தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


மழைக் காலத்துக்கான ஸ்கின் டிப்ஸ்!

View previous topic View next topic Go down

மழைக் காலத்துக்கான ஸ்கின் டிப்ஸ்! Empty மழைக் காலத்துக்கான ஸ்கின் டிப்ஸ்!

Post by ஸ்ரீராம் Fri Aug 30, 2013 11:06 am

மழைக் காலத்துக்கான ஸ்கின் டிப்ஸ்! Rainse10
கொளுத்தும் வெயிலால் மட்டுமல்ல; கொட்டும் மழை பனியாலும் நம் சருமம் பெரும் பாதிப்புக்குள்ளாகும். இந்தக் காலத்தில், பொதுவான சில கவனக்குறைவுகள் உடல்நலக் குறைபாட்டை ஏற்படுத்திவிடும். இதைத் தவிர்ப்பதற்கான வழிகள் குறித்து அழகுக் கலை நிபுணர் ப்ரீத்தி அளிக்கும் ஆலோசனைகள் இங்கே...

போதுமான அளவு தண்ணீர் குடிக்காதது:

இந்தக் காலத்தில், அதிக அளவிலான மக்கள் போதுமான அளவுக்குத் தண்ணீர் அருந்துவது இல்லை. நீர்ப் பற்றாக்குறைவினால், தோல் பொலிவு இழந்து, அரிப்பு, எரிச்சல் போன்றவை ஏற்படுகின்றன. இதைத் தவிர்க்கவும், சருமம் ஆரோக்கியமாக இருக்கவும் ஒரு நாளைக்கு இரண்டரை முதல் மூன்று லிட்டர் தண்ணீர் குடிப்பது அவசியம்.

தீர்வு: கையில் எப்போதும் ஒரு தண்ணீர் பாட்டில் வைத்திருங்கள். அலுவலகத்தில் உங்கள் மேஜையின் மீது தண்ணீர் பாட்டில்வையுங்கள். இது தண்ணீர் குடிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தும். ஒரு நாளைக்கு எட்டு கிளாஸ் அளவுக்குத் தண்ணீர் குடியுங்கள். தண்ணீர் குடிக்க வேண்டும் என்பதற்காக ஒரே நேரத்தில் ஒரு லிட்டர், ஒன்றரை லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டாம். இடைவெளிவிட்டு தண்ணீர் குடிக்கும்போது, சருமம் பொலிவுடன் இருப்பதை உணரலாம்.

சன் ஸ்கிரீனைப் புறக்கணிப்பது

பெரும்பாலானவர்கள் செய்யும் தவறு இது. 'மழைக் காலம் அல்லது குளிர்காலம்தானே, வெயில் அந்த அளவுக்கா அடிக்கிறது என்று எண்ணி, சன் ஸ்கிரீன் போடுவதைப் பலரும் தவிர்த்துவிடுவர். தட்பவெப்பநிலை என்னதான் குளிர்ச்சியாக இருந்தாலும், உங்கள் சருமத்தை சூரியனில் இருந்துவரும் புறஊதாக் கதிர் போன்றவற்றில் இருந்து பாதுகாக்க வேண்டியது அவசியம்.

தீர்வு: சூரியக் கதிர்வீச்சால் ஏற்படக்கூடிய பாதிப்பு என்பது நிரந்தரமானது. இது உங்கள் சருமத்தின் முதுமைத்தன்மையை விரைவுபடுத்தும். எனவே, எப்போதும் வீட்டைவிட்டு வெளியே செல்வதற்கு அரை மணி நேரத்துக்கு முன்பு, உங்கள் சருமத்துக்கு ஏற்ற சன் ஸ்கிரீன் போட்டுக்கொள்ள வேண்டும்.

சத்தான உணவு மற்றும் உடற்பயிற்சியைத் தவிர்ப்பது

மழைக் காலத்தில் உடற்பயிற்சி மற்றும் ஆரோக்கியமான சரிவிகித ஊட்டச்சத்துள்ள உணவை எடுத்துக்கொள்வதை தவிர்ப்பது வழக்கம். சரிவிகித ஊட்டச்சத்து கிடைக்காமை, போதிய உடற்பயிற்சியின்மை என்பது, உங்கள் சருமம் மற்றும் முடியைப் பாதிக்கும்.

தீர்வு: கேரட், பீட்ரூட் போன்ற காய்கறிகளில் அதிக அளவில் வைட்டமின், தாது உப்புக்கள் உள்ளன. அதேபோல இந்தப் பருவத்தில் அதிக அளவில் கிடைக்கும் ஆப்பிள், ஆரஞ்சு பழங்களை தினமும் சாப்பிட வேண்டும். தினசரி உடற்பயிற்சி செய்வது, உங்கள் சருமத்துக்கு போதிய நீர் கிடைப்பதை உறுதிப்படுத்தி எப்போதும் புத்துணர்வோடும் இளமையோடும் இருக்க உதவும்.

நீண்ட நேரம் வெந்நீர் குளியல்

குளிருக்கு இதமாக இருக்கும் என்று கொதிக்கக் கொதிக்க வெந்நீரில் குளிப்பது பலருக்கும் வழக்கம். இது உங்கள் உடலுக்கு வெப்பத்தை அளித்தாலும், சருமத்தில் வறட்சியை ஏற்படுத்திவிடும். சருமம் மென்மையாகவும் பாதுகாப்பாகவும் இருக்க, தோலில் இயற்கையாக சுரக்கும் பாதுகாப்புப் பசையை வெந்நீர் அகற்றிவிடும்.

தீர்வு: இதற்காக குளிர்ந்த நீரில் குளிக்க வேண்டும் என்றில்லை. உங்கள் சருமம் தாங்கிக்கொள்ளக்கூடிய அளவில் குளிர்ந்த நீரில் குளியுங்கள். இது உங்கள் உடலில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும், சருமத்தில் உள்ள துளைகளைத் திறக்கும். இதனால், உங்கள் சருமம் பொலிவுடன் இருக்கும். நச்சுக்கள் வெளியேற்றப்படும். நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும்.

தவறான கிளின்சர் மற்றும் மாய்ச்சரைஸர்

மாய்ச்சரைஸரை எல்லாப் பருவத்திலும் பயன்படுத்தலாம் என்று தவறானக் கருத்து உள்ளது. உங்கள் சருமத்துக்கு ஏற்ற கிளன்சர் மற்றும் மாய்ச்சரைஸரைப் பயன்படுத்தாதது சருமத்தில் பாதிப்பை ஏற்படுத்தும். பலரும் இந்தக் காலத்தில் மாய்ச்சரைஸர் க்ரீமை முழுமையாக சருமத்தில் பூசிக்கொள்வதும் இல்லை. இது உலர்வான சருமத்தை ஏற்படுத்தி சருமத் திசுக்களைப் பாதிக்கிறது.

தீர்வு: மழை மற்றும் குளிர் காலத்துக்கு நம் சருமத்துக்கு ஏற்ற கிளன்சர் மற்றும் மாய்ச்சரைஸரை சருமப் பராமரிப்பு நிபுணரை ஆலோசித்துப் பயன்படுத்துங்கள். கோடைக் காலத்தில் நீங்கள் பயன்படுத்திய கிரீம்களுக்குப் பதிலாக, சருமத்துக்கு நீர்ச்சத்து அளிக்கக்கூடிய அழுக்கு, தூசுகளை அகற்றும் கிரீம்களைப் பயன்படுத்துங்கள். உங்கள் சருமம் எளிதில் உட்கிரகிக்கக்கூடிய, எண்ணெய்த் தன்மைக்கொண்ட கிரீம்கள் சிறந்ததாக இருக்கும்.

நன்றி: பா.பிரவீன்குமார்@ டாக்டர் விகடன்
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

மழைக் காலத்துக்கான ஸ்கின் டிப்ஸ்! Empty Re: மழைக் காலத்துக்கான ஸ்கின் டிப்ஸ்!

Post by முரளிராஜா Fri Aug 30, 2013 12:27 pm

பயனுள்ள பகிர்வு
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

மழைக் காலத்துக்கான ஸ்கின் டிப்ஸ்! Empty Re: மழைக் காலத்துக்கான ஸ்கின் டிப்ஸ்!

Post by ரானுஜா Fri Aug 30, 2013 1:12 pm

பயனுள்ள பகிர்வு நன்றி ஸ்ரீராம்புன்முறுவல்
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

மழைக் காலத்துக்கான ஸ்கின் டிப்ஸ்! Empty Re: மழைக் காலத்துக்கான ஸ்கின் டிப்ஸ்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum