தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


நோயை இரட்டிப்பாக்கும் காலாவதியான மருந்துகள் - கவனம் தேவை!

View previous topic View next topic Go down

நோயை இரட்டிப்பாக்கும் காலாவதியான மருந்துகள் - கவனம் தேவை!  Empty நோயை இரட்டிப்பாக்கும் காலாவதியான மருந்துகள் - கவனம் தேவை!

Post by முரளிராஜா Fri May 10, 2013 1:27 pm

நோயை இரட்டிப்பாக்கும் காலாவதியான மருந்துகள் - கவனம் தேவை!  Medicine_120313-seithy-150

இன்றைய தினம் கையில், கைப்பேசி இருக்க வேண்டியது எவ்வளவு முக்கியமோ அந்த அளவுக்கு பையில் அலோபதி (ஆங்கில மருத்துவமுறை) மருந்துகள் இல்லாமல் தினசரி வாழ்க்கையை நடத்த முடியாது எனும் சூழல் உருவாகிவிட்டது. தினசரி உணவைப் போலவே, மாத்திரைகளையும், மருந்துகளையும் எடுத்துக்கொள்கிறவர்கள் நம்மிடம் அதிகம் பேர் உள்ளனர். தரமான மருந்துகள் மனித ஆரோக்கியத்தைக் காப்பாற்றுகின்றன என்பது உண்மையானாலும், சுவையான சர்க்கரைப் பொங்கலைச் சாப்பிடும்போது சிறிய கல் ஒன்று சிக்குவதுபோல, கலப்பட மருந்துகள், தரம் குறைந்த மருந்துகள், போலி மருந்துகள், காலாவதியான மருந்துகள் என்று மனித ஆரோக்கியத்துக்குத் தீங்கு செய்யும் மருந்துகளும் சந்தையில் நடமாடுகின்றன.


தமிழகத்தில் மருந்து உற்பத்தி, மொத்த விற்பனை, சில்லறை விற்பனை ஆகியவற்றைக் கண்காணிக்கவும், கட்டுப்படுத்தவும், 'மருந்துகள் மற்றும் அழகுசாதனங்கள் சட்டம்' உள்ளது. இச்சட்டத்தின்படி முறையாக உரிமம் (லைசென்ஸ் ) பெற்றவர்கள்தான் மருந்து தயாரித்து, விற்பனை செய்யமுடியும். இவர்களைக் கண்காணிக்க மாவட்ட அளவில் மருந்து ஆய்வாளர்கள் உள்ளனர். அப்படியிருந்தும், போலி மருந்துகளும், காலாவதியான மருந்துகளும், எப்படிச் சந்தைக்கு வருகின்றன? மருந்து தயாரிக்கும் நிறுவனங்கள், ஒவ்வொரு மாவட்டத்திலும், முகமைகளை நியமித்துள்ளன. இவர்கள், முகவர்கள் மூலம், மருந்துக் கடைகளுக்கு மருந்துகளை நேரடியாகவும், கூரியர் மற்றும் லாரிப் போக்குவரத்து மூலமும் விநியோகம் செய்வார்கள். இந்த முறையில் வியாபாரம் செய்யும்போது, தவறு ஏற்பட வாய்ப்பில்லை.

மாறாக, அதிக கமிஷனுக்கு ஆசைப்பட்டு, இடைத்தரகர்கள் மூலம், சில மருந்துக் கடைக்காரர்கள் மருந்துகளை வாங்குவதுண்டு. அப்போதுதான் காலாவதியான மருந்துகளும், போலி மருந்துகளும் சந்தைக்கு வந்துவிடுகின்றன. மக்கள் நலனைப் புறக்கணித்து, பணம் பண்ணுவதைக் குறிக்கோளாக கொண்டு, லாபநோக்கத்தில் இயங்கும் இந்த இடைத்தரகர்கள், காலாவதியான மருந்துகளின் லேபிள்களை மாற்றியும், அசல் மருந்துகளின் உறைகளைப் போலவே போலியாக உறைகளைத் தயாரித்தும், அவற்றில் போலிமருந்துகளை அடைத்தும், புதிய மருந்துகள்போல் விற்றுவிடுகிறார்கள். குழாய் வடிவில் உள்ள மாத்திரைகளில் இவ்வாறு போலி மருந்துகளை அடைப்பது மிகவும் எளிது என்பது இவர்களுக்குச் சாதகமாகிவிடுகிறது.

இருமல் மருந்துகள், வயிற்றுப்புண்ணுக்குத் தரப்படும் அமிலக்குறைப்பு மருந்துகள், மலச்சிக்கல் திரவ மருந்துகள், குழந்தைகளுக்குத் தரப்படும் நுண்ணுயிர்க்கொல்லி திரவ மருந்துகள் போன்றவற்றில் தண்ணீர் கலந்து விற்றுவிடுகிறார்கள். இது தவிர, சில மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் மூன்றாம் தரமான மூலப்பொருளை வாங்கி, மருந்து தயாரித்து, முதல் தரமான மருந்துபோலவே விற்றுவிடுவதும் உண்டு. இவற்றில் உள்ள பிரச்னை என்னவென்றால், காலாவதியான ஒரு மருந்து பாட்டிலின் மீது வேறு ஒரு லேபிளை ஒட்டிவிட்டால், அது காலாவதியான மருந்து என்பது அந்தக் கடைக்காரருக்கே தெரியாது. மாத்திரை வடிவில் உள்ள ஒரு மருந்தை, அதன் உறையிலிருந்துப் பிரித்துவிட்டால், அது காலாவதியானதா, இல்லையா என்று கண்டுபிடிப்பது கடினம். விற்கப்படும் மருந்தில் கலப்படம் செய்யப்பட்டுள்ளதா, அது தரமான மருந்தா, தரம் குறைந்த மருந்தா என்பது போன்ற விஷயங்கள் மருந்துக் கடைகளில் பயனாளிகளுக்கு, மருந்து விற்கும் நபருக்குத் தெரிய வாய்ப்பில்லை.

காலாவதியான மருந்து, கலப்பட மருந்து, போலி மருந்து, தரம் குறைந்த மருந்து போன்றவை மருந்துக் கடைகளில் விற்கப்படுகின்றனவா என்பதைக் கண்காணிக்க அரசாங்கப் பணியில் மருந்து ஆய்வாளர்கள் உள்ளனர். ஆனால், தமிழகம் முழுவதும் சுமார் 50 ஆயிரம் மருந்துக் கடைகள் உள்ளன என்றால், மருந்து ஆய்வாளர்களோ 100க்கும் குறைவான பேர்தான் உள்ளனர். இவர்களால் எப்படி எல்லா மருந்துக் கடைகளையும் முறையாகவும், சரியாகவும், ஆய்வு செய்ய முடியும்? இதுதான் பிரச்னை.

கள்ளச் சந்தை வழியாக, கடைகளுக்கு வரும் போலி மருந்துகளைத் தடுப்பதற்கு, அரசாங்கத்தை மட்டுமே நம்புவது சரியல்ல. இதில் மருந்துக் கடைக்காரர்களுக்கும், பொதுமக்களுக்கும் பொறுப்பு உள்ளது. முக்கியமாக, மருந்து விற்பனையாளர்கள், சமுதாயப் பொறுப்புமிக்கவர்களாக நடந்து கொள்ள வேண்டும். பொதுமக்களின் உயிரோடு விளையாடும் போலி மருந்துகளையும், காலாவதியான மருந்துகளையும், தரம் குறைந்த மருந்துகளையும், கலப்பட மருந்துகளையும் விற்கக் கூடாது எனும் நேர்மை உணர்வுடன் செயல்பட வேண்டும். மருந்துக் கடைக்காரர்களும் தங்களுக்குத் தேவையான மருந்துகளை இடைத்தரகர்கள் வழியாக வாங்காமல், ஒவ்வொரு மருந்தையும் அந்தந்த மருந்தின் உண்மையான முகமைகளிலிருந்து வாங்குவதைத் தங்கள் கடமையாகக் கொள்ள வேண்டும். வாங்கிய மருந்துகளில் சந்தேகம் வரும்போது, உடனே அவற்றைத் திருப்பி அனுப்பத் தயங்கக்கூடாது.

சில மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் அல்லது மருந்து மொத்த விற்பனையாளர்கள் தங்களிடம் நீண்ட காலம் விற்கப்படாமல் நிலுவையில் இருக்கும் மருந்துகளுக்கும், மிகவும் குறுகிய காலத்தில் காலாவதி ஆகப்போகும் மருந்துகளுக்கும் அதிக லாபம் வைத்து, விற்பனைக்கு அனுப்புவார்கள். அல்லது இவ்வகையான மருந்துகளை நோயாளிக்குப் பரிந்துரைக்கும் மருத்துவர்களுக்கு விலையுயர்ந்த பரிசுப் பொருள்களைத் தருவார்கள். மனித நேர்மையை விலைக்கு வாங்கும் இந்த வியாபாரத் தந்திர வலைக்குள் மருந்துக்கடைக்காரர்களும் சரி, மருத்துவர்களும் சரி விழுந்துவிடக்கூடாது. பொதுமக்களும், மருந்துகள் வாங்கும் விஷயத்தில், மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். எந்த மருந்தையும், தாங்களாகவே கடைகளில் வாங்கிச் சாப்பிடக்கூடாது.

டாக்டர் எழுதித் தரும் மருந்துச் சீட்டை வைத்து மட்டுமே மருந்தை வாங்க வேண்டும். வாங்கிய மருந்துகளுக்கு அவசியம் 'பில்' வாங்க வேண்டும். முறையான உரிமம் உள்ள, பதிவு பெற்ற மருந்தகப் பயிற்சியாளர் (பார்மசிஸ்ட்) உள்ள, மருந்துக் கடையில் மட்டுமே மருந்து வாங்குவது என்பதை வழக்கமாக்கிக் கொள்வது நல்லது. மாத்திரைப் பட்டியிலும், மருந்து பாட்டில்களிலும் மருந்து தயாரிக்கப்பட்ட தேதி, காலாவதி தேதி, 'பேட்ச்' எண் போன்றவைத் தெளிவாக அச்சடிக்கப்பட்டுள்ளனவா என்பதைக் கவனிக்க வேண்டும். இவற்றில் அடித்தல், திருத்தல் இருந்தால், லேபிள் ஒட்டியிருந்தால், மருந்தகப் பயிற்சியாளரின் கவனத்துக்குக் கொண்டு செல்லலாம். ஒரே மருந்தை, மறுபடியும் டாக்டர் எழுதித் தரும்போது, அந்த மருந்து வழக்கத்தைவிட விலை குறைவாகவோ, எடை குறைவாகவோ, நிறம் மாறியோ இருந்தால், டாக்டர் அல்லது மருந்தகப் பயிற்சியாளரிடம் தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டும்.

தலைவலி, காய்ச்சல், வயிற்றுவலி போன்றவற்றுக்கான மாத்திரைகளை அவசரத் தேவைக்காக வீட்டில் வாங்கி வைப்பது பலரது வழக்கம். பொதுவாக, மாத்திரைப் பட்டியின் ஒரு ஓரத்தில்தான் அதன் காலாவதி தேதி அச்சிடப்பட்டிருக்கும். அது தெரியாமல், முதலிலேயே அந்த இடத்தைக் கிழித்து, மாத்திரையை எடுத்துப் பயன்படுத்தியிருப்பார்கள். அடுத்தமுறை அதைப் பயன்படுத்தும்போது, காலாவதி தேதி தெரியாது. இப்போதுதானே வாங்கினோம், அதற்குள்ளாகவா காலாவதி ஆகிவிடும் எனும் நினைப்பில், அந்த மாத்திரையைச் சாப்பிடுவார்கள் - பல சமயங்களில் அது காலாவதி ஆகிவிட்டது என்று தெரியாமல். சரி, காலாவதியான மருந்துகளைச் சாப்பிட்டால் என்ன ஆகும்? தோல் ஒவ்வாமை வரும். அரிப்பு, தடிப்பு, தோல் வீக்கம் ஆகிய பக்கவிளைவுகள் தொல்லை தரும்.வயிற்றுவலி, வயிற்றுப்போக்கு, வாந்தி வருவதுண்டு. வாய்ப்புண் வரலாம். சில நாட்களுக்கு அஜீரணம் தலைகாட்டும். சிலருக்கு, கல்லீரல், சிறுநீரகம், கண் போன்ற உள் உறுப்புகள் பாதிக்கப்படலாம்.

பொதுவாக, காலாவதியான மருந்தை ஒரு முறை எடுத்துக்கொண்டாலே, இத்தனைத் தொல்லைகள் வரும் என்று கூறிவிட முடியாது. தொடர்ந்து சில நாட்களுக்கு எடுத்துக்கொண்டால், இம்மாதிரியான உடல்நலக் கேடுகள் வரலாம்.முக்கியமாக, ஏற்கனவே கல்லீரல் பாதிப்பும், சிறுநீரகப் பாதிப்பும் உள்ளவர்கள் காலாவதியான மருந்தைச் சாப்பிட நேர்ந்தால், உடல்நிலை மோசமாகி, உயிருக்கு ஆபத்து ஏற்பட அதிக வாய்ப்புண்டு. ஆகவே, இவர்கள்தான் மருந்து எடுத்துக்கொள்ளும் விஷயத்தில் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும்.

மருந்து எதுவாக இருந்தாலும், அதைச் சூரிய வெளிச்சம் அதிகமுள்ள இடத்தில் வைத்தால், சீக்கிரமே காலாவதி ஆகிவிடும். ஆகவே, மருந்துகளை நிழல் உள்ள இடத்தில்தான் வைக்க வேண்டும். அல்லது குளிர்சாதனப்பெட்டியில் 4 டிகிரி சென்டிகிரேட் வெப்பநிலையில் வைக்க வேண்டும்.மாத்திரை உறையைத் திறக்கும்போதே, மாத்திரை உடைந்து, பவுடராக இருந்தாலும், குழாய் மாத்திரைகள் ஈரப்பசையுடன், பிசுபிசுப்பாகக் காணப்பட்டாலும், அவை காலாவதியாகிவிட்டன என்றுதான் பொருள்.

வழக்கத்தில், குழந்தைகளுக்குச் சளி, இருமல் போன்றவற்றுக்குத் தரப்படும் நுண்ணுயிர்க்கொல்லி மருந்துகள், பாட்டில்களில், பவுடராக இருக்கும். சுத்தமான தண்ணீரில் இந்தப் பவுடர் மருந்தைக் கலந்து தர வேண்டும்.இவ்வாறு ஒருமுறை தண்ணீரில் கலந்துவிட்டால், அந்த மருந்தை ஒரு வாரத்துக்குள் பயன்படுத்திவிட வேண்டும். அதற்குப் பிறகு அதைப் பயன்படுத்தினால், அதற்குக் காலாவதிக் காலம் இன்னும் இருந்தால்கூட, பலன் தராது. இதையும் ஒரு காலாவதியான மருந்தாகவே கையாள வேண்டும். தெரிந்தோ, தெரியாமலோ, காலாவதியான மருந்துகளையும், போலி மருந்துகளையும் பயன்படுத்த நேர்ந்தால், அவற்றின் மோசமான விளைவுகளைச் சந்திக்கப் போவது என்னவோ, பொதுமக்கள்தான். ஆகவே, பொது மக்களின் விழிப்புணர்வு மட்டுமே, இந்தப் பிரச்னையைத் தீர்க்கும் மருந்து என்பதில் சந்தேகமில்லை.

நன்றி செய்தி .kaam
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

நோயை இரட்டிப்பாக்கும் காலாவதியான மருந்துகள் - கவனம் தேவை!  Empty Re: நோயை இரட்டிப்பாக்கும் காலாவதியான மருந்துகள் - கவனம் தேவை!

Post by நண்பன் Sat May 11, 2013 7:10 am

அதிர்ச்சி என்னப்பா பயமுருத்தறிங்க
நண்பன்
நண்பன்
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 567

Back to top Go down

நோயை இரட்டிப்பாக்கும் காலாவதியான மருந்துகள் - கவனம் தேவை!  Empty Re: நோயை இரட்டிப்பாக்கும் காலாவதியான மருந்துகள் - கவனம் தேவை!

Post by கவியருவி ம. ரமேஷ் Sat May 11, 2013 11:48 am

இருமல் மருந்துகள், வயிற்றுப்புண்ணுக்குத் தரப்படும் அமிலக்குறைப்பு மருந்துகள், மலச்சிக்கல் திரவ மருந்துகள், குழந்தைகளுக்குத் தரப்படும் நுண்ணுயிர்க்கொல்லி திரவ மருந்துகள் போன்றவற்றில் தண்ணீர் கலந்து விற்றுவிடுகிறார்கள். இது தவிர, சில மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் மூன்றாம் தரமான மூலப்பொருளை வாங்கி, மருந்து தயாரித்து, முதல் தரமான மருந்துபோலவே விற்றுவிடுவதும் உண்டு. இவற்றில் உள்ள பிரச்னை என்னவென்றால், காலாவதியான ஒரு மருந்து பாட்டிலின் மீது வேறு ஒரு லேபிளை ஒட்டிவிட்டால், அது காலாவதியான மருந்து என்பது அந்தக் கடைக்காரருக்கே தெரியாது.

என்னாமா ஏமாத்துறானுங்க...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

நோயை இரட்டிப்பாக்கும் காலாவதியான மருந்துகள் - கவனம் தேவை!  Empty Re: நோயை இரட்டிப்பாக்கும் காலாவதியான மருந்துகள் - கவனம் தேவை!

Post by ஸ்ரீராம் Sat May 11, 2013 3:59 pm

எச்சரிக்கை பதிவுக்கு நன்றி முரளி
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

நோயை இரட்டிப்பாக்கும் காலாவதியான மருந்துகள் - கவனம் தேவை!  Empty Re: நோயை இரட்டிப்பாக்கும் காலாவதியான மருந்துகள் - கவனம் தேவை!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum