தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


தேன் சுவைத் துளிப்பாக்கள் ! நூல் ஆசிரியர் கவிஞர் முனைவென்றி நா .சுரேஷ் குமார் நூல் அணிந்துரை கவிஞர் இரா .இரவி .

View previous topic View next topic Go down

தேன் சுவைத் துளிப்பாக்கள் ! நூல் ஆசிரியர் கவிஞர் முனைவென்றி நா .சுரேஷ் குமார்  நூல் அணிந்துரை கவிஞர் இரா .இரவி . Empty தேன் சுவைத் துளிப்பாக்கள் ! நூல் ஆசிரியர் கவிஞர் முனைவென்றி நா .சுரேஷ் குமார் நூல் அணிந்துரை கவிஞர் இரா .இரவி .

Post by eraeravi Sun Jun 23, 2013 8:48 am

தேன் சுவைத் துளிப்பாக்கள் !
நூல் ஆசிரியர் கவிஞர் முனைவென்றி நா .சுரேஷ் குமார் 
நூல் அணிந்துரை கவிஞர் இரா .இரவி .

பல்வேறு இதழ்களில் பிரசுரமான ,இணையங்களில் பதிவான துளிப்பாக[b]ளின் தொகுப்பு நூல். [/b][b][b]நேரில் சந்திக்காத ,[/b] [/b]இணையத்தின் வழி தினமும் சந்திக்கும் நண்பரின் நூல்.துளிப்பாகள் அனைத்தும் சிறப்பாக உள்ளது .பதச்சோறாக சில மட்டும் உங்கள் ரசனைக்கு .


விவ[b]சாயி  கஷ்டப்பட்டு விளைவித்த  பூசணிக்காயை சமைத்து உண்ணாமல் மூட நம்பிக்கையின் காரணமாக வீதியில் போட்டு வீணடி[/b][b]த்து விபத்திற்கு வழி  வகுக்கும்   செயலை சாடும் விதமாக  உள்ள துளிப்பா .
[/b]
[b]பல்லாயிரம் பூசணிக்காய்கள்
உடல் சிதறி பலி 
ஆயுத பூஜை .
[/b]
[b]மனித நேயம் கேள்வி பட்டு இருக்கிறோம் .மரநேயம் என்று புதுச் சொல் பயன் படுத்தி உள்ளார். பாராட்டுக்கள். [/b][b][b][b][b]மரநேயம் [/b][/b][/b][/b][b][b][b][b][b]விதைத்து உள்ளார் .[/b][/b][/b][/b][/b]

மரங்களின் தாலாட்டு 
மனிதனுக்கு தூய காற்று 
என்னே மரநேயம் .


தமிழக மீனவர்கள் தினந்தோறும் செத்து பிழைக்கின்றனர் .அவர்களை காக்க  ஒரு நாதி இல்லை. இந்த அவல நிலை என்று மாறுமோ ? என்ற வருத்தத்தில் வந்த துளிப்பா .

கண்ணீரில் வாழ்கிறான் 
தண்ணீரில் 
[b] பிழைக்கி
றான்தமிழக மீனவன் .
[/b]
மீனவர்களின் சோகத்தை கண்டு கேட்டு படித்து பார்த்து உணர்ந்து துளிப்பா வடித்துள்ளார் .

கடலில் அழும் மீன் போல் 
கரையில் அழுகிறாள் 
மீனவன் மனைவி .

தமிழக மக்கள் மாறி மாறி வாக்களித்த போதும் இன்னல் மட்டும் இன்னும் தீ[b]ர்ந்தபடில்லை .மின் தடை ஒழிய வில்லை .இன்று மின்சாரம் என்பது அடிப்படை தேவை .அதைக் கூட ஆள்வோர் நிறை[/b][b]வேற்ற வில்லையே என்ற வேதனையில் உள்ளனர் .அதனை உணர்த்தும் துளிப்பா .

ஆட்சி மாறுகிறது 
காட்சி மாறவில்லை 
தமிழ்நாட்டில் .
[/b]
[b]சொல் விளையாட்டு விளையாடும்  ஒரு துளிப்பா .ஒரு புறம் அரசியல்வாதிகள் கோடிகள் கொள்ளையடித்து அயல் நாட்டு வங்கிகளில் வருங்கால வாரிசுகளுக்கு சேர்த்து வைக்கின்றனர். மறுபுறம் வசிக்க வீடு இன்றி தெருக்களில் வாழும் வறுமை .இந்த முரணை உணர்த்திடும் துளிப்பா .

கோடிகளில் வாழ்வதும் 
கோடிகளில்  வாழ்வதும் 
இதியாவில் மட்டுந்தான் .
[/b]
[b]ஆள்வோர் திட்டங்கள் தீட்டிக் கொண்டே இருக்கிறார்கள் ஆனால் ஏழ்மை மட்டும் இன்னும் ஒழிந்தபாடில்லை .

வயிற்றில் வலி இல்லை
வயிற்றில் ஈரத்துணி 
கண்ணீரில் ஏழை  .
[/b]
[b]சில துளிப்பாக்கள் மேற்கோள்  காட்டவே தயங்கும் அளவிற்கு  சாட்டை அடி துளிப்பாக்கள் நூலில் உள்ளது .
[/b]துளிப்பாவின் மூலம்  உழைப்பின் மேன்மையையும் உணர்த்துகின்றார் .

வாழ்க்கை முழுக்க 
ஓட்டப்பந்தயம் 
கடிகார முட்கள் .


விலை நிலங்கள் விரைவாக அழிந்து வருகின்றது .விவசாயிகள் தற்கொலை தினமும் நடகின்றது .இந்த  அவல  நிலை தொடர்ந்தால் உண்ண  சோறு கிடைக்காத அவல  நிலை விரைவில் வரும் என்பதை உணர்த்தும் துளிப்பா .

விலை நிலங்களில் 
ஓங்கி வளர்ந்தன 
மாடி வீடுகள் .

வியப்பில் ஆழ்த்தும் துளிப்பா ஒன்று .

மீசையுடன் 
குழந்தை பிறந்தது 
பூனைக்குட்டி .


மனசாட்சி உள்ள ஒரு நேர்மையான படைப்பாளியால் ஈழக் கொடுமை பற்றி எழுதாமல் இருக்க முடியாது .[b]கவிஞர் முனைவென்றி நா .சுரேஷ் குமார் ஈழம் பற்றி எழுதி உள்ளார் .[/b]

இன வெறியால் 
இடம் பெயர்கின்றன 
ஈழத்துப் பறவைகள் .


நிலா பற்றி பாடாத கவிஞர் இல்லை .நிலாவைப் பாடதவர் கவிஞரே இல்லை என்பதும் உண்மை .நிலாவை வித்தியாசமாக பார்த்து உள்ளார் .

ஆழம் அதிகம்
நீந்தத்  தெரியாமல் 
நிலா .


நம் நாட்டில் வளர்ச்சி என்ற பெயரில் நல்ல மரங்களை வெட்டி வீழ்த்தி வீழ்ச்சிக்கு வழி வகுத்து வருகின்றனர் .வெட்டிய   அளவிற்கு புதிய மரங்கள் நடுவதே இல்லை .

சாலை விரிவாக்கம் 
சங்கு 
தினர் 
மரங்களுக்கு .
எள்ளல் சுவையுடன் கவிஞர்களின் சோகத்தை உணர்த்துகின்றார் .இன்று பிரபல கவிஞர்கள் கவிதை நூல் மட்டுமே புத்தக் கடைக்காரர்கள்  வாங்குகின்றனர் .வாங்கி வைத்துக் கொண்டு நூல்  விற்ற பின்பு பணம் தாருங்கள் என்றாலும் , நூலை வாங்க மறுக்கின்றனர்.
வில்லுப்பாட்டு கலைஞர்  கொத்தமங்கலம்  சுப்பு அவர்களிடம் காந்தி மகான் கதை சொல்லும்போது , அவரை சுட்டக் காட்சி வரும்போது தின்ந்தோறும் உங்களால் எப்படி அழ முடிகின்றது .எ[b][b]ன்று கேட்டபோது .அவர் .சொன்னது ."வீட்டில் விற்காமல் இருக்கும் என் நூல்கள் பற்றி நினைப்பேன் உடன் அழுகை வந்து விடும் ".என்றாராம் .அதனை நினைவிற்கு கொண்டு வந்த துளிப்பா .
[/b]கவிதை நூல் வெளியீடு
மகிழ்ச்சியில் திளைத்தன 
கரையான்கள் .
[/b]காதிலில் தோல்வி அடிந்தவர்களின்மான நிலையை படம் பிடி[b]த்துக் காட்டும் துளிப்பா .
காதல் தோல்வி 
அறுத்தெறிய முடியவில்லை 
அவளின் நினைவுகள் . 
[/b]
பறவைக்கு உள்ள சுதந்திரம் [b][b]கூடமனிதனுக்கு இல்லை .கடலில் ,காற்றில் தெரியாமல் படகு எல்லை தாண்டினால் சுட்டு வீழ்த்தும் கொடிய சிங்கள இலங்கை ராணுவத்தைச் சாடிடும் துளிப்பா .சிந்திக்க வைத்தது .
[/b]கடலெல்லையைத் தாண்டியும் 
பறக்கும் பறவைகள் 
கொல்லப்படும் மீனவன் 
[/b]

உள்ள[b][b]த்து உணர்வை ஒளிவு மறைவு இன்றி அப்படியே பதிவு செய்துள்ளார் .ஒரு சில துளிப்பாகளில் ஆங்கிலச் சொல் வருகின்றது .வருங்காலத்தில் ஆங்கிலச் சொல் தவிர்த்து எழுதுங்கள் .[/b][/b]தொடர்ந்து எழுத்துகள் பாராட்டுக்கள் .வாழ்த்துக்கள்  .
eraeravi
eraeravi
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 553

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics
» நம்மை மீட்டும் வீணை ! நூல் ஆசிரியர் கவிஞர் சி .விநாயக மூர்த்தி ! நூல் அணிந்துரை கவிஞர் இரா .இரவி !
» சிறகுகளின் சுவாசங்கள் ! நூல் ஆசிரியர் கவிஞர் மு .ஆ .பீர்ஒலி . நூல் அணிந்துரை கவிஞர் இரா .இரவி .
» சாரல் காலம் ! நூல் ஆசிரியர் கவிஞர் மா .முத்துப்பாண்டி ! நூல் அணிந்துரை ; கவிஞர் இரா .இரவி !
» ஆதாம் எலும்பில் ஏவாள் அல்ல .. நூல் ஆசிரியர் கவிஞர் கந்தகப்பூக்கள் ஸ்ரீபதி . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .
» படிக்காத மேதை காமராஜரிடம் படிக்க வேண்டியவை ! நூல் ஆசிரியர் கவிஞர் நீலம் மதுமயன் . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .

Permissions in this forum:
You cannot reply to topics in this forum