Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
"திருநெல்வேலி அல்வா"
தகவல்.நெட் :: பொது அறிவுக்களம் :: பொது அறிவு :: இன்றைய தகவல்
Page 1 of 1 • Share
"திருநெல்வேலி அல்வா"
"திக்கெல்லாம் புகழுறும் திருநெல்வேலி' என சம்பந்தரும், "தண் பொருநைப் புனல்நாடு' என சேக்கிழாரும், "பொன்திணிந்த புனல் பெருகும் பொருநைத் திருநதி' என்று கம்பரும் பாடிய பூமி,திருநெல்வேலி ஆகும்.
திருநெல்வேலி என்றவுடன் அனைவருக்கும் ஞாபகத்திற்கு வருவது "திருநெல்வேலி அல்வா"தான். நெல் மட்டுமே விளையும் ஒரு தேசத்தில் கோதுமையால் செய்யப்படும் வஸ்துவான அல்வா பிரபலப்படுத்தப் பட்டுள்ளது. ராஜஸ்தானில் இருந்து வந்தவர்கள் தான் பழக்கியிருக்கிறார்கள். அவர்கள் முதலில் செய்து கடை போட்டு விற்க, இப்பொழுது ஊர் முழுக்க பிரதானமாக இருப்பது லாலாக் கடைகள் எனப்படும் அல்வாக் கடைகள்தான். ஆனால் திருநெல்வேலியில் விற்கப்படும் எல்லா அல்வாக் கடைகளிலும் ஒரிஜினல் அல்வா விற்கப்படுவதில்லை. இரண்டே இரண்டு கடைகள்தான் தரமான ஒரிஜினல் திருநெல்வேலி அல்வா விற்கிறார்கள். மற்றதெல்லாம் வழக்கம் போல டூப்ளிகேட்டுகள். மைதா மாவு, கோதுமை மாவில் அலுங்காமல் அல்வா செய்து விடுகிறார்கள். வீட்டிற்கு வாங்கிப் போய் வாய்க்குள் போட்டால் வாயை அப்புறம் திறக்கவே முடியாது. அப்படியே ஒட்டிக் கொள்ளும், ஆகவே சரியான கடையாகப் பார்த்து அல்வா வாங்க வேண்டும் இல்லையென்றால் நிஜமாகவே அல்வா கொடுத்து விடுகிறார்கள். அப்படிப் பிரபலமான இரண்டு அல்வாக் கடைகளில் ஒன்று, ‘இருட்டுக் கடை’ எனப்படும் பாடல் பெற்ற அல்வாக் கடை. இந்தக் கடை நெல்லையப்பர் கோவிலுக்கு முன்பாக மிகச் சிறியதாக உள்ளது. கடைக்கு பெயர் கிடையாது. லைட்டு கிடையாது, சாயங்காலம் கொஞ்ச நேரம் மட்டும் திறந்து வைத்து விற்பார்களாம். அதற்குள் ஏகக் கூட்டம் வந்து முண்டியடித்து வாங்கிக் கொண்டு போய் விடும்; அப்புறம் மறுநாள்தான். நாங்கள் அந்தச் சமயத்தில் போகாததால் எங்களுக்கு அந்தக் கடையில் வாங்கும் பாக்யம் கிடைக்கவில்லை. இருட்டுக் கடையையும் , கடையில் அல்வாவை விற்பனைக்காக இறக்கி வைக்கப் பட்டிருக்கும் அல்வாவையும் புகைப் படங்களில் காணலாம் (இதுதான் நான் உங்களுக்கு கொடுக்கும் அல்வா)!!!!
facebook .com

முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: "திருநெல்வேலி அல்வா"
திருநெல்வேலி அல்வா எப்படி செய்வது அண்ணா?
தகவல்களுக்கு நன்றி
தகவல்களுக்கு நன்றி
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: "திருநெல்வேலி அல்வா"
திருநெல்வேலி அல்வா எப்படி செய்வது அண்ணா?
திருநெல்வேலி அல்வா செய்வது எப்படி
தேவையான பொருட்கள்:
நெய் - 300 கிராம்,
சம்பா கோதுமை - 200 கிராம்,
சீனி - 600 கிராம்
செய்முறை:
கோதுமையை முதல் நாளே தண்ணீரில் ஊறவைக்க வேண்டும். ஊறிய பின்பு ஆட்டுக்கல்லில் போட்டு அரைக்க அரைக்க பாலாக பொங்கும். அதை ஒரு துணியை வைத்து வடிகட்டி எடுக்க வேண்டும்.
அடுப்பில் ஒரு வாணலியை (பாத்திரம்) வைத்து, அதில் கோதுமைப் பாலை ஊற்ற வேண்டும். பால் கொதித்து வரும்போது சீனியைப் போட்டு நன்றாக கிளற வேண்டும். எக்காரணத்தைக் கொண்டும் கிளறுவதை நிறுத்தக் கூடாது. பாலும், சீனியும் இறுகி கெட்டியான ஒரு பதத்திற்கு வரும்போது,நெய்யை ஊற்றிக் கிளற வேண்டும். கிளறிக்கொண்டிருக்கும்போதே அல்வா குங்கும நிறத்திற்கு மாறிவரும். அப்படி வந்தவுடன் ஒரு பெரிய தட்டில் ஊற்றி ஆற வைக்க வேண்டும். நன்றாக ஆறியபின்பு எடுத்துச் சாப்பிட்டால் திருநெல்வேலி அல்வாவின் சுவை தானாக வரும்
grandearth.blogspot.com
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Similar topics
» திருநெல்வேலி அல்வா செய்வது எப்படி?
» அசோகா அல்வா:
» திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர் திருக்கோயில், திருநெல்வேலி
» திருநெல்வேலி போல வருமா???
» உருளைக்கிழங்கு அல்வா
» அசோகா அல்வா:
» திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர் திருக்கோயில், திருநெல்வேலி
» திருநெல்வேலி போல வருமா???
» உருளைக்கிழங்கு அல்வா
தகவல்.நெட் :: பொது அறிவுக்களம் :: பொது அறிவு :: இன்றைய தகவல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|