தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


கோடையில் முடியை குளிர்ச்சியுடன் வைக்க சில ஐடியாக்கள்...

View previous topic View next topic Go down

கோடையில் முடியை குளிர்ச்சியுடன் வைக்க சில ஐடியாக்கள்... Empty கோடையில் முடியை குளிர்ச்சியுடன் வைக்க சில ஐடியாக்கள்...

Post by mohaideen Mon May 13, 2013 1:01 pm

இந்தியாவில் அடிக்கும் வெயிலின் தாக்கத்திற்கு மட்டும் அளவே இல்லை. இத்தகைய கடுமையான வெயிலினால், சருமம் மட்டும் பாதிக்கப்படுவதில்லை, முடியும் தான். அதிலும் அதிகப்படியான வெயிலினால், வியர்வை அதிகரிப்பதோடு, உடல் வெப்பமும் அதிகரித்து, அதிகப்படியான வெயிலினால் முடி உடைய ஆரம்பிக்கும். மேலும் சில சமயங்களில் வியர்வை தலையில் அதிகம் தங்குவதால், தூசிகள் தலையில் தங்கி, பொடுகுத் தொல்லையை உண்டாக்கி, முடி உதிர்தலை ஆரம்பிக்கிறது.

எனவே கோடையில் வெளியே செல்லும் போதும் சரி, வீட்டில் இருக்கும் போதும் முடியின் மீது அதிகப்படியான கவனத்தை செலுத்த வேண்டும். இல்லாவிட்டால், முடி கொட்டி, வழுக்கைத் தலையாகத் தான் இருக்க வேண்டும். அதுமட்டுமல்லாமல், தலை முதல் கால் வரை பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். எனவே எவ்வளவு வேலை இருந்தாலும், முடி வேண்டுமானால் ஒருசில பராமரிப்புக்களை மேற்கொள்வது அவசியமாகிறது.

இப்போது கோடையில் முடியை குளிர்ச்சியுடன் வைப்பதற்கு ஒருசில ஐடியாக்களை கொடுத்துள்ளோம். அதைப் படித்து பின்பற்றி வாருங்கள்.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

கோடையில் முடியை குளிர்ச்சியுடன் வைக்க சில ஐடியாக்கள்... Empty Re: கோடையில் முடியை குளிர்ச்சியுடன் வைக்க சில ஐடியாக்கள்...

Post by mohaideen Mon May 13, 2013 1:01 pm

தலைக்கு குளிக்கவும்



கோடையில் முடியை குளிர்ச்சியுடன் வைக்க சில ஐடியாக்கள்... 10-1368182999-bath-ds-600

பலர் தினமும் தலைக்கு குளித்தால், தலையில் வறட்சி ஏற்பட்டு, முடி உதிர்ந்துவிடும் என்று நினைக்கின்றனர். ஆனால் பொதுவாக வாரத்திற்கு மூன்று முறை தலைக்கு குளித்தால், தான் முடி ஆரோக்கியமாக இருக்கும். அதிலும் கோடை என்று வந்துவிட்டால், தினமும் தலைக்கு குளிப்பது தான் சிறந்தது. இதனால் வெயிலின் அதிகப்படியான தாக்கத்தினால், வெப்பமடைந்திருக்கும் முடி குளிர்ச்சியடைவதோடு, வியர்வையின் காரணமாக ஸ்கால்ப்பில் தூசிகள் தங்காமலும் இருக்கும்.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

கோடையில் முடியை குளிர்ச்சியுடன் வைக்க சில ஐடியாக்கள்... Empty Re: கோடையில் முடியை குளிர்ச்சியுடன் வைக்க சில ஐடியாக்கள்...

Post by mohaideen Mon May 13, 2013 1:02 pm

தொப்பி



கோடையில் முடியை குளிர்ச்சியுடன் வைக்க சில ஐடியாக்கள்... 10-1368183025-hatsd-600

எப்போதுமே முடியின் மீது நேரடியான சூரியவெப்பம் படும்படியாக எங்கும் செல்லக்கூடாது. இல்லாவிட்டால், வெப்பத்தினால் முடி வலுவிழந்து, உதிர்வதோடு, உடைந்துவிடும். எனவே வெளியே செல்லும் போது தொப்பி அல்லது ஸ்கார்ப் அணிந்து செல்ல வேண்டும்.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

கோடையில் முடியை குளிர்ச்சியுடன் வைக்க சில ஐடியாக்கள்... Empty Re: கோடையில் முடியை குளிர்ச்சியுடன் வைக்க சில ஐடியாக்கள்...

Post by mohaideen Mon May 13, 2013 1:03 pm

குளிர்ச்சி தரும் எண்ணெய்



கோடையில் முடியை குளிர்ச்சியுடன் வைக்க சில ஐடியாக்கள்... 10-1368183338-amlaoil-600

ஸ்கால்ப்பை குளிர்ச்சியாக்கும் எண்ணெய்களான அஸ்வகந்தா, நெல்லிக்காய் போன்றவற்றை தலைக்கு தேய்த்து வந்தால், முடி நன்கு குளிர்ச்சியுடனும், மென்மையாகவும், இருக்கும். அதுவும் இத்தகைய எண்ணெய்களை இரவில் தேய்க்காமல், பகல் வேளையில் தேய்த்துக் கொள்ள வேண்டும். அது தான் நல்ல பலனைத் தரும்.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

கோடையில் முடியை குளிர்ச்சியுடன் வைக்க சில ஐடியாக்கள்... Empty Re: கோடையில் முடியை குளிர்ச்சியுடன் வைக்க சில ஐடியாக்கள்...

Post by mohaideen Mon May 13, 2013 1:03 pm

வியர்வையை துடைக்கவும்



கோடையில் முடியை குளிர்ச்சியுடன் வைக்க சில ஐடியாக்கள்... 10-1368183153-tissuepaper--22-600

ஸ்கால்ப்பில் வியர்வை இருந்தால், அது மயிர்துளைகளில் அடைப்புக்களை ஏற்படுத்தி, முடி உதிர்தலை உண்டாக்கும். எனவே எப்போதெல்லாம் தலையில் வியர்த்தாலும், டிஸ்யூ பேப்பர் கொண்டு துடைத்து எடுத்து விட வேண்டும்.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

கோடையில் முடியை குளிர்ச்சியுடன் வைக்க சில ஐடியாக்கள்... Empty Re: கோடையில் முடியை குளிர்ச்சியுடன் வைக்க சில ஐடியாக்கள்...

Post by mohaideen Mon May 13, 2013 1:04 pm

குளிர்ச்சி தரும் ஷாம்பு



கோடையில் முடியை குளிர்ச்சியுடன் வைக்க சில ஐடியாக்கள்... 10-1368183189-shampoohairwash-600

தலைக்கு குளிக்கும் போது, தலைக்கு குளிர்ச்சியைத் தரும் ஷாம்புக்களைப் பயன்படுத்த வேண்டும். உதாரணமாக, பயன்படுத்தும் ஷாம்புக்களில், உடல் வெப்பத்தை தணிக்கக்கூடிய பொருட்களான புதினா, கற்றாழை அல்லது வெள்ளரிக்காய் அடிப்படையில் இருக்கும் ஷாம்புக்களை பயன்படுத்துவது நல்லது.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

கோடையில் முடியை குளிர்ச்சியுடன் வைக்க சில ஐடியாக்கள்... Empty Re: கோடையில் முடியை குளிர்ச்சியுடன் வைக்க சில ஐடியாக்கள்...

Post by mohaideen Mon May 13, 2013 1:04 pm

ஹேர் ட்ரையர்



கோடையில் முடியை குளிர்ச்சியுடன் வைக்க சில ஐடியாக்கள்... 10-1368183217-hairdry-600d

நிறைய மக்கள் முடியை காய வைப்பதற்கு, ஹேர் ட்ரையர் பயன்படுத்துவார்கள். ஆனால் அதனை பயன்படுத்தினால், அதிலிருந்து வரும் வெப்பமான காற்று, ஸ்காப்பில் அதிகப்படியான வெப்ப உணர்வை ஏற்படுத்தும். எனவே கோடையில் வெயில் இருக்க, முடியை காய வைப்பதற்கு, ஹேரை ட்ரையரைப் பயன்படுத்த வேண்டாம்.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

கோடையில் முடியை குளிர்ச்சியுடன் வைக்க சில ஐடியாக்கள்... Empty Re: கோடையில் முடியை குளிர்ச்சியுடன் வைக்க சில ஐடியாக்கள்...

Post by mohaideen Mon May 13, 2013 1:05 pm

ஹேர் மாஸ்க்



கோடையில் முடியை குளிர்ச்சியுடன் வைக்க சில ஐடியாக்கள்... 10-1368183260-hairmask-600

தலைக்கு வாரத்திற்கு 3 முறை ஹேர் மாஸ்க் போடலாம். அதுவும் உடலுக்கு குளிர்ச்சியை தரும் தயிர், வெந்தயம் போன்றவற்றை பயன்படுத்தி ஹேர் மாஸ்க் போடுவது நல்லது.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

கோடையில் முடியை குளிர்ச்சியுடன் வைக்க சில ஐடியாக்கள்... Empty Re: கோடையில் முடியை குளிர்ச்சியுடன் வைக்க சில ஐடியாக்கள்...

Post by mohaideen Mon May 13, 2013 1:05 pm

நல்லெண்ணெய் குளியல்



கோடையில் முடியை குளிர்ச்சியுடன் வைக்க சில ஐடியாக்கள்... 10-1368183303-sesameoil-600

நல்லெண்ணெய் கொண்டு வாரத்திற்கு 1-2 முறை எண்ணெய் குளியல் மேற்கொண்டால், உடல் வெப்பம் நீங்குவதோடு, முடி குளிர்ச்சியுடன் ஆரோக்கியமாக இருக்கும்.

http://tamil.boldsky.com/beauty/hair-care/2013/ways-keep-hair-cool-summer-003185.html#slide164324
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

கோடையில் முடியை குளிர்ச்சியுடன் வைக்க சில ஐடியாக்கள்... Empty Re: கோடையில் முடியை குளிர்ச்சியுடன் வைக்க சில ஐடியாக்கள்...

Post by முழுமுதலோன் Mon May 13, 2013 4:55 pm

அருமை
மொட்டையும் போடலாம் இன்னும் சுகமாக இருக்கும்
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

கோடையில் முடியை குளிர்ச்சியுடன் வைக்க சில ஐடியாக்கள்... Empty Re: கோடையில் முடியை குளிர்ச்சியுடன் வைக்க சில ஐடியாக்கள்...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum