தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


தங்கம் வாங்க போறீங்களா? எச்சரிக்கை குறிப்புகள்

View previous topic View next topic Go down

தங்கம் வாங்க போறீங்களா? எச்சரிக்கை குறிப்புகள் Empty தங்கம் வாங்க போறீங்களா? எச்சரிக்கை குறிப்புகள்

Post by பூ.சசிகுமார் Sun Jan 06, 2013 8:53 pm

'மளமள'வென விலைவாசி உயர்ந்துகொண்டே போனாலும் தங்கத்தின் மவுசு மட்டுமே என்றுமே குறையாது. தங்கத்தின் மீது ஆசைக்கொள்ளாத பெண்களே இல்லையென்றே சொல்லலாம்..

பெண்கள் மட்டுமா.. ஆண்களும் கூட அதன் மீது தனி மோகம் வைத்திருக்கிறார்கள்..

என்றுமே.. எக்காலத்திலுமே தங்கத்தின் மதிப்பு குறைந்ததாக சரித்திரம் இல்லை.. அப்படிப்பட்ட தங்கம் இரண்டு வகையாக நமக்கு கிடைக்கும். ஒன்று கட்டித்தங்கம்.. மற்றொன்று ஆபரணத்தங்கம்.

கட்டித் தங்கத்தை வாங்கி நேரடியாக நகை செய்ய முடியுமா என்றால் அது முடியாது. அதனுடன் ஒரு சில உலோகங்களை சேர்த்துதான் தங்க நகைகள் செய்ய முடியும்.

அவ்வாறு கலப்படம் செய்யப்பட்டு உருவாகும் நகைகளின் தரத்தை குறிக்கும் சொல்தான் காரட் (KARAT)என்பது.

தங்கத்தில் மற்ற உலோகங்கள் கலந்துள்ள விகிதத்தைப் பொறுத்து அவற்றை தரத்தை அறிய முடியும்.

அதாவது

24 கேரட்,
22 கேரட்
18 கேரட்
14 கேரட்
10 கேரட்
9 கேரட்
8 கேரட்

என தரம் பிரிக்கின்றனர்.

பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

தங்கம் வாங்க போறீங்களா? எச்சரிக்கை குறிப்புகள் Empty Re: தங்கம் வாங்க போறீங்களா? எச்சரிக்கை குறிப்புகள்

Post by பூ.சசிகுமார் Sun Jan 06, 2013 8:54 pm

24 கேரட் தங்கத்தில் 99.9 சதவிகிதம் சுத்த தங்கமும், 22 கேரட் தங்கத்தில் 91.6 சதவிகிதம் தூய தங்கமும், 18 காரட் தங்கத்தில் 75 சதவிகிதம் தூய தங்கமும், 14 காரட் தங்கத்தில் 58.5 சதவிகிதமும், 10 கேரட்டில் 41.7 சதவிகிதமும், 9 கேரட்டில் 37.5 சதவிகதமும், 8 கேரட் தங்கத்தில் 33.3 சதவிகிதமும் தூய தங்கம் உள்ளது.

இதில் 22 கேரட் தங்கமே பெரும்பாலும் பயன்பாட்டில் உள்ளது. அதாவது ஆபரணத்தங்கத்தில் 22 காரட் சுத்த தங்கத்தையே பெரும்பாலான ஜீவல்லரி நிறுவனங்கள் முக்கியத்துவம் கொடுத்து விற்கின்றனர். 22 காரட் தங்கத்தில் 97.61% சுத்த தங்கம் இருக்கும். வாடிக்கையாளரின் விருப்பமும் அதுவே.

இந்த வகையான தங்கத்தைதான் நாம் டிவியிலும், நாளிதழ், வார இதழ் விளம்பரங்களிலும் பார்க்கிறோம். இதை 916 BIS ஹால்மார்க் தங்கம் எனக் குறிப்பிடுகின்றனர். இதையே ஆபரத்தங்கம் என்று குறிப்பிடுவார்கள்.

தங்கத்தின் தரத்தை அறிய ஹால்மார்க்:

பெரும்பாலான தங்க நகைகள் 24 கேரட், 22 கேரட், 18 காரட் தங்கமாகவே உள்ளது. எந்த வகையான தங்கம் என அறிய உதவுகிறது ஹால்மார்க் முத்திரை.

இந்த முத்திரையானது மற்ற எலக்ட்ரானிக் பொருட்களுக்கு தரத்தை நிர்ணயிக்கும் ISI தர முத்திரையைப் போன்றதுதான் தங்கத்தின் தரத்தை அறியும் BIS ஹால்மார்க் முத்திரை.

இந்திய அரசின் தரக் கட்டுப்பாடு அமைப்பு Bureau of Indian Standards என்பதின் சுருக்கமே BIS என அழைக்கபடுகிறது. இந்த இமைப்பு தங்க நகைகளுக்கு ஹால்மார்த் முத்திரையை வழங்கி தரத்தை நிர்ணயிக்கிறது.
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

தங்கம் வாங்க போறீங்களா? எச்சரிக்கை குறிப்புகள் Empty Re: தங்கம் வாங்க போறீங்களா? எச்சரிக்கை குறிப்புகள்

Post by பூ.சசிகுமார் Sun Jan 06, 2013 8:54 pm

BIS முத்திரையை யார் கொடுப்பார்கள்?

BIS முத்திரையை வழங்குவதற்காக அரசு நாடு முழுவதும் உரிமைப்பெற்ற (License) டீலர்களை நியமித்திருக்கிறது. இந்த உரிமைப் பெற்ற டீலர்கள் மட்டுமே தங்க நகைகளுக்கு ஹால்மார்க் முத்திரையை வழங்க முடியும்.

ஜூவல்லரி கடை உரிமையாளர் இந்த நகைகளை பொற்கொள்ளர்களிடமிருந்து பெற்று இந்த லைசென்ஸ் பெற்ற டீலர்களிடம் பரிசோதித்து, அந்த நகைகளுக்கான தரத்தை நிர்ணயித்து ஹார்மார்க் முத்திரையைப் பெற்றுக்கொள்கின்றனர். சோதிக்கப்படும் நகைகள் 22 கேரட் கொண்டதாக இருப்பின் அவற்றை 91.6% ஹால்மார்க் முத்திரையும், 18 காரட் அளவுடையதாக இருப்பின் 75% ஹார்மார்க் முத்திரையும் கொடுக்கப்படுகிறது.

தங்கம் வாங்கறீங்களா? கொஞ்சம் கவனமா பார்த்து வாங்குங்க..

நீங்கள் வாங்கும் தங்கத்தில் ஹால்மார்க் முத்திரை மட்டும் இருந்தால் போதாது. அந்த ஹால்மார்க் முத்திரையில் நகையின் தரம் எத்தனை சதவிகிதம் என்பது குறிக்கப்பட்டிருக்கிறதா என்பதையும் கவனித்துப் பார்க்க வேண்டும்.

தவறான ஹால்மார்க் நகைகளை எப்படி கண்டுபிடிப்பது?

நீங்கள் 22 காரட் நகையென கடைகளில் வாங்கிய பிறகு, ஏதாவது ஒருகாரணத்திற்காகவோ.. அல்லது சோதனை செய்து பார்க்கும்பொழுதே அந்த நகை 18 காரட் தரமுடைய நகை என்பதை தெரியவந்து உறுதி செய்யப்பட்டால் கண்டிப்பாக தவறான ஹால்மார்க் முத்திரையை வழங்கிய டீலரின் லைசென்சை BIS அலுவலகம் ரத்து செய்துவிடும்.

தரமற்ற நகைகளை விற்ற ஜூவல்லரி கடையும் வாங்கிய நகைகளுக்கான நஷ்ட ஈடு வழங்கியே ஆக வேண்டும். அவ்வாறு நஷ்ட ஈடு தர மறுக்கும் பட்சத்தில் நீங்கள் நுகர்வோர் நீதிமன்றத்தை அணுகி நஷ்ட ஈட்டைப் பெற முடியும்.
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

தங்கம் வாங்க போறீங்களா? எச்சரிக்கை குறிப்புகள் Empty Re: தங்கம் வாங்க போறீங்களா? எச்சரிக்கை குறிப்புகள்

Post by பூ.சசிகுமார் Sun Jan 06, 2013 8:54 pm

இவர்தான் ஹால்மார்க் முத்திரையை வழங்கினார் என்பதை எப்படி கண்டுபிடிப்பது?

இது மிக சுலபம். நீங்கள் வாங்கும் எந்த ஒரு ஆபரணத் தங்கத்திலும் கண்டிப்பாக ஹால்மார்க் முத்திரை இருக்கும். BIS ஒவ்வொரு டீலருக்கும் தனிப்பட்ட முத்திரையை வழங்கியிருப்பார்கள். அதாவது ஒருவருக்கு கொடுக்கப்படும் முத்திரை அடையாளமானது, மற்ற எந்த டீலருக்கும் அதே முத்திரையை கொடுக்கமாட்டார்கள். ஒவ்வொரு டீலருக்கும் தனிப்பட்ட முத்திரை தான் வழங்கப்படும். அதனால் குறிப்பிட்ட ஹால்மார்க் முத்திரைக்கு சொந்தக்காரர் இவர்தான் என எளிதாக அந்த அடையாளப்படுத்தி கண்டுபிடித்துவிடுவார்கள்.

தமிழ்நாட்டில் உள்ள BIS அலுவலகங்களின் முகவரிகள்:

SOUTHERN REGIONAL OFFICE

C.I.T CAMPUS, IV CROSS ROAD,CHENNAI-600 013.
91 044 22542315,22541584, 22541470
Fax: 91 044 22541087 .
sro@bis.org.in

COIMBATORE BRANCH OFFICE

5th Floor, Kovai Towers,
44 Bala Sundaram Road,
Coimbatore 641 018.
LandMark- on RTO road, near womens polytechnic
0422 2201016, 2210141, 2215622; Fax: 0422-2216705
cbto@bis.org.in

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு ஜூவல்லரி (நகைகடைகளிலும்) உள்ள நகைகளிலும் கண்டிப்பாக ஹால்மார்க் முத்திரை பதிந்தே விற்பனை செய்ய வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இனி நீங்கள் நகைகள் வாங்கினால் அதன் தரம் என்ன எத்தனை காரட்.. அதில் BIS ஹால்மார்க் முத்திரை பதியப்பட்டுள்ளதா? என்பதையெல்லாம் நன்றாக கவனித்து வாங்குங்கள்...

உங்களின் பணத்தின் மதிப்புக்கேற்ற நகைகளையும் நீங்கள் வாங்க வேண்டாமா என்ன? கொஞ்சம் கவனம் செலுத்தினால் போதும். இந்த தகவல்களனைத்தையும் நகைக்கடைகளிலேயே பெற்று மனதுக்கு திருப்தியாக நகைகளை வாங்கலாம்.

நன்றி: பேஸ்புக்
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

தங்கம் வாங்க போறீங்களா? எச்சரிக்கை குறிப்புகள் Empty Re: தங்கம் வாங்க போறீங்களா? எச்சரிக்கை குறிப்புகள்

Post by முரளிராஜா Mon Jan 07, 2013 7:59 am

தங்கம் பற்றிய தங்கமான பதிவு
நன்றி சசி
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

தங்கம் வாங்க போறீங்களா? எச்சரிக்கை குறிப்புகள் Empty Re: தங்கம் வாங்க போறீங்களா? எச்சரிக்கை குறிப்புகள்

Post by பூ.சசிகுமார் Mon Jan 07, 2013 10:08 pm

நன்றி அண்ணா
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

தங்கம் வாங்க போறீங்களா? எச்சரிக்கை குறிப்புகள் Empty Re: தங்கம் வாங்க போறீங்களா? எச்சரிக்கை குறிப்புகள்

Post by mohaideen Tue Jan 08, 2013 9:01 am

தகவலுக்கு நன்றி
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

தங்கம் வாங்க போறீங்களா? எச்சரிக்கை குறிப்புகள் Empty Re: தங்கம் வாங்க போறீங்களா? எச்சரிக்கை குறிப்புகள்

Post by ரானுஜா Tue Jan 08, 2013 1:54 pm

தகவலுக்கு நன்றி தங்கம் வாங்க போறீங்களா? எச்சரிக்கை குறிப்புகள் 919379873
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

தங்கம் வாங்க போறீங்களா? எச்சரிக்கை குறிப்புகள் Empty Re: தங்கம் வாங்க போறீங்களா? எச்சரிக்கை குறிப்புகள்

Post by பூ.சசிகுமார் Tue Jan 08, 2013 10:04 pm

நன்றி அக்கா மற்றும் அண்ணா
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

தங்கம் வாங்க போறீங்களா? எச்சரிக்கை குறிப்புகள் Empty Re: தங்கம் வாங்க போறீங்களா? எச்சரிக்கை குறிப்புகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum