தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


குழந்தைகளின் பேசும் கலை வளர்க்க..

View previous topic View next topic Go down

குழந்தைகளின் பேசும் கலை வளர்க்க.. Empty குழந்தைகளின் பேசும் கலை வளர்க்க..

Post by முழுமுதலோன் Tue Jun 18, 2013 6:30 pm

குழந்தைகளின் பேசும் கலை வளர்க்க..

நண்பர்களே.. நாம் மற்றவர்களிடம் பேசிப் பழகும் விதம்தான் நம் வாழ்க்கையின்வெற்றிக்கு உறுதுணையாக அமைகிறது. அது மட்டுமல்ல பழகும் விதம் புத்திசாலித்தனமாக கூட மதிக்கப்படுகிறது. ஆனால் எதிர்த்து பேசுவது, விவாதம் செய்வது,மரியாதையில்லாமல் பேசுவது, அலட்சியமாக பேசுவது என குழந்தைகள் தங்களிடம் பேசும் விதம் குறித்து பெரும்பாலான பெற்றோர்கள் வருத்தப்படுவதுண்டு. அந்த வருத்தத்திற்கு தீர்வு காணுவது எப்படி ஒரு அலசல்.குழந்தைகளின் பேசும் கலை வளர்க்க.. Respect+1

குழந்தைகள், பெற்றோர்கள் செய்யும் பல செயல்களை தாங்களும் செய்கிறார்கள்.சிறு குழந்தையாக இருக்கும்போது பெற்றோர்கள் பேசியதைக் கேட்டுத்தான் பேசக்கற்றுக்கொள்கிறார்கள். இங்கே நீங்கள் கவனிக்க வேண்டியது பேசும் வார்த்தைகளைமட்டுமல்ல.. பேசும்விதத்தையும் உங்களிடம் இருந்துதான் கற்கிறார்கள்.உங்கள் குழந்தைகள் மரியாதையாக பேச வேண்டும் என்றால் நீங்கள் அவர்களை மரியாதையாக நடத்துங்கள். மரியாதையாக பேசுங்கள்.என்ன குழந்தைகளைப் போய் மரியாதையாக பேசுவதா ? என்று நினைக்க வேண்டாம்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

குழந்தைகளின் பேசும் கலை வளர்க்க.. Empty Re: குழந்தைகளின் பேசும் கலை வளர்க்க..

Post by முழுமுதலோன் Tue Jun 18, 2013 6:32 pm

நம் குழந்தையை நாமே மதிக்காவிட்டால் நாளை மற்றவர்கள் எப்படி மதிப்பார்கள். நீங்கள் உங்கள் குழந்தையை மதித்தால் உங்கள் குழந்தை தன்னையே மதிக்கத் துவங்கும். பிறகுமற்றவர்களையும் மதிக்கும். மற்றவர்களை மதித்தால்தான் பேசும்விதமும் மரியாதையாக இருக்கும்.குழந்தைகள் கோபமாக பேசினால் பதிலுக்கு நீங்களும் உணர்ச்சிவசப்பட்டுதிட்டாமல், ‘கத்தாதே’ என்று ஒரே வார்த்தையில் அவர்களை அடக்காமல், அவர்கள் உணர்ச்சி வசப்பட்ட நிலையில் இருக்கிறார்கள் என்பதை அவர்களுக்கு புரிய வையுங்கள். உணர்ச்சியை வெளிப்படுத்தாதே என்பதற்கு பதில் உணர்ச்சி வசப்படாதே என்று சொல்லிக்கொடுங்கள்.
குழந்தைகளின் பேசும் கலை வளர்க்க.. Angry+child
நாம் கோபப்படுவதும், திட்டுவதும் நமக்கு தவறாகத் தெரிவதில்லை. ஆனால்நம்மைப்பார்த்து குழந்தைகள் அதுபோல நடந்து கொள்ளும்போது நமக்கு தவறாகத்தெரிகிறது. ‘முளச்சு மூணு இலை விடல,உனக்கு இவ்வளவு கோபம் வருதே’ என்று ஆரம்பித்து சொல்லக்கூடாத வார்த்தைகளை எல்லாம் சொல்லி நம் கோபத்தை கொட்டி தீர்த்து விடுகிறோம். வயதில் பெரியவர்கள் என்பது கோபப்படுவதற்கும் கடுமையான சொற்களை சொல்வதற்கும் ஒரு தகுதியல்ல…. வயதின் முதிர்ச்சியை நீங்கள் பக்குவமாக நடந்து கொண்டு காட்ட வேண்டுமே தவிர கோபப்பட்டு அல்ல.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

குழந்தைகளின் பேசும் கலை வளர்க்க.. Empty Re: குழந்தைகளின் பேசும் கலை வளர்க்க..

Post by முழுமுதலோன் Tue Jun 18, 2013 6:33 pm

அடிக்கடி கேட்கிற வார்த்தைகளைதான் குழந்தைகளும் பயன்படுத்த துவங்குகிறார்கள்.‘இப்பவே கண்ண கட்டுதே ! ” டயலாக் எல்லா வீடுகளிலும் ஒலிப்பதற்கு இதுதான் காரணம். நீங்கள் கிண்டலான வார்த்தைகளை அதிகம் பயன்படுத்தினால் உங்கள் குழந்தைகளும் அதை பயன்படுத்துவார்கள். குழந்தைகளின் பேசும் விதத்தை மாற்ற வேண்டும் என்றால் குழந்தைகளிடம் நீங்கள் எப்படி பேசுகிறீர்கள் என்பதை கவனியுங்கள். குழந்தைகள் எப்படி இனிமையாக பேச வேண்டும் என்று விரும்புகிறீர்களோ அது போல நீங்கள் இனிமையாக பேசுங்கள். நிச்சயம் குழந்தைகளும் பின்பற்றுவார்கள்.
குழந்தைகளின் பேசும் கலை வளர்க்க.. Respect
 வீட்டிற்கு வரும் விருந்தினர்களிடம் குழந்தைகள் நன்றாகப் பேசுவதில்லை என்ற வருத்தம் ஓவ்வொருவரையும் ஆட்டிப்படைக்கிறது.எனக்கு ஏற்பட்ட அனுபவம் ஒன்றை கூறுகிறேன்.பால்ய கால நண்பர் ஒருவரது வீட்டிற்க்கு செல்ல நேர்ந்த்து.நான் அங்கு செல்கையில் நண்பரும் அவரது மகனும்டிவி பார்த்துக் கொண்டிருந்தனர்.என்னைக் கண்டதும் அவரது பையன் எதுவும் பேசாமல் டிவியை அணைத்துவிட்டு அவன் அறைக்குள் மறைந்தான். இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த என் நண்பருக்கு மிகவும்தர்ம சங்கடமாகப் போய்விட்டது. இப்படியா விருந்தினரை அலட்சியம் செய்வது என்று வருத்தத்தோடு போய் மகனிடம் கோபமாக, ‘ஏன்வந்திருக்கிறவங்ககிட்ட இரண்டு வார்த்தை பேசினா குறைஞ்சா போயிடுவ. வந்துஎன்னன்னு கேட்டுட்டு போ’ என்று சொல்லியிருக்கிறார்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

குழந்தைகளின் பேசும் கலை வளர்க்க.. Empty Re: குழந்தைகளின் பேசும் கலை வளர்க்க..

Post by முழுமுதலோன் Tue Jun 18, 2013 6:35 pm

அவரது பையனும் அதே கோபத்தோடே என்னிடம் வந்து ‘என்ன?’ என்றான். எனக்குஒன்றுமே புரியவில்லை. திடீரென்று பையன் வந்து கோபமாக ‘என்ன’ என்றால் எனக்குஎன்ன புரியும் ?. இருந்தாலும் மரியாதை கருதி ஒன்றும் பேசாமல் இருந்துவிட்டேன்.. இதை ஏன் சொல்கிறேன் என்றால் குழந்தைகளிடம் மரியாதையாக பேசுவதை ஒரு சடங்காக்க நினைத்தால்  இதுபோன்ற விபரீதங்கள் நிச்சயமாய் நிகழலாம். எனவே மரியாதையாக பேசுகிற பழக்கத்தை விட மற்றவர்களை மதிக்கின்ற உணர்வை வளர்த்தாலே போதும். பேச்சில் மரியாதை தானாக வெளிப்படும்.

ஒவ்வொருவரையும் மதிக்க கற்றுக்கொடுப்போம்.நம் குழந்தைகளை நல்லவர்களாக உருவாக்குவோம்.


முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

குழந்தைகளின் பேசும் கலை வளர்க்க.. Empty Re: குழந்தைகளின் பேசும் கலை வளர்க்க..

Post by mohaideen Wed Jun 19, 2013 9:39 am

அவசியமான தகவல்கள்

பதிவிற்கு நன்றி
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

குழந்தைகளின் பேசும் கலை வளர்க்க.. Empty Re: குழந்தைகளின் பேசும் கலை வளர்க்க..

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum