தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


வாழ்வின் ரகசியங்கள்

View previous topic View next topic Go down

வாழ்வின் ரகசியங்கள் Empty வாழ்வின் ரகசியங்கள்

Post by முழுமுதலோன் Mon Aug 26, 2013 11:44 am

வாழ்வின் ரகசியங்கள்


படைப்பின் மர்மத்தை காண ஆழ்ந்து செல்வதே விஞானம். ஆத்மாவின் மர்மத்தைக் காண ஆழ்ந்து செல்வதே ஆன்மிகம். தொழில் நுட்பத்தின் நோக்கம் மனித இனத்திற்கு ஆறுதல் அளிப்பதே. ஆன்மீக மற்றும் மனித மேம்பாடுகள் நிராகரிக்கப்படும் பொழுது ஆறுதலுக்கு பதிலாக, தொழில்நுட்பம்  பயத்தையும் அழிவையும் கொண்டு வரும்.


மனித மேம்பாடு இல்லாத தொழில் நுட்பம், இயற்கையை இறந்த பொருளாகத்தான் பார்க்கும். விஞானம் இயற்கையுள் ஆழமான அறிவையும், ஆன்மிகம் இயற்கையை உயிரோடு இருக்கவும் செய்கிறது. உதாரணமாக, குழந்தைகளின் கண்களுக்கு மிருகங்கள், மரங்கள், சூரியன், சந்திரன் போன்ற எல்லாமே உயிரோடு இருப்பவை தான். உலகில் எதுவும இறந்தவைகள் அல்ல. அவைகளுக்கு உணர்வுகள், உணர்சிகள் உண்டு. ஆனால் மன அழுத்தமுள்ள, அறியாமையுள்ள மனிதனின் கண்களுக்கு மனிதர்களே எந்திரம் அல்லது பொருட்கள் போல தான்.


ஆன்மிகம் இல்லாத தொழில் நுட்பம் அழிவு ஏற்படுத்த கூடியது. ஆன்மிகம் தன்னிலை அறிதலின் நுட்பமே. இந்த உலகம் முழுவதும் தன்னிலை அறிதலின் நாடகமும் காட்சியுமே. யாருடைய கண்கள் இது வரை திறக்கவில்லையோ அவர்கள் இந்த படைப்பின் மகத்துவத்தைக்கண்டு ஆச்சர்ய படுவதில்லை. சொல்லுங்கள், இந்த படைப்பில் எது மர்மம் இல்லை? பிறப்பு ஒரு மர்மம், இறப்பு ஒரு மர்மம்,வாழ்கை என்பதே ஒரு பெரிய மர்மம்.


சமாதி என்பது வாழ்வின் மர்மத்திலும், படைப்பு என்கிற மர்மத்திலும் முழுவதுமாக ஆழ்ந்து செல்வதுதான். உன்னுடைய அறிதலிலோ அல்லது நம்பிக்கையிலோ அது இல்லை.


இந்த படைப்பு என்பது புரிந்த கொள்ள இயலாத ரகசியம். புத்திசாலியான ஒருவர் ஒரு ரகசியத்தை மறைக்க முயற்சிப்பதில்லை, அதே சமயத்தில் ஒரு ரகசியத்தை வெளிப்படுத்தவும் முயற்சிப்பதில்லை. உதாரணமாக, 5 வயது குழந்தையிடம் நீ மாதவிடாயை பற்றியும் இறப்பை பற்றியும் பேச மாட்டாய். அனால் குழந்தை வளர்ந்தவுடன் இந்த விஷயங்கள் அவர்களிடமிருந்து மறைக்கப்படுவதில்லை. நாளடைவில் இவைகள் தானாகவே அறியப்படுகின்றன.


5 ரகசியங்கள் இந்தப்பட்டைப்பில் தேவ தூதர்களால் புனிதமாக பாதுகாக்கப்பட்டு வருகின்றன. அவைகள்:


பிறப்பின்(ஜன்ம) இரகசியம்: பிறப்பு ஒரு இரகசியம் . ஆத்மா எப்படி உடலை எடுக்கிறது, பிறப்பிற்கான இடம் மற்றும் நேரத்தை தேர்ந்தேடுப்பதர்க்கான மூலப்ப்ரமானம், ஆண் அல்லது பெண், பெற்றோர்கள் எல்லாமே ஒரு இரகசியம்.


இறப்பின் (மரண) இரகசியம்: மரணம் மிகவும் பாதுகாக்கப்பட்ட இரகசியமாகும். மரணம் ஒரு மர்மம். ஒரு உடலிலிருந்து ஆவியானது பிரியும் முறை, அதிலிருந்து அதன் பயணம் என்பது ஒரு இரகசியம்.


ராஜ இரகசியம்: நிர்வாக இரகசியம்: ஆட்சி செலுத்துதல், ஒழுங்கை பராமரித்தல் இவையும் ஒரு இரகசியம்.


இயற்கையின் (பிரக்ருதி) இரகசியம்: இயற்கை ஓர் இரகசியம். இயற்கையை பற்றி அறிய அறிய அதன் மர்மம் அதிகரிக்கறது. ஒரு விஞானி அதிகமாக அறியும் பொழுது இன்னும் அதிகமாக அறிய வேண்டும் என்பதை உணர்கிறார். விஞானம் படைப்பின் மர்மத்தை தீர்பதற்கு பதில் இன்னும் அதிக படுத்தியிருக்கிறது. அணுவை பற்றிய அறிவு, சூன்யம் (ப்ளாக் ஹோல்), வெற்றிடம் இவைகள் மர்மத்தை அதிகரித்திருக்கின்றன.


மந்திரங்களின் (மந்திர) இரகசியம்: தன்னிலை அறிதலின் உத்வேகமே மந்திரங்கள். மந்திரங்களும் அதன் பலன்களும் ஆற்றலும் முறையும் அதன் வேலை செய்யும் முறையும் எல்லாமே மர்மம் தான்.


மேற்கத்திய நாடுகளில் இரகசியம் என்பது வெக்கக்கேடான நேர்மையற்ற ஒன்றாகும். அனால் கீழை நாடுகளில் இரகசியம் என்பது மதிப்புடன் புனிதமாகக் கருதப்படுகிறது. படைப்பின் மர்மங்கள் அதிகரித்துக்கொன்டே இருக்கும். மர்மத்தில் ஆழ்ந்து செல்வது பக்தி.


படைப்பின் மர்மத்தில் ஆழ்ந்து செல்வதெ விஞ்யானம். ஆத்மாவின் மர்மத்தில் ஆழ்ந்து செல்வதெ ஆன்மீகம். இவை இரண்டும் ஒரு காசின் இரண்டு பக்கங்கல். விஞ்யானமொ, ஆன்மீகமொ உனக்குள் ஆச்சர்யத்தயோ அல்லது பக்தியையொ ஏர்படுத்தவிட்டால் நீ ஆழ்ந்த உறக்கத்தில் இறுக்கிறாய்.


எப்பொழுதெல்லாம் நீ ஒரு சின்னம், இடம், நேரம், ஒரு நபர் அல்லது செயலை புனிதமாக கருதுகிராயொ அப்பொழுதெல்லாம் உன் கவனம் பிரிக்கப்படாததாக முழமையாக இருக்கும். ஒரே மாதிரியாக இறுக்கும் பொழுது, நீ உணர முடியாத நிலைக்கு, செயலின்மைக்கு நழுவி விடுகிராய். திரும்பத்திரும்ப செய்யப்படும் ஒரு செயல் ஏன் புனிதத்தை இழக்கிறது? எப்பொழுது உன் நினைவானது உன் உணர்வை அடக்குகிறதொ அப்பொழுது உன் நுண்ணிய உணர்வுகளை இழக்கிராய். உதாரணமாக, இந்தியாவில் உள்ள தெய்வீக நகரமான பனாரசில் வசிக்கும் மக்கள் அதை ஒரு புனிதமான நகரமாக உணருவதில்லை. நிகழ்காலத்தில் இருப்பதாலும், சாதனாவின் மூலமும் ஆன்மீகப்பயிற்ச்சியாலும் அந்த புனித உணர்வுகளை நம் செயலில் பாதுகாக்கலாம்.


ஒய்விலும் மகிழ்ச்சி உள்ளது. செயலிலயும் மகிழ்ச்சி உள்ளது. செயலால் ஏற்படும் மகிழ்ச்சி அந்த ஒரு கணம் மட்டுமே நிலைக்கும், களைப்பை ஏற்படுத்தும். ஓய்வில் (சமாதியில்) ஏற்படும் மகிழ்ச்சி மிகவும் உயர்வானது, சக்தி அளிக்க கூடியது. ஓய்வில் மகிழ்ச்சியை ஆனுபவித்த ஒருவருக்கு செயலில் ஏற்படும் மகிழ்ச்சி முக்கியம் ஆகாது. ஆனால் ஆழ்ந்த ஓய்வு பெறுவதற்க்கு சுறுசுறுப்பாக இருக்க வேண்டும். இரண்டும் சமமாக இருப்பது அவசியம்.


மனம் இடம், நேரம், உணவு, கர்மாக்கள் சேர்க்கையும், செயலும் இந்த ஐந்தும் மனதை பாதிக்கும் குணங்களாகும். இவற்றைப் பற்றி ஆராய்வோம்.


இடம்: நீ இருக்கும் இடம். நீ இருக்கும் ஒவ்வொரு இடமும் பல விதமான விளைவுகளை உன் மனதில் ஏற்படுத்தும். உன் வீட்டிலேயே ஒவ்வொரு அறையிலும் ஒவ்வொரு விதமாக உணர்வாய். எந்த இடத்தில் பாடுதல், ஜபித்தல், தியானம் செய்தல் இருக்கிறதோ அங்கு மனம் வேறு விதமாக பாதிக்கபடுகிறது. நீ ஒரு குறிப்பிட்ட இதத்தை விரும்பினால் சிறிது நேரம் சென்றதும் அதே இடம் வேறு விதமாக மாற வாய்புள்ளது.


நேரம்: நேரமும் ஒரு காரணம். ஓரு நாளிலோ ஒரு வருடத்திலொ வெவ்வேரு நெரங்கள் வெவ்வேரு விதமாக மனதில் பாதிப்பை ஏற்பதுதும்.


உணவு: நீ உண்ணும் பலதரப்பட்ட உணவுகள் சில நாட்களுக்கு உன்னை பாதிக்கும்.


கடந்தகால எண்ணாங்கள் / கர்மா: இவை மனதில் பல விதமான விளைவுகளை ஏற்பதுத்த்கின்றன. விழிப்புணர்வு, இடை விடாத சுறுசுறுப்பு, ஞானம், தியானம் இவைகள் மனதில் கடனந்த கால என்னங்களை / கர்மாக்களை அழிக்க உதவுகின்றன.


சேர்க்கையும் செயல்களும்: நீ சேர்துள்ள மக்களும் நிகழ்வுகளும் உன் மனதை பாதிக்கும். ஓரு சில மக்களுடன் உன் மனம் ஒரு விதமாகவும் மற்றவருடன் வெறு விதமாகவும் செயல் படும்.


இந்த ஐந்தும் உன் வாழ்க்கை, உன் மனம் இவற்றை பாதித்தாலும் உன் ஆத்மாவாநது இவற்றை விட மிக சக்தி வாய்நத்து என்பதை அறிந்துக்கொள். நீ ஞானத்தில் வளர வளர இவை எல்லாவற்றையும் நீ பாதிப்பாய்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

வாழ்வின் ரகசியங்கள் Empty Re: வாழ்வின் ரகசியங்கள்

Post by முழுமுதலோன் Mon Aug 26, 2013 11:45 am

ஓய்வின்மை


5 விதமான ஓய்வின்மைகலை பற்றியும் அவற்றை தீர்க்கும் விதத்தயும் இப்பொழுது ஆராவ்வோம்.


முதலாவதாக நீ இருக்கும் இடம். சில குறிப்பிட்ட இடங்கள், தெருக்கள் அல்லது வீடுகளிலிருந்து நீ வெளியேறினால் உடனடியாக நீ மேலும் நன்றாக உணர்வாய். ஜபித்தல், பாடுதல் அல்லது களங்கமற்ற குழந்தைகளின் விளயாட்டு, சிறிப்பு, இவைகள் ஓய்வற்ற சூழ்நிலையை மாற்றும். நீ சிறித்து ஜபிக்கும் பொழுது அதன் அதிர்வுகள் அந்த இடத்தின் சூழ்நிலையை மாற்றுகின்றன.


இறண்டாவது வகையான ஓய்வின்மை உடலில் உள்ளது. தவரான உணவை உண்பது, வாயு சம்மந்தமானவற்றை அதிகமாக்கும் உணவு, சரியான நேரத்தில் உண்ணாமை, தேகப்பயிர்ச்சியின்மை, அதிக வேலை செய்தல் இவை யாவும் உடல் ரீதியாக ஓய்வின்மையை ஏர்படுத்துகின்றன. இதை தேகப்பய்ரிச்சி, மிதமான வேலைப்பழக்கங்கள், ஒன்று அல்லது இறண்டு நாட்கள் கறிகாய் அல்லது பழச்சாறு மட்டும் உண்பது போன்றவற்றால் குனப்படுத்த முடியும்.


மூன்றாவது வகையான ஓய்வின்மை மன ஓய்வின்மை – பேராசை, அழுத்தமான எண்ணங்கள், விருப்பு அல்லது வெறுப்புகள் இவற்றால் ஏற்படுகிறது. ஞானம் ஒன்றினால் மட்டும்தான் இதை குணமாக்க முடியும். பரந்த கண்ணோட்டத்துடன் வாழ்கையை பார்த்தல், ஆத்மாவை பற்றி அறிதல், எல்லாமே நிலையற்றது என்பதை உணருதல் இவை இதில் அடங்கும். நீ எல்லாவற்றையும் அடைந்துவிட்டாய். அதனால் என்ன? எல்லாவற்றையும் அடைந்ததும் நீ இறந்து விடுவாய். இறப்பு அல்லது வாழ்வு பற்றிய ஞ்யானம், ஆத்மா மற்றும் கடவுளின்மேல் நம்பிக்கை இவைகள் அனைத்தும் மன ஓய்வின்மையை சாந்த படுத்தும்.


நான்காவது வகை உணர்ச்சி வேகத்தால் எழும் ஓய்வின்மை. எத்தனை ஞானம் இருப்பினும் இதர்க்கு உதவி செய்ய இயலாது. சுதர்ஷன் க்ரியா இதற்க்கு உதவுகிறது. உணர்ச்சி வேகத்தால் எழும் ஓய்வின்மை மறைகிறது. குரு, ஞானி, துரவி இவர்களின் சமீபம் இறுப்பதால் உணர்ச்சி வேகத்தால் எழும் ஓய்வின்மையை அமைதி படுத்த முடியும்.


ஐந்தாவது வகையான ஓய்வின்மை மிக அரிது. அது ஆத்மாவின் ஓய்வின்மை. எப்பொழுது எல்லாமே வெறுமையாகவும்  அர்த்தமற்றதாகவும் உணருகிராயொ அப்பொழுது நீ மிகவும் அதிர்ஷ்ட்டசாலி என்பதை உணர்ந்துக்கொள். ஆதிலிருந்து வெளி வர முயற்சி செய்யாதே. அணைத்துக்கொள். இந்த ஆத்மாவின் ஓய்வின்மை உனக்குள் உறுதியான உண்மையான பிரார்த்தனையை கொண்டு வரும். இது முழுமையையும், சித்தியையும், அற்புதங்களையும் வாழ்வில் கொண்டு வரும். உனக்குள் தெய்வத்திற்க்காக ஏற்படும் அந்த தவிப்பு மிகவும் மகத்தானது. ஸத்சங், ஞானொதயம் பெற்றவரின் முன் இறுத்தல் இவை ஆத்மாவின் ஓய்வின்மையை அமைதி படுத்துகின்றது. ஆகாயத்தில் தெய்வத்தை தேடாதே. கடவுளை இறு கண்களிலும், மலைகளிலும், தணணீரிலும், மரங்களிலும், மிருகங்களிலும் பார். அது எப்படி? உனக்குள்ளேயே கடவுளை கண்டால்தான். கடவுள்தான் கடவுளை வணங்க முடியும்.


உயரிய விழிப்புணர்வு உண்மைக்கு அருகில் உன்னை கொண்டு செல்லும். இதற்க்காக ப்ராணாவை அதிகரிக்க வேண்டும். கீழ்க்கண்டவை மூலம் இதைச்செய்யலாம்.


விரதம் இறுத்தல் மற்றும் புதிய உணவை உண்ணுதல்

ப்ராணாயாமம், சுதர்ஷன் க்ரியா, தியானம்.

மௌனம்.

குளிர்ந்த நீரில் குளித்தல்.

சரியான அளவு தூக்கம்.

உணர்வுகளின் திருப்தி

குருவின் சமீபத்தில் இருத்தல்.

பாடுதல்,ஜபித்தல்

கொடுக்கிறேன் என்று உணராமல் கொடுத்தல், நான் செய்கிறேன் என்று உணராமல் செய்யும்  சேவை.

இவை எல்லாம் கலந்தது யக்ஞம். ப்ரபஞ்சத்தின் மேல் மதிப்பு இருந்தால் நீ ப்ரபஞ்சத்துட்ன் ஐக்கியமாகி இறுக்கிராய். அப்பொழுது நீ எதையும் மறுக்கவோ, துறக்கவோ தேவையில்லை. உன் எல்லா உறவின் மேலும் எப்பொழுது மதிப்பு வருகிரதோ அப்பொழுது உன் ப்ரஞ்யை விரிவாகிறது;  சிறு விஷயங்களும் முக்கியமாகவும் பெரியதாகவும் தெரியும். ஒவ்வொரு சிரிய படைப்பும் உயர்வாகத்தெரிகிறது. ஒவ்வொரு உறவிற்க்கும் காட்டும் மதிப்புதான் அந்த உறவை காப்பாற்றும். ஒவ்வொரு கணத்திற்க்கும் மதிப்பை காட்டும் திறத்தை உண்ணுள் வளர்துக்கொள்.


Posted by Sakthivel Balasubramanian 
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

வாழ்வின் ரகசியங்கள் Empty Re: வாழ்வின் ரகசியங்கள்

Post by Muthumohamed Mon Aug 26, 2013 12:27 pm

ரகசியங்களின் பதிவுக்கு நன்றி அய்யா
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

வாழ்வின் ரகசியங்கள் Empty Re: வாழ்வின் ரகசியங்கள்

Post by ஸ்ரீராம் Mon Aug 26, 2013 6:33 pm

 மரணம் மிகவும் பாதுகாக்கப்பட்ட இரகசியமாகும். மரணம் ஒரு மர்மம். ஒரு உடலிலிருந்து ஆவியானது பிரியும் முறை, அதிலிருந்து அதன் பயணம் என்பது ஒரு இரகசியம்.
அர்த்தமுள்ள கட்டுரை. மிக்க நன்றி அண்ணா
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

வாழ்வின் ரகசியங்கள் Empty Re: வாழ்வின் ரகசியங்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum