தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் - வல்லிக்கண்ணன்

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Go down

புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் - வல்லிக்கண்ணன் Empty புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் - வல்லிக்கண்ணன்

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Aug 01, 2013 10:28 am

நன்றி - http://www.tamilvu.org/

புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் - வல்லிக்கண்ணன்

தோற்றம்

‘புதுக்கவிதை’ என்ற பெயர் அநேகருக்குப் பிடிக்கவில்லை, இந்தப் பெயரைக் கண்டு
பலர் மிரளுகிறார்கள். கேலி செய்ய வேண்டும் என்ற தூண்டுதலை இது சிலருக்கு
ஏற்படுத்துகிறது. இதன் உருவத்தையும் உள்ளடக்கத்தையும் பார்த்துக் குழப்பம்
அடைகிறவர்கள் பலர்.

காலவேகத்தில் கவிதைத்துறையில் இயல்பாக ஏற்பட்ட ஒரு பரிணாமம் இது. தமிழ்க்
கவிதையில் மறுமலர்ச்சி பெற்ற இப்புதுமைக்கு ‘புதுக்கவிதை’ எனும் பெயர் 1960 களில்
தான் சேர்ந்தது ‘நியூ பொயட்ரி’ என்றும், ‘மாடர்ன் பொயட்ரி’ என்றும் ஆங்கிலத்தில்
கூறப்படுவதை ஒட்டி, தமிழில் ‘புதுக்கவிதை’ என்ற பெயர் இம்முயற்சிக்கு இடப்பட்டது.

ஆயினும் ஆரம்பத்தில், யாப்பு முறைகளுக்கு கட்டுப்படாமல், கவிதை உணர்வுகளுக்கு சுதந்திரமான எழுத்து உருவம் கொடுக்கும் இப்படைப்பு முயற்சி ‘வசன கவிதை’ என்றே அழைக்கப்பட்டது. பின்னர், ‘யாப்பில்லாக் கவிதை’, ‘இலகு கவிதை’, ‘கட்டில்டங்காக் கவிதை’ (Free Verse) போன்ற பெயர்களை இது அவ்வப்போது தாங்க நேரிட்டது.

புதுக்கவிதை என்பதில் மிரட்சிக்கோ பரிகாசத்துக்கோ, குழப்பத்துக்கோ எதுவும் இடம்
இல்லை.

முன்பு பழக்கத்தில் இருந்து வருகிற-மரபு ரீதியாக அமைந்த-ஒன்றிலிருந்து மாறுபட்டு
(அல்லது அதை மீறித்) தோன்றுவது புதுசு (புதிது). மரபு ரீதியான, யாப்பு இலக்கணத்தோடு
ஒட்டிய கவிதைகளிலிருந்து மாறுபடும் இக்கவிதைப் படைப்பு புதுக்கவிதை எனப் பெயர்
பெற்றது பொருத்தமேயாகும்.
பார்க்கப்போனால், கவி சுப்பிரமணிய பாரதி தனது எல்லாக் கவிதைகளையுமே
‘புதுக்கவிதை’ என்றுதான் குறிப்பிடுகிறார்- அந்நாள் வரை இருந்து வந்த தமிழ்க்
கவிதைகளிலிருந்து அவை மாறுபட்ட தன்மைகளைப் பெற்ற படைப்புகளாக விளங்கியதால்,

‘சுவை புதிது, பொருள் புதிது, வளம் புதிது,
சொற்புதிது, சோதிமிக்க
நவகவிதை’

என்று பாரதியார் தன் கவிதைகளைப் பற்றிப் பெருமையோடு பேசுகிறார்.

கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் - வல்லிக்கண்ணன் Empty Re: புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் - வல்லிக்கண்ணன்

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Aug 01, 2013 10:29 am

தனது கவிதா உணர்வுகளையும் உள்ளத்தின் எழுச்சிகளையும், கனவுகள் கற்பனைகள்
எண்ணங்கள் அனைத்தையும் மரபு ரீதியான யாப்பு முறைகளுக்கு உட்படும்-கவிதைகளின்
விதம் விதமான வடிவங்களில் வெளிப்படுத்திய கவிபாரதி, இலக்கணத்துக்கு உட்படாத

புதிய வடிவத்திலும் உருக்கொடுக்க முயன்று வெற்றியும் கண்டார். அதுதான் ‘காட்சிகள்’
என்ற வசன கவிதைத் தொகுப்பு.

பாரதி தன் எண்ணங்களை எழுத்து ஆக உருவாக்குவதற்குப் பல சோதனைகளில்
ஆர்வம் கொண்டிருந்தார் என்பது அவரது படைப்புகளை ஆராய்வோருக்குப் புரியும்.
கவிதைகளில் பல சோதனைகள் செய்தது போலவே, வசனத்தில் தராசு, ஞானரதம்,
நவதந்திரக் கதைகள் போன்ற புதிய முயற்சிகளை அவர் செய்திருக்கிறார். அதே
தன்மையில், வசனத்தை மீறிய, ஆயினும் கவிதையின் பூரணத்துவத்தை எய்தாத ஒரு
முயற்சியாக அவர் படைத்துள்ள வசன கவிதைகளே ‘காட்சிகள்’. எனவே, கவி
சுப்பிரமணிய பாரதிதான் தமிழ்ப் ‘புதுக்கவிதை’யின் தந்தையாவார்.

பாரதியின் ‘காட்சிகள்’ வசனம்தான்; அவரது படைப்புகளைத் தொகுத்துப்
பிரசுரித்தவர்கள் தவறுதலாக அவற்றையும் கவிதைகளோடு இணைத்து, வசன கவிதை
என்று வெளியிட்டுவிட்டார்கள் என்று அந்தக் காலத்தில் ஒரு சிலர் எதிர்க்குரல்
கொடுத்தது உண்டு.

கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் - வல்லிக்கண்ணன் Empty Re: புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் - வல்லிக்கண்ணன்

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Aug 01, 2013 10:30 am

பாரதி ‘காட்சிகள்’ என்ற தலைப்பில் எழுதியிருப்பது வெறும் வசனம் அல்ல.
தவறுதலாகக் கவிதைத் தொகுதியில் இடம் பெற்றுவிட்ட வசன அடுக்குகள் என்று அதைக்
கொள்வதும் சரியாகாது. என்றோ எழுதப்பட வேண்டிய கவிதைச் சித்திரங்களுக்காக
அவ்வப்போது குறித்து வைக்கப்பட்ட துணுக்குகள் என்று மதிப்பிடுவதும் பொருந்தாது.
பாரதியின் கட்டுரைகள் என்ற பெயரில் துண்டு துணுக்குகள், எண்ணச் சிதறல்கள் பற்பல
காணப்பட்ட போதிலும், ‘காட்சிகள்’ முழுமைபெற்ற-நன்கு வளர்க்கப்பட்ட-சிந்தனைக்
கட்டுமானங்களாகவும், சொல் பின்னல்களாகவுமே அமைந்துள்ளன.

தனது எண்ணங்களுக்கும், அனுபவங்களுக்கும், உணர்ச்சிகளுக்கும் வெவ்வேறு
விதமான வடிவங்கள் கொடுக்க ஆசைப்பட்ட பாரதிக்குக் கவிதை ‘தொழில்’; இதயஒலி;
உயிர் மூச்சு. என்றாலும், கவிதை சில சமயங்களில் சக்தியை இழந்து விடுகிறது. வசனம்
அநேக சமயங்களில் கவிதையை விட அதிகமான வலிமையும் அழகும் வேகமும் பெற்று
விடுகிறது. இதை பாரதியே உணர்ந்திருக்கிறார். இதற்கு ‘பாஞ்சாலி சபதம்’
நெடுங்கவிதையில் வருகிற ‘மாலை வருணனை’ எனும் கவிதைகளும், பாரதி எழுதியுள்ள
‘ஸூர்யாஸ்தமனம்’ என்ற வசனப் பகுதியும் நல்ல எடுத்துக்காட்டு ஆகும். ஆகவே அவர்
‘வசன கவிதை’ என்ற புதிய சோதனையை மேற்கொண்டார்.

கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் - வல்லிக்கண்ணன் Empty Re: புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் - வல்லிக்கண்ணன்

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Aug 01, 2013 10:30 am

மேலும் பாரதி ‘வடிவம்’ (Form) பற்றி தெளிவாக சிந்திக்கிறார் என்று கொள்ள
வேண்டும். ‘வசனகவிதை’யில் வருவது இது-

“என் முன்னே பஞ்சுத் தலையணை கிடக்கிறது.
அதற்கு ஒரு வடிவம், ஓரளவு ஒரு நியமம்
ஏற்பட்டிருக்கின்றது

இந்த நியமத்தை, அறியாதபடி சக்தி
பின்னே நின்று காத்துக் கொண்டிருக்கிறாள்.
மனிதஜாதி இருக்குமளவும் இதே தலையணை
அழி வெய்தாதபடி காக்கலாம்.
அதனை அடிக்கடி புதுப்பித்துக் கொண்டிருந்தால்

அந்த வடிவத்திலே சக்தி நீடித்து நிற்கும்,
புதுப்பிக்கா விட்டால் அவ்வடிவம் மாறும்,
வடிவத்தைக் காத்தால்,
சக்தியை காக்கலாம்;
அதாவது, சக்தியை அவ்வடிவத்திலே காக்கலாம்;

வடிவம் மாறினும் சக்தி மாறுவதில்லை
எங்கும், எதனிலும், எப்போதும் எல்லா விதத்
தொழில்களும் காட்டுவது சக்தி.

வடிவத்தைக் காப்பது நன்று, சக்தியின் பொருட்டாக.
சக்தியைப் போற்றுதல் நன்று வடிவத்தைக் காக்குமாறு.
ஆனால் வடிவத்தை மாத்திரம் போற்றுவோர்
சக்தியை இழந்து விடுவர்.” (‘சக்தி’)

    பாரதி தன்னுள் லீலைகள் புரிந்த சக்தியைப் போற்றினார். சக்தியை விதவிதமான
வடிவங்களில் துதித்தார். பாம்புப் பிடாரன் பற்றி பாரதி கூறுவது அவருக்கும் பொருந்தும்.

“இஃது சக்தியின் லீலை,
அவள் உள்ளத்திலே பாடுகிறாள். அது
குழலின் தொளையிலே கேட்கிறது.
பொருந்தாத பொருள்களைப் பொருத்திவைத்து
அதிலே இசையுண்டாக்குதல்-சக்தி”

    இப்படி ‘பொருந்தாத பொருள்களைப் பொருத்தி வைத்து அதிலே இசையுண்டாக்கும்’
முயற்சிதான் பாரதியின் வசனகவிதைப் படைப்பு ஆகும்.

தொடரும்...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் - வல்லிக்கண்ணன் Empty Re: புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் - வல்லிக்கண்ணன்

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Aug 01, 2013 8:58 pm

“கருவி பல, பாணன் ஒருவன்.
தோற்றம் பல, சக்தி ஒன்று.”

பாரதி என்னும் பாணன், தன்னுள் ஜீவனுடன் பிரவாகித்துக் கொண்டிருந்த சக்திக்கு
புறத்திலே பலப்பல தோற்றங்கள் கொடுக்க விரும்பியபோது அவருக்குப் பயன்பட்ட
கருவிகள் பல. முக்கியமானது கவிதை. வசனமும் வசன கவிதையும் பிற.

பாம்புப் பிடாரன் குழல் ஊதும் ஆற்றலை பாரதியின் வசன கவிதைச்
சொல்லமைப்புக்கு ஒப்பிடலாம். பாரதி சொல்கிறார்:

“இதோ பண்டிதன் தர்க்கிப்பது
போலிருக்கின்றது.
ஒரு நாவலன் பொருள் நிறைந்த
சிறிய சிறிய வாக்கியங்களை
அடுக்கிக் கொண்டு போவது போலிருக்கிறது,
இந்தப் பிடாரன் என்ன வாதாடுகிறான்?
... பல வகைகளில் மாற்றிச் சுருள் சுருளாக
வாசித்துக் கொண்டு போகிறான்.”

பாரதியின் வசனகவிதை முயற்சிகளும் ‘பொருள் நிறைந்த சிறிய சிறிய
வாக்கியங்களை அடுக்கிக் கொண்டு போவதும்’ பல வகைகளில் மாற்றிச் சுருள் சுருளாக’ வாசிப்பதும் ஆகத்தான் அமைந்துள்ளன.

கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் - வல்லிக்கண்ணன் Empty Re: புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் - வல்லிக்கண்ணன்

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Aug 01, 2013 9:00 pm

இந்த விதமான ‘வசனகவிதைப்’ படைப்பில் ஈடுபட வேண்டும் என்ற ஆசை
பாரதிக்கு ஏன், எப்படி ஏற்பட்டிருக்கக் கூடும் என்று இன்று சர்ச்சை செய்வது
சுவாரஸ்யமான யூகங்களுக்கே இடமளிக்கும். எனினும், பேராசிரியர் பி.மகாதேவன்
கூறியிருப்பது ஏற்றுக் கொள்ளக்கூடிய ஒரு அபிப்பிராயமாகவே தோன்றுகிறது.

பாரதி ரவீந்திரநாத் தாகூருடன் போட்டியிடுவதில் ஆர்வம் காட்டினார்; தாகூரின்
‘கீதாஞ்சலி’ மாதிரி அவரும் இதை எழுதினார் என்று மகாதேவன் சொல்லியிருக்கிறார்.

தாகூரின் ‘கீதாஞ்சலி’ முதலிய படைப்புகளை ரசித்த பாரதி அவற்றைப்போல் வசனகவிதை படைக்க முன்வந்திருக்கலாம். அக்காலத்தில் அவருக்கு வால்ட் விட்மனின்
‘லீவ்ஸ் ஆவ் கிராஸ்’ பாடல்களும் அறிமுகமாகி இருந்தன. மேலை நாட்டு நல்ல
கவிஞர்களின் திறமையை அறிந்து கொள்ளத் தவறாத பாரதி விட்மனையும் அறிமுகம்
செய்து கொண்டிருந்தார். இதற்கு பாரதியின் கட்டுரையில் சான்று கிடைக்கிறது. வால்ட்
விட்மன் பற்றி பாரதி இவ்வாறு எழுதியிருக்கிறார்- “வால்ட் விட்மன் என்பவர் சமீப
காலத்தில் வாழ்ந்த அமெரிக்கா (யுனைட்டெட் ஸ்டேட்ஸ்) தேசத்துக்கவி. இவருடைய
பாட்டில் ஒரு புதுமை என்னவென்றால், அது வசனநடை போலேதான் இருக்கும். எதுகை,
மோனை, தளை ஒன்றுமே கிடையாது. எதுகை மோனையில்லாத கவிதைதான் உலகத்திலே
பெரிய பாஷைகளில் பெரும் பகுதியாகும். ஆனால், தளையும் சந்தமும் இல்லாத கவிதை
வழக்கமில்லை. வால்ட் விட்மான், கவிதையை பொருளில் காட்ட வேண்டுமே யல்லாது
சொல்லடுக்கில் காட்டுவது பிரயோஜனமில்லை யென்று கருதி ஆழ்ந்த ஓசை மாத்திரம்
உடையதாய் மற்றப்படி வசனமாகவே எழுதிவிட்டார். இவரை ஐரோப்பியர், காளிதாஸன்,
கம்பன், ஷேக்ஸ்பியர், மில்டன், தாந்தே, கெத்தே முதலிய மகாகவிகளுக்கு ஸமான
பதவியுடையவராக மதிக்கிறார்கள். குடியாட்சி, ஜனாதிகாரம் என்ற கொள்கைக்கு மந்திர
ரிஷிகளில் ஒருவராக இந்த வால்ட் விட்மானை ஐரோப்பிய ஜாதியார் நினைக்கிறார்கள்.
எல்லா மனிதரும், ஆணும் பெண்ணும் குழந்தைகளும், எல்லாரும் ஸமானம் என்ற
ஸத்யத்தை பறையடித்த மஹான்களில் இவர் தலைமையானவர்.”

(பாரதி கட்டுரைகள்: ‘சமூகம்-நகரம்’)

புல்லையும் மண்ணையும் நீரையும் மனிதர்களையும் நாடுகளையும் உற்சாகத்தோடு
பாடிப் பெருமைப்பட்ட விட்மனைப் போல பாரதியும் காற்றையும் கயிற்றையும் மணலையும்
விண்ணின் அற்புதங்களையும் மண்ணின் மாண்புகளையும் போற்றி, ‘பொருள் நிறைந்த
சிறிய சிறிய வாக்கியங்களை அடுக்கி’ தர்க்கித்துக் கொண்டு போக விரும்பியிருக்கலாம்.
பாரதத்தின் பழங்கால ரிஷகளைப் போல, உபநிஷத்
கர்த்தாக்களைப் போல பாரதியும் ஒளியை, வெம்மையை, சக்தியை, காற்றை, கடலை,
ஜகத்தினைப் போற்றிப் புகழ இப்புதிய வடிவத்தைக் கையாண்டிருக்கலாம்.

அது எவ்வாறாயினும், தமிழுக்குப் புதிய வடிவம் ஒன்று கிடைத்தது. பாரதியின்
வசனகவிதை இனிமை, எளிமை, கவிதை மெருகு, ஓட்டம் எல்லாம் பெற்றுத் திகழ்கிறது.
இதற்கு ஒரு உதாரணமாகப் பின் வருவதைக் குறிப்பிடலாம்.

“நாம் வெம்மையைப் புகழ்கின்றோம்,
வெம்மைத் தெய்வமே ஞாயிறே, ஒளிக்குன்றே,
அமுதமாகிய உயிரின் உலகமாகிய
உடலிலே மீன்களாகத் தோன்றும்
விழிகளின் நாயகமே
பூமியாகிய பெண்ணின் தந்தையாகிய காதலே,
வலிமையின் ஊற்றே, ஒளி மழையே, உயிர்க்கடலே,
சிவனென்னும் வேடன் சக்தியென்னும்
குறத்தி உலகமென்னும் புனங்காக்கச்
சொல்லி வைத்து விட்டுப் போன விளக்கே,
கண்ணனென்னும் கள்வன் அறிவென்னும்
தன்முகத்தை மூடி வைத்திருக்கும்
ஒளியென்னும் திரையே.
ஞாயிறே, நின்னைப் பரவுகின்றோம்.” (ஞாயிறு புகழ்)

இது வெறும் வசனம்தானா? இல்லை, இது கவிதைதான் என்று எப்படிச் சொல்ல முடியும்?

வசனத்தின் வறண்ட, அறிவு பூர்வமான சாதாரண இயல்பை மீறியது. கவிதையின்
தன்மையைப் பூரணமாகப் பெறாதது. எனவேதான் ‘வசனகவிதை’ என்று பெயர் பெறுகிறது.

பாரதி காட்டும் ‘காட்சி’களின் பல பகுதிகள் கவிதை ஒளி பொதிந்த சிறு சிறு
படலங்களாகவே திகழ்கின்றன. ஆயினும் அவை கவிதை ஆகிவிடா. ‘வசனகவிதை’ எனும்
புதிய வடிவத்தின் ஜீவனுள்ள சித்திரங்கள் அவை. திரும்பத் திரும்பப் படித்துச்
சுவைப்பதன் மூலம் அவற்றின் நயத்தையும் உயர்வையும் தனித்தன்மையையும்
உணரமுடியும்.
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் - வல்லிக்கண்ணன் Empty Re: புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் - வல்லிக்கண்ணன்

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Aug 01, 2013 9:02 pm

இரட்டையர்

பாரதி தோற்றுவித்த வசனகவிதை முயற்சி பின்னர் 1930களின் பிற்பகுதியில்தான்
துளிர்விடத் தொடங்கியது. பாரதிக்குப் பிறகு புதுக்கவிதை முயற்சியில் ஆர்வத்துடன் முதன்
முதலாக ஈடுபட்டவர் ந. பிச்சமூர்த்திதான்.

சிறுகதைத் துறையில் குறிப்பிடத் தகுந்த வெற்றி பெற்றிருந்த ந.பி., ‘பிக்ஷு’ என்ற
பெயரில் கவிதைகள் எழுதலானார். அவர் எழுதிய முதல் கவிதை எது, அது எந்தப்
பத்திரிகையில் பிரசுரமாயிற்று என்பது இப்போது தெரியவில்லை.

(‘நான் புதுக்கவிதை எழுத ஆரம்பித்தது 1934 ‘மணிக்கொடி’யில்; ‘காதல்’ முதல்
கவிதை. தொடர்ந்து ‘ஒளியின் அழைப்பு’, ‘கிளிக்குஞ்சு’, ‘பிரார்த்தனை’, ‘தீக்குளி’
முதலியவை 1934-ம் வருஷ ‘மணிக்கொடி’ யிலேயே பிரசுரமாயின. 1934 முதல் நான்
புதுக்கவிதை தொடர்ந்து எழுதியிருக்கிறேன்’ என்று ந.பி. ஒரு கடிதம் மூலம் பின்னர்
அறிவித்தார்.)

நான் முதன் முதலாகப் பார்க்க நேர்ந்த பிக்ஷுவின் கவிதை ‘கிளிக்கூண்டு’, 1937-ம்
வருடம் ‘பிரசுரமான அருமையான இலக்கிய மலரான ‘தினமணி’ ஆண்டு மலரில் (புதுமைப்
பித்தன் பொறுப்பில் தயாரானது அது) வெளிவந்தது.

“இருளின் மடல்கள் குவிந்தன,
வானத்து ஜவந்திகள் மின்னின.
காவிரி நாணல்கள் காற்றில் மயங்கின,
மேற்கே சுடலையின் ஓயாத மூச்சு,
காலன் செய் ஹோமத்தில் உடல் நெய்யாகும் காட்சி,
கிழக்கே பெண்களின் மட்டற்ற பேச்சு,
கட்டற்ற சிரிப்பு
காவிரி மணலில் குழந்தைகள் கொம்மாளம்...”

இப்படி இனிமையாக ஆரம்பிக்கும் அழகான வசனகவிதை அது. (‘கிளிக்கூண்டு’
என்ற இக்கவிதை, 1962-ல் சி.சு. செல்லப்பா தயாரித்த எழுத்துப் பிரசுரம் ‘புதுக்குரல்கள்’
1964-ல் வெளியிட்ட ந. பிச்சமூர்த்தியின் ‘வழித்துணை’ ஆகிய இரண்டு தொகுப்புகளிலும்
இடம் பெற்றுள்ளது. பின்னர் பிரசுரம் பெற்ற ‘பிச்சமூர்த்தி கவிதைகள்’ என்ற தொகுப்பிலும்
உள்ளது.)

“சம்பிரதாயமான யாப்பு முறைகளுக்கு உட்படாமல் கவிதையைக் காணும் புதுக்கவிதை
முயற்சிக்கு, யாப்பு மரபே கண்டிராத வகையில் அமெரிக்கக் கவிஞர் வால்ட் விட்மன்
எழுதிய ‘புல்லின் இதழ்கள்’ என்ற கவிதைத் தொகுப்புத்தான் வித்திட்டது. அதைப்
படித்தபோது கவிதையின் ஊற்றுக்கண் எனக்குத் தெரிந்தது. பின்னர் பாரதியின்
‘வசனகவிதை’யைப் படிக்க நேர்ந்தது. என் கருத்து வலுவடைந்தது. இவற்றின் விளைவாக
என் உணர்ச்சிப் போக்கில் இக்கவிதைகளை எழுதினேன்” என்று ந.பி. கூறுகிறார்.

கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் - வல்லிக்கண்ணன் Empty Re: புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் - வல்லிக்கண்ணன்

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Aug 01, 2013 9:03 pm

வசனகவிதை ரீதியில் கவிதை எழுதுகிறபோதே, மரபு வழிக்கவிதை போல் தோற்றம்
காட்டுகிற, ஓசை நயமும் செவிநுகர் செஞ்சொல் ஓட்டமும் நிறைந்த கவிதை இயற்றுவதிலும்
பிக்ஷு நாட்டம் கொண்டிருந்தார். 1937 இறுதியில் ‘மணிக்கொடி’யில் பிரசுரமான ‘அக்கா
குருவி’ இதற்கு நல்ல உதாரணம் ஆகும். ‘வசனகாவியம்’ என்றுதான் அது அச்சாயிற்று.

“சித்திரைச் சூரியன் செஞ்சூலம் பாய்ச்சலால்
ஆற்றுமணல் வெள்ளம் அனலாகக் காய்ந்தது;
பத்தரை மாற்றுச் சொர்ணப்பொடி போல்ரவி
ஏற்ற மணல்காடு அங்கங்கு மின்னிற்று.
செழிப்புற்ற தோட்டமும் பாவீனும் ஏற்றமும்,
பேணாது பொங்கிய கவிஞன் கனவைப் போல்
எழில் மண்டித் தூங்கும் விரிசடை மரங்களும்
நாணாத பச்சைக்கை நீண்டு பரவல்போல
வானப் பகைப்புல சித்திர மூங்கிலும்
மொக்கின் வரிசையும் மலர்களின் சூழ்ச்சியும்
கானமே உயிர்மூச்சாய்க் கொள்ளும் பறவையும்
கொக்கின் வர்ணங்கொள் கரையோர நாணலும்...”

இவ்வாறு மேலே மேலே வளர்கிறது கவிதை. ‘துன்பத்தில் அக்காவுக்கென்றென்றும்
ஏங்கும்’ ஒற்றைக் குயிலின் சோகத்துடன் முடிகிறது.

கொம்பும் கிணறும், மார்கழிப் பெருமை, பொற்றாமரை போன்ற வசன கவிதைகளை
ந.பி. 1939-ல் எழுதினார். அவை மணிக்கொடி, ஜெயபாரதி முதலிய பத்திரிகைகளில்
அவ்வப்போது பிரசுரமாயின.

அதே காலகட்டத்தில்தான் கு.ப. ராஜகோபாலனும் கவிதை முயற்சியில் ஈடுபட்டார்.
அவரும் சிறுகதையில் சாதனைகள் புரிந்தவர்தான்.

கு.ப.ரா. வின் வசனகவிதைகள் பிக்ஷுவின் கவிதைகளினின்று தொனியிலும், சொல்லும்
பொருளிலும் மாறுபட்டிருந்தன.

ஏர் புதிதா?

முதல் மழை விழுந்ததும்
மேல் மண் பதமாகி விட்டது.
வெள்ளி முளைத்திடுது, விரைந்து போ, நண்பா!
காளைகளை ஓட்டிக் கடுகிச் செல், முன்பு!
பொன் ஏர் தொழுது, புலன் வழிபட்டு,
மாட்டைப் பூட்டி
காட்டைக் கீறுவோம்!
ஏர் புதிதன்று, ஏரும் நுகத்தடி, கண்டது,
காடு புதிதன்று, கரையும் பிடித்ததுதான்!
கை புதிதா, கார் புதிதா? இல்லை !

நாள் தான் புதிது, நட்சத்திரம் புதிது!
ஊக்கம் புதிது, உரம் புதிது!

மாட்டைத் தூண்டி, கொழுவை அழுத்து.
மண் புரளும் மழை பொழியும்!
நிலம் சிலிர்க்கும் பிறகு: நாற்றும் நிமிரும்.
எல்லைத் தெய்வம் நிலம் காக்கும், கவலையில்லை!
கிழக்கு வெளுக்குது!
பொழுதேறப் பொன் பரவும் ஏரடியில்
நல்ல வேளையில் நாட்டுவோம் கொழுவை

பெண்மையை வியக்கும், பெண்ணை எண்ணி ஏங்கும், அகத்துறைக் கவிதைகளையே
கு.ப.ரா. அதிகம் எழுதினார். ‘கருவளையும் கையும்’, ‘பெண்ணின் பிறவி ரகசியம்’, ‘விரகம்’
போன்ற பல இனிய கவிதைகள் ரசிகர்களுக்கு மகிழ்வூட்டும் படைப்புக்கள் ஆகும்.

கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் - வல்லிக்கண்ணன் Empty Re: புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் - வல்லிக்கண்ணன்

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Aug 01, 2013 9:04 pm

கிராமியக் காதலர்கள் பற்றி, கிராமியப் பாங்கான முறையில் கவிதை எழுதுவதிலும்
கு.ப.ரா. உற்சாகம் காட்டினார். நல்ல வெற்றியும் கண்டார்.அவரது அந்த ஆற்றலுக்கு ஒரு
உதாரணம் ‘ராக்கி நெனப்பு’. (1939 - மணிக்கொடி, ஏப்ரல்15)

குட்டி அவ என்ன சோக்கு
என்ன ‘சோரு’ தெரியுமா?
தீண்டாத சாதியவ
கலியன் சாம்பான் பொண்ணுடா!
பட்டிக்குச்சு மோட்டு மேலே
பூத்த பறங்கி போலே
ஏண்டா அங்ஙணெ போயி பொறந்தா
கட்டுக் கொண்டெக்காரி?
மட்டசாதி ஈனசாதி
எண்ணு ஆர்ரா சொன்னவென்?
அவனெக் கொண்டு அவமுன்னே
நிறுத்தி யல்ல பாக்கணும்!
கெட்ட பயமவடா அவ
என்ன மயக்கு மயக்கரா!
மவராசி போலே அவ
மவா ராங்கிக்காரி!
ஓடக்கெர மரத்துங்கீளே
உருமத் துநேரம்
மாட்டை ஓட்டி மேயவுட்டு
படுத்திருக்கையிலே
கோடேவெயிலு காலுங்கீளே
கொளுத்திச் சுட்டுப் பொசுக்க
பாட்டை வெளியே போன ராக்கி
அங்கே வந்து ஒதுங்ணா!
வேத்துக் கொட்டி வெள்ளேச்சேலே
மேலே ஓட்டிப்போயி
அள்ளிச் சொருவியிருந்த மயிரு
அவுந்து மேலே கொட்டி
நேத்து தாண்டா அவளே கிட்டே
பாத்து சொக்கிப் போனேன்!
கள்ளிப் பசப்பிப் பேரைக் கேட்டா
குனிஞ்சு நின்னு சிரிச்சா!
அடபோடா - நீ யென்ன
கண்டே அந்த அளவே?
பொளுதே மறந்தேன் போக்கை மறந்தேன்
பெறப்பெக் கூட மறந்தேன்
மொடவன் பேலே மரத்துங்கீளே
பாவிமய மாயம்
உளந்து கெடந்தேன், பொச்சாய
ஆத்தா வந்து பாத்தா!
ராக்கி நெனப்பு ராக்கி சிரிப்பு-
அது என்ன போடா-
ராப்பவலா எந்நேரம்
வேறே நெனப்பு இல்லே!
பாக்கி நாளு என்னா செய்வேன்
சொல்லு பாப்பம் சொக்கா!
சப்புன்னு இருக்கு சீவன்
செத்துப் போனாத் தேவலாம்,

இதேபோல ‘கள்ளுப் போனா போகட்டும் போடா எனக்கு சொக்கி இருக்கா
சொக்கா!’ என்று முடியும் ரசமான கவிதை ஒன்றும் உண்டு.
‘சூறாவளியில் ‘மயன்’ எழுதிய பாட்டைப் படித்தேன். ஆங்கிலத்திலும், பிற
பாஷைகளிலும் இந்தப் புதிய மோஸ்தரில் இது போன்ற பாட்டுகள் வெளிவருவதைப்
பார்த்து அவ்வளவு வருத்தப்பட்டதில்லை. மற்ற பாஷைகளை பிடித்த பீடை தமிழையும்
‘தொத்த’ ஆரம்பித்து விட்டதாகத் தெரிகிறது.’

கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் - வல்லிக்கண்ணன் Empty Re: புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் - வல்லிக்கண்ணன்

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Aug 01, 2013 9:04 pm

செய்யுள் இலக்கண விதிகளையும், தளைகளையும் மீறி கட்டுப் பாடில்லாமல்
எழுதப்படும் கவியை பிரஞ்சு பாஷையில் Vers Libre என்று சொல்லுவார்கள். இந்தக்
கட்டுப்பாடில்லாத கவியினால் ஏற்படும் குணா குணங்களை நாம் ஆராய்ச்சி செய்ய
வேண்டிய ஒரு நெருக்கடி ஏற்பட்டு விட்டது.

கவிஞனுக்கு விலங்கிடலாமா என்று கேட்கலாம். கவிஞனுடைய கற்பனா சக்திக்கும்,
வெற்றிக்கும் ஓரளவு சுதந்திரம் அவசியந்தான். ஆனால், கவியானது சப்பாத்திக் கள்ளி
படர்ந்தது போல சட்டதிட்டங்களுக்கு உள்படாமல் திமிறிக் கொண்டு செல்லுமேயானால்
வியர்த்தமாகிவிடும் என்பது திண்ணம்.

தமிழ்க் கவியின் இயல்பையும், சம்பிரதாயத்தையும், தாளலயத்தையும் தள்ளி
வைத்துவிட்டு வசனத்தையே கவிரூபமாக கடுதாசியில் எழுதிவிட்டால் கவியென்று ஒப்புக்
கொள்ள முடியுமா?

உணர்ச்சி பாவத்திற்கேற்ற வார்த்தைகள், வார்த்தைச் சேர்க்கையினால் உண்டாகும்
புதிய சக்தி; உணர்ச்சியின் ஏற்றத் தாழ்வுகள், துடிப்புக்காகக் காட்டக்கூடிய தாளம், Rythm
இவைகள் உண்மைக் கவிக்கு இன்றியமையாத சாதகங்களில் சில. இவற்றில் சிரேஷ்டமானது
தாளம்தான். தாளம் என்ற கருவியை வைத்துக் கொண்டுதான் கவிஞன் கேட்போருடைய
ஹிருதயத்தைத் தட்டி எழுப்பப் ‘பாடாகப்படுத்திவிடுகிறான்.’

இந்தப் “புதுரகக் கவிகளோ தாளத்தைக் கைவிட்டு விட்டார்கள். உரையும்
செய்யுளுமில்லாத வௌவால் கவிதைக்கு தமிழில் ஒரு
ஸ்தானம்- நிரந்தரமான ஸ்தானம்-உண்டா?”

28-5-1939 ‘சூறாவளி’ இதழில் வந்த இதுதான் அச்சு ரூபத்தில், புதுக்கவிதைக்கு
விரோதமாக எழுந்த முதலாவது எதிர்ப்புக் குரல் ஆகும்.

4-6-1939 இதழில் ‘மயன்’ சிறுபதில் ஒன்று கொடுத்திருந்தார்.

“Vers Libre” என்ற பதம் ‘சுதந்திரத்தை நோக்கி’ என்று அர்த்தப்படும்- மேல்
நாடுகளில் சென்ற ஒரு நூற்றாண்டாகக் கலைகளின் தளைகளை அறுத்தெறியச்
செய்யப்பட்டு வரும் முயற்சிகளுக்கு பொதுவாக இப்பெயர் வழங்கி வந்திருக்கிறது.

கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் - வல்லிக்கண்ணன் Empty Re: புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் - வல்லிக்கண்ணன்

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Aug 01, 2013 9:05 pm

கவிகளுக்கு சுதந்திரம் வேண்டியதுதான் என்று ஒப்புக்கொள்ளும் மகராஜ் ஓரளவுக்கு
மேல் அந்த சுதந்திரம் இருக்கக்கூடாது என்று சொல்லுகிறார். கட்டுப்பாடில்லாதது என்று
சொல்லப்படும் இந்தக் கவிதைக்கும் சில கட்டுப்பாடுகள் உண்டு; அதை அனுசரித்து
எழுதினால்தான் அது கவிதையாகும் என்பதை மறந்து விட்டார் மகராஜ்.

என்னைப் பற்றிய வரையில் “எல்லா இலக்கியத்துக்கும் பொதுவான பாஷை,
அர்த்தம் என்ற இரண்டு கட்டுப்பாடுகளே அதிகம் என்று சொல்லுவேன்”.

அதே இதழில், வசனகவிதை முயற்சியைக் கேலி செய்யும் ‘வசனகவிதை’ என்னும்
பரிகாசப் பாடல் ஒன்றும் வெளிவந்தது. அதை எழுதியவர் பெயர் வெறும் ‘எஸ்’ என்றே
தரப்பட்டிருந்தது.*

வசன கவிதை

எதுகையும் மோனையும்
வேண்டவே வேண்டாம்
சீரும் கீரும்
சுத்தச் சனியன்கள்
வெண்பாவும் கிண்பாவும்
விருத்தமும் திருத்தமும்
வேண்டாத தொல்லைகள்

மட மட வென்றும்,
கட கட வென்றும்,
மள மள வென்றும்
வசன கவிதை
எழுதித் தள்ளுவோம்
“ததாஸ்து”
வாணியின் விலங்குகள்-

கைவிலங்கும் கால்விலங்கும்
படார், படார்!
டணார், டணார்!
________________
* அப்படி ‘எஸ்’ என்ற பெயரில் எழுதியது தானேதான் என்று ‘சுந்தா’ பின்னர் என்னிடம் தெரிவித்துள்ளார்.
விலங்குகள் எல்லாம்
பொடிப் பொடியாகுக!
பொடிந்த பொடியை
ஹே காற்றே.
கடலில் சேர்ப்பாய்.

ஜல்தி! ஜல்தி!
டம், டம், டம்.
புரட்சி, புரட்சி
இலக்கிய உலகில் புரட்சி செய்வோம்
தாளத்தைப் போக்கிக்
கூளத்தைக் கூப்பிடுவோம்.
இசையைத் தகர்த்து
இம்சைகள் செய்வோம்.
அமைப்பை நொறுக்கி
அலங்கோலம் செய்வோம்

அகத்திய முனிவரை
“ஹோ ஹோ” வென்று
அலற வைப்போம்.

கம்பனைக் கதற வைப்போம்.
எத்தனை சாத்தனார்
எதிர்த்து வந்த போதிலும்
அச்சம் இல்லை; அச்சம் இல்லை
அச்சம்
என்பது
இல்லையே

இதற்குப் பதில் பரிகாசச் செய்யுள் ஆக 11-6-39 இதழில் வந்தது. ‘நாணல்’
எழுதியிருந்தார். அந்நாட்களில் நாணல் (பேராசிரியர் அ. சீனிவாசராகவன்) வசன கவிதை
எழுதிக் கொண்டிருந்தார். அவரது அத்தகைய படைப்புக்கள் ‘காலேஜ் மேகஸின்’ களில்
பிரசுரமாகி வந்தன. அவை இப்போது கிடைக்கமாட்டா.

கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் - வல்லிக்கண்ணன் Empty Re: புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் - வல்லிக்கண்ணன்

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Aug 01, 2013 9:07 pm

‘சூறாவளி’யில் அவர் எழுதிய பரிகாசம் ‘யாப்பின் பெருமை’. அது பின்வருமாறு;

‘சில ஆண்டுகளுக்குமுன், வளையாகேசி என்ற பழந்தமிழ் நூலைப்பற்றிய வரலாற்றை
ஆராய நேர்ந்த பொழுது பஃறுளிப் பள்ளம் என்ற ஊரிலே வேளாண் மரபிலுதித்தவரும்,
புலவருக்கு வரைவிலாது வழங்கும் வள்ளலும், சிவநேசச்செல்வருமான உயர் திருவாளர்
பலகந்தற் பிள்ளையவர்களிடத்திலே அருமையான பழஞ்சுவடிகள் பல இருப்பதைக்
கண்ணுற்று, பிள்ளையவர்களின் பேரன்பின் வழியாக அமைவதைப் பெற்றுப் பல காலம்
ஆராய்ச்சி செய்ததன் பயனாக தற்போது, வசனக்கவிதை என்று உலவி வருகின்றவிடமானது
பல்லாயிர ஆண்டுகளுக்கு முன்னமேயே தமிழ் கூறும் நல்லுலகிற்றோற்ற, அவ்வமயம்
பாற்கடலிற்றோற்றிய நஞ்சையுண்டு வானவர்க்கருளிய பெம்மானைப்போற் பல புலவர்கள்
இந்நஞ்சைத் தலைசக்காட்ட வொட்டா தடித்து அமிழ்தினுமினிய
தமிழ்மொழியைக் காத்தனர் என்பதும், ‘ரிதும்’ என்று இக்காலத்தில் வழங்கிவருஞ் சொல்
ஆங்கிலச் சொல்லல்ல தமிழ்ச் சொல்லே என்பதும், இன்னன போற்பிறவும் தெற்றென
விளங்க, சூறாவளி ஏழாவது இதழில் வெளியாகியுள்ள ‘வசனகவிதை’ என்ற கட்டுரையைக்
கண்ணுற்றுக் கலங்கியாப்பின் பெருமையைக் காக்கத் தொல்காப்பியனார் மரபிற் றோன்றிய
எதுகைக் கீரி, மோனைப் பூனை முத்தமிழ்க் கோடரி உளறுவாய்ப் புலவர் மாணாக்கனார்
தவளைக் குரலார் யாத்த செய்யுளொன்றைக் கீழே வெளியிடத் துணிந்து ஏட்டுப்
பிரதியிலுள்ளவாறே வெளியிட்டால் விளங்குவதரிதாமென நினைத்து சிற்சில
மாறுதல்களோடு வெளியிடப் போந்துளமாகலின் அத்தொண்டைச் செவ்வனே ஆற்றற்குரிய
ஆற்றலை அளித்த அருமறை முதல்வன் திருவடி சிந்தித்து வணங்குகின்றனம்;

கரும்பு போலத் தித்திக்கும்
கற்கண்டைப் போலினிதாகும்
துரும்பு போல வலிதாகும்
தூவென்றால் பின் சூவாகும்
கரும்பு மலர் கண்டிசை பாடும்
கடுகற் பொதிய முனிவன் சொல்
விரும்பிச் சீர்தளை யெதுகையினை
விரும்பிற் பொருளை விரும்புவரோ?
விரும்பு சோளக் கவின் கொல்லை
வித்தங் காக்கு விம்மம் போல
திரும்பிப் பொருளைப் பாராமல்
திருதிரு வென்று தயங்காமல்
அரும்பு சொல்லின் செல்வமெலா
மசையில நிறைந்து நேராக
எறும்பு கல்லைத் தோய்ப்பதுபோ
லிசைமின் னெதுகை சீர்தளையே.
தளையைத் தளர்த்த முற்படுவீர்
தலைவேதனையைக் கவி யென்பீர்
கிளைக்கு மேலே நின்றிடுவீர்
கீழ்மர மெய்யு மதியுடையீர்
தளைசீர் மோனை யெதுகைப் பாவும்
பாவினமு மென்றாகி
விளைக்குஞ் சேற்றுநிலந்தனிலே
விழுத்தீராயி னெழுந்தீரே
எழுந்தீரென்றே னேதென்றா லெழுதாக்
கவிதை யெலா முமதே
செழுந்தீ சூழுஞ் சுடுகாட்டிற்
செந்நாப் பேய்களாடுவதும்
கொழுந்து விட்டே வுலக்கைத்தாய்
கோலா கலமாய் வளருவதும்
விழைந்து கண்டு விரைவில்நீர்
வீங்கு யாப்பாற் கவியாவீர்
கவியாம் பெருமை வேண்டுமெனிற்
கண்கள் முழுதும் பஞ்சாகத்
தவியாய்த் தவித்துத் தாளத்தைத்
தத்தித் தத்திப் போட்டிட்டு
அவியாவொளி போலணைந்திட்டே
அறியா ‘ரிதுமை’க் கும்பிட்டுச்
செவியே யில்லாக் கட்செவி போற்-
செஞ் சொன் மேலே யூர்வீரே

வேறு
வெண்ணெயானது நெய்யா யுருகிடுங்
கண்ணி லாதவனைக் குருடனெனலாம்
அண்ணனானவன் தம்பிக்கு மூத்தவன்
எண்ணி யாப்பி சைத்தாற் கவியாகுமே.

வேறு
வாழ்க சீர்தளை மோனை
வாழ்க காரிகை யெதுகை
ஆழ்க வசனக் கவிதை
சூழ்க இலக்கண இருளே.

வசன கவிதைக்கு எழுந்த எதிர்ப்புக்கு விவாத ரீதியான பதில் ஒன்று சூறாவளி
ஒன்பதாவது இதழில் (18-6-1939) இடம் பெற்றது. அதை எழுதியவர் ‘கவிதைத் தொண்டன்’.

தொடரும்....
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் - வல்லிக்கண்ணன் Empty Re: புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் - வல்லிக்கண்ணன்

Post by கவியருவி ம. ரமேஷ் Fri Aug 02, 2013 7:59 am

பொதுவாகவே வசனகவிதையைக் கண்டிப்பவர்களுடைய வாதம் நூதனமாக
இருக்கிறது - வசன கவிதை நூதனமோ இல்லையோ! வசன கவிதை நன்றாக இருக்கிறதா
இல்லையா என்று வாசித்துப் பார்த்து குணத்தை நிர்ணயிக்க அவர்கள் இஷ்டப்படவில்லை.
சீர், தளை, எதுகை, மோனைகளை அனுசரிக்காமல் எழுதிய கவிதை நன்றாக இருக்க
முடியாது என்பதே அவர்களுடைய கட்சிபோல் இருக்கிறது. இல்லாவிட்டால் ஒரு புதுப்
பரீக்ஷை என்பதற்காகவே அதை ஏன் கண்டிக்க வேண்டும்?

சில பண்டிதர்கள் வசன கவிதை புதிதொன்றுமில்லை என்று சொல்லுகிறார்கள்.
பழைய நூல்களில் இருக்கிறதாம். எனவே வசன கவிதையை எதிர்ப்பவர்களை இரண்டு
பகுப்பாகப் பிரிக்கலாம். (1) பழைய முறையைப் பின்பற்றாமல் நவீனமாகப் புரட்சிப்
பாதையில் போகிறது என்ற கட்சி. (2) வசன கவிதை நவீனம் ஒன்றும் இல்லை. எல்லாம்
பழையதுதான்.ஆகையால் அதைப் புதுப் பரீக்ஷை என்று சொல்லிக் கொண்டு கூத்தாடுவது
பிசகு என்ற கட்சி.

முன் கட்சியினருக்கு ஒரு பதிலும் சொல்லமுடியாது. ஏனென்றால் அவர்கள்
குணத்தைப்பற்றியோ கவிதையைப் பற்றியோ பேசத் தயாரில்லை. கவிதையின் அணி அலங்
காரத்தைப்பற்றித்தான் பேசத் தயார். பின் கட்சியினருக்குமட்டும் நான் ஒன்று சொல்ல
விரும்புகிறேன். ஓரிருவரால் இப்பொழுது தமிழில் கையாளப்பட்டு வரும் வசன
கவிதைமுறை புதிதுதான். நவீனம்தான். முற்காலத்தில் இருந்ததாக அவர்கள் குறிப்பிடும்
வசன கவிதைக்கும் இதற்கும்
சம்பந்தமே கிடையாது. கருத்திலும் சரி உருவத்திலும் சரி.

ஆம், வசன கவிதை என்பதற்கும் உருவமுண்டு. அதற்கும் அணி அலங்காரம்
உண்டு. அதற்கும் தளையுண்டு. மோனையுண்டு. எல்லா வற்றிற்கும் மேலாக அதற்கும்
‘ரிதும்’ உண்டு. செய்யுள் எழுதுவதைக் காட்டிலும் வசன கவிதை எழுதி வெற்றி
பெறுவதுசிரமம் செய்யுளில் எப்பேர்ப்பட்ட வெறும் வார்த்தைக்கும் ஒரு இசை இன்பத்தை
ஊட்டிவிடும். ஆனால் வசன கவிதையில் கருத்தின் வேகமும் உணர்ச்சியும் சொல்லில்
தட்டினால்தான் கொஞ்சமாவது கவர்ச்சி கொடுக்கும். சொல்லில் கவிதையின் அம்சம்
இல்லாவிட்டால் அது வசன கவிதையாகாது-வெறும் வசனம்தான்.

இந்த முறையில் வசன கவிதையைத் தமிழில் முதல் முதலாகக் கையாண்டவர்
சுப்பிரமணிய பாரதிதான். ‘காட்சிகள்’ என்று அவர் எழுதியிருக்கும் சித்திரங்களைப்
படிப்பவர்கள் வசனம் எதுவென்றும் வசன கவிதை எதுவென்றும், தெளிவாக அறியலாம்.
அவருக்குப் பின்னால் அவரைப் பின்பற்றி எழுதி வருபவர்கள் ஒரு வேளை அவ்வளவு
வெற்றி பெறாமல் இருக்கலாம். இன்னும் பரீஷை நிலையிலேயே இருக்கலாம். அதனால்
வசன கவிதை செய்யுளின் முன் நிற்க முடியாதென்றோ, அது கவிதையாகாதென்றோ யாரும்
சொல்ல முடியாது. எட்வர்ட் கார்பென்ட்டரும், வால்ட் விட்மனும் ஆங்கிலத்தில் பெற்ற
வெற்றிக்குப் பிறகு, பாரதியே தமிழில் பெற்ற வெற்றிக்குப் பிறகு, தமிழில் வசன கவிதையை
எந்தக் கற்பனை உச்சியிலும் கையாளலாம் என்பது ஒரு சிலரின் தீர்மானம். முயன்று
பார்த்து விடுவது என்றும் ஓரிருவர் தீர்மானித்து இருக்கிறார்கள் என்று தெரிகிறது.


கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் - வல்லிக்கண்ணன் Empty Re: புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் - வல்லிக்கண்ணன்

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Jan 02, 2014 9:41 pm

சம்பந்தமே கிடையாது. கருத்திலும் சரி உருவத்திலும் சரி.

ஆம், வசன கவிதை என்பதற்கும் உருவமுண்டு. அதற்கும் அணி அலங்காரம்
உண்டு. அதற்கும் தளையுண்டு. மோனையுண்டு. எல்லா வற்றிற்கும் மேலாக அதற்கும்
‘ரிதும்’ உண்டு. செய்யுள் எழுதுவதைக் காட்டிலும் வசன கவிதை எழுதி வெற்றி
பெறுவதுசிரமம் செய்யுளில் எப்பேர்ப்பட்ட வெறும் வார்த்தைக்கும் ஒரு இசை இன்பத்தை
ஊட்டிவிடும். ஆனால் வசன கவிதையில் கருத்தின் வேகமும் உணர்ச்சியும் சொல்லில்
தட்டினால்தான் கொஞ்சமாவது கவர்ச்சி கொடுக்கும். சொல்லில் கவிதையின் அம்சம்
இல்லாவிட்டால் அது வசன கவிதையாகாது-வெறும் வசனம்தான்.

இந்த முறையில் வசன கவிதையைத் தமிழில் முதல் முதலாகக் கையாண்டவர்
சுப்பிரமணிய பாரதிதான். ‘காட்சிகள்’ என்று அவர் எழுதியிருக்கும் சித்திரங்களைப்
படிப்பவர்கள் வசனம் எதுவென்றும் வசன கவிதை எதுவென்றும், தெளிவாக அறியலாம்.
அவருக்குப் பின்னால் அவரைப் பின்பற்றி எழுதி வருபவர்கள் ஒரு வேளை அவ்வளவு
வெற்றி பெறாமல் இருக்கலாம். இன்னும் பரீஷை நிலையிலேயே இருக்கலாம். அதனால்
வசன கவிதை செய்யுளின் முன் நிற்க முடியாதென்றோ, அது கவிதையாகாதென்றோ யாரும்
சொல்ல முடியாது. எட்வர்ட் கார்பென்ட்டரும், வால்ட் விட்மனும் ஆங்கிலத்தில் பெற்ற
வெற்றிக்குப் பிறகு, பாரதியே தமிழில் பெற்ற வெற்றிக்குப் பிறகு, தமிழில் வசன கவிதையை
எந்தக் கற்பனை உச்சியிலும் கையாளலாம் என்பது ஒரு சிலரின் தீர்மானம். முயன்று
பார்த்து விடுவது என்றும் ஓரிருவர் தீர்மானித்து இருக்கிறார்கள் என்று தெரிகிறது.

நாணல் பரிகாசமாக எழுதிய பிறகு இந்தப் பதில் கூடத் தேவையில்லை. ஆனாலும்
காளிதாஸன் சொல்வதுபோல,

(புராணமித்யேவே நசாது ஸர்வம்.
நசாபி காவ்யம் நவமித்யவத்யம்)

பழையது என்பதாலேயே எல்லாம் குற்றமற்றவையல்ல. ‘புதிது என்பதால் மட்டும்
எல்லாம் பேசத்தகாதவை அல்ல என்பதை ஞாபகப்படுத்த விரும்புகிறேன்.’

இவ்வாறு பதில் அளித்த ‘கவிதைத் தொண்டன்’ கு.ப.ராஜகோபாலன் தான். அவர்
இதே கருத்தைப் பின்னர் தன் பெயரில் மேலும் சிறிது விரிவாக ‘கலாமோகினி’யில்
எழுதியிருக்கிறார்.

இந்த விவாதம் பூராவும், ‘ஆசிரியருக்குக் கடிதம்’ என்ற உருவத்தில், ‘சொல்லுங்கோ’
எனும் தலைப்பில்தான் அச்சாகி வந்தது.
பதினோராவது இதழில் விவாதத்திற்கு சம்பந்தம் இல்லாதது போன்ற கடிதம் ஒன்று
பிரசுரமாயிற்று.
“ஐயா, தற்போது தங்கள் பத்திரிகை வாயிலாக ஒரு விவாதம் ஆரம்பமாகியிருக்கிறது,
அந்த விவாதத்தின் முடிவைப் பற்றி எனக்குக் கவலையில்லை. ஆனால் பாரதி ஒரு
இடத்தில் ‘ஸரஸ்வதியும் இலக்கியமும்’ என்ற தலைப்பில் சில வரிகள் எழுதியிருக்கிறார்.
அது தற்கால இலக்கியத்திற்கு (இலக்கியமென்று கருதிச் செய்யப்படும் கவிகளுக்கு)
பொருத்தமா?
அந்த வரிகள் வருமாறு:

‘உலக நடையிலே, உண்மை முதலிய குணங்கள் ஸரஸ்வதி தேவியின் கருணைக்கு
நம்மைப் பாத்திரமாக்கி, நம்மிடத்திலே தேவவாக்கைத் தோற்றவித்து நமது வேள்வியைக்
காக்குமென்பது கண்டோம். இலக்கியக்காரருக்கோவென்றால் இத்தெய்வமே குலதெய்வம்,
அவர் இதனைச் சுடர் செய்யும் உண்மையுடனே போற்ற வேண்டும். எதுகை
மோனைகளுக்காக சொல்ல வந்த பொருளை மாற்றிச் சொல்லும் பண்டிதன் ஸரஸ்வதி
கடாஷத்தை இழந்து விடுவான். யமகம். திரிபு முதலிய சித்திரக் கட்டுக்களை விரும்பிச்
சொல்லுக்குத் தக்கபடி பொருளைத் திரித்துக் கொண்டு போகும் கயிறுப் பின்னிப் புலவன்
வாணியின் திருமேனியை நோகும்படி செய்கின்றான். அவசியமில்லாத அடைமொழிகள்
கோப்போன் அந்த தெய்வத்தின் மீது புழுதியைச் சொரிகின்றான். உலகத்தாருக்குப்
பொருள் விளங்காதபடி இலக்கியஞ் செய்வோன் அந்த சக்தியைக் கரித் துணியாலே
மூடுகின்றான். வெள்ளைக் கலையுடுத்துவதில்லை. மனமறிந்த உண்மைக்கு மாறு சொல்லும்
சாஸ்திரங்ககாரனும், பாட்டுக் காரனும் ஸரஸ்வதிக்கு நிகரில்லாத பாதகம் செய்கின்றனர்.
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் - வல்லிக்கண்ணன் Empty Re: புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் - வல்லிக்கண்ணன்

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Jan 02, 2014 9:41 pm

இலக்கியத்துத் தெளிவும் உண்மையுமே உயிரெனலாம். இவ்வுயிருடைய வாக்கே
அருள்வாக்கு என்று சொல்லப்படும்.
‘இலக்கிய ரஸிகன்’
மீண்டும் ‘எஸ்’ தனது அபிப்பிராயத்தை வெளியிட்டார். பதிமூன்றாவது இதழில்.
‘மகராஜுக்குப் பக்க பலமாக நான் வந்தது போல, ‘நாண’லுக்குப் பக்கபலமாக (வசன)
‘கவிதைத் தொண்டன்’ வந்தார். அவர் முதல் பாராவில் சீர், தளை, எதுகை, மோனைகளை
அனுசரிக்காமல் எழுதிய கவிதை நன்றாக இருக்க முடியாது என்பதே அவர்களுடைய
கட்சிபோல் இருக்கிறது’ என்று சொல்லுகிறார். ஆனால், மூன்றாவது பாராவில் ‘ஆம், வசன
கவிதை என்பதற்கும் உருவமுண்டு. அதற்கும் அணி, அலங்காரம் உண்டு, அதற்கும்
தளையுண்டு, மோனையுண்டு’ என்று சொல்லிக் கொண்டே போகிறார். இந்த
வாக்கியங்களில் எதை ஆதாரமாகக் கொள்வது என்று தெரியாமல் தயங்குகிறேன்.
‘செய்யுளில் எப்பேர்ப்பட்ட வெறும் வார்த்தைகளுக்கும் ஒரு இசை இன்பத்தை
ஊட்டி விடும்’ என்று சொல்லுகிறாரே அப்படி ஒரு இசையானது வெறும் வார்த்தைக்கு
இன்பத்தை ஊட்டுவதும் ஒரு தூஷணையா என்ன? வார்த்தைக்கு வார்த்தை இசை
பொங்குவதில் தானே இன்பம் இருக்கிறது யாப்பின் பெருமையே அதுதானே?
பாரதி ‘காட்சிகள்’ மூலமாக வசன கவிதைக்கு வெற்றிமாலை சூட்டி விட்டாராம்!
கண்ணன் பாட்டுக்களையும், தேசியகீதங்களையும் ஸ்தோத்திர பாக்களையும், வேதாந்தக்
கவிகளையும், பாஞ்சாலி சபதத்தையும் பாடிய பாரதியார், ‘காட்சிகள்’ எழுதியதன் மூலமாகத்
தமது பெருமையைக் குறைத்துக் கொண்டார் என்பது தான் எனது அபிப்பிராயம். இந்தக்
‘காட்சி’களில் அடங்கிய வசன கவிதைகளை கவிதைத்தொகுதியில் சேர்த்ததே எனக்குப்
பிடிக்கவில்லை.
‘மாதமோர் நான்காய் நீர் - அன்பு வறுமையிலே என்னை ஆழ்த்தி விட்டீர்’ என்று
பாரதியார் வாணியைக் குறித்துப் பாடுகிறார் அல்லவா? அப்படி வாணியின் அன்பு
தோன்றாத காலத்தில். அதாவது தூண்டுதலும் ஆர்வமும் ஆற்றலும் இல்லாத
காலத்தில்தான் பாரதியார் இந்த வசன கவிதைகளை எழுத நேர்ந்தது என்று நினைக்கிறேன்.
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் - வல்லிக்கண்ணன் Empty Re: புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் - வல்லிக்கண்ணன்

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Jan 02, 2014 9:42 pm

ஆங்கிலத்தில் எட்வர்ட் கார்பெண்டரும், வால்ட்விட்மனும் ஹென்லியும்,
ஆமிலோவல்லும், இவரும் அவரும், கவிதை எழுதுகிறார்களே என்பதற்காக நாமும் எழுத
வேண்டுமா என்ன? தமிழில் வெண்பா என்ன, விருத்தம் என்ன, மெட்டுப் பாட்டுகள்
என்ன, இவைகள் ஒவ்வொன்றிலும் அநேக விதங்கள் என்ன, இவைகளையெல்லாம் ஒரு
நல்ல கவி, சிறந்த கவி எவ்வளவு அற்புதமாகக் கையாளுகிறான் என்பதை ஏன் நாம் மறக்க
வேண்டும்? இவைகள் மூலமாகக் காட்ட முடியாத எந்த ரசபாவத்தை இந்த வசன கவிதை
காட்டப் போகிறது?
‘எஸ்’ஸின் கடிதத்துக்கு, ‘கவிதைத் தொண்டன்’ பதில் கூறவில்லை. அவருக்குப்
பதிலாக ‘ரஞ்சன்’ என்று கையெழுத்திட்டு பின்வரும் கடிதம் பதினான்காவது இதழில்
வெளியாயிற்று.
‘கவிதைத் தொண்டனுக்கு’ ‘எஸ்’ பதிலளித்திருக்கிறார். சிறிய விஷயங்கள் எவ்வளவு
அனாயாசமாகத் தட்டுக் கெட்டுப்போய் விடுகின்றன என்பதற்கு அவருடைய பதில் ஒரு
அத்தாட்சியாக விளங்குகிறது. முதல் பாராவையும் மூன்றாவது பாராவையும் வைத்துப்
பொருத்திப் பார்க்க முயன்ற ‘எஸ்’ கடைசி வரியை மறந்து விட்டார். அதையும் சேர்த்து
யோசித்திருந்தால்தான் விஷயம் விளங்கிப் போயிருக்கும்!
‘இனிமேல் என் நடையில் கொஞ்ச நஞ்சமிருக்கும் கவிதையும்கூட வடிகட்டி எடுத்து
விடுகிறேன்’ என்று ‘கவிதைத் தொண்டன்’ கன்னத்தில் போட்டுக் கொள்கிறார்! ஏனெனில்
அவர் அப்படி எழுதாமல் ‘வசன கவிதைக்கும் இலக்கணம் உண்டு; ஆனால் அது பழைய
இலக்கணம் அல்ல’ என்று மட்டும் சொல்லியிருந்தால், அது ‘எஸ்’ஸுக்குத் தெரிந்திருக்கும்!
பாரதியாரின் காட்சிகளைப் பற்றி ‘எஸ்’ அபிப்பிராயம் கூறும் இடத்துக்கு வந்த
உடனே எனக்குத் தூக்கிவாரிப் போடுகிறது. ‘எனக்குப் பிடிக்கவில்லை’ என்பதற்குப் பிறகு
வாதமே இல்லை. எங்கள் வீட்டுக் குழந்தைக்கு ‘அல்வா’வே பிடிக்காது! பாகற்காய்தான்
பிடிக்கும். உண்மைத் தமிழ்க் கவிதைக்கு (வசன கவிதை அல்ல) இவ்வளவு பாடுபடும்
நண்பர்கூட கடைசியில் ‘எஸ்’ என்று போட்டுக் கொண்டிருப்பது ‘எனக்குப் பிடிக்கவில்லை’.
ஆங்கிலத்தில் ‘அவரும் இவரும்’ எழுதியதற்காக நாமும் வசன கவிதை
எழுதவேண்டாம். ‘வேண்டும் என்று கவிதைத் தொண்டனும் பிடிவாதம் பிடிக்கவில்லை.
ஆங்கிலத்திற்கும் அதனுடைய வெண்பா, விருத்தங்கள், எல்லாம் இருக்கின்றன. அவைகள்
ஒரு உன்னத முறையில் கையாளப்பட்டும் இருக்கின்றன. அவர்களுக்குப் பிறகும் வால்ட்
விட்மன் முதலியோர் வேறுவிதத்தில் வெற்றி
யடைந்திருக்கிறார்கள் என்பதே அவ்வாதத்தின் சாரம். ‘யாப்புத் தளைகளை சற்றுத்
தளரவிட்டு, மனத்தில் பொங்கிவரும் கவிதா உணர்ச்சிகளுக்கு கொஞ்சம் அதிக இடம்
கொடுப்போம்’ என்கிறார் கவிதைத் தொண்டன். உணர்ச்சிகள் வசனத்தை மீறி வரும்
போதும், யாப்பின் சங்கிலிகள் அதைக் கட்டியணைத்து விட முயற்சிக்கும் போதும் தான்
எல்லாவற்றையும் உடைத்துக் கொண்டு வசன கவிதை பிறக்கிறது. இதில் ‘கவிதைத்
தொண்டனை’ விட நான் ஒருபடி அதிகமாகவே போக விரும்புகிறேன். வசன கவிதை,
கவிதா உணர்ச்சிகளைக் கொட்டுவதில் கவிதைக்கும் மேல் போய் விடுகிறது என்பதே என்
எண்ணம்.
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் - வல்லிக்கண்ணன் Empty Re: புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் - வல்லிக்கண்ணன்

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Jan 02, 2014 9:42 pm

‘கவிதை மூலமாகக் காட்ட முடியாத எந்த பாவத்தை இந்த வசன கவிதை காட்டப்
போகிறது?’ என்று ‘எஸ்’ கேட்கிறார். அவர் இருக்கும் திக்கு நோக்கி வணங்குகிறேன். ஏன்
காட்டக் கூடாது என்றுதான் கேட்கிறேன்?

இத்துடன் இந்த விவாதம் நின்று விட்டது.

ந. பிச்சமூர்த்தி ‘சூறாவளி’யில் கதை, கட்டுரை, கவிதை எழுதவுமில்லை, வசன
கவிதை பற்றிய விவாதத்தில் கருத்துத் தெரிவிக்கவுமில்லை. அவர் அவ்வப்போது
கவிதைகள் எழுதிக் கொண்டுதானிருந்தார். எப்போதாவது அவருடைய கவிதை ‘சக்தி’
போன்ற பத்திரிகையில் இடம் பெற்று வந்தது.

1940 களில் ‘கலா மோகினி’ தோன்றிய பின்னரே புதுக்கவிதை புது வேகத்தோடு
வளர இடம் கிடைத்தது. 1942ல் தான் பிச்சமூர்த்தி வசன கவிதை பற்றிய தமது
எண்ணத்தை ஓரளவு வெளியிட்டார்.
“கவிதைக்கும் வசனத்திற்கும் உள்ள வித்தியாசம் உருவத்தினாலேயே
ஏற்படுவதென்பது பலருடைய கருத்து. அக்கருத்து சரியல்ல என்பது எதிர்க்கட்சி. தத்துவ
ரீதியாகப் பார்த்தால் மனிதனிடம் பல படிகள் இருக்கின்றன. ஊண், உறக்கம், புணர்ச்சி
இவை ஒரு படியைச் சார்ந்தவை. உடல் அவைகளுக்கு வேர். இவைகளைப் பெறுவதற்கான
முயற்சியில் ஈடுபடுவது உள்ளம். அது ஒரு படி.

இச்செய்கைகளுக்கெல்லாம் அப்பாற்பட்ட உலக ரகசியத்தை அறியத் துடித்து நிற்கும்
அறிவு வழி ஒன்றுண்டு. உணர்ச்சி வழியும் ஒன்றுண்டு. வசனத்தின் வழி அறிவுநிலையைச்
சார்ந்தது. கவிதையின் தர்க்கபாதை உணர்விலேயே ஓடும். அறிவின் வரம்பை மீறி வசனம்
போகுமானால் அந்த நிமிஷத்திலேயே அது கவிதையாகிவிட்டது என்று நிச்சயிக்கலாம்.

‘தீ இனிது’ என்று பாரதியார் சொல்லுகிறார். இனிது என்ற சொல் ருசியைச் சார்ந்தது.
‘தீ சுடும்’ என்றால் வசனம் ‘தீ இனிது’ என்றால் கவிதை. இது ஏன்? வார்த்தை வெறும்
விஷயத்தை மட்டும் சொல்லாமல், உவமையைப் போல் உணர்வினிடம் பேசுமானால்
கவிதை பிறந்துவிடும். ‘தீ சுடும்’ என்னும் பொழுது சுடும் என்ற பதம் தீயின் குணத்தை
அறிவுக்குத் தெரியப்படுத்துகிறது. ‘தீ இனிது’ என்று சொல்லும் பொழுது அறிவு அதை
மறுக்கும்; தீயாவது இனிமையாவது என்று கலவரப்படும். ஆனால் உணர்ச்சி என்பது ஏது?
அதனால் தான் தீ இனிது என்பதை உணர்ச்சி ஒப்புக்கொள்ளுகிறது.

இப்பொழுது கம்பரைக் கேட்போம்.

‘அமுதம் நிறைந்த பொற்கலசம்
இருந்தது இடைவந்து எழுந்த தென
எழுந்த தாழி வெண் திங்கள்’
என்கிறார் கம்பர். வசனம் என்று இதை வைத்துப் பேசினால் அமுதம் என்பது உண்டோ?
பொற்கலசம் கடலில் மிதப்பானேன்? திருடர்கள் தொழில் மறந்து விட்டார்களா?
பொற்கலசம் என்ன நீர்மூழ்கிக் கப்பலா - வேண்டும் பொழுது மேலே எழுந்துவர? -
என்றெல்லாம் அறிவு கேட்கக் கூடும். அதனால்தான் உணர்ச்சி சொல்லுகிறது; ‘இந்த
வார்த்தைகள் உணர்ச்சியின் வெளியீடு. உணர்வின் உலகுக்குச் சமர்ப்பிக்கப்பட்டவை,
உனக்கல்ல, ‘கடலில் முழுமதி எழும்பொழுது உணர்வு வயப்பட்ட மனிதன் கம்பர்
பாடியதைக் கடுகளவும் மறுக்க மாட்டான்’.

ஆகவே சம்பிரதாயமான உருவம் கவிதையாக்குவதற்கு உதவியாக இருந்த போதிலும்
அடிப்படைகளைப் பற்றிப் பேசும் பொழுது கவிதைக்கும் வசனத்திற்கும் வித்தியாசம்,
எதனுடன் அது உறவாடுகிறது - அறிவுடனா உணர்ச்சியுடனா என்பதைப் பொறுத்தே
நிற்கும். எவ்வளவுக்கெவ்வளவு உணர்வைத் தீண்டாமல் அறிவுடன் கவி பேசுகிறானோ
அவ்வளவுக்கவ்வளவு வசனமாய்விடும். உருவத்தில் கவிதையாக இருந்த போதிலும்,
இப்பொழுதெல்லாம் வசனகவிதை என்று பேசுகிறார்கள். உண்மையில் வசனமாக இருந்தால்
கவிதையாக இருக்க முடியாது. கவிதையாக இருந்தால் வசனமாக இருக்க முடியாது. ஆனால்
புதுமையையும் பழமைக்குள் புகுத்தி சமரசம் செய்வதே மனித இயல்பாதலால்
நடைமுறையில் அவ்வாறு சொல்லுகிறார்கள் என்று சொல்லலாம். ஆகையால் கவிதையின்
குறியும் வசனத்தின் உருவும் கலந்த இப்புதுப் பிறவிக்கு இந்தப் புதிய பெயர்
கொடுத்திருப்பதை ஒருவாறு ஒப்புக்கொள்ளலாம்.

இந்த மாதிரியான வசன கவிதையை பாரதியார் கையாண்டிருக்கிறார்.

கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் - வல்லிக்கண்ணன் Empty Re: புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் - வல்லிக்கண்ணன்

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Jan 02, 2014 9:43 pm

‘ஞாயிறு வையமாகிய கழனியில் வைர ஒளியாக நீர் பாய்ச்சுகிறது.
அதனை மேகங்கள் வந்து மறைக்கின்றன.
அஃது மேகங்களை ஊடுருவிச் செல்கிறது,
மேகமாகிய சல்லடையில் ஒளியாகிய புனலை வடிகட்டும் போது
மண்டி கீழும் தெளிவு மேலுமாக நிற்கின்றன.

இதில் கவிதையின் லட்சணத்தைக் காணாவிட்டால் வேறு எங்குதான்
காணப்போகிறோம்? இம்மாதிரி கவிதை அடங்கிய தொகுதி ஒன்றை பாரதியார் ‘காட்சி’
என்ற தலைப்பின் கீழ் வெளியிட்டிருக்கிறார். வழி என்னவோ புதியது. அழகு மட்டும்
உலகு தோன்றிய நாளாகக் காண்பது.

‘இவ்வுலகம் இனியது. இதிலுள்ள வான் இனிமை உடையது.
காற்றும் இனிது.
தீ இனிது. நீர் இனிது. நிலம் இனிது., ஞாயிறு நன்று. திங்களூம்
நன்று.
வானத்துச் சுடர்களெல்லாம் மிகஇனியன.
மழை இனிது மின்னல் இனிது இடி இனிது.
கடல் இனிது. மழை இனிது. காடு நன்று.

இது வசனமா? கவிதைக்கும் வசனத்திற்கும் வார்த்தைகள் என்னவோ பொதுவானாலும், கவிதையின் சுருதி வேறு. வசனத்தின்
சுருதி வேறு. வாய் விட்டோ விடாமலோ இதைப் படித்தாலும், நாம் வசன உலகில் காலால்
நடக்கவில்லை என்றும் கவிதை உலகில் இறகு கட்டிக் கொண்டு பறக்கிறோம் என்றும்
உணர்ச்சி சொல்லும். வசனத்திற்கும் கவிதைக்கும் மற்றொரு பெரிய வித்தியாசம் உண்டு.
‘வியஷ்டி’ என்கிறார்களே, அந்தப் பன்மையையே வசனம் வற்புறுத்தும். கவிதை
ஒருமையை வற்புறுத்தும். உடலுக்கு எலும்புக்கூடு எப்படியோ அதைப் போலவே, இந்த
ஒருமை என்னும் குணம் கவிதையின் அஸ்திவாரமும் அழகும் ஆகும். சிருஷ்டியின்
பன்மையை ஒருமையாக்காத கவிதையில் பெருஞ்சிறப்பு இருக்க முடியாது.

‘இஃது சக்தியின் லீலை.
அவள் உள்ளத்திலே பாடுகிறாள்.
அது குழலின் தொளையிலே கேட்கிறது.
தொம்பைப் பிள்ளைகள் பிச்சைக்குக் கத்துகின்றன. பிடாரன்
குழலையும் தொம்பைக் குழந்தைகளின் குரலையும் யார் சுருதி
சேர்த்து விட்டது? சக்தி.
ஜரிகை வேணும் ஜரிகை என்றொருவன்
கத்திக்கொண்டு போகிறான்.
அதே சுருதியில்.
ஆ! பொருள் கண்டு கொண்டேன்.
பிடாரன் உயிரிலும் தொம்பக் குழந்தைகளின் உயிரிலும்
ஜரிகைகாரன் உயிரிலும் ஒரே சக்தி லீலையாடுகின்றது.
அவள் தேன். சித்த வண்டு அவளை விரும்புகின்றது.
வடமேருவிலே, பலவாகத் தொடர்ந்து வருவாள்.
வானடியைச் சூழ நகைத்துத் திரிவாள்.
அவளுடைய நகைப்புகள் வாழ்க.
தெற்கே நமக்கு ஒருத்தியாக வருகின்றாள்: அன்பு மிகுதியால்,
ஒன்று பலவினும் இனிதன்றோ?
வைகறை நன்று; அதனை வாழ்த்துகின்றோம்,

கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் - வல்லிக்கண்ணன் Empty Re: புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் - வல்லிக்கண்ணன்

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Jan 02, 2014 9:44 pm

ஒன்று பலவினும் இனியதன்றோ என்கிறார் கவி. ஆமாம் அதனால்தான் கவிதைக்கு
மதிப்பு.

கவிதையின் முக்கிய லட்சணம் இந்த ஒருமையில் இருப்பதினால் தான்,
யாப்பலங்காரங்களில் பல உண்டாகியிருக்கின்றன. ஒரு புலனால் உணர்ப்படுவதை மற்றொரு
புலனால் அறிவதுபோல் காட்டும் பொழுது ஒரு புதுமையும் கவர்ச்சியும் தோன்றும்.

செந்தமிழ் நாடென்னும் போதினிலே
இன்பத்தேன் வந்து பாயுது காதினிலே,

தேன் காதில் பாய்ந்து இன்பத்தைத் தருவதென்றால் அது கவிதை உலகில்தான்
நடக்கும், இரவியின் ஒளியிடைக் குளிப்பதும், ஒளி இன்னமுதினை உண்டு களிப்பதும்
வசனத்திற்குப் பொருந்துமா?

“பாரதியின் ‘காட்சி’ கவிதையின் மாற்றுக்கு எந்த விதத்திலும் குறையாதது. தமிழ்
நாட்டு வசன கவிதையில் அதுதான் முதல் முயற்சி”.
(கலாமோகினி, இதழ் 9)
வசன கவிதை, மறுமலர்ச்சி என்பதெல்லாம் அர்த்தமற்றவை என்று கூறி, அம்முயற்சிகளில்
ஈடுபட்டோரைக் குறை கூறியும் கோபித்தும் பொழுது போக்கிய பண்டிதர்களை
‘கலாமோகினி’ தாக்க முன் வந்தது. காரசாரமான ஒரு கவிதை எழுதி அதன் ஆசிரியர்
(சாலிவாஹனன்) வி.ரா. ராஜகோபாலன் எழுதியது இது:-

பழமையின் பாதை, கற்ற
பண்டிதர் நடை. முன்னோர்கள்
வழமைஈ தெல்லாம் எங்கள்
வசனமொத் ததுவே யென்று
கிழமை கொண்டாடி ஏதோ
கிறுக்கிவைப் பார்கள் இந்த
இழவினைச் சகியாதேதும்
எம்மனோர் சொன்னால் வைவார்

குப்பையைக் கூட்டி வைத்துக்
கொண்டிதோர் கவிதை என்பார்
எப்படி யேனும் அஃதை
ஏற்றமாம் கவிதை என்று
ஒப்பிட வேண்டும் என்பார்
உணர்ந்தவர் தவறென்றாலோ
எப்படிச் சொல்வீரென்று
இழிமொழி பலவும் சொல்வார்.

உணர்ச்சியும் சொல்லும் கூடில்
உண்மையில் கவிதையாமிப்
புணர்ச்சியில் லாததெல்லாம்
புலவர்வாய்ச் சொல்லென்றாலும்
மணமிலா மலர்தானென்போம்
மானிடர் மாண்டுபோனால்
பிணமெனவே நாம் சொல்வோம்
பிறர்சொல்லும் வசவுக்கஞ்சோம்
ஆவியே யில்லாமேனி
அதனையோர் மனிதன் என்று
கூவிடல் போலச் சொல்லைக்
கூட்டிவைத் திதுவும் ஓர்மா
காவியம் என்பார் அஃதைக்
கற்றவர் பிழையென்றாலோ
‘பாவிகள் தமிழைக் கொல்லப்
படைதிரண் டனரே’ என்பார்.
கோப்பில்லா இனிமையில்லா
கொள்ளவோர் சுவையு மில்லா
வேப்பிலைக் கவிதை தன்னைக்
காட்டிலும் உணர்ச்சிமிக்க
யாப்பில்லாக் கவிதை மட்டும்
யாதினால் தாழ்ந்ததையா
மூப்புடைப் பெரியீர் என்றால்

முனிந்தெமை ஏசு கின்றார்
மதுமலர்க்கொடி தான் என்றும்
மறுமுறை மலராதானால்
அதுவல எங்கள் நாட்டு
ஆன்ற செந்தமிழ் என்றென்றும்
புதுமலர் நித்த நித்தம்
பூத்திடும் புதிய இன்ப
மதுவினைச் சிந்தும் இந்த
மகிமைநீர் அறியமாட்டீர்.
விலைமகள் கற்பை ஒத்த
விதமல எங்கள் நாட்டம்
கலைகளை வாழ்த்த நாங்கள்
கண்டதோர் வழியில் வந்தோம்
மலைவுறோம் மூண்ட ஓரோர்
மனிதர்கள் வசவுக் கஞ்சோம்
நிலைகுலை வடையோம் எங்கள்
நேரிய வழியே செல்வோம்
(கலாமோகினி - 10)

வசனகவிதை பற்றி கு.ப. ராஜகோபாலன் எழுதிய கட்டுரையும் பிரசுரமாயிற்று. அது
பின்வருமாறு:


கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் - வல்லிக்கண்ணன் Empty Re: புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் - வல்லிக்கண்ணன்

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Jan 02, 2014 9:45 pm

‘வசன கவிதையை ஏளனமாகப் பேசுவது இப்பொழுது இலக்கிய ரசிகர்களிடையே
பாஷன்’.

‘அதென்ன வசனகவிதையா? இப்பொழுது யாப்பிலக்கணம் தெரியாதவர்களெல்லாம்
இப்படி ஆரம்பித்து விட்டார்கள். வாய்க்கு வந்ததை எழுதி வசனகவிதை என்கிறார்கள்’
என்று ஒரு சிலர் கேலி.

‘வசன கவிதை புதிதொன்றுமில்லை. பண்டைத் தமிழில் இருந்ததுதான் அது. அகவல்
வசனகவிதைதானே? இவர்கள் என்ன புதிதாகக் கண்டுபிடித்து விட்டார்கள்’ என்று மற்றும்
சிலர் தாக்குதல். வேடிக்கை என்னவென்றால் எதிர்ப்பவர்கள் இருதரப்பினர்களாக
இருக்கிறார்கள். ஒருவர் ஆட்சேபணை மற்றொருவரது போல் அல்ல. ஒருவர் வசன
கவிதையே கூடாது என்கிறார். மற்றவர் அது புதிது இல்லை என்கிறார். விசித்திரம்தானே
இது?

யாப்பிலக்கணம் தெரியாததால் வசன கவிதையைப் பிடித்துக் கொண்டார்கள் அதை
எழுதுகிறவர்கள் என்ற வாதம் சுத்த அசட்டுத் தனத்தைத் தவிர வேறொன்றுமில்லை.
எழுதுகிறவர்களுக்குத் தேவையானால் யாப்பிலக்கணத்தைக் கற்றுக் கொள்ள எத்தனை
நாழிகைகள் ஆகும்? அதென்ன அப்படி எளிதில் கற்றறிய முடியாத வித்தையா? தமிழ்ப்
பண்டிதருக்கு வருவது கவிதை எழுத முனைகிறவனுக்கு வராமல் போய்விடுமா என்ன?
அப்படிப்பட்ட பிரம்ம வித்தை ஒன்றுமில்லை. அது நிச்சயம். யாப்பிலக்கணத்தைப்
படிக்காமல்கூட கண்களை மூடிக்கொண்டு செய்யுள் பாடலாம்.

அது கிடக்கட்டும். வால்ட்விட்மனும், எட்வர்டு கார்பெண்டரும் ஆங்கில
யாப்பிலக்கணம் கற்றறியத் தெரியாமல்தான் கவிதை எழுதினார்களோ? புது
யாப்பிலக்கணமே ஏற்படும்படி வங்காளியில் பாக்கள் பாடிய ரவீந்திரர் கடைசி காலத்தில் வங்காளியில் வசன காவியத்தில் எழுதித்
தொலைத்தார். அதுதான் போகட்டும் என்றால் சுப்பிரமணிய பாரதி, யாப்பிலக்கண
முறையில் ஏராளமாக எழுதினவர் ‘காட்சிகள்’ என்ற வசன கவிதையையும் ஏன் எழுதினார்?
காட்சிகளையும் யாப்பிலக்கண முறையில் எழுதியிருக்கக் கூடாதோ?
மேற்சொன்ன ரசிகர்களுக்குப் பயந்து பாரதி காட்சிகளை யாப்பிலக்கண முறையில்
எழுதியிருந்தால் கவைக்குதவாமல் போயிருக்கும். காட்சிகள் யாப்பிலக்கண முறையில்
அமையாததால்தான் அவ்வளவு சிறப்பும் அழகும் வேகமும் கொண்டிருக்கின்றன.
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் - வல்லிக்கண்ணன் Empty Re: புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் - வல்லிக்கண்ணன்

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Jan 02, 2014 9:46 pm

யாப்பிலக்கணத்துக்குக் கட்டுப்பட்டு வரும் கவிதையும் உண்டு அதற்குக்
கட்டுப்படாமல் வரும் கவிதையும் உண்டு. கவிதை என்ற வஸ்து நேரசை
நிரையசையிலில்லை. அவை ஒழுங்காக இருந்தால் மட்டும் கவிதை வந்துவிடாது. கவிதை
என்பது நடைமட்டுமல்ல, கருத்தும் இருக்க வேண்டும். செவிநுகர் கவிதை என்று கம்பன்
சொன்னதைத் திரித்து செவிநுகர்வதுதான் கவிதை என்று கொள்வது தப்பு. கவிதை செவி
நுகர்வதாக இருக்க வேண்டும் என்பதுதான் பொருள். செவி நுகர்வதெல்லாம் எங்காவது
கவிதையாக முடியுமா? கவிதையெல்லாம் செவி நுகர்வதாக இருக்கும்.

வசன கவிதையைச் செவி நுகருமா என்றால் நுகரும். ஏனென்றால் வசன கவிதைக்கும்
யாப்பிலக்கணம் உண்டு. அதிலும் மாவிளங்காய் தேமாங்கனி எல்லாம் வந்தாக வேண்டும்.
வரும்வகை மட்டும் வேறாக இருக்கும். அவ்வளவுதான்.

வசன கவிதைக்கும் எதுகை, மோனை கட்டாயம் உண்டு. ஏனென்றால் இந்த
அலங்காரங்களை எல்லாம் உண்டாக்கினது கவிதை. இலக்கணமல்ல. அது அவற்றை
இஷ்டம் போல, சமயத்திற்கேற்றவாறு மாற்றிக் கொள்ளும். முதலில் உண்டாக்கினபடியே
இருக்க வேண்டும் என்றால் இருக்காது. இலக்கியம் கூறுவதுதான் இலக்கணம். இலக்கணம்
கூறுவது இலக்கியமாகவே முடியாது. எல்லாம் நன்னூல் யாப்பிலக்கணத்தை ஒட்டியே
இருக்க வேண்டுமென்று இலக்கணம் பிடிவாதம் செய்தால் நடக்காது. நன்னூலுக்கும்
மேலான ஒரு புது நூலை இலக்கியத்தின் போக்கிற்கொப்ப (இலக்கணம்)தயாரித்துக் கொள்ள
வேண்டும்.
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் - வல்லிக்கண்ணன் Empty Re: புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் - வல்லிக்கண்ணன்

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Jan 02, 2014 9:47 pm

காம்போதி ராகம் போட்டுப் பாட வருவதுதான் கவிதை என்று யாராவது வாதித்தால்
அவர்களுக்குக் கவிதை இன்னதென்றே தெரியாது என்றுதான் நாம் பதில் சொல்ல
வேண்டும். ஆங்கிலக் கவிதையை நாம் ராகம் போட்டுப் பாடியா அனுபவிக்கிறோம்?
அவர்களுடைய ராகத்தைப் போட்டுப் பாடினால்தான் அது நன்றாக விளங்கும் என்று
சொல்ல யாராவது முன் வருவார்களா?

பொதுவாகக் கவிதைக்கு, எந்த பாஷையிலிருந்தாலும் சரி, ஒரு தனி ராகமும்
தாளமும் இருக்கின்றன. அதை அனுபவிக்க கர்நாடக சங்கீதத்தின் ஒத்தாசையோ,
ஹிந்துஸ்தானி சங்கீதத்தின் ஒத்தாசையோ, ஐரோப்பிய சங்கீதத்தின் ஒத்தாசையோ
வேண்டியதே இல்லை. கவிதையின் ராகம் உள்ளத்தில் கிளம்புகிறது. ஹிருதயம் தாளம்
போடுகிறது. ‘வீ ஸீ ஹெவன் இன்தி ஒயில்ட் ஃபிளவர் அண்ட் எட்டர்னிட்டி இன் எ
கிரைன் ஆப் ஸாண்ட்’ என்ற சித்த வாக்கை அனுபவிக்க நாம் ஐரோப்பிய சங்கீதத்தைக்
கற்க வேண்டியதில்லை.

‘புல்லினில் வைரப்படை தோற்றுங்கால்’ என்பதை அனுபவிக்க காம்போதி ராகமா
வேண்டும்?

‘நமது விழிகளிலே மின்னல் பிறந்திடுக!
நமது பாட்டு மின்னலுடைத்தாகுக!’

என்ற மகாவாக்கு கவிதையாக எந்த சங்கீதத்தின் உதவி வேண்டும், கேட்கிறேன்.
(கலாமோகினி-13)

இலக்கணத்துக்கு ஏற்ப இனிய கவிதைகள் படைப்பதில் தன் ஆற்றலை ஈடுபடுத்தி
வெற்றிகள் கண்டவர் கவிஞர் கலைவாணன். (திருவானைக்காவல் க. அப்புலிங்கம்)
ஆயினும் அவர் வசன கவிதைகளை வெறுக்கவில்லை. இப்புது முயற்சி பற்றிய தன்
கருத்துக்களை அவர் ‘கலாமோகினி’யில் கட்டுரையாக்கினார். அதுவும் அறிந்து
கொள்ளப்பட வேண்டிய ஒன்றே:

“தமிழில் இலக்கிய அமைப்பு. வசனம் அதாவது உரைநடை; கவிதை அல்லது
செய்யுள் நடை என இரண்டே பிரிவாகத்தான் இதுவரை இருந்து வந்திருக்கிறது.
இப்பொழுது சிலர் இவைகள் இரண்டிலுமுள்ள சிற்சில அம்சங்களைக் கூட்டி ஒரு
அவியலாகச் செய்து அதனை ‘வசன கவிதை’ என்று சொல்லுகிறார்கள். இவ்வழி தமிழ்
பாஷைக்கே புதுமையானது- புரட்சிகரமானதுங்கூட.

வால்ட் விட்மன்னும், எட்வர்ட் கார்ப்பென்டரும் ஆங்கிலத்தில் ‘வசன கவிதை’
புனைந்திருக்கலாம். நான்கு வேதங்களும் வடமொழியில் வசன ரூபத்தில் இருக்கலாம்.
கவினொழுகும் காதம்பரி சமஸ்கிருத வசன காவியமாக இருக்கலாம். தாகூர் வங்காளியில்
வசன கவிதை எழுதிக் குவித்துமிருக்கலாம். ஆனால் தமிழுக்கு வசன கவிதை புதிது
என்பது மட்டும் நிச்சயம். பல்லாயிர வருஷங்களாக பனம்பாரனார் காலத்திலிருந்து
பாரதியார் காலம் வரையில் கையாளப் படாத ஒரு நவீன முயற்சி இது.

கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் - வல்லிக்கண்ணன் Empty Re: புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் - வல்லிக்கண்ணன்

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Jan 02, 2014 9:48 pm

அகவலை வசன கவிதை என அறியாதோர் கூறலாம். அது தவறு. அகவலுக்கு
யாப்புக்குரிய எல்லா லட்சணங்களும் உண்டு. வசன கவிதைக்கு இந்தச் செய்யுள்
லட்சணங்களில் ஒன்றிரண்டு குறையும். இதுதான் தாங்கள் எழுதுவது ‘கவிதை’ யல்ல, ‘வசன
கவிதை’ என்று அதை எழுதுபவர்களே கூறுவதன் காரணமும்கூட.

தமிழ் இலக்கிய சரித்திரத்திலேயே நான் அறிந்த மட்டில் இதுவரை கவிதைகள்
யாப்பிலக்கணத்துக்கு அடங்கியே வந்திருக்கின்றன. மாங்குடி மருதனார் முதல் மகாமகோ
பாத்தியாய சுவாமிநாத ஐயர் வரை செய்யுள் பாடிய எவரும் இதே முறையைத்தான்
அனுசரித்து வந்திருப்பதாகத் தோன்றுகிறது. இளங்கோவும், சாத்தனாரும், கம்பரும்,
சேக்கிழாரும் இப்பழவழி சென்றே பெரும்புகழ் கண்டனர். இந்த முது முறையைத் தகர்க்க
அவர்கள் முயன்றதாகத் தெரியவில்லை.
அசையாலும் சீராலும் மட்டும் அழகான கவிதை ஆகிவிடாது. கவிதை என்பது
நடைமட்டுமல்ல. ஆனால் அது கருத்து மாத்திரமும் அல்ல. உதாரணமாக, வ.ரா. வின்
நடைச் சித்திரங்களில், நல்ல செய்யுள்களில்கூட இல்லாத அழகான கவிதைக் கருத்துகள்
இருக்கின்றன. அதனால் அதைக் கவிதை என்று விடலாமா? குமாரசம்பவம் போலவும்,
சிலப்பதிகாரம் போலவும், கு.ப.ரா. வின் சிறுகதைகள் இனிக்கின்றன. ஆனால் அதைக்
கொண்டே அக்கதைகளைக் காவியங்கள் என்று சொல்ல முடியுமா? இதுதான்
மறுப்பாளர்களின் வாதம். அவர்களுக்கு துணையாக பழஞ்சுவடிகளான தொல்காப்பியச்
செய்யுளியலும், யாப்பருங்கலவிருத்தியும், தண்டியலங்காரமும் இலக்கணம் பேசுகின்றன.
அழகான புதுமைகளை ஆக்குவதில் அறிவு முனைகிறது. அதன் பயன்தான் இலக்கணக்
கட்டுகளை உடைத்து விட்டு வெளிவந்த இப்புது முயற்சியும்.

இதுவரையில் தமிழ் இலக்கியத்தில் இல்லாத அழகான அருமையான எண்ணங்கள்
வசன கவிதைகளிலே காணக்கிடைக்கின்றன. ‘சீர்பூத்த’ என்று தொடங்கி செய்யுள் இலக்கண
முறைப்படி பணங்கொடுத்த எவனையோ ஒரு பாவலர் பாடிய பாட்டுக்களைவிட தளை
தட்டும் ‘பூக்காரி’ ஆயிரம் மடங்கு அழகாகத்தான் இருக்கிறது. இலக்கண வழூஉ ஒன்றையே
ஆதாரமாகக் கொண்டு இவைகளை ஒதுக்குவது வடிகட்டின மடமை. இலக்கியப்பேழையில்
வைத்துக் காப்பாற்ற வேண்டிய புது இரத்தினங்கள் இவ்வசன கவிதைகள்.

பழுத்த மாம்பழம் தித்திக்கிறது. பழுக்காத காய் புளிக்கிறது. இவைகள் இரண்டையும்
நீங்களும் நானும் உண்டு சுவைத்திருக்கிறோம். ஆனால் பழுத்தும் பழுக்காமலுமாய்
செங்காயாக இருக்கும்பொழுது நீங்கள் சாப்பிட்டிருக்கிறீர்களா; இல்லையென்றால்
சாப்பிட்டுப் பாருங்கள். காயின் புளிப்பும், கனியின் இனிப்பும் கலந்த ஒரு புதுச்சுவை.
இனிய ருசி-அதில் இருக்கக் காண்பீர்கள்.

கனிந்த கனி போன்றது கவிதை. காயொத்தது உரைநடை இவைகள் இரண்டையும்
தான் நாம் நன்றாய் அனுபவித்திருக்கிறோம். காயும் கனியும் இல்லாத செங்காய்பதம் வசன
கவிதை. ‘கவிதையின் இனிமையும் உரை நடையின் விறுவிறுப்பும் இதில் இருக்கிறது.
செங்காயைச் சுவைப்பதிலும் ஒரு புது இனிமை உண்டு.”
(கலாமோகினி-30)

இக்கட்டுரைக்கு எதிரொலி இலங்கையில் தோன்றியது. ‘ஈழ கேசரி’யில் வழக்கமாக
எழுதிவந்த ‘இரட்டையர்’, வசன கவிதை புதிய தோற்றம் அல்ல; முன்னரும் அது
வெவ்வேறு வடிவங்களில் தமிழில் வழங்கி வந்தது என்று வாதாடியிருந்தார்கள்.
சுவாரஸ்யமான அக்கட்டுரை ‘கலா மோகினி’யில் மறு பிரசுரம் செய்யப்பட்டது.
இரட்டையரின் சுவையான கருத்துக்களை நீங்களும் தெரிந்து கொள்ளலாமே என்பதற்காக
அந்தக் கட்டுரையை இங்கே தருகிறேன்;

“பிஞ்சுமாகாது பழமுமாகாது” ‘செங்காய்’ என்று சொல்வார்களே, அந்த நிலைதான்
வசனகவிதைக்குரியது. யாப்பிலக்கண வரம்பை
மீறியதாய் ஆனால், கவித்வம் பெற்றதாக உள்ள-சிறந்த வசனங்களையே வசனகவிதை எனப் பெயரிட்டழைக்கிறோம்.

பாரதியாரின் பாஞ்சாலி சபதம், கண்ணன் பாட்டு முதலியவற்றிலுள்ள பாடல்களையே
பார்த்து, ‘இவை எல்லாம் பாவா? பாவினமா? இவற்றுக்கென்ன பெயர்? எந்த
யாப்பிலக்கணத்தின்படி பாடப்பட்டவை? என்று ஒச்சம் சொல்லும் பழைய மரபினர் எவ்வித
இலக்கணமும் அமையாத இந்த வசன கவிதைக்கு இடம் கொடுப்பார்களா? அவர்கள் இதை
எதிர்க்கிறார்கள்.’

‘நல்லது! அந்தப் பண்டித சிகாமணிகள் வெறும் புளி மாங்காயையும்,
கருவிளங்காயையும், கருவிள நறு நிழலில் சுவைத்துக் கொண்டிருக்கட்டும்’ என்று அவர்கள்
எதிர்ப்பு அசட்டை செய்யப்பட்டு, வசன கவிதைக்குரிய ஆக்க வேலைகளும் நடந்து
கொண்டிருப்பதை இன்று நாம் காண்கிறோம்.

இப்புதிய முயற்சியின் பயனாயெழுந்த, சுவை நிறைந்த சில வசன கவிதைகளை நாம்
பார்த்திருக்கிறோம். ஆனால் பண்டிதர்களைப் பழிப்பதையே இலக்காகக் கொண்ட சில
தண்டடி மிண்டர் செய்யும் சொற் பிரபஞ்ச அடுக்குகளை வசன கவிதை என்று ஒப்புக்
கொள்வதற்கில்லை.


கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் - வல்லிக்கண்ணன் Empty Re: புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் - வல்லிக்கண்ணன்

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Jan 02, 2014 9:48 pm

நடை சிறிது இறுக்கமாக இருப்பினும், வசனகவிதை வடிவமென்று சொல்லத்தகும் சில
பகுதிகள்- வசன கவிதையைப் பற்றிய பேச்செழுவதற்கு-முன்னரும் இருந்தன எனக்
காட்டுவது இங்கு பொருத்தமாகும்.

1.ஆசையார்த் தலைக்கும் நெஞ்சத்து
அரசிளங் குமரன்,
துஞ்சிலன், பள்ளி கொள்ளாது
துள்ளியெழுந்து மெல்ல, நடந்து,
கள்ள மறியா, உள்ள நெறியால்
கவலை கதுவாத் தூய சேக்கையில்
கண்வளரும்அறைவந் துற்றான்.

2. அச்சமும் விதுப்புந் தூண்டி,
அவலமுந் துணிவு மூட்ட
அமலரும் வஞ்ச நெஞ்சன்
அறைக்கத வகற்றப் புக்கான்.

3. நள்ளிருளில், கண்வளரும்
தன்னருகே தனிவந்துற்ற
அவன் தறுகண்மை தனக்கஞ்சி
மெய் விதிர்த்து மறுகலானாள்.

4. புரைவீரப் பொய் நண்பன்.
தன்னிருள் நெஞ்ச நிறைகாம அழலுழல்வான்
முறையற்ற துறை சொல்ல,
குறையர் நிறையுடையாள் முனிவுற்றாள்.

இத்தொடர், உரை நடையிற் செல்வதாயினும், கவிதைப் பண்பு
நிறைந்ததாகவே காணப்படுகிறது. வசன கவிதை என்ற பெயரில் இல்லாவிடினும் அதன்
உருவமிருத்தல் கண்டின் புறத்தக்கது. தமிழறிஞர் சோமசுந்தர பாரதியாரின்
கட்டுரையொன்றில் இது மிளிர்கின்றது.

‘சந்தனமும் சண்பகமும்
தேமாவும் தீம்பலாவும்
ஆசினியும் அசோகமும்
கோங்கமும் வேங்கையும் குரவும்விரிந்து
நாகமும் திலகமும்நறவமும் மாந்தியும்
மரவமும் மல்லிகையும் மௌவலோடு மணங்கமழ்ந்து
பாதிரியும் பராரை ஞாழலும்
பைங் கொன்றையொடு பிணியவிழ்ந்து
பொரிப்புன்கும் புன்னாகமும்
முருக்கொடு முகை சிறந்து
வண்டறைந்து தேனார்ந்து
வரிக்குயில்கள் வரிபாடத்
தண்டென்றல் இடைவிராய்த்
தனியவரை முனிவு செய்யும்
பொழிலது நடுவண் மாணிக்கச்
செய்குன்றின் மேல்
விசும்பு துடைத்துப் பசும்பொன்பூத்து,
வண்டு துவைப்பத் தண்டேன் துளிப்பதோர்
வெறியுறு நறுமலர் வேங்கை கண்டாள்.’

களவியலுரையாசிரியர், இதனை வெறுமனே சொல்லடுக்குச் செய்திருக்கிறார் என்று
கொள்வது ஆகாது, பொருள் பொலிவும் ஓசை நயமும் செறிந்த, தமது இனிய
சொற்சாதுரியத்தினாலேயே படிப்பவர் மனதைப் பரவசப்படுத்தி இயற்கையாயமைந்த ஒரு
சோலையின் உருவத்தை அங்கு தீட்டி விடுகிறார் ஆசிரியர். விந்தையிதே!

கட்டுரைத் தன்மை செறிந்ததாயினும் கவிதை வனப்பும் நிறைந்ததாகவே இத்தொடர்
பரிமளிக்கின்றது. ஆதலின் இதுவும் வசன கவிதைக்குப் புறம்பானதன்று.

‘குருவியோப்பியும் கிளிகடிந்தும்
குன்றத்துச் சென்று வைகி
அருவி யாடியும் சுனைகுடைந்தும்
அலர்வுற்று வருவேமுன்
மலை வேங்கை நறுநிழலின்
வள்ளி போல்வீர் மனநடுங்க
முலையிழந்து வந்து நின்றீர்;
யாவிரோ வென முனியாதே
மணமதுரையோ டரசுகேடுகற
வல்வினைவந் துருத்த காலை
கணவனையங் கிழந்து போந்த
கடுவினையேன் யானென்றாள்.’
சிலப்பதிகாரக் ‘குன்றக் குரவை’யில் வரும் ‘உரைப் பாட்டு மடை’ இது.
உரைப்பாட்டை ‘நடுவே மடுத்தல்’ என அடியார்க்கு நல்லார் பொருள் கூறுகிறார்.
அரும்பதவுரையாசிரியரும் அதனை, ‘உரைச் செய்யுளை இடையிலே மடுத்தல்’ என்பர்.
(வேட்டுவ வரி, 7-ம் அடியின் பின்வரும் ‘உரைப் பாட்டை’ப் பார்க்க)

இன்னும் இவ்வாறே ‘ஆய்ச்சியர் குரவை, வாழ்த்துக் காதை’ முதலியவற்றிலும்
இவ்வுரைப் பாட்டு இடம் பெறுகின்றது. இவ்விதம் வரும் உரைப்பாட்டு எல்லாம் வசன
கவிதை உணர்ச்சியையே உண்டாக்குவன. உரை-கட்டுரை என்பன வசனத்தையும்,
பாட்டு-செய்யுள் என்பன கவிதையையும் குறிப்பிடுவதால், உரைப்பாட்டு-கட்டுரை
செய்யுளென்று சிலப்பதிகாரத்தில் கூறப்படுவனவெல்லாம் வசன கவிதையே என்று தெளிய
இடமுண்டு.

சிலப்பதிகாரப் பதிகத்தில் ‘உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள்’ என வரும்
பகுதிக்கு ‘உரையிடை இட்டனவும் பாட்டுடையனவுமாகிய செய்யுளை’ என்று
கருத்துரைக்கும் அடியார்க்கு நல்லார், பின்னரும் ‘உரைபெறு கட்டுரை’ இவை முற்கூறிய
கட்டுரை-இவை முற்கூறிய ‘கட்டுரைச் செய்யுள்’ எனக் குறித்திருப்பதும் இங்கு நோக்கத்தக்கது.’

1-10-43-ல் வெளியான கலாமோகினி இதழில் ‘வசன கவிதை’ பற்றி கலைவாணன்
எழுதிய கட்டுரையின் எதிரொலி இது. ‘வசன கவிதை தமிழுக்குப் புதிது’ எனும்
கொள்கையை மறுத்து, அது முன்னரும்- வெவ்வேறு பெயர் வடிவில்-இலை மறை காய்
போல-வழங்கியதெனக் காட்டுவதே எமது நோக்கம்.”
(கலாமோகினி-33)
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் - வல்லிக்கண்ணன் Empty Re: புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் - வல்லிக்கண்ணன்

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Jan 02, 2014 9:49 pm

கு.ப.ரா. கவிதைகள்
புதுக்கவிதை வரலாற்றில் கு.ப.ராஜகோபாலனின் கவிதைகளுக்குத்
தனியான-முக்கியமான-ஒரு இடம் உண்டு. அவர் வசன கவிதைகள் தான் எழுதினார்.
அதிகமாகவும் எழுதி விடவில்லை. ‘மணிக்கொடி’ நாட்களில் 24 கவிதைகள், ‘கலா
மோகினி’யில் 5 கவிதைகள். இவ்வளவே-நான் அறிந்தவரை-அச்சில் வந்தவை.

‘நமக்குத் தொழில் கவிதை, நாட்டிற்கு உழைத்தல்; இமைப்பொழுதும் சோராதிருத்தல்’
என்று கொள்கை அறிவிப்பு செய்து கொண்டு, மறுமலர்ச்சி இலக்கிய மாதம் இருமுறையாகப்
புது வடிவம் பெற்ற ‘கிராம ஊழியன்’ பத்திரிகையில், 1943 ஆகஸ்ட் 15 முதல் டிசம்பர் 1
முடிய, கௌரவ ஆசிரியர் என்றும், டிசம்பர் 15 முதல் 1944 ஏப்ரல் இறுதிவரை ஆசிரியர்
ஆகவும், கு.ப.ரா பணிபுரிந்திருக்கிறார். கவிஞர் திருலோக சீதாராம் அதன் ஆசிரியராகவும்,
நிர்வாக ஆசிரியராகவும் செயலாற்றினார். இந்த ஒன்பது மாதங்களில் கு.ப.ரா ‘கிராம
ஊழிய’னில் கதை, கட்டுரை, வரலாறு என்று பல படைப்புகள் எழுதியிருப்பினும், ஒரு
கவிதைகூட எழுதவில்லை. இது குறிப்பிடப்பட வேண்டிய ஒரு (அதிசயச்) செய்தியாகவே
எனக்குப் படுகிறது.
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் - வல்லிக்கண்ணன் Empty Re: புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் - வல்லிக்கண்ணன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum