தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


சங்க இலக்கியத்தில் மழை குறிப்புகள்

View previous topic View next topic Go down

சங்க இலக்கியத்தில் மழை குறிப்புகள் Empty சங்க இலக்கியத்தில் மழை குறிப்புகள்

Post by முழுமுதலோன் Sat Jul 06, 2013 8:39 am

சங்க இலக்கியத்தில் மழை குறிப்புகள்


மழை என்பது எல்லா காலங்களிலும் கொடைக்கு உவமையாகவேபுலவர்களால் கையாளப்படு வந்துள்ளதுஇவ்வுலக உயிர்கள் யாவும்வாழ்வதற்குக் காரணமானது  மழை என்பதை அனைவருக்கும் உணர்வர்அதனால்தான் புலவர்கள் மழையைக் கொடைக்கு உவமையாக்கினர்.அவ்வாறு உவமைக்காக கூறப்பட்ட பல செய்திகள் இன்றைய வேளாண்அறிவியலோடு ஒத்திருப்பதை ஊன்றிக் கற்போரால் உணரமுடியும்.இவ்வாறு மழையை உவமையாகக் கூறுகின்ற அதே நேரத்தில் அம்மழைதோன்றுவதற்கான அறிவியல் காரணத்தையும் பண்டைத் தமிழர்கள்மிகச்  சிறப்பாக அறிந்திருந்தனர்அந்த வகையில் சங்கஇலக்கியத்திலுள்ள மழை பற்றிய அறிவியல் செய்திகளைவெளிக்கொணர்வது இக்கட்டுரையின் நோக்கமாகும்.

மழையின் சிறப்பு;

கொடை வள்ளல்களில் சிறந்த இடத்திலுள்ள பாரியின்கொடைத்தன்மையைக் கூறவந்த சுபிலர்.
''மாரியுமுண்டு ஈங்கு உலகு புரப்பதுவே''  (புறம் 107)
எனக் கூறிப்பிடுகிறார்வள்ளுவரும் மழையின் சிறப்பை பத்துகுறட்பாக்களில் கூறுகிறார்அவற்றில்,

விசும்பின் துளிவீழின் அல்லால் மாற்றாங்கே
பசும்புல் தலைகாண்ப தரிது. (குறள் 16)


எனப் புல் வாழ்வதற்குக்கூட மழை மிக இன்றியமையாதது எனகுறிப்பிடுவதையும் இங்கு எண்ணிப்பாரக்கத் தக்கது.

மழையும் அறிவியலும்  

சூரிய வெப்பத்தால் நீரானது நீராவியாக மாறி மேலே சென்று மேகமாகமாறுகிறதுஇந்தச் செயல் மீண்டும் மீண்டும் நடைபெறும்போதுமேகத்தின் அடர்த்தி அதிகரிக்கிறதுஇந்நிலையில் மேகங்கள் காற்றின்போக்கிற்கேற்ப செல்கிறதுஇவ்வாறு செல்கிற மேகங்களை மலைகள்தடுக்கின்றன் மலைகளில் காணப்படும் தாவரச் சூழல் காரணமாகஅப்பகுதி குளிர்ச்சியாகக் காணப்படுகிறது இதனால் மேகங்களாகக்காணப்படும் நீராவியானது குளிர்ச்சியடைந்து மழையாக பெய்கின்றது.
அதேபோல ஒரு இரத்தில் வெப்பம் அதிகரிக்கும் போது அங்குள்ளவெப்பமானக் காற்று மேல்நோக்கி செல்கைறது அவ்வெற்றிடத்தைநிரப்புவதற்கு குளிர்ந்த காற்று வந்து சேர்கின்றதுஇவ்வாறுகுளிர்க்காற்று வருவதும் மேகங்கள் மழைபொழிவதற்குக்காரணமாகிறதுகாடுகள் மிகவும் அதிகாம இருப்பதாலும் சுற்றுசூழல்குளிர்விக்கப் பட்டு மழைப்பெய்கின்றதுஇவையாவும் மழைபொழிவிற்கான அறிவியல் காரணங்களாகும்.

இலக்கியமும் மழையும்

மழை உருவாக்கத்திற்குரிய நீரில் பெரும் பகுதி நீண்டு விரிந்த கடலில்இருந்து பெறப்படுகிறது. ‘’ பெரும்பாகமான தண்ணீர் கடலில் இருந்துசூரியனால் நீராக்கப்படுகிறதுஇந்த நீராவியைபூமியின் காற்றுமண்டலத்தில் வீசிக்கொண்டிருக்கும் காற்றோட்டங்கள்நிலப்பரப்புக்குஇழுத்து வருகின்றன’’
பனித்துறைப் பெருங்கடல் இறந்து நீர் பருகிக்
காலை வந்தன்றால் காரே   (அகம் 183)


என்று குறிப்பிடப்படுகின்றதுபெருங்கடலில் முகந்து கொள்ளப்படும் நீர்ஆவியாகி மேலே செல்கிறதுஅவ்வாறு மேலே செல்லும் நீர் மேகத்தின்அடர்த்தியைப் பொறுத்து அதுமிதந்து செல்லும் உயரம் அமைகிறது.

பெயில் உலர்ந்து எழுந்த பொங்கல் வெண்மழை [நெடு 20]

அதிக நீர் கொள்ளாத மேகம் மேலே உயர்ந்து செல்கின்றதுஅதனால்மேகத்தில் அதிகளவு நீர்த்தன்மை இருக்கின்ற மேகம் உயர்ந்து செல்லாது,தாழ்ந்து செல்வதை,’’ கடுஞ்சூல் மகளிர்’’ போன்று இருப்பதாகக்குறுந்தொகை குறிப்பிடுகிறது.
காற்றும் மழையும்

மழைபொழிதலில் காற்றின் பங்கு மிக முக்கியமானஇடத்தைப்பெறுகின்றதுநீராவி மேகமாக மாறிய நிலையில் அதனைப்பிற இடங்களுக்கு அடித்துசெல்கின்ற பணியைக் காற்று செல்கிறது.இல்லையெனில் பல பகுதிகளில் மழை இல்லாமல் போய்விடும்.
நன்னுதல் அரிவை காரினும் விரைந்தே ( ஐங். 492)
எனக்கார்கால மேகம் காற்றில் அடித்துச் செல்லப்படுகிறதுவிளக்கப்படுகிறதுதமிழகத்தைப் பொறுத்தவரை வடகிழக்குப்பருவக்காற்று காலமே மழைப்பொழிவதற்குரிய காலமாகும்.இக்காலத்தில் காற்று வடக்கிலிருந்து வீசுகின்றது அது பருவ சுழற்சியின்காரணத்தாலும் தமிழகம் புவியின்  நடுக்கோட்டின் கீழ் இருப்பதனாலும்கிழக்கிலிருந்து மேற்காக காற்று வீசுகிறது இதை நன்குணர்ந்த பண்டைத்தமிழர்கள் மேகம் வலமாகச் சுற்றுவதை
வலனேர்பு அங்கண் இரு விசும்பதிர
ஏறொரு பெயல் தொடங்கின்றே வானம்   (ஐங். 469)

என்றும்
கடல் முகந்து கொண்ட காமஞ் சூல்
மாமழை சுடர் நிமிர் மின்னொடு வலன் ஏர்பு (அகம். 43)


என்றும் சுட்டப்படுகின்றனகாற்று வலம் நோக்கி செல்வதற்கானகாரணத்தை மிகத்தெளிவாக பின்வரும் பாடல் குறிப்பிடுகின்றது.

நனந்தலை உலகம் வளையி நேமியொடு
வலம்புரி பொறித்த மா தாங்கு தடக்கை   (முல்லை. 1-2)
என்றும் முல்லைப் பாட்டு குறிப்பிடுகின்றது


இதனை வலியுறுத்தும் விதமாக 

பணை முழங்கு எழிலி பெளவம் வாங்கி
தாழ் பெயற் பெருநீர் வலன் ஏர்பு வளைஇ (அகம் 840


எனக் குறிப்பிடுகின்றதுகாற்றின் போக்கினை தெளிவாக உணர்ந்திருந்தகாரணத்தால் அக்கால தமிழ் மக்கள் கடல் தொழில் செய்வதிலும்வல்லவர்களாக இருந்தனர்கீழ்காற்று கடல் தொழில் செய்வதற்குஏற்றதல்ல என்பதும் இக்காலத்தில் கடலிலிருந்து காற்று கரை நோக்கி வீசுவதால் பாய்மரத்தின் உதவியால் படகை கடலுக்குள் செலுத்தமுடியாது என்பதும் இக்காலம் மழைக்காலம் என்றும் அவர்கள் அறிந்துவைத்திருந்தனர்.
கொண்டல் மாமழை குடக்கு ஏர்பு குழைத்த [ நற். 140]
  
என்று நற்றிணை குறிப்பிடுவதையும் நாம் இங்கு நினைத்துப்பார்க்கத் தக்கதாகும்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

சங்க இலக்கியத்தில் மழை குறிப்புகள் Empty Re: சங்க இலக்கியத்தில் மழை குறிப்புகள்

Post by முழுமுதலோன் Sat Jul 06, 2013 8:40 am

மலையும் மழையும்

காற்றுக்களால் அடித்துச் செல்லப்படும் மேகங்களை மலைகள்தடுக்கின்றன இவ்வாறு தடுக்கப்படும் மேகங்கள் அம்மலைகளில்காணப்படும் தாவரங்களின் குளிர்ச்சியால் நீரின் அடர்த்திஅதிகமாகின்றனகாடுகளில் வளர்ந்திருக்கும் பெருமரங்கள்தாவரங்கள் எல்லாமே அதிகளவு மழை நீரை வேர்களீன் மூலமாகஉறிஞ்சுகினறனஆனால் மிக குறைந்த அளவு தண்ணீரையேதங்கள் உணவை தயாரிக்க பயன் படுகின்றனஇதனால் தான் மரங்கள் அடர்ந்திருக்கும் இடங்கள் எப்போதும் குளிர்ச்சியாகஇருக்கும்.ஏனென்றால் எஞ்சிய பெருமளவு நீர்இலைத்துளைகளின் வழியாக  நீராவியாக காற்று மண்டலத்தில்மீண்டும் செலுத்தப்படுகிறது.இந்த கருத்தை வலியுறுத்தும்விதமாக நற்றிணைப் பாடல் ஒன்று உள்ளது

நளி கடல் முகந்து செறிதக இருளி
கனை பெயல் பொழிந்து..(நற்றிணை 289)

இப்பாடல் அடர்த்தி அதிகமாகி மழைப் பொழிவதைக் காட்டுகிறது.அடர்த்தி அதிகரித்தல் என்பதை செறிதக எனும் சொல்லால்சுட்டபடுகிறதுகாற்று வீசும் திசைக்கு குறுக்காக உள்ள மலைகள்மழையைத் தடுப்பதை கூர்ந்து கவனித்த புலவர்கள் தங்கள்பாடல்களில் அதனை பதிவு செய்துள்ளனர்.

கருவி வானம் தண்டளி தலைஇய
வடதெற்கு விலங்கி விலகுதலைத் தெழிலிய .. [பதி. 31]

என்றும்

வெஞ்சுடர் கரந்த காமஞ்சூல் வானம்

நெடும்பல் குன்றத்துக் குறும்பல மறுகி
தாஇல் பெரும்பெயல் தழைஇய யாமத்து.  (நற்றிணை 261)

என்றும் குறிப்பிடுகின்றனஇதற்கு மருதலையாக மலைகள்மேகங்களை தடுத்து சிகரங்களில் மழையை பெய்விக்கின்றன.இவ்வாறு காற்றினால் தள்ளப்படும் மேகம் மலையில் மழைப்பொழிவதை


வளிபொரு மின்னொடு வான்இருள் பரப்பி

விளிவுஉன்று கிளையொடு மேல்மலை முற்றி
தளிபொழி சாரல் ததர்மலர் தாஅய்.. [ பதி . 12]

எனும் பாடல் வரிகள் தெளிவாக விளக்குகின்றன.

சங்க இலக்கியங்கள் என்பவை காலத்தின் பெட்டகங்களாகபண்டை தமிழரின் அழகிய வாழ்வின் அடையாளங்களாக,அறிவியல் சிந்தனைகளின் புதையல்களாகக் காணப்படுகின்றன.அவ்வகையில் மழைக்கான அறிகுறிகளையும் அதற்கானக்காரணங்களையும் பண்டை தமிழர்கள் அறிந்திருந்தனர் என்பதைஇகட்டுரையின் வழி அறிய முடிகின்றது.


நன்றியோடு - சு.ஆனந்தராசு
 http://organicananth.blogspot.in
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum