தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


கொசு(நுளம்பு) விரட்டிகளும் கடிக்கும்! - ஓர் எச்சரிக்கை ரிப்போர்ட்!

View previous topic View next topic Go down

கொசு(நுளம்பு) விரட்டிகளும் கடிக்கும்! - ஓர் எச்சரிக்கை ரிப்போர்ட்!  Empty கொசு(நுளம்பு) விரட்டிகளும் கடிக்கும்! - ஓர் எச்சரிக்கை ரிப்போர்ட்!

Post by பூ.சசிகுமார் Mon Mar 18, 2013 11:38 pm

சின்னக் கொசு(நுளம்பு)தான்... ஆனால், வலி, வியாதி, தூக்கமின்மை என எப்படி எல்லாம் இம்சிக்க முடியுமோ அத்தனையையும் செய்துவிடுகிறது. டெங்கு, மலேரியா, சிக்குன்குனியா (’சிக்கன்’குனியா அல்ல), யானைக்கால் நோய் போன்றவற்றைப் பரப்பி உலகம் முழுக்கத் தன் ஆளுமையைக் கடைவிரிக்கும் சக்தியாகவே கொசுக்கள் மாறிவிட்டன. மொத்தமாக 2,700 வகைக் கொசுக்கள் இருப்பதாகச் சொல்கிறார்கள். ஆனால், கொசுக்களிடம் இருந்து நம்மைக் காப்பாற்ற சுருள், லிக்விட், மேட் போன்ற சில விஷயங்கள்தான் இருக்கின்றன. ஆனால், அவையும் நம்மை ஆபத்தை நோக்கியே தள்ளும் என எச்சரிக்கிறார்கள் மருத்துவர்கள்.

''கொசுக்களை விரட்டக் கடைகளில் விற்கப்படும் கொசுவத்தி, மேட், லிக்விட் போன்றவை நம் ஆரோக்கியத்துக்குப் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. கொசுவத்திச் சுருள், லிக்விட் என எல்லாக் கொசு விரட்டிகளிலும் பைரேத்ரின்(pyrethrin) எனும் வேதிப்பொருள் கலந்து இருக்கும். கொசுவத்திச் சுருளில் இருந்து வரும் புகையையோ அல்லது லிக்விட் வாசனையையோ சுவாசிப்பவர்களுக்கு சைனஸ் அலர்ஜி ஏற்படலாம். இதனால் ஆஸ்துமா நோய் உண்டாகும் வாய்ப்பும் இருக்கிறது. ஏற்கெனவே ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நோயின் வீரியம் இன்னும் அதிகமாகி, வாணலிக்குத் தப்பி அடுப்பில் விழுந்த கதையாகிவிடும். சின்னக் கொசுக்கடிக்குப் பயந்து கொசு விரட்டிகளைப் பயன்படுத்தினால், அது பெரிய நோய்க்கு வழிவகுத்துவிடும். கொசுவைக் கட்டுப்படுத்தக் கொசுவலைதான் சிறந்தது. கொசு பேட் பயன்படுத்தியும் கொசுக்களை அழிக்கலாம்' என்கிறார் சென்னையைச் சேர்ந்த ஆஸ்துமா, அலர்ஜி சிறப்பு மருத்துவர் ஸ்ரீதரன்.
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

கொசு(நுளம்பு) விரட்டிகளும் கடிக்கும்! - ஓர் எச்சரிக்கை ரிப்போர்ட்!  Empty Re: கொசு(நுளம்பு) விரட்டிகளும் கடிக்கும்! - ஓர் எச்சரிக்கை ரிப்போர்ட்!

Post by பூ.சசிகுமார் Mon Mar 18, 2013 11:38 pm

''கொசு(நுளம்பு)வத்திகளைப் பயன்படுத்தினால்தான் பாதிப்பு, கிரீம் பயன்படுத்தினால் பாதிப்பு இருக்காது என்கிறார்களே?'' என்ற கேள்வியுடன் தோல் சிகிச்சை மருத்துவர் பிரியாவை சந்தித்தோம். ''கொசு மேட்டில் இருந்து வெளிப்படும் ரசாயனம், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் பாதிக்கும். கொசுவத்திச் சுருள், லிக்விட் என எல்லாவற்றிலும் பாதிப்புகள் இருக்கின்றன. கொசு விரட்டிக்கான கிரீம்களைப் பயன்படுத்தினால் எந்தப் பாதிப்பும் இருக்காது. மிகச் சிலருக்கு மட்டும் அது தோல் அலர்ஜியை ஏற்படுத்தலாம். நமக்கு அலர்ஜி இருக்குமோ என்று சந்தேகப்படுபவர்கள் அலர்ஜிக்கான சின்ன பேட்ச் டெஸ்ட் எடுத்துவிட்டு, கிரீம்களைப் பயன்படுத்துவது பாதுகாப்பானது. காடு, மலை, நீர்நிலைகள் இருக்கும் இடங்களுக்குச் சுற்றுலா அல்லது ட்ரெக்கிங் அனுபவத்துக்காகச் செல்லும்போது, கொசு விரட்டிக்கான கிரீம்களை அவசியம் எடுத்துச் செல்ல வேண்டும். இதனால் தோலுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது'' என்றார் விளக்கமாக.

கொசு(நுளம்பு)வைக் கட்டுப்படுத்தச் சில இயற்கை வழிகள்

>>தேங்காய் நார்களை எரித்தால், அதில் இருந்து வரும் புகை கொசுக்களை விரட்டும். மாலை நேரத்தில் தேங்காய் நார்களை எரித்து வீடு முழுக்க அதன் புகையைக் காண்பித்தால், ஒரு கொசுகூட இருக்காது. இயற்கை நார்களின் புகையால், உடலுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை.

>>வீட்டின் ஒரு பக்கத்தில் நெருப்பு வைத்து அதில் மாம்பூக்களைப் போட்டால், அதில் இருந்து வரும் புகை கொசுக்களை விரட்டிவிடும்.

>> வேப்பிலை, நொச்சி இலை ஆகியவற்றை உலர்த்தி, நெருப்பில் போட்டுப் புகைக்கவைத்தால், கொசுத் தொல்லை இருக்காது.

>> நாய்த்துளசிப் பூவை உலர்த்தித் தூள் செய்து சாம்பிராணியுடன் சேர்த்துப் புகைக்கவைத்தால், கொசுத் தொல்லை தீரும்.

>> நம்மை இருட்டிலும் அடையாளம் பார்த்துக் கடிக்கும் திறன் கொசுக்களுக்கு உண்டு. எனவே, வேறு வாசனை வரும் திரவியங்களை நம் உடலில் பூசிக்கொண்டாலும் கொசுக்கடியில் இருந்து தப்பலாம்.

>> பூண்டு வாசனை கொசுவுக்கு ஆகாது. நிறையப் பூண்டு சாப்பிட்டால், அதன் மணத்திலேயே கொசு ஓடிவிடும்.

>> விளக்கு எரிக்க கேரளாவில் வேப்பெண்ணெய், விளக்கெண்ணெய், இலுப்பெண்ணெய், நல்லெண்ணெய், நெய் போன்றவற்றை இன்றும் பயன்படுத்துகின்றனர். இதை நாமும் பயன்படுத்தினால் கொசு பக்கத்தில் வரவே பயப்படும்.

>> கொசு(நுளம்பு)வை ஒழிக்க ஜன்னல்களில் கொசு(நுளம்பு)வலையை மாட்டிவிடலாம். கொசுவலையில் சிறிய துளைகள் ஏற்பட்டிருந்தால், அவற்றை உடனே அடைத்துவிடுவது நல்லது.

பிறந்த குழந்தைகள் மேட் புகையைச் சுவாசிக்கும் சூழலுக்கு ஆளானால், வலிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. சிலருக்கு மலட்டுத்தன்மை ஏற்படும். நுரையீரல் புற்றுநோய் உருவாவதற்கான வாய்ப்புகள்கூட இருக்கின்றன என்று லக்னோ மருத்துவப் பல்கலைக்கழகத்தின் ஆய்வறிக்கை கூறுகிறது.

ஒரு கொசு(நுளம்பு)வத்தி எரியும்போது, அது வெளியிடும் சாம்பலின் அளவு 75 முதல் 137 சிகரெட் எரிப்பதனால் வரும் சாம்பலுக்குச் சமம்.

தகவல் - க.நாகப்பன், விகடன்
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

கொசு(நுளம்பு) விரட்டிகளும் கடிக்கும்! - ஓர் எச்சரிக்கை ரிப்போர்ட்!  Empty Re: கொசு(நுளம்பு) விரட்டிகளும் கடிக்கும்! - ஓர் எச்சரிக்கை ரிப்போர்ட்!

Post by திருநாவுக்கரசர் Tue Mar 19, 2013 12:21 am

நுளம்பு என்றால் கொசுவா?
திருநாவுக்கரசர்
திருநாவுக்கரசர்
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 56

Back to top Go down

கொசு(நுளம்பு) விரட்டிகளும் கடிக்கும்! - ஓர் எச்சரிக்கை ரிப்போர்ட்!  Empty Re: கொசு(நுளம்பு) விரட்டிகளும் கடிக்கும்! - ஓர் எச்சரிக்கை ரிப்போர்ட்!

Post by பூ.சசிகுமார் Tue Mar 19, 2013 1:10 am

திருநாவுக்கரசர் wrote:நுளம்பு என்றால் கொசுவா?


ஆமாம் அண்ணா

இதுவே தூய தமிழ்

நான் சொல்வது சரி தானே
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

கொசு(நுளம்பு) விரட்டிகளும் கடிக்கும்! - ஓர் எச்சரிக்கை ரிப்போர்ட்!  Empty Re: கொசு(நுளம்பு) விரட்டிகளும் கடிக்கும்! - ஓர் எச்சரிக்கை ரிப்போர்ட்!

Post by திருநாவுக்கரசர் Tue Mar 19, 2013 1:16 am

பூ.சசிகுமார் wrote:
திருநாவுக்கரசர் wrote:நுளம்பு என்றால் கொசுவா?
ஆமாம் அண்ணா
இதுவே தூய தமிழ்
நான் சொல்வது சரி தானே
நன்றிகள்.
திருநாவுக்கரசர்
திருநாவுக்கரசர்
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 56

Back to top Go down

கொசு(நுளம்பு) விரட்டிகளும் கடிக்கும்! - ஓர் எச்சரிக்கை ரிப்போர்ட்!  Empty Re: கொசு(நுளம்பு) விரட்டிகளும் கடிக்கும்! - ஓர் எச்சரிக்கை ரிப்போர்ட்!

Post by பூ.சசிகுமார் Tue Mar 19, 2013 1:20 am

திருநாவுக்கரசர் wrote:
பூ.சசிகுமார் wrote:
திருநாவுக்கரசர் wrote:நுளம்பு என்றால் கொசுவா?
ஆமாம் அண்ணா
இதுவே தூய தமிழ்
நான் சொல்வது சரி தானே
நன்றிகள்.


இலங்கையில் அவ்வாறு தான் கொசுவை அழைப்பார்கள் அண்ணா நண்பேன்டா
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

கொசு(நுளம்பு) விரட்டிகளும் கடிக்கும்! - ஓர் எச்சரிக்கை ரிப்போர்ட்!  Empty Re: கொசு(நுளம்பு) விரட்டிகளும் கடிக்கும்! - ஓர் எச்சரிக்கை ரிப்போர்ட்!

Post by ரானுஜா Tue Mar 19, 2013 4:01 pm

பயனுள்ள பகிர்வுக்கு நன்றி

என் வீட்டில் கொசு இல்லையே சோகம்
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

கொசு(நுளம்பு) விரட்டிகளும் கடிக்கும்! - ஓர் எச்சரிக்கை ரிப்போர்ட்!  Empty Re: கொசு(நுளம்பு) விரட்டிகளும் கடிக்கும்! - ஓர் எச்சரிக்கை ரிப்போர்ட்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics
» கொசு விரட்டிகளும் கடிக்கும்! - ஓர் எச்சரிக்கை
» தூக்கம் குறைந்தால் பிபி எகிறும்... ஒரு எச்சரிக்கை ரிப்போர்ட்
» செல்போனில் அதிகம் பேசினால் புற்றுநோய் ஆபத்து: எச்சரிக்கை ரிப்போர்ட்
» தூக்க மாத்திரை போடுறீங்களா? புற்றுநோய் வரும்! : எச்சரிக்கை ரிப்போர்ட்
» டிவி, வாட்ஸ் அப் மூலம் உளவு பார்க்கப்படலாம்: எச்சரிக்கை ரிப்போர்ட்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum