Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
நம்பிக்கையின் இரு பலவீனங்கள்
Page 1 of 1 • Share
நம்பிக்கையின் இரு பலவீனங்கள்
நம்பிக்கையின் இரு பலவீனங்கள்
நம்பிக்கை (BELIEVE) என்பது வாழ்க்கையின் பலம் என்பது தான் நாம் கற்றதும் கற்றுக்கொண்டிருப்பதும். நம்பிக்கை இருந்தால் அனைத்தையும் சாதிக்கலாம், அனைத்திலும் வெற்றி அடையலாம் என்பது தினம் தினம் பல வழிகளில் பலரிடமிருந்து பெற்றுக்கொள்ளும் தகவலாக அமைகின்றது. குழந்தைகள், சிறுவர்கள், இளைஞர்கள், முதியவர்கள் என வாழ்வில் எந்த நிலையில் இருந்தாலும் இந்த நம்பிக்கைதான் வாழ்க்கை என்று போதிக்கப்படுகிறார்கள். இங்கே நான் போதனை என்று கூறுவதற்கான காரணம் இந்த நம்பிக்கை என்பது வார்த்தைப் பரிமாற்றமாக அமைவது தான். ஏனெனில் நம்பிக்கையின் அடித்தளம் தெளிவுபடுத்தப்படாமல் கொடுக்கப்படுவதாகவும் ஏற்றுக்கொள்ளப் படுவதாகவும் இருப்பதுதான் காரணமாக அமைகின்றது.
இந்த நம்பிக்கை என்ற சொல்லைப் பயன்படுத்துபவர்கள் அனைவரும் மற்றவர்களுக்குப் புத்தி சொல்பவர்களாக இருப்பார்கள். தங்களை அறிவு ஜீவிகளாகக் காட்டிக்கொள்வதற்கு இவர்கள் பயன்படுத்தும் சொல்லாயுதம் தான் இந்த நம்பிக்கை எனும் சொல். உன்னை நம்பு, உலகை நம்பு, கடவுளை நம்பு என எல்லாவற்றையும் நம்பு என்ற போதனைகள் எமது மண்டைக்குள் மிக இலகுவாகப் புகுந்து விடுகின்றன. அத்துடன் மிக இறுக்கமாகவும் பதிவாகிவிடுகின்றன.
நம்பிக்கை என்றால் என்ன? அதற்கான வரைவிலக்கணம் என்ன? என்று சொல்பவரிடம் கேட்டால் அதற்கான விளக்கம் கிடைப்பதில்லை. காரணம் , நம்பிக்கை என்பது அதன் தன்மையில் நாம் ஊகித்துக்கொள்ளும் பொருளுக்கு முற்றிலும் மாறான தன்மையைக் கொண்டிருப்பது தான். அதாவது நம்பிக்கை சந்தேகத்தை அடித்தளமாகக் கொண்டுள்ளது என்பது தான். நம்பிக்கையின் அடித்தளம் 'சந்தேகம்'. இதுவே நம்பிக்கையின் ஒரு பலவீனம். ஆச்சரியமாக இருக்கிறதா? ஆச்சரியம் வேண்டாம். இதோ அதற்கான விளக்கம்.
சந்தேகத்தின் அடித்தளம் தெளிவின்மை என்பது நாம் எல்லோரும் அறிந்துள்ள விடயம். ஒன்றின் மீது எமக்கு தெளிவு இல்லாத போது நாம் சந்தேகிக்கின்றோம். உதாரணத்தைப் பார்ப்போம். ஒரு மாலை நேரம். நாம் நடந்து செல்லும் பாதையில் இருக்கும் பொருளின் மீதான ஒளித்தெறிப்பு மிகவும் குறைவான நேரம். பாதையில் ஏறத்தாள ஒன்றரை அடி நீளமான ஒரு பொருள் வளைந்து கிடப்பது தெரிகிறது. ஆனால் அது என்ன என்பது தெளிவாக இல்லை. இந்த நிலையில் உடனடியாக நமக்குத் தோன்றுவது, அது ஒரு கயிறாக இருக்கலாம் அல்லது காய்ந்த மரத்தடியாக இருக்கலாம் அல்லது பாம்பாக இருக்கலாம் அல்லது எதோ ஒன்றாக இருக்கலாம் என்பதுதான். இங்கே 'இருக்கலாம்' என்பது சந்தேகத்தின் வெளிப்பாடு. இதே சம்பவத்தை நம்பிக்கையின் பார்வையில் செலுத்துவோமாயின் இதே இயல்பைக் காணலாம். அதாவது, 'நான் கயிறு என்று நம்புகிறேன்' அல்லது 'காய்ந்த மரத்தடி என்று நம்புகிறேன்' அல்லது 'பாம்பு என்று நம்புகிறேன்' எனக் கூறுகிறோம். ‘நம்புகிறேன்' என்பதும் 'இருக்கலாம்' என்ற அதே சந்தேகத்தை அடிப்படையாகக் கொண்டதே. அந்தப் பொருள் என்ன என்பது தெளிவாக அறியப்பட்டதும் சந்தேகமோ அல்லது நம்பிக்கையோ அவசியமற்றதாகிவிடுகிறது. இப்போது நம்பிக்கை அல்லது நம்புதல் என்பது சந்தேகத்தை அடித்தளமாகக் கொண்டுள்ளது என்பது நிரூபணமாகிவிட்டதல்லவா! உண்மையில் 'நம்பிக்கை' என்ற போலிக்குள் நாம் அகப்பட்டு அல்லற்படாமல் வாழ்வதற்கு 'அறிதல்', 'புரிதல்', 'உணர்தல்' என்பவற்றை அடித்தளமாகக் கொள்ளல் வேண்டும்.
நம்பிக்கையின் இரண்டாவது பலவீனம் சந்தேகத்தை விட அதிதீவிரமானது. சந்தேகம் தெளிவை நோக்கிய ஒரு தேடலுக்கு வாய்ப்பளிக்கலாம். ஆனால் நம்பிக்கையின் இந்தப் பலவீனம் எமது பகுத்தறிவுத் திறனுக்கு முழுக்குப் போட்டுவிடும். அதாவது நம்பிக்கை ஒரு பொழுதும் பகுத்தறிவுடன் இணைவதில்லை. ஏனெனில், நாம் ஒன்றை முற்றுமுழுதாக நம்பிவிட்டதன் பிற்பாடு அந்த நம்பிக்கைக்கு அடிமையாகி நாம் நம்பியுள்ளதற்கு அப்பால் எமது அறிவைப் பயன்படுத்த அனுமதிப்பதில்லை. அதாவது தேடுதலுக்கு இடமளிப்பதில்லை. அத்தோடு எப்பொழுதும் இறந்தகாலத்தில் மட்டும் வாழப்பழகிவிடுவதால் நிகழ்காலம் வீணாகிவிடுகின்றது.
நம்பிக்கையின் அடிமைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படக்கூடாது என்பதில் நம்பிக்கைவாதிகள் மிகவும் விழிப்பாக இருக்கிறார்கள். நம்பிக்கை அடிமைகளை இறந்தகாலத்திலேயே வைத்திருப்பதில் இவர்கள் மிகச் சிறந்த தேர்ச்சி பெற்றவர்களாக உள்ளார்கள். நம்பிக்கைக்கு நாம் அடிமைகளாக இருக்கும் வரை நம்பிக்கைவாதிகள் நம்மீது சவாரி செய்துகொண்டே இருப்பார்கள். தவறு அவர்களுடையதல்ல.
நம்பிக்கைக்கு அவசியம் இல்லாத வாழ்க்கை தான் எமக்குக் கிடைத்திருக்கும் இந்த அற்புதமான வாழ்க்கையும் வாய்ப்பும். இந்த வாழ்க்கையினதும், வாய்ப்பினதும் உச்சப் பயன் என்பது அறிதல், புரிதல், உணர்தல் மூலம் வாழ்வதால் மட்டுமே சாத்தியமாகும்.
நன்றியுடன் KG Master

முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: நம்பிக்கையின் இரு பலவீனங்கள்
இந்த நம்பிக்கை என்ற சொல்லைப் பயன்படுத்துபவர்கள் அனைவரும் மற்றவர்களுக்குப் புத்தி சொல்பவர்களாக இருப்பார்கள்.
உண்மைதான்...
Similar topics
» நம்பிக்கையின் வலிமை
» நம்பிக்கையின் பங்கு - கவிதை
» நம்பிக்கையின் மீதும்மட்டும் நம்பிக்கை இழக்காதீர்கள்
» ஏனையவர்களுடன் நெருங்கிப்பழகுவதில் நம்பிக்கையின் பங்கு என்ன?
» சீர்காழி- ஆன்மீகம், ஆலயங்கள், நம்பிக்கையின் நகரம்!

Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum