தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


சின்ன குழந்தைக்கு என்ன உணவு கொடுக்கலாம்?

View previous topic View next topic Go down

சின்ன குழந்தைக்கு என்ன உணவு கொடுக்கலாம்? Empty சின்ன குழந்தைக்கு என்ன உணவு கொடுக்கலாம்?

Post by முழுமுதலோன் Tue Jun 18, 2013 6:38 pm

சின்ன குழந்தைக்கு என்ன உணவு கொடுக்கலாம்?
முதல் உணவு தாய்ப்பால் தான் :
குழந்தையின் முதல் வருடத்தின் சத்துணவு பெரும்பாலும் தாய்ப்பால் தான்
எப்போது புட்டிப் பால் :
தாய்ப்பால் சுரக்காவிட்டால் என்ன செய்ய? தாய்ப்பால் சுரந்தும் சில குழந்தைகளுக்கு அது ஒத்துக்கொள்ளாமல் போய்விடுகிறது. என்ன காரணம்? பாலில் லாக்டோஸ் என்பதுதான் முக்கியப்பொருள். குழந்தைக்குத் தொடர்ந்து வயிற்றில் ஏதாவது கோளாறு என்றால் இந்த லாக்டோ சத்தை குழந்தையால் ஜீரணிக்க முடிவதில்லை. எனவே, வயிற்றில் உப்புசம், இதைத் தொடர்ந்து பீய்ச்சியடிக்கும் பேதி. ஆனால் ஒன்று, வயிற்றுப்போக்கை மட்டும் வைத்துக்கொண்டு குழந்தைக்குப் பால் அலர்ஜி என்று முடிவெடுப்பது தப்பு. குழந்தை பிறந்ததும் இரண்டிலிருந்து ஆறு வாரங்கள் வரை தாய்ப்பால் கொடுக்கும்போது இப்படி ஏற்பட்டால் மட்டுமே அப்படி ஒரு முடிவுக்கு வரலாம்.சின்ன குழந்தைக்கு என்ன உணவு கொடுக்கலாம்? Feeding-bottle
வேறுசில சமயங்களிலும் தாய்ப்பால் அளிக்க முடியாத துரதிஷ்டமான நிலை ஏற்படக் கூடும். அம்மாவுக்குப் புற்றுநோய். அதற்கெதிராகத் தொடர்ந்து மருந்து சாப்பிடவேண்டிய நிலை. அல்லது அவளுக்கு மன இறுக்கம் போன்ற சைக்கலாஜிக்கான கோளாறுகள் காரணமாகத் தொடர்ந்து மருந்தை உட்கொள்ள வேண்டியிருக் கிறது. இது போன்ற சமயங்களில் தாய்ப்பால் கொடுக்கலமா? டாக்டரை கலந்து நன்கு ஆலோசனை செய்யுங்கள். அதற்குப் பிறகு ஒரு முடிவெடுங்கள்.
குழந்தை பிறந்து முதல் நான்கு மாதங்களுக்கு தாய்ப்பால் மட்டுமே போதுமானது. அதற்குப் பிறகு பசும்பால் அல்லது எருமைப்பால் கொடுக்கலாம். ஆனால் பால் சுகதாரமான முறையில் தயாரிக்கப்பட்டிருக்க வேண்டும்.
முடிந்தவரை நள்ளிரவில் பால் கொடுப் பதைத் தவிர்க்கப் பாருங்கள். காரணம், நாளடை வில் குழந்தையின் பற்களில் சொத்தை விழ இது காரணமாக அமையலாம் என்பதோடு, பால் காதுக்குள் நுழைந்து அப்படியே அசையாமல் குழந்தை தூங்கிவிடலாம். காதில் சில தொற்று நோய்கள் உண்டாகக்கூடும்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

சின்ன குழந்தைக்கு என்ன உணவு கொடுக்கலாம்? Empty Re: சின்ன குழந்தைக்கு என்ன உணவு கொடுக்கலாம்?

Post by முழுமுதலோன் Tue Jun 18, 2013 6:40 pm

திட உணவு
குழந்தைக்கு நான்கைந்து மாதங்கள் ஆகிவிட்டதா? பருப்புத் தண்ணீர் அல்லது கேரட் தண் ணீரை அளிக்கலாம்.
ஐந்தாவது மாதம் :
ஐந்து மாதங்கள் ஆனவுடன் காய்கறி மற்றும் பழங்களைக் கொடுக்கத் தொடங்கலாம். ஆப்பிள், வாழைப்பழம், பழுத்த பப்பாளி ஆகியவை முதல் சாய்ஸ். மலை வாழைப்பழம் கொடுக்கலாம். பச்சை வாழை மற்றும் ரஸ்தாளி அளிப்பதைத் தவிர்க்கலாம். வைட்டமின் சி சத்து நிறைய அடங்கியவை – சாத்துக்குடி, கமலா ஆரஞ்சு, எலுமிச்சை ஆகியவை. குழந்தைக்குத் தவறாமல் கொடுக்கலாம். பெற்றோருக்கு இந்த சிட்ரஸ் வகைப்பழங்கள் அலர்ஜி என்றால், குழந்தைக்கு சுமார் ஒன்றரை வயது ஆனபிறகு இதுபோன்ற பழங்களைக் கொடுத்துப் பார்க்கலாம்.சின்ன குழந்தைக்கு என்ன உணவு கொடுக்கலாம்? 5th-month
குழந்தைகளால் சீக்கிரம் ஜீரணிக்கக் கூடி யவை களும், அவர்களால் விரும்பப்படுவதுமான பிசைந்த வாழைப்பழங்களும், கடைந்த ஆப்பிள் களும் குழந்தைகளுக்கு ஆரம்பத்தில் கொடுக்கும் உணவு வகைகளில் சிறந்தது. பெரும்பான்மையான எல்லா பழங்களையும், காய்கறிகளையும் மிக்ஸியில் அரைத்து குழந்தைகளுக்குகக் கூழ் போலாக்கி கொடுக்கலாம். பருப்பு வகைகளையும் இப்படி கொடுக்கலாம்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

சின்ன குழந்தைக்கு என்ன உணவு கொடுக்கலாம்? Empty Re: சின்ன குழந்தைக்கு என்ன உணவு கொடுக்கலாம்?

Post by முழுமுதலோன் Tue Jun 18, 2013 6:41 pm

ஆறாவது மாதம் :
ஆறாவது மாதம் முட்டையில் உள்ள மஞ்சள் கருவைக் கொடுக்கலாம். இட்லியுடன் கொடுக்கத் தொடங்கலாம். அரை ஸ்பூன் நெய் அல்லது எண்ணெய் சேர்த்துக் கொடுக்கலாம். (குழந்தை யின் வளர்ச்சிக்கு கொழுப்புச் சத்தும் தேவைதான்) ஆனால் குடும்பத்தில் பலரும் கனவான்கள் என்றால் இப்படி நெய், எண்ணெய் சேர்ப்பதை சற்றுத் தள்ளிப்போடலாம்.
இட்லிக்கு சர்க்கரையைத் தொட்டு கொடுப்பதைவிட, தெளிவான ரசம் போன்ற வற்றைத் தொட்டுக் கொள்ளலாம். ஏனென்றால் இனிப்பு மட்டுமல்லாது மீதி சுவைகளும் குழந்தையின் நாக்குக்கு பிடிபடுவது நல்லது. அப்போதுதான் வளர்ந்தபிறகு பலவகை உணவுகளை குழந்தை உண்ணத் தயராகும்.சின்ன குழந்தைக்கு என்ன உணவு கொடுக்கலாம்? 6th-month
சிறுகச் சிறுக புதிய உணவு வகைகளில் குழந்தையின் அனுபவத்தை வளர்க்க வேண்டும். குழந்தை ஆறு மாதக் குழந்தையாகும்போது உணவில் சிறு பகுதி புரதம் செறிந்த இறைச்சி, மீன், முட்டை, கோழிக் குஞ்சியின் இறைச்சி இவை களைச் சேர்க்கலாம். ஆனால் இவை நன்றாகப் பக்குவப் படுத்தப்பட்டதாகவும், மிருதுவாகவும் உள்ளதாயும் இருத்தல் அவசியம்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

சின்ன குழந்தைக்கு என்ன உணவு கொடுக்கலாம்? Empty Re: சின்ன குழந்தைக்கு என்ன உணவு கொடுக்கலாம்?

Post by முழுமுதலோன் Tue Jun 18, 2013 6:42 pm

ஏழாவது மாதம் :
ஏழாவது மாதத்தில் சப்போட்டா போன்ற பழங்களைக் கொடுக்கலாம்.
தோசை, பால் குறைவான மில்சேஷப்க் சப்பாத்தி, தானிய சுண்டல், மிக்ஸ்ட் ரைஸ், கிச்சடி, உப்புமா, பழங்கள் சாப்பிடக் கொடுத்துப் பழக வேண்டும்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

சின்ன குழந்தைக்கு என்ன உணவு கொடுக்கலாம்? Empty Re: சின்ன குழந்தைக்கு என்ன உணவு கொடுக்கலாம்?

Post by முழுமுதலோன் Tue Jun 18, 2013 6:43 pm

பத்தாவது மாதம் :
குழந்தைக்குப் பத்துமாதம் ஆனதும் சாதத்தையும் பருப்பையும் குழைத்துப் பிசைந்து வெண்பொங்கல்போலாக்கி காய்கறித்துண்டு களையும் சேர்த்துக் கொடுக்கலாம். காய்கறிகளைக் குழந்தை துப்பிவிடுகிறது என்றால் அவற்றை சூப்பாக்கி கொடுக்கலாம். தினமும் ஒருமுறை இப்படி சாப்பிடலாம். நடுவே வெரைட்டிக்கு ரொட்டித் துண்டில் வெண்ணெய் மற்றும் ஜாம் தடவித் தரலாமே.
காய்ந்த திராட்சை, பேரிச்சம்பழம் ஆகியவை குழந்தையின் உடலுக்கு நல்லது. ஆனால் இவற்றை சாப்பிட்டபிறகு மறக்காமல் பற்களைச் சுத்தம் செய்து விடுங்கள்.
எப்போதுமே ஒரே நாளில் இரண்டு வித உணவுகளைக் குழந்தைக்குக் காடுக்கவேண்டாம். சில நாட்கள் இடைவெளிக்குப் பிறகே அடுத்த புதிய உணவுப் பொருளை அறிமுகப்படுத்துங்கள்.அப்போதுதான் குழந்தைக்கு வயிற்றுப்போக்கோ வேறு ஏதாவது சிக்கலோ ஏற்பட்டால் அது எந்த உணர்வினால் என்பதைத் துல்லியமாகக் கண்டு பிடிக்க முடியும்.
முதலில் காரம் இல்லாத உணவு வகைகளைக் கொடுத்து, பிறகே கொஞ்சம் கொஞ்சமாக காரம் மற்றும் மசாலா சேர்ந்த பொருட்களை அறிமுகப்படுத்தலாம்.
உணவில் மிக அதிகமான சர்க்கரையையும், உப்பையும் சேர்க்காதீர்கள், அதிகப்படியான உப்பு உடம்பில் நீர் இல்லாமல் செய்துவிடும், அதிகப் படியான சொத்தைப் பல்லை உண்டாக்கும் பிற்காலத்தில் இதனால் பலவிதமான பிரச்சினைகள் உருவாகும். முக்கியமாக 1 வயது வரை உள்ள குழந்தைகள் இனிப்பு வகைகளை குறைக்க வேண்டும். குழந்தையின் சுவை உறுப்பு நன்றாக
வேலை செய்யக்கூடியது. ஆகவே, அதற்கு அதிகப்படியான உப்பும், சர்க்கரையும் தேவையில்லை.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

சின்ன குழந்தைக்கு என்ன உணவு கொடுக்கலாம்? Empty Re: சின்ன குழந்தைக்கு என்ன உணவு கொடுக்கலாம்?

Post by முழுமுதலோன் Tue Jun 18, 2013 6:44 pm

உணவைத் திணிக்காதீர்கள் :
சில சமயங்களில் குழந்தை எல்லா வித உணவு களையும் புறக்கணிக்கக்கூடும். இது அநேக மாக வழக்கத்தில் இருந்து மாறுபடுவதால் ஏற்பஉவது. குழந்தை திட உணவைப் புறக் கணித்தால் அதனைச் சாப்பிடச் சொல்லிக் கட்டாயப்படுத்தாதீர்கள். திட உணவின் அமைப் பும், ருசியும் பாலினின்றும் வெகுவாக வேறு படுவதாலும், விழுங்கும் முறை வழக்கமான ஊறிஞ்சிக் குடிக்கும் முறையிலிருந்து வேறுபடு வதாலும் குழந்தை புறக்கணிக்கக் கூடும்.
குழந்தை உணவு உட்கொள்வதில் ஆவலாக இல்லாவிடினும் கவலைப்படாதீர்கள். அதனைக் கட்டாயபடுத்தாதீர்கள். மாறாக வேறு ஏதாவது ஒன்றை முயற்சி செய்யுங்கள் வேறுபட்ட தானியம் அல்லது வேறு வகையான பழக்குழம்பு போன்றவை. அப்பொழுதும் குழந்தை அவைகளைபுறக்கணித்தால் சில நாட்கள் சென்ற பிறகு மறுபடியும் முயற்சி செய்யுங்கள்.
ஒவ்வொரு புதிய உணவு வகைகளையும் குழந்தை ருசி பார்க்கட்டும். அதன் ருசியையும் அதன் கெட்டிதன்மையும் பழக்கப்படத்திக் கொள்ளட்டும்.
குழந்தைக்கு முதலில் கொஞ்சம் கொடுங்கள், அதைச் சாப்பிட்டு முடித்த பிறகு இன்னும் கொஞ்சம் கொடுங்கள். அவர் சிறது அதிகமாக சாப்பிட்டால் அதை அவனுக்குக் கொடுங்கள். கொஞ்சம் கொஞ்சமாக அளவை அதிகப்படுத்தி அவன் பசிக்கும் ஏற்ப கொடுங்கள். குழந்தையைப் பெருக்க வைக்கும் எந்தவிதமான உணவையும் கொடுக்காதீர்கள் உதாரணமாக, அதிகப்படியான வெண்ணெய் அல்லது நெய், கரீம் அல்லது தித்திப்பான முட்டையும், பாலும் சேர்ந்த திண்பண்ட வகை இவைகள் குழந்தையைப் பெருக்க வைக்கும், எவ்வளவு எலும்பும் தோலுமாக இருந்தாலும் அநேகமாக முடிவில் தடித்த குழந்தையாக ஆகி, பிற்காலத்தில் கொழுத்த மனிதனா வான். புளிக்காத, ஃபிரிட்ஜில் வைக்காத தயில் சாதம் குழந்தைகளுக்குக் கட்டாயம் கொடுக்க வேண்டும். இதுபோன்ற தயிரில் நல்ல பாக்டீயா இருப்பதால் உடல்நலனுக்கு மிகவும் நல்லது.
நாள்தோறும் நான்கு அல்லது ஐந்து முறை யாக குழந்தைகளுக்குக் காய்கறி உணவுகளையும், பழங்க ளையும் கொடுங்கள். குழந்தைகளுக்கு நார்ச்சத்து மிகவும் முக்கியம். அவை அதிகம் உள்ள முழுத் தானிய பிரெட் போன்றவற்றை குழந்தை களுக்கு கொடுங்கள்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

சின்ன குழந்தைக்கு என்ன உணவு கொடுக்கலாம்? Empty Re: சின்ன குழந்தைக்கு என்ன உணவு கொடுக்கலாம்?

Post by முழுமுதலோன் Tue Jun 18, 2013 6:46 pm

சற்றேறக்குறைய இந்த வயதிலேயே குழந்தை தன்னுடைய வாயில் எல்லா பொருட்களையும் போட்டுக் கொள்வதைக் காணலாம். இப்பொழுது அதன் கையினால் எடுத்த சப்பி சாப்பிடத்தக்க உணவு வகைகளை அறிமுகம் செய்விக்கலாம். தானே சாப்பிடம் குழந்தைக்கு எல்லாம் ருசியாக இருக்கும். இது குழந்தையை திறமையுள்ளவானகவும் மாற்றும். கையில் பிடித்துக் கொள்ளும் வகையிலான பெரிய துண்டு ரொட்டி, அப்பம் அல்லது ஆப்பிள், வாழைப்பழம், காரெட்டு போன்றவற்றை கொடுக்கலாம்.சின்ன குழந்தைக்கு என்ன உணவு கொடுக்கலாம்? Bay
அதிகமான கடின உணவைக் கடித்துத் தின்பது குழந்தையின் ஈறுகளும், பற்களும் ஆரோக் கியமாக வளர உதவி புரிகின்றது. குழந்தைக்கு குறிப்பாக பல் முளைக்கும் சமயம் இது சௌகாரியமாப அமையும். விரல் போன்ற உருவில் இருக்கும் உணவுகள் இதே காலகட்டத்தில் குழந்தையின் உணவில் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஆனால், தானே உணவு உட்கொள்ளும்போது குழந்தையைக் கவனமாக கவனிக்க வேண்டம். அவன் ஒரு துண்டைக் கடித்து மென்று பின் அதை விழுங்குவதில் கஷ்டப்படலாம் எனவே, அவனுக்கு கொட்டைகள், முலாம்பழம், தானியங்கள், உருளைக்கிழங்கு வறுவல், சாக்கலேட்டுகள் முதலியவைகள் ஒருபோதும் கொடுக்காதீர்கள்.
இரும்புச் சத்து நிறைந்த உணவுகள் (முருங் கைக் கீரை, பேரீச்சை, வெல்லம்) போன்றவற்றை உணவில் அதிகம் சேருங்கள்.
நிறைய கலர்ஃபுல்லான காய்கறிகள், பழங் கள் என்று சாப்பிடம் ஆசையைத் தூண்டி விடலாம். சாண்ட்விச், முந்திரி, பாதாம், உலர்ந்த திராட்சை, வேகவைத்த வேர்க்கடலை போன்ற கால்சியம், பி புரோட்டீன் மற்றும் வைட்டமின்கள் நிறைந்த உணவுகளைச் சாப்பிடக் கொடுக்க வேண்டும்.
குழந்தைக்கு இரும்புச் சத்து, புரசச்சத்து அதிகம் தேவைப்படும். எனவே கொழுப்பில்லாத மட்டன் சூப்பில் மூன்று பங்கு தண்ணீர் சேர்த்து முதல் நாள் சிறிதளவு கொடுத்துப் பாருங்கள். குழந்தைக்கு ஜீரணமானால் இந்த சூப்பை வாரத்தில் மூன்று அல்லது நான்கு நாட்கள் கொடுக்கலாம். இதைத் தவிர சிக்கன் சூப், வேகவைத்து மசித்த பசலைக்கீரை, முருங்கைக்கீரை, பருப்புசாதம் கொடுக்கலாம். வளர வளர குழந்தை களுக்குத் தேவையான சத்துகளும் (இரும்புச்சத்து, கால்சியம் போன்றவை, அளவுகளும் மாறும். அதற்கேற்ப கவனித்து உணவளியுங்கள்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

சின்ன குழந்தைக்கு என்ன உணவு கொடுக்கலாம்? Empty Re: சின்ன குழந்தைக்கு என்ன உணவு கொடுக்கலாம்?

Post by முழுமுதலோன் Tue Jun 18, 2013 6:47 pm

வயதுக்கு மேல்
2 வயதுக்கு மேல் உள்ள குழந்தைகளுக்கு கொழுப்பு நீக்கிய பால், குறைந்த ஆற்றல் தரும் உணவு, குறைந்த அளவு இடைவேளை உணவு தர வேண்டும். இளவயதினருக்கு குறைந்த கொழுப்புச் சத்து நிறைந்த உணவைவிட குறைந்த மாவுச்சத்து எடை குறைப்பதற்கு மிகவும் உடற்பருமன் அதிகமுள்ள குழந்தைகளுக்கு ஒரு நாளைக்கு உண்ணும் உணவு 800 கிலோ கலோரி மட்டுமே இருந்தால் எடை இழப்பு வேகமாக இருக்கும். எண்ணெய்யில் பொரித்த உணவுகளை விட சுட்ட வறுத்த, ஆவியில் வேகவைத்த உணவுகள் நல்லது.
கடைகளில் வாங்கும் உணவுகள், பாஸ்ட் புட் களை கூடிய மட்டும் தவிர்த்துவிடுங்கள். இனிப்புச் சேர்த்த பழச்சாறுகள், சோடாக்களை கொடுக்கதீர்கள். அதற்குப் பதிலாக பாலையும், தண்ணீரையும் கொடுங்கள்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

சின்ன குழந்தைக்கு என்ன உணவு கொடுக்கலாம்? Empty Re: சின்ன குழந்தைக்கு என்ன உணவு கொடுக்கலாம்?

Post by முழுமுதலோன் Tue Jun 18, 2013 6:48 pm

பள்ளி செல்லும் போது
குழந்தைகள் பள்ளி செல்ல ஆரம்பிக்கும் வயது, என்னதான் நீங்கள் பார்த்துப் பார்த்து டிபன்பாக்ஸில் சாப்பாடு கட்டிக் கொடுத்தாலும், அவர்கள் சாப்பிடுகிறார்களா, கொட்டிவிடுகிறார்களா என்று தெரியாது. எனவே காலை பிரேக் ஃபாஸ்ட், மாலை ஸ்நாக்ஸ், இரவு உணவில் நீங்கள் குழந்தைகள் மீது கவனமாக இருக்க வேண்டும். நீங்கள் கவனிக்காமல் விட்டுவிட்டீர்கள் என்றால் போதிய சத்துணவின்றி குழந்தைகள் சுறுசுறுப்பை இழந்து எப்போதும் தூங்கிவழிந்து கொண்டே இருப்பார்கள். ரொம்ப அசதியாகவும் காணப்படுவார்கள். மூளைத்திறனும் குறைவாகவே இருக்கும்.
http://www.maathiyocee.com/
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

சின்ன குழந்தைக்கு என்ன உணவு கொடுக்கலாம்? Empty Re: சின்ன குழந்தைக்கு என்ன உணவு கொடுக்கலாம்?

Post by Muthumohamed Tue Jun 18, 2013 11:33 pm

பயனுள்ள பதிவு நன்றி அண்ணா
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

சின்ன குழந்தைக்கு என்ன உணவு கொடுக்கலாம்? Empty Re: சின்ன குழந்தைக்கு என்ன உணவு கொடுக்கலாம்?

Post by ஸ்ரீராம் Wed Jun 19, 2013 9:43 am

ரொம்பவும் பயனுள்ள பகிர்வுக்கு நன்றி அண்ணா கைதட்டல்
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

சின்ன குழந்தைக்கு என்ன உணவு கொடுக்கலாம்? Empty Re: சின்ன குழந்தைக்கு என்ன உணவு கொடுக்கலாம்?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum