தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» தேர்தல் நாடகம்
by RAJU AROCKIASAMY

» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


வயதானாவர்கள் உபயோகமில்லாதவர்களா?

View previous topic View next topic Go down

வயதானாவர்கள் உபயோகமில்லாதவர்களா? Empty வயதானாவர்கள் உபயோகமில்லாதவர்களா?

Post by முழுமுதலோன் Fri Feb 15, 2013 7:51 pm

வயதானாவர்கள் உபயோகமில்லாதவர்களா?



" என்ன பெரிசு ஒரே பாடாப் படுத்துறே, ஓரத்தில படுத்துக்கோப்பா "

"இங்க பாருங்கோ உங்களுக்கு வயசாய்ப் போச்சுது, சும்மா இந்த இளம் பிள்ளைகளோட போட்டி போடாமாப் பேசாம சிவனே என்று ஒரு மூலையில போய் இருங்களேன்"

இவையெல்லாம் எமது பின்புலங்கள் (தாய்நாடுகள்) ஆகிய இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் நாமனைவரும் எங்கேயாவது கேட்டிருக்கக் கூடிய வார்த்தைகள். நான் மேலே கூறிய உதாரணங்களிலிருந்து இது எமது நாடுகளுக்கேயுரிய ஒரு குறிப்பிட்ட பிரச்சனை என்று நான் கூறுவதாக ஒருவரும் கருதிக் கொள்ளக்கூடாது.

இது சகல நாடுகளிலும், சகல கலாச்சாரங்களுக்குள்ளும் ஊறிப் போயிருக்கும் ஒரு விசயமாகும். அதாவது வயது எனும் காரணி ஒரு மனிதனின் வாழ்வை எந்த அளவிற்குப் பாதிக்கின்றது என்பதுவே இங்கே எழும் கேள்வியாகும்.

இந்தத் தாக்கத்தின் வடிவம் நிறவெறி, மதவெறி எந்த அளவிற்கு பாதிக்கின்றதோ அந்த அளவிற்கு பாதித்திருக்கின்றது என்பது சமுதாய ஆராய்ச்சி வல்லுனர்களின் கருத்து.

வாழ்க்கையில் ஒவ்வொரு நிலையிலும் எம்மால் குடும்பத்திற்கு, சமுதாயாத்திற்கு உபயோகம் இருக்கின்றது. அது வயது ஏற, ஏற ஒவ்வொரு வடிவம் எடுக்கின்றது. அந்த உபயோகத் தன்மையின் வடிவமும், அதன் முக்கியத்துவமும் சூழலுக்கேற்ப, சார்ந்திருக்கும் சமூகத்திற்கேற்ப மாறுதலடைகின்றது.

இதனால் தன்னுடைய ஓய்வு பெறும் நிலையை அடையும் போது ஒருவனுடைய உபயோகத் தன்மை குறைகின்றது என்பது பலருடைய கருத்து என்பதே இங்கே முக்கியமாக நான் குறிப்பிட விழைவது.

இப்படியான ஒரு நிலைமை நடைமுறையில் இருக்கிறது என்பதை எல்லோரும் ஏற்றுக்கொள்ளும் ஒரு நிலைமை இருக்கிறது. இதனால் எழும் கேள்வி இந்த மனப்பான்மை சரியா? தவறா? என்பதுவே.

சீ.ஏ.ஏ.டி..இ எனும் வயதுப் பாகுபாட்டுக்கெதிரான ஒரு அமைப்பின் கணக்கெடுப்பின் படி, இந்த வயதானவர்கள் எனும் பட்டியல் அதாவது 45 வயதுக்கு மேற்பட்டவர்கள், ஜக்கிய இராச்சியத்தின் ஜனத் தொகையில் மூன்றிலொரு விகிதம் இருக்கிறார்கள் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

அதே அமைப்பின் மற்றொரு கணிப்பின்படி வயதானவர்கள் எனக் கணிக்கப்படுவோரில் 25% பேர்கள் வேலையில்லாத் திண்டாட்டத்தினால் பாதிக்கப்பட்டு உள்ளார்கள் எனப்படுகின்றது.

இரண்டரை மில்லியனுக்கு மேற்பட்ட வேலை செய்யக்கூடிய நிலையிலுள்ள 45-க்கும் 65-க்கும் இடைப்பட்ட வயதுடையவர்கள் ஜக்கிய இராச்சியத்தில் வேலையற்று இருக்கிறார்கள் என்பதுவும் இதே அமைப்பின் மற்றொரு கணிப்பாகும்.

சட்டரீதியாக வேலைசெய்வதற்கு உட்பட்ட வயதிலுள்ளவர்கள், வயதானவர்கள் என்னும் முத்திரை குத்தப்பட்டு ஒதுக்கப் படுவதினால் அரசாங்கத்திற்கு 5.5 பில்லியன் பவுண்ட்ஸ் வேலையற்றோருக்கான உதவிப் பணத்திலும், 31 பில்லியன் உற்பத்தி நஷ்டத்திலும் செலவாகின்றது என்பதாகக் கணிக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு அற்றுப் போகும் தன்மை 50 வயதுடன் அதிகரிக்கின்றதாகக் கூறப் படுகின்றது. மேலே கூறப்பட்ட தரவுகள் ஜக்கிய இராச்சியத்திற்கான புள்ளி விபரங்களாகும். இதனால் இந்த புள்ளி விபரங்கள் உலகின் மற்ற பாகங்களுக்கும் பொருந்தும் எனக் கூறப்படுகின்றது.

நான் இந்தப் புள்ளி விபரங்களை மேலே குறிப்பிட்டதன் காரணம், வயதுப் பாகுபாடு எனும் இந்த நிகழ்வு எவ்வளவு தூரம் நடைமுறைப் படுத்தப் படுகின்றது என்பதைச் சுட்டிக் காட்டுவதற்காகவே.

ஒரு மனிதன் உதரணத்திற்கு தனது 20-வது வயதில் இருந்து உத்தியோகம் எனும் கட்டத்தை அடைகின்றான் என்று வைத்துக் கொள்வோம், அதன் பின்பு வாழ்க்கையின் சாதாரண நிகழ்வுகளாக திருமணம், குழந்தைகள் என்பன அதைத் தொடருகின்றன. ஒரு 35 வயது ஆணையோ அன்றிப் பெண்ணையோ எடுத்துக் கொண்டால் அந்த வயதிலே மிகுந்த ஆர்வமிருந்தும் அவர்களின் உபயோகத்தனத்தின் 50% மட்டுமே உத்தியோகத்திற்காகச் செலவிடக் கூடிய நிலையிலிருப்பார்கள். காரணம் மிகுதி 50% குடும்பத்தின் அன்றாடத் தேவைகளை நோக்கிச் செலுத்தப்பட வேண்டியதாகின்றது.

இதனால் அதே நபர் ஒரு 45-50 வயது எல்லைக்கு வந்து விட்டார் என்று வைத்துக் கொள்ளுங்கள், சராசரி மனிதருடைய வாழ்வில் பிள்ளைகள் வளர்ந்து தமது அன்றாடத் தேவைகளைத் தாமே கவனித்துக் கொள்ளக்கூடிய நிலையிலிருப்பார்கள். அந்த நிலையிலே அவர்களால் தமது உத்தியோகத்தின் பால் கூடிய விகிதக் கவனத்தைச் செலுத்தக் கூடிய நிலையிலிருப்பார்கள்.

அது மட்டுமின்றி, அதுவரை அவர்களது துறையிலே மிகுந்த அனுபவமடைந்தவர்களாகவும் இருப்பார்கள். இதனால் அவர்களை இந்த வயதுப் பாகுபாடு எனும் மனப்பான்மை தள்ளி வைத்து விடுகின்றது.

இங்கேதான் எனது ஒரு மனிதனின் உபயோகத்தன்மைக்கு ஓய்வுண்டா? அவனது அனுபவத்துக்கு வயதாவதுண்டா? எனும் கேள்விகள் ஓங்காரமாய் எழுகின்றன.

இந்தப் பிரச்சனையை நாம் ஒவ்வொருவரும் எப்படி அணுகுகின்றோம்? இது என்றும் இருந்து வரும் பிரச்சனை, அதுவும் தற்போது இதற்கு அதிக விளம்பரம் கொடுத்து, அரசாங்க அளவில் வயதுப் பாகுபாடு சட்ட விரோதமானது என்று அறிவிக்கப்பட்டு பல விதங்களிலும் பிரச்சாரம் செய்யப் படுகின்றது.

சில வருடங்களுக்கு முன்னர் இந்தப் பிரச்சனை ஒரு பிரச்சனையாகவே கருதப் படவில்லை? பின், ஏன் என்னைப் போன்றவர்களின் கண்களில் இது தீவிரமாகத் தெரிகின்றது? ஒருவேளை நானும் அந்த வயதானவன் எனும் பட்டியலில் இடம் பெற்றதனால் எனக்கு விழிப்புணர்ச்சி அதிகமாகியிருக்கின்றதோ?

இதற்கு இன்னுமொரு காரணமும் இருக்கலாம். இப்போதெல்லாம் மருத்துவ வசதிகள் மேலை நாட்டைப் பொறுத்தவரை மிகவும் முன்னேற்றம் அடைந்துள்ளது. மக்கள் தமது உடல் நலத்தில் மிகுந்த கவனம் எடுக்கின்றார்கள். அதனால் மேலை நாடுகளில் சராசரி மனிதனின் வாழ்வுக் காலம் நீடிக்கப்பட்டுள்ளது.

இது எதற்கு வழி வகுக்கின்றது என்றால், ஒரு மனிதனுக்கு வழங்கப்படும் ஓய்வூதியம் அவன் முன்னை விட அதிக காலத்திற்கு வாழ்வதனால் அதிக காலத்திற்கு வழங்கப்படுகின்றது. எனவே அரசாங்கத்தின் பட்ஜெட்டில் அதற்கு அதிகமாக நிதி ஒதுக்க வேண்டியுள்ளது.

அரசாங்கம் எங்கே இருந்து பணம் பெற்றுக் கொள்கின்றது ? உழைக்கும் மக்களின் சம்பளத்தில் இருந்து பெறப்படும் வரிப் பணத்திலிருந்தே அரசாங்கத்தின் பட்ஜெட் நிர்ணயிக்கப் படுகின்றது,

இங்கேதான் மீண்டும் புள்ளி விபரத்தை உற்று நோக்க வேண்டியிருக்கிறது.

ஜக்கிய இராச்சியத்தைப் பொறுத்த வரையில் 1901-ம் ஆண்டு ஒரு ஓய்வூதியம் பெறுபவருக்கு 10 வரி செலுத்துவோர் எனும் விகிததில் இருந்த மக்கள் தொகையில் இப்போ அதாவது 2005-ல் ஒரு ஓய்வூதியம் பெறுபவருக்கு 4 வரிப்பணம் செலுத்துவோர் எனும் விகிதமாக மாற்றமடைந்துள்ளதாக அரசாங்கப் புள்ளி விபரம் கூறுகின்றது.

இதே விகிதத்தில் 2050-ம் ஆண்டு இந்த விகிதாசாரம் ஒன்று ஓய்வூதியம் பெற்றவருக்கு இரண்டு வரிப்பணம் செலுத்துவோர் எனும் விகிதமாக மாற்றமடையும் என்றும் எதிர்பார்க்கப் படுகின்றது.

இதை எதிர் கொள்வதற்கான கொள்கைகளில் ஒன்றாகத்தான் இந்த வயதுப் பாகுபாட்டின் மூலம் வயதானவர்கள் என்பவர்களை வேலையிலமர்த்த கம்பெனிகள் தயங்குவதை அரசாங்கம் சாடத் தொடங்கியுள்ளது.

இங்கேதான் வயதானவர்கள் உபயோகமற்றவர்கள் என்று சமுதாயம் கணிக்கத் தொடங்குவதின் பிரதிபலிப்புதான் இந்தக் கம்பெனிகளின் தயக்கம் என்ற எண்ணம் பரவலாக இருக்கின்றது. ஒரு மனிதனுடைய உபயோகத் தன்மையை நிர்ணயிக்கும் உரிமையை யார், யாருக்குக் கொடுத்தது?

உபயோகத் தன்மை என்பது நபருக்கு நபர் வித்தியாசப் படுகின்றது என்பதே உண்மை. 20 வயதில் மிகவும் ஆர்வமாக தனது உபயோகத் தன்மையை வெளிக்காட்டும் சுபாவம் இல்லாத இளைஞனால் 50 வயதில் நேர்மாறாக மாற முடியுமா? 20-வயதில் எத்தனை ஆர்வத்தையும், சுறுசுறுப்பையும் காட்டுகின்றானோ அதேயளவு உபயோகத் தன்மையை வெளிக்காட்டும் சுபாவம் 50 வயதிலும் இருக்கத்தானே செய்யும்.

வயதானவர்களை ஒதுக்கி, அவர்களின் கருத்துக்கள் காலத்தின் மாற்றத்திற்கு உட்படாத கருத்துக்கள் என ஒதுக்கும் மனப்பான்மையே அநேக சந்தர்ப்பங்களில் காணக் கூடியதாக உள்ளது. அப்படியானல் தான் புரிந்த பணியினாலும், மற்றைய வாழ்க்கைப் பாடங்களினாலும் அந்தப் பெரியவர் அடைந்த அனுபவத்திற்கு விலையில்லாமல் போகின்றதா?

வாழ்க்கையின் நடுப்பகுதி என்று கூறப்படும் 50-களில், தனது பணியில் முழுக் கவனத்தையும் செலுத்தி, தன்னுடைய அனுபவத்தின் அனுகூலத்தை தனது கம்பெனிக்குக் கொடுக்கக்கூடிய ஒருவர், வயதின் காரணமாக சந்தர்ப்பத்தை இழப்பது என்பது நியாயமாகுமா?

அதே வேளை அனுபவம் உடையவர் என்பதானல் தொடர்ந்து 60-களிலும், 70-களிலும் வேலையைத் தக்க வைத்துக் கொண்டிருப்பதனால், இளைஞர்களின் வேலை வாய்ப்புத் தன்மைகள் குறைகின்றதா?

அன்றி, அந்த இளைஞனோ, யுவதியோ ஒரு அனுபவமிக்க மூத்தவரின் அருகில் பணிபுரியும் வாய்ப்பு பெறும் போது அவரின் அனுபவங்களின் அனுகூலத்தைப் பெற்றுக் கொள்ளும் சந்தர்ப்பம் இருக்கிறதா?

பல கேள்விகள் பிறக்கும் வேளையிலே அவற்றிற்கான விடையைத் தேடி எமது அறிவை விசாலப் படுத்திக் கொள்வோம். அதே சமயம் வயதுப் பாகுபாடு எனும் காரணியால் ஒரு அனுபவமிக்கவரின் அனுகூலத்தை சமுதாயம் இழக்கின்ற நிலை வந்தால் அதற்கு எதிராகக் குரல் கொடுக்கும் நிலைக்கு எம்மை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

ஒரு மனிதனின் உபயோகத் தன்மைக்கு ஓய்வில்லை. அது பிரயோகிக்கப்படும் சூழல்களில் மாற்றம் ஏற்படலாம். இதனால் அந்த உபயோகத் தன்மையின் உதவி நிச்சயம் சமுதாய வளர்ச்சிக்கு தேவை என்பது மறுக்க முடியாத உண்மை.

வயதானவர்கள் எனும் பட்டியலைப் போட்டு பெரியோரை ஒரு பீரோவில் வைத்து அழகு பார்க்கும் நிலைக்கு நாம் போய் விடக் கூடாது.

சமுதாயம் செழிக்க சிந்தை விரிய வேண்டும். விவாதங்கள் ஆக்கப் பூர்வமான முறையில் வலுவாக வேண்டும்.

மீண்டும் சந்திப்போம்
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

வயதானாவர்கள் உபயோகமில்லாதவர்களா? Empty Re: வயதானாவர்கள் உபயோகமில்லாதவர்களா?

Post by முரளிராஜா Mon Feb 18, 2013 12:30 pm

வயதானவர்களை மதிக்காத யாரும் முன்னேறியதாக சரித்திரம் இல்லை
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum