தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


என் நண்பனின் கவிதைகள்

View previous topic View next topic Go down

என் நண்பனின் கவிதைகள்  Empty என் நண்பனின் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu Sep 26, 2013 5:34 pm

அபலையின் அடுத்த அத்தியாயம் ​
***************************
விலகி சென்றவனை நெஞ்சில் ஏந்தி
விட்டுச் சென்ற மகனை கையில் ஏந்தி
வாழ்ந்த நினைவுகள் மனதில் மோதிட
வாழப் போகும் நிலையை நினைத்து
வீதியில் நிற்கிறாள் மங்கை ஒருத்தி !

வழியே வந்தாள் வயதில் முதிர்ந்தவள்
விழிகள் பிதுங்க வினவினாள் காரணம் !
வழிந்த விழிகளுடன் செப்பினாள் அவளும்
வாழ்வின் நிலையை விளக்கினாள் அபலை
வருத்தம் தெறித்தது கேட்டவள் கண்ணில் !

முதியவள் தேற்றினாள் முதல் உதவியாய்
முதுமை முற்றியதால் அனுபவம் பேசியது
முழுமதியாள் முகமும் மாறியது ஆறுதலால் !
முழுகதையும் சொல்லியதால் முன்னவளின்
முற்காலம் மறந்தது தற்கால நொடிப்பொழுது !

அழைத்து சென்றாள் வயதில் தழைத்தவள்
அன்புடன் சொன்னாள் தங்கிடுக என்னுடனே
அரைவயிறு நிறையும் அன்றாடம் நமக்கும்
அடுப்படி நடக்கும் தினப்படி கிடைத்திட்டால்
அடுத்த நாளை நினையாமல் இருந்திட்டால் !

மகனையும் வளர்த்திடு மறுவாழ்வு பெற்றிட
மனதையும் ஆற்றிடு மறு உலகம் கண்டிட !
மறவாமல் சொல்லிடு விட்டவனின் கதையை
மனதிலும் ஏற்றிடு தந்தையின் பாதையை
மனதாலும் நினையாதே மாசில்லாமல் வாழ்ந்திட !

கோதிய தலையுடன் கோதையவள் எழுந்தாள்
கோமகள் அவள் அடுத்த அத்தியாயம் தொடங்க !

பழனி குமார் -சென்னை
எழுத்து .கொம்


Last edited by கே இனியவன் on Fri Sep 27, 2013 8:32 pm; edited 1 time in total
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

என் நண்பனின் கவிதைகள்  Empty Re: என் நண்பனின் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu Sep 26, 2013 5:37 pm

புரிந்தவர் சொல்லுங்கள்
***********************
பலமுறை சொல்லியும் கேட்பதில்லை
போதையில் ஓட்டுவதும் நிற்பதில்லை !
பாதையில் வாகனங்கள் ஓடுவதில்லை ​
பாதிப்பவரின் ஒப்பாரியும் ஓயவில்லை !

சட்டங்கள் இயற்றியும் இனிபயனில்லை
வளைந்திடும் காவலரும் மாறவில்லை !
குடியால் விளையும் விபத்துகள் அதிகம்
குலைந்து வீழ்கிறது குடும்பமும் அதிகம் !

விதியை மீறுகின்றனர் விளையாட்டாய்
வீதியில் நிற்கின்றனர் பின் விழுதுகளும் !
படித்தவரே செய்கின்றனர் பாரினிலே
படித்து சொன்னாலும் கேட்பதில்லே !

தெரிந்தும் புரிகின்றனர் குற்றமதை
தெளிந்ததும் மீண்டும் செய்கின்றனர் !
அறிந்தும் செய்பவர்கள் அறிவாளிகளா
அறியாமல் செய்பவர் அறிவிலிகளா !

புரிந்தவர் சொல்லுங்கள்
புரியாத உள்ளங்களுக்கு !

பழனி குமார்-சென்னை
எழுத்து.காம்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

என் நண்பனின் கவிதைகள்  Empty Re: என் நண்பனின் கவிதைகள்

Post by முரளிராஜா Fri Sep 27, 2013 6:48 am

சூப்பர்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

என் நண்பனின் கவிதைகள்  Empty Re: என் நண்பனின் கவிதைகள்

Post by கவியருவி ம. ரமேஷ் Fri Sep 27, 2013 8:15 am

பலமுறை சொல்லியும் கேட்பதில்லை
போதையில் ஓட்டுவதும் நிற்பதில்லை !
பாதையில் வாகனங்கள் ஓடுவதில்லை ​
பாதிப்பவரின் ஒப்பாரியும் ஓயவில்லை !
இறந்தவர்களின் குடும்பம்தான் வருத்தமடைகிறது...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

என் நண்பனின் கவிதைகள்  Empty Re: என் நண்பனின் கவிதைகள்

Post by sawmya Fri Sep 27, 2013 9:56 am

சட்டங்கள் இயற்றியும் இனிபயனில்லை 
வளைந்திடும் காவலரும் மாறவில்லை ! 
குடியால் விளையும் விபத்துகள் அதிகம் 
குலைந்து வீழ்கிறது குடும்பமும் அதிகம் !
சோகம் கோபம் முடியலை
sawmya
sawmya
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 2919

Back to top Go down

என் நண்பனின் கவிதைகள்  Empty Re: என் நண்பனின் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Fri Sep 27, 2013 8:34 pm

அருமையான கவிதைகள் நெஞ்சை தொடும்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

என் நண்பனின் கவிதைகள்  Empty Re: என் நண்பனின் கவிதைகள்

Post by sawmya Sat Sep 28, 2013 9:21 am

உண்மைதான் நெஞ்சை துளைக்கின்றது...ம்ம்ம்...புன்முறுவல்
sawmya
sawmya
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 2919

Back to top Go down

என் நண்பனின் கவிதைகள்  Empty Re: என் நண்பனின் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Sat Sep 28, 2013 10:45 am

அருமை அருமை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

என் நண்பனின் கவிதைகள்  Empty Re: என் நண்பனின் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Sat Sep 28, 2013 10:46 am

உலகமும் வாழ்த்திடும்

​சிந்தையில் ஊற்றெடுக்கும்
சீர்மிகு சிந்தனைகளை
தீந்தமிழ் சொல்லெடுத்து
பைந்தமிழ் ​பாமாலையாய்
வாசமிகு பூமாலையாய்
சமுதாய அக்கறையுடன்
சீர்திருத்தும் எண்ணமுடன்
பகுத்தறிவுடன் தொகுத்திட்டு
எண்ணத்தில் எழுபவைகளை
ஏர்பூட்டிய காளைகளாய்
எழுத்து தளத்தில் உழுதிட்டால்
விந்தைமிகு விளைச்சலால்
சந்தையில் விலைபோகும்
வியத்தகு பயனும்தரும்
உள்ளமும் குளிர்ந்திடும்
உலகமும் வாழ்த்திடும்
பிறந்திட்ட பயன்தன்னை
நாமும் அடைந்திடலாம் !


பழனி குமார்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

என் நண்பனின் கவிதைகள்  Empty Re: என் நண்பனின் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Sat Sep 28, 2013 10:47 am

மயான பூமி

பிறக்கும் மனிதரின் இறுதி இருப்பிடம்
இறக்கும் மாந்தரின் இலவச உறைவிடம் !

உயர்ந்தோர் தாழ்ந்தோர் இணையுமிடம்
ஏழை பணக்காரன் ஒன்றாய் படுக்குமிடம் !

சாதிகள் அறிந்திடா உண்மை சமத்துவபுரம்
சச்சரவே எழாத அமைதியே உறங்குமிடம் !

நண்பர் பகைவர் இணைந்திடும் ஒரேஇடம்
அனைத்துக் கட்சிகள் கூட்டணி சேருமிடம் !

நிரந்தர ஓய்வுடன் நிம்மதி கிடைக்குமிடம்
பிறந்தவர் எவரும் தவறாமல் செல்லுமிடம் !

மாளிகையில் வாழ்ந்தவனும் மண்ணாக
வீதியில் வாழ்ந்தவனும் இணையாக !

வாழ்க்கை பயணத்தின் இறுதி இலக்கு
வாழ்பவர் அனைவரும் அறிந்த ஒன்று !

இன்பம் துன்பம் உணர்ந்திடா உலகமது
பாவம் புண்ணியம் அறிந்திடா பூமியது !

வயது வரம்பே இல்லாத அனுமதி அங்கு
பார்வையாளரே இல்லாத அரங்கமது !

வாழ்ந்து முடிந்தவர் சென்றிடும் புதிய பூமி
வாழும் மனிதர் வழியனுப்பும் மயான பூமி !


பழனி குமார்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

என் நண்பனின் கவிதைகள்  Empty Re: என் நண்பனின் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Sat Sep 28, 2013 10:48 am

தமிழர் கூட்டமைப்பு வெற்றி ஈழத்தில் ...

வெற்றி செய்தி கிட்டியதால்
இன்பம் இமயத்தை எட்டியது ​!

சிங்களவனின் ஆட்டத்தை அடக்கிய
சிங்கத் தமிழனின் கொண்டாட்டம் !

இடைக்கால வெற்றிதான் எனினும்
இறுதிக்கால துவக்கமே ராஜபக்சேவிற்கு

துள்ளிடும் தமிழனின் நிலைஅங்கு
துயர்களை மறந்திடும் நிகழ்வானது !

மகிழும் எம்இனத்தவரின் மனமும்
நிலைத்திட விழைகிறேன் அங்கே !

முடிவல்ல இதுவேஎன அறிவோம்
முடிவின் தொடக்கம் ஆரம்பமே !

தலைமை ஏற்பவரும் மாறாது தமிழன்
நிலையை மாற்ற வேண்டுகிறேன் !

வேண்டியதும் மாகாணத் தேர்தலைதானே
வேங்கையவன் வேலுப்பிள்ளை பிரபாகரன் !

உரிமைதானே கேட்டான் தமிழன் அன்றும்
உயிர்களை பறித்தானே வெறிநாய் வென்றிட !

விவேகம் வேண்டும் விக்னேஸ்வரருக்கு
வீரமும் விளைந்திட வேண்டும் அவருக்கு !

சிங்களவனின் கைப்பாவையாக ஆகாமல்
சீறிடும் தமிழனாய் ஆண்டிட வேண்டும் !

ஈழத் தமிழனின் இரண்டாம் அத்தியாயம்
வேழ பலத்துடன் துவங்கிட வேண்டும் !

தமிழனின் கொடி நிலையாய் பறந்திட
தமிழர்கள் நாங்கள் வேண்டுகிறோம் !

வாழ்த்துக்கள் ஈழத்தமிழர்க்கு
தொடங்கிடுக புது வாழ்வை !

நாட்டிடுக வெற்றிக்கொடியினை
வளரும் தலைமுறை வாழ்ந்திட !

பழனி குமார்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

என் நண்பனின் கவிதைகள்  Empty Re: என் நண்பனின் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Sat Sep 28, 2013 10:49 am

துப்பாதீர் பொது இடங்களில்

பரிணாம வளர்ச்சி பல்துறையில் இன்று
பரிதாப நிலையோ பலஇடங்கள் இன்றும் !
விந்தைமிகு விஞ்ஞானம் விண்ணளவு இன்று
வியத்தகு அஞ்ஞானம் வீதிகளில் இன்றும் !

சுற்றிலும் நம்மை சுத்தமாய் வைத்திட
சுயமாக நினைப்பவர் பூமியில் உள்ளோர்
அதிகமாக இல்லை அகிலத்தில் என்பதால்
அறிவுறுத்த காரணம் கவிதையாய் இங்கு !

காற்றிலும் தூசு அருந்தும் நீரிலும் மாசு
கடலிலும் மாசு கங்கையிலும் தூசு !
தூய்மை இடத்திலும் நாக்கை சுழற்றி
துப்பிடும் எச்சிலால் பரவிடும் மாசு !

நினைப்பதில்லை விளையும் தீமையை
உரைப்பதில்லை உலவிடும் சிலருக்கு !
வெள்ளை சுவற்றையும் மாற்றிடுவர்
வண்ண மயமாக்குவர் மதியற்றோர் !

திரும்பிப் பார்க்காமலே துப்பிடுவர்
அருகில் வருபவன் அழுக்காவான் !
அடுத்தவர் பற்றி கவலையில்லை
அசுத்தம் செய்வது கைவந்தகலை !

பொது இடங்களில் துப்பும் அறிவிலிகள்
ஆறறிவு இல்லாத ஐந்தாம் படைகள் !
சொல்லியும் திருந்திடா திருந்தாதவர்
எல்லாம் இருந்தும் இல்லாத இதயங்கள் !


பழனி குமார்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

என் நண்பனின் கவிதைகள்  Empty Re: என் நண்பனின் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Sat Sep 28, 2013 10:50 am

சங்கமிக்கும் வண்ணங்கள்

​தங்க ​மணற் பரப்பும்
நீல கடல் விரிப்பும்
கைக் கோர்க்கும்
அருமை காட்சியிது !

விழிகளுக்கு விருந்து
விந்தையான மருந்து
களைத்த இதயங்களுக்கு
களிப்பூட்டும் காட்சியிது !

சரியான நிறங்கள்
சங்கமிக்கும் சான்று
பூமியில் நிகழ்ந்திடும்
இயற்கை காட்சியிது !

பாலையும் சோலையும்
பார்வையில் இணையும்
அரிதான நிலைபோல
அழகான காட்சியிது !


பழனி குமார்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

என் நண்பனின் கவிதைகள்  Empty Re: என் நண்பனின் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Sat Sep 28, 2013 10:51 am

இல்லறத்தின் நல்லறம்

இருமனங்கள் இணைந்து ஒருமனமாய்
இதயங்கள் இணைவது திருமணமாய் !
கரம்பிடிக்கும் மனைவியை காப்பதும்
கரம்பற்றிய கணவனுடன் வாழ்வதும்
உள்ளங்களில் எழுதிடும் ஒப்பந்தம் !

குடும்பத்தின் சுமைகளை சுமப்பதும்
சுமைகளை சுகமாய் மாற்றுவதும்
இணைந்த இதயங்களின் கையிலே !
நம்பி வந்தவளை சுமப்பதும் சுகமே
சொல்லாமல் விளங்குவதும் இங்கே !

தான் நடந்தாலும் பரவாயில்லை என
தாரம் அமர்ந்த தள்ளு வண்டியினை
பாரம் பார்க்காமல் பால் மனதுடனே
விரைந்து செல்லும் விவேகி இவரே
திருமணத்தால் விளைந்த நன்மகன் !

வாழ்க இவர்களின் இல்லறம் என்றும்
வளர்க இதயத்தின் நல்லறம் என்றும் !


பழனி குமார்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

என் நண்பனின் கவிதைகள்  Empty Re: என் நண்பனின் கவிதைகள்

Post by sawmya Sat Sep 28, 2013 12:09 pm

நாட்டிடுக வெற்றிக்கொடியினை 
வளரும் தலைமுறை வாழ்ந்திட ! 
சூப்பர்
sawmya
sawmya
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 2919

Back to top Go down

என் நண்பனின் கவிதைகள்  Empty Re: என் நண்பனின் கவிதைகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum