தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


தகவல் துளிகள்

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Go down

தகவல் துளிகள்  Empty தகவல் துளிகள்

Post by Muthumohamed Fri Jun 07, 2013 10:01 pm

தபால் பெட்டியின் நிறம்:

தபால் பெட்டிக்கு ரத்த சிவப்பு நிறம் கொண்ட பெயின்டை ஏன் பூசினார்கள் தெரியுமா? நிறங்களில் எல்லாம் பளிச்சென்று தோன்றும் நிறம் ரத்தச் சிவப்புதான். இவ்வாறு தபால் பெட்டிகளுக்கு ரத்த சிவப்பு நிறம் பூசும் வழக்கம் கி.பி.1876-ம் ஆண்டு இங்கிலாந்து நாட்டில் முதன்முதலாக தொடங்கப்பட்டது. பின்னர் உலகில் ஏனைய நாடுகளுக்கும் இவ்வழக்கம் பரவியது.

அதென்ன நாளைக்கு?

பாரதிதாசன் எந்தக் காரியத்தையும் மறுநாளைக்குச் செய்யலாம் என்று ஒத்திப்போட
மாட்டார். ""அதென்ன நாளைக்கு? இப்போதே செய்யேன்'' என்பாராம். எடுத்தக் காரியத்தை அப்போதைக்கப்போதே செய்ய வேண்டும் என்பதில் பாரதிதாசனுக்கு அக்கறை அதிகம்.

பச்சைத் தங்கம்

தங்கத்துடன் வெள்ளி அல்லது காட்மியத்தைக் கலந்து தயாரிக்கும் தங்கத்தை "பச்சைத் தங்கம்' என்கின்றனர்.

சிவப்பு நிற உப்பு :

மொராக்கோ நாட்டு மலையில் சிவப்பு நிற உப்பை வெட்டி எடுக்கின்றனர்.

சத்தம் போட முடியாத உயிரினம்:

பிணம் தின்னும் கழுகுகள் வாயில் இருந்து எந்த சத்தமும் வராது. சத்தம் போட முடியாத உயிரினமும்
இதுதான்.

பிரான்னாக்

செருப்பு கடையில் பாதத்தின் நீளத்தை அளக்கும் கருவியின் பெயர் "பிரான்னாக்'.

100 கோடியின் தமிழ்ச்சொல்:

100 கோடியின் தமிழ்ச்சொல்: நிகற்பம்.


போஸ் விஞ்ஞான ஆராய்ச்சிக்கழகம்


தாவரங்களுக்கு உயிர் உண்டு என்று கண்டுபிடித்த ஜகதீச சந்திரபோஸின் மனைவியும் ஒரு விஞ்ஞானி. அவர் பெயர் அபலா போஸ். இருவரின் முயற்சியால்தான் போஸ் விஞ்ஞான ஆராய்ச்சிக்கழகம்
ஏற்பட்டது.

கையுறை அணிந்துகொண்டிருக்கும் காவலர்கள்


எப்போதும் கையுறை அணிந்துகொண்டிருக்கும் காவலர்கள் கனடா நாட்டில் உள்ளனர். இந்நாட்டின் ராயல் மவுண்ட் போலீஸில் உள்ள அனைவரும் கண்டிப்பாக கையுறைகள் அணிய வேண்டும்.

தினமணி
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

தகவல் துளிகள்  Empty Re: தகவல் துளிகள்

Post by Muthumohamed Sat Jun 08, 2013 10:16 pm

காலண்டர் உருவான வரலாறு!


மனிதன் காலத்தை அளவிட எண்ணினான். முதலில் பயிர்த் தொழில் செய்யும் காலங்களை கவனித்தான். நடவு செய்வது முதல் அறுவடை செய்வது வரையிலான காலத்தை கணக்கிட்டான். இது முதல் முயற்சி. தொடர்ந்து எகிப்தியர்கள் ஆண்டுக்கு ஒருமுறை நைல் நதியில் வெள்ளம் வருவதை அறிந்து, வெள்ளத்தை காலம் அளக்கும் காரணியாகக் கொண்டனர்.
ஒரு மத குரு, ஒருமுறை வெள்ளம் வருவதற்கும் மறுமுறை வெள்ளம் வருவதற்கும் இடைப்பட்ட காலத்தில் 12 முறை சந்திரன் தோன்றி மறைவதைக் கவனித்து அளவிட்டார். இது "12 மூன்ஸ்' என்று அழைக்கப்பட்டு பின்னர் "மன்த்ஸ்' என்றாகி உள்ளது. பின்னர் சில குறிப்பிட்ட நட்சத்திரங்கள் தோன்றி மறைவதை அடிப்படையாகக் கொண்டு 365 நாட்கள் எனப் பிரித்தனர். எகிப்தியர்கள்தான் காலண்டர் முறைக்கு வித்திட்டவர்கள். இக்காலண்டர் முறை ரோம நாட்டு சக்கரவர்த்தி ஜூலியஸ் சீஸரால் வகுக்கப்பட்டது. இதில் ஏற்பட்ட சிறு சிக்கல்கள், குழப்பங்களைக் களைந்து 1582-ம் ஆண்டு போப் கிரிகோரி என்பவர் தீர்வு கண்டார். இன்று நம்மிடையே வழக்கத்தில் உள்ள காலண்டர், கிரிகோரி காலண்டர் ஆகும்.

- தேனி முருகேசன்
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

தகவல் துளிகள்  Empty Re: தகவல் துளிகள்

Post by Muthumohamed Sat Jun 08, 2013 10:16 pm

மக்கள் தொகை கணக்கெடுப்பு தோன்றியது எப்படி?

யேசுநாதர் பிறக்கும் முன் மத்திய ஆசிய நாடுகள் பலவும் (இப்போதைய இத்தாலி) ரோமாபுரி பேராட்சிக்குள் அடங்கி இருந்தது. அன்றைய ரோம் சக்கரவர்த்தியாக விளங்கிய "அகஸ்டஸ் சீஸர்' என்பவர்தான் உலக மக்கள் தொகைக் கணக்கெடுப்புக்கு கட்டளை பிறப்பித்திருந்தார். அதுதான் உலகின் முதல் மக்கள் தொகைக் கணக்கு எடுப்பாகும்.
அப்போது ரோம் சக்கரவர்த்தியின் பிரதிநிதியாக சிரியா நாட்டு ஆளுநராக இருந்த கிரேனி என்பவர் ஓர் ஆணையிட்டார். அது, ""அனைவரும் தங்கள் சொந்த ஊர் சென்று, கணக்கெடுப்பில் கலந்துகொள்ள வேண்டும்'' என்பதே!
அதன்படி, சூசையும், மரியாளும் நாசரேத் நகரத்திலிருந்து யூதேயா எனப்படும் தாவீதின் நகராகிய பெத்லகேமுக்குச் சென்றனர். ஏனெனில் சூசையப்பர், தாவீது மன்னரின் குடும்பத்தவராக இருந்தார். அவர்கள் மக்கட் தொகைக் கணக்கெடுப்புக்காக அங்கு தங்கியிருந்த போதுதான் மரியாளுக்குப் பேறுகாலம் வந்தது. அப்போதுதான் மரியாள் யேசுவை மகனாக மாட்டுத் தொழுவத்தில் ஈன்றெடுத்தார்.
அந்த மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் யேசுவின் பிறப்பு வெளிப்படுகின்றது என்பதை பல வரலாற்றுச் சான்றுகள் தெளிவுபடுத்துகின்றன. இதைத்தான் நாம் கிறிஸ்து பிறப்பதற்கு முன் (கி.மு.), கிறிஸ்து பிறப்புக்குப் பின் (கி.பி) என்று உணர்ந்து கொள்ள முடிகின்றது.

- நா. கிருஷ்ணவேலு
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

தகவல் துளிகள்  Empty Re: தகவல் துளிகள்

Post by Muthumohamed Sat Jun 08, 2013 10:17 pm

வெள்ளி பைபிள்!

சுவீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் உள்ள உப்சலா பல்கலைக்கழகத்தில் ஆறாம் நூற்றாண்டில் இருந்த வெள்ளி பைபிள் ஒன்று உள்ளது. இந்த பைபிள் முழுவதும் கையினால் எழுதப்பட்டதாகும்.
தங்கம் மற்றும் வெள்ளியை உருக்கி அதனால் தயாரிக்கப்பட்ட மையினால் எழுதப்பட்டுள்ளது. பைபிளின் அட்டைப் பகுதி தங்க முலாம் பூசப்பட்டுள்ளது. கி.பி. 1648-ஆம் ஆண்டு இந்த பைபிள் "பிராக்' என்ற நகரில் இருந்து சுவீடனுக்கு எடுத்து வரப்பட்டது.
இந்த பைபிளின் சில பக்கங்கள் 6-5-1995 அன்று திருடு போயின. ஆனால் அவை 7-5-1995 அன்றே கண்டுபிடிக்கப்பட்டன. தற்பொழுது பைபிளின் மற்ற பகுதிகள் பல்கலைக்கழகத்தின் நூலகத்தில் வெவ்வேறு இடங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.

- ச. கிறிஸ்து ஞான வள்ளுவன், வேம்பார்.
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

தகவல் துளிகள்  Empty Re: தகவல் துளிகள்

Post by Muthumohamed Sat Jun 08, 2013 10:17 pm

தமிழ் அறிஞர்களை உருவாக்கிய ஆசிரியர்கள்!

• வீரமா முனிவர் - சுப்பிரதீபக் கவிராயர்.

• ஜி.யு.போப் - மகாவித்துவான்
இராமானுஜ கவிராயர்.

• சீகன் பால்கு ஐயர் - தரங்கம்பாடி எல்லப்பா.

• எல்லீஸ் துரை - இராமச்சந்திரக் கவிராயர்.

• ஹெச்.எ. கிருஷ்ணபிள்ளை - மகாவித்துவான் திருப்பாற்கடல் நாத கவிராயர்.

• உமறுப் புலவர் - கடிகைமுத்துப் புலவர்.

• செய்கு தம்பிப் பாவலர் - சங்கரன் நாராயணன், அண்ணாவி.

• காசிம் புலவர் - மதுரை தமிழாசிரியர்
மாக்காயனார்.

• கணிமேதாவியார் - மதுரை தமிழாசிரியர்
மாக்காயனார்.
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

தகவல் துளிகள்  Empty Re: தகவல் துளிகள்

Post by Muthumohamed Sat Jun 08, 2013 10:19 pm

வெந்நீர் மீன்

நியூசிலாந்தில் வாழும் கோவாரா என்ற மீன், தான் வாழும் தட்பவெப்ப நிலைக்குத் தக்கவாறு வாழும் இருப்பிடத்தை மாற்றிக் கொள்கிறது. கோடைக் காலங்களில் வெந்நீர் ஊற்றுகளில் வாழ்கிறது. குளிர்காலம் வந்துவிட்டாலோ, வெந்நீர் ஊற்றுக்களை விட்டு வெளியேறுகிறது. பூமிக்கடியில் உள்ள குகைகளுக்குத் தனது இருப்பிடத்தை மாற்றிக் கொண்டு சுகமாகக் குளிர்காலம் முடிந்து கோடைக்காலம் வந்துவிட்டாலோ திரும்பவும் வெந்நீர் ஊற்றுகளுக்கே வந்துவிடுகிறது.

• மீன்களில் நீளமான மீன் லுர் பிஷ். விலாங்கு மீன் போன்ற தோற்றத்தில் இருக்கும் இந்த மீன் அதிகபட்சம் 46 அடி நீளம் வளரும்.


• மிக உயரமானது சூரிய மீன். இதன் உயரம் 14 அடிகள். அந்த மீன் 2 டன் எடைக்கும் அதிகமாக இருக்கும்.

• "டுவார்ப் கூபி' என்னும் மீன்தான் மீன் இனத்திலேயே மிகச் சிறியது. நன்கு வளர்ச்சி அடைந்த டுவார்ப் கூபி மீனின் நீளம் 1 சென்டிமீட்டர்தான் இருக்கும். இந்த வகை மீன்கள் இந்திய பெருங்கடல் பகுதியில் அதிகம் காணப்படுகின்றன.

• உலகிலேயே மிகப் பெரிய நண்டு எது தெரியுமா? ஜப்பானிஷ் ஸ்பைடர் என்னும் சிலந்தி நண்டுதான். இதன் உடல் பகுதி நீளம் மட்டும் ஓர் அடி. கால்களின் நீளம் 11 அடி ஆகும்.

• குட்டியான நண்டின் நீளம் எவ்வளவு தெரியுமா? துல்லியமாக அளவு சொல்ல முடியாது. ஒரு பட்டாணியை விட கொஞ்சம் பெரிதாக இருக்கும்.

- கா. முருகேஸ்வரி, கோவை.
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

தகவல் துளிகள்  Empty Re: தகவல் துளிகள்

Post by Muthumohamed Sat Jun 08, 2013 10:19 pm

விந்தை உயிரினங்கள்

• மண்புழு தோல் மூலமாக சுவாசிக்கிறது.

• மூக்கில் பல் உள்ள உயிரினம் முதலை.

• வயிற்றில் பல் கொண்ட பறவை கிவி.

• காலில் காதுள்ள உயிரினம் வெட்டுக்கிளி.

• நத்தை, அரம் போன்ற நாக்கினால்இரை உண்கிறது.

• சிலந்தி எதையும் சாப்பிடாமல் 10 வருடங்கள் வரை உயிர் வாழும்.

• நீர் குடிக்கத் தெரியாத விலங்கு ஓணான்.

• பின்னோக்கிப் பறக்கும் பறவை கிங்கப்.

• குக்குஜோ என்னும் வண்டினம் ஒளிரும் தன்மையுடையது.

• இமையுள்ள பறவை நெருப்புக் கோழி.
("அறிவியல் அறிவோம்' நூலிலிருந்து...)

தொகுப்பு: என். கணேசன், வேலூர்.


நன்றி தினமணி சிறுவர் மணி
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

தகவல் துளிகள்  Empty Re: தகவல் துளிகள்

Post by Muthumohamed Sat Jun 08, 2013 10:20 pm

அட அப்படியா!

• கால் விரல் நகங்களைவிட கை விரல் நகங்கள் சுமார் நாலு மடங்கு வேகமாக வளர்கின்றன

• சலிப்பு என்று பொருள்படும் "Boredom' என்ற வார்த்தையை உருவாக்கியவர் எழுத்தாளர் சார்லஸ் டிக்கன்ஸ்

• பல ஆண்டுகளாக சுருட்டு புகைத்து வரும் ஒருவரின் ரத்தத்தை அட்டை கடித்து உறிஞ்சினால் அந்த அட்டை இறந்துவிடும்.

• "ஆக்டினோ டைசீட்' என்ற உயிரினம் நிலத்தில் ஒருசிட்டிகை அளவுள்ள மண்ணில் நிறைய உள்ளது. இதன் மீது மழை பெய்யும்போது, இந்த உயிரினம் கிளர்ந்து எழுகிறது. அப்போது ஏற்படும் வாசனையைத்தான் மண் வாசனை என்கிறோம்.

• ஆக்டோபஸ் பிறக்கும்போது ஒரு ஈ அளவுதான் இருக்கும்.

• பறவை இனத்தில் ஆந்தையால் மட்டுமே நீல நிறத்தை காண முடியும்.


ஞாயிறு கொண்டாட்டம்
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

தகவல் துளிகள்  Empty Re: தகவல் துளிகள்

Post by Muthumohamed Sat Jun 08, 2013 10:21 pm

1.தண்ணீருக்கு அடியில் சென்று ஆராய்ச்சி செய்ய உதவும் மூச்சு கருவியின் பெயர் ?
விடை : ஸ்கியூபா (SCUBA - self Cointained Underwater Breathing Apparatus)

2.முதன் முதல் 1893 ம் ஆண்டு நினைவு தபால் தலையை வெளியிட்ட நாடு
விடை : அமெரிக்கா.

3.தொலைக்காட்சியில் பயன்படுத்தப்படும் மூன்று அடிப்படை நிறங்கள்?
விடை : பச்சை, நீலம், சிகப்பு

4.பிளாஸ்டிக்குகளை எரிக்கும் பொழுது எந்த நச்சுப் புகை வெளியகிறது.
விடை :டையாக்சின்

5.சூப்பர் கணனியின் வேகம் வினாடிக்கு எத்தனை?
விடை : ஃலாப்ஸ்ப் (Flops) என்ற அடிப்படையில் கணக்கிடப்படுகிறது.

6.பாம்பு எதன் மூலம் வாசனையை உணர்கிறது.
விடை : நாக்கின் மூலம்

7.காண்டா மிருகத்தின் கொம்புகள் உண்மையில் எலும்புகள் அல்ல. எதனால் உள்ளன.
விடை : அவை மிகக் கடினமான மயிரிழைகளால் உருவானவை.

8. எந்த மீனுக்கு இரண்டு கண்களில் நான்கு விழித்திரைகள் உள்ளன.
விடை :அனப்லெப்ஸ்

9.கடுமையான வெப்பத்தில் இருந்து பாதுகாத்துக்கொள்ள நீர் யானையின் தோலில் ஒருவித திரவம் சுரக்கும். அதன் பெயர் என்ன.
விடை : இளஞ்சிகப்பு நிறத்தாலான திரவம் சுரந்து, குளிர்ச்ச்சியை ஏற்படுத்தும்.

10. எந்தப்பூச்சி ஓராண்டு வரையிலும் கூட பனிக்கட்டியினுள் உயிருடன் இருந்து, ஐஸ் கரைந்தபின் வெளிவரும் ஆற்றல் கொண்டது.
விடை :உண்ணி எனப்படும் தெள்ளுப்பூச்சி,

11.உலகிலேயே உயரமான சிகரம் எவரெஸ்ரட், இதன் உயரம் எத்தனை 8848 மீட்டர்கள்.
விடை : உயரம் 8848 மீட்டர்கள்

12.திரை அரங்குகளே இல்லாத நாடு
விடை : பூட்டான்.

13.உலகிலேயே மிகப் பெரிய நூலகம்?
விடை : மாஸ்கோவில் உள்ள லெனின் நூலகம்.

14.உலகிலேயே துனியில் செய்திதாள் வெளியிடும் நாடு ?
விடை : ஸ்பெயின்.

15.அஞ்சல் தலையில் தனது நாட்டின் பெயரைக் கொண்டிராத நாடு
விடை : ஐக்கிய இராஜ்ஜியம்.

தினம் ஒரு செய்தி
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

தகவல் துளிகள்  Empty Re: தகவல் துளிகள்

Post by Muthumohamed Sat Jun 08, 2013 10:21 pm

வனவிலங்கு தடுப்புச்சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு எது?

விடை : கி பி 1890

உலக சுற்றுச்சுழல் தினம் என்று கொண்டாடப்படுகிறது?

விடை : ஜூன் 5

சென்னை மெரினா கடற்கரையில் உள்ள உழைப்பாளர்கள் சிலையை செய்தவர் யார் ?

விடை : டி பி ராய்.

ஹாலிவுட் படத்திற்கு முதல் முதலில் இசை அமைத்த இந்தியர் யார் ?

விடை :வித்யா சாகர்.

சுதந்திர இந்தியாவின் முதல் சட்ட அமைச்சர் யார்?

விடை : டாக்டர் பி ஆர் அம்பேத்கார்.

மிக நீண்ட காலம் சுதந்திர இந்தியாவின் குடியரசு தலைவராக இருந்தவர் யார்?

விடை : டாக்டர் ராஜேந்திர பிரசாத்.

தமிழகத்தில் உப்பு சத்தியாகிரகத்தை தலைமை ஈற்று நடத்தியவர் யார்?

விடை : ஸ்ரீ ராஜகோபலாச்சாரி.

சுப்ரமணிய பாரதியின் பிறந்த ஊர் எது?

விடை : எட்டயபுரம்.

சேர மன்னர்கள் மட்டுமே பாடிய எட்டுத்தொகை நூல் எது?

விடை : பதிற்றுப்பத்து.

யாருடைய பிறந்த நாளை தேசிய விளையாட்டு தினமாக கொண்டாடப்படுகிறது?

விடை : தயான் சந்த்.

உலகின் மிகப்பெரிய எரி எது?

விடை : பைகால் எரி.

உலக மக்கள் தொகை தினம் என்று கொண்டாடப்படுகிறது?

விடை : ஜூலை 11 .

கொடி நாள் என்று கொண்டாடப்படுகிறது?

விடை : டிசம்பர் 7 .

இந்தியாவின் இணைப்பு மொழியாக கருதப்படுவது?

விடை : ஆங்கிலம்.

வறுமை ஒழிப்பிற்கான ஐ.நா விருது பெற்ற இந்தியர் யார்?

விடை : பாத்திமா பீவி.

ஜீரோ வாட் பல்பு என்பது உண்மையில் எதனை வாட்கள் கொண்டது?

விடை : 15 வாட்.

உலக அமைதிக்கான நோப்லே பரிசை சிபாரிசு செய்வது எந்தநாடு?

விடை : நார்வே.

உயர்நீதிமன்ற நீதிபதிகளின் ஒய்வு வயது?

விடை : 62

காளானில் இருந்து தயாரிக்கப்படும் மருந்து எது?

விடை : பென்சிலின்.

லட்சத்தீவில் அதிகம் பேசப்பட்டு மொழி எது ?

விடை : மலையாளம்.

மனிதன் ஒரு அரசியல் மிருகம்' எனக் கூரியவர் யார்?

விடை : அரிஸ்டாட்டில்.

சிவப்பு எறும்பின் கொடுக்கில் அமைத்துள்ள அமிலம் எது?

விடை : பார்மிக் அமிலம்.

மகாவீரர் பிறந்த இடம் எது?

விடை : வைஷாலி.

ஹாரி பாட்டர் நாவலின் ஆசிரியர் யார்?

விடை : ஜே. கே. ரௌலிங்.

உலக சிக்கன நாள் என்றுக் கொண்டாடப் படுகிறது?

விடை : அக்டோபர் 30.

தினம் ஒரு செய்தி
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

தகவல் துளிகள்  Empty Re: தகவல் துளிகள்

Post by Muthumohamed Sat Jun 08, 2013 10:22 pm

நெல் விளைச்சல் தரும் நிலத்தில் இருந்து அதிகப்படியாக வெளிவரும் வாயு?

விடை : ஈத்தேன்.

இந்தியாவின் முதல் சட்ட அமைச்சர் யார்?

விடை : அம்பேத்கர்.

ஆஸ்திரேலியாவின் முதல் பெண் பிரதமர் யார்?

விடை : ஜூலியா கில்போர்ட்.

மனிதனுக்கு ஒரு நாளைக்கு எத்தனை கலோரி உணவு தேவை?

விடை : 2500 கலோரி

தமிழ் கலண்டரின் முதல் மாதம் எது?

விடை : சித்திரை

முஸ்லிம் கலண்டரின் முதல் மாதம் எது?

விடை : முஹரம்

ஆங்கில கலண்டரின் முதல் மாதம் எது?

விடை : ஜனவரி

உலகத்தில் மிகப் பெரிய அரண்மனை உள்ள நாடு?

விடை : "சீன இம்பிரியல் பலஸ்" 178 ஏக்கர் நிலப்பரப்பு

சாதாரண பென்சிலால் சுமார் எத்தனை நீளத்துக்கு கோடு வரையலாம்?

விடை : 35 மைல்

ஆகாய விமானங்களின் வேகத்தை அளக்கும் கருவி எது?

விடை : டேக்கோ மீட்டர்

மனித உடலில் எத்தனை சதவிகிதம் நீர் உள்ளது?

விடை : 70%

5. காபித்தூளில் கலக்கப்படும் சிக்கரித்தூள், சிக்கரி என்னும் தாவரத்தின் எதிலிருந்து தயாரிக்கப்படுகிறது?

விடை : வேர்கள்

பட்டுப் புழு உணவாக உண்பது?

விடை : மல்பெரி இலை

ஓர் அடிக்கு எதனை செண்டிமீடர் ?

விடை : 30

மியுரியாடிக் அமிலம் என்பது எந்த அமிலத்தின் வேறுபெயர் ?

விடை : ஹைட்ரோகுளோரிக் அமிலம்

தினம் ஒரு செய்தி
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

தகவல் துளிகள்  Empty Re: தகவல் துளிகள்

Post by Muthumohamed Sat Jun 08, 2013 10:22 pm

1. பெண் கமாண்டோ படையை உருவாக்கிய முதல் மாநிலம் எது ?
விடை : தமிழ்நாடு.

2. வரலாற்றாசிரியர்களின் சொர்க்கம் என அழைக்கப்படும் நாடு எது?
விடை : சீனா.

3. சூரியன் உதிக்கும் நாடு என எந்த நாட்டினைக் குறிப்பிடுகின்றனர்?
விடை : ஜப்பான்.

4. ஆலிவ் மரங்கள் அதிகம் காணப்படும் கண்டம் எது?
விடை : ஐரோப்பா.

5. தென்னிந்தியாவின் நுழைவுவாயில் எது ?
விடை : சென்னை.

6. கிரெடிட் கார்ட் வழங்கிய முதல் இந்திய வங்கி எது?
விடை : சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா.

7. இரண்டாம் உலகத் தமிழ் மாநாடு நடைபெற்ற ஆண்டு?
விடை : 1950.

8. மைக்கா உற்பத்தியில் முன்னணி வகிக்கும் நாடு எது?
விடை : இந்தியா.

9. போர்க்களம் என வர்ணிக்கும் நாடு எது?
விடை : பெல்ஜியம்.

10. ஓரினச்சேர்க்கை திருமணத்தை முதலில் அனுமதித்த நாடு எது?
விடை : டென்மார்க்.

11. பொக்காரோ இரும்பு எக்கு தொழிற்சாலை அமைந்துள்ள இடம் எது?
விடை : ஜார்கண்ட்.

12. தமிழகத்தின் புகைப் பெற்ற ஜவுளி சந்தை அமைந்துள்ள இடம் எது?
விடை : ஈரோடு.

13. 2006 ஆம் ஆண்டு உலக கால்பந்து போட்டி நடைபெற்ற இடம் எது?
விடை : ஜெர்மனி.

14. இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே உள்ள எல்லைக் கோட்டின் பெயர் என்ன?
விடை : ராட்க்ளிப்

15. எந்த நாட்டில் நெருப்புக்கோழி ஓட்டப்பந்தயம் பிரபலமாக உள்ளது?
விடை : கென்யா

16. இன்போசிஸ் நிறுவனத்தின் பன்னாட்டு கல்வியகம் எங்கு அமைந்துள்ளது?
விடை : மைசூர்

17. கோவாவின் பிராந்திய மொழி எது?
விடை : கொன்கனி.

18. தேசிய மனித உரிமை ஆணையம் இந்தியாவில் அமைக்கப்பட்ட ஆண்டு?
விடை : 1993.

19. உலகின் சர்க்கரைக் கிண்ணம் என அழைக்கப்படும் நாடு எது?
விடை : கியூபா.

20. ரிசர்வ் பேங்க் ஒப் இந்தியா எந்த ஆண்டு தேசியமயமாக்கப்பட்டது?
விடை : 1969

21. அன்னை தெரசா பிறந்த நாடு எது?
விடை : அல்போனியா

22. பரப்பளவில் பெரிதான இந்தியா மாநிலம் எது?
விடை : ராஜஸ்தான்.
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

தகவல் துளிகள்  Empty Re: தகவல் துளிகள்

Post by Muthumohamed Sat Jun 08, 2013 10:25 pm

1.கபீரை எடுத்து வளர்த்தது யார் ?
-முஸ்லீம் நெசவாளர்

2.வங்காள நீதித்துறை சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு எது ?
-1781

3.லக்னோ உடன்படிக்கை செய்த ஆண்டு எது ?
-1916

4.காந்தியடிகள் யாரை “ கங்கை “ என மனமுருகப்பாராட்டினார்?
-கோபாலகிருஷ்ண கோகலே

5.லோடி வம்சத்தின் கடைசி சுல்தான் யார் ?
-இப்ராஹீம் லோடி

முத்தாரம்
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

தகவல் துளிகள்  Empty Re: தகவல் துளிகள்

Post by Muthumohamed Sat Jun 08, 2013 10:26 pm

ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகம் எங்குள்ளது?
நியூயார்க்

இலங்கையின் தேசியகீதத்தை இயற்றியவர் யார்?
ஆனந்த சமரக்கோன்

நாய்க்கு எத்தனை பற்கள் உண்;டு?
42

யானைக்கு எத்தனை பற்கள் உண்;டு?
4

உலகின் கனவுநகரம் என அழைக்கப்படும் நாடு?
கொங் கொங்

பேரீச்சை அதிகம் உற்பத்தி செய்யும் நாடு?
ஈராக்

டைனமைட்டை கண்டுபிடித்தவர் யார்?
ஆல்பிரட் நோபல்

இலங்கையின் தேசியப்பறவை எது?
காட்டுக்கோழி

இந்தியாவின் தேசியப் பறவை எது?
மயில்

நின்று கொண்டு தூங்கும் மிருகம் எது?
யானை

கறுப்பு தங்கம் என அழைக்கப்படுவது எது?
நிலக்கரி.

தினமணி
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

தகவல் துளிகள்  Empty Re: தகவல் துளிகள்

Post by Muthumohamed Sat Jun 08, 2013 10:26 pm

தமிழ் நாட்டிலுள்ள மிகப்பெரிய நீர்பாசன அணைக்கட்டு

மேட்டூர் அணை

———————————–

சந்திரன் என்பது ஒரு – துணைக்கோள்
-
——————————–

மிக அதிக நச்சுத் தன்மையுடைய வாயு – கார்பன்மோனாக்சைடு
-
—————————————–

உலகிலேயே மிகச் சிறிய நாடு – வாடிகள்

———————————-
விண்வெளி ஆராய்ச்சிக்கு செலுத்தப்பட்ட முதல் விண்வெளிக்கலன்-

ஸ்புட்னிக்.
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

தகவல் துளிகள்  Empty Re: தகவல் துளிகள்

Post by Muthumohamed Sat Jun 08, 2013 10:27 pm

இந்தியாவில் மிகப்பெரிய மசூதி உள்ள இடம்

- புதுடெல்லி (ஜிம்மா மசூதி)

——————————————-
மிகப்பெரிய கோள் எனப்படுவது யாது? – ஜூபிடர்

—————————————-
மிக விரைவாக பறக்ககூடிய பறவை – சுவிப்ட்

—————————————
மிக அதிக அளவில் கல்வியறிவு பெற்ற பெண்கள்

உள்ள மாநிலம் – கேரளா
—————————————-
மிகப் பெரிய அருங்காட்சியகம் இந்தியாவில் எங்குள்ளது?

- கல்கத்தா
——————————————-

இந்தியாவில் மிக நீளமான அணை எது – ஹீராகுட்
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

தகவல் துளிகள்  Empty Re: தகவல் துளிகள்

Post by Muthumohamed Sat Jun 08, 2013 10:27 pm

1.உலகின் நீளமான நாள்
ஜீன் 21

2.உலகின் குறுகிய நாள்
டிசம்பர் 22

3.சிரிக்க வைக்கும் வாயு
நைட்ரஸ் ஆக்ஸைடு

4.நள்ளிரவில் சூரியன் உதிக்கும் நாடு
நார்வே

5.உலகிலே அதிக தங்கம் உற்பத்தி ஆகும் நாடு
நைஜிரியா

6.கடல் தண்ணீர் ஏன் உப்பாக இருக்கிறது
நதிகள் கொண்டுவரும் உப்புக்களால்

7.இந்தியா ரூபாய் அச்சிடக்கப்படும் இடம்
ஞாசிக்

8.ஐ நா சபை உருவான ஆண்டு
1945

9.விண்வெளிக்கு சென்ற முதல் மனிதன் யார்
யூரிககாரின்

10.இந்தியாவில் முதல் மருத்துவ கல்லூரி அமைக்கப்பட்ட இடம்
கொல்கத்தா

12.மிதிவண்டியை கண்டுபிடித்தவர்
மேக்மில்லன்

13.இந்தியாவின் முதல் அனுமின் நிலையம்
தாராபுரம்

14.இந்தியாவின் பூந்தோட்டம் என அழைக்கப்படுவது
பெங்களூர்

15.சீனவின் துயரம் எனப்படுவது
மஞ்சள் ஆறு

16.அமெரிகாவிற்கு சுதந்திர சிலலையை வழங்கிய நாடு
ஃபிரான்ஸ்

17.இந்தியாவின் முதல் திரைப்பட இயக்குனர்
தாதா சாஹிப் பால்கே

18."கானிபல்" என யாரை அழைப்போம்
மனிதனின் சதையை உண்பவரை

19.அரண்மனை நகரம் என அழைக்கப்படுவது
கொல்கத்தா

20.தூக்கத்திற்கான ராகம் எது
நீலாம்பரி

21.இங்லாந்தின் பூந்தோட்டாம் என் அழைக்கப்படுவது
கெண்ட்

22.இந்தியாவின் பிங்க் நகரம் என்பது
ஜெய்பூர்.

கருத்து களம்
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

தகவல் துளிகள்  Empty Re: தகவல் துளிகள்

Post by Muthumohamed Sat Jun 08, 2013 10:28 pm

1. "இன்சுலின்' கண்டுபிடித்த விஞ்ஞானி யார்?
விடை : பான்டிங்

2. நியூட்ரான் கண்டறிந்தவர் யார்?
விடை : சாட்விக்.

3. சமுகவியல் என்ற சொல்லை தோற்றுவித்தவர் யார்?
விடை : காம்டே.

4. உதகமண்டலத்தை கண்டறிந்து மேம்படுத்தியவர் யார்?
விடை : ஜான் சுல்லிவன்.

5. சுழ்நிலை என்ற சொல்லை உருவாக்கிய விலங்கியல் வல்லுநர் யார்?
விடை : ரேய்ட்டர்

6. வரைபடத்தை அறிமுகம் செய்தவர்கள் யார்?
விடை : சுமேரியர்கள்.

7. ரொக்கட்டை முதன் முதலில் உருவாக்கியவர்கள் யார்?
விடை : ஜெர்மனியர்.

8. கண்ணாடிப் பாத்திரங்களை அறிமுகப்படுத்தியவர்கள் யார்?
விடை : எகிப்தியர்கள்.

9. கிரிகெட் விளையாட்டை கண்டறிந்தவர்கள் யார்?
விடை : ஆங்கிலேயர்.

10. பூச்சியத்தைக் கண்டு பிடித்தவர்கள் யார்?
விடை : இந்தியர்.

11. காகிதத்தைக் கண்டு பிடித்தவர்கள் யார்?
விடை : சீனர்கள்.

12. மார்கொனிக்கு முன்பே "ரேடியோ அலைகள் " பற்றி ஆய்வு செய்த இந்தியா விஞ்சானி யார்?
விடை : ஜகதீச சந்திர போஸ்.
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

தகவல் துளிகள்  Empty Re: தகவல் துளிகள்

Post by Muthumohamed Sat Jun 08, 2013 10:28 pm

1. எல்.ஐ.சி. பொதுத் துறை நிறுவனமா?
விடை : ஆம்

2. சிறு தொழில் நிறுவனங்களுக்கான நிதி உதவியை தரும் மிகப் பெரிய நிறுவனம் எது?
விடை : சிட்பி

3. எச்.பி.ஜே. பைப்லைன் திட்டமானது எதை கொண்டு செல்ல உருவாக்கப்பட்டது?
விடை : இயற்கை வாயு

4. 1750ம் ஆண்டில் எந்த நாட்டில் தொழிற்புரட்சி உருவானது?
விடை : இங்கிலாந்து

5. கடைசியாக தொழில்மயமான ஐரோப்பிய நாடு எது?
விடை : ரஷ்யா

6. ஆசியாவில் முதன் முதலாக தொழில் மயமான நாடு எது?
விடை : ஜப்பான்

7. ஒரே நேரத்தில் பணக்காரருக்கும் ஏழைகளுக்குமாக செயல்படும் 2 நாடுகள் இங்கிலாந்தில் உள்ளன என கூறியவர் யார்?
விடை : டிஸ்ரேலி

8. இங்கிலாந்தில் தொழிற்சாலைகளுக்கான விதிமுறைகளை வடிவமைத்த முதலாவது தொழில் சட்டம் எந்த ஆண்டு கொண்டு வரப்பட்டது?
விடை : 1802

9. தாஸ் கேபிடல் என்னும் புத்தகத்தத எழுதியவர் யார்?
விடை : கார்ல் மார்க்ஸ்

10. பாஸ்டன் தேனீர் விருந்து என்பது எதோடு தொடர்புடையது?
விடை : தேயிலை மீதான வரி

11. பொருளாதாரத்தின் தந்தை என அழைக்கப்படுபவர் யார்?
விடை : ஆடம் ஸ்மித்

12. வளர்ச்சி குறைந்த நாடுகளின் தன்மை என்ன?
விடை : வறுமைக் கோட்டுக்குக் கீழே அதிகமானோர் இருப்பது

13. வளர்ச்சியின் 5 நிலைகள் என்னும் கோட்பாட்டைத் தந்தது யார்?
விடை : ராஸ்டோவ்

14. நாட்டின் பிரிவினையால் பாதிக்கப்பட்ட 2 தொழில்கள்
விடை : ஜூட் மற்றும் பருத்தி

15. இந்தியாவில் மிக அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலம் எது?
விடை : உ.பி.

16. இந்திய திட்டக் குழுவிற்கு தலைவர் யார்?
விடை : பிரதமர்.
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

தகவல் துளிகள்  Empty Re: தகவல் துளிகள்

Post by Muthumohamed Sat Jun 08, 2013 10:29 pm

மின்மினிகள்

மின்மினிகள் தங்கள் இணையைக் கவர்வதற்காகத்தான் மின்னுகின்றன. ஆண் மின்மினிக்கும், பெண் மின்மினிக்கும் இந்த வெளிச்சம் உண்டு. பெண் மின்மினிப் பூச்சியின் வெளிச்சம், ஆண் மின்மினியின் வெளிச்சத்தைவிட குறைந்த நேரம் ஒளிரக் கூடியதாக இருக்கும். மின்மினியின் வயிற்றுப் பகுதியின் பின்புறத்திலிருந்துதான் வெளிச்சம் வருகிறது. அதன் உடலிலுள்ள "லூஸிபெரோஸ், லூஸிபெரின்' எனும் ரசாயனப் பொருட்களின் செயல்பாட்டால்தான் வெளிச்சம் உண்டாகிறது. இந்த செயல்பாட்டிற்கு நிறைய ஆக்ஸிஜன் தேவைப்படும். இது வெளிச்சம் மட்டும்தான். சற்றும் வெப்பமாக இருக்காது. மின்மினிகளில் பல இனங்கள் இருக்கின்றன. ஒளிர்வதற்கும் அணைவதற்கும் இடையிலான இடைவெளி, ஒவ்வொரு இனத்திற்கும் வேறுபடும். ஒரு மின்மினி தன் இனத்தைச் சேர்ந்ததா இல்லையா என்று இன்னொரு மின்மினி, இந்த ஒளிர்ந்தணையும் இடைவெளியை வைத்துத்தான் கண்டுபிடிக்கிறது.
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

தகவல் துளிகள்  Empty Re: தகவல் துளிகள்

Post by Muthumohamed Sat Jun 08, 2013 10:29 pm

1. ஒரு குதிரைத்திறன் என்பது விடை : 746 வாட்

2. வௌவால் ஏற்படுத்துவது விடை : மீயொலி

3. குவி ஆடியில் தோன்றும் பிம்பங்கள் அனைத்தும் விடை : மாயபிம்பம்

4. மழைத்துளிகள் கோள வடிவத்தைப் பெறக் காரணம் விடை : பரப்பு இழுவிசை

5. முதன்மை நிறங்கள் எதனை சொல்லப்படும் விடை : சிவப்பு, பச்சை, நீலம்

6. அகச்சிவப்பு கதிர்களின் இயற்கை மூலம் விடை : சூரியன்

7. ஒரு கிலோகிராம் நிறையுள்ள ஒரு பொருளின் மீது செயல்படும் புவி ஈர்ப்பு விசை விடை : 9.8 ச

8. ஒரு சிறிய கோப்பையில் உள்ள கொதி நீரின் வெப்ப நிலையும் ஒரு பெரிய பாத்திரத்தில் உள்ள கொதி நீரின் வெப்ப நிலையும் எப்படி இருக்கும் விடை : சமமாக இருக்கும்

9. காற்றாலைகள் அமைக்க தேவையான காற்றின் சராசரி வேகம் விடை : 18 கி.மீ.

10. தகவல்களை எடுத்துச் செல்வதில் மிகவும் சக்திவாய்ந்தவை எவை? விடை : ஆப்டிகல் பைபர்

11. நீராவி இன்ஜினை கண்டு பிடித்தவர் யார்? விடை : ஜேம்ஸ்வாட்

12. தீர்ந்து விடாத ஆற்றல் மூலம் விடை : சூரியன்

13. ஒரு துப்பாக்கியிலிருந்து வெளிவரும் குண்டின் இயக்கம் விடை : நேர்கோட்டு இயக்கம்

14. ஒரே உயரத்தில் இருந்து தடையின்றி தானே விழும் வெவ்வேறு எடையுள்ள பொருட்கள் எப்போது புவியில் விழும் விடை : அவை ஒரே நேரத்தில் விழும்

15. ரயில் நிலையத்தை நோக்கி ரயில் வரும்போது ஒலியின் சுருதி அதிகமாகவும் நம்மைவிட்டு விலகிச் செல்லும்போது குறைவாக கேட்பதை டாப்ளர் விளைவு மூலம் 1842ம் ஆண்டு விளக்கியவர் விடை :கிறிஸ்டியன் டாப்ளர்

16. பாராசூட் திறக்காத நிலையில் வானத்தில் குதிப்பவரின் முற்று திசை வேகம் ஏறக்குறைய எத்தனை கி.மீட்டர் இருக்கும்? விடை : 200 கி.மீ

17. கோள்களின் இயக்கம் பற்றிய கெப்ளரின் முதல் விதியின் மற்றொரு பெயர் விடை : சுற்றுப்பாதைகளின் விதி

18. கருமை நிற பொருட்கள் எல்லா நிறங்களையும் விடை : உட்கவரும்

19. பிரஷர்குக்கரில் (அழுத்த சமைப்பான்) நீரின் கொதி நிலை விடை : 120ர் ஈ

20. ஒரு மின் விளக்கின் ஆயுள் விடை : 1,000 மணிகள்

21. மிதிவண்டி மின் இயக்கி செயல்படும் தத்துவம் விடை : மின்காந்த தூண்டல்

22. ஒரு பொருள் திட நிலையில் இருந்து நேரடியாக வாயு நிலைக்கு மாறும் நிகழ்வு விடை : பதங்கமாதல்

23. ஆவியாதல் திரவத்தின் எப்பகுதியில் நிகழும் விடை : திரவத்தின் மேற்பரப்பில்

24. ஈரம் மிகுந்த காற்றில் உலர்ந்த காற்றை விட ஒலி விடை : வேகமாக பரவும்.
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

தகவல் துளிகள்  Empty Re: தகவல் துளிகள்

Post by Muthumohamed Sat Jun 08, 2013 10:29 pm

1) எலுமிச்சை பழத்தில் உள்ள அமிலம் எது?
2) சிறுநீரில் உள்ள அமிலம் எது?
3) எறும்பின் கொடுக்கில் உள்ள அமிலம் எது?
4) புளித்த பாலிலில் உள்ள அமிலம் எது?
5) கெட்டுப்போன வெண்ணெய்யில் உள்ள அமிலம் எது?
6) புளி, திராட்சை, ஆப்பிள் இவற்றி்ல் உள்ள அமிலம் எது?
7) வினிகரில் உள்ள அமிலம் எது?
8) ஆப்பிளில் உள்ள அமிலம் எது?
9) தக்காளியில் உள்ள அமிலம் எது?
10) கொழுப்புகளில் உள்ள அமிலம் எது?
11) பித்தநீரில் உள்ள அமிலம் எது?

விடைகள் :
1) சிட்ரிக் அமிலம்
2) யூரிக் அமிலம்
3) பார்மிக் அமிலம்
4) லாக்டிக் அமிலம்
5) பியூட்டிரிக் அமிலம்
6) டார்டாரிக் அமிலம்
7) அசிட்டிக் அமிலம்
8)மாலிக் அமிலம்
9)ஆக்ஸாலிக் அமிலம்
10) ஸ்டீயரிக் அமிலம்
11) கோலிக் அமிலம்.
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

தகவல் துளிகள்  Empty Re: தகவல் துளிகள்

Post by Muthumohamed Sat Jun 08, 2013 10:30 pm

1. முடிச்சாயம் தயாரிக்க பயன்படுவது
விடை : சில்வர் நைட்ரேட்

2. குளோரினிலிருந்து தயாரிக்கப்படும் மருந்து பொருள்
விடை : குளோரோஃபார்ம்

3. வாயு விளக்குப் பொருட்களில் பயன்படுவது
விடை : CeO2

4. எலக்ட்ரான்களை கண்டறியப் பயன்படும் கருவி எது?
விடை : மின்னிறக்கக்குழாய்

5. கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றுள் சரியாக பொருந்தாதது எது
விடை : புரோட்டான் - எதிர்மின் சுமை

6. பனிக்கட்டி போன்ற அசிட்டிக் அமிலம் என்பது
விடை : 100% அசிட்டிக் அமிலம்

7. வெள்ளை துத்தம் என்பது
விடை : ஜிங்க் சல்பேட்

8. சல்பைடு தாது எம்முறையில் அடர்பிக்கப்படுகிறது
விடை : நுரை மிதப்பு முறை

9. 25% தனி ஆல்கஹால் மற்றும் 75% பெட்ரோல் கலந்த கலவை
விடை : ஆற்றல் ஆல்கஹால்

10. வெள்ளை சிமெண்ட் வெள்ளையாக இருப்பதன் காரணம் என்ன?
விடை : இரும்பு இல்லாததால்.
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

தகவல் துளிகள்  Empty Re: தகவல் துளிகள்

Post by Muthumohamed Sat Jun 08, 2013 10:30 pm

1. பூக்கும் தாவரத்தின் பெயர்
விடை : பெனரோ கேம்கள்

2. மஞ்சள் காமாலை நோயைக் குணப்படுத்த பயன்படும் தாவரம்
விடை : கீழாநெல்லி

3. தாவர வைரஸ்களில் காணப்படுவது
விடை : ஆர்.என்.ஏ.

4. வேரூன்றிய நீர்வாழ் தாவரத்திற்கு ஓர் எடுத்துக்காட்டு
விடை : அல்லி

5. பூஞ்சைகளின் வெஜிடேடிங் நிலைக்கு
விடை : தாலஸ்

6. பூஞ்சைகளைப் பற்றிய தாவரவியல் பிரிவு
விடை : மைக்காலஜி

7. தாவரத்தின் ஆண்பாகம் என்பது
விடை : மகரந்த தாள் வட்டம்

8. கூட்டுயிரி வாழ்க்கையில் பொதுப் பயன்களைப் பெற்று வாழும் பூஞ்சை
விடை : லைக்கன்கள்

9. சிறுகுடலின் நடுப்பகுதியின் பெயர்
விடை : ஜெஜீனம்

10. உமிழ்நீரில் காணப்படும் நொதி
விடை : டயலின்

11. கணுக்காலில் உள்ள எலும்புகளின் எண்ணிக்கை
விடை : 7

12. பட்டுப்புழுவில் வரும் புரோட்டோசோவன் நோய்
விடை : பெப்ரைன்

13. ஓசோன் படலத்தை குறைக்கும் பொருள்
விடை : குளோரோ புளூரோ கார்பன்

14. யூக்ளினாவின் இடப்பெயர்ச்சி உறுப்பு
விடை : கசையிழை

15. மனிதனின் உடலில் உள்ள மொத்த எலும்புகள்
விடை : 206

16. இரைப்பை முன் சிறுகுடலில் சேருமிடம்
விடை : பைலோரஸ்

17. மீனில் அதிகமாக உள்ள ஊட்டச்சத்து
விடை : புரதம்

18. பயிர்களுக்குத் தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களும் எதில் உள்ளன?
விடை : காம்போஸ்ட்

19. எந்த நோயை தடுப்பூசியால் தடுக்க முடியாது?
விடை : சர்க்கரை வியாதி

20. ஆயுர்வேதம் என்பது
விடை : வாழ்வு பற்றிய அறிவியல்

21. வகைப்பாட்டு அறிவியலை உருவாக்கியவர்
விடை : கெரல் வினெயெஸ்

22. ரத்த ஓட்டத்தையும் இதயத்தின் செயல் பாட்டினையும் கண்டுபிடித்தவர்
விடை : வில்லியம் ஹார்வி

23. உடல் உஷ்ண நிலையை சீராக்குவது
விடை : தோல்.
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

தகவல் துளிகள்  Empty Re: தகவல் துளிகள்

Post by Muthumohamed Sat Jun 08, 2013 10:30 pm

1. எந்த ஆண்டு இந்தியா ஒலிம்பிக் போட்டிகளில் தங்கம் வென்றது?
விடை : 1928

2. இந்திய வீராங்கனை சுமன் பாலா எந்த விளையாட்டோடு தொடர்புடையவர்?
விடை : ஹாக்கி

3. புல்ஸ் ஐ (இன்ப்ப்'ள் ஊஹ்ங்) என்ற வார்த்தை எந்தப் போட்டியில் பயன்படுத்தப்படுகிறது?
விடை : துப்பாக்கி சுடுதல்

4. பங்க்கர், சுக்கர், மேலட் என்ற வார்த்தைகள் எந்த விளையாட்டுடன் தொடர்பு உடையவை?
விடை : போலோ

5. டைகர் (பண்ஞ்ங்ழ்) என்று அழைக்கப்பட்ட முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் யார்?
விடை : மன்சூர் அலிகான் பட்டோடி

6. உபேர் கோப்பை (மக்ஷங்ழ் ஈன்ல்) எந்த விளையாட்டுக்குப் பரிசாகத் தரப்படுகிறது?
விடை : பேட்மின்டன்

7. வாட்டர் போலோ விளையாட்டில் ஒரு அணிக்கு எத்தனை வீரர்கள் இருப்பார்கள்?
விடை : 7

8. ஆஹாகான் கோப்பை எந்த விளையாட்டுக்குப் பரிசாகத் தரப்படுகிறது?
விடை : பேட்மின்டன்

9.வெகு காலத்திற்கு முன்பு இந்தியாவில் நடத்தப் பட்ட கால்பந்து போட்டி எது?
விடை : டூரான்டோ கப் போட்டி

10. ரங்கசாமி கோப்பை எந்த விளையாட்டுக்குப் பரிசாகத் தரப்படுகிறது?
விடை : ஹாக்கி

11. தாமஸ் கோப்பை எந்த விளையாட்டுக்குப் பரிசாகத் தரப்படுகிறது?
விடை : பேட்மின்டன்

12. தயான் சந்த் டிராஃபி எந்த விளையாட்டிற்கு வழங்கப்படுகிறது?
விடை : ஹாக்கி

13. கிரிக்கெட் ஸ்டம்புகளின் உயரம் தரைமட்டத்திலிருந்து எவ்வளவு இருக்க வேண்டும்?
விடை : 28 அங்குலம்

14. கனடா கப், ஆஸ்ட்ரேலியன் மாஸ்டர்ஸ் டிராஃபி போன்றவை எந்த விளையாட்டுக்கு வழங்கப்படுகிறது?
விடை : கோல்ப்

15. நோ டிரம்ப் (சர் ற்ழ்ன்ம்ல்) என்ற வார்த்தை எந்த விளையாட்டுடன் தொடர்புடையது?
விடை : பிரிட்ஜ்

16. எது விமான தாங்கிக் கப்பல்?
விடை : ஐ.என்.எஸ். விராத்

17. ஜப்பானால் தாக்கப்பட்ட பியர்ல் ஹார்பர்
விடை : ஹவாயில் உள்ள அமெரிக்க கடற்தளம்.
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

தகவல் துளிகள்  Empty Re: தகவல் துளிகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum