தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


பிரதோஷ வரலாறும், வழிபாட்டு, பூஜா பலன்களும்

View previous topic View next topic Go down

பிரதோஷ வரலாறும், வழிபாட்டு, பூஜா பலன்களும் Empty பிரதோஷ வரலாறும், வழிபாட்டு, பூஜா பலன்களும்

Post by முழுமுதலோன் Tue Sep 17, 2013 8:16 am

பிரதோஷ வரலாறும், வழிபாட்டு, பூஜா பலன்களும்
பிரதோஷ வரலாறும், வழிபாட்டு, பூஜா பலன்களும் Pradhosahm

பிரதோஷ வழிபாடு தோன்றிய வரலாறு

அகிலாண்டேஸ்வரி ஒருமுறை தேவலோக கன்னிகை ஒருத்திக்கு, அவளது நடனத்தை மெச்சும் வண்ணம்தனது கழுத்தில் இருந்த மலர் மாலையை பரிசாக தர, கன்னிகையோ அதனை எதிரில் வந்து கொண்டிருந்த துர்வாச முனிவரிடம் கொடுத்து சென்றாள். தேவலோகம் சென்ற துர்வாசர், அம் மாலையை இந்திரனுக்கு பரிசளிக்க, மாலயின் மகிமயை அறியாத இந்திரன் . அம் மாலையை தனது யானையிடம் த்ர, யானை மாலையை தனது கால்களால் மிதித்து சிதைத்தது. கோபத்திற்கு பெயர் பெற்றவராயிற்றே துர்வாசர். இந்திரனையும், தேவர்க்ளையும் ஒரு சேர சபித்தார். சாப விமோஷனம் பெற வேண்டி, தேவரும், இந்திரனும் பரந்தாமனை வேண்டினர். மன்ம் இளகிய பரந்தாமனும், திருப்பாற்கடலை கடைந்து, அதிலிருந்து வெளிப்படும் அமிர்தத்தை அருந்துமாறு கூறினார்.

மந்திரகிரி மலையை மத்தாகவும், வாசுகி என்ற பாம்பை கயிறாகவும் கொண்டு, அசுரர்கள் பாம்பின் தலைப் பகுதியை அசுரரும் வால் பகுதியை தேவரும் பிடித்து கடைய தொடங்கினர். மலை சாய்ந்தது. உடனே, மஹாவிஷ்ணு "கூர்ம அவதாரம் " எடுத்து மலையை தாங்கி பிடித்தார். அன்று 10 வது திதியான தசமி திதியாகும். மெலும் கடையும் பொழுது, வாசுகி வலி தாங்காமல் விஷம் கக்க, அப்பொழுது கடலிலும் நஞ்சு தோன்ற இரண்டும் சேர்ந்து "ஆலகாலம் " என்ற கடுமையான விஷமானது.
இதைக் கண்ட வானவர் அஞ்சி நடுங்க, திருமாலும் நான்முகனும் அவர்களை கயிலை சென்று பரமனிடன் தஞ்சமடையுமாறு சொன்னார்கள். வானவரும் அவ்வாறே செய்ய, கயிலை நாதன், தனது தொண்டனான சுந்தரனை அழைத்து அந்த ஆலகால விஷத்தை எடுத்து வரச் சொன்னார். யாராலும் அணுக முடியாத அந்த விஷத்தை சுந்தரன் நாவல் பழம் போல் உருட்டி எடுத்து வர, முக்கண்ணன் அதனை, எல்லோரையும் காக்கும் பொருட்டு தனது வாயில் இட, பரமன் உண்டால் பெரும் கேடு விழையுமே என அஞ்சிய உமையாள் பரமனின் கண்டத்தில் தனது கை கொண்டு தடுக்க, விஷமானது சிவனின் கண்டத்திலேயே தங்கி சிவனாரது கழுத்து நீல நிறமானது. பெருமானும் "நீலகண்டரானார்". இது நடந்தது ஏகாதசி அன்று மாலை பொழுதில். பின்னர் தேவர் சிவனின் கூற்றுப்படி பாற்கடலை மீண்டும் கடைந்தனர். மறுநாளான துவாதசி திதியன்று பாற்கடலில் அமிர்தம் தோன்ற தேவர்கள் அதனை உண்டு சாகா வரத்தை திரும்ப பெற்றனர்.

ஆனால், சிவனை மறந்தனர். பின்னர், பிரம்ம தேவர், தேவர்களின் குற்றத்தை உணர்த்த, தேவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து கயிலை நாதனை அடைந்து மன்னித்தருள வேண்டினர். சிவ பெருமானும், மனம் கனிந்து தனக்கு முன்னால் இருந்த ரிஷப வாகனத்தின் இரு கொம்புகளுக்கு இடையில், அம்பிகை காண திருநடனம் புரிந்தார். அனைவரும் அதை கண்டு களித்து பெருமானை வணங்கினர். இது நடந்தது திரயோதசி திதியன்று மாலை வேளையில். இதுவே பிரதோஷ காலம் என வழிபடப்படுகிறது. ( ஒவ்வொரு திரயோதசி திதியன்றும் மாலை வேளை 4:30 முதல் 06:00 வரை ) பிரதோஷ வேளையாகக் கொண்டு சிவ பெருமானுக்கான சிறப்பு பூஜைகள் ஒவ்வொரு சிவாலயங்களிலும் நடைபெறும். பிரதோஷ பூஜை சிவ பெருமானுக்கு மட்டுமே உரிய பூஜை. சிவ பெருமனை விஷ்ணு, பிரம்மன் முதலிய அனைத்து தெய்வங்களும் வழிபடும் நேரம். எனவே, இக் காலங்களில் வேறு எந்த கடவுளருக்கும் பூஜைகள் நடைபெறாது. சிவாலயங்களில் உள்ள மற்ற கடவுளரின் நடைகள் சார்த்தப்பட்டிருக்கும் அல்லது திரையிடப்பட்டிருக்கும்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

பிரதோஷ வரலாறும், வழிபாட்டு, பூஜா பலன்களும் Empty Re: பிரதோஷ வரலாறும், வழிபாட்டு, பூஜா பலன்களும்

Post by முழுமுதலோன் Tue Sep 17, 2013 8:20 am

பிரதோஷ வரலாறும், வழிபாடும்

பிரதோஷ வழிபாடு மிகச் சிறந்ததொரு சிவாலய வழிபாடு. முன்னொரு சமயம், அன்னை பராசக்தி தேவலோக கன்னிகை ஒருத்திக்கு அளித்த அன்புப் பரிசான பூமாலையை, அக் கன்னிகை எதிரில் வந்த துர்வாச முனிவருக்கு அளிக்க, பின்னர் இந்திர லோகம் சென்ற துர்வாசர் அந்த மாலையை தேவேந்திரனுக்கு அளித்தார். மாலையின் மகிமையை அறியாத இந்திரன், அதனை தன் யானையிடம் கொடுக்க, யானையோ தன் கால்களால் மாலையை சிதைத்தது. வெகுண்டார் கோபத்திற்கு பெயர் பெற்ற துர்வாசர். அனைத்து தேவர்களையும் சபித்தார். கலங்கிய தேவர் அனைவரும், பரந்தாமனிடம் சென்று முறையிட, பாற்கடல் பரந்தாமனோ, திருப்பாற்கடலை கடைந்து அதில் வரப் போகும் அமிர்தத்தை உண்டால் சாப விமோஷனம் பெறலாம் என்றார். அசுரர்களையும் அமிர்தம் தருவதாக சொல்லி துணைக்கழைத்த தேவர்கள், வாசுகி என்ற நாகராஜனை கயிறாக்கி, மந்திர கிரி மலையை மத்தாக்கி திருப்பாற் கடலை கடையத் தொடங்கினர். மலை சாய, பரந்தாமன் கூர்ம அவதாரம் எடுத்து, கடலின் கீழ் சென்று மலையை தாங்கிப் பிடித்தார். வலி பொறுக்க மாட்டாது வாசுகி விஷம் கக்க அங்கே ஆல கால விஷம் உண்டானது. நடுங்கினர் தேவர்கள். பரமனிடம் தஞ்சமடைந்தனர்.

பரமனும், அங்கிருந்த சுந்தரரை அழைத்து, ஆலகால விஷத்தை திரட்டி வரச் செய்து உண்டார். அச் சமயம் அங்கு வந்த உமையாள், பரமன் உண்டால் அகிலமே ஸ்தம்பிக்குமே என எண்ணி, தன் கை கொண்டு சிவனது கண்டத்திலேயே விஷத்தை தடுக்க, சிவனது கண்டம் நீல நிறமானது. விஷத்தின் கடுமையால் சிறிது நேரம் மயங்கினார் ஈசன். அனைத்து தேவர்களும் பரமனை நினைத்து வழிபட்டனர். அது ஒரு மாலைப் பொழுது. அந்த நேரமே " பிரதோஷ காலமானது ". ஒவ்வொரு திரயோதசி மாலை வேளையும் சிவாலயங்களில் பிரதோஷ வழிபாடு நடைபெறும் நேரமாகும். ( மாலை 4.30 முதல் 6.30 வரை ). மயக்கம் தெளிந்து எழுந்த சிவ பெருமான், நந்தி தேவரின் இரு கொம்புகளுக்கிடையே நடனம் ஆடினார். இதனாலேயே, பிரதோஷ வேளைகளில் நந்தி தேவருக்கு விசேஷ பூஜைகள் நடைபெறுகிறது.


பிரதோஷ காலங்களும், விரத மகிமைகளும்

ஐந்து வகையான பிரதோஷ காலங்கள் உண்டு. அவையாவன 1. நித்திய பிரதோஷம் 2. பஷ பிரதோஷம் 3. மாத பிரதோஷம் 4. மஹா பிரதோஷம் மற்றும் 5. பிரளயப் பிரதோஷம். தினமும் வரும் மாலை வேலைகள் நித்திய பிரதோஷம் எனவும், வளர்பிறை பிரதோஷங்கள் பஷ பிரதோஷம் எனவும், தேய்பிறை பிரதோஷங்கள் மாத பிரதோஷம் எனவும், தேய்பிறை சனிக் கிழமைகளில் வரும் பிரதோஷம் மஹா பிரதோஷம் அல்லது சனிப் பிரதோஷம் எனவும், பிரளய காலத்தில் வரும் பிரதோஷங்கள் பிரளய பிரதோஷம் எனவும் வழிபடப்படுகிறது.

பிரதோஷ காலங்களில் உபவாசம் இருந்து சுவாமிக்கும், அம்பாளுக்கும் அபிஷேக, ஆராதனைகள் செய்ய வேண்டும். பிரதோஷ காலங்களில் சிவ பெருமான் அனைத்தையும் தன்னுள் அடக்கிக் கொள்கிறார். எனவே இக் காலங்களில் ஈஸ்வரனை நினைத்து தியானம் செய்வது மிகச் சிறந்த பலன் அளிக்கும். " சிவாய நம " என்ற ஐந்தெழுத்து மந்திரத்தை உச்சரிப்பது மிகுந்த நன்மைகளை தரும். சிவ புராண பாடல்களை பாடியும் எம் பெருமானை வழிபடலாம். சிவ பெருமான் ஆலகால விஷத்தை உண்டு மயங்கிய நேரம் " கார்த்திகை மாத சனிக் கிழமை " தினம். பிரதோஷ தினம், மும்மூர்த்திகளும், தேவர்களும் ஒன்று சேர்ந்து உபவாசம் இருந்த திருநாளாகும். கார்த்திகை மாத சனிப் பிரதோஷம் மிகச் சிறப்பு.

பிரதோஷ பூஜைக்கான அபிஷேக பலன்கள்

பால்
நோய் தீரும். ஆயுள் கிட்டும்
தயிர்
பலவிதமான வளங்கள் கிடைக்கும்

தேன்
இனிய சாரீரம் கிடைக்கும்

பழங்கள்
விளைச்சல் பெருகும்

பஞ்சாமிர்தம்
செல்வ செழிப்பு ஏற்படும்
நெய்

முக்தி பேறு கிடைக்கும்

இளநீர்
நல்ல மக்க்ட்பேறு கிட்டும்

சர்க்கரை
எதிர்ப்புகள் விலகி ஓடும்

எண்ணெய்
சுக வாழ்வு கிடைக்கும்

சந்தனம்
சிறப்பான சக்திகள் பெறலாம்

மலர்கள்
தெய்வ தரிசனம் கிடைக்கும்





Last edited by முழுமுதலோன் on Tue Sep 17, 2013 8:27 am; edited 1 time in total (Reason for editing : தெளிவாக படிக்க)
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

பிரதோஷ வரலாறும், வழிபாட்டு, பூஜா பலன்களும் Empty Re: பிரதோஷ வரலாறும், வழிபாட்டு, பூஜா பலன்களும்

Post by முழுமுதலோன் Tue Sep 17, 2013 8:22 am

பிரதோஷ ஸ்தோத்திரம்
ஓம் பவாய நமஓம் ருத்ராய நமஓம் மிருடாய நம
ஓம் ஈசானாய நமஓம் சம்பவே நமஓம் சர்வாய நம
ஓம் ஸ்தாணவே நம
ஓம் உக்ராய நமஓம் பார்க்காய நம
ஓம் பரமேஸ்வராய நமஓம் மஹா தேவாய நம 

நந்தி தேவருக்கு பூஜைகள் முடிந்த பின்னர் பிரதோஷ புஜைகள் மூலவருக்கு செய்யப்படும்.மூலவருக்கு தீபாராதனை முடிவுற்ற பின்னர் நந்தி தேவரது காதுகளில் யாரும் கேட்கா வண்ணம் நமது வேண்டுதல்களை சொல்ல வேண்டும். தேவர்களின் பெரும் குறைகளையே தீர்த்த நந்தி பெருமான் நமது குறைகளையும் நிச்சயம் சர்வேஸ்வரனிடம் கொண்டு சேர்ப்பார் என்பது நிச்சயம். தொடர்ந்து 12 வாரங்கள் செய்ய, 13 வது வாரம் நமது குறைகள் தீர்ந்ததை உணரலாம். மூலவரின் தீபாராதனையை நந்தி தேவரின் இரு கொம்புகள் வழியே காண்பது சிறந்த பலனை கொடுக்கும். பிரதோஷ காலங்களில் சிவ பெருமான் நந்தி தேவரின் இரு கொம்புகளுக்கிடையே திருநடனம் புரிகின்றார் என்பது ஐதீகம். இத்தகைய தரிசனம் சகல பாவங்களையும் போக்கும். அனைத்து விதமான தோஷங்களையும் நீக்கும்.
[url=http://www.bharathtemples.in/Hindu Sripukal/Hindu Sripukal.htm]http://www.bharathtemples.in/Hindu%20Sripukal/Hindu%20Sripukal.htm[/url] 
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

பிரதோஷ வரலாறும், வழிபாட்டு, பூஜா பலன்களும் Empty Re: பிரதோஷ வரலாறும், வழிபாட்டு, பூஜா பலன்களும்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum