தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


உன் வாழ்க்கை உன் கையில்....

View previous topic View next topic Go down

உன் வாழ்க்கை உன் கையில்.... Empty உன் வாழ்க்கை உன் கையில்....

Post by ஸ்ரீராம் Fri Jan 11, 2013 10:38 am





உன் வாழ்க்கை உன் கையில்.... 10+7மார்ச் 2013 இல் 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்விற்குத் தயாராகிக் கொண்டிருக்கும் மாணவ மாணவியர் படித்து பயன்பெற சில ஆலோசனைகளை இங்கு பதிவு செய்கிறேன்.



முப்பது, நாற்பது வருடங்களுக்குமுன்பிருந்த கல்விமுறை, தேர்வுமுறை, பெற்றோர்நிலைஇன்று இல்லை. மதிப்பெண்ணிற்கு நாம் கொடுக்கும்முக்கியத்துவம் அன்று இல்லை. 10, 12 ஆம் வகுப்புபொதுத்தேர்வில் வெற்றி பெற்றாலே போதும் என்றநிலைதான் அதிக வீடுகளில். அதுவும் முதல் வகுப்பில்தேர்ச்சி பெற்று விட்டால் ஊரே கொண்டாடும். ஆனால்இன்று தேர்ச்சி என்பதோ, முதல் வகுப்பு மதிப்பெண் என்பதோ ஒருமதிப்பெண்ணாகக் கருதப்படுவதில்லை. ஒவ்வொரு பெற்றோரும் தனது மகன்அல்லது மகள் மாநிலத்தில் முதலிடம் அல்லது மாவட்டத்தில் முதலிடம்அதுவும் இல்லாவிட்டால் பள்ளியில் முதலிடம் பெற வேண்டும் ன்று எதிர்பார்க்கின்றனர். அதற்கான முயற்சியாக காலையில் கணக்குடியூசன், மாலையில் ஆங்கில டியூசன், பகல் முழுவதும் பள்ளி எனசளைக்காமல் தங்கள் நேரத்தையும் பணத்தையும் செலவிடுகின்றனர்.மொத்தத்தில் 10, 12ஆம் வகுப்பு மாணவர்கள் பொன் முட்டையிடும் வாத்து போலமதிப்பெண் பெறும் இயந்திரமாகவே பார்க்கப்படுகின்றனர்.



சில வீடுகளில் பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் மதிப்பெண்ணிற்காகநடக்கும் பேரம் வேடிக்கையான ஒன்று. காலாண்டுத்தேர்வில் வகுப்பில் முதல்ஐந்து இடங்களுக்குள் வரவேண்டும் அல்லது 400/500க்கு மேல் மதிப்பெண்வாங்கினால்,





  • புதிய ஆடை
  • ஒரு நாள் தீம்பார்க் பிக்னிக்
  • ஒரு நாள் முழுவதும் பிடித்த டி.வி நிகழ்ச்சி பார்த்தல்
  • புது சினிமா+இரவு ஓட்டல் டிபன்



என தேர்வில் கேட்பது போலவே வீட்டிலும் கேள்வி பதில் கேட்கப்படுகிறது.
இப்படியே அரையாண்டுத்தேர்வு, திருப்புதல் தேர்வு என ஒவ்வொரு தேர்விற்கும்மதிப்பெண், பரிசுப்பொருளின் மதிப்பு கூடிக்கொண்டேப் போகும். இறுதியாகப்பொதுத்தேர்வில் வாங்கப்போகும் மதிப்பெண்ணிற்காக மாணவர்களுக்குசுற்றுலா, பைக், கார் எனவும் மாணவிகளுக்கு தங்க மோதிரம், வளையல், செயின்எனவும் பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் இடையே மிகப்பெரிய பேரம்நடக்கிறது. இன்னும் ஒரு படி மேலே போய் பிள்ளையை நான் படிக்க வைக்கிறேன்.மதிப்பெண் பெற வைக்கிறேன். எனக்கு என்ன கமிஷன்? மோதிரமா? கம்மலா?வளையலா? என கறாராய் கமிஷன் பேசும் இடைத்தரகர்களாய் அம்மாக்கள் பலர்.


மதிப்பெண்களே ஒருவரின் வாழ்க்கையைத் தீர்மானிக்கும் காரணியாக ஆகிவிட்டஇந்த காலக்கட்டத்தில் குழந்தைகளைப் படிக்க வைப்பதில்பெற்றோருக்கு இருக்கும் இந்த ஆர்வத்தையும் அக்கரையையும் நாம் குறைசொல்ல முடியாது. கல்லூரி வளாகத் தேர்வாகட்டும், வேலைக்கான தேர்வாகட்டும்பத்தாம் வகுப்பு முதல் பட்டமேற்படிப்பு வரையான மதிப்பெண்கள் கணக்கில்எடுத்துக்கொள்ளப்படுகிறது. எனவே மதிப்பெண் பெற்றே ஆகவேண்டும் என்றகட்டாயத்தில் மாணவர்களும் மதிப்பெண் வாங்க வைக்க வேண்டும் என்றகடமையில் பெற்றோர்களும் உள்ளனர்.


உன் வாழ்க்கை உன் கையில்.... Triangle நல்ல எதிர்காலத்தை எதிர்பார்க்கும் அனைவரும் நல்ல மதிப்பெண் பெறவேண்டும்என்பது இன்றைய காலத்தின் கட்டாயம். மாணவன், ஆசிரியர், பெற்றோர்ஆகிய மூவரும் சேர்ந்துஅமைக்கும் முக்கோணம் தான் மாணவனின் மதிப்பெண்.


ஆசிரியர் வழிநடத்த, பெற்றோரின் துணையுடன் மாணவர்களின் முயற்சியும் இருந்தால்தான் மதிப்பெண் என்ற வெற்றிக்கனியை எட்டிப்பிடிக்க முடியும்.


பெற்றோரின் ஊக்கம்:
* குழந்தைகள் பெற்ற மதிப்பெண்களை அவர்கள் நண்பர்களின், பக்கத்து வீட்டுகுழந்தைகளின் மதிப்பெண்களுடன் ஒப்பிடாதீர்கள். இன்றைய குழந்தைகள்அதனை விரும்புவதில்லை. இதைவிட அதிக மதிப்பெண் பெற உன்னால் முடியும்.மற்றவர்களை விட உன்னிடம் அதிக திறமை உள்ளது என்று நேர்மறையாகப் பேசிஊக்கப்படுத்த வேண்டும்.


* படி படி என நாள் முழுவதும் விரட்டாதீர்கள். ஒரு மாணவனால் ஒருவிசயத்தில் தொடர்ந்து ஒரு மணி நேரம் மட்டுமே கவனம் செலுத்த முடியும்.அதன்பின் அவர்களை அறியாமலேயே கவனம் சிதறத் துவங்கும். எனவே ஒருமணி நேரத்திற்கு ஒரு முறை 10 நிமிடம் ஓய்வு கொடுங்கள். இந்த ஓய்வைஅவர்கள் விருப்பப்படி செலவிட அனுமதியுங்கள். சிலர் தொலைக்காட்சிபார்க்கலாம். பந்து, செஸ், கேரம் போன்ற விளையாட்டுகளை விளையாடவிரும்பலாம். பொதுஅறிவு, அறிவியல் சார்ந்த புத்தகங்களைப் படிக்கலாம்.சமையல் செய்து கொண்டிருக்கும் அம்மாவுடன் அரட்டை அடிக்கலாம், காய்நறுக்கிக் கொடுக்கலாம். அவர்கள் விருப்பப்படி விட்டு விடுங்கள். 10நிமிடங்களுக்குப்பின் புதிய உத்வேகத்துடன் படிப்பார்கள்.


*குழந்தைகளைப் படிக்கச் சொல்லிவிட்டு நீங்கள் தொலைக்காட்சிபார்க்க வேண்டாம். ஒரு வருடத்திற்கு சீரியல்களை மறந்து விடவேண்டியதுதான். தனி அறையில் அவர்கள் இருந்தாலும் அவர்கள் கவனம்சிதறும் வாய்புண்டு.


*முடிந்தவரை அவர்கள் உங்கள் கண்பார்வையில் இருக்குமாறுபார்த்துக் கொள்ளவேண்டும். அவர்களுடன் அமர்ந்து புத்தகம் படிக்கலாம். அல்லதுஅவர்கள் விடைகளை எழுதிப் பார்ப்பதற்கு வசதியாக வினாக்கள் எழுதித்தரலாம்.எழுதிய விடைகளை திருத்தித் தரலாம்.


* குழந்தைகளின் நிறை குறைகளை அதிகம் அறிந்தவர்கள்ஆசிரியர்கள்தான். பெற்றோர் ஆசிரியர்களை அடிக்கடி சந்தித்தாலேவிளையாட்டைக் குறைத்துக்கொண்டு படிக்க ஆரம்பித்துவிடுவார்கள்.


ஆசிரியரின் தூண்டுதல்:

* எந்தகுழந்தையையும் எதிர்மறை விமர்சனம் செய்யாமல் அவர்கள்திறனறிந்து ஊக்கப்படுத்த வேண்டும்.


* ஒவ்வொரு வகுப்பிலும் கற்பூரம் போன்ற மாணவர்களும், கரித்துண்டுபோன்ற மாணவர்களும், வாழைமட்டை போன்ற மாணவர்களும் இருப்பார்கள்.அவர்களின் தகுதியறிந்து படிக்க வைப்பதில் தான் ஆசிரியரின் வெற்றிஅடங்கியுள்ளது.


* விடைகளை வாய்விட்டு சொல்ல வைத்தலும், சிறு தேர்வுகள்நடத்துதலும் திருப்புதலில் மிகமிக அவசியம்.


*பாடத்திட்டத்தை நன்கு அறிந்து அதிக மதிப்பெண் பெறக்கூடியபாடங்களை திரும்ப திரும்ப எழுதிப் பார்க்க வைக்கவேண்டும்.



மாணவர்களின்
முயற்சி
:

*தினமும் எவ்வளவு நேரம் படிக்க வேண்டும். ஒவ்வொரு பாடத்திற்கும்எவ்வளவு நேரம் ஒதுக்கிப் படிக்க வேண்டும் என்பதை முதலில் திட்டமிடவேண்டும். திட்டப்படி குறிப்பிட்ட நேரத்திற்குள் படித்து முடிக்கவேண்டும்.
* நாள் வாரியாக, பாடவாரியாக அட்டவணை தயார் செய்யவேண்டும்.எளிதான பாடத்திற்கு குறைந்த நேரமும் கடினமான பாடத்திற்கு அதிக நேரமும்ஒதுக்கிப் படிக்க வேண்டும்.


* எந்த பாடப்பகுதிக்கு எத்தனை மதிப்பெண்கள் ஒதுக்கப்பட்டுள்ளது என்பதைத் தெரிந்துகொண்டு அதற்கேற்ப படிக்கவேண்டும்.


*ஒரு முறை எழுதுவது ஏழு முறை படித்ததற்கு சமம் என்பார்கள்.தினமும் படித்தவற்றை எழுதிப்பார்த்து மனதில் பதியவைத்துக்கொள்ளவேண்டும்.


* சுவரிருந்தால்தான் சித்திரம் வரையமுடியும். சத்தான உணவுகளைஉண்டு உடல்நிலையையும் சீராக வைத்துக் கொள்ளவேண்டும்.

* காற்றோட்டமான அறையில் அமர்ந்து படியுங்கள்.


*தேர்வு முடியும் வரை விடுப்புஎடுப்பதைத் தவிர்க்க வேண்டும்.


*ஆசிரியர் தரும் குறிப்புகளைபயன்படுத்திக் கொள்ளவேண்டும்.


* 100 மதிப்பெண்கள் எதிர்பார்க்கும்மாணவர்கள் வினாக்களுக்குரிய விடைகளைப்படிப்பதுடன் பாடப்பகுதி முழுவதையும் திரும்பத்திரும்ப மனதில் பதியும்படி பலமுறை வாசிக்கவேண்டும்.



மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் பெறும் போதும்,வாழ்க்கையில் உயர்ந்த நிலைக்குச் செல்லும் போதும் மாணவர்களை விடஅதிகம் மகிழ்ச்சி அடைபவர்கள் வழிகாட்டிய ஆசிரியர்களும் , துணைநின்றபெற்றோர்களும்தான். எனவே அவர்கள் கூறும் அறிவுரைகளை அறுவைநினைக்காமல் இனி வரும் ஒவ்வொரு நிமிடத்தையும் ஒரு மதிப்பெண்ணாகமாற்றும் முயற்சியை மேற்கொண்டால்,



''மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை என்நோற்றான் கொல்எனும் சொல்''


என்று மகனுக்கு வள்ளுவர் சொன்ன இலக்கணத்தை நிஜமாக்கிக் காட்டலாம்.


நினைவிருக்கட்டும்;
உன் வாழ்க்கை உன் கையில்.... 10+3
உன் வாழ்க்கை உன் கையில்,
உன் மதிப்பெண் உன் முயற்சியில்.




வாழ்த்துக்களுடன்


நாஞ்சில் மதி

நன்றி தொழில்களம்
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

உன் வாழ்க்கை உன் கையில்.... Empty Re: உன் வாழ்க்கை உன் கையில்....

Post by mohaideen Fri Jan 11, 2013 12:06 pm

நல்ல பயனுள்ள தகவல்கள்
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

உன் வாழ்க்கை உன் கையில்.... Empty Re: உன் வாழ்க்கை உன் கையில்....

Post by ரானுஜா Fri Jan 11, 2013 1:51 pm

உன் வாழ்க்கை உன் கையில்.... 534526 உன் வாழ்க்கை உன் கையில்.... 534526 உன் வாழ்க்கை உன் கையில்.... 534526 உன் வாழ்க்கை உன் கையில்.... 534526
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

உன் வாழ்க்கை உன் கையில்.... Empty Re: உன் வாழ்க்கை உன் கையில்....

Post by prabhuslm Fri Jan 11, 2013 2:13 pm

நல்ல தகவல்கள் sriram
prabhuslm
prabhuslm
புதியவர்
புதியவர்

பதிவுகள் : 3

Back to top Go down

உன் வாழ்க்கை உன் கையில்.... Empty Re: உன் வாழ்க்கை உன் கையில்....

Post by கவியருவி ம. ரமேஷ் Fri Jan 11, 2013 9:42 pm

உண்மைதான்...
உன் வாழ்க்கை உன் கையில்.... Images?q=tbn:ANd9GcRC8GvsT_3P8PFc0quW12IeHDr_-106ermlxd94oleZShU6Al3T
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

உன் வாழ்க்கை உன் கையில்.... Empty Re: உன் வாழ்க்கை உன் கையில்....

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum