தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


எனக்கு பிடித்த பாரதியும், நானும்...

View previous topic View next topic Go down

எனக்கு பிடித்த பாரதியும், நானும்... Empty எனக்கு பிடித்த பாரதியும், நானும்...

Post by sawmya Sat Sep 28, 2013 11:58 am

மனத்தில் உறுதி வேண்டும்.
 
மனதி லுறுதி வேண்டும்.
வாக்கினி லேயினிமை வேண்டும்;
நினைவு நல்லது வேண்டும்,
நெருங்கின பொருள் கைப்பட வேண்டும்;
கனவு மெய்ப்பட வேண்டும்,
கைவசமாவது விரைவில் வேண்டும்;
தனமும் இன்பமும் வேண்டும்,
தரணியிலே பெருமை வேண்டும்  1
கண் திறந்திட வேண்டும்,
காரியத்தி லுறுதி வேண்டும்.
பெண் விடுதலை வேண்டும்.
பெரிய கடவுள் காக்க வேண்டும்;
மண்பயனுற வேண்டும்,
வாகனமிங்கு தென்பட வேண்டும்.
உண்மை நின்றிட வேண்டும்.
ஓம் ஓம் ஓம் ஓம்.  
-       
-மகா கவி பாரதியார்
 
 
 
 
 
 
 
 
மனத்தில் உறுதி வேண்டும்.


கனவுகள் மெய்ப்பட வேண்டும்.
 
கன்னியரே,
 
கனவுகளை கண்களில் எழுதாதீர்கள்
கயல் விழியை நேசிப்பவர்களால்
களவாடப்படும்!
 
கனவுகளை இதழ்களில் எழுதாதீர்கள்
வாயுள்ள பிள்ளைகளால்
வசூலிக்கப்படும்!
 
கனவுகளை இதயங்களில் எழுதுங்கள்!
துடிக்கும் பொழுதெல்லாம்
துளிர்க்கும்...!
நினைக்கும் பொழுதெல்லம்
சிலிர்க்கும்!
 
கனவுகள் மெய்ப்படும்,
லட்சியக் கனவுகள் மெய்ப்படும்!!!
ம் ம் ம்...

 - வளர் கவி சௌமியா
sawmya
sawmya
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 2919

Back to top Go down

எனக்கு பிடித்த பாரதியும், நானும்... Empty Re: எனக்கு பிடித்த பாரதியும், நானும்...

Post by கவியருவி ம. ரமேஷ் Sat Sep 28, 2013 6:33 pm

கனவுகள் மெய்ப்படும்,
லட்சியக் கனவுகள் மெய்ப்படும்!!!
மெய்ப்பட வேண்டும் என்பதுதான் இந்தியாவின் புதிய பார்வை...

மெய்ப்படட்டும்... உயர்வோம்...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

எனக்கு பிடித்த பாரதியும், நானும்... Empty Re: எனக்கு பிடித்த பாரதியும், நானும்...

Post by sawmya Sun Sep 29, 2013 9:31 am

ம் ம் ம்... நன்றி! எனக்கு பிடித்த பாரதியும், நானும்... Icon_smile 
sawmya
sawmya
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 2919

Back to top Go down

எனக்கு பிடித்த பாரதியும், நானும்... Empty Re: எனக்கு பிடித்த பாரதியும், நானும்...

Post by கவிப்புயல் இனியவன் Sun Sep 29, 2013 1:21 pm

சிறப்பு நன்று
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

எனக்கு பிடித்த பாரதியும், நானும்... Empty எனக்கு பிடித்த பாரதியும், நானும்...

Post by sawmya Mon Sep 30, 2013 4:26 pm

நடிப்புச் சுதேசிகள் பழித்தறிவுறுத்தல்
கிளிக் கண்ணிகள்
 
நெஞ்சில் உரமு மின்றி நேர்மைத் திறமு மின்றி, 
வஞ்சனை சொல்வா ரடீ!-கிளியே!
வாய்ச் சொல்லில் வீர ரடீ
 
 
கூட்டத்திற் கூடிநின்று கூவிப் பிதற்ற லன்றி,
நாட்டித்திற் கொள்ளா ரடீ!-கிளியே!
நாளில் மறப்பா ரடீ!
 
 
சொந்த அரசும் புவிச் சுகங்களும் மாண்பு களும்
அந்தகர்க் குண்டாகுமோ!-கிளியே
அலிகளுக் கின்ப முண்டோ?
 
 
கண்கள் இரண்டி ருந்தும் காணுந் திறமை யற்ற
பெண்களின் கூட்ட மடி!-கிளியே!
பேசிப் பயனென் னடீ!
 
 
யந்திர சாலை யென்பர் எங்கள் துணிக ளென்பர்
மந்திரத் தாலே யெங்கும்-கிளியே!
மாங்கனி வீழ்வதுண் டோ?
 
 
உப்பென்றும் சீனி என்றும் உள் நாட்டுச் சேலை என்றும்
செப்பித் திரிவா ரடீ!-கிளியே!
செய் தறியா ரடீ!
 
 
தேவியர் மானம் என்றும் தெய்வத்தின் பக்தி என்றும்
நாவினாற் சொல்வ தல்லால்!-கிளியே
நம்புத லற்றா ரடீ!
 
 
மாதரைக் கற்பழித்து வன்கண்மை பிறர் செய்யப்
பேதைகள் போலுயி ரைக்-கிளியே
பேணி யிரந்தா ரடீ!
 
 
தேவி கோயிலிற் சென்று தீமை பிறர்கள் செய்ய
ஆவி பெரிதென் றெண்ணிக்!-கிளியே!
அஞ்சிக் கிடந்தா ரடீ!
 
 
அச்சமும் பேடி மையும் அடிமைச் சிறும தியும்
உச்சத்திற் கொண்டா ரடீ!-கிளியே!
ஊமைச் சனங்க ளடீ!
 
 
ஊக்கமும் உள்வலியும் உண்மையிற் பற்று மில்லா
மாக்களுக் கோர் கணமும்-கிளியே!
வாழத் தகுதி யுண்டோ?
 
 
மானம் கிறிதென் றெண்ணி வாழ்வு பெரிதென்றெண்ணும்
ஈனர்க் குலகந் தனில்-கிளியே!
இருக்க நிலைமை யுண்டோ?
 
 
சிந்தையிற் கள் விரும்பிச் சிவசிவ என்பது போல்,
வந்தே மாதர மென்பார்!-கிளியே!
மனதி லதனைக் கொள்ளார்
 
 
பழமை பழமை யென்று பாவனை பேச லன்றிப்
பழமை இருந்த நிலை!-கிளியே!
பாமர ரேதறி வார்!
 
 
நாட்டில் அவ மதிப்பும் நாணின்றி இழி செல்வத்
தேட்டில் விரப்புங் கொண்டே!-கிளியே!
சிறுமை யடைவா ரடீ!
 
 
சொந்தச் சகோ தரர்கள் துன்பத்திற் சாதல் கண்டும்,
சிந்தை இரங்கா ரடீ-கிளியே!
செம்மை மறந்தா ரடீ!
 
 
பஞ்சத்தும் நோய்க ளிலும் பாரதர் புழுக்கள் போல்
துஞ்சத்தம் கண்ணாற் கண்டும்!-கிளியே!
சோம்பிக் கிடப்பா ரடீ!
 
 
தாயைக் கொல்லும் பஞ்சத்தைக் தடுக்க முயற்சி யுறார்
வாயைத் திறந்து சும்மா!-கிளியே!
வந்தே மாதர மென்பார்!
 
-மகாகவி பாரதியார்
 
 
 
நடிப்புச் சுதேசிகள் பழித்தறிவுறுத்தல் …
 
மனதில் மாசுடனும் உண்மை உணர்வின்றியும்
தீவினை செய்வாரடீ - சகியே!
வாய்மை... வாக்கில் இல்லையடி!
 
பெண் மனம் பெண் அறியும்
பேச்சுக்கு இடம் இன்றி - சகியே!
பொன்னில் மனம் கொண்டாரடி!
பேசிப்பயன் என்னடி!
 
நாகரீக மேடையிலே நாணமும் நயமும் இன்றி
நாகரீக நடை போடுவர் - சகியே!
பார்வை கோளாரடி! பாதி பாழ் சிந்தை வேசமடி!
உலகம் யந்திர மோகமடி! எங்கும் சோகமடி!
 
உரிமைக்குரல் கொண்டும், வலிமை திறம் கொண்டும்
உயரே பறக்காமல் - சகியே!
ஊர்க்குருவி பருந்தாகாதாமடி!
சனங்கள் ஊமையானரடி!
 
மானம் மதி கெட்டு வாழும் வழி கெட்டு
மாசில் மடிந்தாரடி - சகியே!
மனத்தில் வெருமை பொங்குதடி!
 
பழமை புதுமை என்று பாவனை செய்து கொண்டு
பண்பை இழந்தாரடி - சகியே!
பாழும்… கிணற்றில் விழுந்தாரடி!
 
நாட்டில் நயவஞ்சகமும், நாணயமும் நகைத்தாட
நாளும் நரித்தன நடைபோட்டி - சகியே!
நலிந்தது... நம் வாழ்க்கையடி!
 
சகோதர சனம் வாழ்க்கை சடலமாய் விரிந்தாலும்
சத்தமே இல்லையடி - சகியே!
சகலமும் கொள்ளையடி!
 
பஞ்சமும் பரிதவிப்பும் பரிசாய் கிடைத்ததடி
பாவமும் பெருகுதடி - சகியே!
பாரதம் மழுங்குதடி!
 
“அன்னை இல்லம்” பெயருண்டு அதிலே
அன்னைக்கு ஒரு இடமும் இல்லையடி - சகியே!
அனாதை குலம்தானடி!
 
வஞ்சகர் வசை பாட வார்த்தைகள் வசம் இல்லை
வாடிதுடிக்கின்றேனடி -சகியே!
வாழும் ம(மா)க்கள் வந்தேமதரம் என்பாரடி!
வருந்த மாட்டாரடி!
 
திருந்தமாட்டாராடி சகியே! திருந்தி திளைப்பாரடி!

விரைவில் திருந்தி திளைப்பாரடி!

 - வளர் கவி சௌமியா


Last edited by sawmya on Mon Sep 30, 2013 4:30 pm; edited 1 time in total (Reason for editing : பிழை திருத்தம் காரணமாக...)
sawmya
sawmya
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 2919

Back to top Go down

எனக்கு பிடித்த பாரதியும், நானும்... Empty Re: எனக்கு பிடித்த பாரதியும், நானும்...

Post by kanmani singh Mon Sep 30, 2013 4:43 pm

அருமை...


கண்மணி சிங்
avatar
kanmani singh
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 4190

Back to top Go down

எனக்கு பிடித்த பாரதியும், நானும்... Empty Re: எனக்கு பிடித்த பாரதியும், நானும்...

Post by sawmya Mon Sep 30, 2013 6:10 pm

நன்றி... சகியே!புன்முறுவல்
sawmya
sawmya
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 2919

Back to top Go down

எனக்கு பிடித்த பாரதியும், நானும்... Empty Re: எனக்கு பிடித்த பாரதியும், நானும்...

Post by கவியருவி ம. ரமேஷ் Mon Sep 30, 2013 6:12 pm

“அன்னை இல்லம்” பெயருண்டு அதிலே
அன்னைக்கு ஒரு இடமும் இல்லையடி - சகியே!
அனாதை குலம்தானடி!
 
சமுதாயத்தின் தீமை... ஒழிந்து - குறைந்து போகட்டும்...

கவிதைக்குப் பாராட்டுகள்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

எனக்கு பிடித்த பாரதியும், நானும்... Empty Re: எனக்கு பிடித்த பாரதியும், நானும்...

Post by sawmya Mon Sep 30, 2013 6:18 pm

சமுதாயத்தின் தீமை... ஒழிந்து - குறைந்து போகட்டும்...

நன்றி! தோழா!நண்பேன்டா 
sawmya
sawmya
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 2919

Back to top Go down

எனக்கு பிடித்த பாரதியும், நானும்... Empty Re: எனக்கு பிடித்த பாரதியும், நானும்...

Post by முரளிராஜா Tue Oct 01, 2013 8:57 am

மிக அருமை
தொடரட்டும் கவிதைகள்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

எனக்கு பிடித்த பாரதியும், நானும்... Empty Re: எனக்கு பிடித்த பாரதியும், நானும்...

Post by sawmya Tue Oct 01, 2013 9:00 am

நன்றி! நன்றி!புன்முறுவல் 
sawmya
sawmya
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 2919

Back to top Go down

எனக்கு பிடித்த பாரதியும், நானும்... Empty Re: எனக்கு பிடித்த பாரதியும், நானும்...

Post by sawmya Tue Oct 01, 2013 2:08 pm

நித்த நித்தம்
துயின்றெழுந்து
புத்தியற்ற புல்லருடன் பேசி
அத்தமித்த உடன் விழு பணத்தை
கல்லை மண்ணை 
தொழுகவோ யான் பிறந்தேன்?

-மகாகவி பாரதியார்

 
கத்தி இன்றி இரத்தம் இன்றி
யுத்தம் செய்த
காந்தி பிறந்த நாட்டிலே
யுத்த சத்தம் நித்தம் நித்தம்
துயிலெழுப்பும் கூட்டிலே
அர்த்தமில்லா வாழ்க்கைக்காய்
வாடுவதற்கோ

நான் பிறந்தேன்?
 - வளர் கவி சௌமியா
sawmya
sawmya
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 2919

Back to top Go down

எனக்கு பிடித்த பாரதியும், நானும்... Empty Re: எனக்கு பிடித்த பாரதியும், நானும்...

Post by மகா பிரபு Tue Oct 01, 2013 3:28 pm

நன்றி
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

எனக்கு பிடித்த பாரதியும், நானும்... Empty Re: எனக்கு பிடித்த பாரதியும், நானும்...

Post by செந்தில் Tue Oct 01, 2013 3:36 pm

கைதட்டல் அருமை சூப்பர் கைதட்டல் 
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

எனக்கு பிடித்த பாரதியும், நானும்... Empty Re: எனக்கு பிடித்த பாரதியும், நானும்...

Post by sawmya Tue Oct 01, 2013 3:52 pm

நன்றி! நன்றி!புன்முறுவல் 
sawmya
sawmya
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 2919

Back to top Go down

எனக்கு பிடித்த பாரதியும், நானும்... Empty Re: எனக்கு பிடித்த பாரதியும், நானும்...

Post by sawmya Tue Oct 22, 2013 12:55 pm

பெண் விடுதலை...

பெண்ணுக்கு விடுதலையென் றிங்கோர் நீதி
பிறப்பித்தேன்;அதற்குரிய வெற்றி கேளீர்;
மண்ணுக்குள் எவ்வுயிரும் தெய்வ மென்றால்
மனையாளும் தெய்வமன்றோ? மதிகெட் டீரே!
விண்ணுக்குப் பறப்பதுபோல் கதைகள் சொல்வீர்
விடுதலையென் பீர்,கருணை வெள்ள மென்பீர்,
பெண்ணுக்கு விடுதலைநீ ரில்லை யென்றால்
பின்னிந்த உலகினிலே வாழ்க்கை யில்லை.

- மகா கவி பாரதி

பெண் விடுதலை...

பெண்ணுக்கு விடுதலையென் றிங்கோர் சதி
பிறப்பித்த நாள் முதல்;அதற்குரிய சேதி கேளீர்;
மனிதனை ஈன்றவள் தெய்வ மென்றால்
மகளிர் யாவரும் தெய்வமன்றோ? சதிசெய் தீரே!
கண்ணுக்கு முன்னே கதறும் பெண்னை 
காப்பாற்ற கதியின்றி கதைகள் சொல்வீர்
விட்டில்பூச்சியென்பீர் ,காட்சி பொருள் என்பீர்,
பெண்ணுக்கு விடுதலை இனி இல்லை யென்றால்
இனி இந்த உலகினிலே வளர்ச்சியும் இல்லை, வளமும் இல்லை.

-வளர் கவி சௌமி
sawmya
sawmya
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 2919

Back to top Go down

எனக்கு பிடித்த பாரதியும், நானும்... Empty Re: எனக்கு பிடித்த பாரதியும், நானும்...

Post by ஸ்ரீராம் Tue Oct 22, 2013 3:45 pm

இரண்டு கவிதை பகிர்வையும் ரசித்தேன். நன்றி
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

எனக்கு பிடித்த பாரதியும், நானும்... Empty Re: எனக்கு பிடித்த பாரதியும், நானும்...

Post by sawmya Tue Oct 22, 2013 6:00 pm

நன்றிஅண்ணா...புன்முறுவல்
sawmya
sawmya
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 2919

Back to top Go down

எனக்கு பிடித்த பாரதியும், நானும்... Empty Re: எனக்கு பிடித்த பாரதியும், நானும்...

Post by செந்தில் Tue Oct 22, 2013 6:05 pm

பெண்மையன்றி நன்மைஇல்லை.

கொண்டாட்டம்  பெண்மையை போற்றுவோம்.கொண்டாட்டம் 
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

எனக்கு பிடித்த பாரதியும், நானும்... Empty Re: எனக்கு பிடித்த பாரதியும், நானும்...

Post by sawmya Tue Oct 22, 2013 6:13 pm

நன்றி! நன்றி!புன்முறுவல் 
sawmya
sawmya
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 2919

Back to top Go down

எனக்கு பிடித்த பாரதியும், நானும்... Empty Re: எனக்கு பிடித்த பாரதியும், நானும்...

Post by கவிப்புயல் இனியவன் Tue Oct 22, 2013 6:33 pm

இரண்டாவது கவி அருமை

முதலாவதில் வார்த்தை தெறிப்பு வருகிறது
எழுத எழுத சரிவரும்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

எனக்கு பிடித்த பாரதியும், நானும்... Empty Re: எனக்கு பிடித்த பாரதியும், நானும்...

Post by sawmya Wed Oct 23, 2013 10:53 am

நன்றிஅண்ணா...எனக்கு பிடித்த பாரதியும், நானும்... Icon_smile
sawmya
sawmya
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 2919

Back to top Go down

எனக்கு பிடித்த பாரதியும், நானும்... Empty Re: எனக்கு பிடித்த பாரதியும், நானும்...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum