Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
அபிராமி அந்தாதியைப் படிப்பவர்களுக்குவாழ்க்கையில் எந்நாளும் துன்பமில்லை
Page 1 of 1 • Share
அபிராமி அந்தாதியைப் படிப்பவர்களுக்குவாழ்க்கையில் எந்நாளும் துன்பமில்லை
அபிராமி பட்டர் வழங்கிய அபிராமி அந்தாதி (பாடலும் பொருளும்)
அபிராமி பட்டர் வழங்கிய அபிராமி அந்தாதியைப் படிப்பவர், பாராயணம் செய்பவர், அவள் புகழ் கேட்பவர், போற்றி வணங்குபவர் அனைவரும் எல்லா நலன்களும் பெறுவார்கள். அவர்களுக்கு வாழ்க்கையில் எந்நாளும் துன்பமில்லை; இன்பமே அடைவார்கள்.
அபிராமி அந்தாதி
கணபதி காப்பு
தாரமர் கொன்றையும் சண்பகமாலையும் சாத்தும் தில்லை
ஊரார் தம் பாகத்து உமைமைந்தனே! உலகு ஏழும் பெற்ற
சீர் அபிராமி அந்தாதி எப்போதும் என் சிந்தையுள்ளே
காரமர் மேனிக் கணபதியே! நிற்க கட்டுரையே.
பொருள்: கொன்றைப்பூ மாலை அணியும் தில்லை வாழ் கூத்த பிரானுக்கும் சண்பகப்பூ மாலையணிந்து அவரின் இடப்பாகத்தில் அமைந்த உமையவளுக்கும் தோன்றிய மைந்தனே! கருநிறம் பொருந்திய கணபதியே! ஏழு உலகங்களையும் பெற்ற சிறப்பு மிக்க அன்னையின் பேரில் நான் தொடுக்கும் அபிராமி அந்தாதி என் நெஞ்சில் நிலைத்திருக்க அருளுவாயாக!
1. ஞானமும் நல்வித்தையும் பெற
உதிக்கின்ற செங்கதிர், உச்சித்திலகம், உணர்வுடையோர்
மதிக்கின்ற மாணிக்கம், மாதுளம் போது, மலர்க்கமலை
துதிக்கின்ற மின்கொடி, மென்கடிக்குங்கும தோயமென்ன
விதிக்கின்ற மேனி அபிராமி என்தன் விழித்துணையே.
பொருள்: உதிக்கின்ற செங்கதிரோனும் நெற்றியின் மையத்திலி டுகின்ற சிந்தூரத் திலகமும், ஞானம் கைவரப் பெற்றவர்களே மதிக்கின்ற மாணிக்கமும், மாதுளை மலரும், தாமரை மலரில் தோன்றிய இலக்குமி துதி செய்கின்ற மின்னற் கொடியும், மென் மணம் வீசும் குங்குமக் குழம்பும் ஆகிய அனைத்தையும் போன்ற தென்று நூல்கள் யாவும் பாராட்டிக் கூறும் திருமேனியைக் கொண்ட அபிராமி அன்னையே எனக்கு மேலான துணையாவாள்.
2. பிரிந்தவர் ஒன்று சேர
துணையும் தொழும் தெய்வமும், பெற்றதாயும் சுருதிகளின்
பணையும், கொழுந்தும் பதி கொண்டவேரும் பனிமலர்பூங்
கணையும், கருப்புச்சிலையும், மென்பாசாங்குசமும், கையில்
அணையும் திரிபுர சுந்தரி ஆவது அறிந்தனமே.
பொருள்: எங்களுக்கு உயிர்த்துணையும் நாங்கள் தொழுகின்ற தெய்வமும் எம்மையெல்லாம் ஈன்றெடுத்த அன்னையும், வேதமென் னும் விருட்சத்தின் கிளையும், அதன் முடிவிலுள்ள கொழுந்தும், கீழே பரவிப் பதிந்துள்ள அதன் வேரும் குளிர்ச்சி பொருந்தியவை யான மலரம்புகள், கரும்பு வில், மென்மைமிகு பாசாங்குசம் ஆகிய வற்றைத் திருக்கரத்தில் ஏந்தி நிற்கும் திரிபுரசுந்தரியே என்னும் உண்மையை நாங்கள் உணர்ந்து கொண்டோம்.
3. குடும்பக் கவலையிலிருந்து விடுபட
அறிந்தேன் எவரும் அறியா மறையை, அறிந்துகொண்டு
செறிந்தேன் உனது திருவடிக்கே, திருவே! வெருவிப்
பிறந்தேன் நின்அன்பர் பெருமைஎண்ணாதகரும நெஞ்சால்
மறிந்தே விழும் நரகுக்கு உறவாய மனிதரையே.
பொருள்: அருட்செல்வம் மிக்க திருவே! வேறெவரும் அறிய முடி யாத ரகசியத்தை நான் அறிந்து, அதன் காரணமாக உன் திருவடிக ளை அடைந்தேன். உன் அடியவர்களின் பெருமையை உணரத் தவ றிய நெஞ்சத்தின் காரணமாக நரகலோகத்தின் தொடர்பு கொண்ட மனிதரைக் கண்டு அஞ்சி விலகிக்கொண்டேன். இனி நீயே எனக்கு த் துணை.
4. உயர் பதவிகளை அடைய
மனிதரும் தேவரும் மாயா முனிவரும் வந்து சென்னி
குனிதரும் சேவடிக் கோமளமே! கொன்றைவார்சடைமேல்
பனிதரும் திங்களும், பாம்பும், பகீரதியும் படைத்த
புனிதரும் நீயும் என்புந்தி எந்நாளும் பொருந்துகவே.
பொருள்: மனிதர்களும் தேவர்களும் பெருமைமிக்க முனிவர் களும் வந்து தலை தாழ்த்தி நின்று வணங்கிப் போற்றும் செம்மையாகிய திருவடிகளையும் மெல்லியல்பும் கொண்ட கோமளவல்லி அன்னை யே! கொன்றைக் கண்ணியை அணிந்த சடா மகுடத்தின் மேல் பனியை உண்டாக்கும் சந்திரனையும், கங்கையையும் மற்றும் பாம் பையும் கொண்ட தூயோனாம் சிவபிரானும் நீயும் என் சிந்தையை விட்டு எந்நாளும் நீங்காமல் பொருந்தியிருப்பீர்களாக!
5. மனக்கவலை தீர
பொருந்திய முப்புரை! செப்புரை செய்யும் புணர்முலையால்
வருந்திய வஞ்சி மருங்குல் மனோன்மணி! வார்சடையோன்
அருந்திய நஞ்சு அமுதாக்கிய அம்பிகை! அம்புயமேல்
திருந்திய சுந்தரி அந்தரி பாதம்என் சென்னியதே.
பொருள்: அடியவர்களாகிய எங்களுக்குத் திருவருள் புரியும் திரி புரையும் தனங்களின் பாரம் தாங்காது வருந்தும் வஞ்சிக் கொடி யைப் போன்ற மெல்லிடையைக் கொண்ட மனோன்மணியும், நீள் சடைகொண்ட சிவபிரான் உண்ட நஞ்சைக் கழுத்தளவில் நிறுத்தி அமுதமாக்கிய அம்பிகையும், அழகிய தாமரை மலரின்மேல் அமர்ந்தருளும் சுந்தரியும், அந்தரியும் ஆன அபிராமி அன்னையின் பொன்னடி என் தலையின் மீது பொருந்தியுள்ளது. அதை நான் வணங்குகிறேன்.
6. மந்திர சித்தி பெற
சென்னியது உன்பொன் திருவடித்தாமரை; சிந்தையுள்ளே
மன்னியது உன் திருமந்திரம்; சிந்துர வண்ணப்பெண்ணே!
முன்னிய நின் அடி யாருடன் கூடி முறை முறையே
பன்னியது என்றும் உன் தன் பரமாகம பத்ததியே.
பொருள்: சிந்தூரத்தின் செந்நிறத்தையொத்த திருமேனியைக் கொண்ட அபிராமி அன்னையே! பொலிவுமிக்க பொன்னான உன் திருவடிகள் என்னும் அழகிய தாமரை மலர்கள் என் சிரசின் மேல் இருக்க, என் நெஞ்சினுள்ளே உன் அழகிய திருமந்திரச் சொல் நிலை பெற்றுள்ளது. உன்னையே வணங்கி நிற்கும் உன் அடியவ ர்களுடன் சேர்ந்து மீண்டும் மீண்டும் நான் பாராயணம் செய்து வருவது, உன் பெருமைகளைக் கூறும் மேலான நூல்களையே யாகும்.
7. மலையென வரும் துன்பம் பனியென நீங்க
ததியுறு மத்திற் சுழலும் என்ஆவி தளர்விலதோர்
கதியுறும் வண்ணம் கருது கண்டாய்; கமலாலயனும்,
மதியுறு வேணி மகிழ்நனும், மாலும் வணங்கிஎன்றும்
துதியுறு சேவடியாய்! சிந்துரானன சுந்தரியே.
பொருள்: தாமரை மலரில் உறைகின்ற பிரமதேவனும், பிறைச் சந்திரனைச் சிரசில் தரித்த உன் பாதியாகிய சிவபிரானும், பாற் கடலில் பள்ளி கொண்ட திருமாலும், வணங்கி எந்நாளும் துதித்து மகிழும் செம்மைமிக்க திருவடிகளையும் செந்தூரத் திலகமணி ந்த திருமுகத்தையும் கொண்ட பேரழகுமிக்க அன்னையே! தயிர் கடையும் மத்தைப் போல, பிறவிக் கடலாம் சுழலில் சிக்கி அலை யாமல், ஒப்பற்ற பேரின் நிலைலை நான் அடையும்படி திரு வுள்ளம் கொண்டருள்வாயாக!
8. பற்றுகள் நீங்கி பக்தி பெருகிட
சுந்தரி! எந்தை துணைவி! என் பாசத் தொடரைஎல்லாம்
வந்தரி; சிந்துர வண்ணத்தினாள் மகிடன் தலைமேல்
அந்தரி; நீலி; அழியாத கன்னிகை; ஆரணத்தோன்
சுந்தரி; கைத்தலத்தாள் மலர்த்தாள் என் கருத்தனவே.
பொருள்: என் தந்தையாம் ஈசனின் துணைவியான தேவியே! பேரழகு மிக்க அன்னையே! பாசமாம் தளைகளையெல்லாம் ஓடி வந்து அழிக்கும் சிந்தூர நிறம் கொண்டவள், மகிடன் என்னும் அசுரனின் சிரத்தின் மேல் நிற்கும் அந்தரி நீல நிறங்கொண்டவள், என்றும் அழிவில்லாத இளங்கன்னி, பிரமதேவனின் கபாலத் தைத் தாங்கும் திருக்கரத்தைக் கொண்டவள் ஆகிய அபிராமி அன்னையே! தாமரை மலரைப் போன்ற உன் அழகிய திருவடிகள் என் உள்ளத்தில் என்றென்றும் பொருந்தி நிற்கின்றன.
9. அனைத்தும் வசமாக
கருத்தன, எந்தை தன் கண்ணன், வண்ணக் கனகவெற்பில்
பெருத்தன, பால்அழும் பிள்ளைக்கு நல்கின, பேரருள்கூர்
திருத்தன பாரமும் ஆரமும், செங்கைச் சிலையும், அம்பும்
முருத்தனமூரலும், நீயும், அம்மே! வந்துஎன்முன் நிற்கவே.
பொருள்: அன்னையே! என் தந்தையாம் சிவபிரானின் சிந்தையில் நீங்காது நிற்பனவும், திருவிழிகளில் காட்சி தருவனவும், அழகிய பொன் மலையாம் மேருவைப் போன்று பருத்தனவும், அழுத பிள்ளையான ஞானசம்பந்தப் பெருமானுக்குப் பாலூட்டியதுமான திருத்தனங்களும், அவற்றின்மேல் புரளும் முத்துமாலையும், சிவந்த திருக்கரத்திலுள்ள கரும்பு வில், மலர் அம்புகள் ஆகியன வும், மயிலிறகின் அடிப்பாகம் போன்ற அழகிய புன்னகையும் காட்டி, உன் முழுமையான திருக்கோலக் காட்சியை எனக்குக் காட்டியருள்க.
10. மோட்ச சாதனம் பெற
நின்றும், இருந்தும், கிடந்தும், நடந்தும் நினைப்பது உன்னை;
என்றும் வணங்குவது உன்மலர்த்தாள்; எழுதாமறையின்
ஒன்றும் அரும் பொருளே! அருளே! உமையே இமயத்து
அன்றும் பிறந்தவளே! அழியா முத்தி ஆனந்தமே!
பொருள்: எழுதாமல் கேட்கப்படுவது மட்டுமான வேதத்தில் பொருந் தக் கூடிய அரும் பொருளாயும், சிவபிரானின் திருவருள் வடிவ மாயும் விளங்கும் உமையன்னையே! நான் நின்றவாறும், இருந்தவாறும் படுத்தவாறும், நடந்தவாறும், தியானம் செய்வதும் உன்னை த்தான்; என்றென்றும் மறவாமல் வழிபடுவதும் உன்னு டைய திரு வடித் தாமரையையேதான்.
11. இல்வாழ்க்கையில் இன்பம் பெற
ஆனந்தமாய் என் அறிவாய், நிறைந்த அமுதமுமாய்,
வான் அந்தமான வடிவுடையாள், மறை நான்கினுக்கும்
தான் அந்தமான சரணார விந்தம் தவளநிறக்
கானம் தம் ஆடரங்கம் எம்பிரான் முடிக்கண்ணியதே.
பொருள்: ஆனந்த உருவமாகி, என் அறிவாகி, நிறைவான அமுத மும் போன்றவளாகி, வானம் இறுதியாயுள்ள பஞ்சபூதங்களுக்கும் முடிவாக நிற்கும் தேவியின் திருவடித் தாமரை, நான்கு வேதங்களுக்கும் எல்லையாய் நிற்பது, வெண்ணிறச் சாம்பல் படர்ந்த மயானத்தைத் தாம் ஆடல் நிகழ்த்தும் இடமாகக் கொண்ட சிவபெருமானின் திருமுடியில் அணியப்பட்ட மாலையாயும் திகழ் கிறது.
12. தியானத்தில் நிலைபெற
கண்ணியது உன்புகழ் கற்பது உன்; நாமம் கசிந்து பத்தி
பண்ணியது உன் இருபாதாம் புயத்தில்; பகல் இரவா
நண்ணியது உன்னை நயந்தோர் அவையத்து; நான் முன்செய்த
புண்ணியம் ஏது என் அம்மே புவி ஏழையும் பூத்தவளே.
பொருள்: என் அன்னையே! உலகங்கள் ஏழையும் பெற்ற தாயே! நான் அல்லும் பகலும் கருதுவதெல்லாம் உன் புகழ்; கற்பதெல் லாம் உன் திருநாமம். எந்நேரமும் உள்ளமுருகப் பிரார்த்திப்பது உன் இரு திருவடித் தாமரைகளைத் தான். நான் கலந்து கொண்டு உன்னை வணங்குவதெல்லாம், உன்னை மெய்யாக விரும்பித் தொழும் அடியவர்களின் கூட்டத்தில்தான். இவ்வளவுக்கும் கார ணமாக நான் முற்பிறவிகளில் செய்த புண்ணியம்தான் ஏதோ அறியேன்.
13. வைராக்கிய நிலை எய்த
பூத்தவளே புவனம் பதினான்கையும்; பூத்தவண்ணம்
காத்தவளே பின்கரந்தவளே! கறைக் கண்டனுக்கு
மூத்தவளே! என்றும் மூவா முகுந்தற்கு இளையவளே!
மாத்தவளே உன்னை அன்றிமற்றோர் தெய்வம் வந்திப்பதே!
பொருள்: ஈரெழுலகங்களையும் திருவருளால் ஈன்றதுடன், பாது காப்பவளும், சம்காரம் செய்பவளுமான தாயே! நஞ்சினைக் கண் டத்தில் கொண்ட நீலகண்டப் பெருமானுக்கு முன் பிறந்தவளே! என்றுமே மூப்பறியாத திருமாலின் தங்கையே! பெருந்தவத்தை உடையவளே! நான் உன்னையே தெய்வாமாக ஏற்று வழிபடுவ தைத்தவிர இன்னொரு தெய்வத்தை வழிபட என்னால் இயலுமோ?
14. தலைமை பெற
வந்திப்பவர் உன்னை வானவர், தானவர், ஆனவர்கள்;
சிந்திப்பவர் நல் திசைமுகர் நாரணர் சிந்தையுள்ளே;
பந்திப்பவர் அழியாப் பரமானந்தர்; பாரில் உன்னைச்
சந்திப்பவர்க்கு எளிதாம் எம்பிராட்டி நின் தண் ஒளியே.
பொருள்: எம் தலைவியான அபிராமி அன்னையே! தேவர்கள், அசுரர் கள் ஆகிய இருவகையினரும் உன்னை வழிபடுகிறார்கள். பிரம்ம தேவரும் திருமாலும் உன்னை எண்ணித் தியானம் செய்கின்றனர். மேலான ஆனந்த வடிவினரான சிவபெருமானோ, தம் உள்ளத்தினுள் ளே உன்னை அன்பினால் கட்டிவைப்பவர், இவ்வாறெல்லாம் இருப்பதால், உலகில் உன்னைத் தரிசிப்பவர் களுக்கு உன்குளிர்ச்சி மிக்க திருவருள் தரிசனம் தரிசிப்பவர் களுக்கு அது மிக எளிதாக இருக்கி றது.
15. பெருஞ்செல்வமும் பேரின்பமும் பெற
தண்ணளிக்கு என்றுமுன்னே பலகோடிதவங்கள் செய்வார்
மண்ணளிக்கும் செல்வமோ பெறுவார்? மதிவானவர் தம்
விண்ணளிக்கும் செல்வமும் அழியா முத்தி வீடுமன்றோ?
பண்ணளிக்கும் சொல் பரிமள யாமளைப் பைங்கிளியே.
பொருள்: அழகிய பண்ணைப் போன்று இனிய மொழிகளைப் பேசும் நறுமணங் கமழும் திருமேனியையுடைய யாமளையாகிய பசுங் கிளியே! உன் பேரருளைப் பெற வேண்டுமென முற்பிறவி களில் பல கோடி தவங்களைச் செய்தவர்கள், இவ்வுலகைக் காக்கும் அரச போகத்தை மட்டுந்தானா பெறுவர்? யாவரும் மதிக்கும் தேவர்களுக் கேயுரிய வானுலகை ஆளும் அரிய செல்வத்தையும் என்றும் அழிவற்ற மோட்சம் என்னும் வீட்டை யும் அன்றோ பெற்று மகிழ்வர்?
16. முக்காலமும் உணரும் திறன் உண்டாக
கிளியே! கிளைஞர் மனத்தே கிடந்து, கிளர்ந்து, ஒளிரும்
ஒளியே! ஒளிரும் ஒளிக்கிடமே எண்ணில் ஒன்றுமில்லா
வெளியே! வெளிமுதல் பூதங்களாகி விரிந்த அம்மே!
அளியேன் அறிவளவிற்கு அளவானது அதிசயமே.
பொருள்: கிளி போன்ற தேவி! உற்றாராகிய அடியவர் மனங்க ளில் நிலை பெற்று விளங்கும் ஞான ஒளியே! விளங்கும் பிற ஒளிகளுக் கெல்லாம் ஆதாரமான பொருளே! எண்ணிப் பார்த்திட வொண்ணாத எல்லை கடந்து நின்ற பரவெளியே! விண் முதலிய ஐம்பெரும் பூத ங்களுமாகி விரிந்த தாயே! இத்துணை சிறப்பு மிக்கவளான நீ இரக் கத்திற்குரிய அடியவனான என் சிற்றறிவின் எல்லைக்குட்பட்டது வியப்பிற்குரியதுதான்!
17. கன்னிகைகளுக்கு நல்ல வரன் அமைய
அதிசயமான வடிவுடையாள், அரவிந்தமெல்லாம்
துதிசய ஆனன சுந்தரவல்லி, துணைஇரதி
பதிசயமானது அபசயம் ஆக முன் பார்த்தவர் தம்
மதிசயமாக அன்றோ வாமபாகத்தை வவ்வியதே.
பொருள்: வியப்பூட்டும் வடிவத்தைக் கொண்டவள், தம்மினும் சிறந்த அழகுடையதென்று தாமரை மலர்கள் துதிப்பதற்குக் காரணமாக அவற்றை வெற்றி கொண்ட அழகிய கொடியைப் போன்றவள், தனக்குத்துணையான ரதிக்கு நாயகனான காமனை ப் பிற இடங்களில் பெற்ற வெற்றி யாவற்றையும் இழந்து தோல்வியுறும்படி, நெற்றிக் கண்ணைத் திறந்து பார்த்த சிவ பிரானை வெற்றி கொள்ளத் தானே அவரது இடப்பாகத்தைக் கவர்ந்து கொண்டது?
18. மரண பயம் நீங்க
வவ்விய பாகத்து இறைவரும், நீயும் மகிழ்ந்திருக்கும்
செவ்வியும், உங்கள் திருமணக்கோலமும் சிந்தையுள்ளே
அவ்வியம் தீர்த்தென்னை ஆண்டபொற்பாதமும் ஆகிவந்து
வெவ்விய காலன் என்மேல்வரும் போது வெளிநிற்கவே.
பொருள்: அன்னையே! உன்னால் கவரப்பட்ட இடப்பாகத்தை யுடைய சிவனும் நீயும் இணைந்து மகிழ்ந்து நின்றிருக்கும் அர்த்தநாரீசுவரத் திருக்கோலமும், உங்கள் இருவரின் திருமணக் கோலமும், என் உள்ளத்தில் குடி கொண்டிருந்த ஆணவத்தை அகற்றி, என்னைத் தடு த்தாட் கொண்ட பொலிவு பெற்ற திரு வடிகளாகக் காட்சி தந்து, வெம் மைமிக்க காலன் என் உயிரைக் கொள்ளும் பொருட்டு வரும் போது, என்முன் வெளிப்படையாய்த் தரிசனம் தந்தருளி நிற்பீராக!
19. பேரின்ப நிலையடைய
வெளிநின்ற நின் திருமேனியைப்பார்த்தேன் விழியும் நெஞ்சும்,
களிநின்ற வெள்ளம் கரை கண்டதில்லை; கருத்தினுள்ளே
தெளிநின்ற ஞானம் திகழ்கின்றது என்ன திருவுளமோ?
ஒளிநின்ற கோணங்கள் ஒன்பதும் மேவி உறைபவளே.
பொருள்: ஒளி பொருந்தித் திகழும் நவகோணங்களை ஏற்று விரும் பித் தங்கியுள்ள அபிராமித் தாயே! எளியவனான நானும் வெளிப் படையாய்க் காணும்படி நின்ற உன் திவ்யத் திருமேனி யைப் புறத்தே கண்டு கண்களிலும், அகத்தே கண்டு உள்ளத்தி லும் மகிழ்ச்சி பொங் கி ஏற்பட்ட இன்ப வெள்ளத்துக்குக் கரை காண இயலவில்லை. எளியவனாகிய என் உள்ளத்தினுள்ளே தெளிந்த மெய்ஞ்ஞானம் விளங்கும்படி இத்தகைய பேரருளைச் செய்த உன் திருவுள்ளக் குறிப் பின் காரணம்தான் யாதோ?
20. வீடு வாசல் முதலிய செல்வங்கள் உண்டாக
உறைகின்ற நின் திருக்கோயிலில் நின்கேள்வர் ஒருபக்கமோ?
அறைகின்ற நான்மறையின் அடியோ? முடியோ? அமுதம்
நிறைகின்ற வெண்திங்களோ? கஞ்சமோ? எந்தன் நெஞ்சமோ?
மறைகின்ற வாரிதியோ? பூரணாசல மங்கலையே.
பொருள்: பேரருளின் நிறைவான நித்திய மங்கலையே! நீ உறைகி ன்ற ஆலயம் உன் பதியான பரமேசுவரனின் ஒரு பக்கமோ அல்லது உன் புகழை எப்போதும் முழங்குகின்ற நான்கு வேதங்க ளின் மூல மோ, அல்லது அவற்றின் திருமுடிகளாகிய உபநிடதங் களோ, அமுத ம் பொலிந்து திகழும் வெண்மையான சந்திரனோ, வெள்ளைத் தாமரையோ அடியேனின் உள்ளமோ, அல்லது பொங்கியெழும் அலைகளைக் கொண்ட கடலோ? இவற்றில் எதுவோ?
21. அம்பிகையை வழிபடாமல் இருந்த பாவம் தொலைய
மங்கலை! செங்கலசம் முலையாள்! மலையாள்! வருணச்
சங்கலை செங்கை! சகலகலாமயில்! தாவுகங்கை
பொங்கு அலைதங்கும் புரிசடையோன் புடையாள்! உடையாள்!
பிங்கலை! நீலி! செய்யாள்! வெளியாள்! பசும் பொற்கொடியே.
பொருள்: நித்திய மங்கலையாகிய அபிராமி அன்னையே! சிவந்த கலசங்களையொத்த தனபாரங்களை உடைய மலைமகளே! சங்கு களாலான வளைகள் அசைகின்ற திருக்கரங்களையுடைய, கலை கள் அனைத்திற்கும் தலைவியாகிய, மயில் போன்றவள். பொங்கிப் பாயும் கங்கையின் மேலெழும் அலைகள் அடங்கித் தங்குவதற்கு ரிய சிவபிரானின் இடப்பாகத்தை ஆட்கொண்டவள். பொன்நிறத்தி னளான பிங்கலை; நீல நிறத்தினாளான காளி; செந்நிறத்தினாளான லலிதாம்பிகை; வெண்ணிறத்தினளான வித்யா தேவி; பச்சை நிறத் தினாளான உமையன்னை யாவும் நீயே.
22. இனிப் பிறவா நெறி அடைய
கொடியே! இளவஞ்சிக் கொம்பே எனக்கு வம்பே பழுத்த
படியே! மறையின் பரிமளமே! பனிமால் இமயப்
பிடியே! பிரமன் முதலாய தேவரைப் பெற்ற அம்மே!
அடியேன் இறந்து இங்கு இனிப்பிறவாமல் வந்தாண்டு கொள்ளே.
பொருள்: கொடிபோன்ற அபிராமி அன்னையே! இளம் வஞ்சிப் பூங் கொம்பை நிகர்த்தவளே! எனக்குக் காலமல்லாத காலத்தில் பழுத்துக் கனிந்த பழத்தின் உருவமே! வேதமாகிய மலரின் நறு மணம் போன்றவளே! குளிர்ச்சிபொருந்திய இமாசலத்தில் விளை யாடி மகிழும் பெண் யானையே! பிரமன் போன்ற தேவர்களை ஈன்ற அன்னையே! நானும் இந்த உலகில் இறந்த பின்னர் மீண்டும் பிறவாதிருக்குமாறு என்பால் ஓடிவந்து உதவி செய்து என்னை ஆட்கொண்டருள் செய் வாயாக!
23. எப்போதும் மகிழ்ச்சியாய் இருக்க
கொள்ளேன் மனத்தில் நின்கோலம் அல்லாது; என்பர் கூட்டம் தன்னை
விள்ளேன்; பரசமயம் விரும்பேன்; வியன் மூவுலகுக்கு
உள்ளே, அனைத்தினுக்கும் புறம்பே உள்ளத்தே விளைந்த
கள்ளே! களிக்கும் களியே அளிய என் கண்மணியே.
பொருள்: பரந்து விரிந்து மூவுலகின் உள்ளேயும் உள்ள பரம் பொ ருளே! இருப்பினும் எல்லாப் பொருள்களுக்கும் புறம்பாயும் உள்ளாய். அடியவர்களின் உள்ளத்தில் முற்றி விளைந்த இன்ப மென்னும் கள்ளே! மற்றவற்றையெல்லாம் மறந்து ஆனந்த மயக்கம் கொண்டு மகிழும் மகிழ்ச்சியே! இரக்கத்திற்குரிய என் கண்ணினுள் மணி போன்றவளே! நான் என் உள்ளத்தில் தியானம் செய்யும் பொழுது உன்னு டைய திருக்கோலத்தைத் தவிர வேறு தெய்வம் எதனுடைய திருவுருவையும் நினையேன். உன் அடியவர் களை விட்டுப் பிரிந்து மற்ற சமயங்களையும் விரும்பேன்.
24. நோய்கள் விலக
மணியே! மணியின் ஒளியே! ஒளிரும் மணிபுனைந்த
அணியே! அணியும் அணிக்கு அழகே! அணுகாதவர்க்குப்
பிணியே! பிணிக்கு மருந்தே! அமரர் பெருவிருந்தே!
பணியேன் ஒருவரை நின் பத்மபாதம் பணிந்தபின்னே.
பொருள்: ஒளிவீசித் திகழும் மாணிக்கத்தைப் போன்றவளே! அந்த மாணிக்கத்தின் பிரகாசத்தைப் போன்றவளே! ஒளிமிக்க மாணிக் கங்களால் அழகிய முறையில் உருவாக்கப் பெற்ற ஆபர ணத்தைப் போன்றவளே! அந்த ஆபரணங்களுக்கும் அழகூட்டு பவளே! உன் னை அணுகாமல் வீணாகப் பொழுது போக்கு வோருக்கு நோய் போன்றும், உன்னை அணுகியவர்களின் பிறவிப் பிணிக்கு மருந்து போன்றும் விளங்குபவளே! தேவர்களனைவ ர்க்கும் பெரும் விருந்தாய்த் திகழ்பவளே! தாமரை மலரை நிகர்த்த உன் திருவடிகளைப் பணிந்த நான் வேறொருவரைப் பணியேன்.
25. நினைத்த காரியம் நிறைவேற
பின்னே திரிந்து உன் அடியாரைப் பேணிப் பிறப்பறுக்க
முன்னே தவங்கள் முயன்று கொண்டேன்; முதல் மூவருக்கும்
அன்னே! உலகுக்கு அபிராமி என்னும் அருமருந்தே!
என்னே! இனி <உன்னையான் மறவாமல் நின்று ஏத்துவனே.
பொருள்: முதன்மை பெற்றவர்களான மும்மூர்த்திகளுக்கும் அன் னையான அபிராமித் தாயே! உலகிலுள்ள உயிர்கள் அனை த்தும் பிறவிப் பிணியினின்றும் நீங்க எழுந்தருளி, பிணிதீர்க்கும் அரு மருந்தே! உன்னைப் போற்றும் அடியவர்களின் பின்சென்று அவ ரை வழிபட்டு, பிறவிப் பிணியை அறுத்தெறியும் நோக்குடன், முற் பிறவியில், தவங்களைச் செய்து வைத்தேன், இனி என்றும் உன்னை மறவாமல் நிலையாய் நின்று துதி செய்வேன். இந்த நிலையிலுள்ள எனக்குள்ள குறைதான் யாதோ? எதுவும் இல்லை.
26. சொல்வாக்கும் செல்வாக்கும் பெருக
ஏத்தும் அடியவர் ஈரேழுலகினையும் படைத்தும்,
காத்தும், அழித்தும் திரிபவராம்; கமழ் பூங்கடம்பு
சாத்தும்குழல் அணங்கே! மணம் நாறும் நின்தாள் இணைக்கு என்
நாத்தங்கு புன்மொழி ஏறியவாறு நகையுடத்தே.
பொருள்: மணங்கமழும் கடம்ப மலரை அணியும் கூந்தலையு டைய தேவி! ஈரேழுலகங்களையும் படைத்தல், காத்தல், அழித் தல் ஆகிய முத்தொழில்களையும் புரிந்துவரும் மும்மூர்த்திக ளும், உன்னைத் துதிக்கும் அடியவர்களாக உள்ளனர். நிலைமை இவ்வாறிருக்க, மணம் பொருந்திய உன்னுடைய திருவடிகள் இரண்டுக்கும் எவ் வகையிலும் ஈடாகாத எளிய வனாகிய என் நாவில் வெளிவந்த பொருளற்ற சொற்களையும் கூடத்துதிகளாக ஏற்றுக்கொண்டு, மகி ழ்வதைக் கண்டால் அந்தச் சொற்கள் பெற்ற ஏற்றம் உண்மையில் நகைப்புக் குரியதன்றோ?
27. மனநோய் அகல
உடைத்தனை வஞ்சப் பிறவியை; உள்ளம் உருகும் அன்பு
படைத்தனை; பத்மபதயுகம் சூடும் பணி எனக்கே
அடைத்தனை; நெஞ்சத்து அழுக்கை எல்லாம் நின் அருள்புனலால்
துடைத்தனை; சுந்தரி! நின்னருள் ஏதென்று சொல்லுவதே.
பொருள்: பேரழகு வடிவுடைய தாயே! என் முன்வினைப் பயனால் ஏற்பட்ட பிறவியைத் தகர்த்து, என் உள்ளம் உருகும் வண்ணம் ஆழ் ந்த அன்பையும் அந்த உள்ளத்தில் உண்டாக்கி, தாமரை மலரையொத்த உன் திருவடிகள் இரண்டையும் தலையால் வணங்கி மகிழும் தொண்டையும் எனக்கென ஏற்படுத்தித் தந்தாய். என் நெஞ்சில் கப்பி யிருந்த ஆணவம் முதலிய அழுக்கு களையெல்லாம் உன் கருணை யென்னும் தூய நீரால் கழுவிப் போக்கினாய். இந்த உன் திருவருட் சிறப்பை நான் என்னவென எவ்விதம் எடுத்துக்கூறிப்பாராட்டுவேன்?
28. இம்மை மறுமை இன்பங்கள் அடைய
சொல்லும் பொருளும் என நடமாடும் துணைவருடன்
புல்லும் பரிமளப் பூங்கொடியே நின் புதுமலர்த்தாள்
அல்லும் பகலும் தொழும் அவர்க்கே அழியா அரசும்
செல்லும் தவநெறியும் சிவலோகமும் சித்திக்குமே.
பொருள்: ஆனந்தத் தாண்டவம் ஆடி மகிழும் நடராசப் பெருமானு டன் – சொல்லும் அதை விட்டு விலகாத பொருளும் போல – என் றும் இணைந்து நிற்கும் நறுமணமிக்க பூங்கொடி போன்ற தாயே! மலர் போன்ற உன் திருவடிகளை அல்லும் பகலும் விடாது தொழும் அடி யவர்களுக்கெல்லாம் அழிவற்ற உயர்பதவியும், என்றும் நிலை பெற்று விளங்கும் தவ வாழ்க்கையும், இறுதியில் சிவலோக பதவி யும் சித்திப்பதாகும்.
29. எல்லா சித்திகளும் அடைய
சித்தியும், சித்திதரும் தெய்வமுமாகத் திகழும்
பராசத்தியும், சக்தி தழைக்கும் சிவமும் தவம் முயல்வார்
முத்தியும், முத்திக்கு வித்தும் ,வித்தாகி முளைத்தெழுந்த
புத்தியும், புத்தியின் உள்ளே புரக்கும் புரத்தையன்றே.
பொருள்: அடைதற்கரிய எண்வகைச் சித்திகளும், அந்த சித்திக ளை அளிக்கும் தெய்வமாக விளங்கும் பராசக்தியும், சக்தியைத் தம்மிடத் தில் தழைத்தோங்கச் செய்த பரமசிவமும் தவம் புரிபவர்கள் பெறும் மோட்சம் எனும் பேரானந்தமும் அந்த முத்தி யைப் பெறுவதற்கு அடிப்படையான மூலமும் மூலமாகித் தோன்றி எழுந்த ஞானமும் ஆகிய அனைத்துமாயிருப்பவள் என் அறிவினுள்ளே நின்று காத்த ருளும் திரிபுரசுந்தரியேயாம்.
30. அடுத்தடுத்து வரும் துன்பங்கள் நீங்க
அன்றே தடுத்து! என்னை ஆண்டுகொண்டாய்; கொண்டதல்ல என்கை
நன்றே உனக்கு இனி நான் என்செயினும், நடுக்கடலுள்
சென்றே விழினும் கரையேற்றுகை நின் திருவுளமே;
ஒன்றே! பல உருவே! அருவே! என் உமையவளே!
பொருள்: ஓருருவாகவும், பல உருவங்களையுடையவளாயும், உருவ மற்ற அருவமாயும் காட்சி தரும், எனக்குத் தாயான உமா தேவியே! முன்னொரு நாள் என்னைத் தடுத்தாட் கொண்டு காத்தருள் புரிந் தாய். அவ்வாறு அருள் செய்ததை இல்லையென மறுத்தல் உனக்கு நியாயமாகுமா? இனி எளியவனான நான் எத்தகைய பிழையைச் செய்தாலும், கடலின் நடுவே சென்று விழுந்தாலும், என் குற்றத்தை மன்னித்து, என்னைக் கரையேற் றிக் காத்தருள்வதே உன் திருவுள்ளச் செயலுக்கு மிக உகந்ததாகும்.
31. மறுமையில் இன்பம் உண்டாக
உமையும், உமையொரு பாகனும் ஏக உருவில் வந்திங்கு
எமையும் தமக்கு அன்பு செய்ய வைத்தார்; இனி எண்ணுதற்குச்
சமையங்களும் இல்லை; ஈன்றெடுப்பாள் ஒரு தாயும் இல்லை;
அமையும் அமையுறு தோளியர் மேல் வைத்த ஆசையுமே.
பொருள்:அன்னையாம் உமையும், உமையைத்தம் இடப்பாகத்தில் கொண்ட அண்ணலாம் ஈசனும் இணைந்தபடி ஒருவராக அர்த்த நாரீசுவரக் கோலத்தில் எழுந்தருளி, பக்குவமில்லாத எளிய வனான என் போன்றோரையும் தங்கள் திருவடிகட்கு அன்பு செலுத்துமாறு நெறிப்படுத்தினார். அதன் விளைவாக இனி இதைப் பின்பற்றுவோம் என்றெண்ணத்தக்க வேறு சமயங்கள் ஏது மில்லை. என் பிறவிப் பிணி அகன்றுவிட்டதாதலால் இனி என்னை ஈன்றெடுக்கத்தக்க தாயும் இல்லை. மூங்கிலையொத்த தோளினைப் பெற்ற மங்கையர் பால் கொண்டிருந்த மோகமும் இனி இல்லை.
32. துர்மரணம் வராமலிருக்க
ஆசைக்கடலில் அகப்பட்டு அருளற்ற அந்தகன் கைப்
பாசத்தில் அல்லல்பட இருந்தேனை, நின் பாதம் என்னும்
வாசக்கமலம் தலைமேல் வலியவைத்து ஆண்டு கொண்ட
நேசத்தை என் சொல்லுவேன்? ஈசர்பாகத்து நேரிழையே!
பொருள்: ஈசனினின் இடப்பாகத்தில் அமர்ந்தருளும் தேவியாம் அன்னையே! நுண்ணிய வேலைப்பாடமைந்த அணிகலன்களை அணிந்த தேவியே! ஆசைகளால் அலைகள் பொங்கியெழும் கட லில் அகப்பட்டு, அதன் விளைவாக யமனின் கையிலுள்ள கால பாசத்தில், சிக்கித் துன்பப்பட வேண்டியிருந்த என்னை, உன் திரு வடியான தாமரை மலரை எளியவனான என் சிரசின் மீது வைத்து, வலியவந்தென்னை ஆட்கொண்டருளிய உன் பேரருட் பெருங் கருணையை எப்படிப் போற்றி உரைப்பேன்?
33. இறக்கும் நிலையிலும் அம்பிகை நினைவோடு இருக்க
இழைக்கும் வினைவழியே ஆடும் காலன் எனைநடுங்க
அழைக்கும் பொழுதுவந்து அஞ்சல் என்பாய்; அத்தர் சித்தமெல்லாம்
குழைக்கும் களபக் குவிமுலை யாமலைக் கோமளையே!
உழைக்கும் பொழுது உன்னையே அன்னையே என்பன் ஓடிவந்தே.
பொருள்: ஈசனின் திருவுள்ளத்தை உருகிக்களிக்கச் செய்யும் வண் ணம், மணமுள்ள சந்தனக் குழம்பைப் பூசிய குவிந்த தனபாரங்க ளையுடைய யாமளையெனும் கோமளச் செவ்வியே! நான் செய்யும் பாபங்களின் விளைவாக என்னைக் கொல்லவரும் யமன், நான் நடுங்கும் வண்ணம் என்னை அழைக்க வருகிற வேளையில், நான் நடுங்கும் வண்ணம் என்னை அழைக்க வருகிற வேளையில், நான் மிக வருந்தி உன்பால் ஓடிவந்து “அன்னையே காத்தருள் என்று உன்னை சரணடைவேன். அந்தச் சமயத்தில் “அஞ்சேல் எனக்கூறி அபயமளித்து நீ என்னைக் காத்தருள வேண்டும்.
34. சிறந்த நன்செய் நிலங்கள் கிடைக்க
வந்தே சரணம் புகும் அடியாருக்கு வான்உலகம்
தந்தே பரிவொடு தான்போய் இருக்கும் சதுர்முகமும்
பைந்தேன் அலங்கல் பருமணி ஆகமும் பாகமும் பொன்
செந்தேன் மலரும் அலர்கதிர் ஞாயிறும் திங்களுமே.
பொருள்: தன்னிடம் வந்து சரணடையும் பக்தர்களுக்கு, அன்புடன் சுவர்க்கலோகப் பதவியை அளிக்கும் அன்னை அபிராமியான வள், தான் பிரமதேவனின் நான்கு முகங்களிலும், தேன் வடியும் துளசி மாலையுடன் பருத்த கௌஸ்துப மணியையும் கழுத்தி லணிந்த திருமாலின் மார்பிலும், சிவபிரானின் இடப்பாகத்திலும், செந்தேன் சொரியும் தாமரை மலரிலும், ஒளிமிக்க கிரணங்க ளைக் கொண்ட சூரியனிடத்திலும், சந்திரனிடத்திலும் சென்று வீற்றிருப்பாள்.
35. திருமணம் நிறைவேற
திங்கள் பசுவின் மணம் நாறும் சீறடி சென்னிவைக்க
எங்கட்கு ஒருதவம் எய்தியவா! எண்ணிறந்த விண்ணோர்
தங்கட்கும் இந்தத் தவம் எய்துமோ? தரங்கக் கடலுள்
வெங்கண் பணியணைமேல் துயில்கூரும் விழுப்பொருளே.
பொருள்: அலைகள் புரண்டெழும் பாற்கடலின் மீது ஆதிசேஷனா கிய பாம்பணை மீது பள்ளி கொண்டு துயிலும் மென்கொடியான மேலான பொருளே! ஈசனின் திருமுடியிலுள்ள பிறைச்சந்திரனின் மணம் கமழ்கின்ற உன்னுடைய சிற்றடியை, ஒன்றுக்கும் உதவாத எளியவர்களான எங்களைப் போன்றோரின் சிரங்களின் மீது வைத் தருள்வதாயின் எங்கள் ஒப்பற்ற தவத்தின் சிறப்புத்தான் என்னே என வியக்கிறோம். எண்ணற்ற தேவர்களுக்கும் கூட இத்தகைய சிறந்த பாக்கியம் கிட்டுமோ? கிட்டாது.
36. பழைய வினைகள் வலிமை பெற
பொருளே! பொருள் முடிக்கும் போகமே! அரும்போகம் செய்யும்
மருளே! மருளில் வரும் தெருளே என் மனத்து வஞ்சத்து
இருளேதும் இன்றி ஒளிவெளியாகி இருக்கும் உன்தன்
அருளேது அறிகின்றிலேன் அம்புயாதனத்து அம்பிகையே!
பொருள்: தாமரையாகிய அழகிய ஆசனத்தில் எழுந்தருளிய அபி ராமித் தாயே! பலவகைச் செல்வங்களின் வடிவமாய் இருக்கி றாய். அச்செல்வங்களால் உண்டாகும் பெரும் போகங்களை அனுபவிக்க ச் செய்யும் மாயா ரூபிணியே! அதன் மயக்கத்தின் முடிவில் ஏற்படும் தெளிவான ஞானமே! அடியேனின் உள்ளத்தில் சிறிதளவும் இல்லாத படி மாயையெனும் இருளைப் போக்கி, ஒளிவீசிப் பிரகாச மாய்த் திகழும் உன் திருவருள் எத்தகையதென என்னால் அறிந்து கொள்ள இயலவில்லையே!
37. நவமணிகளைப் பெற
கைக்கே அணிவது கன்னலும் பூவும்; கமலம் அன்ன
மெய்க்கே அணிவது வெண்முத்து மாலை; விட அரவின்
பைக்கே அணிவது பண்மணிக்கோவையும் பட்டும், எட்டுத்
திக்கே அணியும் திருவுடையான் இடம் சேர்பவளே!
பொருள்: எண்திசைகளையுமே ஆடையாய் உடுத்த அண்ணலாம் சிவபிரானின் இடப்பக்கத்தில் பொருந்தியுள்ள அபிராமி அன்னை யே! உன் திருக்கரத்தில் அணிந்திருப்பவை கரும்பாகிய வில்லும் , மலராகிய அம்புகளுமாம். அழகிய வெண்முத்து மாலையை, செந்தாம ரையையொத்த உன் சிவந்த திருமேனியில் அணிந்திரு க்கிறாய். கொடிய நஞ்சைக் கொண்ட நாகத்தின் படம் போன்ற உன் மெல்லிடையில் அழகிய நவமணிகளாலான மேகலையைத் தரித்திருக்கி றாய்.
38. வேண்டியதை வேண்டியவாறு அடைய
பவளக் கொடியில் பழுத்த செவ்வாயும், பனிமுறுவல்
தவளத் திருநகையும் துணையா எங்கள் சங்கரனைத்
துவளப் பொருது துடியிடை சாய்க்கும் துணை முலையாள்
அவளைப் பணிமின் கண்டீர் அமராவதி ஆளுகைக்கே.
பொருள்: நல்ல இன்பந்தரும் பதவியாகிய இந்திர பதவி பெற்ற, தேவ லோகத்திலுள்ள அமராவதிப் பட்டணத்தை ஆளவேண்டு மென விரும்புபவர்களே! அதற்கு நீங்கள் என்ன செய்யவேண்டும் தெரியு மா? பவளக்கொடியைப் போல கனிந்த செக்கச் சிவந்த வாயையும், அதற்கேற்ப குளிர்ச்சி மிகுந்த புன்னகை மிளிரும் வெண் முத்தனைய அழகிய பல்வரிசையும் கொண்டு, எங்கும் நிறைந்த பரிபூரணனாம் ஈசனை மகிழ்விக்கு மாறு எதிர்ப்பட்டு அவரது தவத்தைக் கலைக் குமாறு செய்த உடுக்கை போன்ற இடையையும் அழுத்தும்படியான தன பாரங்க ளையு டைய அபிராமி அன்னையை வழிபடுங்கள்.
39. கருவிகளைக் கையாளும் வலிமை பெற
ஆளுகைக்கு உன் தன் அடித்தாமரைகள் உண்டு; அந்தகன்பால்
மீளுகைக்கு உன் தன் விழியின் கடைஉண்டு; மேல் இவற்றின்
மூளுகைக்கு என்குறை; நின்குறையே அன்று; முப்புரங்கள்
மாளுகைக்கு அம்பு தொடுத்த வில்லான் பங்கில் வாள்நுதலே!
பொருள்:

முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: அபிராமி அந்தாதியைப் படிப்பவர்களுக்குவாழ்க்கையில் எந்நாளும் துன்பமில்லை
ரொம்பவும் பயனுள்ள பகிர்வு அண்ணே
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Re: அபிராமி அந்தாதியைப் படிப்பவர்களுக்குவாழ்க்கையில் எந்நாளும் துன்பமில்லை
பாடலோடு பொருளையும் விளக்கியது அருமை
Similar topics
» அபிராமி அந்தாதி - கண்ணதாசனின் விளக்கவுரை
» யாருக்கு தான் துன்பமில்லை...!!!!
» அப்பா எந்நாளும் என் முகவரிதான்..
» வாழ்வில் உயர எந்நாளும் சொல்வோம்
» வாழ்வில் உயர எந்நாளும் சொல்வோம்
» யாருக்கு தான் துன்பமில்லை...!!!!
» அப்பா எந்நாளும் என் முகவரிதான்..
» வாழ்வில் உயர எந்நாளும் சொல்வோம்
» வாழ்வில் உயர எந்நாளும் சொல்வோம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum