தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


குட்டிக்கதை.

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Go down

குட்டிக்கதை. Empty குட்டிக்கதை.

Post by sawmya Mon Sep 16, 2013 11:44 am

தன் தோற்றம் குறித்தும் திறமைகள் குறித்தும். தாழ்வு மனப்பான்மை கொண்டிருந்தாள் அந்தச் சிறுமி.

நீ அழகாய் இருக்கிறாய். உன்னை நேசிக்கிறேன்என்று அவளிடம் தந்தை அடிக்கடி சொல்லி வளர்த்தார்.

அவளது மனம் மெல்ல மெல்ல மாறியது.

ஊக்கம் உயர்ந்தது. உருவத்திலும் மாற்றங்கள் தென்பட்டன.

அழகிலும் அறிவிலும் தனித்தன்மை மலரும் விதமாய் வளர்ந்தாள்.

பதினெட்டாவது பிறந்த நாளில் பரிசு வழங்கிய தந்தை சொன்னார்,

நீ மிகவும் அழகான குழந்தை. உன்னை நேசிக்கிறேன்”.

வள் தோழிகளிடையே அறிவித்தாள்,

நான் அழகாய் இருப்பதால் என் குடும்பம் என்னை நேசிக்கவில்லை.
என் குடும்பம் நேசிப்பதால் நான் அழகாய் இருக்கிறேன்”.

நேசிக்க பழகுங்கள் உங்கள் உலகமே அழகாய் மாறும் !!!
_ நன்றி!  தோழி சித்ரா.
sawmya
sawmya
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 2919

Back to top Go down

குட்டிக்கதை. Empty Re: குட்டிக்கதை.

Post by செந்தில் Mon Sep 16, 2013 2:44 pm

கைதட்டல் சூப்பர் கைதட்டல் 
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

குட்டிக்கதை. Empty Re: குட்டிக்கதை.

Post by ரானுஜா Mon Sep 16, 2013 3:27 pm

சூப்பர்
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

குட்டிக்கதை. Empty Re: குட்டிக்கதை.

Post by மகா பிரபு Mon Sep 16, 2013 3:42 pm

குட்டிக்கதை. 534526 குட்டிக்கதை. 2695542999
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

குட்டிக்கதை. Empty Re: குட்டிக்கதை.

Post by kanmani singh Mon Sep 16, 2013 4:47 pm

என் குடும்பம் என்னை நேசிப்பதால் நான் அழகாக இருக்கிறேன். எத்தனை நிஜமான வரிகள்...

கண்மணி சிங்
avatar
kanmani singh
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 4190

Back to top Go down

குட்டிக்கதை. Empty Re: குட்டிக்கதை.

Post by முரளிராஜா Mon Sep 16, 2013 4:51 pm

சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் 
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

குட்டிக்கதை. Empty Re: குட்டிக்கதை.

Post by கவிப்புயல் இனியவன் Mon Sep 16, 2013 4:54 pm

அருமையான குட்டி கதை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

குட்டிக்கதை. Empty Re: குட்டிக்கதை.

Post by sawmya Tue Sep 24, 2013 4:36 pm

குழந்தை சொன்னது!!!


ஆகாயத்தில் பரந்துகொண்டிடிருந்த அந்த விமானம் ஒரு கார்மேகத்துக்குள்ளே சென்றது விமானம் கட்டுப்பாட்டை இழந்து அங்கும் இங்குமாக சரிய தொடங்கியது 


பயணிகள் பீதியில் அலறினார்கள் ஒரு குழந்தை மட்டும் எதையுமே பொருட்படுத்தாமல் பொம்மையை வைத்து விளையாடிக்கொண்டு இருந்தது 


ஒரு மணி நேர போராட்டத்துக்கு பின்பு விமானம் பத்திரமாக தரை இறங்கியது அப்போது ஒருவர் அந்த குழந்தையிடம் கேட்டார் 


இவ்வளவு ஆபத்தான நிலையிலும் உன்னால் மட்டும் எப்படியம்மா சந்தோஷமாக விளையாடிக்கொண்டு இருக்க முடிந்தது ?


குழந்தை சொன்னது ..


எங்க அப்பா தான் இந்த விமானத்தின் பைலட் அவர் என்னை எப்படியும் காப்பாற்றிவிடுவார் என்று எனக்கு தெரியும் .




நன்றி! முக நூல்.
sawmya
sawmya
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 2919

Back to top Go down

குட்டிக்கதை. Empty Re: குட்டிக்கதை.

