தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


அரசு காட்டும் போலி கணக்கு

View previous topic View next topic Go down

அரசு காட்டும் போலி கணக்கு Empty அரசு காட்டும் போலி கணக்கு

Post by மரு.நிசாந்தன் Wed Mar 09, 2011 5:20 pm

பெட்ரோல் விலையை நிர்ணயிக்கும் பொறுப்பிலிருந்து அரசு நழுவி 6 மாதங்கள் ஆகிவிட்டன. இந்த 6 மாதங்களில் அவ்வப்போது கண்மூடித் தனமாக பெட்ரோல் விலை பலமுறை உயர்த்தப்பட்டிருக்கிறது. எத்தனை முறை விலை உயர்ந்திருக்கிறது என்பதில்கூட நம்மால் சரியான எண்ணிக்கையைக் கூற முடியவில்லை. சில ஊடகங்கள் 6 முறை என்று கூறுகின்றன. சிலர் 5 முறை என்கிறார்கள். அந்த அளவுக்கு நினைத்த நேரத்தில் எல்லாம் பெட்ரோல் விலை உயர்ந்திருக்கிறது.

இந்த உயர்வைப் பற்றி பெட்ரோலிய நிறுவனங்களைக் கேட்டால், சர்வதேச கச்சா எண்ணெய் விலைக்கேற்ப பெட்ரோல் விலை மாற்றியமைக்கப்பட்டிருக்கிறது என்கிறார்கள். சரி… இந்த மாற்றங்களில் ஏதாவது ஒன்றாவது விலையைக் குறைப்பதுபோல அமைந்திருக்கிறதா என்றால் இல்லை. எல்லா விலை மாற்றங்களுமே விலையை உயர்த்துவதாகத்தான் இருந்திருக்கின்றன. இந்தக் கொள்கை தொடருமானால், இன்னும் எத்தனையோ விலை உயர்வுகளை நாம் சந்தித்துத்தான் ஆக வேண்டும். இத்தனை விலை உயர்வுகளுக்குப் பிறகும் பெட்ரோலிய எண்ணெய் நிறுவனங்கள் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு ரூ.1.22 வரை நட்டமடைகின்றனவாம். எப்படியிருக்கிறது கதை?

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை உயர்ந்து கொண்டேப்போகிறது என்பது உண்மைதான். இப்போது இந்தியா ஒரு பீப்பாய்க்கு 90 டாலர்கள் வரை விலை கொடுத்து வாங்க வேண்டியிருக்கிறது. நடப்பு நிதியாண்டில் சராசரியாக கச்சா எண்ணெய்யின் விலை 79.35 டாலர்களால் இருந்து வந்திருக்கிறது. இது கடந்த நிதியாண்டைக் காட்டிலும் 13.74 சதவீதம் அதிகமாகும். நடப்பு ஆண்டில் இந்த விலை 100 டாலர்களாகவும் அடுத்த ஆண்டில் 110 டாலர்களாகவும் அதிகரிக்கும் என கோல்ட்மேன் சாக்சு கணித்திருக்கிறது. ஆக, பெட்ரோல் விலை மேலும் மேலும் உயர்ந்து கொண்டேதான் போகப்போகிறது.

டீசல் விலையும் இந்த மாதிரிதான். பெட்ரோல் விலையை நிர்ணயிக்கும் பொறுப்பை ஒப்படைத்தபோதே, டீசல் விலை நிர்ணயம் செய்யும் பொறுப்பும் எண்ணெய் நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்பட்டது. எனினும், இப்போதைக்கு டீசல் விலையை உயர்த்துவதற்கு மட்டும் அரசின் அனுமதியைப் பெற்றாக வேண்டும் என்கிற விதிமுறை இருக்கிறது. அதனால், அரசியல் ஆபத்து கருதி டீசல் விலை உயர்த்தப்படாமல் இருக்கிறது.

ஆனாலும், சில தனியார் எண்ணெய் நிறுவனங்கள் இப்போதே டீசல் விலையைத் தங்கள் இட்டப்படி உயர்த்திக் கொண்டுவிட்டன. பொதுத்துறை நிறுவனங்கள் டீசல் விலையை உயர்த்துவதற்கு அரசுக்குத் தொடர்ந்து நெருக்கடி கொடுத்து வருகின்றன. ஒரு நல்ல நாளில் டீசல் விலையை நிர்ணயிக்கும் பொறுப்பிலிருந்து அரசு முழுமையாக விலகிக் கொள்ளப்போகிறது. அதன் பிறகு எண்ணெய் நிறுவனங்கள் பாடு கொண்டாட்டம்தான்.

எனினும், பணவீக்கம் மிக அதிகமக இருக்கும் இந்தச் சூழ்நிலையில், டீசல் விலையை உயர்த்துவதற்கு அரசால் அனுமதிக்க முடியாது. டீசலையோ, சமையல் எரிவாயு போன்ற வேறு பெட்ரோலிய பொருட்களையோ விலை உயர்த்தினால், எதிர்க்கட்சிகள் வீதியில் இறங்கி போராடும். தேர்தல் மேகங்கள் சூழ்ந்திருக்கும் நிலையில், இது ஆளும் தரப்புக்கு ஆதாயமல்ல.

அதற்காக, டீசல் விலையைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும் என்று அரசு விரும்புகிறது என்று நினைத்துக்கொள்ளக் கூடாது. விலையை உயர்த்த நல்ல சந்தர்ப்பத்துக்காக அரசு காத்திருக்கிறது. அவ்வளவுதான். அப்படியொரு வாய்ப்பு கிடைத்தால், டீசல் விலையை உயர்த்த அனுமதி அளிப்பதுடன், மண்ணெண்ணெய், சமையல் எரிவாயு போன்றவற்றுக்கான மானியத்தையும் குறைத்துக் கொள்ளும். பெட்ரோலியப் பொருட்களின் விலைகளை உயர்த்தி, தனியார் முதலீட்டை ஊக்குவிப்பதுடன், அறுவடை செய்யும் பணத்தைக் கொண்டு பட்ஜெட் பற்றாக்குறையைச் சரி செய்வதுதான் அரசின் திட்டம். இந்தத் திட்டத்தின் ஒரு பகுதிதான் எண்ணெய் நிறுவனங்கள் அடையும் நட்டத்தை பூதக்கண்ணாடி கொண்டு பெரிதாக்கிக் காட்டுவது.

சர்வதேசக் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில்தான் எண்ணெய் நிறுவனங்கள் அடையும் நட்டம் கணக்கிடப்படுகிறது. அரசும், பொருளாதார நிபுணர்களும் இதைத்தான் கூறுகிறார்கள். ஆனால், அரசு தரும் புள்ளிவிவரங்களைக் கூர்ந்து கவனித்தாலே, இந்த விலை உயர்வுகளை நியாயப்படுத்துவதற்காக அரசு கூறும் காரணங்கள் எவ்வளவு போலியானவை என்பது தெரியும்.

கடந்த நிதியாண்டில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு 69.76 டாலர்களாக இருந்தது. ஒரு பீப்பாய் என்பது கிட்டதட்ட 160 லிட்டர்களுக்குச் சமம். அந்த வகையில் ஒரு லிட்டர் கச்ச எண்ணெய் விலை 0.43 டாலர்கள். அதாவது 19.62 ரூபாய். பரீக் கமிட்டியின் அறிக்கைப்படி எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களின் 90 சதவீதச் செலவு கச்சா எண்ணெய்க்கானதுதான். இதைக் கணக்கில் கொண்டால் சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து வெளிவரும் கச்ச எண்ணெயின் விலை லிட்டருக்கு ரூ.21.58 ஆக இருக்கும். இது வரிவிதிப்புக்கு முந்தைய நிலை.

கச்சா எண்ணெய் விலை மட்டுமல்ல, இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வதும், தாழ்வதும்கூட எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு இலாபத்தைப் பாதிக்கும். அதாவது, நாணயச் சந்தையில் இந்திய ரூபாயின் மதிப்பு உயர்ந்தால், கச்ச எண்ணெயின் விலை குறையாவிட்டாலும்கூட இறக்குமதியில் இலாபம் கிடைக்கும்.

இதுதவிர, உள்நாட்டிலேயே 20 முதல் 30 சதவீதம் வரை குறைந்த விலையில் கச்சா எண்ணெய் கிடைக்கிறது. இவற்றைச் சந்தைப்படுத்துவதன் மூலம் எண்ணெய் நிறுவனங்களுக்கு பல மடங்கு இலாபம் கிடைக்கும். பெட்ரோல், டீசல் விலைகளைக் கணக்கிடும்போது இவற்றையெல்லாம் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

அதேபோல், இந்தியாவின் எண்ணெய் சுத்திகரிப்புத் திறன், உள்நாட்டு தேவையை விட மிக அதிகம். பெட்ரோலிய அமைச்சக புள்ளிவிவரங்களின்படி, கடந்த நிதியாண்டில் 50.97 மில்லியன் மெட்ரிக் டன்(எம்.எம்.டி.) பெட்ரோலியப் பொருள்கள் ஏற்றுமதி செய்யப்பட்டிருக்கின்றன. அதே காலகட்டத்தில் 23.49எம்.எம்.டி. அளவுக்குத்தான் இறக்குமதி நடந்திருக்கிறது. உள்நாட்டு நுகர்வு 138.196 எம்.எம்.டி. நாட்டின் இப்போதைய சுத்திகரிப்புத் திறன் 182.09 எம்.எம்.டி. வரும் நிதியாண்டில் இது 255.83 எம்.எம்.டி.யாக உயரும் என திட்டக் குழு மதிப்பிட்டிருக்கிறது.

இப்படி மிக அபரிமிதமாக வளர்ச்சியடைந்துவரும் ஒரு துறைக்கு, சலுகைகளையும், மானியங்களையும் கொடுத்து நட்டம் அடைந்துவிட்டதாக அரசு ஏன் புலம்ப வேண்டும்? இந்தப் புலம்பல்கள் உண்மையில்லை. அரசு நட்டமடையவுமில்லை. ஏனென்றால், பெட்ரோலியத் துறை மூலம் கடந்த நிதியாண்டில் மட்டும் அரசுக்கு ரூ.1,83,860 கோடி வருமானம் கிடைத்திருக்கிறது. இதில் மத்திய அரசுக்கு ரூ.1,11,779 கோடியும் மாநில அரசுகளுக்கு ரூ.72,081 கோடியும் பங்கு.

கச்சா எண்ணெய் மீதான சுங்க மற்றும் கலால் வரிகள், ராயல்டி, நிறுவன வரி, பங்கு ஈவுத் தொகை மீதான வரி, சேவை வரி ஆகியவை உள்ளிட்ட பல்வேறு வகையில் மத்திய அரசுக்கும் விற்பனை வரி, மதிப்பு கூட்டு வரி உள்ளிட்டவை மூலம் மாநில அரசுகளும் இந்த வருவாய் போய்ச் சேருகிறது. பெட்ரோல் விலையில் 50 சதவீதத்துக்கும் அதிகமாக வரியாகவே வசூலிக்கப்படுகிறது. அதனால் பெட்ரோல் விலையை உயர்த்துவதால், அரசின் கரூவூலத்தில் பணம் கொட்டப் போகிறது என்பது தெளிவு.

பெட்ரோல் விலை உயர்த்தப்படும் போதெல்லாம் மானியங்களைப் பற்றிக் கவலை தெரிவிப்பது அரசின் வழக்கம். ஆனால், கடந்த 4 ஆண்டுகளில் பெட்ரோலியத் துறைக்காக அரசு வழங்கிய மொத்த மானியமே ரூ.23,325 கோடிதான். அரசுத் தரப்பில் வெளியிடப்பட்டிருக்கும் புள்ளி விவரங்களிலேயே இந்த விவரம் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த காலகட்டத்தில் பெட்ரோலியத் துறை மூலம் மத்திய அரசுக்குக் கிடைத்திருக்கும் வருவாய் எவ்வளவு தெரியுமா ரூ.4,10,842 கோடி, மாநில அரசுகளின் வருவாய் ரூ.2,63,766 கோடி. இந்த வருமானத்தில் அரசு தரும் மானியம் வெறும் 3.45 சதவீதம்தான். அதாவது கிடைக்கும் பெரிய வருவாயில் ஒரு துரும்புதான் மானியமாகத் தரப்படுகிறது. உண்மையைக் கூறினால் பெட்ரோலியத் துறை மூலம் அரசு வருமானம் பார்க்கிறது என்றுதான் சொல்ல வேண்டுமே தவிர, மானியம் அளிக்கிறது என்று கூற முடியாது. உண்மை இப்படியிருக்க அரசு எதற்காக பொய்யான காரணங்களைக் கூறிப் புலம்ப வேண்டும்.

அரசு இப்படியென்றால், பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் கூறும் காரணங்கள் இன்னும் வேடிக்கையானவை. பெட்ரோலியப் பொருள்களை விற்பதால் தங்களுக்கு எப்போதுமே நட்டம்தான் என்று அவை வருத்தப்ப்டுகின்றன. டீசல் விலையை உயர்த்துவதற்கு அரசு அனுமதிக்க மறுக்கிறது என்று புகார் கூறிக்கொண்டிருக்கின்றன. ஒரு லிட்டர் டீசல் விற்பதன் மூலம் தங்களுக்கு ரூ.7 நட்டம் ஏற்படுவதாகப் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் கூறுகின்றன. இதே போல ஒரு சிலிண்டருக்கு ரூ.366ம் ஒரு லிட்டர் மண்ணெண்ணெய்க்கு ரூ.19.60-ம் நட்டம் ஏற்படுகிறது என்பது அவர்களுடைய வாதம். பெட்ரோல் விலையை இவ்வளவு உயர்த்திய பிறகும் லிட்டருக்கு ரூ.2 நட்டம் ஏற்படுகிறதாம். அந்த வகையில் நடப்பு நிதியாண்டில் மட்டும் ரூ.73ஆயிரம் கோடி ரூபாய் விலை வித்தியாச இழப்பு(Under Recovery) இருப்பதாக மதிப்பிடப்பட்டிருக்கிறது.

இந்த விலை வித்தியாச இழப்பு என்பது நட்டமல்ல. அரசு நிர்ணயிக்கும் விலைக்கும் எண்ணெய் நிறுவனங்கள் இறக்குமதி செய்யும் எண்ணெய் விலைக்கும் இடையே உள்ள வித்தியாசத்தைத்தான் இது குறிக்கும்.

எல்லாவற்றிலும் நட்டம் என்று புலம்பிக் கொண்டிருக்கும் இந்த நிறுவனங்களின் ஆண்டுகணக்கு அறிக்கையைப் பார்த்தால் ஆச்சரியமாக இருக்கும். ஏனென்றால், அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் இந்த எண்ணெய் நிறுவனங்கள் கடந்த 4 நிதியாண்டுகளில் ரூ.1,26,288 கோடி இலாபம் அடைந்திருப்பதாக அவற்றின் ஆண்டுக்கணக்கு அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

இது ஒருபக்கம் என்றால், பொருளாதார நிபுணர்கள் என்று கூறிக்கொள்ளும் சிலர், ஏற்கெனவே நொந்து போயிருக்கும் மக்களை இன்னும் நசுக்குவதற்கான யோசனைகளை முன்வைக்கிறார்கள். பெட்ரோலியப் பொருட்களுக்கு அரசு வழங்கும் எல்லா வகையான மானியங்களையும் விலக்கிக் கொண்டு, சந்தை நிலவரத்துக்கு ஏற்ப விலையை நிர்ணயித்துக் கொள்ள அனுமதிக்க வேண்டுமாம். அதன் மூலம் தனியார் முதலீட்டைக் கவர்ந்து பொருளாதாரத்தை இன்னும் மேம்படுத்தலாம் என்கிறார்கள்.

ஆனால், அது கூடவே கூடாது. பெட்ரோலியத் துறை மிகவும் முக்கியமான, கவனமாகக் கையாள வேண்டிய துறை. நாடு சுதந்திரம் அடைந்ததும் நமது தொழிற்கொள்கை வகுக்கப்படும் போதே இதன் முக்கியத்துவம் உணரப்பட்டது. இன்றுவரைக்கும் அந்த முக்கியத்துவம் குறையவேயில்லை. பொருளாதார இலாபத்துக்காக பெட்ரோலியப் பொருட்களின் விலையைக் கடுமையாக உயர்த்துவது நமது உண்மையான தொழிற்கொள்கைக்கு எதிரானதாகும்.

அதிக அளவில் மானியம் வழங்கப்படுகிறது என அரசும், இழப்பு ஏற்படுகிறது என பெட்ரோலிய நிறுவனங்களும் கூறிக் கொண்டிருந்தாலும், அவற்றுக்கு அதிக இலாபம் கிடைத்துக் கொண்டிருக்கிறது என்பதுதான் உண்மை. அதனால், பெட்ரோலியப் பொருள்களின் விலையை உயர்த்தி ஏழை மக்களை நெருக்கடிக்கு உள்ளாக்குவது எந்த வகையிலும் நியாயமில்லை.

அச்சப்படுவதுபோல 110 டாலர் அளவுக்குக் கச்சா எண்ணெய் விலை உயர்ந்தாலும், அதை எளிதாகச் சமாளிக்க முடியும். 2008-ம் ஆண்டில் 148 டாலருக்கு கச்சா எண்ணெய் விற்றபோதேகூட பெட்ரோல் டீசல் விலைகளை உயர்த்தாமலேயே அரசு சமாளித்தது. அதனால், இப்போது விலைகளை உயர்த்துவது தவிர்க்க முடியாததல்ல.

பெட்ரோல் மூலம் அரசும் எண்ணெய் நிறுவனங்களும் எந்த அளவுக்கு ஆதாயம் அடைகின்றனவோ, அந்த அளவுக்கு மக்கள் நட்டமடைகிறார்கள். துன்பம் அடைகிறார்கள் என்பதுதான் பொருள். மக்கள் நலன் மீது அரசுக்கு உண்மையிலேயே அக்கறை இருக்குமானால், மக்கள் மீது சுமையை ஏற்றாதபடி இப்போதைய பெட்ரோலியக் கொள்கையை மறுபரிசீலனை செய்ய வேண்டும். சமூக நீதியைக் காப்பதாகவும், அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை இலக்காகக் கொண்டிருப்பதாகவும் கூறிக்கொள்ளும் நமது அரசுக்கு புரியாததல்ல.
avatar
மரு.நிசாந்தன்
புதியவர்
புதியவர்

பதிவுகள் : 1

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum