தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


மனதில் பரவும் `விஷம்’

View previous topic View next topic Go down

மனதில் பரவும் `விஷம்’ Empty மனதில் பரவும் `விஷம்’

Post by முழுமுதலோன் Wed May 15, 2013 7:14 pm

மனதில் பரவும் `விஷம்’


ஒருவர் மேல் இருக்கும் அதீத அன்புதான் சந்தேகத்திற்கு அடிப்படை காரணம் என்று விளக்கம் கூறுபவர்கள் சற்று கவனிக்க வேண்டும். அது முழு உண்மையல்ல. இயலாமை, கோபம், மற்றவர்களை புரிந்து கொள்ளும் திறமையின்மை, மனஒழுக்கம் இல்லாமை போன்ற தன்மைகளைக் கொண்டவர்கள்தான், அதிகம் சந்தேகம் கொள்வார்கள்.

சந்தேகப்படுகிறவர்களில் சிலர், சந்தேகத்தின் பேரில் மற்றவர்களை கையும் களவுமாக பிடித்து விட்டது போல் சந்தோஷப் படுவார்கள். அவர்களை கேள்வி கேட்டு திணறடித்து, தங்கள் சாமர்த்தியத்தை தாங்களே புகழ்ந்துகொள்வார்கள். அதனால் ஏற்படும் பின்விளைவு கள் தாக்கும்போதுதான் விபரீதத்தின் விளைவை அவர்கள் புரிந்துகொள்வார்கள்.

தொட்டதற்கெல்லாம் சந்தேகப்படுபவர்கள் ஒருவகை. அந்த சந்தேக பேர்வழிகள் பல நேரங்களில் காமெடியன்களாக ஆகிவிடுவார்கள். தங்களைத் தாங்களே அதி மேதாவி யாக்கிக் கொள்ள அவர்கள் மேற்கொள்ளும் முயற்சி பல நேரங்களில் தோல்வியில்தான் முடியும். காரணம் தவறு செய்பவர்கள் யாரும் மற்றவர் கண்ணில் படும்படி எதையும் செய்ய மாட்டார்கள் என்பது இவர்கள் மூளைக்கு எட்டாது.

எதுவுமே தெரியாது போல இருந்து கொண்டே தக்க ஆதாரங்களோடு கூட்டாளியை குற்றவாளி கூண்டில் நிறுத்தி விசாரிப்பவர்கள் இன்னொரு ரகம். தவறு செய்வது மனிதனின் இயல்பு. அதனை மாற்றியமைக்க பொறுமை வேண்டும். சந்தேகம் சரிப்பட்டு வராது.


தவறே செய்திருந்தாலும் மன்னிப்பு பலநேரங்களில் மகத்தான மாற்றங்களை உருவாக்கும். சந்தேகம் வாழ்க்கையின் அஸ்திவாரத்தையே அசைத்து விடும். அதன் பிறகு ஏற்படும் மாற்றங்கள் அத்தனை மகிழ்ச்சியாக இருக்காது. காலப்போக்கில் சுற்றியிருக்கும் அனை வரையும் சந்தேக வளையத்திற்குள் கொண்டு வர முயலும்போது உலகமே அவர்களை வெறுக்க ஆரம்பித்து விடும். அப்போது, `நாம் சந்தேகிப்பதெல்லாம் பொய்’ என்ற உண் மையை அவர்கள் உணர்ந்து, நடந்து முடிந்த சம்பவங்களால் குற்ற உணர்வு கொள் வார்கள். அதையே நினைத்து காலம் முழுக்க துடிப்பார்கள்.

சந்தேகத்தால் தங்கள் சந்தோஷத்தை குழி தோண்டி புதைத்துக் கொண்டவர்கள் பலர். நாளடைவில் சந்தேகம் அவர்களை ஒரு மனநோயாளிபோல் ஆக்கி, அவர்களை தனிமைப் படுத்தி விடும். சந்தேகத்தால் ஏற்படும் மனஅழுத்தம் அவர்களை நோயாளியாக்கிவிடும். அதனால் அவர்கள் காலம் முழுக்க மன- உடல் நோயாளிகளாக வாழ வேண்டியதாகி விடும்.

சந்தேகமே இல்லாமல் வாழ முடியுமா? முடியும். சந்தேகத்தால் சாதிக்க முடியாததை அன்பால் சாதிக்கலாம். சந்தேகம் என்பது அறியாமையின் வெளிப்பாடு. இயலாமையின் செயல்பாடு.

அன்பால் கட்டுப்படுத்த முடியாத விஷயம் எதுவும் இல்லை. ஆனால் அதற்கு பொறுமை தேவை. நாம் யூகிக்கும் விஷயம் உண்மையா பொய்யா என்று தெளிவு பெற அமைதி தேவை. தெளிவும், அமைதியுமாய் இருப்பவர்கள் மனதில் சந்தேகப் பேய் குடிபுகாது.

புதுமண தம்பதிகளுக்கு இடையே ஏற்படும் சந்தேகம் அவர்களுக்குள் தேவையற்ற குழப்பத்தையும், பூசலையும் ஏற்படுத்தி விடும். இது அவர்களை எதிர்காலத்தைப் பற்றி சிந்திக்க விடாமல் அவர்கள் வாழ்க்கையை முடக்கி விடும். அவர்களிடம் இருக்கும் மகிழ்ச்சியை சிதைத்து அவர்கள் வாழ்க்கையை கேலிக்குரியதாக்கிவிடும். மற்றவர்கள் அவர்களை கேலிப்பொருட்கள் போல் ஆக்கிவிடுவார்கள். அதனால் அவர்கள் மனதில் ஏற்படும் வடு காலம் முழுவதும் மாறாது.

தம்பதிகளில் கணவர்- மனைவியை சந்தேகிப்பதும், மனைவி- கணவரை சந்தேகிப்பதும் இருவர் வாழ்க்கையையும் அலங்கோலமாக்கிவிடும். எல்லோர் முன்னிலையிலும் சந்தேகத் தோடு பார்ப்பது, பேசுவது பின்னால் சென்று விசாரிப்பது இது அனைத்தும் தீராத அவ மானத்தை மற்றவருக்கு ஏற்படுத்தி விடும். அதன் பிறகு ஏற்படும் சமாதானம் இழந்ததை மீட்டுத் தராது.

மனதில் மேலோட்டமாக சந்தேகம் உருவாகும்போதே அதை கிள்ளி எறிய பழகிக்கொள்ள வேண்டும். கிள்ளி எறிந்தால் மனம் தெளிவு பெறும். வாழ்க்கை வளம் பெறும்.

சந்தேகத்தால் ஏற்படும் மனஸ்தாபங்கள் நாளடைவில் நீண்டு, நிரந்தர பிரிவிற்கு வழி வகுத்து விடும். அதுமட்டுமல்ல சந்தேகம் என்ற பலவீனத்தை மனதில் சுமந்தவர்களை யார் வேண்டுமாலும் ஆட்டிப் படைக்கலாம். சந்தேகப் பேர்வழிகளைத் தேடி பலரும் வருவார்கள். தங்களால் முடிந்த தொந்தரவுகளை அவர்களுக்கு கொடுப்பார்கள். போகிற போக்கில் சந்தேகப்படும்படியான விஷயம் ஏதாவது அகப்பட்டால் அதையும் அவர்களிடம் கூறி, அவர்களை தூண்டி விடுவார்கள். இந்த சந்தேக நபர் அதையும் நம்பி செயல்பட்டு அவ மானப்படும்போது, தூர நின்று வேடிக்கைபார்த்து கைகொட்டி சிரிப்பார்கள். இதற்கெல்லாம் இடம் தராமல் உறுதியாக இருக்கும் வரைதான் வாழ்க்கை வண்டி தடம் புரளாமல் ஓடும். அறிவுள்ளவர்களால் மட்டுமே உண்மையை உணர முடியும். சந்தேக குணம் மூர்க்கத் தனமானது, உண்மைகளை அறிய விடாது.

சில நேரங்களில் சிலர் சந்தேகம் கொள்வது உண்மையாகக் கூட இருக்கலாம். அப்போது மனம் பதறாமல் தவறுகளை திருத்த முயற்சிக்க வேண்டுமே தவிர, சந்தேகத்தை குற்ற மாக்கி வாழ்க்கையை நரகமாக்கிக்கொள்ளக்கூடாது.

சந்தேகம் எப்போதும், யாருக்கும் நன்மை செய்ததில்லை. சந்தேகம் மனதில் பரவும் விஷம். சந்தேகம் இல்லாத வாழ்க்கைதான் நிம்மதியானது.

http://senthilvayal.wordpress.com/
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

மனதில் பரவும் `விஷம்’ Empty Re: மனதில் பரவும் `விஷம்’

Post by முரளிராஜா Fri Jun 21, 2013 10:34 am

Code:
தவறே செய்திருந்தாலும் மன்னிப்பு பலநேரங்களில் மகத்தான மாற்றங்களை உருவாக்கும். 

எற்றுக்கொள்கிறேன்எற்றுக்கொள்கிறேன்எற்றுக்கொள்கிறேன்எற்றுக்கொள்கிறேன்எற்றுக்கொள்கிறேன்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

மனதில் பரவும் `விஷம்’ Empty Re: மனதில் பரவும் `விஷம்’

Post by செந்தில் Fri Jun 21, 2013 10:42 am

முரளிராஜா wrote:
Code:
தவறே செய்திருந்தாலும் மன்னிப்பு பலநேரங்களில் மகத்தான மாற்றங்களை உருவாக்கும். 

எற்றுக்கொள்கிறேன்எற்றுக்கொள்கிறேன்எற்றுக்கொள்கிறேன்எற்றுக்கொள்கிறேன்எற்றுக்கொள்கிறேன்
வீட்டுல சொல்லல!அதான் தினமும் நடக்குதே! லொள்ளு ரொம்ப ஜாலி
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

மனதில் பரவும் `விஷம்’ Empty Re: மனதில் பரவும் `விஷம்’

Post by ஸ்ரீராம் Fri Jun 21, 2013 10:45 am

மிக அருமையான பகிர்வு அண்ணா. நன்றி
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

மனதில் பரவும் `விஷம்’ Empty Re: மனதில் பரவும் `விஷம்’

Post by mohaideen Fri Jun 21, 2013 1:01 pm

தவறே செய்திருந்தாலும் மன்னிப்பு பலநேரங்களில் மகத்தான மாற்றங்களை உருவாக்கும்.

மனதில் பரவும் `விஷம்’ Icon_cheersமனதில் பரவும் `விஷம்’ Icon_cheersமனதில் பரவும் `விஷம்’ Icon_cheersமனதில் பரவும் `விஷம்’ Icon_cheersமனதில் பரவும் `விஷம்’ Icon_cheers
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

மனதில் பரவும் `விஷம்’ Empty Re: மனதில் பரவும் `விஷம்’

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum