தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


பழக்கங்களை சமாளிப்பது எப்படி?

View previous topic View next topic Go down

பழக்கங்களை சமாளிப்பது எப்படி? Empty பழக்கங்களை சமாளிப்பது எப்படி?

Post by முழுமுதலோன் Sun Sep 01, 2013 12:31 pm

பழக்கங்களை சமாளிப்பது எப்படி?
  
     
தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும் இது முதுமொழி.
எனவே நமது ஆரம்பகால பழக்கங்கள் புதிது புதிதாய் ஆழ்மனதில் தொடர்ந்து பதிந்து கொண்டே வருகிறது.
    
எதுவும் பழக்கமாகுவது கெடுதலா?
   
மனோதத்துவ முறையில் பழக்கம் என்பது மனதில் உருவாகும் ஒரு பதிவு.பெரும்பாலான நமது திறமைகள் பழக்கத்தின் ஆதாரத்திலேயே உருவாகின்றன.
   
அவற்றை இருவகைகளாக பிரித்து கொள்ளலாம் ஒன்று நல்ல பழக்கவழக்கங்கள்,மற்றது தீய பழக்க வழக்கங்கள்.முன்னது வளர பின்னது தேய அவனது வாழ்க்கையில் உயர்வும் நல்ல பல குண நலன்களையும் அடைகிறான்.
   
இரண்டிலும் மனபழக்கங்கள்,உடல் பழக்கங்கள் என இரண்டு வகை உண்டு.
  
நமது வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியிலும் உணவு,உடை, நடை,உறக்கம்,உணர்வுகள்,பொழுதுபோக்கு என்ற பல நூறு செயல்களிலும் நமது மாறாத பழக்க வழக்கங்களை காணலாம்.
   
மேலோட்டமாக மாறாதது போல தோன்றினாலும் சில ஆண்டுகள் பிண்ணோக்கி பார்த்து ஒப்பிட்டால் நாம் நிறையவே மாறியிருப்பது தெரிகிறது.
  
ஆனால் சிலர் பெரிய அளவில் மாறாமலிருப்பது புரிகிறது. நன்மையான பழக்கங்கள் உடையவர் மாறாதிருத்தல் நல்லது.தீய பழக்கங்கள் உள்ளவர் திருந்தாமலிருந்தால் தீயது.

   
இயல்பாகவே நல்ல பழக்கங்களை தொடர்வது கடினமானது அவை நீர் மேல் எழுத்துக்களை போல நிரந்தமற்றவை.தீய பழக்கங்களை விடுவது அதைவிட கடினம்,அவை நம் உடன் பிறந்த உறுப்புகளை போல் ஒட்டி கொள்கின்றன வெட்ட வெட்ட துளிர்க்கும் நகம்,முடி போல குறையாமல் வளர்கின்றன.
   
தெளிந்த அறிவால்,தீவிர முயர்சியால்,உறுதியான தீர்மானங்களால் நல்ல பழக்கங்களை கற்கவும்,தீமை பழக்கங்களை விடவும் ஒவ்வொரு புதிய நாளும் வாக்குறுதி தரப்படும்.
 
   பழக்கத்தினால் என்ன பயன்?
    
நாம் போக்குவரத்துக்கு பயன்படுத்தும் சாலையோடு அதை ஒப்பிடலாம். நமது நரம்பியல் மண்டலத்தின் வரைப்படத்தை பார்த்தால் டெல்லி  மாநகரத்தின் சாலைகளின் வரைபடம் போலத்தான் இருக்கும்.கை தேர்ந்த அனுபவமுள்ள ஓட்டுனர் ஒருவன் அந்த மாநகரத்திலும் சுலபமாக வாகனம் ஒட்ட பழகி விடுவார்.அது போலத்தான் நமது வாழ்வின் பழக்க வழக்கங்க்ளும்.
   முன்பு நாம் கண்டது போல ஒரு செயலின் கொள்கை குறிக்கோள் எனப்து இன்பம் என்ற எல்லையை தேடுவது அல்லது வலி,துன்பம் என்ற எல்லையை தேடுவது தவிர்த்து ஓடுவது ஒரு சாலையின் இடது பக்கம் இன்பம் அதன் வலது பக்கம் துன்பம். நமது வாழ்வு என்ற வாகனம் தினம் வழக்கி கொண்டு துன்பக்கரையை நோக்கி ஓடும்.அதை மீண்டும் திசை திருப்பி இன்பத்துக்கான ஓரத்திலே ஓட்ட முயல்கிறோம்.வாழ்வின் சவால்களை சந்திக்க சமாளிக்க நாம் படும் பிரயத்தளங்களை முயற்சிகளை இவ்வாறு பெயரிட்டார்கள்.
   
வாழ்வு என்பதை ஒரு எலியின் வாழும் வளை என்பார்கள்.ஒரு திறந்த தப்பிக்கும் பாதையை கண்டுபிடிக்க அது பல அடைப்பட்ட வழிகளில் போய் திரும்பி திரும்பி தடுமாறுகிறது.அது போலவே நாம் துன்பக்கரைபக்கம் போகாமல் இன்பக்கரை பக்கம் வருவதற்காக பல நூறு சமாளிப்பு வேலைகள் செய்கிறோம்.இது சில நேரங்களில் நன்மையாக முடிகிறது.அதை ஆஆஆஆஆஅ என்றார்கள்.ஆனால் பல நேரங்கலில் தீம்கையாக முடிகிறது அதிகமாக வழக்கி துன்பக் கடலில் போய் மூழ்கிறோம் இதை ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் என்றார்கள்.
   மனம் என்பது பரிணாம வளர்ச்சியில் முதலில் சில பழக்கங்களை முயற்சி செய்து பார்த்தது இயற்கையாக உணவு,உறவு,உறக்கம் என்ற மூன்றும் இன்பம் தந்தன.
   
ஆனால் இன்றும் இதை அளவுக்கதிகமாக உபயோகித்து அழிபவர் அதிகம்.வாழ்வதற்காகவே சாப்பிடுகிறோம்.ஆனால் பலர் சாப்பிடவே வாழப் பிறந்தவர் போல சாப்பிட்டுக் கொண்டே சாகிறார்கள்.மனச் சோர்வில் பலருக்கு அதீத உணவு இன்பம் தருகிறது.கவலைகளை மறக்க,மயக்க மருந்தாக போதையாக அதீத உணவு,அதிக உறவு,அதிக உறக்கம் அவர்களுக்கு வடிகாலாகிறது.
   
விளைவு உடல் பருத்து தீவிர நோயாளியாகிறார் அது போலவே துன்பம் தவிர்க்க உடலுறவு இன்பத்தை
நாடி அடிமையாகிறார்.தீராத காமம்,திருமண முன் உறவு,திருமணம் தாண்டிய உறவு,பிறரது மணைவிகள் தொடர்பு விலைமகளிர் தொடர்பு,பாலியல் வக்ரங்கள் பல வற்றில் அடிமையாகிறார் உடல் நோய் மன நோய்
மற்றும் சமூகத்தால் புறக்கணிக்கபடவும் வாழ்வின் பாதை திசை மாறவும் இவரது உடலுறவு பழக்கங்கள் காரணமாகிறது.பாதிக்கப்படுவது பெண்கள் என்றால் தீமைகளின் விளைவுகள் மிக தீவிரமானது இயல்பான காமமே அளவு மீறி நோயாக தொடங்குவது வாலிப பருவம்தான்.
  
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

பழக்கங்களை சமாளிப்பது எப்படி? Empty Re: பழக்கங்களை சமாளிப்பது எப்படி?

Post by முழுமுதலோன் Sun Sep 01, 2013 12:33 pm

அதற்கடுத்தது உறக்கம் பலருக்கு தப்பிக்க தெரிந்த ஒரே வழி உறங்குவது.தூங்கியே வாழ்வின் தோற்றவர்கள் ஏராளம் இந்த மூன்றையும் அளவோடு உபயோகித்தால் நிச்சயம் நல்ல இன்பம் தரும்.ஒரு நாளில் மூன்றில் ஒருபங்கு உறக்கம் ஒரு நாளுக்கு மூன்று முறை உணவு மூன்று நாளுக்கு ஒரு முறைஒரே பெண் உறவு இவை முறையாக அளவிடப்பட்ட இன்பங்கள்.எல்லை தாண்டியவர் கண்டதெல்லாம் துன்பமே.
  இன்னும் கொஞ்சம் மனிதன் பணம் பொருள் உறைவிடம் பாதுகாப்பு எனப்து வசதிகள் வளர்ந்ததும் மனதை சாந்தபடுத்த இசை, நாடகம்,கலைகள்,விளையாட்டு என்ற பொழுதுபோக்கு அம்சங்களை வளர்த்தான்.
  
இவை ஆரம்ப காலங்களில் நிச்சயமாக மனதுக்கு நலத்தையும் வளத்தையும் கொடுத்தன.ஆனால் காமம்,வியாபாரம்,போட்டி,பொறாமை,சூது என்ற நஞ்சு கலந்ததும் இவற்றில் பல பழக்கங்களும் தீமையாகி விட்டன.முக்யமாக விளையாட்டு பொழுது போக்காக தொடங்கிய சூதாட்டம்,சீட்டாட்டம்,லாட்டரி போன்றவை அதிக துன்பம் தரும் பழக்கங்களாக மாறின இசை, நாடகம்,கலைகள் எல்லாம் சினிமா என்ற பெரிய திரை மற்றும் சின்ன திரை மறைவில்  மனிதனை அடிமையாக்கி அவனது அமைதியை கெடுத்தன.
  
இலக்கியங்களும்,புத்தங்களும் காம கோபம் குரோதம் வன்முறை பழிவாங்கும் உணர்வுகளை
தூண்டும்வசிய முறைகளாகியப் போனதால் அதில் அடிமையானவர்களும் துயர்களையே சந்தித்தார்கள்.
  
இறுதியாக ஆண்மீகம் புதிய ஒளியுடன் வந்து மனித மனங்களுக்கு ஆறுதளிக்க வந்தது.மத போட்டிகளும்
மத குருமார்களது தந்திரங்களும் இறுதியில் உபயோகமில்லாத சடங்குகளுக்கும்,மூட நம்பிக்கைகளுக்கும்  மக்களை அடிமையாக்கிவிட்டது.     
   
உண்டு பார்த்தான் உறங்கிபார்த்தான் கண்டவர் யாரோடும் உறவு கொண்டு பார்த்தான் கூத்தாட்டம் கொண்டாட்டம்,சூதாட்டம்,சீட்டாட்டம் எல்லாம் முயன்று பார்த்தான்.புத்தகங்கள்,பெரிய திரை,சின்னதிரை அத்தனைக்குள் சென்று பார்த்தான்.ஆன்மீகம்,மந்திரம்,தந்திரம் எந்திரம்,ஆருடம்,சாதகம் அத்தனையும் மூழ்கிபார்த்தான் எத்தனை சமாளிக்க முயற்சிகள் ஆனால் பலருக்கும் திருப்தியடையவில்லை இஎத பழக்கங்களால்.
   
ஆராய்ச்சி செய்த மனிதன் எதற்கு தலையை சுற்றி மூகை தொட வேண்டும். நேரடியாக தொட்டால் என்ன என்று சிந்தித்தான் இன்பம் தரும் மூளை நரம்பு மண்டலத்தையே நேரடியாக இயக்கி பார்க்க ஆராய்ச்சி பல செய்தான்.காப்பி,தேநீர்,புகை,கஞ்சா எல்லாம் பயரி செய்து பழகி ருசித்தார்கள்.சோம பானங்கள் மதுரசங்கள் வடித்து மகிழ்ந்தார்கள்.
   
இப்படி மூளையை பொம்மலாட்டாம் ஆடும் பொம்மை போல ஆட்டி வைத்தார்கள்.திட திரவு வாயு  பொருள் என பல் நூறு வகை மருந்துகளை கண்டு பிடித்தனர் இந்த போதை விஞ்ஞானிகள் இந்து துயர குகைக்குள்ளே மாண்டவர்கள் கோடி கோடி.
   
இன்றும் போதையின் பட்டியல்கள் நீண்டு கொண்டே போகின்றன.அதிர்ஷ்ட வசமாக பெண்கள் இனம் இந்த சீரழிவுகளில் அதிகமாக சிக்கி கொள்ளாமல் தப்பித்து வருகிறது,ஆனால் அதுவும் இந்த நூற்றாண்டு எல்லை வரை தாக்கு பிடிக்காது என்று தோன்றுகிறது நாளுக்கு நான் நாட்டுக்கு நாடு பெண்களும் போதை பழக்கங்களுக்கு மேலும் மேலும் அடிமையாகி வருகிறார்கள்.
   
15 வயது முதல் 40 வயது வரை உள்ள மிக முக்யமான வாழ்வின் 30 வருடங்களில் பலர் இந்த போதையால் பாதை மாறிப் போகிறார்.
   
மிருகத்திலிருந்து சமூக மிருமாகி,மனிதனாகி சமூக மனிதனாகி புனிதனாகி மாமனிதானாகும் பரிணாம  வளர்ச்சியின் பல திட்டங்களுக்கும் கொள்கைகளுக்கும் இது போன்று தீமையான பழக்கங்கள் இடையூறாக இருக்கிறது.
   
நல்ல பழக்கங்கள் நாளும் குறைவதும் தீய பழக்கங்கள் தினம் தோறும் வளர்வதும் தெளிவாக தெரிகிறது.தனிமனிதன் மிது குடும்ப,சமுதாய,தேசிய,கலாசார கட்டுபாடுகள் தளர்ந்து தனிமனித சுதந்திரம் அதி வேகமாக வளர்கிறது.இது ஒரு வகையில் மிகவும் நன்மை தரும் தனிமனித சிந்தனையும் செயலும் விரிவடைந்து வளர மிக உபயாகமாகிறது நல்லவர்கள் மிகமிக வல்லவர்களாக மாறுவதற்காக இது பயன்படுகிறது.
         
ஆனால் கட்டவிழ்த்து விடப்பட்ட மனிதன் கால் போன போக்கில் கெட்டுவிட வாய்ப்பானது.எதுவும் தவறில்லை எவருக்கும் அடிமையில்லை என்ற தனிமனித தத்துவம் பல விதமான தீய பழக்கங்களை ஆராய்ச்சி செய்கிறது அதிலே அடிமையாகிறது.கொஞ்ச கொஞ்சமாக பெற்றோர்,ஆசிரியர்,அயலார் என்ற கண்காணிப்பு தளர்கிறது.அதிகாரிகள்,அரசினர் தனிமனிதனை பற்றி என்களுக்கு ஆர்வமில்லை அக்கறையில்லை அடுத்தவர்க்கு தொல்லை கொடுகாதவரை அவனைப்பறி எங்களுக்கு நினைவுமில்லை   என்று விட்டு விட்டார்கள்.
        
பலருக்கு வாழ்வதற்காக கிடைத்த விடுதலை தாழ்வதற்கு பயன்படுகிறது  நெரடியாக மனதை மயக்கி மகிழ்விக்கின்றன போதை பழக்கங்கள் இதன் விளைவாக இன்பத்தின் கொள்கை துன்பத்திற்கு பாதையாகி விடுகிறது கண் விழித்து பார்க்கும் முன்பு வாழ்வு எனும் வாகனம் திரும்ப முடியாத ஆழாத்துக்குள் போய்விடுகிறது.
        
ஆனால் இது நன்று இது தீது என்று எல்லோருக்கும் தெரியுமே? பஞ்சமாபாதகங்களில் கள்ளும் காமமும் முதல் என்று மூடருக்கு கூட புரியுமே?பழக்கங்களை சமாளிப்பது எப்படி அதுதானெ புரியவில்லை அதைச் சொல்லுங்கள் என்கிறார் பலர் ஆனால் அவர் கேட்கும் போது தீயபழக்கங்களில் கழுத்து வரை மூழ்கி போய் கிடக்கிறார்.
      
எனவே இளைமயில் அது கூட தாமதம்தான் குழைந்தை பருவத்திலேயே நல்ல பழக்கங்கள் விதைக்கபட வேண்டும் தீய பழக்கங்கள் தடுக்கப்பட வேண்டும் ஆனால் இதை சொல்வது சுலபம் செய்வதுதான் கடினம்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

பழக்கங்களை சமாளிப்பது எப்படி? Empty Re: பழக்கங்களை சமாளிப்பது எப்படி?

Post by முழுமுதலோன் Sun Sep 01, 2013 12:35 pm

      
பல பெற்றோர்கள் தனது குழைந்தைகள் வயதுக்கு மீறிய கேவலமான தகாத வார்த்தைகளை பேசுகிறது பள்ளியில் போய் கற்று கொண்டது என புகார் செய்கிறார்கள் ஆனால் குழந்தையை கேட்டால் இது வீட்டிலிருந்துதானே கேட்டறிந்தேன் என்கிறது
     
உண்மையில் தொப்பியை கழற்றி எறிந்தால் குரங்கும்தொப்பியை தொப்பியை கழற்றி எரியும் என்பது தான் நமக்கு தெரியுமே,குழந்தைகளும் அப்படித்தானே நம்மிடம் உள்ள தீய பழக்கங்களை கழற்றி எறிந்தால் எதிர்கால சந்ததிக்கே அது தெரிய வராதே
        
நன்னடத்தை என்பது கற்பதுதானே நல்ல பழக்கவழக்க‌ங்கள் அப்பா,அம்மா ஆசிரியர்,அயலார்களின் அச்சடித்த பிரதி போலத்தானே அடுத்த தலைமுறை வளர்கிறது இவர்களது நடத்தைகள் முன் மாதியாக அமைந்து விட்டால் பாடமும் தேவையில்லை.
   
இளம்வயதிலேயே நல்ல பழக்கங்களின் நன்மைகளையும் தீயபழக்கங்களின் தீமைகளையும் மனதில் ஆழமாக பதிவு செய்ய வேண்டும்.இது நேரடியான போதனைகளாக இருக்க கூடாது மறைமுகமான சுவையான செய்திகள் பயிற்சிகள் வழியாக இவை செயல்பட வேண்டும்.ஜந்தில் வளையாதது அய்ம்பதில் வளையாது என்பார்கள்.
  தீமையான பழக்கங்களை பற்றிய விழிப்புணர்வு தொடர்ந்து கொடுக்கபட வேண்டும் புகைபழக்கம் உடல் நலத்துக்கு கெடுதி மதுபழக்கம் மன நலத்துக்கு கெடுதி என்று ஒப்புக்காக கடமைகள் எழுதி ஒட்டிவிட்டால் என் கடமை தீர்ந்தது என அரசு இருந்து விடக்கூடாது தீமை என விளம்பரபடுத்தும் வியாபாரிகளும் அரசும் அதை வியாபாரம் செய்வது ஏன்?
  
ஒரு கோலா பட்டியல் ஒரு துளி நஞ்சு என பதட்டபடும் அரசு முழு பாட்டிலும் நஞ்சான மதுவைப்பற்றி கவலைப்படாதது ஏன்
   
எனவே இந்த மாதிரியான கால கட்டத்தில் ஒரு தனி மனிதன் தன்னைத்தானே பாதுகாத்து கொள்ளவில்லை என்றால் வேறு வழியில்லை.யாரும் அவரைப் பற்றி கவலைப் பட போவதில்லை.தகுதியுள்ளதே வாழும் தகுதியற்றவை எல்லாம் சாகும் என்ற மிருகத்தனமான பரிணாம த‌த்துவம் முதலாளித்துவமாக நிலவுகிறது.
  
இன்று தனிமனித நடத்தை,ஒழுக்கம்,வலிமை அந்தஸ்து,பொருளாதாரம் பாதிக்கபட்டால் அவரது துணையும்,அவரது குழந்தைகளுமே அவரை புறக்கணிக்க த்யங்குவதில்லை இன்று தீய பழக்கங்களால் உடல் ந,மன நல பாதிப்புகள் ஏற்படுவதற்கு முன்பே சமூக பாதிப்புகள் நிறைய அவர் கெடும் போது யாரும் தடுப்பதில்லை அவர் கெட்ட பின்பு யாரும் கைகொடுப்பதில்லை.வெறுத்து ஒதுக்கப்பட்டு வீதிக்கு வரும் நிலை ஏற்படுகிறது.
  
வந்தபின் சமாளிப்பது கடினம் தீய பழக்கங்களை மன வாசலுக்குள் விடாமல் தடுத்து நிறுத்தவதே நல்லது.சுலபமானது அல்ல,ஆனாலும் உறுதியாக தடுப்பதே நல்லது.


      xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx





Posted by DrBALA SUBRA MANIAN 
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

பழக்கங்களை சமாளிப்பது எப்படி? Empty Re: பழக்கங்களை சமாளிப்பது எப்படி?

Post by Muthumohamed Sun Sep 01, 2013 4:16 pm

பதிவு சூப்பர் சூப்பர் சூப்பர் கைதட்டல் கைதட்டல் கைதட்டல்
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

பழக்கங்களை சமாளிப்பது எப்படி? Empty Re: பழக்கங்களை சமாளிப்பது எப்படி?

Post by mohaideen Sun Sep 01, 2013 7:22 pm

மிக மிக நல்ல தகவல்கள் சூப்பர் சூப்பர்
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

பழக்கங்களை சமாளிப்பது எப்படி? Empty Re: பழக்கங்களை சமாளிப்பது எப்படி?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum