தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


பீர்பால் கதைகள் தத்துவம் நிறைந்தவை.

View previous topic View next topic Go down

பீர்பால் கதைகள் தத்துவம் நிறைந்தவை. Empty பீர்பால் கதைகள் தத்துவம் நிறைந்தவை.

Post by muthuaiyer Mon Sep 23, 2013 5:19 pm

அக்பர் பீர்பல், இவர்கள் இருவரையும் இணைத்து பல கதைகள் எழுதப்பட்டுள்ளன. இவையாவும் அக்பர் சாம்ராஜ்யத்தில் நடந்ததா இல்லையா என்பது கம்பராமாயணம் ஒரு நடந்த சம்பவமா, இல்லை அது வால்மீகி முனிவரால் எழுதப்பட்ட ஒரு முழு நீளச் சித்திரமா என்பதைப்போன்ற ஒன்றானாலும், இவர்களை மேற்கோள் காட்டி பல வாழ்க்கை நீதிகள் அவற்றில் சொல்லப் பட்டிருக்கிறது என்பதுதான் நாம் அறியவேண்டிய ஓர் உண்மை. அக்பர்-பீர்பல் கதைகளில் பல வாழ்க்கைப் பிரச்சனைகளை, இக்கட்டான சூழல்களைச் சந்திக்கும்போது அதிலிருந்து விடுபடவும், வாழ்க்கையில் நாம் வெற்றிகாணவும் அவற்றுள் பல தத்துவங்கள் பொதிந்து கிடக்கின்றன. இவற்றையெல்லாம் உணர்ந்து நான் சொல்லும் ஓர் பீர்பல் கதையைப் பார்ப்போம்.

பீர்பல் சிறுபிராயத்திலிருக்கும்போது அக்பர் மத்தியப் பிரதேசத்திலிருக்கும் அவரது கிராமத்திற்கு ஒரு முறை வந்தார். அப்போது அக்பர், “என்னைப்போல் எவனொருவன் என்னை அச்சடித்ததுபோல் சித்திரமாக வரைகிறானோ, அவனுக்கு ஆயிரம் பொற்காசுகள் அளிக்கப்படும்” என்று அறிவித்திருந்தார். ஆயிரம் பொற்காசுகளென்றால் அந்தக்காலத்தில் சாமான்யமான ஒன்றா? பலர் அந்தப்போட்டியில் கலந்துகொள்ள வரிசையில் நின்றனர். அதில் மகேஷ் தாஸ் என்னும் பீர்பலும் ஒருவர்.

எல்லோரும் தாம் வரைந்திருந்த அக்பரின் ஓவியத்தைக்கொண்டு அரசனிடம் காண்பித்தார்கள். அரசனுக்கு எல்லாவற்றையும் பார்த்து மனம் ஒப்பவில்லை. கடைசியாக அந்த வரிசையில் மகேஷ் தாஸ் வந்தார். அக்பர் அவரைப் பார்த்து, “நீ எதைக் காட்டப் போகிறாய்?” என்று விரக்தியோடு வினவினார் அக்பர். உடனே மகேஷ் தாஸ் தான் தன்னுடன் எடுத்துவந்திருந்த தன்னையே காட்டும் நிலைக்கண்ணாடி ஒன்றைக் காட்டி, “பாருங்கள் அரசே, நீங்கள் நீங்களாகவே தத்ரூபமாக இதிலிருக்கிறீர்கள்,” என்று அதைக் காட்டியவுடன் அக்பருக்கு மனம் புளகாங்கிதமாகியது. மேலும், மகேஷ் தாஸின் சமயோஜித ஆறிவுக்கூர்மையைப் பாராட்டி, ஆயிரம் பொற்காசுகளையும் வழங்கி, தனது ராஜ முத்திரை பதித்த மோதிரத்தையும் அவருக்கு பரிசாக அளித்தார் அக்பர். அதுமட்டுமன்றி, பிற்காலத்தில் உனக்கு விருப்பப்பட்டபோது வந்து நம் தலைனகரான ஃபத்தேபூர் சிக்கிரியில் என் அரண்மனைக்கு வந்து என்னைக் காணலாம், என்றும் அழைப்பு விடுத்தார்.

இது ஒரு சாதாரண கதையோ, சம்பவமாகவோ தோன்றினாலும் இதில் பொதிந்திருக்கும் கருத்து யாதெனில், “வியாபாரி என்பவன் வாடிக்கையாளரின் மன விருப்பமறிந்து பொருளை வழங்கினால் அவன் வியாபாரம் செழிக்கும்” என்ற கருத்து மிக அழகாக இக்கதையில் சொல்லப்பட்டிருக்கிறது. மேலும் இதில் பொதிந்து கிடக்கும் மற்றொரு உண்மை என்னவென்றால் மாவரசன் அக்பராயிருந்தாலும், யாரும் அவன் மனம் என்ன வேண்டுகிறது என்பதை எவரால் கொடுக்க முடியும்? அதனால்தான் மகேஷ் அவரது பிரதிபிம்பத்தையே கண்ணாடியில் காட்டினான். இது ஒரு மனோதத்துவ ரீதியான உண்மையென்பதை நாம் அறியவேண்டும்.
muthuaiyer
muthuaiyer
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 63

Back to top Go down

பீர்பால் கதைகள் தத்துவம் நிறைந்தவை. Empty Re: பீர்பால் கதைகள் தத்துவம் நிறைந்தவை.

Post by sawmya Mon Sep 23, 2013 5:27 pm

சூப்பர் சூப்பர் சூப்பர்
sawmya
sawmya
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 2919

Back to top Go down

பீர்பால் கதைகள் தத்துவம் நிறைந்தவை. Empty Re: பீர்பால் கதைகள் தத்துவம் நிறைந்தவை.

Post by muthuaiyer Mon Sep 23, 2013 6:48 pm

அந்த ராஜ மோதிரம் வாங்கி பல ஆண்டுகள் ஓடின. காலச்சக்கரன் சுழர்ச்சியில் மகேஷ் தாஸ் இளமை எய்தினார். ஒரு நாள் தன் அன்னையிடம் விடைபெற்றுக்கொண்டு அக்பர் தங்கியிருக்கும் ஃபதேபூர் சிக்கிரியின் அரண்மணைக்குக் கால் நடையாகச் சென்றார். அந்த நகரை அடைந்தவுடன் கடைவீதிகளும், ஒட்டகங்களின் அணிவகுப்பும், அங்குள்ள மக்களின் உற்சாகமும் மகேஷ் தாஸை வெகுவாகக் கவர்ந்தது. சிறிது நேரத்தில் அவர் அக்பரின் அரண்மனை வாயிலை அடைந்தார். அங்கு காவலாளி அவரை உள்ளே போக அனுமதிக்காது தடுத்தான்  அவர் காவலாளியிடம் தன் கை அசைத்து வாதாடும்போது மகேஷ் தாஸின் கையிலிருக்கும் ராஜ முத்திரை பதித்த மோதிரத்தைக் கண்டவுடன், "நான் உள்ளே செல்ல அனுமதிக்கிறேன். ஆனால், அதற்கு பிரதிபலனாக உள்ளே உனக்கு என்ன கிடைக்கிறதோ அதில் பாதியை நீ திரும்பிவரும்போது எனக்குக் கொடுக்க வாக்குறுதி தரவேண்டும்" என்று கூறினான். சற்று யோசித்த பிறகு மகேஷ் தாஸ் அதற்கு ஒப்புக்கொண்டு உள்ளே போனார்.

போகும் வழியில் பூத்துக் குலுங்கும் நந்தவனங்களை எல்லாம் ரசித்த வண்ணம் அக்பரைக் காண ராஜதர்பாரில் அமர்ந்திருந்தவர் மத்தியில் இவரும் ஒருவராக அமர்ந்தார். சிறிது நேரத்தில் சக்கரவர்த்தி அக்பர் அரசவைக்கு வந்தார். ஒவ்வொருவராக அவரிடம் சென்று அறிமுகம் செய்துகொண்டு சன்மானங்களை வாங்கிச் சென்றனர். மகேஷ் தாஸின் முறை வந்ததும் மகேஷ் அக்பரிடம் சென்று தன்னை யாரென்று விவரித்து, முன்பு நடந்த சம்பவத்தை அவருக்கு நினைவுகூறி அரசமுத்திரை பதித்த மோதிரத்தை அவரிடம் காட்டவே, "ஓ! அந்த பாலகனா நீங்கள். வாருங்கள், வாருங்கள். உங்களுக்கு நான் என்ன பரிசு கொடுக்க வேண்டும். உங்களுக்கு வேண்டியதைக் கேளுங்கள்" என்று அன்பைச் சொரிந்தார் அரசர். உடனே ம்கேஷ், "எனக்கு நூறு சாட்டையடி கொடுத்தால் போதும்" என்று வேண்டினார். அரசர் நகைப்பும், திகைப்பும் மேலிட, "உங்களை ஏன் சாட்டையால் அடிக்க வேண்டும். நீங்கள் ஒரு தவறும் செய்யவில்லையே?, என்று வினவிட, மகேஷ் "நீங்கள்தானே சொன்னீர்கள். நான் எதுகேட்டாலும் தருவேன் என்று. அதான் 100 சாட்டையடி கேட்டேன். தயவுசெய்து கொடுங்கள்," என்று வேண்டினான்.

அரசகட்டளை நிறைவேற்றப் படவேண்டும், எனவே காவலாளியைக் கூப்பிட்டு மகேஷுக்கு 100 சாட்டையடி கொடுக்கச் சொன்னார். ஒன்றும் பேசாமல் அடியை வாங்கிக்கொண்டார். 50-வது அடி அடித்தவுடன், "நிறுத்துங்கள்" என்று மகேஷ் கத்தவே, அரசர் "தாங்கள்தானே 100 சாட்டையடி கேட்டீர்கள். கட்டளையிட்டேன். நிறைவேற்றுகிறார்கள். அதை எப்படி பாதியில் நிறுத்த இயலும்?" என்று வினவினார். மகேஷ் உடனே, "உண்மைதான் 100 அடி கொடுத்துத்தான் ஆகவேண்டும். ஆனால் அதற்குள் நான் கொடுத்த வாக்கு எனக்கு ஞாபகத்திற்கு வந்தது. அதனால் தான் நிறுத்தச் சொன்னேன்" என்றார்.

"வாக்கு கொடுத்தீர்களா? யாருக்கு? எப்போது? எதற்கு?" என்று சந்தேகம் தோய்ந்த முகத்துடன் அரசர் வினவினார். "அரசே, வாசலில் காவல் காக்கும் காவலாளி உனக்கு அரசரிடமிருந்து உள்ளே என்ன கிடைக்கிறதோ அதில் பாதி எனக்குக் கிடைப்பதாக உறுதியளித்தால் உள்ளே விடுகிறேன் என்றான். நான் அதற்கு சம்மதித்து உள்ளே வந்தேன். அதனால்தான் எனக்குக் கிடைக்கும் 100 சாட்டையடியில் 50-ஐ நான் வாங்கிக்கொண்டுவிட்டேன், மீதி 50 தயவுசெய்து அவருக்குக் கொடுங்கள்" என்று வேண்டினான் மகேஷ் தாஸ்.

தன் நாட்டில் லஞ்சம் தலைதூக்கியாடும் அவலத்தை நினைந்து அரசன் உடனே அந்த காவலாளியை அழைத்துவரச் சொல்லி சாட்டையடி கொடுக்கச் சொன்னார். கட்டளை நிறைவேற்றப்பட்டு, மகேஷ் தாஸை அருகில் அழைத்து, "நன்றி நண்பரே லஞ்சம் கேட்ட ஒரு காவலாளியை எனக்கு அடையாளம் காட்டிக் கொடுத்தீர்கள். அதில் உன்னத சேவையும் இருந்தது, பொன்,பொருளைக் கேட்காது சாட்டையடிகேட்டு துன்பத்துக்கும், கேளிக்கும் சபையில் ஆளான தாங்களை எனக்கு மிகவும் பிடித்துவிட்டது. இனி உங்கள் பெயர் மகேஷ் தாஸ் இல்லை. பீர்பால் என்று அழைக்கப்படுவீர்கள். நீங்களும் என் அரண்மனையிலேயே தங்கலாம். அவ்வப்பொது எனக்கு வினையமாகப் பேசி களிப்பூட்டவும், நல்ல உண்மைகளைத் தெளிவு படுத்தவும் உதவியாக இருக்கும் என்று வேண்டவே, பீர்பாலும் அதற்கு சம்மதித்து அரசருடனேயே தங்கினார். சிலர் இதனால் ஆனந்தப்பட்டாலும், பலர் அவர்மீது பொறாமைகொண்டனர்.

இதிலிருந்து கண்டறியும் உண்மை என்னவென்றால், அன்று அரசன் கொடுக்கும் சன்மானத்திற்கு பீர்பல் இசைந்திருந்தால் அவருக்கு ஒரு பொற்கிழி மட்டுமே கிடைத்திருக்கும். ஆனால் ஒருவன் கிடைக்கும் சந்தர்ப்பத்தை எவ்வளவு அதிகம் பயன்படுத்தமுடியுமோ அவ்வளவுக்குப் பயன்படுத்தவேண்டும் என்ற தத்துவத்தை பீர்பால் இக்கதைமூலம் நமக்குச் சொல்லியிருக்கிறார்.


Last edited by முரளிராஜா on Wed Sep 25, 2013 6:33 pm; edited 1 time in total (Reason for editing : பாராக்களின் இடைவெளிக்காக)
muthuaiyer
muthuaiyer
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 63

Back to top Go down

பீர்பால் கதைகள் தத்துவம் நிறைந்தவை. Empty Re: பீர்பால் கதைகள் தத்துவம் நிறைந்தவை.

Post by கவிப்புயல் இனியவன் Mon Sep 23, 2013 7:25 pm

நன்றி நன்றி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

பீர்பால் கதைகள் தத்துவம் நிறைந்தவை. Empty Re: பீர்பால் கதைகள் தத்துவம் நிறைந்தவை.

Post by muthuaiyer Wed Sep 25, 2013 6:10 pm

பீர்பலுக்கு அரசருடன் எவ்வளவு நெருக்கம் ஏற்பட்டதோ அவ்வளவுக்கவ்வளவு மற்றவர் மனதில் பொறாமையும் அதிகரித்தது. அதிலும் குறிப்பாக அக்பருக்கு அந்தரங்கமான முடி திருத்துபவன் பீர்பலுக்கு ஒரு வழிகட்டுவிடுவதாகவே தீர்மானித்து ஒரு திட்டம் வகுத்தான். அதன்படி, மறுநாள் அக்பருக்கு முடிதிருத்தும்போது, "அரசே, நான் நேற்று ஒரு கனவு கண்டேன். அதில் சொர்க்கத்திலிருக்கும் தங்களது தந்தை அந்தக் கனவில் வந்து உரையாடினார்" என்று பேச்சை ஆரம்பித்தவுடன், அரசர் ஆவல் மிகுந்தவராய், "என் தந்தை அங்கு சுகமாக இருக்கிறாராமா?" என்று கேட்டார். "அதான் எனக்கு மிக வருத்தமாக இருக்கிறது.

சொர்க்கத்தில் தங்கள் தந்தையை மகிழ்விக்கும் அளவுக்கு விகடமாகப் பேச துணை யாருமில்லையாம். அதனால் அவர் மிகவும் விரக்தியுடன் காணப்பட்டார்," என்று முடிதிருத்துபவன் சொன்னவுடன் அரசர் இதற்கு தகுந்த ஆளாக யாரை சொர்க்கத்துக்கு அனுப்புவது என்று யோசித்தபோது, பீர்பல்தான் சரியான ஆள் என்று மனதிலெண்ணி, மறுநாள் பீர்பலை அரசவைக்கு வரவழைத்தார். பீர்பல் வந்தவுடன், "பீர்பல், சொர்க்கத்தில் என் தந்தைக்கு வினையமாகப் பேசுவதற்கு தகுந்த ஆள் அங்கு யாரும் இல்லையாம்.

ஆகையால் தங்களை உடனே சொர்க்கத்துக்கு அனுப்பலாம் என்று தீர்மானித்துள்ளேன். எனவே, நீங்கள் உடனே சொர்க்கத்துக்குப் போக தயாராகுங்கள்" என்று கட்டளையிட்டார். 'இது என்ன இக்கட்டான சூழ்நிலை, சொர்க்கத்துக்குப் போகவேண்டுமென்றால் உயிரையல்லவா மாய்க்கவேண்டும்' என்று எண்ணியவாறே பீர்பல் எதற்கும் ஒருவாரம் அவகாசம் கேட்போம், அதற்குள் ஏதாவது பண்ணலாம் என்று முடிவெடுத்து, "மன்னா, நான் சொர்க்கத்துக்குப் போகிறேன். ஆனால், எனக்கு ஒருவாரம் அவகாசம் வேண்டும்" என வேண்டினார்.

அக்பர் அதற்கு சம்மதித்து விட்டு இந்த ஒருவாரத்தில் பீர்பல் சொர்க்கத்துக்குப் போக எல்லா ஏற்பாடுகளும் செய்யுமாறு கட்டளையிட்டார். வீட்டுக்கு வந்த பீர்பல் வெகுநேரம் யோசித்த பிறகு ஒரு முடிவுக்குவந்து அரசரிடம் சென்றார், "மாமன்னா, எங்கள் குல வழக்கப்படி ஒருவர் இறந்தால் அவர்களைப் புதைப்பதுதான் வழக்கம். ஆகவே என்னையும் ஒருவாரத்திற்குப் பின் புதைத்து சமாதி எழுப்பிவிடுங்கள்" என்று வேண்டினார்.

அரசர் அதற்கு ஒப்புக் கொண்டு அதற்கேற்றவண்ணம் ஏற்பாடுகள் செய்யக் கட்டளையிட்டார். பீர்பல், தான் சமாதியாக வேண்டிய இடத்தை அரண்மனைக்கருகிலேயே சுட்டிக் காட்டி அங்கு ஆழமான குழி தோண்டச் சொன்னார். பீர்பலின் வீடு அரண்மனைக்கு அருகிலேயே இருந்ததால் அந்த ஒருவார அவகாசத்தில் யாருக்கும் தெரியாமல் ஒரு சுரங்கப்பாதையை சமாதி குழி வரைத் தோண்டினார்.

சமாதியாகும் நாளும் வந்தது. எல்லோரும் அக்பரை தகுந்த மரியாதைகளுடன் குழிக்குள் இறக்கி சமாதி எழுப்பினர். பீர்பல் சமாதியானவுடன் தான் கட்டிய சுரங்கப் பாதை வழியே தன் வீட்டை அடைந்தார். ஆறுமாத காலம் தலைமறைவாய் யாருக்கும் தெரியாமல் தன் வீட்டிலேயே அடைந்து கிடந்தார். ஆறுமாதம் கழித்து ஒரு நாள் பீர்பல் பெருத்த மீசை, தாடியுடன் அக்பரின் அரசவைக்கு வந்தார். "பீர்பல் நீ எப்படி இங்கு வந்தாய். நீ சொர்க்கத்துக்கல்லவா அனுப்பப் பட்டாய்? என்று அரசர் வினவ, "ஆம் மன்னா, சொர்க்கத்திலிருந்துதான் வருகிறேன். அங்கு உங்கள் தந்தை நலமாக இருக்கிறார். என்னைப்பர்த்து 'உன்னைப் போன்ற புத்திசாலிகள் என் மகனருகிலிருந்தால் அவனுக்கு இன்னும் பலமாயிருக்கும். அதனால் நீ அவனிடமே திரும்பிச்சென்றுவிடு' என்று சொன்னார். அதனால் புறப்பட்டு வந்துவிட்டேன்.

ஆனால்......."என்று கூறி பீர்பல் மௌனம் சாதித்தார். "ஆனால் என்ன? தயங்காமல் சொல்" என்று அரசர் கட்டளையிடவே, பீர்பல், "என் கோலத்தைப் பார்த்தீர்களா? நீண்ட தாடியும், முரட்டு மீசையும். ஆறுமாதத்திலேயே எனக்கு இவ்வளவு வளர்ந்திருக்கிறதென்றால், உங்கள் தந்தையை எண்ணிப்பாருங்கள். அவருக்கு இதை விட இன்னும் நீண்ட தாடி அவரை உறுத்திக் கொண்டிருக்கிறது. பாவம்," என்று அங்கலாய்ந்தார். "ஓ! அப்படியா. உடனே என் அந்தரங்க முடி திருத்துபவனை சொர்க்கத்துக்கு அனுப்பிவைக்கிறேன்" என்று கூறி அதை நிறைவேற்றவும் செய்தார்.


இக்கதையின் கருத்தை வள்ளுவர் வாயால் சொல்வோமேயானால்,
பிறர்க்கு இன்னா முற்பகல் செய்யின்
தமக்கு இன்னா பிற்பகல் தானே விளையும்

ஆகவே திணை விதைத்தவன் திணை அறுப்பான்,
வினை விதைத்தவன் வினையைத்தான் அறுப்பான்.....இது வாழ்க்கைத் தத்துவம்
muthuaiyer
muthuaiyer
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 63

Back to top Go down

பீர்பால் கதைகள் தத்துவம் நிறைந்தவை. Empty Re: பீர்பால் கதைகள் தத்துவம் நிறைந்தவை.

Post by முரளிராஜா Wed Sep 25, 2013 6:36 pm

பீர்பால் கதை பகிர்வுக்கு நன்றி
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

பீர்பால் கதைகள் தத்துவம் நிறைந்தவை. Empty Re: பீர்பால் கதைகள் தத்துவம் நிறைந்தவை.

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Sep 25, 2013 6:45 pm

சொர்க்கத்தில் தங்கள் தந்தையை மகிழ்விக்கும் அளவுக்கு விகடமாகப் பேச துணை யாருமில்லையாம். அதனால் அவர் மிகவும் விரக்தியுடன் காணப்பட்டார்,
வாட்டம்தான் அனைவருடனும் இணைந்து இருக்கிறது... போக்குவோம்...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

பீர்பால் கதைகள் தத்துவம் நிறைந்தவை. Empty Re: பீர்பால் கதைகள் தத்துவம் நிறைந்தவை.

Post by muthuaiyer Thu Sep 26, 2013 7:25 am

வாட்டத்தை உற்பத்தியாக்கும் சக்தியும் மனிதர்களிடம் இருக்கிறது, வாட்டத்தை முறியடிக்கும் சக்தியும் மனிதனிடமே இருக்கிறது. இருந்தும் நம்மிடமெல்லாம் வாட்டமே மேலோங்கி நிற்கிறது. ஏன்? ஏன்??
முதலில் மனிதன் எய்ட்ஸ் வியாதியைத் தானே உருவாக்கிறான், பின் எய்ட்ஸ் வியாதிக்கு மருந்தும் அவனே கண்டுபிடிக்கிறான்..
மனிதர்களின் வாழ்க்கை வேடிக்கையாயில்லை?
muthuaiyer
muthuaiyer
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 63

Back to top Go down

பீர்பால் கதைகள் தத்துவம் நிறைந்தவை. Empty Re: பீர்பால் கதைகள் தத்துவம் நிறைந்தவை.

Post by muthuaiyer Thu Sep 26, 2013 11:35 am

நம்பிக்கை என்பது வாழ்க்கையில் மிக முக்கியம். குழந்தை பிறக்கும்போது இதுதான் தன் தாய், இதுதான் தன் தந்தை என்பதை அறியாது. காலப்போக்கில் அது வளர்ந்தபிறகு அவர்களையே தன் தாய் தந்தையர் என்று நம்பி ஏற்றுக் கொண்டு விடுகிறது. இது இவ்வுலகில் காலங்காலமாக எந்த சாதியினருக்கும் நடந்துகொண்டு வருகிறது. அந்த நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்ட ஒரு கதைதான் இந்த பீர்பல்-அக்பர் கதை.
அக்பருடன் பீர்பல் பழக ஆரம்பித்து பல மாதங்களாகிவிட்டன. இருந்தாலும் அக்பருக்கு பீர்பலின் மீது நம்பிக்கை முழுமையாக வளரவில்லை. ஒருநாள் அக்பர், பீர்பல்முன்னே வாளை எடுத்து தன் விரலில் வீசி துண்டித்தார். அதைக் கண்ட பீர்பல், கவலைப் படாதீர்கள் அரசே! எது நடந்தாலும் நம் நன்மைக்கே நடக்கிறது என்று கூறவே, அக்பருக்கு பீர்பல் தன்மீது அதிகம் அக்கறையில்லையோ என்ற சந்தேகம் வலுத்தது.
இந்தச் சம்பவம் நடந்த சில நாட்களுக்குப் பின் அக்பர் தன் வீரர்களுடன் காட்டிற்கு வேட்டையாடச் சென்றார். காட்டில் வெகு தூரம் சென்று, நடு காட்டில் சிறிது ஓய்வெடுத்தார். இதற்கிடையில் மலைவாசிகள் அங்குவந்து, இவரை அரசர் என்று அறியாமல் தன் தலைவனிடம் கொண்டு சென்றனர். அந்தத் தலைவன் அந்த ஆள் அயல் நாட்டைச் சேர்ந்தவராக இருப்பாரோ என சந்தேகித்து அவரை தம் குலதெய்வத்துக்குப் பலியிட உத்தரவிட்டான். அவரை பலிபீடத்துக்கு அழைத்துச் சென்றபோது, அங்கிருந்த பூசாரி அரசனுடைய விரல் துண்டிக்கப் பட்டிருப்பதைப் பார்த்துவிட்டு, தலைவா. இவன் பூரண மனிதன் இல்லை. இவன் விரல் துண்டிக்கப்பட்டு அங்கஹீனம் உள்ளது. ஆகவே, இவன் நம் குலதெய்வ பலிக்கு உகந்தவனல்ல. இவனைக் காட்டிலேயே விட்டுவிடுங்கள். ஏதாவது மிருகம் இவனைத் தன் பசிக்கு விருந்தாக்கிக் கொள்ளட்டும், என்று கூறவே அக்பர் விடுவிக்கப்பட்டார்.
நெடுந்தூரம் நடந்து தன் நாட்டை வந்து சேர்ந்தார். வந்தவுடன் பீர்பலை அழைத்து, பீர்பல் அன்று தாங்கள் சொன்னது சரியாகத் தானிருந்தது. என்று கூறி காட்டில் தனக்கு நேர்ந்த கதியை விவரித்து, தாங்கள் கூறியதுபோல் எது நடந்ததோ அது நன்மைக்காகவே நடந்ததுதான், என்று புகழ்ந்தார். மேலும் தன் பேச்சைத் தொடர்ந்து, ஆமாம் அன்று நான் வேட்டையாடச் சென்றபோது தங்களையும் அழைத்தேன். ஆனால் நீங்கள் மறுத்து விட்டீர்களே. அது எதனால்? என்று கேட்டார் அரசர். அதற்கு பீர்பல் சொன்னார், அரசே, அன்று தாங்கள் என்னை அழைத்தீர்கள், நான் மறுத்தேன். அப்படி நானும் உங்களுடன் வந்து அந்த காட்டு வாசிகளிடம் சிக்கிக் கொண்டிருந்தால், நீங்கள் தான் அங்கஹீனமாயிருந்தீர்கள், ஆனால் நான் முழு மனிதனாகத் தானே இருந்தேன். உங்களுக்குப் பதில் என்னை பலிபோட்டிருப்பார்கள். ஆகையால் நான் உங்களுடன் வராததும் ஒரு நன்மைக்கே என்று பீர்பல் பதிலளித்தார். பீர்பலின் புத்தி கூர்மையை மெச்சி அரசர் மேலும் அவரைப் புகழ்ந்தார்.
 
இந்தக் கதை நமக்குக் கூறும் நல்லுரை என்னவென்றால், இறைவன் நமக்கு எதைச் செய்தாலும், அவன் நம் நன்மைக்கே செய்கிறான் என்ற நம்பிக்கையில் நாம் வாழவேண்டும் என்ற தத்துவமே.
muthuaiyer
muthuaiyer
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 63

Back to top Go down

பீர்பால் கதைகள் தத்துவம் நிறைந்தவை. Empty பீர்பால் கதைகள் தத்துவம் நிறைந்தவை.

Post by sawmya Thu Sep 26, 2013 12:05 pm

பீர்பால் அறிவாற்றலும் புத்திக் கூர்மையும் உள்ளவர்
எவ்வளவுபெரியசிக்கலையும்,தமது அறிவுத்திறமையாலே சமாளித்து விடுவார்னு 
கேள்விப்பட்ட காபூல் அரசருக்கு பீர்பாலின் அறிவாற்றலை ஆராய்ந்து அறிய ஆவல் ஏற்பட்டது


அதனால ஒரு கடிதத்துல,”மேன்மைதாங்கிய அக்பர்சக்ரவர்த்தி அவர்களுக்கு
ஆண்டவன் தங்களுக்கு நலன்கள்பலவும்வெற்றிகள் பலவும்தருவாராக
தாங்கள் எனக்கு ஒரு குடம் அதிசயம் அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறேன்னு எழுதி
கை யெழுத்துப் போட்டு “,தூதன் மூலமா அக்பருக்கு அனுப்பினாரு காபூல் அரசர்
கடிதத்தைப்படிச்ச அக்பர்திகைச்சுஒரு குடம் அதிசயம் அனுப்புவதா ?


ஒன்றுமே  புரியவில்லையேன்னு குழம்பிஅரண்மனையை சுற்றிவளம் வந்தார்
அக்பர்முகம் குழப்பத்தில் இருப்பதை பீர்பால்கண்டார்பீர்பால் அக்பரிடம் சென்று  இதுபற்றிவினவினார்.
அக்பர் கடிதத்தை பீர்பாலிடம் கொடுத்தார்
அந்த கடிதத்தை படித்தார்பீர்பால்.  
பீர்பால் நீண்டசிந்தனைக்கு பிறகுஅக்பரிடம் மூன்றுமாதத்தில் 
அதிசயம் அனுப்புவதாகபதில் எழுதுமாறு சொன்னார்அப்புறம் அக்பர்
பீர்பாலிடம் ஒரு குடம் அதிசயம் எப்படி அனுபுவிர்என்று விசாரிச்சாரு.


அதுக்கு பீர்பால் மூன்று மாதம் கழித்து அந்த அதிசயத்தைப் பாருங்களேன்
பீர்பால் யோசித்துக் கொண்டே அவர் வீட்டிற்க்கு புறப்பட்டார்
பிறகு பீர்பால் ஒரு மண்குடத்தை எடுத்தார்
ஒரு பூசணிக்கொடியில் காச்சிருந்த பூசணிப்பிஞ்சு ஒண்ணை கொடியோட 
மண்குடத்திற்குள்வைத்தார்வைக்கோலால் குடத்ததை மூடினாரு.


நாளாக நாளாக பூசணிப்பிஞ்சு குடத்திற்குள்ளேயே நன்றாக வளர்ந்து பெருத்தது
குடம் நிறையுமளவிற்கு பூசணிக்காய் பெருத்ததும்
பூசணிக்காயைத்த விரமற்றவைக்கோல்கொடி
காயின் காம்பு எல்லாவற்றையும் கத்தரித்து விட்டார் பீர்பால்.


இப்போ அந்தக்குடத்தை அக்பரிடம் காட்டினார் பீர்பால்
அக்பருக்கு ஆச்சரியம்
குடத்தின் வாயோ உள்ளே இருக்கும் பூசணிக்காயை விட மிகவும் சிறியது
இதனுள் இவ்வளவு பெரிய பூசணிக்காயை எப்படி நுழைத்தாய்?
பீர்பால் அதை விளக்கி விட்டுஅந்தப்பூசணிக்காய் குடத்தை அப்படியே காபூல் அரசனுக்கு
அதிசயம்னு அனுப்பசொன்னார் அக்பர்தூதன் மூலமாக ஒரு கடிதத்தையும் 
அந்த குடத்தையும் அனுப்பினார்.
கடிதத்தை காபூல் அரசன் பிரித்துபடித்தார்
அதில் “நீங்கள் கேட்டது போலவே ஒரு குடம் அதிசயத்தை அனுபிருக்கேன். ”எனஎழுதிருந்தார்..


குடத்தின் மேல் இருந்த உரையை பிரித்தார் காபூல் அரசன்!அவரால் அதை நம்ப முடியவில்லைகாரணம் குடத்தின் வாயோசிறியது
அதற்குள் எப்படி பெரிய பூசணிக்காய்வைத்தார் என்று அவருக்கு புரியவில்லை
அன்று இரவு முழுவதும் இதையே நினைத்துக் கொண்டு இருந்தார்.


அடுத்த நாள் காபூல்அரசன் விஜயநகரம் புறப்பட்டார்
காபூல் அரசன் இரண்டு நாட்களுக்கு பின்னர் விஜயநகரத்தை அடைந்தார்
அவர் அக்பரிடம் சென்று விசாரித்தார்.
அதற்க்கு  அக்பர் இதை நான் சொல்வதை விட
 பீர்பால் சொன்னால் நன்றாக இருக்கும் என்று சொன்னார்
வேலையாட்களிடம் பீர்பால் பற்றி வினவினார் அக்பர்
அதற்கு அவர்கள் பீர்பால் பயிற்சி குடத்தில் இருப்தாக கூறினர்.


சிறிது நேரத்திற்கு பிறகு அக்பர் மற்றும் காபூல் அரசன் 
இருவரும் பயிற்சி குடத்திற்  சென்றனர்
அங்கே பீர்பாலை சந்தித்தனர்பீர்பாலும் அதை எவ்வாறு செய்தான் என்றுவிளக்கினார்.


அதைக் கேட்ட காபூல் அரசன் பீர் பாலோட புத்திக்கூர்மையை எண்ணிவியந்தாராம்.
 

 


Last edited by sawmya on Thu Sep 26, 2013 12:15 pm; edited 1 time in total (Reason for editing : பிழை திருத்தம் காரணமாக...)
sawmya
sawmya
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 2919

Back to top Go down

பீர்பால் கதைகள் தத்துவம் நிறைந்தவை. Empty Re: பீர்பால் கதைகள் தத்துவம் நிறைந்தவை.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum