Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
குடியரசு தினம்
Page 1 of 1 • Share
குடியரசு தினம்
ஜனவரி-26, ஒவ்வொரு இந்தியரின் வாழ்விலும் மிக மிக முக்கியமான நாள்.
நாம்
குடியரசான நாள்; வருடம் 1950. நம்மை நாமே ஆள மிக முக்கியமான தேவை
சட்டங்கள் அல்லவா? அவற்றை வழிநடத்த அரசியல் நிர்ணய சபை அவசியமாகிறது.
இந்திய அரசியல் நிரண்ய சபை!:
இந்தியாவிற்கு
ஒரு அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்தை 1927-ல்
எம்.என்.ராய் அவர்கள், முதன்முதலாக, தனது "இந்திய பேட்ரியாட்' என்ற நூலின்
மூலம் வெளிப்படுத்தினார்.
அதனைத் தொடர்ந்து 1934, 1936, 1939 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாடுகளிலும் இது பற்றி விவாதிக்கப்பட்டது.
இதன்
தொடர்ச்சியாக, 1945-ல் இங்கிலாந்தில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தின் விளைவாக,
ஆட்சிக்கு வந்த தொழிற்கட்சியின் தலைவர் அட்லி ஒரு தூதுக்குழுவை
இந்தியாவிற்கு அனுப்பினார். இந்த அமைச்சரவை தூதுக்குழு, இந்தியாவிற்கான
அரசியலமைப்பு சட்டத்தை இயற்ற ஒரு அமைப்பு தேவை என பரிந்துரைத்தது.
அதன்
அடிப்படையில் மாகாண பிரதிநிதிகளை உள்ளடக்கிய ஒரு அரசியல் நிர்ணயசபை
அமைக்கப்பட்டது. இதில், 296 உறுப்பினர்கள் பிரிட்டிஷ் இந்தியாவி
லிருந்தும், 93 உறுப்பினர்கள் சிற்றரசுகளி லிருந்தும் தேர்வு செய்யப்பட்டு,
389 பேர் அடங்கிய, இந்திய அரசியல் நிர்ணயசபை உருவாக்கப்பட்டது.
இச்சபையின்
முதல் கூட்டம் 1946-ம் ஆண்டு டிசம்பர் 9-ம் நாள் நடைபெற்றது. இதில், 211
உறுப்பினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். ஏனெனில், இந்த நிர்ணய சபையை தனி
நாடு கோரிக்கையை முன்னிறுத்தி, முஸ்லிம் லீக் முற்றிலுமாக நிராகரித்தது.
இந்த
நிர்ணய சபையை தலைமை ஏற்று நடத்தியவர், டாக்டர் சச்சிதானந்த சின்கா. ஆனால்,
அரசியல் நிர்ணய சபையின் நிரந்தர தலைவராக இருந்தவர் டாக்டர் ராஜேந்திர
பிரசாத். இந்த அரசியல் நிர்ணய சபையில், இந்திய அரசியலமைப்பு சட்டத்தை
உருவாக்க 22 குழுக்கள் அமைக்கப்பட்டன. இவற்றில் 10 குழுக்கள் நடைமுறை பற்றி
ஆராய்ந்தன. 12 குழுக்கள் அரசியலமைப்பு குறித்து ஆராய்ந்தன.
கண்காணிப்பு
குழுவின் தலைவராக, கே.என். முன்ஷியும், கொடிக்குழுவின் தலைவராக
ஜே.பி.கிருபாளினியும், மத்திய அரசின் அதிகாரம் குறித்த குழுவின் தலைவராக
ஜவஹர்லால் நேருவும், மாகாண அரசியலமைப்பு குழுவின் தலைவராக சர்தார் வல்லபாய்
படேலும், வரைவுக் குழுவின் தலைவராக டாக்டர் அம்பேத்காரும் செயல் பட்டனர்.
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முன்னுரை நேருவால் உருவாக்கப் பட்டது.
தேசிய ஒருமைப்பாடு என்ற கருத்தை கொண்டு வந்தவர் நந்தலால் போஸ்.
இந்திய
அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்க இரண்டு ஆண்டுகள் 11 மாதம் 10 நாட்கள்
எடுத்து கொள்ளப்பட்டன. இறுதி செய்யப்பட்ட இந்திய அரசியல் அமைப்பு
சட்டத்தில், நிர்ணய சபையின் 284 உறுப்பினர்கள் கையெழுத்திட்டனர். இந்திய
அரசியலமைப்பு சட்டம் 26.11.1949ல் ஏற்று கொள்ளப்பட்டது. இதன் அடிப்படையில்
14.1.1950 அன்று பாபு ராஜேந்திர பிரசாத் இந்தியாவின் முதல் குடியரசு
தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இருப்பினும், அரசியலமைப்பு சட்டம்
26.1.1950 அன்றே நடைமுறைக்கு வந்தது.
இஸ்ரேல் பாடத்தில் இந்திய ராணுவம்!:
இஸ்ரேல்
பாடப்புத்தகங்களில் அந்த நாட்டின் ஹைபா நகரத்துக்கு விடுதலை பெற்றுத்தந்த
இந்திய ராணுவத்தின் வீர சாகசங்கள் இடம் பெற்றுள்ளன. இஸ்ரேலில் உள்ள ஹைபா,
சுமார் 402 ஆண்டுகள் துருக்கியர்கள் வசம் இருந்தது. 1918-ம் ஆண்டு முதல்
உலகப்போரில் நேசநாட்டு படைகள் சார்பாக, இந்திய படைகள் போரிட்டன.
அப்போது
ஹைபா நகரத்தை இந்திய குதிரைப்படைப் பிரிவினர் தீரத்துடன் போரிட்டு
மீட்டனர். இந்த போரில் உயிர் நீத்த 900-க்கும் மேற்பட்ட இந்திய ராணுவ
வீரர்களின் கல்லறைகள் இஸ்ரேலில் உள்ளன.
இந்திய ராணுவ கேப்டன் அமன் சிங்
பகதூர், கேப்டன் அனூப் சிங், தப்தார் ஜோர் சிங், 2-ம் லெப்டினன் ரகத் சிங்
ஆகியோர் போரில் சிறப்பாக செயல் பட்டமைக்காக விருது வழங்கி
கவுரவிக்கப்பட்டுள்ளனர். மேஜர் தல்பத் சிங், "ஹைபா வீரர்' (ஹீரோ ஆப் ஹைபா)
என சிறப்பிக்கப் பட்டு உள்ளார்.
ஹைபா நகர மக்களுக்கு இந்த வரலாற்று
செய்திகள் தெரியும் என்ற போதும், இளம் தலைமுறையினர் தெரிந்து கொள்ள
வேண்டும் என்பதற் காக, பள்ளி பாடப்புத்தகங்களில் இந்த தகவல்கள்
சேர்க்கப்பட்டுள்ளன. ஹைபா நகர துணை மேயர் "ஹெத்லா அல்மோக் இதுக்குறித்து
கூறியது... ஹைபாவின் வரலாறு, புராதனத்தை காக்க இம்முயற்சிகள் மேற்கொள்ளப்
பட்டன' என்கிறார்.
அதேபோல, ஆண்டுதோறும் செப்டம்பர் 23-ம் தேதி இந்திய ராணுவத்தினரால், ஹைபா தினமாக கொண்டாடப்படுகிறது.
கேட்வே ஆப் இந்தியா!:
நமது
குடியரசின் பெருமைமிகு சின்னங்களில் குறிப்பிடத்தக்கது கேட்வே ஆப்
இந்தியா. மும்பை காம்தேவி பகுதியில் பழைய கட்டடங்கள் நிறைந்த இடத்தில் ஒரு
கட்டடத்தை ஒட்டினால்போல், "கேட்கவே ஆப் இந்தியா' வின் ஒரிஜினல் மினியேச்சர்
ஒன்று இடம் பெற்று இருப்பதை இன்றும் காணலாம்.
அதை அங்கு அமைத்தவர்
ராவ்பகதூர் யஷ்வந்த்ராவ் தேசாய். இவர் பொதுப்பணித்துறையில் கிரேடு ஒன்
ஓவர்சியராக கன்சல்டிங் ஆர்கிடெக்காக பணியாற்றிய போது இவரது மேற்பார்வையில்
தான், பிரின்ஸ் ஆப் வேல்ஸ் மியூசியம், ஜெனரல் போஸ்ட் ஆபீஸ், ஜே.ஜே.ஸ்கூல்
ஆப் ஆர்ட்ஸ் டெக்னிக்கல் பிளாக், ஓல்டு கஸ்டம்ஸ் ஹவுஸ், ராயல்
இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ், தி கேட்வே ஆப் இந்தியா ஆகியவை உருவாயின.
இவை
அனைத்திலும், "கேட்வே ஆப் இந்தியா' இவருக்கு தனி கவுரவத்தையும்,
பெருமையையும் தேடி தந்தது. 1923-ஆம் ஆண்டு, "கேட்வே ஆப் இந்தியா' கட்டி
முடிக்கப்பட்டவுடன் அதே போன்று மினியேச்சர் ஒன்றை தயாரித்து பொது பணித்துறை
அலுவலக வளாகத்திற்குள் வைத்தார். தேகாயின் திறமையைப் பாராட்டி, "ராவ்
பகதூர்' பட்டமும் வழங்கப்பட்டது.
தினமலர்

Similar topics
» குடியரசு தினம் !
» குடியரசு தினம் பற்றி தெரிந்த தெரியாத தகவல்கள்.....,
» தில்லியில் குடியரசு தினம்: தமிழக ஊர்திக்கு இரண்டாம் பரிசு
» குடியரசு தினம்: முதல் முறையாக தமிழக முதல்வர் கொடியேற்ற உள்ளார்
» சிரிப்பெனும் மருந்தைத் தினம் தினம் அருந்துங்கள்!-நலம் சிறக்கும்...!!

Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum