தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


ஆன்–லைனிலே விண்ணப்பிக்கலாம் மத்திய அரசு மானியத்துடன் வீடுகளுக்கு சூரிய சக்தி மின்சாரம் தமிழக அரசு

View previous topic View next topic Go down

ஆன்–லைனிலே விண்ணப்பிக்கலாம் மத்திய அரசு மானியத்துடன் வீடுகளுக்கு சூரிய சக்தி மின்சாரம் தமிழக அரசு Empty ஆன்–லைனிலே விண்ணப்பிக்கலாம் மத்திய அரசு மானியத்துடன் வீடுகளுக்கு சூரிய சக்தி மின்சாரம் தமிழக அரசு

Post by ஸ்ரீராம் Wed Jul 24, 2013 2:40 pm

[You must be registered and logged in to see this image.]
மத்திய அரசின் 30 சதவீத மானியத்துடன் வீடுகளுக்கு சூரிய சக்தி மின்சாரம் கிடைக்க தமிழக அரசு ஏற்பாடு செய்கிறது. இதற்காக ஆன்–லைனில் விண்ணப்பிக்கலாம் என்று அதிகாரி ஒருவர் கூறினார்.
சூரிய மேற்கூரை மின் அமைப்பு
தமிழ்நாட்டில் அனல் மின்நிலையம், புனல் மின்நிலையம், காற்றாலை போன்ற பல்வேறு ஆதாரங்கள் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இருந்த போதிலும் தமிழகத்தில் மின் தட்டுப்பாடு முழுமையாக நீங்கவில்லை. இப்போது பரவலாக மழை பெய்வதாலும், தென்மாவட்டங்களில் பலத்த காற்று வீசுவதாலும் காற்றாலை மூலம் மின்சாரம் கிடைக்கிறது. அதனால் மின்சார தட்டுப்பாடும் கணிசமாக குறைந்துள்ளது.
இருப்பினும், மின்சார தட்டுப்பாட்டை நிரந்தரமாக போக்குவதற்காக முதல்–அமைச்சர் ஜெயலலிதா கடந்த ஆண்டு சூரிய மின்சக்தி கொள்கையை வெளியிட்டார். அதன்படி, புதிதாக கட்டப்படும் அரசு அலுவலக கட்டிடங்களில் கண்டிப்பாக சூரிய மேற்கூரை மின் அமைப்பை ஏற்படுத்த வேண்டும். பழைய அரசு அலுவலக கட்டிடங்களில் படிப்படியாக இந்த அமைப்பினை ஏற்படுத்த வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. அதுபோல ஊராட்சி அலுவலகம், பேரூராட்சி அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் சோலார் பேனல் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
தமிழக அரசு மானியம் ரூ.20 ஆயிரம்
வீடுகள் உள்ளிட்ட கட்டிடங்களில் சோலார் பேனல் அமைக்க மாநில அரசு மானியமாக ரூ.20 ஆயிரம் வழங்கப்படும் என்று முதல்–அமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். இதற்கான அரசு உத்தரவு விரைவில் பிறப்பிக்கப்பட உள்ளது.
இதற்கிடையே, வீடுகளில் மத்திய அரசின் 30 சதவீத மானியத்துடன் சோலார் பேனல் அமைப்பதற்கு தமிழக அரசு ஏற்பாடு செய்து வருகிறது. ஒருவர் தனது சொந்த வீட்டுக்கு சோலார் பேனல் அமைத்து அதன்மூலம் சூரிய மின்சக்தி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்து பயன்படுத்த விரும்பினால் ஆன்–லைனிலேயே விண்ணப்பிக்கலாம்.
ஆன்–லைனில் விண்ணப்பிப்பது எப்படி?
தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமையின் இணையதளத்தில் [You must be registered and logged in to see this link.] இ–பார்ம்ஸை கிளிக் செய்ய வேண்டும். அதில் டொமஸ்டிக் கிளிக் செய்தால் விண்ணப்ப படிவம் வந்துவிடும். அதில் கேட்டுள்ள விவரங்களை முழுமையாக பூர்த்தி செய்து மேற்கண்ட இணையதள முகவரிக்கு அனுப்பிவிட வேண்டும். விண்ணப்பப் படிவத்தைப் பெற்றுக் கொண்டதற்கான ஒப்புகைச் சீட்டு ஆன்–லைனிலேயே அனுப்பப்படும்.
இந்த இணையதளத்தில் சோலார் பேனல் விற்பனையில் ஈடுபட்டுள்ள கம்பெனிகளின் பட்டியலும் இடம்பெற்றிருக்கும். அதில் ஏதாவது ஒரு கம்பெனியை வீட்டு உரிமையாளர் தேர்வு செய்து விண்ணப்பப் படிவத்தில் தெரிவிக்கலாம். ஒவ்வொரு வீட்டுக்கும் அதிகபட்சம் 1 கிலோ வாட் (1000 வாட் அவர்) திறன் கொண்ட சோலார் பேனலுக்கு மட்டுமே அரசு மானியம் கிடைக்கும்.
தினமும் 4 யூனிட் மின்சாரம்
ஒரு கிலோ வாட் திறன் கொண்ட சோலார் பேனல் மூலம் தினமும் குறைந்தபட்சம் 4 யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும். இந்த மின்சாரத்தைக் கொண்டு ஒரு வீட்டில் 4 டியூப் லைட்டுகள், இரண்டு மின்விசிறிகள், ஒரு தொலைக்காட்சி பெட்டியை பயன்படுத்திக் கொள்ளலாம். மின்சாரப் பயன்பாடு அதிகமாக இருந்தால் சோலார் பேனல் மூலம் கிடைக்கும் மின்சாரம் போக மீதமுள்ள மின்சாரத்தை ‘கிரிட்’ மூலம் பெற்று பயன்படுத்திக் கொள்ளலாம்.
ஒரு கிலோ வாட் திறன் கொண்ட சோலார் பேனல் (பேட்டரி இல்லாமல்) அமைப்பதற்கு ரூ.1 லட்சம் செலவாகும். சூரிய சக்தி மூலம் கிடைக்கும் மின்சாரத்தை பேட்டரியில் சேமித்துவைத்து இரவு நேரத்திலும் பயன்படுத்த விரும்பினால் அதற்கு பேட்டரியுடன் கூடிய சோலார் பேனல் வாங்குவதற்கு ரூ.2 லட்சத்து 10 ஆயிரம் செலவாகும். சோலார் பேனலுக்கு 25 ஆண்டுகள் வாரண்டியும், ஒட்டுமொத்த சிஸ்டத்திற்கும் 5 ஆண்டுகள் வாரண்டியும் அளிக்கப்படுகிறது.
மத்திய அரசு மானியம் 30 சதவீதம்
பேட்டரியின் ஆயுட்காலம் 3 ஆண்டுகள் முதல் 4 ஆண்டுகள் வரை ஆகும். அதன்பிறகு ரூ.15 ஆயிரம் செலவு செய்து பேட்டரியை மாற்ற வேண்டியதுவரும். சோலார் பேனல் அமைக்கும்போது கம்பெனிக்கு மத்திய அரசின் 30 சதவீத மானியத் தொகையை கழித்துக் கொண்டு வீட்டு உரிமையாளர் கொடுத்தால், அந்த மானியத்தொகை கம்பெனிக்கு அனுப்பி வைக்கப்படும்.
ஒருவர் தனது வீட்டு மொட்டை மாடியில் சோலார் பேனல் வைத்தபிறகு அந்தந்த மாவட்டத்தில் உள்ள உதவி பொறியாளர் ஆய்வு செய்து, தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமைக்கு தகவல் தெரிவிப்பார். அதன்பிறகு ஒரு மாதத்திற்குள் மானியத் தொகை வழங்கப்பட்டுவிடும் என்று அதிகாரி ஒருவர் கூறினார்.
கணிசமான பணம் மிச்சமாகும்
ஒருவர் ரூ.1 லட்சம் செலவு செய்து தனது வீட்டுக்கு பேட்டரி இல்லாமல் ஒரு கிலோ வாட் சோலார் பேனல் அமைத்தால் தற்போது மத்திய அரசு மானியமாக ரூ.30 ஆயிரம் கிடைக்கும். இத்துடன் தமிழக அரசு மானியமான ரூ.20 ஆயிரமும் கிடைத்தால், மொத்தம் ரூ.50 ஆயிரம் மானியமாக கிடைக்கும். மீதமுள்ள ரூ.50 ஆயிரம் செலவு செய்தால் ஒருவர் தனது வீட்டில் சூரிய மின்சக்தி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்வதற்கான ஏற்பாட்டினை செய்து கொள்ள முடியும். வீடுகளில் சோலார் பேனல் மூலம் மின் உற்பத்தி செய்தால் பொதுமக்களுக்கு கணிசமான பணம் மிச்சமாகும்.
இதுதொடர்பாக அதிகாரி ஒருவர் கூறியதாவது:–
முறைகேட்டை தடுக்க ஆன்–லைனில் விண்ணப்பம்
முறைகேட்டை தடுப்பதற்காகவே ஆன்–லைனில் விண்ணப்பிக்க ஏற்பாடு செய்துள்ளோம். தற்போது மத்திய அரசின் மானியமான 30 சதவீதத்தைப் பெற்றுத் தருகிறோம். தமிழக அரசு மானியம் (ரூ.20 ஆயிரம்) உத்தரவு விரைவில் வெளியாக இருக்கிறது. அதன்பிறகு இரண்டு மானியத்தையும் சேர்த்தே பொதுமக்கள் பெறலாம். அடுக்குமாடி குடியிருப்புகளில் சோலார் பேனல் வைப்பதில் பிரச்சினை இருக்கிறது.
மொட்டை மாடியில் சோலார் பேனல் வைத்துவிட்டால் மொட்டை மாடியை வேறு பயன்பாட்டிற்கு (துணி காயப்போடுதல், அப்பளம் காய வைத்தல்) பயன்படுத்துவது சிரமம். சூரிய சக்தி மின்சாரம் குறித்து போதிய விழிப்புணர்வு இல்லை. அத்துடன், பெரும்பாலான பேர் கடைகள், ஓட்டல்களை வாடகை கட்டிடத்தில் நடத்துவதாலும், அதன் உரிமையாளர்கள் சோலார் பேனல் வைக்க அவ்வளவாக ஆர்வம் காட்டுவதில்லை.
சோலார் வாட்டர் ஹீட்டருக்கும்…
ஏற்கனவே சோலார் பேனல் வைத்தவர்களுக்கு தமிழக அரசின் மானியம் கிடைக்காது. அரசு உத்தரவுக்கு பிறகு சோலார் பேனல் அமைப்பவர்களுக்கு மத்திய, மாநில அரசுகளின் மானியம் கிடைக்கும். தமிழகத்தில் இதுவரை 1,500–க்கும் மேற்பட்டவர்கள் மத்திய அரசு மானியம் பெற்று சோலார் பேனல் அமைத்துள்ளனர். அதுபோல 1,700–க்கும் மேற்பட்டவர்கள் சூரிய சக்தி மின்சாரம் மூலம் சோலார் வாட்டர் ஹீட்டர் பெற்றுள்ளனர். கோவை மாவட்டத்தில் சோலார் வாட்டர் ஹீட்டர் அதிகமானவர்கள் பெற்று இருக்கிறார்கள்.
இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.
நன்றி இன்று ஒரு தகவல் 
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

ஆன்–லைனிலே விண்ணப்பிக்கலாம் மத்திய அரசு மானியத்துடன் வீடுகளுக்கு சூரிய சக்தி மின்சாரம் தமிழக அரசு Empty Re: ஆன்–லைனிலே விண்ணப்பிக்கலாம் மத்திய அரசு மானியத்துடன் வீடுகளுக்கு சூரிய சக்தி மின்சாரம் தமிழக அரசு

Post by mohaideen Wed Jul 24, 2013 11:32 pm

தகவலுக்கு நன்றி
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

ஆன்–லைனிலே விண்ணப்பிக்கலாம் மத்திய அரசு மானியத்துடன் வீடுகளுக்கு சூரிய சக்தி மின்சாரம் தமிழக அரசு Empty Re: ஆன்–லைனிலே விண்ணப்பிக்கலாம் மத்திய அரசு மானியத்துடன் வீடுகளுக்கு சூரிய சக்தி மின்சாரம் தமிழக அரசு

Post by நண்பன் Thu Jul 25, 2013 9:50 am

இன்றைய நிலமைக்கு  மிகவும்  அவசியம்  தெரிந்து  கொள்ளவேண்டிய  தகவல்
நன்றி
நண்பன்
நண்பன்
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 567

Back to top Go down

ஆன்–லைனிலே விண்ணப்பிக்கலாம் மத்திய அரசு மானியத்துடன் வீடுகளுக்கு சூரிய சக்தி மின்சாரம் தமிழக அரசு Empty Re: ஆன்–லைனிலே விண்ணப்பிக்கலாம் மத்திய அரசு மானியத்துடன் வீடுகளுக்கு சூரிய சக்தி மின்சாரம் தமிழக அரசு

Post by செந்தில் Thu Jul 25, 2013 12:36 pm

கைதட்டல் அறிய தகவல் பகிர்வுக்கு நன்றி ஜி கைதட்டல் 
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

ஆன்–லைனிலே விண்ணப்பிக்கலாம் மத்திய அரசு மானியத்துடன் வீடுகளுக்கு சூரிய சக்தி மின்சாரம் தமிழக அரசு Empty Re: ஆன்–லைனிலே விண்ணப்பிக்கலாம் மத்திய அரசு மானியத்துடன் வீடுகளுக்கு சூரிய சக்தி மின்சாரம் தமிழக அரசு

Post by Muthumohamed Thu Jul 25, 2013 10:45 pm

பயனுள்ள தகவல் பதிவு நன்றி அண்ணா
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

ஆன்–லைனிலே விண்ணப்பிக்கலாம் மத்திய அரசு மானியத்துடன் வீடுகளுக்கு சூரிய சக்தி மின்சாரம் தமிழக அரசு Empty Re: ஆன்–லைனிலே விண்ணப்பிக்கலாம் மத்திய அரசு மானியத்துடன் வீடுகளுக்கு சூரிய சக்தி மின்சாரம் தமிழக அரசு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum