by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
No user |
ஈஸியாக செய்யக்கூடிய 7 விதமான இட்லிகள்!!!
ஈஸியாக செய்யக்கூடிய 7 விதமான இட்லிகள்!!!
காலை வேளையில் அலுவலகத்திற்கு செல்லும் நேரத்தில், உடலுக்கு ஆரோக்கியத்தை தரும் வகையிலும், சற்று வித்தியாசமானதாகவும் சமைக்க வேண்டுமென்று நினைத்தால், அப்போது வீட்டில் பச்சை பட்டாணி, ரவை மற்றும் வெந்தயக்கீரை இருந்தால், எளிதில் சூப்பராக வித்தியாசமான சுவையில் ஒரு இட்லி செய்யலாம்.
இந்த இட்லி வித்தியாசமான சுவையில் இருப்பதோடு, குழந்தைகளுக்கு பிடித்தவாறும் இருக்கும். இப்போது அந்த பச்சை பட்டாணி இட்லியை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!
தேவையான பொருட்கள்:
ரவை - 2 கப் (வறுத்தது)
பச்சை பட்டாணி - 3/4 கப் (வறுத்து, லேசாக அரைத்தது)
வெந்தயக்கீரை - 1 டேபிள் ஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
தயிர் - 2 டீஸ்பூன்
ஓட்ஸ் - 2 டீஸ்பூன்
இஞ்சி மற்றும் பச்சை மிளகாய் பேஸ்ட் - 3 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் ரவை, தயிர், வெந்தயக்கீரை, பட்டாணி, ஓட்ஸ், இஞ்சி மற்றும் பச்சை மிளகாய் பேஸ்ட், உப்பு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்கு இட்லி மாவு பதத்தில் கலந்து கொள்ள வேண்டும்.
பின்னர் இட்லி பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் தண்ணீரை ஊற்றி, கொதிக்க வைத்து, இட்லி தட்டில் இட்லிகளாக ஊற்றி, பாத்திரத்தில் வைத்து மூடி வைக்க வேண்டும்.
பிறகு 10 நிமிடம் கழித்து, இட்லிப் பாத்திரத்தை திறந்து இட்லிகளை எடுக்க வேண்டும்.
இப்போது வித்தியாசமான பச்சை பட்டாணி இட்லி ரெடி!!! இதனை புதினா சட்னியுடன் சாப்பிட்டால், அருமையாக இருக்கும்.
http://tamil.boldsky.com/recipes/veg/delicious-green-peas-idli-002638.html
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: ஈஸியாக செய்யக்கூடிய 7 விதமான இட்லிகள்!!!
எப்போதும் அரிசி, உளுந்தை அரைத்து தான் இட்லிகளாக செய்து சாப்பிட்டிருப்போம். ஆனால் அந்த அரிசி, உளுந்து இல்லாமல், ரவையை வைத்தே எளிதில் காலையில் இட்லிகளை செய்யலாம். மேலும் இது குழந்தைகளுக்கு மிகவும் பிடித்ததாக இருக்கும். அதிலும் இதை காலையில் குழந்தைகளுக்கு செய்து பள்ளிக்கு கொடுத்து அனுப்பினால், மதிய வேளையில் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும். இப்போது அந்த ரவை இட்லியை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!
தேவையான பொருட்கள்:
ரவை - 1 கப்
தயிர் - 1 கப் (சற்று புளித்தது)
தேங்காய் - 2 டீஸ்பூன் (துருவியது)
கொத்தமல்லி - சிறிது
சோடா மாவு - 1 சிட்டிகை
மிளகு - 1/2 டீஸ்பூன்
சீரகம் - 1/4 டீஸ்பூன்
கடுகு - 1/4 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1/4 டீஸ்பூன்
கடலைப் பருப்பு - 1 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 2 (நறுக்கியது)
கறிவேப்பிலை - சிறிது
உப்பு - தேவையான அளவு
நெய் - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
முதலில் ஒரு வாணலியில் நெய்யை ஊற்றி, காய வைத்து, ரவையை போட்டு வறுத்து, தனியாக ஒரு பாத்திரத்தில் போட்டு சூடாறியதும், தயிர், தேங்காய் துருவல், கொத்தமல்லி, உப்பு மற்றும் சோடா மாவு சேர்த்து, கலந்து வைத்துக் கொள்ளவும்.
பின் மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு, மிளகு, சீரகம், கறிவேப்பிலை போட்டு தாளிக்க வேண்டும்.
பிறகு நறுக்கி வைத்துள்ள பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி, அந்த ரவை கலவையோடு சேர்த்து, வேண்டுமென்றால் சிறிது தண்ணீர் ஊற்றி, இட்லி பதத்திற்கு கரைத்து, ஒரு 10-15 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் இட்லிப் பாத்திரத்தில் அந்த மாவை இட்லிகளாக ஊற்றி, வேக வைத்து எடுக்க வேண்டும்.
இப்போது சுவையான ரவை இட்லி ரெடி!!! இதனை சட்னி, சாம்பாருடன் சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.
http://tamil.boldsky.com/recipes/veg/rava-idli-002116.html
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: ஈஸியாக செய்யக்கூடிய 7 விதமான இட்லிகள்!!!
அரிசி, உளுந்து சேர்த்து செய்யும் இட்லி பெரும்பாலான வீடுகளில் செய்வதுதான். ஆனால் பரும்பும், காய்கறிகளும் சேர்த்து ஊட்டச்சத்து மிக்க இட்லி செய்யலாம். சத்தோடு சுவையும் சூப்பராக இருக்கும்.
தேவையானப்பொருட்கள்:
பாசிப் பருப்பு - 1/2 கப்
உளுத்தம் பருப்பு - 1/2 கப்
ரவை - 1 கப்
இஞ்சி - ஒரு சிறிய துண்டு
பச்சை மிளகாய் - 3 அல்லது 4
பெருங்காயத்தூள் - 1/2 டீஸ்பூன்
நெய் - 1 டீஸ்பூன்
கேரட் – 1
வேகவைத்த பச்சை பட்டாணி - 2 டேபிள்ஸ்பூன்
உப்பு - 2 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு
இட்லி செய்முறை
பாசிப் பருப்பு, உளுத்தம் பருப்பு இரண்டையும் 4 அல்லது 5 மணி நேரம் ஊறவைக்கவும். பருப்பு ஊறியவுடன், தண்ணீரை வடித்து விட்டு, அத்துடன் பச்சைமிளகாய், இஞ்சி, பெருங்காயம் சேர்த்து நன்றாக அரைத்தெடுக்கவும் காரட்டை பொடியாக துருவிக்கொள்ளவும், ஒரு பாத்திரத்தில் அரைத்த மாவுடன் ரவை, துருவிய காரட், வேகவைத்த பட்டாணி ஆகியவற்றை ஒன்றாகப் போட்டு, உப்பையும் சேர்த்துக் கலக்கவும். இதோடு சிறிது தயிர் சேர்த்து இட்லி மாவு பதத்திற்குக் கரைத்துக் கொள்ளவும். இட்லி தட்டில் சிறிது நெய்யைத் தடவி, அதில் இட்லி மாவை விட்டு, பத்து நிமிடங்கள் இட்லி பானையில் வைத்து வேக விடவும். கலர் கலராய், சத்துள்ள இட்லி தயார்.
இந்த மாவில் காளான் மற்றும் முந்திரியையும் சேர்க்கலாம். சிறிது சோடா உப்பைச் சேர்த்தால் இட்லி மிருதுவாக இருக்கும். குழந்தைகளுக்கு ஏற்ற சத்தான உணவு
http://tamil.boldsky.com/recipes/veg/vegetable-dall-idly-001093.html
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: ஈஸியாக செய்யக்கூடிய 7 விதமான இட்லிகள்!!!
இட்லி உடலுக்கு மிகவும் நல்லது. அத்தகைய இட்லியை இதுவரை சட்னியுடன் தான் தொட்டு சாப்பிட்டிருப்போம். ஆனால் அவற்றை இப்போது சற்று வித்தியாசமாக தக்காளி மையமாக வைத்து, தக்காளி இட்லி செய்து சாப்பிடலாம். இதை இட்லி பிடிக்காத குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். இப்போது அந்த இட்லியை எவ்வாறு செய்வதென்று பார்ப்போமா!!!
தேவையான பொருட்கள்:
இட்லி மாவு - 2 கப்
பெரிய வெங்காயம் - 2 (நறுக்கியது)
தக்காளி - 2 (நறுக்கியது)
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
கொத்தமல்லி - சிறிது
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
அரைக்க:
இஞ்சி - 1 துண்டு
பூண்டு - 3 பல்
மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
சோம்பு - 1/2 டீஸ்பூன்
செய்முறை:
முதலில் இட்லிப் பாத்திரத்தில் இட்லி மாவை ஊற்றி வேக வைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு வேக வைத்துள்ள இட்லியை சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.
பின் மிக்ஸியில் அரைக்க குறிப்பிட்டுள்ள பொருட்களைப் போட்டு நைஸாக அரைத்துக் கொள்ளவும்.
பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு சேர்த்து தாளித்து, பின் அதில் நறுக்கி வைத்துள்ள வெங்காயம் மற்றும் உப்பை போட்டு பொன்னிறமாக வதக்கவும்.
பிறகு அரைத்து வைத்திருக்கும் கலவை மற்றும் மஞ்சள் தூளை சேர்த்து, பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
பின்பு நறுக்கி வைத்துள்ள தக்காளி மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து, தக்காளி நன்கு வதங்கும் வரை வதக்கி, இட்லி மற்றும் கொத்தமல்லியை சேர்த்து கிளறி இறக்கவும்.
இப்போது சுவையான தக்காளி இட்லி ரெடி!!! இதனை எந்த ஒரு சைடு டிஷ் இல்லாமல், அப்படியே சாப்பிடலாம்.
http://tamil.boldsky.com/recipes/veg/tomato-idli-002077.html
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: ஈஸியாக செய்யக்கூடிய 7 விதமான இட்லிகள்!!!
இட்லியில் எத்தனையோ வகைகள் இருக்கின்றன. அதில் ஃப்ரைடு இட்லி மிகவும் ருசியானது. இதற்கு எந்த ஒரு சட்னியோ அல்லது சாம்பாரோ தேவையில்லை. அதிலும் இதனை காலை வேளையில் குழந்தைகளுக்கு பள்ளிகளுக்கு கொடுத்தனுப்ப ஏற்ற ஒரு டிஷ். இப்போது அந்த ஃப்ரைடு இட்லியை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!
தேவையான பொருட்கள்:
இட்லி மாவு - 2 கப்
இட்லிப் பொடி - 2 டேபிள் ஸ்பூன்
வெங்காயம் - 2 (நறுக்கியது)
கறிவேப்பிலை - சிறிது
கொத்தமல்லி - சிறிது
எலுமிச்சை சாறு - 1 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
முதலில் இட்லி மாவைக் கொண்டு, சிறு சிறு இட்லிகளாக ஊற்றி, வேக வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயத்தை சேர்த்து கறிவேப்பிலையை போட்டு, சிறிது உப்பை தூவி, பொன்னிறமாக வதக்க வேண்டும்.
பிறகு ஊற்றி வைத்துள்ள சிறு சிறு இட்லிகளை, அத்துடன் சேர்த்து, இட்லிப் பொடி, எலுமிச்சை சாறு மற்றும் கொத்தமல்லி சேர்த்து கிளறி இறக்க வேண்டும்.
இப்போது அருமையான ஃப்ரைடு இட்லி ரெடி!!! இதனை அப்படியே சாப்பிடலாம்.
http://tamil.boldsky.com/recipes/non-veg/delicious-fried-idli-002383.html
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: ஈஸியாக செய்யக்கூடிய 7 விதமான இட்லிகள்!!!
காலையில் சீக்கிரமாக சமைக்க வேண்டும், அதுவும் குழந்தைகள் இட்லி வேண்டுமென்று கேட்டால், அப்போது வீட்டில் இருக்கும் ரவை மற்றும் சேமியாவை வைத்து சூப்பராக 20 நிமிடத்தில் இட்லி செய்து தரலாம். இப்போது அந்த ரவை சேமியா இட்லிவயை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!
தேவையான பொருட்கள்:
ரவை - 1 கப்
சேமியா - 1/4 கப்
சற்று புளித்த தயிர் - 1 கப்
தேங்காய் - 2 டீஸ்பூன் (துருவியது)
கொத்தமல்லி - 1 டீஸ்பூன் (நறுக்கியது)
பச்சை மிளகாய் - 2 (நறுக்கியது)
இஞ்சி - சிறிது (நறுக்கியது)
நெய் - 2 டீஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
கடலைப்பருப்பு - 2 டீஸ்பூன்
மிளகு தூள் - 1/2 டீஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி காய்ந்ததும், சேமியா மற்றும் ரவையை வறுத்து தனியாக வைத்துக் கொள்ளுங்கள்.
பின் மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அதில் கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு, சீரகம், மிளகு தூள், பச்சை மிளகாய், இஞ்சி சேர்த்து நன்கு வதக்கி, வறுத்து வைத்துள்ள ரவை மற்றும் சேமியாவுடன் சேர்க்க வேண்டும்.
பிறகு அதோடு தயிர், தேங்காய் துருவல், கொத்தமல்லி, உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து இட்லி மாவு பதத்தில் கரைத்து, 15 நிமிடம் ஊற வைத்து, பின் அதனை இட்லிகளாக ஊற்றி எடுக்க வேண்டும்.
இப்போது சுவையான ரவை சேமியா இட்லி ரெடி!!! இதனை தேங்காய சட்னியுடனோ அல்லது அப்படியே வேண்டுமானாலும் சாப்பிடலாம்.
http://tamil.boldsky.com/recipes/veg/rava-semiya-idli-002235.html
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: ஈஸியாக செய்யக்கூடிய 7 விதமான இட்லிகள்!!!
இட்லிகளை அளவுக்கு அதிகமாக சுட்டுவிட்டால், மீதமுள்ளவற்றை தூக்கிப் போடாமல், அதனை வைத்து இதுவரை உப்புமா தான் செய்து சாப்பிட்டிருப்போம். ஆனால் இப்போது அவற்றை குழந்தைகள் விரும்பி சாப்பிடும் வகையில் மஞ்சூரியன் போன்று செய்து கொடுக்கலாம். அந்த இட்லி மஞ்சூரியனை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!
தேவையான பொருட்கள்:
இட்லி - 10
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
கார்ன்ஃப்ளார் - 1 டேபிள் ஸ்பூன்
கடலை மாவு - 1 டேபிள் ஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
கரம் மசாலா தூள் - 1/2 டீஸ்பூன்
சீரகத்தூள் - 1/2 டீஸ்பூன்
கேசரி பவுடர் - 1 சிட்டிகை
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
முதலில் இட்லியை வேண்டிய வடிவத்தில் நறுக்கிக் கொள்ளவும். பிறகு அதனை ஒரு பாத்திரத்தில் போட்டு, அதோடு கடலை மாவு, இஞ்சி பூண்டு விழுது, கார்ன்ஃப்ளார், கரம் மசாலா தூள், சீரகத்தூள், மிளகாய் தூள், கரம் மசாலா தூள், கேசரி பவுடர் மற்றும் உப்பு சேர்த்து, சிறிது தண்ணீர் ஊற்றி நன்கு கிளறிக் கொள்ளவும்.
பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அதில் இட்லித் துண்டுகளை சிறிது சிறிதாக போட்டு பொரித்தெடுக்கவும்.
இப்போது சுவையான இட்லி மஞ்சூரியன் ரெடி!!!
குறிப்பு: எண்ணெய் நன்கு காய்ந்த பின்னரே, இட்லிகளை போட்டு பொரிக்க வேண்டும். இல்லையென்றால், எண்ணெயை இட்லி குடித்துவிடும். பின் அதை சாப்பிடவே முடியாத அளவில் ஆகிவிடும்.
http://tamil.boldsky.com/recipes/veg/idli-manchurian-002158.html
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: ஈஸியாக செய்யக்கூடிய 7 விதமான இட்லிகள்!!!
வாழ்த்துக்கள் முஹைதீன்
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
» நீங்கள் இட்லி பிரியரா?? இன்றைய கிச்சன் ஸ்பெஷல் - இன்சுவை தரும் இட்லிகள்
» ஒரு தகப்பனை ஆட்டிப்படைக்கும் 10 விதமான பயங்கள்
» காபியைக் கொண்டு செய்யக்கூடிய சில அற்புதமான விஷயங்கள்!!!
» முட்டையை வைத்து செய்யக்கூடிய ஸ்நாக்ஸ் ரெசிபிக்கள்!!!