Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
அரசியலல்லாமல் வேறென்ன?
Page 1 of 1 • Share
அரசியலல்லாமல் வேறென்ன?
தேர்தல் நேரத்தில் அறிவித்து, தேர்தல் ஆணையத்தின் கண்டிப்புக்குப் பிறகு மெளனம் காத்து, இப்போது மேலும் சில மாநிலங்களுக்குத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஆண்டுக்கு மானிய விலையிலான எரிவாயு உருளைகளின் எண்ணிக்கை 6-லிருந்து 9-ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
பொதுமக்களின் எதிர்பார்ப்பு மாதம் ஒரு எரிவாயு உருளை என்பதாகத்தான் இருந்தது, இருக்கிறது. ஆனால், மத்திய அரசின் முடிவின்படி, மானிய விலையில் ஆண்டுக்கு 9 எரிவாயு உருளை திட்டம்தான் இப்போதைக்கு அமலுக்கு வரும்.
மானிய விலையில் எரிவாயு சிலிண்டர்கள் 6 மட்டுமே என்று சென்ற ஆண்டு செப்டம்பர் மாதம் அறிவிப்பு வெளியானபோதே, இதற்குக் கடும் எதிர்ப்பு எழுந்தது. இது நடைமுறைக்கு ஒவ்வாதது, ஒவ்வொரு குடும்பத்தின் தேவை, குடும்பத்தின் எண்ணிக்கையைக் கருத்தில்கொண்டு, மாதம் ஒருஎரிவாயு உருளை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை பலராலும் முன்வைக்கப்பட்டது.
பொதுமக்களை கொஞ்சம் ஆசுவாசப்படுத்தும் முயற்சியாக 9 சிலிண்டர்கள் அறிவித்துள்ள மத்திய அரசு, ஒருவேளை, 2014 பொதுத்தேர்தலுக்கு முன்பாக, ஆண்டுக்கு 12 எரிவாயு உருளைகள் மானிய விலையில் கிடைக்கும் என்று அறிவித்தாலும் ஆச்சரியமில்லை.
எரிவாயு உருளையில் அரசுக்கு நஷ்டம் ஏற்படுவதற்கு முதன்மைக் காரணம், அவை முறைகேடாக வணிகப் பயன்பாட்டுக்கு விற்கப்படுவதுதான். வீட்டு எரிவாயு உருளைகளுக்கு அளிக்கப்பட்டு வந்த மானியம்தான் இதற்கு அடிப்படைக் காரணம். ஒவ்வொருஎரிவாயு உருளைக்கும் சுமார் ரூ. 500 மானியம் வழங்கப்படுவதால், போலியான பதிவுகள் மூலம் வீட்டு எரிவாயு உருளைகளை வணிகச் சந்தைக்குத் திரும்பும் முறைகேட்டில் பல ஏஜென்ஸிகள் ஈடுபட்டன.
எண்ணெய் நிறுவனங்கள் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருந்ததால், தொடக்க காலத்தில் காஸ் ஏஜென்ஸி உரிமம் பெற்றோர் பலரும் காங்கிரஸ் கட்சி சார்புடையவர்களாக இருந்தனர். பணபலம் இருப்போரால் மட்டுமே, இந்த காஸ் ஏஜென்ஸியைப் பெற முடிந்தது. ஆகவே, முறைகேட்டில் பல ஏஜென்ஸிகள் ஈடுபடுவது தெரிந்தும்கூட, அதற்கு எண்ணெய் நிறுவன அதிகாரிகள் உடந்தையாக அல்லது கண்டும்காணாது இருக்க வேண்டிய நிலைமை உருவானது. நுகர்வோரை இவர்களது கருணைக்கு ஏங்கும் பிச்சைக்காரர் நிலைக்குத் தள்ளிவிட்ட புண்ணியத்தை எண்ணெய் நிறுவன அதிகாரிகள் தேடிக் கொண்டனர்.
நகர்ப்புறங்களில் வீட்டு இணைப்புக்கான எரிவாயு உருளைகள் வீட்டுக்குக் கொண்டு வந்து தரப்படுகின்றன. இதற்கான கட்டணம் அந்த ரசீது தொகையிலேயே உள்ளடங்கியது என்றாலும் தனியாக சேவைக்கட்டணம் செலுத்தி வாங்கிக் கொள்ள நகர்ப்புற மக்கள் தயங்குவதே இல்லை. ஆனால், ஊரகப் பகுதிகளில் நிலைமை அதுவாக இல்லை.
பல கிராம மக்கள் தங்களுக்கான எரிவாயு உருளைக்குப் பதிந்து, காலி உருளையுடன் குறிப்பிட்ட இடத்தில் வரிசையில் காத்திருக்கும் அவலம் தமிழ்நாடு உள்பட பல மாநிலங்களில் அரங்கேறிக் கொண்டிருக்கிறது. ஊரகப் பகுதிகளுக்கு பயணம் செய்வோர் இதை உணர்வார்கள்.
பல காஸ் ஏஜென்ஸிகள், பதிவு செய்யும் தொலைபேசி அழைப்புகளுக்குப் பதில் தருவதே இல்லை. நுகர்வோரை நேரில் போய் பதிவு செய்ய வைக்கிறார்கள். குடோனில் போய் வாங்கிக்கொள்ளுங்கள் என்று ரசீது கொடுத்து, நுகர்வோரைத் தங்கள் கிடங்குக்கு அனுப்பி,"வேலைவாங்கும்' நடைமுறையும்சில இடங்களில் இருக்கிறது.
வெளியூருக்கு இடமாறுதல் பெற்றுச் செல்லும் அரசு மற்றும் தனியார் ஊழியர்கள்,பாதி காலியாக அல்லது பயன்படுத்தாமல் உள்ள எரிவாயு உருளைகளை வீட்டுச் சாமான்களுடன் போகும் இடத்துக்கு கொண்டு செல்லவும், "காஸ் டிரான்ஸ்பர்' சான்று மட்டுமே புதிய ஏஜென்ஸியில் ஒப்புவித்து, இணைப்பு பெறவும் இருந்த எளியவசதியை,காஸ் ஏஜென்ஸிகளின் வற்புறுத்தலால், எண்ணெய் நிறுவனங்கள் ஒழித்தன.
இப்போதைய நடைமுறைப்படி இரண்டு எரிவாயு சிலிண்டர்கள் இருந்தாலும் அவற்றை, காலியாகவோ, எரிவாயுடனோ ஒப்படைத்துவிட்டுத்தான்"காஸ் டிரான்ஸ்பர்' சான்று பெற முடியும்.
தற்போது, மானிய விலை எரிவாயு உருளைகள், மானியம் இல்லாத எரிவாயு உருளைகள் என்று இருவகையாகப் பிரிக்கப்பட்டுள்ள நிலையில், இனியும், காஸ் ஏஜென்ஸிகள் மூலம் மானிய விலை எரிவாயு உருளைகளை விநியோகிப்பது சரியாக இருக்காது. இந்த காஸ் ஏஜென்ஸிகள் சந்தைவிலை சிலிண்டர்களை விற்பனை செய்யும் கடைகளாக மாறட்டும்.
மானிய விலையிலான சர்க்கரை, கோதுமை, அரிசி, மண்ணெண்ணெய் அனைத்தும் எவ்வாறு பொதுவிநியோகக் கடைகள் மூலம் அரசினால் வழங்கப்படுகின்றதோ, அதேபோன்று மானிய விலை எரிவாயு சிலிண்டர்களையும் பொதுவிநியோகத் திட்டத்தில்வழங்கினால் என்ன? பொதுவிநியோகத்தில் வழங்கப்படும் மண்ணெண்ணெய்க்கு எவ்வாறு நீலச் சாயம் கொடுக்கப்படுகின்றதோ அதேபோன்று, மானிய விலை எரிவாயு உருளைகளுக்கும் தனி வண்ணம் தரலாம்.
மானிய விலை எரிவாயு உருளைகள், பொதுமக்களின் உபயோகத்துக்கு மட்டுமே தரப்படுவது உறுதி செய்யப்படுமானால், வணிகப் பயன்பாட்டு எரிவாயு உருளைகளின் விலை அதிகரிக்கப்படுமானால், அரசுக்கு இழப்பில்லாமல் செய்துவிட முடியும். அதற்குநமது ஆட்சியாளர்கள் தயாராக இல்லை. இவர்களுக்கு வேண்டியவர்களோ உறவினர்களோ பெருவாரியான காஸ் விநியோகஸ்தர்களாக இருப்பதுதான் அதற்குக் காரணம்.
ஒவ்வொரு குடும்பத்துக்கும் மாதம் ஒரு எரிவாயு உருளையை உறுதிப்படுத்துவது ஒன்றும்இயலாதது அல்ல. அதற்கான நிர்வாகத் திறமையும் அரசியல் துணிவும் நேர்மையும் ஆட்சியாளர்களுக்கு வேண்டும், அவ்வளவே!
:-
தினமணி

Powenraj- புதியவர்
- பதிவுகள் : 46
Re: அரசியலல்லாமல் வேறென்ன?
நம்ம அரசியல் வாதிகளை நினைத்தால்
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum