Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
உடல் ஆரோக்கியத்துக்கு
Page 1 of 2 • Share
Page 1 of 2 • 1, 2
உங்கள் உடல் ஆரோக்கியத்துக்கு
பூசணிக்காய் பல்வேறு மருத்துவ குணங்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது. காய்கறி வகைகளில் ஒன்றான இதைச் சமைத்துச் சாப்பிட்டால் நரம்பைப் பற்றிய நோய்கள், நரம்புத் தளர்ச்சி, வயிற்றுப்புண் மேகவெட்டை, பிரமேக நோய் ஆகியவை உள்ளவர்களுக்கு நோயின் தீவிரம் குறையும். உடல் சூட்டைத் தணிக்கும், சிறுநீர் வியாதிகளை நீங்கும். சதா காலமும் உடல் வலி இருப்பவர்கள் பூசணிக்காயை அடிக்கடி சமைத்துச் சாப்பிட்டால் உடல்வலி தீரும். இது அனுபவ ரீதியாகக் கண்ட உண்மை.
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
உடல் ஆரோக்கியத்துக்கு
பிறந்த குழந்தைகளின் உணவில் நெல்லிக்காய் சாற்றினைக் கொடுத்து வந்தால் வளரும் குழந்தைகள் தேக ஆரோக்கியத்துடன் திகழ்வார்கள். மாணவர்கள் இதனை தவறாது உட்கொண்டால் நினைவாற்றல் அதிகரிக்கும் கண்பார்வை தெளிவாகும். புத்திக்கூர்மையை ஏற்படுத்தும். குழந்தைகளுக்குக் கோணலாக முளைத்த பற்களுக்கும், காலத்தில் முளைக்காத பற்களுக்கும் கூட நெல்லிக்காய் ஏற்றது.
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
உடல் ஆரோக்கியத்துக்கு
உணவில் வாசனை மற்றும் ருசிக்காக பட்டை, லவங்கம், ஏலம் உள்ளிட்ட பொருட்கள் சேர்க்கப்படுகிறது. இவற்றில் மருத்துவ பயன்களும் உள்ளது என்பதை அறியாதவர்களும் உண்டு. உணவு எளிதில் செரிமானம் ஆவதற்கு இந்தப் பொருட்கள் பயன்படுகிறது என்று கூறுவார்கள். ஆனால் பட்டையில் உள்ள மூலப்பொருள் மறதி நோய்க்கு மருந்தாக இருக்கிறது என்பது சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
உடல் ஆரோக்கியத்துக்கு
பசலைக் கீரையில் இரும்பு சத்து அதிகம் உள்ளது, இதில் உள்ள இரும்புச் சத்து மிகவும் சுலபமாக ஜீரணமாகி உடம்பில் ஒட்டுகின்றது. எனவே ரத்த சோகை நோயாளிகளுக்கு அது மிகவும் பயன் தருகின்றது. இரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்களுக்கு உதவும் சிவப்புச்சத்து (ஹிமொகுளோபின்) உள்ளது
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
உடல் ஆரோக்கியத்துக்கு
சாப்பிட்டவுடன் தேநீர் அருந்தாதீர். ஏனெனில் தேநீர் இழையில் ஆசிட் உள்ளது. இது உணவில் உள்ள புரதச்சத்தினை கடினமாக்கி(Hardening) செரிமானத்தைக் கஷ்டமாக்கும் வாய்ப்பு ஏராளம் உண்டு
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
உடல் ஆரோக்கியத்துக்கு
தினமும் 3 வாழைப்பழங்களை சாப்பிட்டால், பக்கவாத நோயை தவிர்க்க முடியும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். காலையில் ஒன்று, மதியம் ஒன்று, இரவு ஒன்று என்றுதினம் 3 வாழைப்பழங்கள் சாப்பிட்டால், போதிய அளவு பொட்டாசியம் கிடைக்கிறது. இந்த பொட்டாசிய சத்துக்கள் மூலமாக மூளையில் ஏற்படும் இரத்த உறைவை தடுக்கமுடியும்
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
உடல் ஆரோக்கியத்துக்கு
குடும்பத்தினரின் பராமரிப்பில் ஒன்றாக அமர்ந்து உணவருந்தும் குழந்தைகளுக்கு எடை அதிகரிப்பு, ஆரோக்கியம் தொடர்பான பிரச்சினைகள் ஏற்படுவதில்லை என்று அமெரிக்காவில் நடைபெற்ற சமீபத்திய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
உடல் ஆரோக்கியத்துக்கு
கறிவேப்பிலை சாப்பிடுவதால்
நீரிழிவு நோயாளிகள் காலையில் 10 கறிவேப்பிலையையும், மாலையில் 10 இலையையும் பறித்த உடனேயே வாயில் போட்டு மென்று சாப்பிட்டு வந்தால், ரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டுப்படும். வெறும் வயிற்றில் தினமும் கறிவேப்பிலை இலையை மென்று சாப்பிட வேண்டும். இப்கபடியே 3 மாதங்கள் சாப்பிட்டு வந்தால் நீரிழிவால் உடல் பருமனாவது தவிர்க்கப்படும். சிறுநீரில் சர்க்கரை வெளியேறும் அளவும் குறைந்துவிடும்.இளம் வயதில் நரை முடி வராமல் தடுக்க கறிவேப்பிலை பயன்படும் என்பது தெரிந்த விஷயம். ஆனால் தெரியாத விஷயம் ஒன்ரறு உள்ளது. அதாவது, நரை முடி வந்தவர்களும், உணவிலும், தனியாகவும் கறிவேப்பிலையை அதிதகமாக சாப்பிட்டு வந்தால் நரை முடி போயே போச்சு.இது அனுபவ ரீதியாகக் கண்ட உண்மை.

சாப்பிடும் முன்பே பழம் சாப்பிடவேண்டும். காரணம்வெறும் வயிற்றில் பழம் சாப்பிடும்போது நமது உடலில் சேர்ந்திருக்கும் நச்சுப்பொருட்களை மலமாக வெளிகொண்டு வருகிறது இந்த பழம். இதனால் உடல் எடை குறைவதோடு, உடலுக்கு புத்துணர்ச்சியும், தெம்பும் கிடைக்க வழி வகை செய்கிறது. சாப்பிட்ட பிறகு பழம் சாப்பிடும்போது முதலில் எளிதாக ஜீரணமாவது இந்தப் பழம்தான். இதனால் உணவுகள் முழுவதும் செரிக்காத நிலையில் அமிலமாகவும், செரித்த பழம் வயிற்றிலுள்ள ஜீரணமாக பயன்படும் அமிலங்களுடன் கலந்து வயிற்றை கலக்க ஆரம்பிக்கும். இதனால் வயிற்றுள்ள உணவு கெட்டுப்போகும். எனவேதான் சாப்பாட்டிற்கு பின்பு பழம் சாப்பிடாமல் முன்பு சாப்பிடும்போது அதனுடைய பலன் அதிகம் நம்மை சேருகிறது.
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
உடல் ஆரோக்கியத்துக்கு
கொய்யா பழம்
மது போதைக்கு அடிமையான மது பிரியர்கள் அப்பழக்கத்தில் இருந்து விடுபட நினைத்தால் இப்பழத்தை அதிகம் சாப்பிடலாம். இதை தொடர்ந்து சாப்பிட்டால் மது அருந்தும் ஆசை, வெறி எல்லாம் தூள் தூளாகி விடும். மிக எளிதில் மது போதை பழக்கத்தில் இருந்து விடுதலை பெறலாம்

சிரிப்பு ஒன்றே உடல் நலத்துக்கு அரிதான மருந்தாக திகழ்கிறது. இதன் மூலம் மகிழ்ச்சி மற்றும் சந்தோஷம் ஏற்படுகிறது. அதற்காக நாள் ஒன்றுக்கு 18 நிமிடங்கள் சிரிக்க வேண்டும் என ஆய்வறிக்கை தெரிவித்தது. தற்போது ஒரு நாளைக்கு 6 நிமிடங்கள் மட்டுமே சிரித்து மகிழ்ந்தாலே போதும் என புதிய ஆய்வு தெரிவிக்கிறது.
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
உடல் ஆரோக்கியத்துக்கு
வெண்டைக்காய் அழகுக்கும், ஆண்மை விருத்திக்கும் ஏற்றது. இது தாம்பத்திய வாழ்க்கையில் ஆர்வத்தைத் தூண்ட உதவுகிறது. இச்செடியின் வேரைக் காயவைத்துப் பொடியாக்கிப் பாலுடன் சேர்த்துச் சாப்பிட்டால் தம்பதியருக்கு தாம்பத்திய உறவில் நாட்டம் ஏற்படும். ஆண்களின் ஆண்மையும் பெருகும். சிறுநீர் நன்கு பிரியவும், உடலுக்குக் குளிர்ச்சியைத் தரவும், தோல் வறட்சியை நீக்கவும் உடம்மைப் பளபளப்பாக மாற்றவும் அரிய மருந் தாகவும் வெண்டைக்காய் திகழ்கிறது.
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
உடல் ஆரோக்கியத்துக்கு
தக்காளி இந்த சிவப்பு நிற அழகான காய்கறியில் லைகோபைன் சத்து அதிகம் உள்ளது. இந்த பழத்தை அதிகம் சாப்பிட்டால், சருமம் பொலிவாவதோடு, உடல் எடை குறைந்து, புற்றுநோய் வருவதும் தடைபடும்
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
உடல் ஆரோக்கியத்துக்கு
பீட்ரூட் இந்த காய்கறியில் இரும்புச்சத்து மற்றும் வைட்டமின்கள் அதிகம் உள்ளதால், இதை சாப்பிடும் போது உடலில் இரத்த ஓட்டம் அதிகரித்து, நல்ல அழகான கன்னங்களை பெறலாம். அதற்கு தினமும் ஒரு டம்ளர் பீட்ரூட் ஜூஸ் குடிக்க வேண்டும்.
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
உடல் ஆரோக்கியத்துக்கு
கேரட்டில் வைட்டமின் சி மற்றும் கரோட்டீன் போன்ற சத்துக்கள் அதிகம் உள்ளது. அதுமட்டுமின்றி, இவை சருமத்திற்கும், கூந்தலுக்கும் மிகவும் சிறந்தது. எனவே கேரட் ஜூஸை தினமும் ஒரு டம்ளர் குடித்து வந்தால், சருமம் நன்கு பொலிவு பெறும்
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
உடல் ஆரோக்கியத்துக்கு
இளநரை கருப்பாக:
நெல்லிக்காய் அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் இளநரை கருமை நிறத்திற்கு மாறும்.
காய்ந்த நெல்லிக்காயை பவுடராக்கி தேங்காய் எண்ணெயுடன் கலந்து கொதிக்க வைத்து வடிகட்டி தேய்த்துவர முடி கருமையாகும்

சுத்தம் செய்யப்பட்ட அருகம்புல் சாறை காலை எழுந்தவுடன் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் உடலிலுள்ள கெட்ட நீர் வெளியேறி தேவையற்ற சதைப்பகுதி குறைந்து விடுமாம். ரத்தத்தை சுத்தப்படுத்தும் சக்தியும் அருகம்புல்லுக்கு உண்டாம். ஞாபக சத்தியைத் தூண்ட அருகம்புல் சிறந்த மருந்தாகும். ஞாபக மறதியைப் போக்கி அன்றாட வாழ்வில் மன உளைச்சல், மன இறுக்கம் நீங்கும். அருகம்புல்லை நிழலில் உலர்த்தி பொடி செய்து தினமும் கஷாயம் செய்து குடித்து வந்தால் நினைவாற்றல் அதிகரிக்கும்
அருகம்புல்லையும் தேங்காய் எண்ணையையும் சம அளவு எடுத்துக் கொண்டு அதை உடலில் தேய்த்து அரைமணி நேரம் ஊறவிடவும். பிறகு கடலை மாவால் தேய்த்துக் குளித்தால் உடல் கண்ணாடி போல் ஜொலிக்கும்.
அருகம்புல்லையும் தேங்காய் எண்ணையையும் சம அளவு எடுத்துக் கொண்டு அதை உடலில் தேய்த்து அரைமணி நேரம் ஊறவிடவும். பிறகு கடலை மாவால் தேய்த்துக் குளித்தால் உடல் கண்ணாடி போல் ஜொலிக்கும்.
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
உடல் ஆரோக்கியத்துக்கு
இளம்பெண்கள் உட்பட அனைவரின் தொப்பையும் கரைக்கும் சக்தி அன்னாசிக்கு உண்டு.
இரவில் அன்னாசிப் பழத்தை (ஒரு பழத்தில் பாதி)
சின்னதாக கட் பண்ணி, அத்துடன் 2 ஸ்பூன் ஓமம் சேர்த்து
தண்ணீர் ஊற்றி நன்கு வேகவைத்து விடுங்கள்.
மறு நாள் காலை 5 மணிக்கு எழுந்து, நன்கு கைகளால் பிசைந்து, சாறு எடுத்து வெறும் வயிற்றில் சாப்பிடவும். இந்த முறைப்படி பத்து நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உங்கள் தொந்தி கரைய ஆரம்பிக்கும்
இரவில் அன்னாசிப் பழத்தை (ஒரு பழத்தில் பாதி)
சின்னதாக கட் பண்ணி, அத்துடன் 2 ஸ்பூன் ஓமம் சேர்த்து
தண்ணீர் ஊற்றி நன்கு வேகவைத்து விடுங்கள்.
மறு நாள் காலை 5 மணிக்கு எழுந்து, நன்கு கைகளால் பிசைந்து, சாறு எடுத்து வெறும் வயிற்றில் சாப்பிடவும். இந்த முறைப்படி பத்து நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உங்கள் தொந்தி கரைய ஆரம்பிக்கும்
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
உடல் ஆரோக்கியத்துக்கு
உடல் இளைக்க என்ன செய்வது?
இதுதான் இன்று பலருடைய கவலை.
நீங்கள் என்னோடு வாருங்கள். உங்கள் கிச்சன்கு!
தினமும் காலை சுமார் பதினோரு மணியளவில் மிளகு ரசம் ஒரு டம்ளர் பருகுங்கள். அது போதும். எத்தனை நாள் சாப்பிட வேண்டும் என்று கேட்காதீர்கள்! தினமும் சாப்பிட்டுக் கொண்டே இருக்கலாம். இந்த ரசத்துக்கு மணம், குணம் ஊட்ட கறிவேப்பிலை, கொத்துமல்லி, இஞ்சி இவற்றைச் சேர்த்துக் கொள்ளலாம்.-இந்த மிளகு ரசத்தில் பருப்பைத் தவிர்ப்பது உசிதம். இதைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் மாதத்திற்கு இரண்டு, மூன்று கிலோ வரை உடல் குறையும்.
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
உடல் ஆரோக்கியத்துக்கு
பேரீச்சம் பழத்தை பசும்பாலில் வேக வைத்து அருந்திவந்தால் இதய நோய்கள் அண்டாது. மாலைக்கண் நோயால் பாதிக்கப் பட்டவர்கள், பேரீச்சம் பழத்தை தேனுடன் கலந்து ஊறவைத்து சாப்பிட்டு வந்தால் உடலுக்குத் தேவையான எல்லா சத்துக்களும் கிடைக்கும். இதனால் கண் பார்வைக் கோளாறுகள் நீங்கும்
நரம்புத் தளர்ச்சியால் பாதிக்கப் படுவார்கள். இவர்கள் பேரீச்சம் பழத்துடன் பாதாம் பருப்பு சேர்த்து பாலில் கலந்து கொதிக்க வைத்து சாப்பிட்டால் நரம்புத் தளர்ச்சி நீங்கி, ஞாபக சக்தி கூடும். கைகால் தளர்ச்சி குணமாகும்.
பேரீச்சம் பழத்தை பாலில் கலந்து கொதிக்க வைத்து பாலையும், பழத்தையும் சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடல் என்றும் ஆரோக்கியமாக இருக்கும்.
நரம்புத் தளர்ச்சியால் பாதிக்கப் படுவார்கள். இவர்கள் பேரீச்சம் பழத்துடன் பாதாம் பருப்பு சேர்த்து பாலில் கலந்து கொதிக்க வைத்து சாப்பிட்டால் நரம்புத் தளர்ச்சி நீங்கி, ஞாபக சக்தி கூடும். கைகால் தளர்ச்சி குணமாகும்.
பேரீச்சம் பழத்தை பாலில் கலந்து கொதிக்க வைத்து பாலையும், பழத்தையும் சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடல் என்றும் ஆரோக்கியமாக இருக்கும்.
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
உடல் ஆரோக்கியத்துக்கு
குழந்தைகளுக்கு நெல்லிக்காய் லேகியம் தினம் கொடுக்க சிறந்த நோய் எதிர்ப்பு சக்தி உருவாவதுடன், மூளை வளர்ச்சியும், புத்திக் கூர்மையும் ஏற்படும். நரம்பு மண்டலத்தை தூண்டி வேலை செய்கிறது. மூளை செல்களுக்கு புத்துணர்ச்சியளிப்பதால், மனத்தெளிவு, புத்திக்கூர்மை மற்றும் ஞாபசக்தி உண்டாகிறது. நுரையீரலை பலப்படுத்தி சுவாச நோய்களை கட்டுப்படுத்த உதவுகிறது.
உடல் எடையை கூட்டாமல் தசைகளுக்கு பலம் அளிக்கக் கூடிய தன்மை நெல்லிக்காய்க்கு உண்டு. நீரிழிவை கட்டுப்படுத்தும் சக்தியுள்ளது. மேலும் இதில் வைட்டமின் சி சத்து அதிகம் உள்ளதால் நோய்க்கு எதிர்ப்பு சக்தியாக செயல்படுகிறது.
நெல்லிக்காய் கிடைக்காத காலங்களில் காய்ந்த நெல்லிக்காயை பயன்படுத்தலாம். இதற்குரிய சக்தி காய்ந்த பின்னும் குறைவதில்லை.
உடல் எடையை கூட்டாமல் தசைகளுக்கு பலம் அளிக்கக் கூடிய தன்மை நெல்லிக்காய்க்கு உண்டு. நீரிழிவை கட்டுப்படுத்தும் சக்தியுள்ளது. மேலும் இதில் வைட்டமின் சி சத்து அதிகம் உள்ளதால் நோய்க்கு எதிர்ப்பு சக்தியாக செயல்படுகிறது.
நெல்லிக்காய் கிடைக்காத காலங்களில் காய்ந்த நெல்லிக்காயை பயன்படுத்தலாம். இதற்குரிய சக்தி காய்ந்த பின்னும் குறைவதில்லை.
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
உடல் ஆரோக்கியத்துக்கு
பச்சை வெங்காயத்தை உணவில் சேர்த்துக் கொள்வதால் உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்புகளை கரைத்து ரத்தத்தை சுத்திகரிப்பதில் வெங்காயத்தின் நறுமணம் மற்றும் அமிலத்தன்மை பெரும்பங்கு வகிக்கிறது. நாம் உண்ணும் உணவை எளிதாக ஜீரணிக்க வைப்பதுடன் தேவையான சத்துக்களை உடலின் தேவைக்கேற்ப பிரித்துக் கொடுக்கிறது.
உடலில் உள்ள நோய்கிருமிகள் அழிவதுடன் நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கிறது. பச்சை வெங்காயத்தின் அமிலத்தன்மை மாரடைப்பு நோயிலிருந்து மனிதர்களைக் காக்கிறது என்பதும் கூடுதல் தகவல்.
உடலில் உள்ள நோய்கிருமிகள் அழிவதுடன் நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கிறது. பச்சை வெங்காயத்தின் அமிலத்தன்மை மாரடைப்பு நோயிலிருந்து மனிதர்களைக் காக்கிறது என்பதும் கூடுதல் தகவல்.
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
உடல் ஆரோக்கியத்துக்கு
வாய் துர்நாற்றம் உள்ளவர்கள் பச்சைக் கொத்து மல்லி இலையை தினமும் வாயில் போட்டு மென்று சாப்பிட்டு வந்தால் நாற்றம் நீங்கும்
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
உடல் ஆரோக்கியத்துக்கு
பொன்னாங்கண்ணிக் கீரையைத் துவரம் பருப்புடன் மிளகு சேர்த்து சமைத்து உண்டு வந்தால், 3 மாதங்களில், பெருத்த உடல் பருமன் குறைந்து, நல்ல கெட்டியடைந்து ஆரோக்கியமடையும்
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
உடல் ஆரோக்கியத்துக்கு
நெல்லிக்காயில் அதிக மருத்துவ குணம் இருக்கிறது என்பது தெரியும்.
ஆனால் அதில் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தி தரும் விஷயங்கள் இருப்பது பலருக்குத் தெரிவதில்லை. உடலில் இருக்கும் அதிகப்படியான கொழுப்பைக் குறைக்கவும், உடலில் சர்க்கரையின் அளவைக் குறைக்கவும் நெல்லிக்காய் சாப்பிடலாம்
ஒரு ஆப்பிளில் இருக்கும் முழு சக்தியும் ஒரு நெல்லிக்காயில் இருக்கிறது என்பது அறிவியல் உண்மை.
ஆனால் அதில் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தி தரும் விஷயங்கள் இருப்பது பலருக்குத் தெரிவதில்லை. உடலில் இருக்கும் அதிகப்படியான கொழுப்பைக் குறைக்கவும், உடலில் சர்க்கரையின் அளவைக் குறைக்கவும் நெல்லிக்காய் சாப்பிடலாம்
ஒரு ஆப்பிளில் இருக்கும் முழு சக்தியும் ஒரு நெல்லிக்காயில் இருக்கிறது என்பது அறிவியல் உண்மை.
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Page 1 of 2 • 1, 2
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|