தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


வாழ்க்கைக்கான பாடங்கள்

View previous topic View next topic Go down

வாழ்க்கைக்கான பாடங்கள் Empty வாழ்க்கைக்கான பாடங்கள்

Post by sawmya Sat Sep 28, 2013 12:27 pm

பிறருடைய ஆமோதிப்பிற்காக செயல்பட்டால்...


இப்படியெல்லாம் அலைந்து விட்டோமா?
இதற்காகவா இத்தனை உழைத்தோம்?

- என்ற கேள்விகள் உள்ளத்தில் எழுந்தால் முழு மனம் விரும்பி. 
செய்த செயல்களாக இருக்க முடியாது. மற்றவர்களை திருப்திபடுத்த, 
ஏதோ ஆதாயத்திற்காக, பிறரின் பாராட்டுக்காக, ஊர், 
உலகம் புகழுவதற்காக நினைத்து செய்த செயல்கள்தான்.
ஏதோ பெரியதாக கிடைக்கும் என்று அலைந்துவிட்டு, 
அதன்பிறகு வெறுமையையும் ஏமாற்றத்தையும் தருவது 
இத்தகைய செயல்கள். 
செய்யும்போது உற்சாகத்தையும் செய்தபின்னர் 
ஆனந்தத்தையும் தருகின்ற செயல் உண்மையாக மனம் விரும்பிய செயல்கள்.

விழிப்புணர்வு
தூக்கத்திலிருந்து கண்விழிப்பது ஒரு வகை விழிப்பு. வெளி உலகத்தில் விழிப்பு.
*அப்போதும்கூட கண்தான் விழித்திருக்கும். மனம் எங்கெல்லாம் அலைபாயும்.
* அதுவே அமைதியாக அமர்ந்து, கண்மூடி சிந்தனைகளை விட்டுவிட்டு,

மனதில் எண்ணங்கள் இல்லாமல் இருப்பதே உண்மையான விழிப்பு.
* மனிதன் பிரபஞ்ச சக்தியோடு இணைகின்ற அளவில்லா சக்தி.
* அந்த அனுபவம் அளவில்லா ஆனந்தம்.
* அத்தகைய விழிப்புணர்வில் உடலின் வலிகள் பறந்துவிடும்.
*நோய்ப்பட்ட உறுப்பை அந்த நிலையில் உள்நோக்கி கவனித்தால் 

அந்நோய் குறையும்.
உடலில் இயற்கையாக உள்ள எதிர்ப்புதிறன் பன்மடங்கு பெருகி,

நோய்களைக் குணமாக்கிவிடும் ஆற்றலைப் பெறும்.
விழிப்புணர்வு சேர்ந்துவிட்டால் வலிகூட பரவசம்.
விழிப்புணர்வு இல்லாவிட்டால் பரவசம் கூட வலியாகிவிடும் – ஜென்.


மாரடைப்பை வெல்லும் சுவாசம்


மனிதனுடைய உயிர் சுவாசமே
- வெளியே விட்ட காற்று அடுத்தாக உள்ளே போகாவிட்டால் மரணம்.
- இந்த சுவாசத்தில் உயிர் மட்டுமல்ல எண்ணற்ற அதிசயங்கள் உள்ளன.
- ஆழமான, மெதுவான, இனிமை யான சுவாசத்தைச் செய்தால் 

உடலுக்கு ஆனந்தம்.
- அதுவே 24 மணி நேரமும் செய்தால் ஆனந்தம் பொங்கும்.
- அப்படி செய்பவருக்கு சுவாசப் பிரச்சனையோ மாரடைப்போ

ஏற்படவே முடியாது.
- ஆழ்ந்த சுவாசம் செய்யும் போது உடலின் ஆக்ஸிஜன் 

அளவு பன்மடங்கு அதிகமாகின்றன.
- எல்லா உறுப்புகளும் புத்துயிர் பெறுகின்றன.
புத்தர் தன் இறுதி வார்த்தையாக சொன்னது,

“உங்கள் உடலுக்குள் செல்கின்ற சுவாசத்தை கண்மூடி கவனியுங்கள். 
அதிசயங்கள் தெரியும்” என்பது தான்.
மனித வாழ்க்கையில் பெரும்பாலான நேரங்களில் அரை சுவாசமே நடைபெறுகின்றன. 

பரபரப்பு பதட்டம் அடையும்போது மேலும் குறைந்து மனம், உடல் பாதிப்பைடைகின்றன.
- இந்த ஆழமான பொறுமையான சுவாசமே மனித வாழ்வின் ரகசியம் – சாந்தம்.


ஆசைகள் தேவையா?

நியாய ஆசைகள் தேவையே
* கடன் பெற்ற ஆசைகள் : பிறரைப் பார்த்து பெறுகின்ற ஆசைகள்.
* பிறருக்காக (கௌரவம் என எண்ணி) செய்கின்ற செயல்கள் தேவையில்லை.
* ஆசைகளை அதிகமாக்கிவிட்டு பின்னர் 

அடக்கினால் – மன உளைச்சல், உடல் மனபாதிப்புகள் ஏற்படும். 
ஆசைகள் முறையாக உருவானால் பாதிப்பில்லை.
* ஆசைக்கான நியாய வழிகளில் அடைந்தால் – உயர்வு.
* நெறிகளற்ற ஆசைகள் – தொல்லையில் முடியும்.
* அணைகடந்த ஆசை – அழிவு.
* ஆசைகளைத் தாண்டினால் ஆனந்தம்.
* ஆசைகள் கூட கூட கவலைகள் கூடும்.


திருப்தி VS அதிருப்தி

ரமணர்: ஒரு பொருள் கடுகாக இருந்தாலும் 

அது கிடைப்பதற்கு முன் மலையாகக் காட்டும் மனம்.
அது கிடைத்தவுடன் மலையேயானாலும் கடுகாக்கி காண்பிக்கும், 
இந்த மட மனம்.நம்முடைய மனதில் இயல்பே எவ்வளவு கிடைத்தாலும்
அதை அனுபவிக்காமல் 
அடுத்து அடுத்து என்று வேறு விஷயங்களை நோக்கியே
ஆசையை திசை திருப்பி விடுவதுதான். 
எதிர் பார்த்தபடியே கிடைத்துவிட்டாலும் கிடைத்தவுடன் 
அதை மிகச் சாதாரண ஒன்றாக மனம் காட்டும். 
அதனால் மீண்டும், மீண்டும் அதிருப்தி வளரும்.
நமக்கு எது கிடைத்தாலும் அதனைத் திருப்தியாக 
ஏற்றுக் கொள்ளும் முன்னரே அடுத்து என்ன கிடைக்கும்
என்று எதிர்பார்க்க ஆரம்பிக்கவைப்பது இந்த அதிருப்தி. 
எப்போதும் எதிலும் திருப்திபடுவதற்கான
காரணங்களைக் கண்டுபிடித்து வாழ வாழ வாழ்வே சொர்க்கமாகிவிடும்.

- நன்றி! பாஸ்கரன்


Last edited by sawmya on Sun Sep 29, 2013 3:22 pm; edited 1 time in total (Reason for editing : பிழை திருத்தம் காரணமாக...)
sawmya
sawmya
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 2919

Back to top Go down

வாழ்க்கைக்கான பாடங்கள் Empty Re: வாழ்க்கைக்கான பாடங்கள்

Post by sawmya Sun Sep 29, 2013 3:16 pm

”உதவி சக்கரம்”

ஒரு நாள் சாயங்கால வேளையில் வயதான பெண்மணி 
ஒருவர் கார் அருகில் வெகு நேரமாக நிற்பதை ஒருவர் கவணித்தார்.
வாகணங்கள் செல்லும்போது அந்த பெண்மணி கை காட்டி நிறுத்தப்பார்த்தார் ,
ஆனால் எந்த வாகனமும் நிற்கவில்லை.

அந்த நபர் அருகில் சென்று என்ன பிரச்சனை என்று 
அந்த பெண்மணியிடம் கேட்டார்.
கார் டயர் பஞ்சர் ஆகி விட்டது என்று அந்த பெண்மணி கூறினார்.

என் பெயர் தயாளன் நீங்கள் காரில் உட்காருங்கள் நான் டயர் மாத்தி கொடுக்கிறேன் 
என்று டயரை கழட்ட ஆரம்பித்தார்.
சிறிது நேரத்தில் மிகவும் கஷ்டப்பட்டு டயரை மாத்தினார் .


அந்த பெண்மணி உங்களுக்கு நான் எவ்வளவு பணம் தர வேண்டும் என்று கேட்டார்.
நான் சிறியதாக ஒரு டீக்கடை நடத்தி வருகிறேன் ,
அதில் இருந்து வரும் பணமே எனக்கு போதும்.
நீங்கள் பணம் எதுவும் தரவேண்டாம் என்றார்.

நீங்கள் கஷ்டப்படும் நேரத்தில் என்னாலான உதவி செய்தேன் அவ்வளவே.
நீங்கள் பண உதவி செய்ய வேண்டும் என்றால் 
வேறு யாராவது ஒரு நபர் கஷ்டத்தில் இருக்கும்போது என்னை நினைத்து பாருங்கள், 
அவர்களுக்கு உதவி செய்யுங்கள் என்றார்.


உதவி செய்வது என்பது ஒரு சக்கரம் மாதிரி சுழன்று கொண்டே இருக்க வேண்டும்.
நான் உங்களுக்கு உதவி செய்தேன் நீங்கள் வேறு யாருக்காவது கஷ்டத்தில் 
இருக்கும்போது உதவி செய்யுங்கள் என்று சொல்லிவிட்டு தயாளன் நடக்க ஆரம்பித்தார்.

அந்த பெண்மணி தயாளனை ஆச்சரியத்துடன் பார்த்து விட்டு காரை எடுத்து கொண்டு சென்றார்.
வழியில் தலைவலி எடுப்பது போல் இருக்கவே 
அருகில் உள்ள டீக்கடை அருகே காரை நிறுத்திவிட்டு உள்ளே சென்றார்.


டீக்கடை பார்ப்பதற்க்கு ரொம்பவே பரிதாபமாக இருந்தது,
உள்ளே இருந்து ஒரு பெண் வந்து என்ன வேண்டும் அம்மா என்று கேட்டார்.
வயதான பெண்மணி டீ கடையில் வேலை செய்யும் பெண்ணை பார்த்தார், 
அந்த பெண் ஒன்பது மாத கர்ப்பிணி என்பதை அவரிடம் பேசி தெரிந்து கொண்டார்.

குடிக்க டீ கொண்டு வாம்மா என்றார்.தயாளன் சொன்னது அவருக்கு நினைவு வந்தது.
அந்த அம்மா டீ குடித்துவிட்டு 5000 ரூபாய் பணத்தை டேபிள் மேல் வைத்து விட்டு சென்று விட்டார்.

டீ கடையில் வேலை செய்த பெண் காபி டம்பளரை கழுவி வைத்து விட்டு வந்தார். 
டேபிளில் கட்டாக பணம் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
அதை எடுத்து கொண்டு அந்த வயதான பெண்மணியிடம் கொடுக்க ஓடினார்,
அதற்குள் கார் கிளம்பி சென்று விட்டது.

கடையில் இருக்கும் வேலை எல்லாம் முடித்து விட்டு, 
கையில் அந்த வயதான பெண்மணி விட்டு சென்ற பணத்தையும் எடுத்து கொண்டு வீட்டுக்கு சென்றார்.

பிரசவ செலவுக்கு என்ன செய்ய போகிறோம் 
என்று புலம்பி கொண்டு இருந்த தன் கணவருக்கு இந்த பணத்தை காட்ட வேண்டும் என்று அருகில் சென்றார்.
ஆனால் மிகுந்த அசதியால் தூங்கி கொண்டு இருந்தார் நம்ம தயாளன்.

”எதை நாம் செய்கிறோமோ, அதுவே நமக்கும் நடக்கும்”.

- நன்றி! பாஸ்கரன்
sawmya
sawmya
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 2919

Back to top Go down

வாழ்க்கைக்கான பாடங்கள் Empty Re: வாழ்க்கைக்கான பாடங்கள்

Post by sawmya Sun Sep 29, 2013 3:20 pm

அகந்தையினால் அழிவு...


அந்த விஞ்ஞானி மிகச்சிறந்த புத்திசாலி.
 யாராலும் நினைத்துக்கூடப் பார்க்க முடியாததை அவரால் செய்துவிட முடியும். 
ஆனால் அவரின் படைப்பை ஒரு சிறு குறை சொன்னாலும் அவரால் ஏற்றுக் கொள்ள முடியாது.
பல வருட முயற்சிக்குப் பின் ஒரு புதிய சூத்திரத்தைக் கண்டறிந்தார். 
தன்னைப் போலவே அச்சு அசலான 10 உருவங்களை உருவாக்கி. 
அவற்றுக்கு உயிர் கொடுத்து உலவ வைக்க அந்த சூத்திரத்தை அவர் பயன்படுத்தினார். 


இந்த சூத்திரத்தைக் கண்டறிய விஞ்ஞானிக்கு ஒரு தனி ஆர்வம் இருந்தது. 
காரணம் இன்னும் சில வருடங்களில் தன் உயிரை எடுத்துச் செல்ல எமன் வருவான் என்று அவருக்குத் தெரியும்.
கண், காது, மூக்கு, பேச்சு, செயல் என அனைத்திலும் விஞ்ஞானியைப் போன்றே அந்த 10 பேரும் இருந்தார்கள்.
விஞ்ஞானி எதிர்பார்த்ததைப் போல ஒருநாள் எமன் வந்தான். 


ஒரேமாதிரி 11 பேர் இருப்பதைப் பார்த்து ரொம்பவே குழம்பிப் போனான்.
 விஞ்ஞானியின் ஐடியாவும் அதுதானே. எப்படியாவது உண்மையான விஞ்ஞானியின் உயிரை எடுத்தாக வேண்டும். 
என்ன செய்வது எனத்தெரியாமல் தடுமாறினான் எமன். சட்டென ஒரு யோசனை வந்தது.


அந்த 11 பேரையும் ஓர் இடத்துக்கு வரவழைத்தான் ‘விஞ்ஞானி சார், மிக அருமையான கண்டுபிடிப்பு உங்களுடையது. 
மனிதனை மறு உருவாக்கம் செய்வது அசாதாரண விஷயமா இருந்தாலும் உங்கள் கண்டுபிடிப்பில் 
ஒரு குறை உள்ளது என்று பொத்தாம் பொதுவாகச் சொன்னான்.


எல்லோரும் அமைதியாகி இருக்க, ஒருவர் மட்டும் கோபமாகி முன்னே வந்து கத்தினார்.
 ‘என் படைப்பை எப்படிக் குற்றம் சொல்ல முடியும், என்ன குறை கண்டீர்கள்?’ என்று படபடவென கோபப்பட்டார். 
எமன் முகத்தில் ஏக சந்தோஷம், ‘வாங்க சார், உங்களைத்தான் தேடிட்டு இருந்தேன்’ என்று கையோடு மேலோகம் கூட்டிக் கொண்டு போனார்.
 விஞ்ஞானி எமனிடம் கேட்டான். “எப்படி நான்தான் விஞ்ஞானி என்று கண்டுபிடித்தீர்கள்?”
“நீ பெரிய அறிவாளி என்றாலும் ஈகோ பிடித்தவன் என்பது தெரியும். அதனால்தான் வேண்டுமென்றே குறை இருக்கிறது என்று சொன்னேன். 

நீயும் கோபமாக முன்னே வந்தாய் அவ்வளவுதான்” என்றார்.
-- முக நூல்
sawmya
sawmya
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 2919

Back to top Go down

வாழ்க்கைக்கான பாடங்கள் Empty Re: வாழ்க்கைக்கான பாடங்கள்

Post by sawmya Sun Sep 29, 2013 3:26 pm

மகிழ்ச்சியின் ரகசியம்...


வாக்கையின் பிரச்சனைகளை சமாளிக்க முடியாமல் வந்த இளைஞரிடம் 
அந்த ஞானி, ‘நீ முதலில் எனது மாளிகை யைச் சுற்றி பார்த்துவிட்டு வா, 
பிறகு பதில் சொல்கிறேன்’ என்றார்.
“இதோ கிளம்பிவிட்டேன்” என்று எழுந்த வரிடம் ஞானி சொன்னார். 
“ஒரு நிமிடம் இதோ இந்த ஸ்பூனை உங்கள் வாயால் பிடித்துக் கொள்ளுங்கள். 
அதில் இருக்கிறஎண்ணெய் சிந்தி விடாமல் சுற்றிப் பாருங்கள்”.
மாளிகையைச் சுற்றிப்பார்த்துவிட்டு இரண்டு மணி நேரம் கழித்து ஞானியிடம் வந்தார்
 அந்த மனிதர். 
இப்போது ஞானி அவரிடம் “என் படுக்கை அறையில் 
ரவிவர்மாவின் ஒவியம் இருந்ததே அது எப்படி இருந்தது?” என்று கேட்டார்.
“மன்னியுங்கள் சுவாமி, நான் அதைக் கவனிக்கவில்லை” என்றார் அந்த மனிதர்.
“அது போகட்டும். மாடிக்குச் செல்லும் வழியில் இருந்த ராமாயண வாசகங்கள்? 
கிரேக்கத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட ஒளி விளக்குகள்? 
நூலக வழியே தெரியும் பரமானந்தர் கோயில்?”
எல்லாவற்றுக்கும் ஒரே பதில்தான்…. “மன்னியுங்கள். 
நான் அதைக் கவனிக்கவில்லை”.
“இரண்டுமணி நேரம் என்னதான் செய்தீர்கள்?” என்றார் ஞானி.
“இதோ, இந்த ஸ்பூனில் இருக்கிற எண்ணெய் சிதறாமல் பார்த்துக் கொண்டேன்” 
என்றார் அந்த மனிதர்.
“போகட்டும்… இப்போதும் அதே ஸ்பூனோடு எல்லாவற்றையும் சுற்றிப் பாருங்கள். 
அனைத்தையும் ரசித்துப் பாருங்கள்” என்று ஞானி அவரை அனுப்பி வைத்தார்.
இந்த முறை ஞானியிடம் வந்த அவர். 
சுவாமி கேட்ட கேள்விகளுக்கு எல்லாம் பதில் சொன்னார்.
“அது சரி, ஸ்பூனில் இருந்த எண்ணெய் எங்கே?” என்றார் ஞானி. 
“மாளிகையைச் சுற்றிப் பார்க்கிற சுவாரஸ்யத்தில் எண்ணெய் சிந்தி விட்டது” என்றார் அந்த மனிதர்.
“எண்ணெய் சிந்தாமல் சுற்றி இருப்பதை ரசிக்கவும், 
அனுபவிக்கவும் கற்றுக் கொள்ளுங்கள். 
மாறாக ரசிப்பதில் கவனம் செலுத்தினால் எண்ணெய் சிதறும் என்று தர்க்கம் செய்யாதீர்கள்” 
அதுதான் சந்தோஷத்தில் ரகசியம்.
- முக நூல்
sawmya
sawmya
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 2919

Back to top Go down

வாழ்க்கைக்கான பாடங்கள் Empty Re: வாழ்க்கைக்கான பாடங்கள்

Post by sawmya Sun Sep 29, 2013 3:30 pm

ஆத்திர முடிவு இழப்பாகிவிடும் ...

ஒரு பணக்கார வீட்டுப் பையனுக்கு பந்தயக் கார் மீது ஆசை. 
எப்போதும் அது குறித்துதான் சிந்தனை. 
யார் அதுமாதிரி கார் ஓட்டிப் போனாலும், மிகவும் ரசிப்பான்.. 
எங்காவது அந்த கார் நின்றிருந்தால், ஒரு காதலியைப் பார்ப்பதுபோல ரசித்துப் பார்ப்பான். நண்பர்களுடன் பேசும்போது கூட அந்த கார் பற்றிதான் பேசுவான்.
அப்பா ஒருநாள் சொன்னார். 
‘நீ கல்லூரிப் படிப்பில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெறு. 
உனது பட்டமளிப்பு நாளில், அந்த காரைப் பரிசாகத் தருகிறேன்’ என்று, 
இளைஞனுக்கு எல்லை இல்லா மகிழ்ச்சி. அவன் கனவு கண்ட பந்தயக் கார் அவனுக்குக் கிடைக்கப் போகிறது.
கார் பற்றிய கனவுகளோடு தீவிரமாகப் படிக்க ஆரம்பித்த அவன்
 முதல் வகுப்பில் தேறினான். 
பட்டமளிப்பு விழா நாளும் வந்தது. 
அவன் கனவு நிறைவேறப் போகிற நாள். 
பட்டத்தைக் கையில் வாங்கிக்கொண்டு அப்பாவைப் பார்க்க ஒடோடி வந்தான். 
அப்பாவிடம் பட்டத்தைக் கொடுத்துவிட்டு கண்கள் நிறைய எதிர்பார்ப்போடு நின்றான்.
 மகிழ்ச்சியோடு அணைத்துக் கொண்ட தந்தை அருகில் இருந்த அறைக்கு அழைத்துப் போனார். இளைஞனுக்கு ஆர்வம் தாளவில்லை. 
அங்கே அழகாக பார்சல் செய்யப்பட்டு இருந்த ஒரு பைபிளைப் பரிசாக வைத்திருந்தார். 
மகனுக்கு மாபெரும் ஏமாற்றம். 
அப்பா மீது ஆத்திரம். 
அவர் தன்னை ஏமாற்றிவிட்டார் என்ற கோபம் வேறு.
 எதுவும் பேசாமல் ஆத்திரத்தில் வீட்டைவிட்டு வெளியேறினான். 
அப்பாவைப் பார்க்க வேண்டும் என்று அவ்வப்போது தோன்றினாலும் ஏமாற்றியவரை ஏன் பார்க்க வேண்டும் என்று இருந்துவிடுவான்.
ஒரு நாள் தந்தி ஒன்று வந்தது. தந்தை இறந்து விட்டார் என்று. 
கனத்த இதயத்தோடு வீட்டுக்குப் போனான் இளைஞன். 
அப்பாவின் போட்டோ மட்டும் தொங்கியது.
 பழைய நினைவுகளோடு வீட்டைச் சுற்றி வந்தவன். 
தற்செயலாக அந்த அறைக்குள் போனான். 
அப்பா பரிசாக கொடுத்த அந்த பைபிள் அப்போதும் பிரிக்கப்படாமல் அப்படியே இருந்தது. 
அதைக் கையில் எடுத்தபோது அதன் பின்பகுதியில் ஏதோ தட்டுப்பட்டுவிட்டது. 
திருப்பிப் பார்த்த மகனுக்கு அதிர்ச்சி. 
கண்களில் இருந்து கண்ணீர் கரைபுரண்டு ஓடியது. 
அந்த பைபிளின் பின்னால் அவன் ஆசைப்பட்ட 
பார்சலாக காரின் சாவியும் அதை முழுத்தொகையையும் கொடுத்து பட்டமளிப்பு நாளில் வாங்கியதற்கான ரசீதும் இருந்தன.
அடியில் ஒரு வாசகம் ‘அன்பு மகனுக்கு ஆசீர்வாதங்களுடன் அப்பா’ என்றிருந்தது.
 அப்பாவையும் அவரின் அன்பையும் நினைத்து அழுவதைத் தவிர வேறெதுவும் செய்ய முடியவில்லை.
- முக நூல்
sawmya
sawmya
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 2919

Back to top Go down

வாழ்க்கைக்கான பாடங்கள் Empty Re: வாழ்க்கைக்கான பாடங்கள்

Post by Muthumohamed Sun Sep 29, 2013 11:15 pm

வாழ்க்கை பாடங்கள் அனைத்துமே அருமை பகிர்வுக்கு நன்றி
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

வாழ்க்கைக்கான பாடங்கள் Empty Re: வாழ்க்கைக்கான பாடங்கள்

Post by sawmya Thu Oct 10, 2013 11:04 am

சுவாமி விவேகானந்தர்

  • பலமே வாழ்வு; பலவீனமே மரணம்.

  • உன் வாழ்க்கையின் எந்த ஒரு நாளில் உன் முன்னால் எந்தப் பிரச்சினையையும் நீ சந்திக்காமல் முன் செல்கிறாயோ, அப்பொழுது தவறான பாதையில் நீ பயணிக்கிறாய் என்று அறிவாய்.

  • விழிமின், எழுமின், குறிக்கோளை அடையும் வரை நில்லாது உழைமின் நன்று. பாசாங்கு போடுவதை விட நாத்திகனாக இருப்பதே மேல்.

  • உலகின் குறைகளை பற்றி பேசாதே. குறைகளை நோக்கி வருத்தப்படு, எங்கும் நீ குறைகளை காண்பாய். ஆனால், நீ உலகுக்கு உதவி செய்ய விருப்பினால் உலகை தூற்றாதே, குறை சொல்லாதே. குறை சொல்லி உலகை இன்னும் பலவீனப்படுத்தாதே. உலகின் குறைகள், குற்றங்கள் எல்லாம் அதன் பலவீனத்தால் விளைபவை அல்லவா.?

  • செயல் நன்று, சிந்தித்து செயலாற்றுவதே நன்று. உனது மனதை உயர்ந்த இலட்சியங்களாலும், சிந்தனைகளாலும் நிரப்பு. அவற்றை ஒவ்வொரு நாளின் பகலிலும் இரவிலும் உன் முன் நிறுத்து; அதிலிருந்து நல் செயல்கள் விளையும்.

  • வாழ்வும் சாவும், நன்மையும் தீமையும், அறிவும் அறியாமையும் ஆகியவற்றின் கலவைதான் மாயா, அல்லது பிரபஞ்சத்தின் இயல்பு. இந்த மாயத்துள் நீ எல்லையற்று மகிழ்ச்சிக்காக அலையலாம், ஆனால் நீ தீமையையும் காண்பாய். தீமையின்றி நன்மை இருக்குமென்பது சிறுபிள்ளைதனம்.

  • எவன் ஒருவனுக்கு தன்னிடத்தில் நம்பிக்கை இல்லையோ அவனே நாத்திகன். பண்டைய மதங்கள் கடவுள் நம்பிக்கை இல்லாதவனைத்தான் நாத்திகன் என்று குறிப்பிட்டன. புதிய மதம் தன்னம்பிக்கை இல்லாதவனைத்தான் நாத்திகன் என்று சொல்லுகிறது.

  • தன்னம்பிக்கை கொண்டிருந்த ஒரு சிலருடைய வரலாறே உலக சரித்திரமாகும். அத்தகைய நம்பிக்கை, உள்ளே இருக்கும் தெய்விகத்தை வெளியே வரவழைக்கிறது. நீ எதையும் சாதிக்க முடியும். அளவு கடந்த ஆற்றலை வெளிப்படுத்தப் போதுமான அளவிற்கு உண்மையாக நீ முயற்சி செய்யாத போது தான் தோல்வி அடைகிறாய். ஒரு மனிதனோ, ஒரு நாடோ தன்னம்பிக்கை இழந்த உடனே அழிவு வருகிறது.

  • நீ எதை நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய். நீ உன்னை பலவீனன் என்று நினைத்தால் பலவீனனாகவே ஆகிவிடுவாய். நீ உன்னை வலிமையுடயவன் என்று நினைத்தால் வலிமை படைத்தவன் ஆகிவிடுவாய்.

  • பலவீனத்திற்கான பரிகாரம், ஓயாது பலவீனத்தைக் குறித்து சிந்திப்பதல்ல. மாறாக வலிமையைக் குறித்து சிந்திப்பது தான். மக்களுக்கு, ஏற்கனவே அவர்களுக்குள் இருந்து வரும் வலிமையைப்பற்றிப் போதிப்பாயாக.

  • மிகப்பெரிய உண்மை இது -- வலிமை தான் வாழ்வு; பலவீனமே மரணம்.

  • 'இவனை நம்பு' அல்லது 'அவனை நம்பு' என்று மற்றவர்கள் சொல்கிறார்கள். ஆனால் நான் சொல்கிறேன் -- முதலில் உன்னிடத்திலேயே நீ நம்பிக்கை வை. அது தான் வழி. உன்னிடத்தில் நீ நம்பிக்கை வை, எல்லா ஆற்றல்களும் உன்னுள்ளேயே உள்ளன. அதை உணர்ந்து அந்த ஆற்றலை வெளிப்படுத்து. 'நான் எதையும் சாதிக்க வல்லவன்' என்று சொல். நீ உறுதியுடன் விஷத்தை பொருட்படுத்தாதிருந்தால், பாம்பின் விஷமும் உன் முன் சக்தியற்றதே.

  • ஒருமுகப்படுத்தும் ஆற்றல் வளர வளர அதிக அளவில் அறிவைப் பெறலாம். இந்த வழி தான் அறிவைப் பெறுவதற்குரிய ஒரே வழி. செருப்பை செப்பனிடுவதைத் தொழிலாகக் கொண்டவன் மனதை ஒருமுகப்படுத்தி தன் பணியைச் செய்தால் மேலும் சிறப்பாக செருப்புகளை செப்பனிடுவான். மனதை ஒருமுகப்படுத்தி சமையல் செய்யும் சமையற்காரன் மேலும் சிறந்த முறையில் சமைப்பான். பணம் சேர்ப்பதோ, கடவுள் வழிபாடோ அல்லது வேறு எந்த ஒரு வேலையானாலும் மனதை ஒருமுகப்படுத்தும் ஆற்றல் வளர வளர, மேலும் சிறப்பாக அந்தக் காரியத்தை செய்து முடிக்கலாம். இந்த ஒரு குரல், ஒரே தட்டுதல், இயற்கையின் கதவுகளைத் திறந்து ஒளி வெள்ளங்களை வெளியே பாய்ந்தோடச் செய்கிறது.

  • எந்த ஒரு சக்தியையும் புதிதாக உண்டாக்க முடியாது. ஏற்கனவே உள்ள சக்தியைத்தான் வேறு திசைக்கு நாம் திருப்பிவிட முடியும். எனவே, நமது கைகளில் ஏற்கனவே உள்ள மாபெரும் ஆற்றல்களை அடக்கி ஆள நாம் கற்றுக்கொள்ள வேண்டும். அவற்றை மனதின் வலிமையைக் கொண்டு வெறும் மிருக சக்தியாக இருப்பதற்கு பதிலாக, ஆன்மிகச் சக்தியாக இருக்கச் செய். பிரம்மச்சரியம் தான் எல்லா ஒழுக்கங்களுக்கும், எல்லா மதங்களுக்கும் அடித்தளமாக விளங்குகிறது என்பது இதனின்று தெளிவாகிறது.

  • நமது சொந்த மனப்பான்மை தான் நமக்கு ஏற்றாற்போல் உலகத்தைத் தோன்றும்படி செய்கிறது. நமது எண்ணங்களே பொருள்களை அழகு பொருந்தியவை ஆக்குகின்றன; நமது எண்ணங்களே பொருள்களை அவலட்சணமாக்குகின்றன. இந்த உலகம் முழுவதும் நமது சொந்த மனதிலேயே அடங்கியிருக்கிறது. எல்லாவற்றையும் சரியான முறையில் புரிந்துகொள்ளக் கற்றுக்கொள்.

  • நாம் இப்போது இருக்கும் நிலைமைக்கு நாமே பொறுப்பாளிகள். நாம் எப்படியெல்லாம் இருக்க வேண்டும் என்று விரும்புகிறோமோ அப்படி நம்மை அமைத்துக்கொள்ளும் ஆற்றல் நம்மிடமே இருக்கிறது. நாம் இப்போது இருக்கும் நிலை நம்முடைய முன்வினைகளின் பலன் என்றால், எதிர்காலத்தில் நாம் எப்படியெல்லாம் இருக்க வேண்டும் என்று விரும்புகிறோமோ அதைம் நாம் நமது தற்போதைய செயல்களால் உண்டாக்கிக் கொள்ள முடியும் என்பது வெளிப்படை.

  • இந்த உலகம் மிகப்பெரிய ஓர் உடற்பயிற்சிக் கூடம். இங்கு நாம் நம்மை வலிமையுடவர்களாக்கிக் கொள்வதற்காக வந்திருக்கிறோம்.

  • மக்கள் பொதுவாக வாழ்க்கையிலுள்ள குறைபாடுகளையெல்லாம் தங்களுடன் வாழ்பவர்கள் மீதோ, அல்லது அது தவறினால் தெய்வத்தின் மீதோ சுமத்துகிறார்கள். அல்லது புதிதாக அவர்கள் ஏதோ பேய் பிசாசு என்று கற்பித்துக்கொண்டு, அதைத் தலைவிதி என்று சொல்கிறார்கள். விதி என்றால் என்ன? அது எங்கே இருக்கிறது? எதை விதைத்தோமோ அதைத்தான் அறுவடை செய்கிறோம். நமது விதியை நாமே வகுத்துக்கொள்கிறோம். எனவே, அதன்பொருட்டுத் தூற்றுவதற்கும் ஒருவருமில்லை; பாராட்டுவதற்கும் ஒருவருமில்லை. காற்று வீசியபடி இருக்கிறது. பாய்மரங்களை விரித்துக் காற்றை பயன்படுத்திக்கொள்ளம் கப்பல்கள் தங்கள் வழியே முன்னேறிச் செல்கின்றன. ஆனால் பாய்களை சுருட்டி வைத்துள்ள கப்பல்கள் காற்றை ஏற்றுப் பயன் பெறுவதில்லை. இது காற்றினுடைய குற்றமாகுமா?

  • ‘நான் அனுபவித்துக் கொண்டிருக்கும் இந்தத் துன்பம், என்னுடைய சொந்தச் செயல்களாலேயே உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்த ஒரு நிலையே, என் ஒருவனால் மட்டுமே அது நீக்கப்பட வேண்டும் என்பதைக் காட்டுகிறது’ என்று சொல். நான் எதைப் படைத்தேனோ அதை என்னால் அழிக்கவும் முடியும். பிறரால் படைக்கப்பட்ட ஒன்றை ஒருபோதும் என்னால் அழிக்க முடியாது. எனவே, எழுந்து நில். தைரியமாக இரு. வலிமையுடன் இரு. பொறுப்பு முழுவதும் உன் தோள் மீதே சுமந்துகொள். உனது விதியைப் படைப்பவன் நீயே என்பதைப் புரிந்துகொள். உனக்குத் தேவையான எல்லா வலிமையும் உதவியும் உனக்குள்ளேயே குடிகொண்டிருக்கின்றன.

  • நாம் நினைக்கும் ஒவ்வோர் எண்ணமும், நாம் செய்யும் ஒவ்வொரு காரியமும், குறிப்பிட்ட ஒரு காலத்திற்குப் பிறகு சூட்சுமத் தன்மையை அடைகிறது. பின்பு அது வித்து வடிவத்தைப் பெற்று மறைந்திருக்கும் நிலையில் நமது சூட்சும சரீரத்தில் வாழ்கிறது. மீண்டும் சிறிது காலத்திற்குப் பிறகு அது வெளிப்பட்டு வந்து தனக்கு உரிய பலன்களைத் தருகிறது. இந்தப் பலன்களே நம்முடைய வாழ்க்கையை நிர்ணயிக்கின்றன. இவ்விதம் மனிதன் தனது வாழ்க்கையைத் தானே உருவாக்கிக் கொள்கிறான். தனக்குத் தானே அமைத்துக் கொள்ளும் விதிகளைத் தவிர, வேறு எதற்கும் மனிதன் கட்டுப்பட்டவன் அல்ல.

  • பிறர் முதுகுக்குப் பின்னால் நாம் செய்யவேண்டிய காரியம் தட்டிக்கொடுப்பது மட்டும்தான்

  • எழுந்து நில் ! விழித்து கொள் ! இலட்சியத்தை அடையும் வரை ஓயாது உழை !!! 
sawmya
sawmya
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 2919

Back to top Go down

வாழ்க்கைக்கான பாடங்கள் Empty Re: வாழ்க்கைக்கான பாடங்கள்

Post by sawmya Thu Oct 10, 2013 11:05 am

விவேகானந்தரின் பொன்மொழிகள்


  • கடவுள் இருந்தால் அவனை நாம் காணவேண்டும், ஆத்மா இருந்தால் அதனை நாம் உணர வேண்டும், அப்படியில்லையென்றால் நம்பிக்கை இல்லாமல் இருப்பது நன்று. பாசாங்கு போடுவதை விட நாத்திகனாக இருப்பதே மேல்.


  • உலகின் குறைகளை பற்றி பேசாதே. குறைகளை நோக்கி வருத்தப்படு, எங்கும் நீ குறைகளை காண்பாய். ஆனால், நீ உலகுக்கு உதவி செய்ய விருப்பினால் உலகை தூற்றாதே, குறை சொல்லாதே. குறை சொல்லி உலகை இன்னும் பலவீனப்படுத்தாதே. உலகின் குறைகள், குற்றங்கள் எல்லாம் அதன் பலவீனத்தால் விளைபவை அல்லவா.


  • செயல் நன்று, சிந்தித்து செயலாற்றுவதே நன்று. உனது மனதை உயர்ந்த இலட்சியங்களாலும், சிந்தனைகளாலும் நிரப்பு. அவற்றை ஒவ்வொரு நாளின் பகலிலும் இரவிலும் உன் முன் நிறுத்து; அதிலிருந்து நல் செயல்கள் விளையும்.


  • வாழ்வும் சாவும், நன்மையும் தீமையும், அறிவும் அறியாமையும் ஆகியவற்றின் கலவைதான் மாயா, அல்லது பிரபஞ்சத்தின் இயல்பு. இவ் மாய்த்துள் நீ எல்லையற்று மகிழ்ச்சிக்காக அலையலாம், ஆனால் நீ தீமையையும் காண்பாய். தீமையின்றி நன்மை இருக்குமென்பது சிறுபிள்ளைத்தனம்.


  • உலகில் உள்ள தீமைகளைப் பற்றியே நாம் வருந்துகிறோம். நம் உள்ளத்தில் எழும் நச்சுஎண்ணங்களைப் பற்றி சிறிதும் கவலை கொள்வதில்லை. உள்ளத்தை ஒழுங்குபடுத்தினால் இந்த உலகமே ஒழுங்காகிவிடும்.


  • சுயநலமின்மை, சுயநலம் என்பவற்றைத் தவிர, கடவுளுக்கும் சாத்தானுக்கும் எவ்வித வேறுபாடும் இல்லை.


  • எப்போதும் பொறாமையை விலக்குங்கள். இதுவரையிலும் நீங்கள் செய்யாத மகத்தான காரியங்களை எல்லாம் செய்து முடிப்பீர்கள்.


  • நமது நாடு வீரர்களை வேண்டி நிற்கிறது. வீரர்களாகத் திகழுங்கள்!


  • இளைஞர்களே, தேச முன்னேற்றம் என்னும் தேர்ச் சக்கரத்தைக் கிளப்புவதற்கு உங்கள் தோள்களைக் கொடுங்கள்.


  • இளைஞர்களே உங்களுக்கு என்னிடம் நம்பிக்கை இருக்குமானால் என்னை நம்புவதற்குரிய தைரியம் இருக்குமானால் ஒளிமயமான எதிர்காலம் உங்களுக்குக் காத்திருக்கிறது என்பேன்.


  • வலிமையே மகிழ்ச்சிகரமான நிரந்தரமான வளமான அமரத்துவமான வாழ்க்கை ஆகும்.


  • சுயநலம் என்பதை அறவே தூர எறிந்துவிட்டு வேலை செய்யுங்கள்.


  • என் குழந்தைகளான நீங்கள் என்னைவிட நூறு மடங்கு சிறந்தவர்களாக இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.


  • நீ எதை நினைக்கிறாயோ அதுவாக ஆகிறாய்
    உன்னை வலிமை உடையவன் என்று நினைத்தால் வலிமை படைத்தவன் ஆவாய்!
  • நான் இப்போது இருக்கும் நிலைக்கு நானே பொறுப்பு.
sawmya
sawmya
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 2919

Back to top Go down

வாழ்க்கைக்கான பாடங்கள் Empty Re: வாழ்க்கைக்கான பாடங்கள்

Post by மகா பிரபு Thu Oct 10, 2013 1:38 pm

அருமை.
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

வாழ்க்கைக்கான பாடங்கள் Empty Re: வாழ்க்கைக்கான பாடங்கள்

Post by முழுமுதலோன் Thu Oct 10, 2013 4:36 pm

சிறப்பான பதிவு அனைத்தும் தன்னம்பிக்கை வரிகள்
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

வாழ்க்கைக்கான பாடங்கள் Empty Re: வாழ்க்கைக்கான பாடங்கள்

Post by ஸ்ரீராம் Thu Oct 10, 2013 4:44 pm

எதை நாம் செய்கிறோமோ, அதுவே நமக்கும் நடக்கும்
ஏற்க்கனவே அமர்க்களத்தில் படித்து இருந்தாலும் மீள்பதிவு புத்துணர்ச்சி அளிக்கிறது
நன்றி
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

வாழ்க்கைக்கான பாடங்கள் Empty Re: வாழ்க்கைக்கான பாடங்கள்

Post by sawmya Fri Oct 11, 2013 9:25 am

நன்றி! நன்றி!புன்முறுவல் 
sawmya
sawmya
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 2919

Back to top Go down

வாழ்க்கைக்கான பாடங்கள் Empty Re: வாழ்க்கைக்கான பாடங்கள்

Post by sawmya Fri Oct 11, 2013 9:26 am

காந்தியின் சிந்தனைகள்...

* அன்பு, அறம், நன்றியறிவு, தேசாபிமானம், முதலிய நற்குணங்கள் மனித வர்க்கத்திற்கு சேமத்தை உண்டு பண்ணக் கூடியவைகள்.

* உலகம் அறிந்த மகாபெரிய ஜனநாயகவாதி கடவுள்தான். நல்லது கெட்டது எது வேண்டுமோ அதைத் தெரிவு செய்து கொள்வதற்கு எந்தவித வரையறை ஏற்படுத்தாமல் அவர் தம்மைச் சுதந்திரமாக விட்டிருக்கிறார்.

* நாகரிகங்கள் தோன்றலாம், மறையலாம். நிலம் என்றும் இருக்கும். ஒரு நாகரிகம் மண்ணைப் பாழ்படுத்த முற்பட்டால் மண் அழிந்து போய்விடாது. அந்த நாகரீகம் தான் அழிந்துவிடும்.

* ஒவ்வொருவனும் முயற்சி செய்தால் தன் தேவைகளைக் குறைத்துக் கொள்ள முடியும். அப்படிக் குறைத்துக் கொண்டால்தான் சுகம், ஆரோக்கியம், சாந்தி, இவற்றைப் பெறுவோம். ஆன்மாவானது உடலை ஒரு பாரமாக சுமந்து நிற்கின்றது. 

ஆசைகளைக் குறைத்துக் கொண்டால் தான் சரீர பாரம் குறையும்.

* பிறரை அழிக்க விரும்புகிறவன் தன்னைத்தானே அழித்துக் கொள்கிறான். இதுவே இயற்கையின் நியதி.

* முள் நிறைந்த செடியில் தான் அழகும் வாசனையும் பொருந்திய ரோஜா மலர்கிறது. 
  அதுபோலவே சொல்ல முடியாத துன்பத்திற்கும், எதிர்பார்ப்பிற்கும் மத்தியில் தான் உண்மை மலர்கிறது.

* உயர்ந்த போராட்டம் என்பது உள் உள்ளத்தோடு போராடுவதே.
sawmya
sawmya
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 2919

Back to top Go down

வாழ்க்கைக்கான பாடங்கள் Empty Re: வாழ்க்கைக்கான பாடங்கள்

Post by sawmya Fri Oct 11, 2013 9:28 am

காந்தியின் சிந்தனைகள்...

தன்னைத் தூய்மைப்படுத்திக் கொள்வது தான் அதி உன்னதமான அழியாத தற்காப்பு ஆகும்
உடல் எப்படி தாக்குதலை சமாளிக்கப் போகிறது என்பதை விட உள்ளம் எப்படி சமாளிக்கப்போகிறது என்பதை வெளிக்காட்டுவது தான் தற்காப்புக்கலை.
 
இதைத்தான் அனைவருக்கும் கற்பிக்க வேண்டும்
தற்காலத்தில் தங்களை, எல்லாம் தெரிந்துவிட்ட பெரியவர்களாகக் கருதிக் கொள்கிற வழக்கம் நம் வாலிபர்களிடையே ஏற்பட்டிருக்கிறது.
 
உண்மையான தன்னடக்கமுள்ளவனுக்கு நாளுக்கு நாள் பலம் அதிகரித்துக் கொண்டே போகும்.
 
அமைதியிலிருந்து அதிகமான அமைதிக்கு அவன் வளர்ந்து கொண்டே போகிறான்.
 
 என் உடலுழைப்பாலும், மூளையுழைப்பாலும் வெளிப்படும் சக்தியையும், வேகத்தையும் நேரில் பார்த்தவர்கள் அவை அதிசயிக்கத்தக்கவை என்றெல்லாம் வர்ணித்திருக்கிறார்கள்
அதற்கு மூல காரணமானதும், நீண்ட காலமாக நான் நோய்க்கு ளாகாமல் ஆனந்தம் அனுபவித்து வருவதற்கும் காரணம் தன்னடக்கமே என்பதில் சிறிதேனும் சந்தேகமில்லை.
 
 
நமது இன்றையச் சமுதாய அமைப்பில் தன்னடக்கத்தை வளர்க்கும்படியான வசதிகள் எதுவும் அமைந்திருக்கவில்லை.நம்முடைய வளர்ப்பு முறையே அதற்கு எதிராக இருந்து வருகிறது.
 
தன்னடக்கச் சக்தியானது பெண்களைவிட ஆண்களிடமே குறைவாகக் ணப்படுகிறது.

தன்னடக்கத்தைப் பயில்வது ஆணைவிடப் பெண்ணுக்கு வெகு சுலபம்.
 
எண்ணங்களைக்கட்டுப்படுத்துவதுதான் தன்னடக்கத்தின் முதற்படியாகும்.
sawmya
sawmya
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 2919

Back to top Go down

வாழ்க்கைக்கான பாடங்கள் Empty Re: வாழ்க்கைக்கான பாடங்கள்

Post by sawmya Fri Oct 11, 2013 9:33 am

காந்தியின் சிந்தனைகள்...

உலகைத் தாங்குவது அன்பு...

* அணுக்களிடையே இணைக்கும் சக்தி இருப்பதால்தான், உலகம்
பொடிப்பொடியாக உதிர்ந்துவிடாமல் இருப்பதாக விஞ்ஞானிகள்
கூறுகிறார்கள். அது போலவே, உயிர்களிடத்தும் அன்பு என்னும்
இணைக்கும் சக்தி இருக்க வேண்டும். அன்பு உள்ள இடத்திலேயே,
உயிர் இருக்கிறது. பகைமை அழிவையே தருகிறது.
 மனித ஜாதி அழியாமல் ஜீவித்துக் கொண்டிருப்பதற்குக் காரணம், 
இணைக்கும் சக்தியே.
 இது பிரிக்கும் சக்தியை விடப் பெரியது. 

* உண்மை இன்றேல் அன்பும் இல்லை. 
உண்மை இல்லாமல் பாசம் இருக்கலாம். 
உதாரணம், பிறர் கெடத் தான் வாழும் தேசபக்தி.
உண்மை இல்லாமல் மோகம் இருக்கலாம். 
எடுத்துக்காட்டு, ஓர் இளம் பெண்ணிடம் ஒரு வாலிபன் கொள்ளும் காதல். 
உண்மை இல்லாமல் வாஞ்சை இருக்கலாம். 
உதாரணமாக, பெற்றோர் பிள்ளைகளிடம் காட்டும் அன்பு மிருகத்தன்மைக்கு
அப்பாற்பட்டது. 
அது ஒரு போதும் பாரபட்சமாய் இருக்காது.
உலகத்தை தாங்கி நிற்பது அன்பு ஒன்றே என்பது என் திடமான
நம்பிக்கை. 
அன்புள்ள இடமே வாழ்வுள்ள இடம். 
அன்பில்லா வாழ்வு மரணமே.

* அக்கம்பக்கத்தில் இருப்பவர்கள் மீது தனக்கு அன்பு
இருக்கிறது என்பதை அவர்கள் நன்கு உணரும்படி ஒருவர் செய்ய
வேண்டும். 
தான் கூறும் முடிவு சரியானதாகவே இருக்கும் 
என்ற நம்பிக்கை அக்கம் பக்கத்தில் இருப்பவர்களுக்கு ஏற்பட
வேண்டும். 
அதோடு தன்னுடைய முடிவை அவர்கள் ஏற்றுக்கொள்ளவோ,
அமலாக்கவோ இல்லையானால், அதனால் தனக்கு எந்தவிதமான
மனக்கஷ்டமும் ஏற்படாது என்பதும், நிச்சயமாக இருக்க
வேண்டும். 
இப்படியெல்லாம் இருந்தால்தான் குற்றம் குறைகளைக்
கூறிக் கடுமையாகக் கண்டிக்கும் உரிமையை ஒருவர்
பெற்றவராவார்.

-செந்தில்
sawmya
sawmya
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 2919

Back to top Go down

வாழ்க்கைக்கான பாடங்கள் Empty Re: வாழ்க்கைக்கான பாடங்கள்

Post by mohaideen Fri Oct 11, 2013 12:51 pm

அனைத்தும் சூப்பர் சூப்பர்
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

வாழ்க்கைக்கான பாடங்கள் Empty Re: வாழ்க்கைக்கான பாடங்கள்

Post by ஸ்ரீராம் Fri Oct 11, 2013 1:13 pm

அருமை அருமை பகிர்வுக்கு நன்றி
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

வாழ்க்கைக்கான பாடங்கள் Empty Re: வாழ்க்கைக்கான பாடங்கள்

Post by முரளிராஜா Sat Oct 12, 2013 10:29 am

பயனுள்ள பகிர்வு 
தொடரட்டும்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

வாழ்க்கைக்கான பாடங்கள் Empty Re: வாழ்க்கைக்கான பாடங்கள்

Post by kanmani singh Sat Oct 12, 2013 2:01 pm

கைதட்டல் கைதட்டல் கைதட்டல் 

kanmani singh
avatar
kanmani singh
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 4190

Back to top Go down

வாழ்க்கைக்கான பாடங்கள் Empty Re: வாழ்க்கைக்கான பாடங்கள்

Post by Manik Sat Oct 12, 2013 2:05 pm

மிகவும் அருமையான பதிவு நல்ல பதிவு

ஆசையை வெறுத்து புதிய வாழ்க்கையை தேடுகிறேன் நான்........

இந்த பதிவு என் மனதை மிகவும் கவர்ந்தது....
Manik
Manik
இணை வலை நடத்துனர்
இணை வலை நடத்துனர்

பதிவுகள் : 2305

Back to top Go down

வாழ்க்கைக்கான பாடங்கள் Empty Re: வாழ்க்கைக்கான பாடங்கள்

Post by sawmya Tue Oct 15, 2013 12:16 pm

பணம் மட்டுமே வாழ்க்கையல்ல!

* ஒரு செயலைத் தொடங்கும் முன்பு,
அதனால் உண்டாகும் பயனை எண்ணி செயல்பட வேண்டும்.

* ஒருவனுக்கு சிறப்பு தருவது இனமோ, மதமோ, ஜாதியோ அல்ல. அவன் செய்யும் செயல் மட்டுமே சிறப்பைத் தருகிறது.

* படிப்பு பண்பைத் தருவதுடன்,
வாழ்வையே மாற்றும் வகையில் உள்ளது.


* ஒரு மனிதனை மனிதன் ஆக்குவது கல்வி. அவனை
நல்வழிப்படுத்துவது கல்வி. அவனை ஒழுக்க சீலனாய்
மாற்றுவதும் கல்வியேயாகும்.


* நாம் பிறர்க்கு உதவி செய்யவும் படைக்கப்
பட்டிருக்கிறோம். கைகள் வாங்குவதற்கு மட்டுமல்ல, கொடுப்பதற்காகவும் தான் படைக்கப்பட்டுள்ளது.


* பணம் வாழ்விற்குத் தேவை. ஆனால், பணமே
வாழ்க்கையல்ல என்பதை உணரவேண்டும்.


* குழந்தைகளை பெற்றால் மட்டும் போதாது, பெற்று வளர்த்து, சான்றோன் ஆக்குதலே தந்தையின் கடமை.


* உள்ளத்தில் அன்பு நிறைந்தால், உதட்டில் இனிமையான சொல் பெருகும். இதனால் புன்னகை பூக்கும், மகிழ்ச்சி பெருகும். இன்பம் கூடும், வாழ்வு இனிதாகும்.
- திருவள்ளுவ
ர்
sawmya
sawmya
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 2919

Back to top Go down

வாழ்க்கைக்கான பாடங்கள் Empty Re: வாழ்க்கைக்கான பாடங்கள்

Post by sawmya Mon Oct 21, 2013 11:53 am

ஆழமான கடலில் முத்துக்கள் இருக்கின்றன. 
ஆனால் அவற்றை எடுபதற்கு ஒருவன் எல்லாவித ஆபத்துகளுக்கும் துணிய வேண்டும். கடலில் ஒருமுறை மூழ்கியதும் உனக்கு முத்துக்கள் அகப்படாது போனால் அக்கடலில் முத்துக்களே இல்லை என்று தீர்மானித்து விடாதே. 
அடிக்கடி மூழ்கு . 
கடைசியில் உனக்கு முன்னேற்றமும் பலனும் நிச்சயம் கிடைக்கும் 
- ஸ்ரீ ராமகிருஷ்ணர்
sawmya
sawmya
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 2919

Back to top Go down

வாழ்க்கைக்கான பாடங்கள் Empty Re: வாழ்க்கைக்கான பாடங்கள்

Post by sawmya Tue Oct 22, 2013 9:35 am

உண்மையை யாரும் நம்புவதில்லை.
பசும்பாலிலிருந்துதயாரித்த மோரை தெருத்தெருவாக அலைந்து விற்க வேண்டியுள்ளது.
ஆனால் கள்உட்கார்ந்த இடத்திலேயே விற்றுப் போய் விடுகிறது.


நல்லது மெதுவாகத்தான் விலை போகும்.
விரைவில் விற்பதால் கெட்டதுஒரு போதும் நல்லதாகிவிடாது.
உண்மையைப் போன்ற தவம் இல்லை.பொய்யைப் போன்ற பாவம் இல்லை.
உண்மையைப் பொய்,நிந்தை ஒன்றும் செய்து விட முடியாது.
காலம் அதனை விழுங்கி விட முடியாது.உண்மைக்கு வெற்றி கிடைத்தே தீரும்.


நன்றி! முக நூல்.
sawmya
sawmya
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 2919

Back to top Go down

வாழ்க்கைக்கான பாடங்கள் Empty Re: வாழ்க்கைக்கான பாடங்கள்

Post by sawmya Tue Oct 22, 2013 9:36 am

மற்றவர்களது இரகசியங்களைத தெரிந்து கொள்வதில் செவிடனாக இரு.

பிறன் மனைவியைப் பார்க்கும் பொது குருடனாக இரு.

கோள் சொல்லும் விசயத்தில் ஊமையாக இரு.

அப்படி இருப்பவனுக்கு நல வழிப் பாடம் போதிக்க வேண்டியதில்லை.

அவனே அறத்தின் உருவமாவான்.


நன்றி! முக நூல்.
sawmya
sawmya
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 2919

Back to top Go down

வாழ்க்கைக்கான பாடங்கள் Empty Re: வாழ்க்கைக்கான பாடங்கள்

Post by sawmya Sat Oct 26, 2013 12:06 pm

மனித இனத்தின் சிறப்பு பகுத்தறிவு.


மனிதனை உயர்த்தும் பண்புகளில் முக்கியமானது சிரிப்பு.
சிரித்தால் சொர்க்கம்.
துக்கப்பட்டால் நரகம்.
மனிதனை தாழ்த்தும் குணங்களில் முக்கியமானது கவலை.
நீடித்த கவலையே துக்கம். நவீன மனிதனின் கொடிய நோய் துக்கம்தான்.
கவலைகளுக்குக் காரணம் ஆசைகள். 
ஆசைகளின் அளவிற்கேற்ப கவலைகள் வளரும்.
மனிதனின் வேதனைகளுக்கு முக்கிய காரணம் ஈகோ.
அறிவை மழுங்கச் செய்யும் ஆற்றல் படைத்தது ஈகோ. அது அழிந்தால் உண்மையான விழிப்புணர்வு பிறக்கும். ஈகோவை களைந்த மனிதன் கடவுள் நிலையை அடைகிறான்.
எண்ணங்கள் – ஹார்மோன்கள் – நரம்புகளின் செயல்பாடுகள் இம்மூன்றும் தொடர் சங்கிலி.
நல்ல எண்ணங்களுக்கேற்ப நல்ல ஹார்மோன்கள் சுரக்கும். அதன் விளைவாக நரம்புகள் உற்சாகமடைகின்றன.


நன்றி! முக நூல்.
sawmya
sawmya
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 2919

Back to top Go down

வாழ்க்கைக்கான பாடங்கள் Empty Re: வாழ்க்கைக்கான பாடங்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum