நல்ல உத்தியோகம் பார்க்கலாமே!' எனக் கேட்டால், "படித்து முடித்த உடன், ஒரு பேங்கில் வேலை கிடைத்தது. ஆறு மாதம் வேலை செய்தேன். அந்த வேலை எனக்கு ஒத்து வரலே! காலை ஒன்பது முதல் மாலை ஐந்து வரை திரும்பத் திரும்ப கூட்டுவது, கழிப்பது, பெருக்குவது... சே... சே... இந்தத் தொழிலில் நேரம், காலம் கிடையாது. நினைத்த நேரத்தில் வண்டியை எடுக்கலாம்... நிறுத்தலாம்...' என்கிறார்.
வெள்ளைக்காரர்கள் அதிக ஆர்வம் காட்டாத, டாக்சி டிரைவர், பஸ் டிரைவர், கண்டக்டர், லாரி டிரைவர் போன்ற வேலைகளில், நம்மவர்கள் நுழைந்து, பெருகி வருகின்றனர் எனக் குறிப்பிடுகிறது அக்கட்டுரை!
***
தர்மபுரி மாவட்ட வாசகி ஒருவர், தன் உள்ளக் குமுறலை முகம் தெரிந்தவர்களிடம் கொட்ட முடியாமல், எனக்கு எழுதி உள்ளார். கடிதம் இதோ —
நான் தர்மபுரி மாவட்டத்திலுள்ள ஒரு கிராமத்தில் பிறந்தேன். 14 வயதில் பருவமடைந்து, 15 வயது வரை நிம்மதியாக வாழ்ந்தேன். 16 வயதில் பிடித்தது சனி. என் பெற்றோர் இட்லி கடை நடத்தி வந்தனர். என்னை, பக்கத்து தெருவிலிருக்கும் கிணற்றில் தண்ணீர் எடுக்கவும், துணி துவைக்கவும் அனுப்புவர். அப்படி செல்லும்போதெல்லாம், ஒரு பொறுக்கி என் பின்னாடியே சுற்றினான்.
நான் வசதியில்லாத குடும்பத்தில் பிறந்தாலும், நல்ல அழகுடன் இருந்தேன். எங்கள் குடும்பம் மான, ரோஷமுள்ள குடும்பம். அவன், என்னை சுற்றிச் சுற்றி வருவது, எனக்கு பிடிக்கவில்லை. ஒரு நாள் நல்லா திட்டினேன். என் அம்மாவிடமும் சொன்னேன். அவங்களும், அவன் போகும் போதும், வரும் போதும் சாக்கு வைத்து திட்டுவர்.
அவன் பெரிய பணக்காரன்; நான் ஏழை. ஜனங்கள் கதை கட்ட ஆரம்பித்தனர் – என்னை அவன் வைத்திருப்பாதாக! புரளியை, அவனே அவிழ்த்து விட்டு, என் எதிர் வீட்டிலேயே தவம் கிடக்க ஆரம்பித்தான். என்னை ஒரு மாதிரியாக பார்க்கவும், பேசவும் ஆரம்பிச்சாங்க ஜனங்கள். நான் துடியாய்த் துடித்தேன்; அழுதேன்!
இத்தனைக்கும் அவன், கல்யாணம் ஆகி, இரண்டு பிள்ளைகளுக்கு தகப்பன். பொறுக்கி; மூன்று வருடங்கள் என்னைச் சுற்றிக் கொண்டு திரிந்தான்; நான் அகப்படவில்லை. என் 19 வயதில், சொந்த மாமாவுக்கு திருமணம் செய்து கொடுத்தனர். என் அம்மா, "எதையும் உன் கணவனிடம் சொல்லாதே!' என்று சொல்லி விட்டார். நாங்கள் மிகவும் சந்தோஷமாக, ஐந்து வருடங்கள் வாழ்ந்தோம்.
ஆறாவது வருடமே என்னை விட்டு விலக ஆரம்பித்தார் கணவர். இரவில், வெளியில் தங்க ஆரம்பித்தார். கேட்டால், "வியாபாரத்துக்கு போனேன்!' என்பார். நான் பேச மாட்டேன். எனக்குத் தெரியாமல் குடிக்கவும் ஆரம்பித்தார். என் துரதிருஷ்டம் எனக்கு திருமணமான அடுத்த வருடமே என் அம்மா இறந்து விட்டார். எனக்கு மூன்று பெண் குழந்தைகள்.
அடுத்த வீட்டுக்கு தெரியக் கூடாது என்று, நான் எவ்வளவோ அமைதியாக இருந்தேன். ஆனால், அவர் இப்பொழுது, பக்கத்து ஊரிலேயே, "கூத்தியாள்' வீடு வைத்துக் கொண்டார். ஒரு மாதம் கூட அங்கேயே தங்குகிறார். முதலில் வியாபாரம் என்று பொய் சொன்னவர், இப்போது, "ஆமாம், அப்படித் தான் செய்வேன்; குடிப்பேன்; கூத்தியாள் தான் வைத்துள்ளேன்... நீ உன் வீட்டுக்குப் போ!' என்கிறார்.
என் அம்மா இறந்து, ஆறாவது மாதத்தில் என் அப்பா, மறுகல்யாணம் செய்து கொண்டார். என் கூட பிறந்த தங்கைகள் நாலு பேர். எனக்கு மூன்று பெண் குழந்தைகள்! எப்படி போவேன் என் அம்மா வீட்டுக்கு? அழுகிறேன், அழுகிறேன், அழுது கொண்டே இருக்கிறேன்! என் வீட்டுக்காரர் நல்லவர் தான். என்னைச் சுற்றித் திரிந்த பொறுக்கி தான், என் வீட்டுக்காரர் மனதை கெடுத்து இருப்பான் போல் தெரிகிறது. ஆனால், அவர் அதை என்னிடம் சொல்லாமல், மர்மமாக திட்டுகிறார்; அடிக்கிறார்; சித்திரவதை செய்கிறார்.
நான் என்ன செய்வேன். "உன் யோக்கியதையை, ஊருல உள்ளவர்களிடம் போய் கேள்!' என்று சொல்கிறார். நான் எந்த தப்பும் செய்யாமலேயே புழுவாய் துடிக்கிறேன். மாதத்தில் ஐந்து நாள் வீட்டில் தங்குவதில்லை; அப்படியே வந்தாலும், திட்டும், அடியும் தான் எனக்கு மிஞ்சும்! நான் யாரிடம் சொல்லி அழுவது?
ஒரு பெண்ணுக்கு தாய், கணவன் இருவருமே இல்லை எனும் போது, நான் ஏன் உயிரோடு இருக்க வேண்டும்? தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என்று ஏங்குவேன். ஆனால், என்னை நம்பி ஏழு பெண்கள் இருக்கின்றனரே... என்ன செய்வேன்! என் இறப்பை என் கணவரும் எதிர்பார்க்கிறார்! ஆனால், சாகவும் முடியாமல், நான் நேர்மையானவள் என்று சொல்லவும் முடியாமல் தவிக்கிறேன்.
எனக்கு இப்போது 30 வயது! எல்லா கஷ்டத்தையும் அனுபவிக்கிறேன். பக்கத்து வீட்டுக்காரர்கள் கூட, "அய்யோ பாவம்...' என்று நினைக்க மாட்டேன் என்கின்றனர்! அவங்க பங்குக்கு அவங்களும் ஏதாவது சொல்கின்றனர். வேதனை, வேதனை, வேதனை தானா என் உயிர் உள்ளவரை?
எனக்கு ஆறுதல் சொல்லி கடிதம் எழுத என் முகவரியை உங்களுக்குத் தராவிட்டாலும், ஒரு அன்பு சகோதரியின் வாழ்வு நலம் பெற நீங்களும் வேண்டிக் கொள்வீர்கள் என்ற எண்ணத்தில், இக்கடிதத்தை முடிக்கிறேன்...
— இவ்வாறு எழுதியுள்ளார் அந்த தர்மபுரி வாசகி.
திருமணமாகி வாழ்வில், "செட்டில்' ஆகி விட்ட ஒரு குடும்பப் பெண்ணின் நல்வாழ்வில் தலையிட்டு, அக்குடும்பத்தை சீரழிப்பது எவ்வளவு கொடூரமான செயல்... கேவலமான குணம் கொண்ட ஒரு கயவனால், இந்த சகோதரியின் வாழ்வில் எத்தனை பாதிப்பு...
கடிதம் எழுதிய வாசக சகோதரியின் வாழ்வில் மீண்டும் வசந்தம் வீச, வாசகி வேண்டுகோளின்படி, கடவுள் நம்பிக்கைக் கொண்ட வாசகர்கள் அனைவரும் பிரார்த்தனை செய்து கொள்ளலாமே!

Guest- Guest
Similar topics
» பேஸ்புக்கில் பேஜ் ஒன்றில் Threaded Comment வசதியைப் பெற்றுக்கொள்வதற்கு
» அமெரிக்க நாடாளுமன்றத்தில் ஜூன் 8 -இல் மோடி உரை
» தேர்வு முடிவு -நொச்சி இதழ்
» பிளேபாய்’ இதழ் நிறுவனர் ஹூக் ஹெப்னர் காலமானார்
» அருவி ! கவிதை இலக்கிய காலாண்டிதழ் இதழ் ஆசிரியர் கவிஞர் காவனூர் ந .சீனிவாசன் !செல் 9600898806 நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !

Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum