Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
களவாணி - கண்கவர் கள்வன்
Page 1 of 1 • Share
களவாணி - கண்கவர் கள்வன்
Comments |
காதலும், களவாணித்தனமும் கலந்த சுவாரஸ்யமான கதை.
தஞ்சை மாவட்டத்திலுள்ள அந்த இரு சிற்றூர்களுக்கு இடையே அடிக்கடி பிரச்சினை. காரணம், களவுபோன சாமி சிலை. அதிலும் களவாணித்தனம் செய்து கொண்டு திரியும் விமலுக்கும் எதிர் ஊரில் ரவுடித்தனம் செய்யும் திருமுருகனுக்கும் அடிக்கடி மோதல். இந்நிலையில் திருமுருகனின் தங்கை ஓவியாவை காதலிக்கிறார் விமல். இந்த காதலுக்கு திருமுருகன் மட்டுமின்றி, அவர்கள் ஊரே எதிர்ப்பு காட்டி நிற்கிறது. இந்நிலையில் திருமுருகனின் அத்தை மகளை, விமலின் நண்பன் காதலிப்பதாகச் சொல்ல, குடிபோதையில் அந்த ஊருக்குள்ளே புகுந்து அந்த பெண்ணை தூக்கிகொண்டு வருகிறார்கள் விமலும், அவருடைய நண்பர்களும்.
இதனால் விமலின் மீது கோபம் கொள்ளும் திருமுருகன், விமலை தீர்த்துக்கட்ட நேரம் பார்த்துக்கொண்டிருக்கிறார். இதற்கிடையில் துபாயில் இருந்து வரும் விமலின் தந்தை இளவரசு, விமலின் வில்லங்கதனத்தை பார்த்து கோபம்கொள்கிறார். அப்பாவின் கோபம், காதலியின் அண்ணனின் பகை இவற்றையெல்லாம் சமாளித்து, காதலியை விமல் எப்படி கரம் பிடிக்கிறார் என்பதுதான் படத்தின் இறுதிக்காட்சி.
"பசங்க" விமல் இன்னும் கொஞ்சம் முயற்சித்தால் முன்னணி வரிசைக்கு வந்து விடலாம். நம்பிக்கை இருக்கிறது. சரக்கடித்து விட்டு சலம்புகிற இடம், பஞ்சாயத்து கஞ்சா கருப்பு பாலிடால் குடித்துவிட்டதாக புரளி கிளப்புகிற இடம், காதலி ஓவியாவை மடக்கி "கல்யாணம் பண்ணிக்கிறேன்" என சொல்லச் சொல்கிற இடம் இப்படி நிறைய இடங்களில் விமலுக்கு பாஸ் மார்க் போடலாம்.
கதாநாயகி ஓவியாவுக்கு இதுதான் முதல் படம். அச்சு அசலாய் கிராமத்து மாணவியாய் ஜொலிக்கிறார். காதல் வயப்பட்டு, "உன்னை கட்டிக்கிறேன்" என சொல்லும்போது லபக்கென இளசு இதயங்களில் டேரா போடுகிறார். சிரிக்கும் போது, வெட்கப்படும் போது எல்லாவற்றிலும் வெளுத்து வாங்கும் இவர் கோபமாக பேசும் காட்சிகளில் செயற்கை இழை தட்ட நடித்திருக்கிறார்.
விமலின் அப்பாவாக வரும் இளவரசு, கோபக்காரராக சித்தரித்திருக்கும் இவரின் கதாபாத்திரம் சில இடங்களில் காமெடி செய்து சிரிக்கவும் வைக்கிறது. நாளுக்கு நாள் சரண்யா பொன்வண்ணனின் நடிப்பு விலைவாசி ரேஞ்சுக்கு உயர்ந்து கொண்டே போகிறது.
அமீரின் படங்களுக்குப் பிறகு மிகவும் இயல்பாக கஞ்சா கருப்பு நடித்திருப்பது இந்தப்படத்தில்தான். கோர்ட்டுக்கு போகாமயே டைவர்ஸ் வாங்கிக் குடுத்தீட்டீங்களே என புலம்பும் போதும், இறுதிக்காட்சியில் கார் கண்ணாடியை உடைத்துவிட்டு கல்கண்டை ஏன் தலைல போட்டு வெச்சிருக்கீங்க என கேட்கும்போதும் கஞ்சா கருப்பு காமெடி தர்பார் நடத்துகிறார்.
நாயகியின் அண்ணனாக நடித்திருக்கும் இப்படத்தின் இணை இயக்குனர் திருமுருகனும் தன் பங்கிற்கு முத்திரை பதித்திருக்கிறார். இவரின் அறிமுக காட்சியிலேயே அதிரடியாக என்ட்ரி கொடுக்கும் இவர், நடிப்பிலும் அசத்தி இருக்கிறார்.
கிராமம் என்றாலே பெருசுகளின் வெட்டிப் பேச்சு, அருவா சண்டை என்றெல்லாம் இல்லாமல், கலகலப்பாக படத்தை நகர்த்தியிருக்கிறார் சற்குணம். அதுவும் இவர் உருவாக்கிய கதாபாத்திரங்கள், இரண்டு கிராமங்களை இணைக்கும் வயல்வெளி நடுவே செல்லும் சாலை, என அனைத்திலும் எதார்த்தத்தை கையாண்டுள்ளார்.
முதல் பாதியில் சில காட்சிகளுக்கு கத்தரி போட்டிருக்கலாம். அதிலும் ஓவியா பள்ளிக்கு செல்வதும் விமல் அவரை வழிமறிப்பதும் என அடிக்கடி காட்டுவதை தவிர்த்திருக்கலாம். படம் நெடுக காமெடியாகவே போவதால் காதலில் அழுத்தம் காட்டத் தவறி விட்டார் இயக்குனர். அதனால் ஜோடிகள் பிரியும்போதும் சரி, சேரும்போதும் சரி ஒரு ஒட்டுதலும் நமக்கு வரவில்லை. திருமுருகன் யாருக்கு என்ன உறவு என்பது இடைவேளைக்கு பின்பே தெரிகிறது. இருந்தாலும் இரட்டை அர்த்தம் இல்லாத வசனங்களை இடம்பெறச் செய்ததற்காக இயக்குனரை பாராட்டலாம்.
ஓம்பிரகாஷின் ஒளிப்பதிவில் வயல்வெளி நிறைந்த தார் சாலை, அழகாக தெரிகிறது. சேஸிங் காட்சிகளிலும் இவருடையை கேமரா விளையாடியிருக்கிறது. எஸ்.எஸ்.குமரனின் இசையில் பாடல்கள் சுமார். பின்னணி இசை பிரமாதம்.
கதையில் புது விஷயம் இல்லையென்றாலும் பன்ச் டயலாக் மற்றும் பில்டப் இல்லாத, நகைச்சுவை இழையோட்டமான திரைக்கதையை அரிவாள்-வெட்டு குத்து இல்லாமல், அமைதியான ஒரு படமாக தந்ததற்காக அறிமுக இயக்குனர் சற்குணத்தை வாழ்த்தி வரவேற்போம்.
களவாணி - கண்கவர் கள்வன்
நடிகர்கள்
விமல், ஓவியா, சரண்யா பொன்வண்ணன், இளவரசு, கஞ்சா கருப்பு, திருமுருகன்
இசை
எஸ்.எஸ்.குமரன்
இயக்கம்
ஏ.சற்குணம்
தயாரிப்பு
நசீர்
Guest- Guest
Similar topics
» அட களவாணி கிளிபுள்ள...
» அட களவாணி கிளிபுள்ள...
» கண்கவர் கட்டடங்கள்
» கண்கவர் மரங்கள்
» கண்கவர் கார போண்டா
» அட களவாணி கிளிபுள்ள...
» கண்கவர் கட்டடங்கள்
» கண்கவர் மரங்கள்
» கண்கவர் கார போண்டா
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|