Post by செந்தில் Tue Sep 24, 2013 5:16 pm

கைதட்டல் நம்பிக்கை அதானே எல்லாம் சூப்பர்  கைதட்டல் 
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

குட்டிக்கதை. Empty Re: குட்டிக்கதை.

Post by முரளிராஜா Tue Sep 24, 2013 6:07 pm

நம்பிக்கைதானே வாழ்க்கை
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

குட்டிக்கதை. Empty Re: குட்டிக்கதை.

Post by கவியருவி ம. ரமேஷ் Tue Sep 24, 2013 9:04 pm

நேசிக்க பழகுங்கள் உங்கள் உலகமே அழகாய் மாறும் !!!
உண்மையான கருத்து...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

குட்டிக்கதை. Empty Re: குட்டிக்கதை.

Post by sawmya Thu Sep 26, 2013 11:44 am

நன்றி மறப்பது நன்றன்று...



இரண்டு நண்பர்கள் ஒரு பாலைவனத்தில் பயணித்துக் கொண்டு இருந்தபோது தண்ணீர் குடிப்பதில் சண்டை வந்ததுஅதில் ஒருவன் இன்னொருவனை அடித்துவிட்டான்.

அடி வாங்கியவன் அழுதுகொண்டே என் நண்பன் என்னை அடித்துவிட்டான் என்று பாலைவன மணலில் எழுதிவைத்தான்சிறிது நேரம் கழித்து ஓரிடத்தில் ஆழமான பள்ளத்துக்குள் தவறி விழப்போனான் அவன்.


சடாரென ஓடிவந்த நண்பன் உயிரைப் பணயம் வைத்து அவனைக் காப்பாற்றினான்இப்போது நண்பன் அருகில் இருந்த பாறையில் செதுக்கி வைத்தான். ‘என் நண்பண் என்னைக் காப்பாற்றினான்’ என்று.


காப்பாற்றிய நண்பனோ, ‘ நான் உன்னை அடித்ததை மண்ணிலும்காப்பாற்றியதை பாறையிலும் ஏன் எழுதி வைத்தாய்?’ என்று கேட்டான்.


நீ எனக்கு இழைத்த தீங்கு காற்றால் மறைந்து போகட்டும் என்று மண்ணிலும்நீ செய்த உதவி மறக்கக்கூடாது என்பதற்காக பாறையிலும் எழுதி வைத்தேன்!” என்றான் நண்பன்.


உங்கள் உழைப்புக்குக் கிடைக்க வேண்டிய பரிசும்உங்களுக்கு வழங்கப்பட்ட ஆசியும்வரமும் உங்கள் முன்னால்தான் இருக்கிறதுஆனால் அது நீங்கள் எதிர்பார்க்கும் வடிவில் இல்லைஅவ்வளவுதான்.



நன்றி! முக நூல்!
sawmya
sawmya
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 2919

Back to top Go down

குட்டிக்கதை. Empty Re: குட்டிக்கதை.

Post by sawmya Thu Sep 26, 2013 11:46 am

பயந்தால் எதுவும் நடக்காது



ஒரு வெள்ளைக்காரர் ஆப்பிரிக்காவின் ஆதிவாசிக் கிராமங்களின் வழியே பயணித்துக் கொண்டு இருந்தார்
அவருக்கு புதுமையைச் செய்வது என்றால் ரொம்ப பிடிக்கும். தேர்ந்த நீச்சல் வீரரும்கூட.

போகிற வழியில் ஒரு பெரிய ஏரியைப் பார்த்தார்

அந்த ஏரியை நீந்திக் கடந்தால் அந்த பக்கம் இருக்கும் கிராமத்துக்குப் போகலாம். ஏரியைப் பார்த்தவுடன் குதித்து நீந்தவேண்டும் என்ற ஆசை. ஆழம் அதிகமாக இருக்குமோ என்று ஒரு யோசனை


அதனாலென்ன நீச்சல் தெரியுமே என்று உடைகளை கழற்றி வைத்துவிட்டு உள்ளாடையோடு ஏரிக்குள் குதித்து நீந்த ஆரம்பிக்கிறார்.
பாதி தூரம் போனபிறகு ஏரியின் மறுபக்கம் இருக்கும் ஆதிவாசிகள் அவரை நோக்கி கையசைத்து ஆர்ப்பரிப்பதைப் பார்த்து ஆச்சர்யப் படுகிறார் வெள்ளைக்காரர்.


தண்ணீருக்குள்ளே குட்டிக்கரணம் அடித்து வேடிக்கைப் பார்ப்பவர்களைக் குஷிப்படுத்துகிறார். ஆதிவாசிகள் கைத்தட்டி மீண்டும் ஆர்ப்பரிக் கிறார்கள். சிறிது நேரத்தில் கரைக்கு வந்த அவருக்கு ஏகப்பட்ட வரவேற்பு. கைத்தட்டல்களும் பாராட்டல்களுமாக வெள்ளைக்காரரை எல்லாரும் தட்டிக் கொடுக்கிறார்கள்.
அடேயப்பா, என்ன மாதிரி நீச்சல் அடிக்கிறீர்கள்? பயப்படாமல் எவ்வளவு வேகமாக நீந்துகிறீர்கள்?” என ஆதிவாசிகள் சொல்ல வெள்ளைக்காரருக்கு பெருமிதம். “எனக்கு டைவ் மட்டுமல்ல கால்களை மடக்கிக் கொண்டு டைவ் அடிப்பது அப்படியே அசையாமல் மிதப்பது என நிறையத் தெரியும். வேண்டுமானால் உங்களுக்கும் சொல்லித் தருகிறேன்என்றார்.


நண்பரே எங்களுக்கும் இந்த டைவ் எல்லாம் தெரியும். நாங்கள் அதற்காக உங்களைப் பாராட்டவில்லை. நூற்றுக்கணக்கான முதலைகள் இருக்கிற ஏரியில் பயப்படாமல் நீந்தி வந்தீர்களே அதற்குத்தான் இந்தப் பாராட்டுஎன்று ஆதிவாசிகள் சொன்னதும் வெள்ளைக்காரருக்கு மூச்சே நின்றுவிட்டது
.
sawmya
sawmya
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 2919

Back to top Go down

குட்டிக்கதை. Empty Re: குட்டிக்கதை.

Post by sawmya Thu Sep 26, 2013 11:47 am

திறந்த மனம் தேவை



தான் படித்து பல பட்டங்களைப் பெற்றும் வாழ்வில் முன்னேற முடியவில்லையே. ஏன்? என்று அறிஞரிடம் கேட்டான் இளைஞன்.

அறிஞர் டீ குடிக்கிறீர்களா தம்பி என்றார். இளைஞனுக்குக் கொஞ்சம் எரிச்சல்தான். ஊற்ற ஆரம்பித்தார் . டீ கோப்பையை அவன் கையில் கொடுத்த அவர். அதில் டீயை ஊற்ற ஆரம்பித்தார். டீ கோப்பை நிரம்பியது.

இருந்தாலும் அறிஞர் டீ ஊற்றுவதை நிறுத்தவில்லை. கோப்பை நிரம்பி வழிந்ததும் இளைஞன் இன்னமும் எரிச்சலானான் என்ன அறிஞரே இப்படிச் செய்துவிட்டீர்கள்? என்று கோபமாகக் கேட்டான்.

அறிஞர் அமைதியாகச் சொன்னார். தம்பி உங்கள் மனசும் இப்படித்தான் இருக்கிறது. டீ கோப்பை நிரம்பி இருக்கும்போது மேலும் மேலும் டீயை ஊற்றினால், அது எப்படி பயனின்றி நிரம்பி கொட்டுமோ அதே போல் நீங்கள் சேர்க்கிற, தெரிந்து கொள்கிற எல்லா விஷயங்களும் வீணாக வெளியே வழிந்து விடுகின்றன என்றார் அறிஞர்.

இளைஞனுக்குப் புரியவில்லை. அறிஞர் தொடர்ந்தார். தம்பி வாழ்வில் உயர வேண்டும் என்ற முனைப்பில் நீங்கள் பல விஷயங்களை அறிந்துகொள்ள முயற்சிக்கிறீர்கள். அதற்குத் தேவைப்படும் விஷயங்களைச் சேர்க்கிறீர்கள். ஆனால் அவற்றை ஏற்றுக் கொள்ள உங்கள் மனதில் இடம் இல்லை.

அதனால் அவை வீணாக வெளியேறு கின்றன. உங்கள் இலக்கை நோக்கிப் பயணிக்கும் நீங்கள் எதையெல்லாம் சேர்த்துக் கொள்கிறீர்களோ, அதைவிட முக்கியமானது தேவை இல்லாத விஷயங்களை அழிப்பதுதான். அப்போதுதான் நீங்கள் சேர்க்கும் விஷயங்கள் தங்குவதற்கு இடம் கிடைக்கும்! என்றார் அறிஞர்.புன்முறுவல் 
sawmya
sawmya
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 2919

Back to top Go down

குட்டிக்கதை. Empty Re: குட்டிக்கதை.

Post by sawmya Fri Sep 27, 2013 2:25 pm

நம் நாட்டில்லிருந்து வெளிநாட்டுக்கு வேலை தேடிச் சென்றார் ஒருவர்.

அங்கே ஒரு விற்பனை நிலையத்தில்....

"சேல்ஸ் துறையில் உனக்கு முன் அனுபவம் இருக்கிறதா?" மேனேஜர் கேட்க,

"நான் எனது நாட்டில் சேல்ஸ்மேனாகத்தான் வேலை பார்த்தேன்" என்றார் நம்மாளு.

"அப்படியானால் உனக்கு நான் வேலை தருகிறேன். நாளை முதல் நீ வேலையைத் தொடங்கலாம். கடை மூடும்பொழுது நீ எப்படி வேலை பார்த்தாய் எனப் பார்ப்பதற்கு நான் வருவேன்"

முதல் நாள் கடை மூடும் நேரம் மேனேஜர் வருகிறார்.

"இன்று எத்தனை நபர்களிடம் சேல்ஸ் செய்தாய்?"

"ஒருவரிடம் மட்டும்…"

"என்ன ஒருத்தர் மட்டுமா? ... உன்னுடன் வேலை பார்க்கும் மற்றவர்களெல்லாம் நாள் ஒன்றுக்கு 20லிருந்து 30 வரை செய்யக் கூடியவர்கள். உன் வேலை நிரந்தரமாக வேண்டுமானால் நீயும் இவர்களைப் போல் முயற்சி செய்ய வேண்டும். சரி எவ்வளவு டாலருக்கு விற்றாய்?"

"$1012347.64"

"ஒரே ஒரு நபரிடம் இவ்வளவு டாலருக்கா? என்னென்ன விற்றாய்?"

"முதலில் அவரிடம் சிறிய தூண்டில்,
கொஞ்சம் பெரிய தூண்டில்,
அதைவிடப் பெரிய தூண்டில்,
ஃபிஷிங் ராட்,
ஃபிஷிங் கியர் எல்லாம் விற்றேன்.
பிறகு அவரிடம் “எங்கே மீன் பிடிக்கிறீர்கள்?” என்று கேட்டேன். அவர் கரையில் அமர்ந்து மீன் பிடிப்பதாகச் சொன்னார். உடனே நமது போட்டிங் டிபார்ட்மெண்ட் சென்று ஒரு போட்டை விற்றுக் கொடுத்தேன். அவர் என்னுடைய கார் இந்த போட்டை இழுக்குமா எனத் ன்று தெரியவில்லையே என்றார். நான் நமது ஆட்டோமோடிவ் டிபார்ட்மெண்ட் சென்று ஒரு 4x4 ட்ரக் விற்றுக் கொடுத்தேன். பின்னர் அவரிடம் நீங்கள் எங்கு தங்கியிருக்கிறார் எனக் கேட்டேன். இப்போதைக்கு இடம் எதுவும் இல்லை என்று சொன்னார். உடனே நான் அவருக்கு 4 பேர் தங்கக் கூடிய அளவுள்ள “டெண்ட்” –ம் விற்றுக் கொடுத்தேன்"

"என்ன ஒரு தூண்டில் வாங்க வந்தவரிடமா இவ்வளவும் விற்றாய்?"

மேனேஜர் அதிசயமாய்க் கேட்க, நம்மாளு சொன்னார்,

"அய்யோ! இல்லை சார்! அவர் தலைவலிக்காக அனாசின் மாத்திரை வாங்க வந்தார். நான்தான் மீன் பிடித்தால் மனசுக்கு ரொம்ப ரிலாக்ஸ் - ஆக இருக்கும். எப்போதும் உங்களுக்குத் தலைவலியே வராது என்று கூறினேன்"



நன்றி! முக நூல்!
sawmya
sawmya
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 2919

Back to top Go down

குட்டிக்கதை. Empty Re: குட்டிக்கதை.

Post by sawmya Fri Sep 27, 2013 2:26 pm

தன்னம்பிக்கை கதைகள்

சிந்தனை
========
ஜப்பானில் ஒருத்தன் சோப்புத் தூள் கம்பெனி வச்சிருந்தான். அங்கு சோப்புத் தூள் அதுவாவே பாக்கட்டில் நிரம்பி அதுவே பேக் பண்ணிக்கும்.

அதில் ஒரு சின்ன தப்பு வந்தது. சில பாக்கட்டுகளில் தூள் நிரம்பாமலேயே பேக் ஆச்சு.

இதை தடுக்க அமெரிக்காவில் இருந்து ஒரு ஸ்கேன் மெசின் ஏழாயிரம் டாலர் கொடுத்து வாங்கினான். . அது துல்லியமா சோப்புத் தூள் இல்லாத பாக்கட்டுகளைக் காமிச்சது. அவனும் அவைகளை ஈசியா ஒதுக்கினான்.

அதே போல் இந்தியாவில் ஒரு சோப்புத் தூள் கம்பெனியிலும் ஆச்சு. அவன் என்ன பண்ணி இருப்பான்? எழுநூறு ரூபாய்க்கு ஒரு FAN வாங்கி நடுவில் ஓட விட்டான். சோப்புத் தூள் இல்லாத பாக்கட்டுகள் காற்றில் பறந்துடுச்சு.




நன்றி! முக நூல்!
sawmya
sawmya
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 2919

Back to top Go down

குட்டிக்கதை. Empty Re: குட்டிக்கதை.

Post by sawmya Fri Sep 27, 2013 2:30 pm

மனசு சஞ்சலப்படுகிறதா...? ..
.................................................
ஒருமுறை புத்தர் தன்னுடைய
சீடர்களுடன் பயணப் பட்டுக்
கொண்டிருந்தார்.
ஒரு ஏரியை எதிர் கொண்டபோது,
அங்கிருந்த பெரிய ஆலமர நிழலில்
அனைவரும் சற்று ஓய்வெடுக்கும்
எண்ணத்துடன் தங்கினார்கள்.
புத்தர் தன்னுடைய சீடர்களில்
ஒருவரை அனுப்பி ஏரியில்
இருந்து குடிப்பதற்கு நீர்கொண்டு வர
சொன்னார்.
சீடரும் தங்களிடம் இருந்த
பானை ஒன்றை எடுத்துக்கொண்டு
நீர்நிலையை நோக்கி நடந்தார்.
அந்த நேரத்தில், மாட்டு வண்டிக்காரர்
ஒருவர், ஏரிக்குள் இறங்கி ஏறியைக்
கடந்து சென்றார்.
ஏறி கலங்கி விட்டது. அத்துடன்
ஏரியின் கீழ்ப் பகுதியில் இருந்த
சேறும் சகதியும்
மேலே வந்து நீரை அசுத்தப்
படுத்தி பார்ப்பதற்கே உபயோகமற்றதாக
காட்சியளித்தது.
இந்தக் கலங்கிய நீர் எப்படிக்
குடிப்பதற்குப் பயன்படும்?
இதை எப்படிக் குருவிற்குக்
கொண்டுபோய்க் கொடுப்பது?
என்று தண்ணீரில்லாமல்
திரும்பிவிட்டார்.
அத்துடன் தன் குருவிடமும் அதைத்
தெரிவித்தார்.
ஒரு மணி நேரம் சென்ற பிறகு,
புத்தர் தன்னுடைய சீடரை மீண்டும்
ஏரிக்குச் சென்றுவரப் பணித்தார்
நீர்நிலையருகே சென்று சீடன்
பார்த்தான். இப்போது நீர்
தெளிந்திருந்தது . சகதி நீரின்
அடியிற்சென்று பதிந்திருந்தது.
ஒரு பானையின்
தண்ணீரை முகர்ந்து கொண்டு சீடன்
புத்தரிடம் திரும்பினான்.
புத்தர் தண்ணீரைப் பார்த்தார்.
சீடனையும் பார்த்தார்.
பிறகு மெல்லிய குரலில்
சொல்லலானார்.
தண்ணீர் சுத்தமாவதற்கு என்ன
செய்தாய்..?
நான் ஒன்றும் செய்யவில்லை சுவாமி!
அதை அப்படியே விட்டுவிட்டு வந்த
அது தானாகவே சுத்தமாயிற்று!
நீ அதை அதன்
போக்கிலேயே விட்டாய்.
அது தானாகவே சுத்தமாயிற்று.
அத்துடன் உனக்கு தெளிந்த நீரும்
கிடைத்தது இல்லையா?
ஆமாம் சுவாமி!
நம் மனமும் அப்படிப்பட்டதுதான்..
மனம் குழப்பத்தில்
இருக்கும்போது நாம் ஒன்றும் செய்ய
வேண்டாம்.
அதை அப்படியே விட்டு விட
வேண்டும். சிறிது கால அவகாசம்
கொடுக்க வேண்டும்.
அது தனக்குத்தானே சரியாகிவிடும்.
நாம் எந்தவித முயற்சியும் செய்ய
வேண்டாம்.
மனதை சமாதானப் படுத்தும்
விதத்தைப் பற்றி சிந்திக்கவும்
வேண்டாம்.,
அது அமைதியாகிவிடும் .
அது தன்னிச்சையாக நடக்கும்.
அத்துடன் நம்முடைய
முயற்சியின்றி அது நடக்கும்.
It will happen. It is effortless.
மன அமைதி என்பது இயலாத செயல்
அல்ல!
இயலும் செயலே!
அதற்கு நம் பங்கு எதுவும்
தேவை இல்லை!
it is an effortless process!
-
உடுமலை.சு.தண்டபாணி
sawmya
sawmya
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 2919

Back to top Go down

குட்டிக்கதை. Empty Re: குட்டிக்கதை.

Post by sawmya Fri Sep 27, 2013 2:35 pm

பிடித்த மதம்

மதுரையில் கல்லூரி விழா ஒன்றில் சிறப்பு சொற்பொழிவாற்ற கவிஞர் கண்ணதாசன் அழைக்கப்பட்டிருந்தார்

விழா அரங்கு முழுவதும் மாணவர்கள்.குறித்த நேரத்தில் கவியரசர் வரவில்லை. மாணவர்கள் விசிலடித்து சப்தம் போட ஆரம்பித்தனர். ஒரு வழியாய் ஒரு மணி நேர தாமதத்தில் வந்து சேர்ந்தார் கவிஞர்

கல்லூரி முதல்வர் வரவேற்புரை நிகழ்த்தியபோது கூட மாணவர்களிடையே சலசலப்பு குறையவில்லை. பின் கண்ணதாசன் பேச ஆரம்பித்தார், ''ஒரு சிலருக்கு இந்து மதம் பிடிக்கும். சிலருக்கு இஸ்லாமும், சிலருக்கு கிறிஸ்துவ மதமும் பிடிக்கும்.எனக்குப் பிடித்த மதம்.....'' என்று சொல்லி நிறுத்தினார்.

மாணவர்களிடையே அமைதி. அவர் என்ன சொல்லப் போகிறார் என்று அனைவருக்கும் ஆவல். அவர் தொடர்ந்தார் ,''எனக்குப் பிடித்த மதம் தாமதம், ''என்று சொன்னவுடனேயே பலத்த கரவொலி எழுந்தது.

அதன் பின் அவர் தாமதத்துக்கு மன்னிப்புக் கேட்டுவிட்டு தன இனிய பேச்சைத் தொடர்ந்தார்.
sawmya
sawmya
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 2919

Back to top Go down

குட்டிக்கதை. Empty Re: குட்டிக்கதை.

Post by Manik Fri Sep 27, 2013 5:09 pm

அருமை நன்றி பகிர்ந்தமைக்கு
Manik
Manik
இணை வலை நடத்துனர்
இணை வலை நடத்துனர்

பதிவுகள் : 2305

Back to top Go down

குட்டிக்கதை. Empty Re: குட்டிக்கதை.

Post by Muthumohamed Sat Sep 28, 2013 1:37 am

குட்டி கதைகள் அனைத்தும் அருமை
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

குட்டிக்கதை. Empty Re: குட்டிக்கதை.

Post by sawmya Sun Sep 29, 2013 9:53 am

ஒரு செல்வந்தர் இருந்தார்.

ஒரு நாள் அவர் தன் தோட்டத்தில் விளைந்த வாழைக்குலை ஒன்றை பணியாளிடம் கொடுத்துக் கோவிலில் கொடுக்கச் சொன்னார்.

ஏழைப் பணியாள் எடுத்துச் செல்லும் வழியில் அவனுக்கு அதிகப் பசியெடுக்கவே அக்குலை யிலிருந்து இரண்டு பழங்களைப் பிய்த்துச் சாப்பிட்டு விட்டான்..

மீதிப் பழங்களை கோவிலில் கொடுத்தான்.

அன்றிரவு செல்வந்தர் ஒரு கனவு கண்டார்.கனவில் இறைவன் வந்து நீஎனக்குக் கொடுத்த இரண்டு பழங்களை நான் சாப்பிட்டேன்;ருசியாக இருந்தது என்றான்.

செல்வந்தனுக்கு மிகக் கோபம் வந்தது.

ஒரு குலை பழம் கொடுத்திருக்க இரண்டு மட்டுமே இறைவனுக்குப் போய்ச் சேர்ந்திருக்கிறது. மீதி என்னவாயிற்று எனக் கோபப் பட்டான்.

மறு நாள் காலை அந்தப் பணியாளைக் கூப்பிட்டு விசாரித்தான்.

அவன் இரண்டு பழங்களைப் பசியினால் தான் சாப்பிட்டதை ஒப்புக் கொண்டு ,மீதிக் குலையைக் கோவிலில் கொடுத்து விட்டதைச் சொன்னான்.

செல்வந்தனுக்குப் புரிந்தது .

அந்த ஏழை சாப்பிட்ட பழம் மட்டுமே இறைவனைச் சென்று அடைந்திருக்கிறது என்று!

-இன்று முதல் தகவல்.
sawmya
sawmya
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 2919

Back to top Go down

குட்டிக்கதை. Empty Re: குட்டிக்கதை.

Post by rishekesan Sun Sep 29, 2013 1:16 pm

தெரிந்த கதையாக இருந்தாலும். நல்ல கதை
நன்றி
rishekesan
rishekesan
புதியவர்
புதியவர்

பதிவுகள் : 6

Back to top Go down

குட்டிக்கதை. Empty Re: குட்டிக்கதை.

Post by sawmya Mon Sep 30, 2013 3:34 pm

ஒரு கதை ஒரு நிஜம்:

ஒரு மலையின் உச்சியில் ஒரு நாடும் அதன் அடிவாரத்தில் ஒரு நாடும் இருந்தன. இரு நாடுகளுக்கிடையில் எப்போதும் ஓயாத சச்சரவு

மலையின் உச்சியில் உள்ள நாட்டின் ரானுவத்தினர், அடிவார நாட்டின் ஒரு குழந்தையை கடத்திசென்றுவிட்டனர்

அடிவார நாட்டின் மன்னருக்கு அவமானமாகபோய்விட்டது அவர் ஓர் அதிரடிப்படையை தயார் செய்து குழந்தையை மீட்டுவர பணித்தார்

அதிரடிப்படையும் குழந்தையை மீட்க விரைவாக மலைஏறியது ஆனால் மலைஏற்றம் சுலபமாக இல்லை பாதி மலை ஏறுவதற்குள் மிகவும் சோர்ந்துபோயினர்

சிறிதுநேரம் ஓய்வெடுத்து மறுபடிபோகலாம் என அங்கேயே கூடாரம் அமைத்து தங்கினர்

அப்போது மலைஉச்சியிலிருந்து அவர்கள் நாட்டு ஒருபெண் குழந்தையுடன் வேகமாக இறங்கி வருவதை கண்டனர்

ஆச்சரியம், அந்தகுழந்தை அவர்கள் மீட்க சென்ற குழந்தைதான்
ஆச்சரியம் அடைந்த ரானுவவீரர்கள் பெண்ணிடம் எப்படி மலைஏறினாய். எப்படி குழந்தையை மீட்டாய் என சரமாரியாக கேள்விகளை கேட்டனர்

அந்த பெண் அமைதியாக கூறினாள்

வேறொன்றும் இல்லை இவள் உங்கள் குழந்தை அல்ல என் குழந்தை
அதுதான் அம்மா



- முக நூல்
sawmya
sawmya
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 2919

Back to top Go down

குட்டிக்கதை. Empty Re: குட்டிக்கதை.

Post by sawmya Mon Sep 30, 2013 3:34 pm

காகமும் நாய்க்குட்டியும்
--------------------------------------
ஒரு வீட்டில் நாய்க்குட்டியொன்றை எடுத்து வளர்த்து வந்தார்கள்.அந்த நாய்க் குட்டி காகத்துடன் நட்பாக இருந்தது. ஒரு நாள் காகம் மிகவும் கவலையுடன் அமர்ந்திருந்தது.

இதைக் கண்ட நாய்க் குட்டி காகத்திடம் சென்று.

என்ன காக்கையாரே! ஏன் ஒன்றும் பேசாமல் வருத்தமாக இருக்கிறீர்? என்று கேட்டது.

அதற்கு காகம், மனிதர்கள் மற்றப் பறவைகளை அன்புடன் வளர்க்கின்றார்கள். அவைகளின் செயல்களைப் பாராட்டுகின்றார்கள் ஆனால் என்னை வெறுத்து. கல்லால் எறிந்து துரத்துகிறார்களே ஏன்? என்று கேட்டது காகம்.

இதற்குக் காரணம் உங்கள் தீய குணங்கள்தான். இதை நீங்கள் இல்லாது செய்தால் உங்களையும் அன்பாக நடத்துவார்கள், என்றது நாய்க் குட்டி

எங்களிடம் அப்படியென்ன தீய குணங்கள் உள்ளன? கடைமை, சுத்தம், இப்படிப் பல நல்ல குணங்களில் நாங்கள்தான் சிறந்தவர்கள்!என்று சொன்னது காகம்.

உண்மைதான்! என்றது நாய்க் குட்டி

பகிர்ந்துண்ணும் பண்பைக் கற்றுத்தந்ததும் நாங்கள்தான்! என்று பெருமையோடு சொன்னது காகம்.

ஆமாம் அதுவும் உண்மைதான்! என்று மறுபடியும் சொன்னது நாய்க்குட்டி.

இப்படி நல்ல குணங்கள் எம்மிடம் இருந்தும், மற்றப் பறவைகளுக்கு உள்ள மதிப்பு எங்களுக்கு இல்லையே ஏன்?

குயில் கூவும்போது அதன் இனிமையை இரசிக்கிறார்கள். மயிலாடும் போது அதை இரசித்துப் பாராட்டுகிறார்கள். கிளியை வீட்டில் வளர்த்து பேசக் கற்றுக் கொடுக்கிறார்கள்.அனால் எவ்வளவோ நல்ல குணங்கள் இருந்தும் எம்மினத்தைக் கண்டாலே துரத்துகிறார்களே ஏன்? என்று மீண்டும் கேட்டது காகம்.

ஏன் என்று நான் சொல்லுகிறேன். உங்களிடம் எவ்வளவு நல்ல குணங்கள் இருந்தாலும். உங்களிடம் இருக்கும் சில தீய குணங்களால் தான் மனிதர்கள் உங்களை வெறுக்கிறார்கள், என்று கூறியது நாய்க்குட்டி

அப்படி என்ன தீய குணங்கள்? என்று கேட்டது காகம்.

திருடுதல், ஏமாற்றுதல், என்று சொன்னது நாய்க்குட்டி. காகம் தலை குனிந்தது.

நீதி: ஒருவரிடம் எவ்வளவு நல்ல பண்புகள் இருந்தாலும். அவரின் ஒரு சிறு தீயசெயல் அவரை, அவரின் அத்தனை நல்ல பண்புகளில் இருந்தும் மறைத்து அந்தத் தீயசெயலே முன்னிற்கும்.

- முக நூல்
sawmya
sawmya
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 2919

Back to top Go down

குட்டிக்கதை. Empty Re: குட்டிக்கதை.

Post by sawmya Mon Sep 30, 2013 3:35 pm

ஒரு செல்வந்தர் இருந்தார்.

ஒரு நாள் அவர் தன் தோட்டத்தில் விளைந்த வாழைக்குலை ஒன்றை பணியாளிடம் கொடுத்துக் கோவிலில் கொடுக்கச் சொன்னார்.

ஏழைப் பணியாள் எடுத்துச் செல்லும் வழியில் அவனுக்கு அதிகப் பசியெடுக்கவே அக்குலை யிலிருந்து இரண்டு பழங்களைப் பிய்த்துச் சாப்பிட்டு விட்டான்..

மீதிப் பழங்களை கோவிலில் கொடுத்தான்.

அன்றிரவு செல்வந்தர் ஒரு கனவு கண்டார்.கனவில் இறைவன் வந்து நீஎனக்குக் கொடுத்த இரண்டு பழங்களை நான் சாப்பிட்டேன்;ருசியாக இருந்தது என்றான்.

செல்வந்தனுக்கு மிகக் கோபம் வந்தது.

ஒரு குலை பழம் கொடுத்திருக்க இரண்டு மட்டுமே இறைவனுக்குப் போய்ச் சேர்ந்திருக்கிறது. மீதி என்னவாயிற்று எனக் கோபப் பட்டான்.

மறு நாள் காலை அந்தப் பணியாளைக் கூப்பிட்டு விசாரித்தான்.

அவன் இரண்டு பழங்களைப் பசியினால் தான் சாப்பிட்டதை ஒப்புக் கொண்டு ,மீதிக் குலையைக் கோவிலில் கொடுத்து விட்டதைச் சொன்னான்.

செல்வந்தனுக்குப் புரிந்தது .

அந்த ஏழை சாப்பிட்ட பழம் மட்டுமே இறைவனைச் சென்று அடைந்திருக்கிறது என்று!

- சாகுல் ஹமீது
sawmya
sawmya
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 2919

Back to top Go down

குட்டிக்கதை. Empty Re: குட்டிக்கதை.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum