Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
சாக்லேட் சாப்பிட்டால் ஹார்ட் அட்டாக் வராதாமே!
Page 1 of 1 • Share
சாக்லேட் சாப்பிட்டால் ஹார்ட் அட்டாக் வராதாமே!
சாக்லேட் சாப்பிட்டால் பற்களில் சொத்தை விழும் என்று குழந்தைகளை பெற்றோர் பயமுறுத்தி வந்த காலம் போய், “சாக்லேட் சாப்பிட்டால் ஹார்ட் அட்டாக் வராது’ என மருத்துவ நிபுணர்களே கூறும் காலம் வந்துவிட்டது.
அமெரிக்காவில் கேம்பிரிட்ஜ் பல்கலையில் இதய நோய் வந்த, வராத ஒரு லட்சம் பேரை வைத்து செய்த ஆய்வில் சாக்லேட் சாப்பிட்டவர்களுக்கு 70 சதவீதத்துக்கும் மேல் இதயநோய் பாதிப்பு இல்லையாம்.
சாக்லேட்டில் கலக்கப்படும் கோகோவில் நோய் எதிர்ப்புச் சக்தி (பிளேவோனாய்ட்ஸ்) அதிகம் இருப்பதால் ரத்தத்தில் அதிகப்படியான கொழுப்பை அவை உறிஞ்சி விடுகிறதாம். அதனால் இதயநோய் வர வாய்ப்பில்லாமல் போகிறது என்கிறார்களாம். 20 முதல் 30 கிராம் சாக்லேட் சாப்பிட்டு வந்தால் ஹார்ட் அட்டாக் உள்ளிட்ட இதய நோய்கள் வராதாம்.
அப்படியானால் இதய நோய் வந்தவர்கள் வெறும் சாக்லேட் சாப்பிட்டே நோயை விரட்டி விடலாமா?
அப்படி அர்த்தம் எடுத்துக் கொள்ளக் கூடாது. சாக்லேட் சாப்பிடுவதால் இதயநோய் வராமல் இருக்க வாய்ப்புகள் அதிகம் அவ்வளவுதான். கலோரி குறைந்த தரமான சாக்லேட்டுகளில் இருக்கும் பொருட்கள் ரத்த ஓட்டத்தை ஒழுங்கு படுத்தி இதயநோயைத் தடுக்க உதவும் என்பதுதான் ஆய்வுகளின் முடிவும்.
அதனால்தான் காதலர்கள் சாக்லேட்டை அதிகளவு பரிசாகத் தருகிறார்களோ?
ஆமாம். தங்கள் மனம் கவர்ந்தவர்களின் இதயத்தை சாக்லேட் பாதுகாக்கிறது என்பது அவர்களுக்கு நல்ல விஷயம்தானே.
அதைவிட, காதல் வயப்படும்போது நம் மூளையில் இயல்பாக சுரக்கும் ஃபினைல் எதிலமைன் என்ற பொருள் சாக்லேட் சாப்பிடும்போதுதான் அதிகளவு சுரக்கிறதாம். அதனால்தான் மகிழ்ச்சியை அதிகப்படுத்தவும், காதலை அதிகரிக்க வைக்கவும் சாக்லேட்டை விரும்பி பரிசாக கொடுக்கிறார்கள்.
சரி, சாக்லேட் சாப்பிட்டால் குழந்தைகளின் பற்களில் சொத்தை விழுமா? விழாதா?
சாக்லேட் சாப்பிடுவதால் பற்களில் சொத்தை விழாது. அதிகளவு சாக்லேட் சாப்பிட்ட குழந்தைகள், அவை பற்களின் இடுக்குகளில் ஒட்டியிருந்தால் அதை சுத்தம் செய்யாமல் விட்டு விடுகிறார்கள். இதனால் சாக்லேட்டில் உள்ள இனிபபானது பற்களின் இடுக்குகளில் அதிக நாட்கள் தங்கி விடுகின்றன. அதுதான் பற்களை அரித்த சொத்தை விழக் காரணமாகிறது. சாதாரண ஆரோக்கியமான உணவுப் பொருட்கள் பற்களின் இடுக்குகளில் ஒட்டிக் கொண்டாலும், அதை நீக்காமல் விட்டு விட்டால், கண்டிப்பாக சொத்தை விழும். எனவே சாக்லேட் சாப்பிட்டதும், பெரியவர்கள் குழந்தைகளை வாய் கொப்பளிக்க வைக்க வேண்டும். முடிந்தால் வெறும் பிரஷ் கொண்டு பல் துலக்க வைக்கலாம். இதுதான் சொத்தை விழுவதைத் தடுக்க உதவும்.
கர்ப்பிணிகள் சாக்லேட் சாப்பிடலாமா?
குறைப் பிரசவம் நடைபெறாமல் தடுக்க, கர்ப்பிணிகள் அடிக்கடி சாக்லேட் சாப்பிட வேண்டும் என்று கண்டு பிடித்திருக்கிறார்கள். சும்மா இல்லை! 2500 கர்ப்பிணிகளிடம் இந்த ஆய்வை மேற்கொண்ட பின்னரே அமெரிக்க யேல் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் இந்த உண்மையை வெளியிட்டிருக்கிறார்கள். பொதுவாக, வலிப்பு நோய், ரத்தம் உறைதல், கல்லீரல் பாதிப்பு, சிறு நீரகக் கோளாறு போன்றவற்றால்தான் தாயின் வயிற்றில் இருக்கும் குழந்தைகள் பாதிக்கப்பட்டு இறக்கிறார்கள். இதனால்தான் குறைப்பிரவசங்கள் நிகழ்கின்றன. சாக்லேட்டில் உள்ள ரசாயனப பொருட்கள் இதுபோன்ற பிரச்னைகள் நீங்க உதவுவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளார்கள். அதனால் வாரத்திற்கு 3 நாட்கள் சாக்லேட் சாப்பிடச் சொல்லி அறிவுறுத்துகிறார்கள்.
ஒரு நாளைக்கு எவ்வளவு சாக்லேட் சாப்பிடலாம்?
ஒரு நாளைக்கு 20 கிராமுக்கு குறைவாக சாக்லேட் சாப்பிடுவது நல்லது. குறைந்த அளவு சாக்லேட்டால்தான் நன்மை அதிகம். அதிகமான புரதச் சத்தும் விட்டமின்களும் சிறிதளவு சாக்லேட்டிலேயே அடங்கியுள்ளது. எனவே அளவுக்கு விஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பது சாக்லேட் விஷயத்திலும் உண்மைதான்.
அதிகளவு சாக்லேட் சாப்பிட்டால் என்ன ஆகும்?
கடைகளில் விற்கு சாக்லேட்களில் 100 கிராமிற்கு 500 கலோரிகள் உள்ளதாகக் கூறப்படுகிறது. அதை அதிகளவு சாப்பிட்டால் உடல் எடை கூடவும் சர்க்கரை நோய் (டயாபடீஸ்) ஏற்படவும் வாய்ப்புகள் அதிகம் என்கிறார்கள். எனவே கலோரி குறைந்த தரமான சாக்லேட்டுகளை குறைவாக எடுத்துக் கொண்டால் மட்டுமே மேலே சொன்ன நன்மைகள் கிட்டும்.
வேறு என்ன நன்மைகள் சாக்லேட்டில் உள்ளன?
பக்கவாதம் நீங்க: சாக்லேட் சாப்பிடுவதால் பக்கவாதம் வராமல் தடுக்க அதிக வாய்ப்பு உண்டு. அதிக கிரீம் கொண்ட டார்க் சாக்லேட்டில் எபிகாடசின் என்ற பொருள் உள்ளது. அது நரம்பு செல்களுக்கு நன்மை தரக்கூடியது. அதன் மூலம் பக்கவாதம் ஏற்படாமல், மூளை பாதிப்பையும் குறைக்கலாம் என்கிறார்கள். அதனால் டார்க் சாக்லேட் அதிகம் சாப்பிடலாம்.
வயதான தோற்றத்தை நீக்க: தோல் சுருக்கங்களால் தான் நமக்கு வயதான தோற்றம் ஏற்படுகிறது. புகை பிடிப்பது, தூக்கமின்மை, மன அழுத்தம், சுற்றுச்சூழலால்தான் இந்த பிரச்னை. இதற்கு தினமும் 20 கிராம் சாக்லேட் சாப்பிட்டு, வயதான தோற்றத்தைத் தள்ளிப் போடலாம் என்கிறார்கள்.
கெட்ட கொழுப்பை நீக்க: சாக்லேட்டிலும் கொழுப்புச் சத்து உள்ளது. அது நல்ல கொழுப்பாம். அது நம் ரத்தத்தில் உள்ள எல்.டி.எல். என்ற கெட்ட கொழுப்பை அதிகரிக்க விடாமல், அதன் அளவை குறைக்கவும் செய்கிறதாம்.
சோர்வை நீக்க: ஒரு காபி, ஒரு டீ சாப்பிடுவதால் வரும் புத்துணர்வைவிட, ஒரு சராசரியான சாக்லேட் துண்டில் புத்துணர்வு அதிகம் என்கிறார்கள்.
புற்றுநோயைத் தடுக்க: சாக்லேட்டில் உள்ள ஆண்டி ஆக்ஸிடெண்டண புற்றுநோயைக் கூட தடுக்கும் குணம் கொண்டதாம்.
சரி, சாக்லேட்டால் தீங்கே இல்லையா?
சாக்லேட்டை நீங்கள் சாப்பிடும் அளவில்தான் அது நன்மையா? தீமையா? என்று தெரியும். அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் மட்டுமே சாக்லேட் தீங்கானது. ஆனாலும் அதிகமாக காபி சாப்பிடுவதைவிட அது தீங்கானது அல்ல.
- இரா. மணிகண்டன்

Re: சாக்லேட் சாப்பிட்டால் ஹார்ட் அட்டாக் வராதாமே!
சாக்லேட்டைப் பார்த்து கேக்கனும் நீ நல்லவனா கெட்டவனா
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Re: சாக்லேட் சாப்பிட்டால் ஹார்ட் அட்டாக் வராதாமே!
தெரியலையே........................!!!ரானுஜா wrote:சாக்லேட்டைப் பார்த்து கேக்கனும் நீ நல்லவனா கெட்டவனா
Re: சாக்லேட் சாப்பிட்டால் ஹார்ட் அட்டாக் வராதாமே!
மகா பிரபு wrote:தெரியலையே........................!!!ரானுஜா wrote:சாக்லேட்டைப் பார்த்து கேக்கனும் நீ நல்லவனா கெட்டவனா
நீங்க சாக்லேட்டா
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Re: சாக்லேட் சாப்பிட்டால் ஹார்ட் அட்டாக் வராதாமே!
மகா பிரபு wrote:நான் சாக்லேட் மாதிரி இனிப்பானவன்..
சில சாக்லேட் கசக்குமே
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Re: சாக்லேட் சாப்பிட்டால் ஹார்ட் அட்டாக் வராதாமே!
திங் பாசிடிவ்..ரானுஜா wrote:மகா பிரபு wrote:நான் சாக்லேட் மாதிரி இனிப்பானவன்..
சில சாக்லேட் கசக்குமே
Re: சாக்லேட் சாப்பிட்டால் ஹார்ட் அட்டாக் வராதாமே!
மகா பிரபு wrote:திங் பாசிடிவ்..ரானுஜா wrote:மகா பிரபு wrote:நான் சாக்லேட் மாதிரி இனிப்பானவன்..
சில சாக்லேட் கசக்குமே
நாங்க நெகடிவாவும் யோசிப்போம்
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Re: சாக்லேட் சாப்பிட்டால் ஹார்ட் அட்டாக் வராதாமே!
முரளிராஜா wrote:சாப்ப்ட்டுடுவோம்
உடம்புல சர்க்கரைய வெச்சிக்கிட்டு எதுக்கு இந்த வீண் பரிசோதனை தாத்தா?!
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Similar topics
» ஹார்ட் அட்டாக் தடுப்பது எப்படி?
» குப்பைகளை எரித்தால் ஹார்ட் அட்டாக் வரும்
» இயர் அட்டாக் தெரியுமா?
» ஸ்ருதிஹாசனை ‘அட்டாக்’ செய்யும் சமந்தா!
» இதயத்தைக் காக்கும் சாக்லேட்!

Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|