தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


நெகிழ வைத்த நிஜங்கள்

Page 1 of 10 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

View previous topic View next topic Go down

நெகிழ வைத்த நிஜங்கள் Empty நெகிழ வைத்த நிஜங்கள்

Post by Muthumohamed Sun Jun 23, 2013 6:17 pm

வாடிக்கையாளருக்கு ஏற்பட்ட 'வலி'

நகைக்கடை ஒன்றில் விற்பனையாளராக பணியாற்றி வருகிறேன். வருடா வருடம் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு புது வருட தேதி காலண்டரும், மாதாந்திர காலண்டரும் வழங்குவதுண்டு.

சமீபத்தில் எங்கள் கடைக்கு வந்த பெரியவர் ஒருவர் கேஷ் கவுண்டரில் இருந்தவரிடம் கஸ்டமர் என்ற உரிமையில் காலண்டர் கேட்டார். இதை கவனித்துக் கொண்டிருந்த எங்கள் கடை முதலாளி, வந்தவர் தங்கள் கடையின் ரெகுலர் கஸ்டமர் என்று தெரியாமல், `உங்களை இதற்கு முன்பு இங்கு பார்த்ததே கிடையாதே. வாடிக்கை யாளர்களுக்கு மட்டும்தான் கொடுப்போம்..' என முகத்தில் அடிக்காத குறையாக கூறி அனுப்பி விட்டார்.

சற்றுதூரத்தில் விற்பனை பிரிவில் மும்முரமாக இருந்த நான் அதை கவனித்தேன். முதலாளி அருகே சென்று, `இப்ப வந்துட்டுப் போனவர் என்ன கேட்டார்?' என கேட்டேன்.

`ஏன் அவர் நமது வாடிக்கையாளரா?' என்று என்னிடம் திருப்பிக்கேட்டார் முதலாளி.

``நம்ம கடைக்கு அடிக்கடி வந்து தாலி உருப்படியெல்லாம் வாங்கி செல்வாங்களே.. வசந்தா அக்கா, அவங்க புருஷன்தான் இவரு. இரண்டு மாசத்துக்கு முந்தி அந்தக்கா மாரடைப்பில் இறந்துட்டாங்க. எங்க தெருவுலதான் அவங்க வீடு..'' என்றேன்.

``அடடா! அவரது மனைவி பெயரும், நம்ம கடையின் பெயரும் ஒன்றாக இருப்பதால் மனைவியின் நினைவாக காலண்டர் கேட்டு வந்திருக்கிறார். இது எனக்கு விளங்காமப் போச்சே..!' என தன்னையே நொந்து கொண்ட முதலாளி, கடைப்பையனை அனுப்பி அவரை வரவழைத்தார். தேனீர் தந்து உபசரித்து, ஆறுதல்கூறி காலண்டரும் தந்து திருப்தியாக அனுப்பி வைத்தார்.

சுமதி பாபு, கோவூர்.
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

நெகிழ வைத்த நிஜங்கள் Empty Re: நெகிழ வைத்த நிஜங்கள்

Post by Muthumohamed Sun Jun 23, 2013 6:17 pm

பஸ்சில் தவறிய பட்டுப் புடவை

என் பெற்றோர் கடலூரில் புது வீடு கட்டியிருந்தார்கள். கிரகப்பிரவேச நிகழ்ச்சிக்காக வரும் சொந்த பந்தங்களுக்கு புதுத் துணிகள் கொடுத்து மரியாதை செய்ய விரும்பினார்கள். அதற்காக சென்னையில் உள்ள பிரபலமான ஜவுளிக்கடையில் விலை உயர்ந்த பட்டுப்புடவைகளை வாங்கினார்கள். அவைகளை எடுத்துக்கொண்டு கோயம்பேடு பேருந்து நிறுத்தத்தில் ஊருக்கு செல்வதற்காக காத்திருந்தனர்.

இவர்களுக்கு அருகிலேயே பட்டுக்கோட்டைக்கு செல்வதற்காக வயதான ஒரு தம்பதியினரும் காத்திருந்திருந்திருக்கிறார்கள். எனது பெற்றோர் வைத்திருந்த பையும் அந்த தம்பதியினர் வைத்திருந்த பையும் ஒரே மாதிரியாக இருந்திருக்கிறது. அந்த தம்பதியினர் பேருந்தில் ஏறும் அவசரத்தில் எனது பெற்றோர் வைத்திருந்த பையை தவறுதலாக எடுத்துச் சென்று விட்டனர்.

அந்த பையில் பட்டுப்புடவைகளைத் தவிர எனது அப்பாவின் வங்கி பாஸ்புக் உட்பட சில முக்கிய ஆவணங்கள் இருந்துள்ளது. வீட்டுக்கு வந்ததும் பை மாறியதைக் கண்டு திடுக்கிட்ட எனது பெற்றோர் செய்வதறியாது திகைத்துள்ளனர். இது பற்றி யாரிடமும் சொல்லவில்லை. சொன்னால் அபசகுனம் என்று கூறிவிடுவர் என அஞ்சியிருக்கிறார்கள்.

அந்த சுபநிகழ்ச்சிக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு எனது அப்பாவின் செல்போனில் தொடர்பு கொண்ட அந்த தம்பதியினர் ``பையை தவறுதலாக மாற்றி எடுத்து வந்துவிட்டோம் மன்னித்து விடுங்கள் `கூரியரில்' பையை உங்கள் முகவரிக்கு அனுப்பி விட்டோம். பெற்றுக் கொள்ளுங்கள். எங்கள் பையையும் அனுப்பிவைத்துவிடுங்கள்'' என்று கூறியிருக்கிறார்கள்.

`பையை' பெற்றுக்கொண்ட பிறகுதான் அப்பா எங்களிடம் இதைக் கூறினார். அந்த பட்டுப்புடவைகள் விலைமதிப்புள்ளவை என்றாலும் அதை அனுப்பிவைத்த அந்த முதிய தம்பதியினரை நாங்கள் பாராட்டினோம்.

சோ.மீரா, சென்னை-37.
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

நெகிழ வைத்த நிஜங்கள் Empty Re: நெகிழ வைத்த நிஜங்கள்

Post by Muthumohamed Sun Jun 23, 2013 6:17 pm

பாட்டு கேட்டது! பண்பு பறந்தது!

எனது நண்பர் தனியார் நிறுவனம் ஒன்றில் நிர்வாக இயக்குனராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். கண்ணியமானவர். ஒவ்வொரு சொல்லிலும், செயலிலும் அவர் நேர்மை தெரியும்.

சமீபத்தில் ஒருநாள் அவரிடம் பேச செல்போன் மூலம் தொடர்பு கொண்டபோது மறுமுனையில் அழைப்புமணிக்கு பதிலாக `தோழியா என் காதலியா யாரடி நீ...' என்ற பாடல் ரிங்டோனாக ஒலித்தது. இதைக்கேட்டதும் எனக்கு அதிர்ச்சியும் கூடவே ஆச்சரியமும் ஏற்பட்டது. அன்று அவர் போனை எடுத்து பேசவில்லை. நானும் அதோடு விட்டுவிட்டேன்.

அடுத்த சில நாட்களில் சிற்றுண்டி விடுதி ஒன்றில் நான் உணவருந்திக் கொண்டிருந்தேன். என் அருகில் இருந்து இருவர் பேசிக்கொண்டிருந்தார்கள். நான் அவர்கள் பேச்சைக் கவனித்தபோது அவர்கள் இருவரும் நான் மேலே குறிப்பிடும் அந்த நண்பரின் நிறுவனத்தில் முன்பு வேலை பார்த்தவர்கள் என்பது தெரிந்தது. அவர்கள் இருவரும் `நமது பழைய எம்.டி. செல்போனில் எப்படிப்பட்ட பாட்டு வைத்திருக்கிறார் தெரியுமா? இந்த வயசுலே இப்படிப்பட்ட பாட்டு தேவையா?' என்று கிண்டலடித்து அந்த நண்பரின் பெயரையும் குறிப்பிட்டு பேசிக் கொண்டிருந்தனர்.

மேலும் பொறுமைகாக்க முடியாமல் அந்த ரிங்டோன் விஷயத்தைக்கூற அந்த நண்பரின் வீட்டிற்கு சென்றேன். அந்த செய்தியை அவரிடம் கூற, அதிர்ந்து போனார். தனக்கே தெரியாமல் இது எப்படி நடந்தது? என்று குழம்பியவர், சட்டென நினைவுக்கு வந்தவராய் `சென்ற மாதம் எனது மகள் தனது மகனை அழைத்துக் கொண்டு வந்து இரண்டு நாட்கள் என்வீட்டில் தங்கியிருந்தாள். எனது பேரன் செல்போனை எடுத்து கேம் விளையாடிக் கொண்டிருந்தான். அவன் விளையாட்டாக ஸ்டார் பட்டனை அழுத்தி இருக்கலாம்' என்றவர், அவமானத்தால் கூனிக் குறுகி போனார்.

நான் அவரிடம் "உடனே கஸ்டமர் பிரிவுக்கு போன் செய்து சொல்லுங்கள். தானாகவே பாட்டு கேன்சல் ஆகிவிடும்'' என்று சொல்லி விட்டு திரும்பினேன்.

செல்போனை ஒவ்வொருவரும் தங்கள் பாதுகாப்பிலே வைத்துக் கொள்வது நல்லது. இல்லையென்றால் இதுபோன்ற கேலி, கிண்டல் நிறைந்த அனுபவங்களை சந்திக்க வேண்டி வரும்!

ஆர். ரவீந்திரன், காப்பரத்தான்பட்டி.
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

நெகிழ வைத்த நிஜங்கள் Empty Re: நெகிழ வைத்த நிஜங்கள்

Post by Muthumohamed Sun Jun 23, 2013 6:17 pm

வழங்கலாமே, `வங்கி அன்பளிப்பு காசோலை'!

என் உறவினர் வீட்டுத் திருமணத்தில் கலந்து கொண்டேன். வந்திருந்த அன்பளிப்புகள் ஏராளம். அதைக்கண்டு மகிழ்ந்த மணப்பெண் அவற்றை பிரித்ததும் மனம் வருந்தினாள். காரணம் வந்ததில் பாதிக்கும் மேல் கடிகாரம்... பிளாஸ்டிக் டின்னர் செட்... பிளாஸ்டிக் சாமான்கள் தான். இரண்டு பேர் அடங்கிய ஒரு குடும்பத்தினர் ஒரே பொருளில் பத்து செட்டுகளை வைத்துக்கொண்டு என்ன செய்வார்கள்?

ஒரே பொருளை பலரும் வாங்கிக் கொடுப்பதற்கு பதிலாய் பணமாய் கொடுத்திருந்தாலாவது நன்றாக இருந்திருக்குமே, அதை வைத்து தேவைப்படும் பொருளை வாங்கியிருக்கலாமே என்று பேசிக்கொண்டிருந்தார்கள். அந்த அன்பளிப்பு பொருட்களை எல்லாம் பார்த்த நெருங்கிய உறவினர்கள் சிலர், `இத்தனையையும் வைத்து நீங்கள் என்ன செய்யப்போகிறீர்கள்?' என்று கேட்டு, பணம் கொடுக்காமலே பாதிப் பொருட்களை தங்களுக்காக எடுத்துக்கொண்டார்கள்.

இதனை பார்த்த எனக்கு வருத்தமாய் இருந்தது. 250 ரூபாய்க்கு மேல் அன்பளிப்பு வழங்க நினைப்பவர்கள் அதனை வங்கி அன்பளிப்பு காசோலையாக வழங்கினால், புதுமண தம்பதியினர், தங்களுக்கு தேவைப்படும் பொருட்களை வாங்கிக்கொள்வார்களே! பல அரசு, தனியார் வங்கிகள் வழங்கும் இந்த அன்பளிப்பு காசோலைகளை பயன்படுத்திக் கொள்ள அனைவரும் முன்வர வேண்டும். அதுவே புதுமண தம்பதியினருக்கு சிறந்த, பயனுள்ள அன்பளிப்பாகவும் அமையும்.

ராஜேஸ்வரி ராதாகிருஷ்ணன், பெங்களூர்-34.
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

நெகிழ வைத்த நிஜங்கள் Empty Re: நெகிழ வைத்த நிஜங்கள்

Post by Muthumohamed Sun Jun 23, 2013 6:18 pm

சைக்கிளை சாய்த்தது, தாவணி

நாங்கள் வசிக்கும் பகுதியில் உள்ள தனியார் மேல்நிலைப்பள்ளியின் மாணவிகளுக்கு பாவாடை, தாவணி தான் சீருடை. பள்ளி சற்று தூரம் என்பதால் மாணவிகள் பெரும்பாலும் சைக்கிளில் தான் செல்வார்கள்.

அன்று ஒரு மாணவி பள்ளிக்கு சைக்கிளில் போய்க்கொண்டிருந்தார். பள்ளிக்கு நேரமாகி விட்ட அவசரத்தில் தாவணியின் முந்தானையை எடுத்து செருகாமல் சைக்கிளை வேகமாக ஓட்டி வந்தார். அப்போது தாவணி சைக்கிள் சக்கரத்தில் சிக்கி, நிலைகுலைய வைத்து மாணவியை நடுரோட்டில் சாய்த்துவிட்டது.

மாணவியின் வலது கையில் முறிவு ஏற்பட்டது. நல்லவேளையாக அப்பகுதியில் வாகனங்களின் வருகை குறைவு என்பதால், மாணவியின் உயிருக்கு ஆபத்தில்லை. பாவாடை, தாவணி அணிந்து கொண்டு சைக்கிளில் செல்லும் மாணவிகள் கவனமாக செல்ல வேண்டும். பெற்றோரும் அவசரகதியில் மாணவிகள் பள்ளிக்கு செல்லாத அளவிற்கு பார்த்துக்கொள்ளவேண்டும்.

-ம. தமயந்தி, கீழக்குமரேசபுரம்.
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

நெகிழ வைத்த நிஜங்கள் Empty Re: நெகிழ வைத்த நிஜங்கள்

Post by Muthumohamed Sun Jun 23, 2013 6:20 pm

பஸ் பயணத்தில் பாத்ரூம் அவஸ்தை

விழுப்புரம் அரசுப் பேருந்தில் சேலம் நோக்கி பயணித்துக் கொண்டிருந்தேன். பேருந்தில் நல்ல கூட்டம். வழியில் கள்ளக்குறிச்சியில் பேருந்தை நிறுத்திய டிரைவர், "கழிவறை செல்பவர்கள், டீ சாப்பிடுபவர்கள் சென்று விட்டு வரலாம். பேருந்து 10 நிமிடங்கள் நிற்கும். இதை விட்டால் இனிமேல் சேலத்தில் தான் நிற்கும்'' என்றார். பின்பு ஓட்டுனரும், நடத்துனரும் டீ சாப்பிடச் சென்றனர். பயணிகளும் இறங்கி, அவரவர் தம் கடமையை முடித்துவிட்டு, பேருந்தில் ஏறினர். பேருந்து 10 நிமிடங்களுக்கு பதிலாக 15 நிமிடங்கள் கழித்தே புறப்பட்டது.

என் அருகில் அமர்ந்திருந்த பயணி ஒருவர், இந்த 15 நிமிட இடைவெளியில் கீழே இறங்காமல், பேருந்திலேயே அமர்ந்திருந்தார். மீண்டும் புறப்பட்ட பேருந்து வாழப்பாடியை நெருங்கிக் கொண்டிருந்த போது, அவர் என்னிடம், "சேலம் இன்னும் எவ்வளவு தூரம் இருக்கிறது? எப்போது சென்றடையும்?'' என்று கேட்டார். நான் அவரிடம் "இன்னும் 30 கிலோமீட்டர் இருக்கிறது. எப்படியும் 30-லிருந்து 45 நிமிடங்களாவது ஆகும்'' என்று அவரிடம் கூறினேன். அவர் என்னிடம்"நான் ஒரு சர்க்கரை நோயாளி. நான் இப்பொழுது அவசரமாக சிறுநீர் கழித்தாக வேண்டும். என்னால் கட்டுப்படுத்த இயலவில்லை'' என்று அவஸ்தையாக கூறிவிட்டு, நேராக நடத்துனரிடம் சென்று அவருடைய நிலையை விளக்கிக் கூறினார். பேருந்தை நிறுத்துமாறு கெஞ்சினார்.

நடத்துனர் அவரை கோபத்துடன் பார்த்துவிட்டு, சத்தம் போட்டு திட்டினார். "கள்ளக் குறிச்சியில் பேருந்து 15 நிமிடங்கள் நின்றபோது என்ன செய்தீர்கள்? இப்போது பஸ்சை நிறுத்த முடியாது'' என்றார்! அந்தப் பயணி மீண்டும் கெஞ்சினார். பரிதாபப்பட்ட ஓட்டுனர், பேருந்தை நிறுத்தினார். கீழே இறங்கியவர் 3-4 நிமிடங்கள் ஆகியும் மேலே ஏறவில்லை. பயணிகளில் ஒரு சிலர் "யோவ்! போதும்யா. மேலே ஏறு!'' என்று சத்தம் போட்டனர். மேலே ஏறியவர், அவமானத்தில் யாரையும் பார்க்காமல் கூனி குறுகிப் போனார். இவரைப் போன்று நெடுந்தொலைவு பயணிப்பவர்கள் ரெயில் பயணத்தை தேர்வு செய்யலாம். அல்லது அதற்குரிய இடைவெளியில் இந்த இயற்கை உபாதைகளை முடித்துக் கொள்ள வேண்டும்.

- ரி.குப்புசாமி, மேட்டுப்பாளையம்.
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

நெகிழ வைத்த நிஜங்கள் Empty Re: நெகிழ வைத்த நிஜங்கள்

Post by Muthumohamed Sun Jun 23, 2013 6:21 pm

பாசம் வேஷமானபோது..

என் தோழிக்கு இரண்டு தங்கை, ஒரு அண்ணன். சிறு வயதிலே அவளது அப்பா இறந்து போனார். ஓரளவு நிலபுலன்கள் உண்டு. அதில் கிடைத்த வருமானத்தை வைத்து கூழோ, கஞ்சியோ குடித்து வாழ்க்கையை நகர்த்திக் கொண்டிருந்தார்கள்.

தோழியின் அம்மாவுக்கு ஒரு தங்கை உண்டு. அவருக்கு தன் அக்கா குடும்பத்தினரின் அனுதின போராட்ட வாழ்க்கை தெரியும். அன்று தோழியின் வீட்டுக்கு வந்த அம்மாவின் தங்கை ரொம்ப அக்கறையோடு பேசியிருக்கிறார். `நான் எப்போதும் உங்களுக்கு உதவி செய்ய ஓடோடி வருவேன். நிலத்தை விற்று எனக்கு 1 லட்சம் ரூபாய் கொடுங்கள். அதில் பழைய வேன் ஒன்றை வாங்கி வாடகைக்கு விடுவேன். அதில் கிடைக்கும் வருமானத்தில் பங்கு தருவேன். அசலையும் குறிப்பிட்ட காலத்திற்குள் தந்துவிடுவேன்' என்று கூறியிருக்கிறார். இவர்களும் அதை நம்பி, நிலத்தை கேட்ட விலைக்கு விற்று பணத்தை கொடுத்துவிட்டார்கள். அவரும் வேன் வாங்கிவிட்டார்.

முதல் இரண்டு மாதங்கள் சிறுதொகையை வருமானம் என்ற பெயரில் கொடுத்திருக்கிறார். பின்பு பணமே கொடுக்கவில்லை. தொடர்ந்து நாலைந்து மாதங்கள் பணமே வரவில்லை என்றதும், தோழியின்அம்மா தனது தங்கையின் வீடு தேடி போய் பணத்தைக் கேட்டிருக்கிறார். அவரோ, `வருமானமே இல்லாமல் எங்கிருந்து தருவது?' என்று கோபக்குரல் எழுப்பியிருக்கிறார். உண்மையில் அந்த குடும்பம் வேன் வாடகை மூலம் கிடைக்கிற வருமானத்தில் செழிப்பாக இருக்கிறது. தன் சுயநலத்துக்காக திட்டமிட்டு அக்கா குடும்பத்தை எமாற்றிய அந்த தங்கையின் செயலால் அவர்கள் நிலத்தையும் இழந்து, வருமானத்தையும் இழந்து வாடுகிறார்கள்.

நிஷா, திருவாரூர்.
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

நெகிழ வைத்த நிஜங்கள் Empty Re: நெகிழ வைத்த நிஜங்கள்

Post by Muthumohamed Sun Jun 23, 2013 6:21 pm

பலூன் பறந்தது... பஸ் நின்றது...

சென்னை தீவுத்திடலில் நடைபெறும் சுற்றுலா பொருட்காட்சிக்கு நான் எனது அண்ணன், அண்ணி குடும்பத்தினரோடு சென்றிருந்தேன். நாங்கள் மொத்தம் ஐந்து பேர். அதில் குழந்தைகளும் அடக்கம்.

பொருட்காட்சியை சுற்றிப் பார்த்துவிட்டு உயர் நீதிமன்றத்தில் இருந்து தாம்பரம் செல்லும் பஸ்சில் ஏறினோம். ஒரு குழந்தையுடன் அண்ணியும், இன்னொரு குழந்தையுடன் அண்ணனும் இடம் கிடைத்து சீட்டில் அமர்ந்து விட்டார்கள். பொருட்காட்சியில் அந்த இரண்டு குழந்தைகளுக்கும் ஆளுக்கு ஒரு பலூன் வாங்கி கொடுத்து இருந்தார்கள். கூட்ட நெரிசலில் பலூன் உடைந்து விடும் என்று எண்ணிய ஓட்டுனர் என் அண்ணனிடம், "பலூனை என்னிடம் கொடுங்கள் இறங்கும் போது வாங்கி கொள்ளுங்கள்'' என்று வாங்கி, இஞ்சின் அருகில் கட்டி விட்டார். வண்டி செல்லும் வேகத்தில் கட்டி இருந்த பலூன் ஒன்று காற்றில் பறந்து வெளியேபோய் விட்டது.

அதை கவனித்த ஓட்டுனர் சரியாக மெரினா பீச் ஓரம் வந்ததும் குறிப்பிட்ட இடத்தில் பஸ்சை நிறுத்தி விட்டு பீச்சை நோக்கி ஓடினார். அங்கிருந்த ஒரு பலூன் கடையில் 1 பலூனை வாங்கிக் கொண்டு ஏறினார். ஒரு பலூனுக்காக இந்தமாதிரி பஸ்சை நிறுத்திவிட்டு நீங்கள் ஓடிப்போக வேண்டியதில்லையே? என்று டிரைவரிடம் நாங்கள்கேட்டோம்.

அதற்கு டிரைவர் சொன்ன பதில்: "நானும் இரண்டு பிள்ளைகள் பெற்றவன் தான். குழந்தைகள் பஸ்சை விட்டு இறங்கும்போது, இருக்கும் ஒரு பலூனுக்கு இருவரும் சண்டை போடுவார்கள். அப்படி ஒரு சண்டை நடக்க நான் காரணமாக இருக்கக்கூடாதில்லையா!'' என்றாரே பார்க்கலாம்!

அவர் ஒரு பொறுப்பான டிரைவர் மட்டுமின்றி, பொறுப்பான அப்பாவாகவும் இருப்பதை நினைத்து மகிழ்ந்தோம்.

தங்கபாண்டி, முடிச்சூர்.
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

நெகிழ வைத்த நிஜங்கள் Empty Re: நெகிழ வைத்த நிஜங்கள்

Post by Muthumohamed Sun Jun 23, 2013 6:22 pm

ஹெல்மெட் பின்பக்கம் விபத்து முன்பக்கம்

நாங்கள் குடியிருக்கும் காம்பவுண்டில் ஒரு மளிகைக்கடை வியாபாரி குடும்பமும் வசிக்கிறது. அவர் இருசக்கர வாகனம் வைத்திருக்கிறார். வியாபாரியும், அவரது மனைவியும் வெள்ளிக்கிழமை தோறும் மாரியம்மன் கோவிலுக்கும், பிரதோஷ நாளில் சிவன் கோவிலுக்கும் அந்த இருசக்கர வாகனத்தில் செல்வார்கள்.

வாகனத்தில் போகும்போது ஹெல்மெட்டை அவர் தலையில் அணியமாட்டார். பின்னால் இருந்து பயணம் செய்யும் அவருடைய மனைவி தனது மடியில் வைத்திருப்பார். சாலையில் போக்குவரத்து போலீசார் யாராவது இருப்பதைப் பார்த்தால் உடனே மனைவி கணவர் தலையில் ஹெல்மெட்டை மாட்டிவிடுவார். வழக்கமாக அவர்கள் சேர்ந்து பயணிக்கும்போது இப்படித்தான் நடக்கும்.

அன்றும் வழக்கம்போல் இருவரும் இருசக்கர வாகனத்தில் கோவிலுக்கு சென்றனர். மெயின் ரோட்டில் போலீஸ்காரர் ஒருவர் ஹெல்மெட் அணியாதவரிடம் அபராதம் வசூல் செய்வதை பார்த்ததும் கணவர், தன் மனைவியிடம் `போலீஸ் நிற்கிறார். அவர் பார்த்துவிட்டால்அபராதம் தீட்டிவிடுவார். உடனே ஹெல்மெட்டை மாட்டிவிடு' என்று சொல்லியிருக்கிறார். உடனே பதட்டமான அவர் மனைவி ஹெல்மெட்டை சரியாக பார்த்து மாட்டாமல் திருப்பி மாட்டிவிட்டார். அதனால் அவருடைய முகம் மூடப்பட்டுவிட்டது. உடனே அவர் நிலைதடுமாறி, எதிரே வந்த டூவீலரில் மோதிவிட்டார். தம்பதிகள் இருவரும் கீழே விழுந்து பலத்த காயம். எதிரில் வந்தவருக்கும் காயம். ஆஸ்பத்திரியில் சேர்த்து மருத்துவம் பார்த்ததில் ஏகப்பட்ட செலவு. எப்படியோ உயிருக்கு ஆபத்தின்றி பிழைத்தார்கள்.

ஹெல்மெட் அணிவது வாகனத்தில் போகிறவர்கள் தங்கள் உயிரை பாதுகாக்கத் தான். ஆனால் ஹெல்மெட் அணிவதை ஏதோ கவுரவக் குறைச்சலாக எண்ணிக்கொண்டு கையில் எடுத்துச்செல்வது இதுமாதிரியான விளைவுகளை ஏற்படுத்திவிடும்.

நி.செல்வராணி, விருதுநகர்.
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

நெகிழ வைத்த நிஜங்கள் Empty Re: நெகிழ வைத்த நிஜங்கள்

Post by Muthumohamed Sun Jun 23, 2013 6:22 pm

பெற்றோரை திருத்த இதுவல்ல வழி...!

உடல்நிலை பாதிக் கப்பட்டிருந்த உறவினரைப் பார்க்க ஆஸ்பத்திரிக்கு சென்றிருந்தேன். அங்கே பக்கத்து அறையில் பள்ளி மாணவி ஒருத்தி தீக்காயங்களுடன் அனுமதிக்கப்பட்டிருந்தாள். காரணத்தைக் கேட்டபோது மனம் கனத்துப் போனது.

அந்த மாணவி, பெற்றோருக்கு ஒரே மகள். வீட்டில் எப்போதும் பெற்றோர் சண்டை போட்டுக்கொண்டே இருப்பார்களாம். `உங்கள் சண்டை என் நிம்மதியை கெடுக்கிறது. என்னால் படிக்க முடியவில்லை' என்று மகள் பலமுறை சொல்லிப்பார்த்தும் பெற்றோர் கேட்காமல் தினமும் விடாப்பிடியாக சண்டையை தொடர்ந்திருக்கிறார்கள்.

`இவர்கள் திருந்தவே மாட்டார்கள்' என்று முடிவெடுத்த மகள், அன்றைய தினம் இருவரும் காரசாரமாக சண்டை போட்டுக் கொண்டு இருந்த போதே தனது துப்பட்டாவில் நெருப்பு வைத்திருக்கிறாள். துணி எரிந்துவிட அவள் அலறல் சத்தம் போட்டிருக்கிறாள். அவளுடைய சத்தம் கேட்டு பெற்றோர் ஓடிவந்து, தீயை அணைத்து மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார்கள். அதை விடக் கொடுமை, அந்த பெற்றோர் தங்கள்அன்பு மகள் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த அந்தநிலையில், ஆஸ்பத்திரியிலும் சண்டை போட்டுக் கொண்டுதான் இருந்தார்கள்.

சண்டையிட்ட பெற்றோர் இப்போதும் குத்துக்கல் போலத்தான் இருக்கிறார்கள். இவள்தான் வலியில் துடிக்கிறாள். பெற்றோர்கள் சண்டையிட்டாலும் அவர்களை திருத்த நினைத்து இப்படிப்பட்ட விபரீத வழிகளை பிள்ளைகள் தேர்ந்தெடுத்து, தங்கள் உயிருக்கு உலைவைத்துக்கொள்ளக் கூடாது.

நா.நளினாதேவி, ஈரோடு.
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

நெகிழ வைத்த நிஜங்கள் Empty Re: நெகிழ வைத்த நிஜங்கள்

Post by Muthumohamed Sun Jun 23, 2013 6:22 pm

இது' வந்தது... `அது' போனது

என்னுடைய நண்பர் மத்திய அரசுப் பணியில் இருப்பவர். அவரின் மனைவி வங்கிப் பணியாளர். ஓரளவு வசதியான குடும்பம். அவர்களுக்கு மூன்று பெண்கள். அவர்களில் இருவர் திருமண வயதில் இருந்தார்கள். பெற்றோர் அவர்களுக்கு தகுதியான மாப்பிள்ளை தேடிக்கொண்டு இருக்கிறார்கள்.

அவர்களது மூன்றாவது மகள் எட்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கிறாள். நண்பரும், அவரின் மனைவியும் ஆளுக்கொரு செல்போன் வைத்திருப்பதோடு, மூன்று பெண்களுக்கும் ஆளுக்கொன்று வாங்கிக் கொடுத்திருக்கிறார்கள். `எங்கேயாவது தனியாகப் போனால் செல்போன் மூலம் இருப்பிடத்தைத் தெரியப்படுத்தலாமே!' என்பதற்காக இந்த ஏற்பாடு.

இப்படி செல்போன் வழங்கியதில், இளையமகள் விஷயத்தில்தான் தப்பு நடக்கிறது. ஆரம்பத்தில் படிப்பில் முதல் இடத்தில் இருந்த அவள், செல்போன் வந்தபிறகு சராசரி மாணவியாகி விட்டாள். எந்த நேரமும் செல்போனும் கையுமாக பேசிக்கொண்டே இருக்கிறாள். பெற்றோரும் கண்டுகொள்வதாக இல்லை.

அவர்களின் குடும்பநண்பர் ஒருமுறை அவளிடம், `ஏம்மா! இப்படி செல்போன் கையுமாகவே இருக்கிறாயே? படிப்பிலும் கவனம் செலுத்த வேண்டாமா?' என்று கேட்டார். பதிலுக்கு அவள், `நான் ஒண்ணும் மார்க் வாங்காம இல்லையே! எல்லாப் பாடங்களிலும் ஐம்பது மார்க்குக்கு குறையாமல் வாங்கிட்டுத்தானே இருக்கேன்!' என்று சொன்னாள். இப்போதே ஐம்பது மார்க் என்றால் இனி, மேலும் மார்க் குறைந்துகொண்டுதானே இருக்கும்.

ஆர்.தனபால், சென்னை.
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

நெகிழ வைத்த நிஜங்கள் Empty Re: நெகிழ வைத்த நிஜங்கள்

Post by Muthumohamed Sun Jun 23, 2013 6:22 pm

உடைந்த செல்போன் உணர்த்திய பாடம்

தோழியின் வீட்டிற்குச் சென்றிருந்தேன். அவள் தன் மூன்று வயதுக் குழந்தைக்கு சாதம் ஊட்டிக்கொண்டிருந்தாள். குழந்தை சாப்பிடாமல் அடம் பிடித்து இங்கும் அங்கும் ஓடியது. தோழி உடனே அருகில் வைத்திருந்த செல்போனைக் குழந்தை கையில் கொடுத்து `சமர்த்தா சாப்பிடணும். அப்போது தான் அப்பா உன் கூட போனில் பேசுவார்' என்றபடி சாதத்தை ஊட்ட முயற்சித்தாள்.

குழந்தையோ சாப்பிடுவதில் ஆர்வம் காட்டாமல் போன் பட்டனை அழுத்தி விளையாடுவதிலேயே ஆர்வமாக இருந்தது. தோழி வற்புறுத்தி அதன் வாயில் சாதத்தைத் திணிக்கவே கோபம் கொண்ட குழந்தை கையிலிருந்த செல்போனை வீசி விட்டு அழுதது. செல்போன் அங்கிருந்த டி.வி.யின் மேல் விழுந்து டி.வி. உடைந்தது. செல்போனும் சேதம் அடைந்தது. உடனே தோழி குழந்தையைத் திட்டியபடி அடித்தாள்.

பாவம் குழந்தை என்ன செய்யும்? விலை உயர்ந்த பொருட்களை குழந்தையிடம் தருவதால் பொருள் நஷ்டமும், பணவிரயமும் ஆகும் என்பதை பெரியவர்கள்தான் புரிந்துகொள்ள வேண்டும்.

எஸ்.விஜயா சீனிவாசன், திருச்சி-13.
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

நெகிழ வைத்த நிஜங்கள் Empty Re: நெகிழ வைத்த நிஜங்கள்

Post by Muthumohamed Sun Jun 23, 2013 6:23 pm

முதியோர் சேமிப்பு... முழுதான பாதுகாப்பு

தினமும் அதிகாலை வாக்கிங் செல்லும் வழக்கமுடைய நான், அன்று செல்லும் போது கடைத் திண்ணை ஒன்றில் படுத்திருந்தவரைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தேன். அவர் தூங்கிவிழித்து அப்போதுதான்திண்ணையில் எழுந்து உட்கார்ந்திருந்தார்.

அவர் எங்கள் கிராமத்தில் ஊர்மெச்ச வாழ்ந்த குடும்பத்தைச் சேர்ந்தவர். பெரும் செல்வந்தராகவும் விளங்கினார். `இவர் ஏன் இந்த நடுங்கும் குளிரில், அதுவும் பிளாட்பாரத்தில் படுத்துக் கிடந்தார்?' என்ற கேள்வி எனக்குள் அதிர்ச்சியுடன் எழுந்தது.

அவருக்கு ஒரே மகன். உள்ளூரிலேயே குடித்தனம். சொந்த வீடு கடன் சுமை காரணமாக விற்கப்பட, வாடகை வீட்டில் தந்தையுடன் குடியேறியிருக்கிறான் மகன். தாய் இல்லை. வாடகை வீடு சிறியதாக இருக்க, மருமகள், மாமனாரை விரட்ட சதி திட்டம் தீட்டியிருக்கிறாள்.

வீட்டின் உரிமையாளரிடம் போய், தன் மாமனார் பற்றி மோசமாக கூறியிருக்கிறாள். அவரால் அக்கம்பக்கத்து வீட்டினருக்கு பிரச்சினை ஏற்படும். அவர் ரவுடி என்றும் கூறியிருக்கிறாள். வீட்டு உரிமையாளரும் அதை நம்பிவிட்டார். `இந்தப்

பெரியவர் என் வீட்டில் இருக்கக்கூடாது. அப்படி இருப்பாரானால் மொத்தமாக வீட்டை காலி செய்யுங்கள்' என்று கண்டிப்புடன் வீட்டு உரிமையாளர் சொல்லி விட்டார். மகனும் வேறு வீடு பார்க்கும் வரை தந்தையை வேறு எங்காவது தங்கிக் கொள்ளுமாறு கூறியிருக்கிறான். ரோஷம் தாங்காமல் பெரியவரும் வீட்டை விட்டு வெளியே வந்துவிட்டார். எங்கு செல்வது எனத் தோன்றாமல் கடை வாசற்படியில் வந்து இரவு தங்கியிருக்கிறார்.

நடந்ததை அவர் மூலம் தெரிந்ததும் அவரது சம்பந்தியிடம் (மருமகளின் தந்தை) இந்த விஷயத்தை கொண்டுசென்றேன். அவர் பதறியடித்து ஓடிவந்து மகளையும், மருமகனையும் திட்டினார். அதன்பிறகு மீண்டும் தன்குடும்பத்துடன் இணைந்து கொண்டார் பெரியவர். வீட்டு உரிமையாளருக்கும் உண்மை புரியவைக்கப்பட்டது. அவரும் அமைதியாகிவிட்டார்.

-ஏ.ஜே.ஜப்பார், சத்தியமங்கலம்.
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

நெகிழ வைத்த நிஜங்கள் Empty Re: நெகிழ வைத்த நிஜங்கள்

Post by Muthumohamed Sun Jun 23, 2013 6:23 pm

தாலி நேரமா? ஜாலி நேரமா?

ரியல் எஸ்டேட் தொழில் செய்துவரும் நண்பரின் இல்லத் திருமணத்திற்கு குடும்பத்துடன் சென்றிருந்தோம். மணமக்கள் இருவரும் பொறியியல் கல்லூரியில் படிக்கும்போதே பழகியவர்கள். இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் ஏற்பாடாயிற்று.

பெண்ணும்- மாப்பிள்ளையும் ஆழமான காதலர்கள் என்பதை மணவறையில் அவர்கள் காட்டிய அன்யோன்யமே உணர்த்தியது. அது வாழ்த்த வந்த பலரையும் சில நேரங்களில் முகம் சுளிக்கவும் வைத்தது. மணவறையில் உட்கார்ந்ததில் இருந்து ஒரு மணி நேரம் முழுக்க, திருமணம் நடத்தி வைக்கும் குருக்கள் முறையாக மந்திரம் சொல்லிக்கொண்டு வந்தார். பெண்ணையும், மாப்பிள்ளையையும் தான் சொல்லும் மந்திரங்களை தன்கூடவே சொல்லச் சொன்னார். பெண்ணும் மாப்பிள்ளையும் குருக்கள் சொல்வதையும், செய்யும் சடங்குகளையும் முறையாக செய்யாமல் இருவரும் சிரித்து பேசியபடி ஒப்புக்காக செய்து கொண்டிருந்தனர். குருக்கள் இடைஇடையே "அக்கறையா , பக்திபூர்வமா சொல்லுங்கோ'' என்று சொன்னதையும் அவர்கள் கேட்கவில்லை. ஹோமத்தாலும், கோபத்தாலும் குருக்கள் முகம் சிவந்தது தான் மிச்சம்.

என்ன தான் பழகியிருந்தாலும் இரண்டாயிரம் பேர்களுக்கு மேல் கூடியிருக்கும் வாழ்க்கையின் முக்கியமான மணவிழாவில், ஏதோ பெண்ணும் மாப்பிள்ளையும் பூங்காவில் தனித்து இருப்பதைப் போல நடந்து கொண்டது, வந்திருந்தோர் அனைவரையும் எரிச்சல் படுத்தியது. தாலி வைபவத்தை, ஜாலி வைபவம் ஆக்கிவிட்டார்கள்.

கே.இராமசாமி, திருச்சி.
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

நெகிழ வைத்த நிஜங்கள் Empty Re: நெகிழ வைத்த நிஜங்கள்

Post by Muthumohamed Sun Jun 23, 2013 6:23 pm

மனதை அதிர வைத்த `மரணக் குளியல்'

எனது நண்பர் ஒருவர் குளத்திற்கு குளிக்கச் செல்லும்போதெல்லாம் அவரது குழந்தைகள் இரண்டுபேரையும் கூடவே அழைத்துச் செல்வார். 8 வயது, 5 வயதுள்ள குழந்தைகள் இருவருமே செல்லமாக வளர்ந்தனர். அதனால் அவர் அழைத்துச் செல்லாவிட்டாலும், குழந்தைகள் கூடவே கிளம்பிச் சென்று விடும்.

இதுதான் விபரீதம் ஆயிற்று. அன்று அவனது அப்பா ஊரில் இல்லை. 8 வயது பையன் தினசரி குளிக்கும் குளத்திற்கு தானாகவே சென்று விட்டான். சின்னப்பையன் தூங்கியதால் அவன் செல்லவில்லை.

நண்பரின் மனைவியோ சமையல் வேலையில் ஈடுபட்டிருந்ததால் மகன் குளத்திற்கு சென்றதை அவரும் கவனிக்கவில்லை. குளிக்கச்சென்ற சிறுவனோ படித்துறையில் இறங்கியபோது பாசி வழுக்கி குளத்தின் உள்ளே விழுந்திருக்கிறான். அப்போது அங்கே யாரும் இல்லை. சிறுவன் அப்படியே தண்ணீரில் மூழ்கி இறந்துவிட்டான்.

வெகுநேரம் கழித்து அந்த குளத்திற்கு குளிக்கச் சென்ற பக்கத்து வீட்டுக்காரர் தண்ணீரில் மிதந்த சிறுவனைப் பார்த்து பதறிப்போய் தூக்கியிருக்கிறார். சிறுவன் பிணமாகிவிட்டது தெரிந்ததும் அதிர்ந்தவர், உடலை தூக்கிக்கொண்டு நண்பரின் வீட்டிற்கு வந்தார். அப்போது கூட தனது மூத்தமகன் வீட்டைவிட்டு வெளியேபோனது தெரியாமல் நண்பரின் மனைவி சமையல் வேலையையே செய்துகொண்டிருந்தார். மகனை பிணமாக பார்த்த போது வயிற்றிலும், தலையிலும் அடித்து கொண்டு அவர் அழுததைப் பார்த்து தெருவே திரண்டு நின்று கண்ணீர் விட்டது. நண்பருக்கும் தகவல் கொடுத்து அவரும் வந்துவிட, அவரும் துடித்தார். கதறினார்.

சிறு குழந்தைகளை நீர் நிலைகள் உள்ள பகுதிக்கு அழைத்துச் சென்று பழக்கக் கூடாது.

அ.க.பன்னீர்செல்வம், திருப்பூர்.
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

நெகிழ வைத்த நிஜங்கள் Empty Re: நெகிழ வைத்த நிஜங்கள்

Post by Muthumohamed Sun Jun 23, 2013 6:23 pm

காற்றில் பறந்த கல்யாண வாக்குறுதி

சில வாரங்களுக்கு முன்னால் பக்கத்து வீட்டுப் பெண்ணைப் பார்ப்பதற்காக மாப்பிள்ளை வீட்டார் வெளிïரிலிருந்து வந்திருந்தார்கள். பெண்ணைப் பார்த்ததும் அவர்களுக்கு பிடித்துவிட, அதையும் அப்போதே சொல்லி விட்டார்கள். மூன்றே மாதத்திற்குள் திருமணத்தை நடத்தி விடலாம் என்று இரு வீட்டாரும் முடிவு செய்து விட்டார்கள்.

ஒரு மாதம் கடந்திருக்கும். அதே பெண்ணைப் பார்ப்பதற்கு வேறொரு மாப்பிள்ளை வீட்டார் வந்திருப்பதை அறிந்தேன். அதிர்ந்துபோன நான், அந்த மாப்பிள்ளை வீட்டார் புறப்பட்டுப்போனதும், `உங்கள் பெண்ணுக்குத்தான் ஏற்கனவே திருமணத்திற்கு மாப்பிள்ளை பார்த்து முடிவு செய்திருந்தீர்களே... பிறகு எப்படி மறுபடியும் பெண் பார்க்க மாப்பிள்ளை வீட்டார் வந்திருக்கிறார்கள்... குழப்பமாக இருக்கிறதே...?' என்று பெண்ணின் அப்பாவைப் பார்த்து கேட்டேன்.

அதற்கு அவர் சொன்ன பதில் என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. `ஆமாங்க... அதனால் என்ன... ஏற்கனவே பார்த்த மாப்பிள்ளை வீட்டாரிடம் வெறுமனே சம்மதம் தானே சொல்லியிருக்கிறோம். முன்பு பார்த்த மாப்பிள்ளையை விட நல்ல மாப்பிள்ளையாக இவர் அமைந்து விட்டால், முன்பு சம்மதம் தெரிவித்த இடத்தில் `வேண்டாம்' என்று சொல்லிவிட வேண்டியதுதானே...' என்று கூலாக சொன்னார்.

கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்ற நினைக்காத இந்த மனிதர்களைப் பற்றி என்னதான் சொல்வது?

பா.பானுமதி, கோவை.
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

நெகிழ வைத்த நிஜங்கள் Empty Re: நெகிழ வைத்த நிஜங்கள்

Post by Muthumohamed Sun Jun 23, 2013 6:24 pm

காலண்டர் புதுசு! வருஷம் பழசு!

எனது நண்பர் ஒருவர் சென்னை பூக்கடை பகுதியில் வேலை செய்து வருகிறார். அவர் கடந்த டிசம்பர் மாதம் கடைசி நாளன்று வேலை முடிந்து வீடு திரும்பி கொண்டிருந்திருக்கிறார். அப்பொழுது பாரிமுனை பகுதியில் ரோட்டோரத்தில் காலண்டர்களை குவித்து வைத்து ``மங்கூஸ் காலண்டர் பத்து ரூபாய்! மங்கூஸ் காலண்டர் பத்து ரூபாய்!!'' என்று கூவி விற்பனை செய்து கொண்டிருந்திருக் கின்றார்கள். இவரும் ``பத்து ரூபாய்க்கு காலண்டரா? ஆச்சர்யமாக இருக்கிறதே! என்று நினைத்து கும்பலில் புகுந்து, தனக்கும், தன் தங்கையின் வீட்டுக்கும், பக்கத்து வீட்டிற்கும் சேர்த்து மூன்று காலண்டர்களை வாங்கிக் கொண்டு வீடு திரும்பி இருக்கிறார்.

மறுநாள், புது வருடம்! பழைய காலண்டரை கழற்றி விட்டு புது காலண்டரை பந்தாவாக மாட்டி வைத்தார். `ஒரு சராசரி காலண்டர் 25 ரூபாய் விற்கும் நேரத்தில் ஒரு சூப்பர் காலண்டர் பத்து ரூபாய்க்கு கிடைத்ததே!' என்று பெருமைப்பட்டார்.

அடுத்த நாள் முதல் தேதியை கிழிக்க, அங்கே தெரிந்ததோ 2.1.2010 என்ற தேதி! அதிர்ச்சியடைந்த அவர் அவசர அவசரமாய் அடுத்தடுத்த தாள்களை திருப்ப எல்லா தாள்களுமே 2010-ம் ஆண்டிற்கு உரியன. டிஜிட்டல் பிரிண்ட்டில், 2011-ம் வருடத்தின் முதல் தாளை மட்டும் பிரிண்ட் செய்து, காலண்டர் `கேக்'கில் மேற்புறம் ஒட்டி இரவோடு இரவாக அட்டகாசமாக வியாபாரம் செய்து விட்டிருந்தனர்.

ஏ.ரகுமான், சென்னை.
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

நெகிழ வைத்த நிஜங்கள் Empty Re: நெகிழ வைத்த நிஜங்கள்

Post by Muthumohamed Sun Jun 23, 2013 6:24 pm

தேடி வந்தாள்... `திருடி' சென்றாள்!

எங்கள் உறவினர் ஒருவர் வீட்டில் நடந்த சம்பவம் இது. காலைநேரம் அவசரமாய் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப தயார் செய்து கொண்டிருந்த நேரத்தில் 25 வயது மதிக்கத்தக்க பெண் ஒருத்தி வந்து கதவை தட்டியிருக்கிறாள். கதவைத் திறந்ததும், ``நான் கியாஸ் ஏஜென்சியிலிருந்து வருகிறேன். கியாஸ் பைப் சரியாக இருக்கிறதா என்று பார்க்கவேண்டும்'' என்று கூறியிருக்கிறாள்.

அப்போது என் உறவினர் குழந்தைகளை பள்ளிக்கு கிளப்பும் அவசரத்தில் இருக்கவே, அதை புரிந்து கொண்டது போல், "ஓ.கே...நானே `செக்` பண்ணிக் கிறேன்'' என்று கூறிவிட்டு, சமையல் அறையை நோக்கி சென்றிருக்கிறாள். அங்கு, கியாஸ் இணைப்பு பைப்பை சரிபார்த்திருக்கிறாள். பின்பு ஏதோ ஒரு சிலிப்பை சிலிண்டரில் ஒட்டியிருக் கிறாள்.

அடுத்து தன் கையில் இருந்த பையை திறந்து ஒரு தகட்டை வெளியே எடுத்திருக்கிறாள். "இதை அடுப்பில் பொருத்தவேண்டும். பொருத்தினால் கியாஸ் மிக குறைவாகத்தான் செலவாகும். இதைக் கடையில் வாங்கினால் ரூ.3,000. நாங்கள் ஏஜென்சியிலிருந்து வந்து ரூ.1,000 க்கு கொடுக் கிறோம்'' என்றும் நம்பும்படி பேசியுள்ளாள். அதை யார் வந்து, எப்படி பொருத்துவார்கள் என்று கேட்டபோது, ஏஜென்சி ஆள் வந்து பொருத்துவார் என்றுகூறிவிட்டு, ஆயிரம் ரூபாயை வாங்கிக் கொண்டு சென்று விட்டாள்.

இதே போல் மேலும் 4 வீடுகளிலும் அதிரடி விசிட் செய்து பணம் வாங்கிக் கொண்டு போயிருக்கிறாள், அதில் ஒருவருக்கு சந்தேகம் வந்து ஏஜென்சியை தொடர்பு கொண்டு கேட்டிருக்கிறார். `அப்படியெல்லாம் யாரையும் அனுப்பவில்லை. அதுவும் பெண்களை அனுப்பவே மாட்டோம். அவள் என்ன தகடு கொடுத்தாள்?' என்று திருப்பி கேட்டிருக் கிறார்கள்.

இவர்கள் உடனே உஷாராகி, அவளைத் தேட அவள் அக்கம் பக்கத்தில் சில வீடுகளுக்கு `நாமம்' போட்டுவிட்டு போய்விட்டாள்.

-வி.ஸ்ரீவித்யா, ஈரோடு.
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

நெகிழ வைத்த நிஜங்கள் Empty Re: நெகிழ வைத்த நிஜங்கள்

Post by Muthumohamed Sun Jun 23, 2013 6:24 pm

காதல் கசந்தது .. வாழ்க்கை இனித்தது ..

என் தோழி கல்லூரியில் படித்தபோது அவளுடன் படித்த மாணவனை காதலித்தாள். இருவரும் பல இடங்களில் சந்தித்து மனம் விட்டுப் பேசியிருக்கிறார்கள். தோழியின் காதல் அவள் வீட்டிற்கு தெரிய வரவே, அவளிடம் பெற்றோர் விசாரித்திருக்கிறார்கள். அவளும் உண்மையை ஒப்புக்கொண்டிருக்கிறாள். அவன் ரொம்ப நல்லவன் என்று புகழ்ந்திருக்கிறாள்.

மகளின் காதல் பெற்றோருக்கு அதிர்ச்சி தந்தாலும், அவர்கள் காதலைப் பிரிக்க நினைக்கவில்லை. மகள் விரும்பியபடியே வாழ்வு அமையட்டும். திருமணம் செய்துவைத்துவிடலாம் என்று முடிவு செய்தார்கள். அந்த பையன் வீட்டுக்கு முறைப்படி திருமணம் பேச உறவினர்களுடன் சென்றார்கள்.

ஆனால் பையன் வீட்டிலோ நடந்தது வேறு. யாரை தன் உயிருக்கும் மேலானவன் என்று என் தோழி நினைத்துக் கொண்டிருந்தாளோ அவனே தோழியின் பெற்றோரிடம், "நான் உங்கள் மகளை ஒருபோதும் காதலிக்கவில்லை. உங்கள் மகளிடம் பொழுதுபோக்காகத்தான் பழகினேன். எனக்கு அவளை திருமணம் செய்துகொள்ளும் ஆசை எல்லாம் கிடையாது. விவரம் தெரியாத பொண்ணு. அதனால் தான் என்மேல் ஆசை வைத்திருக்கிறது. அவளுக்கு கல்யாண ஆசை இருந்தால் வேறு பையனைப் பார்த்து திருமணம் செய்துவைத்துவிடுங்கள்'' என்று கூறி விட்டான்.

இதனை அறிந்த என் தோழி அதிர்ச்சியில் தற்கொலைக்கு முயன்றாள். பின்பு எப்படியோ காப்பாற்றப்பட்டாள். பின்பு அவளுக்கு ஆறுதல் கூறி கல்லூரிக்கு அனுப்பி படிக்க வைத்தனர். அவளும் மனதை தேற்றிக் கொண்டு படித்து முடித்தாள். இப்போது பிரபல நிறுவனத்தில் கை நிறைய சம்பாதிக்கிறாள்.

ச.கோகிலா, மயிலாடுதுறை.
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

நெகிழ வைத்த நிஜங்கள் Empty Re: நெகிழ வைத்த நிஜங்கள்

Post by Muthumohamed Sun Jun 23, 2013 6:25 pm

போதையில் ஆண், பொங்கினாள் பெண்

எங்கள் தெருவில் ஒரு குடிகாரர் வசித்தார். எப்போதுமே போதையில்தான் இருப்பார். தினமும் குடித்து விட்டு வந்து மனைவியிடம் சண்டை போடுவதே அவர் வேலை. அதோடு நில்லாமல் அக்கம் பக்கத்தில் இருப்பவர்களிடமும் வம்புச் சண்டைக்கு போவார்.

அன்று எங்கள் தெருவுக்கு ஈயம் பூசுபவர் ஒருவர் வந்தார். அவர் ஈயம் பூசிக்கொண்டிருந்தபோது குடிகாரர் அங்கே வந்தார். ``என் வீட்டு வாசலில் யார் ஈயம் பூசுவது?'' என்று கோபமாய் கேட்டவர், அதே வேகத்தில் அங்கே ஈயம் பூச வைத்திருந்த அண்டாவைத் தூக்கி கீழே போட்டு மிதித்தார்.

அந்தஅண்டாவை ஈயம் பூசக்கொடுத்திருந்தது பக்கத்து வீட்டுப் பெண்மணி. அவர் தனது அண்டா ரோட்டில் உருண்டுவருவதை கண்டதும் பதறியபடி வீட்டில் இருந்து ஓடிவந்தார். "ஏன் என் அண்டாவை உடைத்தாய்?'' என்று கேட்டார். குடிகாரரோ, "அப்படித்தான் உடைப்பேன்... அதைக் கேட்க நீ யார்?'' என்று தெனாவெட்டாக சொன்னார்..

அந்த பெண்மணிக்கு வந்ததே கோபம். ஓங்கி அந்த குடிகாரர் கன்னத்தில் நாலு அறை விட்டார். அப்படியும் ஆத்திரம் அடங்காமல் அவர் கழுத்தில் துண்டை போட்டுப் பிடித்துக் கொண்டவர், "மன்னிப்புக் கேட்டால் தான் விடுவேன்'' என்றார், ஆவேசமாய்! அந்தப் பெண்ணுக்கு வந்த தைரியத்தைப் பார்த்து குடிகாரர் வெல வெலத்து போய்விட்டார். ஏதாவது பேசினால், மேலும் நாலு சாத்து சாத்திவிடுவாள் என்று பயந்தார்.

அதற்குள் தெருவே கூடிவிட, அவமானம் அடைந்த குடிகாரர், வேறுவழியின்றி மன்னிப்புக் கேட்டார். அந்த அவமானத்தால் இரண்டு நாட்கள் வீட்டுக்குள் முடங்கிக் கிடந்தவர் இப்போது அமைதியாக இருக்கிறார். குடிப்பதும் இல்லை.

என்.ராமசாமி, கொடுமுடி.
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

நெகிழ வைத்த நிஜங்கள் Empty Re: நெகிழ வைத்த நிஜங்கள்

Post by Muthumohamed Sun Jun 23, 2013 6:25 pm

இன்பம் அவளுக்கு.. துன்பம் எங்களுக்கு...

நாங்கள் ஒரு கிராமப்பகுதியில் வசிக்கிறோம். அவசரத்திற்கு ஒரு ஆட்டோ பிடிக்கவேண்டும் என்றால் கூட இரண்டு கிலோ மீட்டர் தூரம் செல்ல வேண்டும். பஸ் வசதியும் சரிவர கிடையாது.

அன்று திடீரென பக்கத்து வீட்டு குழந்தைக்கு உடல்நிலை மோசமானது. அவசரமாக மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய கட்டாயம். எங்கள் தெருவில் ஒரு கடையில் ஒரு ரூபாய் நாணயம் போட்டு பேசும் போன் பெட்டி உள்ளது. என் நண்பர் ஒருவர் ஆட்டோ வைத்திருக்கிறார். போனில் பேசி அவரை அழைக்கலாம் என்று ஓடோடி சென்றேன்.

நான் போன நேரத்தில் ஒரு பெண்மணி யாருடனோ சுவாரசியமாய் அந்த போனை பயன்படுத்தி பேசிக்கொண்டிருந்தார். அவரிடம் குழந்தையின் சீரியஸ் நிலைமையைக் கூறி, `ஒரு நிமிடம் கொடுங்கள். குழந்தைக்கு ஆபத்து தகவல் மட்டும் கூறி ஆட்டோவை வரவழைக்க வேண்டும்' என்றேன். அந்தப் பெண் சிவபூஜையில் புகுந்த கரடிபோல் என்னைப் பார்த்தார். ஆனாலும் தொடர்பை துண்டிக்கவில்லை. மறுபடியும் சிரித்து, சிரித்து பேசிக்கொண்டிருந்தார்.

இதைப் பார்த்த எங்களுக்கு ஆத்திரம் வந்தது. `இப்படியுமா ஈவிரக்கம் இல்லாத பெண் இருப்பாள்?' என்ற கோபத்தில் அவளை திட்டத் தொடங்கியதும், தூரத்தில் ஒரு ஆட்டோ வருவது தெரிந்தது.

உடனே ஓடிச் சென்று அதை கைகாட்டி நிறுத்தி, விஷயத்தைக் கூறி, குழந்தையை ஏற்றிக்கொண்டு ஆஸ்பத்திரிக்கு சென்றோம்.

`சரியான நேரத்தில் குழந்தையை கொண்டு வந்திருக்கிறீர்கள். அதனால்தான் குழந்தையை காப்பாற்ற முடிந்தது' என்று டாக்டர் கூறினார். நிலவரம் தெரியாமல் போன் பேசிய அந்தப் பெண்ணை நினைத்தால் இப்போதும் நெஞ்சம் பற்றி எரிகிறது.

க. பன்னீர் செல்வம், மாப்படுகை.
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

நெகிழ வைத்த நிஜங்கள் Empty Re: நெகிழ வைத்த நிஜங்கள்

Post by Muthumohamed Sun Jun 23, 2013 6:25 pm

என் சோக கதையைக்கேளு தாய்க்குலமே...'

நான் ஒரு தனியார் நிறுவனத்தில் விற்பனை பிரதிநிதியாக உள்ளேன். எங்கள் நிறுவனத்தின் பொருட்களை தினமும் வீடு வீடாக எடுத்துச் சென்று அதன் முக்கியத்துவத்தை உணரச் செய்து பொருட் களை விற்பனை செய்வது என் வேலை.

தினமும் குறைந்தது பதினைந்து பொருட்களையாவது விற்பனை செய்ய வேண்டும் அல்லது நான் சென்ற தெருக்களின் முகவரி போன்ற விவரங்களை தெரிவித்தால்தான் எனக்கு ஒரு நாளைக்கு படியாக ரூ.50 கிடைக்கும்.

சமீபத்தில் ஒருநாள் குறிப்பிட்ட தெருவிற்கு சென்று பொருட்களை விற்பனை செய்யத் தொடங்கினேன். அப்பொழுது அந்த தெருவில் உள்ள ஒருவர் கூட சரியான பதில் அளிக்கவில்லை. `உங்களுக்கெல்லாம் வேறு வேலை இல்லையா? எங்களிடம் பணம் என்ன கொட்டியா கிடக்கிறது? கையில் ஒரு பையை எடுத்து வந்து எங்கள் உயிரை வாங்குவதே உங்களுக்கு வழக்கமாகி விட்டது. வேண்டுமானால் பழைய சோறு இருக்கிறது. உன் கையில் உள்ள பையைக் காட்டு. அதில் சோற்றைக் கொட்டுகிறோம்' என்று நாலைந்து பெண்கள் நக்கலாகக் கூறி சிரித்தனர். எனக்கு மிகவும் அவமானமாகி விட்டது.

உடனே நான் கோபத்துடன், `ஒன்று, பொருட்களை வாங்கிக் கொள்ளுங்கள். இல்லாவிட்டால் வேண்டாம் என்று கூறி விடுங்கள். நான் உங்களை ஒன்றும் கட்டாயப்படுத்தவில்லை. கண்டபடி பேசாதீர்கள்' என்று கூறிவிட்டு வேகமாக வந்து விட்டேன்.

விற்பனை பிரதிநிதிகளான நாங்களும் தன்மானம் கொண்ட மனிதர்கள் தான். எங்களையும் மரியாதையுடன் நடத்துங்கள்.

-எஸ்.சுரேஷ், மஞ்சக்குப்பம்.
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

நெகிழ வைத்த நிஜங்கள் Empty Re: நெகிழ வைத்த நிஜங்கள்

Post by Muthumohamed Sun Jun 23, 2013 6:26 pm

ஆடம்பர மகன்! அன்னக்காவடி பெற்றோர்!

வெளிïரில் வசிக்கும் என் உறவினரின் வயது அறுபது. மனைவி, ஒரே மகனுடன் வசித்து வருகிறார். நகரின் பிரதான இடத்தில் சொந்தமாய் வீடும் கடையும் இருந்தது. உர வியாபாரம் செய்து வந்தார். அது பூர்வீக வியாபாரம்.

அமைதியாய் சென்று கொண்டிருந்த இவரது வாழ்வில் `விதி' மகன் உருவில் சிரித்து விளையாடியது. மகனுக்கு அதிக செல்லம் கொடுத்து வளர்த்ததால். வீட்டுக்கு அடங்காத பிள்ளையாய் வளர்ந்த அவன் கெட்ட நண்பர்களின் சகவாசத்தில் சிக்கினான். பெண் சேர்க்கை, குடி, சீட்டாட்டம், ஆடம்பரம் போன்ற பல வழிகளில் பணத்தை செலவழித்தான்.

அதற்கெல்லாம் பெரிய அளவில் பணம் தேவைப்படும் போது பைனான்ஸ், கந்து வட்டி, மீட்டர் வட்டி என கடன் வாங்கினான். அதற்காக நீட்டிய பேப்பர்களில் எல்லாம் கையொப்பம் போட்டுக் கொடுத்திருக்கிறான்.

இவை எல்லாம் ஒருபுறம் நடந்துகொண்டிருக்க, இன்னொரு புறத்தில் அவனுக்கு பெண் தேடினார்கள். அவன் கேரக்டர் அறிந்ததால் யாரும் பெண் கொடுக்க முன்வரவில்லை. பெற்றோர், அவனது சீர்கெட்டபோக்கை தட்டிக் கேட்டால் தற்கொலை செய்து கொள்வேன் என மிரட்டினான். அதனால் அவர்களும் பயந்து ஓரளவுக்கு மேல் தட்டிக்கேட்காமல் விட்டுவிட்டார்கள்.

இதன் விளைவு விபரீதத்தில் முடிந்தது. நண்பர்களுடன் ஜாலி டூர் சென்ற அவன் விபத்து ஒன்றில் சிக்க, ஆஸ்பத்திரியில் ஒரு காலையே எடுக்க வேண்டியதாகி விட்டது. மூன்றுமாத சிகிச்சைக்குப்பிறகு பெற்றோர் அவனை வீட்டிற்கு அழைத்து வந்த பின்புதான் பிரச்சினைகள் விஸ்வரூபம் எடுத்தன. காலை இழந்த அவனிடம் அசல், வட்டிகளை வசூல் செய்ய ஒரு கூட்டமே வீட்டுக்கு படை எடுத்து வந்தது.

பணம் கேட்க வந்தவர்களிடம் அவன் தன் நிலையை விவரிக்க, `அதெல்லாம் எங்களுக்குத் தெரியாது. உன் அப்பா, அம்மாவைக் கொடுக்கச் சொல். இல்லையெனில் உன்னை `கோர்ட்டில் ஏற்றுவோம்... ஜெயிலில் தள்ளுவோம்' என்றெல்லாம் பேசினார்கள்.

மானம், மரியாதைக்கு பயந்த இளைஞனின் பெற்றோர் கடன்களை அடைக்க முன்வந்தார்கள். கடன்காரர்கள் அசல்-வட்டி என பகல் கொள்ளையாய் இருபது லட்சத்திற்கு மேல் கேட்டனர். திடுக்கிட்ட பெற்றோர்களிடம் சமரசம் என்ற பெயரில் 15 லட்சம் தாருங்கள் என்றார்கள்.

வேறு வழி தெரியாததால் அந்த அப்பாவி பெற்றோர் பூர்வீகச் சொத்தான வீடு, கடை இரண்டையும் விற்று கடனை அடைத்தனர். மகனால் வந்த கடன் பிரச்சினை ஒழிந்தது. ஆனால் வயிற்று பிரச்சினை வந்துவிட்டது. இப்போது வாடகை வீடு ஒன்றில் குடி போய், காலிழந்த மகனை வைத்து வைத்தியம் பார்த்து வருகிறார்கள். அவனது பெற்றோர் இருவரும் இப்போது வெவ்வேறு கடைகளில் வேலை பார்த்து வருகிறார்கள்.

-ஜி.கே.எஸ்.மூர்த்தி, கோபிசெட்டிபாளையம்
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

நெகிழ வைத்த நிஜங்கள் Empty Re: நெகிழ வைத்த நிஜங்கள்

Post by Muthumohamed Sun Jun 23, 2013 6:26 pm

கடுமை வார்த்தைகள்... கலங்கிய பிஞ்சுகள்..

எழுது பொருட்கள் விற்கும் கடை ஒன்றில் பேனா, பென்சில் வாங்கச் சென்றேன். அங்கு பள்ளி சிறுவர் இருவர் சீருடையில் நின்றிருந்தனர். கடைக்காரர் கோபத்துடன் திட்டி அவர்களை விரட்டிக் கொண்டிருந்தார். சோகத்துடன் பரிதாபமாக நின்று கொண்டிருந்த அந்த மாணவர்களை அழைத்து என்னவென்று விசாரித்தேன்.

பிரபல தனியார் பள்ளியில் தாங்கள் 3-ம் வகுப்பு படிப்பதாகவும், புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்காக ஒவ்வொரு மாணவ- மாணவியரும் நன்கொடை வசூல் செய்து கொண்டு வரவேண்டும் என்று ஆசிரியைகள் சொன்னதாகவும் கூறினார்கள். `அதற்காகத்தான் நாங்கள் நன்கொடை கேட்க வந்தோம். அதுக்குத்தான் இவர் திட்டுகிறார்' என்றார்கள். அந்த சிறுவர்களைப் பார்க்க பரிதாபமாக இருந்தது.

இப்படிப்பட்ட சிறுவர்களை அவர்களுக்கு பழக்கமில்லாத வேலைகளில் ஈடுபடுத்துவதும், பிறரிடம் போய் கையேந்தி நிற்கச் செய்வதும், மனதளவில் அவர்களை எவ்வளவு வேதனைப்படுத்தும்!

படிப்பில் கவனம் செலுத்த முடியாத அளவுக்கு அவர்கள் நன்கொடை பேப்பரை தூக்கிக் கொண்டு மன உளைச்சலுடன் அலைந்து திரிவதை பார்க்கும்போது பரிதாபமாக இருக்கிறது.

-ஓ.எஸ்.மசூது, சென்னை.
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

நெகிழ வைத்த நிஜங்கள் Empty Re: நெகிழ வைத்த நிஜங்கள்

Post by Muthumohamed Sun Jun 23, 2013 6:30 pm

`பார்த்தது' அக்காவை... `மணந்தது' தங்கையை..!

வெளியூரில் சொந்தத் தொழில் செய்யும் என் உறவினர் மகனுக்கு பெண் பார்க்க சென்றிருந்தோம். ஏற்கனவே இரு வீட்டாரும் பேசி முடிவாகி இருந்ததால் அன்றே திருமண நிச்சயதார்த்தத்தையும் நடத்த முடிவு செய்தோம். அதற்கான உறுதிப் பத்திரம் வாசிக்கும் நிகழ்ச்சி நடந்தது.

உறவினருக்கு 27 வயதிலும், 23 வயதிலுமாக இரு மகள்கள். இளைய மகள் கால் ஊனமானவர். வீட்டிற்குள்ளேதான் அதிகம் இருப்பார். வெளியூர் செல்லும் போது மூன்று சக்கர சைக்கிளில் செல் வார். மூத்த மகள் எக் குறையும் இல்லாதவர். இளைய மகள் மாற்றுத்திறனாளி எனத் தெரிந்தால் மாப்பிள்ளை வீட்டார் மூத்தவளை பார்க்க வரமாட் டார்கள் என நினைத்து இவ்விஷயத்தை பெண் வீட்டார் மறைத்து விட்டனர்.

இந்த உண்மையை மாப்பிள்ளை எப்படியோ தெரிந்து கொண்டார். சபையில் பெரியோர்கள் உறுதி வாங் கும் போது எழுந்து, `எனக்கு மூத்த பெண் வேண் டாம். இளையவளை கொடுத்தால் திருமணம் செய்து கொள்கிறேன்' என அதிர்ச்சி குண்டை வீசினார்.

இதை கொஞ்சமும் எதிர்பாராத பெண் வீட்டார் தடுமாறினார்கள். மாப்பிள்ளை வீட்டில் இருந்து போனவர்களும் இதை எதிர்பாராததால் அதிர்ந்து தான் போனார்கள். இருதரப்புக்கும் தன்னிலை விளக்கம் அளிக்கும் விதத்தில் மாப்பிள்ளைப்பையன் இப்படிச்சொன்னார். "பெரிய மகளுக்கு மாப்பிள்ளை கிடைப்பதில் சிரமம் எதுவும் இருக்காது. ஊனம் என்பதால் சின்னவளைத் திருமணம் செய்யத்தான் பலரும் தயங்குவர். என்றாலும் மூத்த பெண்ணை வீட்டில் வைத்துக்கொண்டு இளைய மகளை பெண் கேட்பதும் முறையல்ல. அதற்கும் ஒரு யோசனை வைத்திருக்கிறேன். மூத்த மகள் திருமணம் பேசி முடித்தபிறகு இரண்டு திருமணத்தையும் ஒரே மேடையில் வைத்துக் கொள்ளலாம். அதுவரை நான் காத்திருக்கிறேன்'' என்றார்.

மாப்பிள்ளை பையன் இப்படிச்சொன்னதும் பலித்தது. ஒரு மாதத்திலேயே மூத்த மகளுக்கும் மாப்பிள்ளை நிச்சயமானது. இரண்டு ஜோடிகளுக்கும் ஒரே நாளில் கோவில் ஒன்றில் திருமணம் நடந்தது. குடும்பத்தோடு சென்று மணமக்களை வாழ்த்தி ஆசீர்வாதம் செய்த போது அந்த மாப்பிள்ளைப் பையன் என் மனதில் ரொம்பவே உயர்ந்து நின்றார்.

எஸ்.பரிமளா, கோபிசெட்டிபாளையம்.
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

நெகிழ வைத்த நிஜங்கள் Empty Re: நெகிழ வைத்த நிஜங்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 10 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum