Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
அரிசி உடைசல் உப்புமா
தகவல்.நெட் :: மகளிர் களம் :: சமைக்கலாம் வாங்க :: காலை உணவு
Page 1 of 1 • Share
அரிசி உடைசல் உப்புமா
அரிசி உடைசல் உப்புமா
அரிசி உப்புமா, குருணை உப்புமா, அரிசி உடைசல் உப்புமா என்று சொல்லப்படும் அனைத்துமே ஒன்று தான். எங்க வீட்டில் ரவை, சேமியாவில் செய்யப்படும் உப்புமாவுக்கெல்லாம் வேலையே இல்லை. பேச்சிலர்ஸ் டேஸில் ரவா உப்புமா சாப்பிட்டு அலுத்ததால் ரவா உப்புமாவே செய்யாதே என்று சொல்லியதால் செய்வதேயில்லை. சேமியாவும் அப்படித் தான்….
அரிசி உப்புமா என்றால் எல்லோருக்குமே இஷ்டம். அதுவும் வெங்கலப் பானையில் செய்து காந்தலோடு சாப்பிட்டால் ஆஹா! சிலர் குக்கரில் வைப்பார்கள். அதெல்லாம் இங்க நடக்கவே நடக்காது… எங்க அப்பாவுக்கு வத்தக்குழம்பு, சுட்ட அப்பளம், குருணை உப்புமா என்றால் உயிர்.
இங்கு நான் சொல்லப்போகும் செய்முறை என் மாமியார் வீட்டு முறைப்படி… ஒரு சிலர் வீட்டு வழக்கம் வேறு. இதிலயும் மாற்றங்கள் செய்வார்கள்.
தேவையானப் பொருட்கள்:-
அரிசி – 1 தம்ளர்
துவரம்பருப்பு – 1 கையளவு
கடலைப்பருப்பு – 1 கையளவு
மிளகு – 1 தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
தேங்காய்துருவல் – சிறிதளவு
நெய் - சிறிதளவு
தாளிக்க:-
கடுகு – ½ தேக்கரண்டி
கடலைப்பருப்பு – 1 தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு – 1 தேக்கரண்டி
பெருங்காயம் – ¼ தேக்கரண்டி
வரமிளகாய் – 2 (அ) 3
கறிவேப்பிலை – 1 கொத்து
எண்ணெய் – 2 குழிக் கரண்டி
செய்முறை :-
கொடுக்கப்பட்டுள்ள அரிசி, துவரம்பருப்பு, மிளகு, கடலைப்பருப்பு ஆகியவற்றை மிக்சியில் போட்டு ரவை போல் பொடித்துக் கொள்ளவும். அரிசியில் சிறிதளவு தண்ணீர் தெளித்து பிசறி வைத்து ஐந்து நிமிடம் கழித்து பருப்புகள், மிளகுடன் பொடித்தால் ஒன்று போல பொடிக்க வரும். எப்படி வசதியோ அப்படி செய்யலாம்.
அடுப்பில் வெங்கலப் பானையை வைத்து எண்ணெய் விட்டுக் கொள்ளவும். எண்ணெய் சூடானதும் கடுகு போட்டு வெடிக்க விடவும். அடுத்து வரிசையாக கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, இரண்டாக கிள்ளிய வரமிளகாய், கறிவேப்பிலை, இவற்றுடன் பெருங்காயம் சேர்க்கவும். பொன்நிறமாக வறுபட்டதும் தண்ணீர் விட வேண்டும். 1 தம்ளர் அரிசிக்கு 2 1/2 தம்ளர் தண்ணீர் விடலாம். தேவையான அளவு உப்பு சேர்க்கவும். கொதிக்கும் போது சிறிதளவு தேங்காய் துருவல் சேர்க்கவும். இது விருப்பம் தான்.
தண்ணீர் கொதிக்கும் போது, அடுப்பை மிதமான தணலில் வைத்து, பொடி செய்த அரிசி ரவை கலவையை ஒரு கையால் போட்டுக் கொண்டே ஒரு கையால் கிளற வேண்டும். விட்டு விட்டால் கட்டி தட்டி விடும். கலவை தண்ணீருடன் சேர்ந்து கெட்டிப் பட்டதும், சரியான அளவு உள்ள மூடியை போட்டு மேலே ஒரு பாத்திரத்தில் சிறிதளவு தண்ணீர் வைத்துக் கொள்ளவும். தேவைப்பட்டால் சூடான இந்த தண்ணீரை சேர்த்து கிளற வசதியாக இருக்கும்.
அவ்வப்போது மூடியை எடுத்து கிளறி விடலாம். மேலோட்டமாக கிளற வேண்டும். அடி வரை கிளறினால் அடிக்காந்தல் கிடைக்காது. அடுப்பும் குறைந்த தணலில் தான் இருக்க வேண்டும். நன்றாக வெந்தாலும் அடிக் காந்தலுக்காக சிறிது நேரம் விடவும். ஏறக்குறைய இருபது நிமிடங்களுக்கு பிறகு நமக்கு சுவையான அரிசி உப்புமா தயாராக இருக்கும். காந்தலானவுடன் மணமே உங்களை அடுப்பை நிறுத்த அழைக்கும். மேலே சிறிதளவு நெய் விட்டால் வாசனையாக இருக்கும். இதுவும் விருப்பமே.. ஐந்து நிமிடம் உலைப்பாற விட்டு விட்டு கபளீகரம் செய்யலாம்…
பின்குறிப்பு – 1 இதற்கு தொட்டுக் கொள்ளவென்று தனியாக எதுவும் கட்டாயமில்லை. சர்க்கரை, நெய், ஊறுகாய், கொத்சு, சாம்பார் என எதுவோடும் ஒத்துப் போகும்.
பின்குறிப்பு – 2 வெங்கலப் பானையில் செய்வதால், செய்த சிறிது நேரத்தில் சாப்பிட்டு விடவும். நீண்ட நேரம் வைத்திருக்கக் கூடாது.
பின்குறிப்பு – 3 அடுப்பை நிறுத்திய ஐந்து நிமிடங்கழித்து உப்புமாவை வேறு பாத்திரத்தில் மாற்றி விட்டு அடிக்காந்தலை பெயர்த்து எடுத்தால் வந்து விடும். கிரிஸ்பியாக பிரமாதமாக இருக்கும்.
பின்குறிப்பு - 4 எண்ணெய் கொஞ்சம் தாராளமாக சேர்த்தால் சுவையும் கூடுதலாகும்….

[You must be registered and logged in to see this link.]

mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
தகவல்.நெட் :: மகளிர் களம் :: சமைக்கலாம் வாங்க :: காலை உணவு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum