தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam

Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net

Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user

பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner

"எண்ணங்களும் படித்ததில் பிடித்த வண்ணங்களும்"

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Go down

"எண்ணங்களும் படித்ததில் பிடித்த வண்ணங்களும்" Empty "எண்ணங்களும் படித்ததில் பிடித்த வண்ணங்களும்"

Post by முழுமுதலோன் Sun Jun 09, 2013 2:29 pm

"எண்ணங்களும் படித்ததில் பிடித்த வண்ணங்களும்"

பிடிக்கும்

பலருக்கும்
வெளிச்சம் பிடிக்கும்
எனக்கு இருளைத்தான் பிடிக்கும்,
போலி முகங்களின் தரிசனம் மறைந்துபோவதால் .
நண்பருகளுக்கெல்லாம்
பேசுவது பிடிக்கும்
எனக்கு மௌனம்தான் பிடிக்கும்
நிஜமான உரையாடலில் நிகழ்வது அதுதான் என்பதால்.
சக மனிதர்களுக்கெல்லாம்
வெற்றி பிடிக்கும்
எனக்குத் தோல்வியும் பிடிக்கும்
எதிர்பார்ப்புக்களை குறைத்துக்கொள்ள அது கற்றுத்தருவதால்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

"எண்ணங்களும் படித்ததில் பிடித்த வண்ணங்களும்" Empty Re: "எண்ணங்களும் படித்ததில் பிடித்த வண்ணங்களும்"

Post by முழுமுதலோன் Sun Jun 09, 2013 2:30 pm

நம்மைவிட....

நம்மைவிடச்
சிறியவர்களிடம் பழகினால் ,
மனசு இளமையாகும் .
பெரியவர்களுடன் பழகினால்,
அறிவு விருத்தியாகும்.
சமமானவர்களுடன் பழகினால்
மகிழ்ச்சி அதிகமாகும்
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

"எண்ணங்களும் படித்ததில் பிடித்த வண்ணங்களும்" Empty Re: "எண்ணங்களும் படித்ததில் பிடித்த வண்ணங்களும்"

Post by முழுமுதலோன் Sun Jun 09, 2013 2:31 pm

ஜெயிப்பதுஎன்பது

தன் பலத்தால் ஜெயிப்பதைவிட
எதிரியின் பலவீனத்தால் ஜெயிப்பதையே
இன்று பலரும் செய்கிறார்கள்
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

"எண்ணங்களும் படித்ததில் பிடித்த வண்ணங்களும்" Empty Re: "எண்ணங்களும் படித்ததில் பிடித்த வண்ணங்களும்"

Post by முழுமுதலோன் Sun Jun 09, 2013 2:34 pm

வாழ்வையேனும்...

பிறப்பை பகிர்ந்துகொள்ள முடியாது
இறப்பை பகிர்ந்துகொள்ள முடியாது
வாழ்வையேனும் மற்றவர்களோடு ,மகிழ்ச்சியாக
பகிர்ந்து கொள்ளக்கூடாதா?
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

"எண்ணங்களும் படித்ததில் பிடித்த வண்ணங்களும்" Empty Re: "எண்ணங்களும் படித்ததில் பிடித்த வண்ணங்களும்"

Post by முழுமுதலோன் Sun Jun 09, 2013 2:35 pm

மனம் என்னும் "வீடியோ"

மனம் ஒரு அதிசயமான "வீடியோ காமிரா"
அது தன முன்னே நிகழும் பல நிகழ்வுகளைப் பதிவு செய்கிறது
சிலவற்றை மிக ஆழமாவும், அழுத்தமாகவும் பதிவு செய்வதுடன்
அதை " ரீ - ப்ளே"செய்து பார்த்துக்கொண்டே இருக்கிறது
சாதகமான சம்பவங்களை ,ஆழப்பதிந்துகொண்டு ,அவற்றை
திரும்பத் திரும்ப உணர்ந்து பார்க்கிறவர்கள்
பெரிய பெரிய வெற்றியைப் பெறுகிறார்கள்
ஆனால் ,பாதகமான சம்பவங்களை ஆழப்பதிந்துகொண்டு ,அவற்றை
திரும்பத் திரும்ப எதிபார்க்கிற மனமுடையவர்கள் ,தோற்றுப்போகிறார்கள்

வீடியோ கருவியைப்போலவே ,ஆரம்பக்கட்டத்தில்
பதிவு வேலையை மட்டுமே செய்யும் "எந்திரக்கருவியாக" இருக்கும் "மனம்"
நாளாக நாளாக "மந்திரக் கருவியாகிறது"
நிகழ்ந்தவற்றை பதிவு செய்யும் "எந்திர மனம்"
நாளாவட்டத்தில் ,
நிகழப்போவதை முடிவுசெய்யும் "மந்திர மனமாக"மாறுகிறது
நடந்தவற்றைக்கொண்டு ,நடக்கப்போவதை யூகிக்கும் 'மனதின் திறன்'
மிக மிக வலுவடைந்து ,
நடக்கப்போவதை யுகிப்பதோடு நின்றுவிடாமல் ,
அதை
நிகழ்த்துகிற ஆற்றல் உடையதாக மாறுகிறது
இந்த மாற்றம் நிகழும்போது கவனமாக இருந்து
உயர் நிலையை அடைய யூகிக்கும் மனதின் திறன் பெற்றால்
வெற்றி நிச்சயம் என்பது உண்மை
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

"எண்ணங்களும் படித்ததில் பிடித்த வண்ணங்களும்" Empty Re: "எண்ணங்களும் படித்ததில் பிடித்த வண்ணங்களும்"

Post by முழுமுதலோன் Sun Jun 09, 2013 2:36 pm

ஒன்றைப்பெற...

பிறந்த நாட்டில் உழைத்தபோது ,
வெளிநாடு அழைத்தது
கட்டிய மனைவி ,கண்மணிபுதல்வி
அண்ணன் தம்பி,அன்புப்பெற்றோர்,
அத்தை மாமா,அன்புமைத்துனன்
அத்தனை உறவுகள்,அன்பு இதயங்கள்
அனைத்தையும் பிரிந்து,
ஆயிரம் ஆயிரம் மைல்கள் கடந்து
அமெரிக்கா வந்தான் .
கூப்பிய கையில்,ரசத்தை ஊற்றி,
உறிஞ்சி உறிஞ்சி குடித்தவன்தான்
அம்மாவின் சமையலில் ஆயிரம் குறைகள் கண்டவன்தான்,
கத்தரிகுழம்பில், காம்பு வேகவில்லைஎன்று கடுகாய் வெடித்தவன்தான்
ஆனால் இன்று ,
அவியாத மரக்கறியை ,பெயர் அறியாத மாமிசத்தை
அவிந்துபோன ரொட்டித்துண்டை ,
கத்தியால் வெட்டி வெட்டி, விதியே என்று விழுங்குகிறான் .
யாரைக் குறை சொல்வது?
யாரிடம் போய் வெடிப்பது?
ஆனால் ஒன்று,
வீட்டின் நலனுக்காய், வெள்ளிப்பணம் ஈட்ட
வெளிநாடே வழிஎன்றாகிப்போனாதும் ஓர் உண்மை
ஆம்
ஒன்றைப் பெறவேண்டுமென்றால் ,
ஒன்றை இழக்கத்தானே வேண்டும்?
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

"எண்ணங்களும் படித்ததில் பிடித்த வண்ணங்களும்" Empty Re: "எண்ணங்களும் படித்ததில் பிடித்த வண்ணங்களும்"

Post by முழுமுதலோன் Sun Jun 09, 2013 2:37 pm

"நான்" என்பதை இழந்து விடு

வானம் கிடைத்தபோது , சிறகை இழந்துவிட்டேன்
வார்த்தை கிடைத்தபோது, கவிதை இழந்துவிட்டேன்
பாதை கிடைத்தபோது, பயணம் இழந்துவிட்டேன்
படிப்பு கிடைத்தபோது, பாடம் இழந்துவிட்டேன்
விதை கிடைத்தபோது, நிலம் இழந்துவிட்டேன்
இசை துளிர்த்தபோது, வீணை இழந்துவிட்டேன்
சுனாமி வந்தபோது , நதியை இழந்துவிட்டேன்
கிரணம் கிடைத்தபோது, நிலவை இழந்துவிட்டேன்
அந்தி வந்தபோது, இரவை இழந்துவிட்டேன்
ஆசை வந்தபோது, நெஞ்சை இழந்துவிட்டேன்
ஞானம் வந்தபோது , "நான்"இழந்துவிட்டேன்
என்னை (நான்)இழந்தபோது, எல்லாமும் அடைந்துவிட்டேன்
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

"எண்ணங்களும் படித்ததில் பிடித்த வண்ணங்களும்" Empty Re: "எண்ணங்களும் படித்ததில் பிடித்த வண்ணங்களும்"

Post by முழுமுதலோன் Sun Jun 09, 2013 2:38 pm

"இன்று"என்பது

நேற்று என்பது உடைந்த பானை
நாளை என்பது மதில் மேல் பூனை
இன்று என்பது "வாசித்துக்கொண்டிருக்கும் வீணை"
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

"எண்ணங்களும் படித்ததில் பிடித்த வண்ணங்களும்" Empty Re: "எண்ணங்களும் படித்ததில் பிடித்த வண்ணங்களும்"

Post by முழுமுதலோன் Sun Jun 09, 2013 2:39 pm

கவலையால் மறைந்துபோலும் நாட்கள்

இன்றைய கவலை , நாளை மறைந்துபோகும்
ஆனால்,
"கவலையால் மறைந்துபோகும் நாட்கள் திரும்ப வராது"
இதை உணர்ந்தால்,
"எதற்க்கெடுத்தாலும் கவலைப்படும் மனம்" மறைந்துபோகும்
நிதானமாக மறுபடியும் படித்துப் பாருங்கள் .
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

"எண்ணங்களும் படித்ததில் பிடித்த வண்ணங்களும்" Empty Re: "எண்ணங்களும் படித்ததில் பிடித்த வண்ணங்களும்"

Post by முழுமுதலோன் Sun Jun 09, 2013 2:40 pm

எதற்காக எது?

நாம் எல்லோரும் ஏங்குவது
பணத்திற்காக அல்ல.
அங்கீகாரத்துக்காகவே ஏங்குகிறோம் .
அங்கீகாரம் பெறுவதற்கான வழிகளில் ஒன்றுதான்
"பணம்"
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

"எண்ணங்களும் படித்ததில் பிடித்த வண்ணங்களும்" Empty Re: "எண்ணங்களும் படித்ததில் பிடித்த வண்ணங்களும்"

Post by முழுமுதலோன் Sun Jun 09, 2013 2:41 pm

எதாவது தெரிகிறது

வியாபாரத்தில் லாபம் வருகிறபோது
"வரவு"தெரிகிறது
குடும்பத்தில் சோகம் வருகிறபோது
"வாழ்க்கை" தெரிகிறது
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

"எண்ணங்களும் படித்ததில் பிடித்த வண்ணங்களும்" Empty Re: "எண்ணங்களும் படித்ததில் பிடித்த வண்ணங்களும்"

Post by முழுமுதலோன் Sun Jun 09, 2013 2:41 pm

கல்யாணம்

கல்யாணம்
ஒரு
திருவிழா தான்
ஆனால் இதில்
ஆண்களே
அடிக்கடி
தொலைந்து போகிறார்கள்
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

"எண்ணங்களும் படித்ததில் பிடித்த வண்ணங்களும்" Empty Re: "எண்ணங்களும் படித்ததில் பிடித்த வண்ணங்களும்"

Post by முழுமுதலோன் Sun Jun 09, 2013 2:42 pm

பாவம் ஆண்கள்

தாய்க்குப் பின் ....
தாரம்
தாரத்துக்குப் பின் ...
ஓரம்
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

"எண்ணங்களும் படித்ததில் பிடித்த வண்ணங்களும்" Empty Re: "எண்ணங்களும் படித்ததில் பிடித்த வண்ணங்களும்"

Post by முழுமுதலோன் Sun Jun 09, 2013 2:43 pm

தயார்படுத்திக் கொள்வதில்தான் ...

ஒவ்வொரு மனிதனும்
ஒய்வு பெற்றபின்
ஒரு உலகம் விடியும்
அது
குளுமையானதா
அல்லது
கொடுமையானதா என்பது
நீங்கள்
உங்களைத் தயார்ப்படுத்திக்கொள்வதில்தான் உள்ளது
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

"எண்ணங்களும் படித்ததில் பிடித்த வண்ணங்களும்" Empty Re: "எண்ணங்களும் படித்ததில் பிடித்த வண்ணங்களும்"

Post by முழுமுதலோன் Sun Jun 09, 2013 2:44 pm

சல்லடையா?முறமா?

சல்லடை
நல்லவைகளைஎல்லாம் கீழே தள்ளிவிட்டு ,
தேவை இல்லாத
கசடுகளையும், கற்களையும்தான் வைத்துக்கொள்ளும்
முறமோ ,
பதர்,கல்,மண்,ஆகியவற்றைக் கீழே தள்ளிவிட்டு
நல்லவைகளை மட்டும் தக்கவைத்துக்கொள்ளும்
நீங்கள் யார்?
சல்லடையா?முறமா?
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

"எண்ணங்களும் படித்ததில் பிடித்த வண்ணங்களும்" Empty Re: "எண்ணங்களும் படித்ததில் பிடித்த வண்ணங்களும்"

Post by முழுமுதலோன் Sun Jun 09, 2013 2:46 pm

நீ யார்?

நீ யார்?
என்ற கேள்விக்குப் பதில்
"உனது சிந்தனைகள்தான் நீ "
என்பதே நிஜமானது
அதன் அடிப்படைதான்
எதை நினைக்கிறாயோ
அதாகவே ஆகிவிடுகிறாய் என்பது
சுலபமாகப் புரியவேண்டும் என்றால்,
நல்லதை நினைத்தால், நல்லவன்
தீயதை நினைத்தால்,தீயவன்
வலிமையான எண்ணங்கள் என்றால் ,வலியவன்
எளிமையான எண்ணங்கள் என்றால் எளியவன்
கொடிய எண்ணங்கள் என்றால் கொடியவன்
பாசமான எண்ணங்கள் என்றால் ,பாசமானவன்
தீவிரதமான எண்ணங்கள் என்றால் ,தீவிரவாதி
சாதுர்யமான எண்ணங்கள் என்றால்,சாதுர்யமானவன்
மற்றவர்கள் விரும்பத்தக்க எண்ணங்கள் என்றால்,விரும்பத்தக்கவன்
மற்றவர்கள் வெறுக்கத்தக்க எண்ணங்கள் என்றால்,வெறுக்கத்தக்கவன்
இப்படியே, எண்ணங்களால் தான் ,நீங்கள் உருவாகிரீர்கள்
எனவே
மற்றவர்களால்,
எந்தெந்தப் பெயர்களில் அழைக்கப்பட விரும்புகிறீர்களோ
அந்தந்த எண்ணங்களை மனதில் வளர்த்துக்கொள்ளுங்கள்
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

"எண்ணங்களும் படித்ததில் பிடித்த வண்ணங்களும்" Empty Re: "எண்ணங்களும் படித்ததில் பிடித்த வண்ணங்களும்"

Post by முழுமுதலோன் Sun Jun 09, 2013 2:47 pm

அளவுகோல் ஏன் ஒரே மாதிரியில்லை?

பிடித்தவனிடம் இருந்தால்
சுறுசுறுப்பு
பிடிக்கதவனிடம் இருந்தால்
அவசர புத்தி
பிடித்தவனிடம் இருந்தால்
சிக்கனம்
பிடிக்காதவனிடம் இருந்தால்
கஞ்சத்தனம்
பிடித்தவனிடம் இருந்தால்
தர்ம குணம்
பிடிக்காதவனிடம் இருந்தால்
ஊதாரித்தனம்
பிடித்தவனிடம் இருந்தால்
அமைதி
பிடிக்காதவனிடம் இருந்தால்
வேஷம்
பிடித்தவன் துணைக்கு வந்தால்
உதவும் குணம்
பிடிக்காதவன் உதவிக்கு வந்தால்
முந்திரிக்கொட்டை
பிடித்தவன் என்னால் முடியும் என்றால்
தன்நம்பிக்கை
பிடிக்காதவன் அப்படிச்சொன்னால்
அகந்தை
பிடித்தவன் நாலுபேருடன் பழகினால்
ஷோஷியல்டைப்
பிடிக்காதவன் நாலு பேருடன் பழகினால்
விவஷ்த்தை இல்லாதவன்
பிடித்தவன் கண்ணீர் வடித்தால்
இரக்க சுபாபம்
பிடிக்காதவன் கண்ணீர் வடித்தால்
நீலிக்கண்ணீர்
பிடித்தவன் புரியாமல் செய்தால்
குழந்தை மாதிரி
பிடிக்காதவன் புரியாமல் செய்தால்
விளங்காதவன்
ஏன்?ஏன் இப்படி?
அளவுகோல் ஏன் ஒரே மாதிரி இருப்பதில்லை?
வேண்டியவர்களுக்கு ஓர் அளவுகோல்
வேண்டாதவர்களுக்கு ஓர் அளவுகோல்
எல்லோரிடமும் ஓரளவாவது
இப்படி ஓர் அளவுகோல் இருப்பது உண்மை போல்தான் தோன்றுகிறது
இல்லையென்றால் ,மனிதன் ஞானி ஆகிவிடமாட்டானா?
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

"எண்ணங்களும் படித்ததில் பிடித்த வண்ணங்களும்" Empty Re: "எண்ணங்களும் படித்ததில் பிடித்த வண்ணங்களும்"

Post by முழுமுதலோன் Sun Jun 09, 2013 2:47 pm

காந்த ஊசி போல

காந்த ஊசி
எப்போதும் வடக்குத்திசையையே காட்டுகிறது
இதன் மூலம் , கடலில் கப்பல்கள்
திசைமாறிச் செல்லாமல் இருக்கின்றன
அதேபோல
மனிதனுடைய மனம்,
இறைவனை நாடியிருக்கும் வரையில்
அவன்,உலக வாழ்க்கைஎன்கிற கடலில்
திசை தப்பிப்போக வழியில்லை
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

"எண்ணங்களும் படித்ததில் பிடித்த வண்ணங்களும்" Empty Re: "எண்ணங்களும் படித்ததில் பிடித்த வண்ணங்களும்"

Post by முழுமுதலோன் Sun Jun 09, 2013 2:48 pm

இரண்டுக்கும் ஒருவரே

யாரிடம்
ப்ரியம் அதிகம் உள்ளதோ
அவர்களிடம்தான்
மகிழ்ச்சியையும் காட்டத்தோன்றுகிறது
கோபத்தையும் காட்டத் தோன்றுகிறது
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

"எண்ணங்களும் படித்ததில் பிடித்த வண்ணங்களும்" Empty Re: "எண்ணங்களும் படித்ததில் பிடித்த வண்ணங்களும்"

Post by முழுமுதலோன் Sun Jun 09, 2013 2:49 pm

முடமாகிப்போன கோழிகள்

கோழி மிதித்து
குஞ்சு சாவதில்லை
தெரியும்
ஆனால்
குஞ்சு மிதித்து
முடமாகிப்போன கோழிகள் இருக்கும் இடம்
"முதியோர் இல்லம்"
கண்களில் நீர் இல்லை
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

"எண்ணங்களும் படித்ததில் பிடித்த வண்ணங்களும்" Empty Re: "எண்ணங்களும் படித்ததில் பிடித்த வண்ணங்களும்"

Post by முழுமுதலோன் Sun Jun 09, 2013 2:50 pm

சொர்க்கமும் நரகமும்

சொர்க்கமும் நரகமும்
நம் உள்ளத்திலேயே உருவாக்கப்படுகின்றன .
மனம் நிம்மதி இன்றி இருந்தால் ,
மிக உயர்ந்த சொர்க்கமும் ,நரகமாகும்
ஆனால்
பதட்டமில்லாத அமைதியான உள்ளமிருந்தால்
மிகக் கொடிய நரகம் கூட சொர்க்கமாகும்
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

"எண்ணங்களும் படித்ததில் பிடித்த வண்ணங்களும்" Empty Re: "எண்ணங்களும் படித்ததில் பிடித்த வண்ணங்களும்"

Post by முழுமுதலோன் Sun Jun 09, 2013 2:51 pm

இளைஞனே

பூங்காற்றில் பயணிப்பது
சுகமான அனுபவம் தான்
ஆனால்
புயல் காற்றில் எதிர்த்து நிற்பதும்
ஒரு சவாலே
வெளுக்கத் துடிக்கிற
கிழக்கைப்போல
ஜெயிக்கத் துடியுங்கள்
கரையை உடைக்கிற
அலையைப்போல
தடையை உடையுங்கள்
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

"எண்ணங்களும் படித்ததில் பிடித்த வண்ணங்களும்" Empty Re: "எண்ணங்களும் படித்ததில் பிடித்த வண்ணங்களும்"

Post by முழுமுதலோன் Sun Jun 09, 2013 2:52 pm

சூடேறும் பால்

ஆணின் கோபம் ,
கொதிக்கும் பாலைப் போன்றது
பெண்ணின் கோபம்
அந்த கொதிக்கும் பால் தாங்கும் பாத்திரம் போன்றது
பால்,
உடனே சூடேறும், உடனே ஆறிவிடும்
கொதிக்கும் பால்தாங்கும் பாத்திரம்
மெள்ள மெள்ள சூடேறும்
ஆனால்,தகித்துக் கொண்டே இருக்கும்
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

"எண்ணங்களும் படித்ததில் பிடித்த வண்ணங்களும்" Empty Re: "எண்ணங்களும் படித்ததில் பிடித்த வண்ணங்களும்"

Post by முழுமுதலோன் Sun Jun 09, 2013 2:53 pm

ஐயோ பாவம்.....

குடியானவனுக்கு ,நிலமிருந்தால் போதும்
பணக்காரனுக்கு ,மதிப்பிருந்தால் போதும்
வீரனுக்குப் போர் இறந்தால் போதும்
வியாபாரிக்குப் பணமிருந்தால் போதும்
குயிலுக்குக் கிளை இருந்தால் போதும்
குழந்தைக்குத் தாய் இருந்தால் போதும்
அழகான பெண்ணுக்கு என்ன இருந்தால் போதும்?
ஐயோ பாவம்,
புகழ்ந்து கொண்டே இருதாலே போதும்
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

"எண்ணங்களும் படித்ததில் பிடித்த வண்ணங்களும்" Empty Re: "எண்ணங்களும் படித்ததில் பிடித்த வண்ணங்களும்"

Post by முழுமுதலோன் Sun Jun 09, 2013 2:54 pm

வெற்றி பெற

வெற்றி பெற மிகச் சுலபமான வழி
பிரச்சனைகளை,
மற்றவர் கோணத்திலிருந்து பார்ப்பதுதான்
-
நாம் சந்திகிறவர்
நமக்கு உதவ வேண்டும் அல்லது வேலை தரவேண்டும் என்றால்
நம்முடைய திறமையால்
அவருக்கு என்ன லாபம் ஏற்படும் என்பதை
நாம் அவருக்குச் சொல்லி ஆகவேண்டும்
-
எப்போதும் வேலை என்பது ,
வெற்றிக்கு முதல் எதிரி
வேலைகளுடன் ,போதுமான அளவு
வேறு சில பொழுதுபோக்குகளும்
மிகவும் அவசியம்
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

"எண்ணங்களும் படித்ததில் பிடித்த வண்ணங்களும்" Empty Re: "எண்ணங்களும் படித்ததில் பிடித்த வண்ணங்களும்"

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum