Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
பெண்களை அதிகளவில் தாக்கும் எலும்பு புரை நோய் பற்றிய சில தகவல்கள்!
தகவல்.நெட் :: மகளிர் களம் :: மகளிர் கட்டுரைகள் :: பொது
Page 1 of 1 • Share
பெண்களை அதிகளவில் தாக்கும் எலும்பு புரை நோய் பற்றிய சில தகவல்கள்!
[You must be registered and logged in to see this image.]
பரவலாக நாற்பது வயதிற்கு மேல் முதுகு வலி, கழுத்து வலி ஏற்படுதல் சாதாரணம். இதற்கு காரணம் எலும்பு தேய்மானம் என் சொல்வார்கள். நாம் அனைவரும் அறிந்தது போலே எலும்புக்கு வலு சேர்ப்பது கால்சியம் என்னும் தாதுச்சத்து தான். உடலில் கால்சியம் அளவு குறையும் போது, எலும்புகள் வலுவிழந்து தேய்மானம் ஏற்படும். கால்சியம் எலும்புகளை பலப்படுத்தும் என்று பெரும்பாலான மக்கள் அறிவர். ஆஸ்டியோபோரோசிஸ் என்பது எலும்புப்புரை என்னும் நோயாகும். இந்த நோயானது எலும்பை உருக்கி எலும்பு முறிவுக்கு இட்டு செல்வதோடு, கழுத்து மற்றும் முதுகு வலியை ஏற்படுத்தி காலப்போக்கில் உயரம் 6 அங்குலம் வரையில் குறைய வழி செய்துவிடும்.
இந்த நோயில் எளிதில் ஏற்படும் எலும்பு முறிவின் ஆபத்து இருப்பதனால், இது குறிப்பாக ஆயுள் எதிர்பார்ப்பு மற்றும் வாழ்க்கை முறையை பாதிக்கலாம். ஆயினும் இத்தகைய நோயை தடுக்க டஜன் கணக்கில் வழிகள் உள்ளன. ஆண்கள் மற்றும் பெண்கள் இருபாலருக்கும் ஆஸ்டியோ போரோசிஸ் வரக்கூடும்.
ஆயினும் இது பெண்களுக்கு தான் அதிக அளவில் வருகிறது. குறிப்பாக இறுதி மாதவிடாய்/மெனோபாஸ் நிலையை அடைந்த பெண்களிடையே அதிகளவில் காணப்படுகிறது. அமெரிக்காவில் ஐம்பது வயதிற்கு மேற்பட்ட பெண்களில் ஐந்தில் ஒரு பெண்ணுக்கு இந்நோய் தாக்கம் இருக்கிறது.
எனவே இதற்கான தடுப்பு நடவடிக்கைகளை எடுப்பது மிக அவசியமான ஒன்று. ஏனெனில் இந்நோய் இருப்பதாக உணரும் முன்னரே பலருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டு விடும். இப்போது அந்த எலும்புப்புரை/ஆஸ்டியோபோரோசிஸ் பிரச்சினையில் இருந்து விடுபடுவதற்கான சில எளிய வழிகளைக் கொடுத்துள்ளோம். அதைப் படித்து பின்பற்றி, எலும்புப்புரை அல்லது ஆஸ்டியோபோரோசிஸ் நோயிலிருந்து விடுபடுங்கள்.
உடற்பயிற்சி :
ஆஸ்டியோபோரோசிஸ் நோயை தடுக்க உதவும் விஷயங்களில் உடற்பயிற்சி மிகவும் முக்கியமான ஒன்றாகும். இந்நோயால் பாதிக்கப்பட்டால், வாரத்தில் ஐந்து முதல் ஆறு நாட்கள் வரை உடற்பயிற்சி செய்ய வேண்டும். அதிலும் வாரம் இரண்டு மூன்று முறையாவது ஏரோபிக் மற்றும் வலுப்படுத்தும் உடற்பயிற்சிகளை 30 நிமிடங்கள் செய்ய வேண்டும்.
உப்பு உட்கொள்ளுதலை குறைக்க வேண்டும் :
உப்பை அதிகம் உட்கொள்ளும் போது, அது சிறுநீர் மற்றும் வியர்வையின் மூலம் வெளியேற்றும் கால்சியத்தின் அளவை அதிகரிக்கிறது. அதிலும் ஏற்கனவே கால்சியம் குறைபாடு இருந்தால், அது மிகவும் ஆபத்தாய் முடியும் மற்றும் உயர் ரத்த அழுத்தம் உள்ளவருக்கு சிறுநீரில் கால்சியம் அதிகளவில் வெளியேறுவதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
காப்ஃபைன் உட்கொள்ளுதலை குறைக்க வேண்டும் :
உடலில் கால்சியம் உறிஞ்சுதலை, காப்ஃபைன் தலையிட்டு கெடுத்துவிடும். ஆகவே காப்ஃபைன் இருக்கும் சோடா, காபி மற்றும் சாக்லெட் போன்றவற்றை அளவாக உட்கொள்ள வேண்டும்.
புகைப்பிடித்தல் கூடாது :
புகைப்பிடித்தல் எலும்பு முறிவுகள் குணமடைவதை தடை செய்கின்றது மற்றும் உடலில் மீண்டும் புதிய எலும்பு வளர செய்யும் திறனையும் குலைக்கின்றது. ஆகவே புகைப்பிடித்தலை நிறுத்தினால், எலும்புகள் வலிமையடைவதோடு, முறிவிலிருந்தும் விரைவில் குணமடையலாம்.
கால்சியம் அதிகம் உட்கொள்ளுதல் :
தேசிய சுகாதார நிறுவனங்கள் பரிந்துரையின்படி, பெரியவர்களுக்கு சராசரியாக ஒரு நாளைக்கு 1000 மில்லிகிராம் வரை உடலில் சேர வேண்டும். இந்த பரிந்துரை 50 வயதுக்குட்பட்ட பெண்களுக்கும், 70 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கும், 1200 மில்லி கிராம் இருக்க வேண்டும் என்றும் சொல்கின்றது.
வைட்டமின் டி அதிகப்படுத்துதல் :
வைட்டமின் 'டி' உடல் கால்சியத்தை உறிஞ்சுவதற்கு பெரிதும் உதவியாக உள்ளது. குறிப்பாக இத்தகைய வைட்டமின் 'டி' சத்தை சூரிய வெளிச்சமானது அதிகம் உற்பத்தி செய்கிறது. மேலும் பால், ஆரஞ்சு மற்றும் காலை உணவு தானியங்களில் வைட்டமின் 'டி' சத்தானது செறிந்துள்ளது.
சோடா உட்கொள்ளுதலை கவனித்தல் :
2006 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் சோடா, கோலா ஆகியவை எலும்புகளை உருக்குவது தெரிய வந்துள்ளது. இது முழுமையாக நிரூபிக்கப்படவில்லை என்றாலும், சோடா எலும்பை வலுவிழக்க செய்கிறது மற்றும் சோடாவை அதிகம் அருந்துபவர்கள் கால்சியம் நிறைந்துள்ள பாலை அவ்வளவாக உட்கொள்ளமாட்டார்கள் என்றும் நிபுணர்கள் கருதுகின்றனர்.
உட்கொள்ளும் மருந்துகளில் கவனம் :
சில மருந்துகள் ஆஸ்டியோபோரோசிஸ் வருவதற்கான வாய்ப்புகளை அதிகபடுத்துகின்றன. அதில் அழற்சி எதிர்ப்பு கார்ட்டிகோஸ் டீராய்டுகள் எனப்படும் ப்ரிட்னிசோன் முக்கியமான காரணி ஆகும்.
மது உட்கொள்ளுதலை கட்டுப்படுத்தல் :
ஒரு நாளைக்கு என்று அளவு வைத்து மது அருந்துதல் உண்மையில் எலும்பு முறிவுகளை தடுக்கும். ஆனால் அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்னும் வகையில், அளவுக்கு மீறி மது அருந்தினால் கால்சியம் உறிஞ்சுதலை குறைத்து, உடலில் கால்சியம் அளவுகளை சீர்குலைத்து, ஈஸ்ட்ரோஜன் போன்ற எலும்பை வலுப்படுத்தும் ஹார்மோன்களை குறைக்கிறது.
Re: பெண்களை அதிகளவில் தாக்கும் எலும்பு புரை நோய் பற்றிய சில தகவல்கள்!
பயனுள்ள பகிர்வு நன்றி
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Similar topics
» பெண்களை தாக்கும் எலும்பு பலவீன நோயும்… தடுக்கும் வழிமுறைகளும்…
» எலும்பு பற்றிய தகவல்கள்....
» பெண்களை தாக்கும் கர்ப்பப்பை இறக்கம்
» நம் உடல் எலும்புகளில் ஏற்படும் ‘ஒஸ்டியோஆர்த்திரைடிஸ்’நோய் பற்றிய தகவல்கள் :-
» பெண்களை தாக்கும் முதுகு வலியை தடுக்க
» எலும்பு பற்றிய தகவல்கள்....
» பெண்களை தாக்கும் கர்ப்பப்பை இறக்கம்
» நம் உடல் எலும்புகளில் ஏற்படும் ‘ஒஸ்டியோஆர்த்திரைடிஸ்’நோய் பற்றிய தகவல்கள் :-
» பெண்களை தாக்கும் முதுகு வலியை தடுக்க
தகவல்.நெட் :: மகளிர் களம் :: மகளிர் கட்டுரைகள் :: பொது
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|