தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


பொருள் பழசானாலும் பழுதானாலும் கைவிடுவது மனித இயல்பு உயிர் பழசானாலும் பழுதானாலும் கைவிடுவது மனித நேயமல்ல‌

View previous topic View next topic Go down

பொருள் பழசானாலும் பழுதானாலும் கைவிடுவது மனித இயல்பு உயிர் பழசானாலும் பழுதானாலும் கைவிடுவது மனித நேயமல்ல‌ Empty பொருள் பழசானாலும் பழுதானாலும் கைவிடுவது மனித இயல்பு உயிர் பழசானாலும் பழுதானாலும் கைவிடுவது மனித நேயமல்ல‌

Post by முழுமுதலோன் Wed Oct 09, 2013 9:53 am


  • கணவன்
  • மனைவி
  • அன்னை
  • தந்தை
  • பெற்றோர்
  • குழந்தைகள்
  • இளமை
  • மாணவர்கள்
  • முதுமை

                   
                  அன்னைக்கு அபிசேகமில்லை
                  அவளில்லாமல் யாருமில்லை
                  ஆண்டவனுக்கு உருவமில்லை
                  அவனில்லாமல் எதுவுமில்லை



                                 
கணவன்


உன் குழந்தையின் தாயை நீ நேசிக்கக் கற்று கொள்
உன் குழந்தைகள் உன்னை நேசிக்கக் கற்று கொள்வார்கள்

கணவனை பிரிந்தவனுக்கு வாழ்வில் அமைதி என்றுமில்லை
மணைவியை பிரிந்தவனுக்கு வாழ்வு என்று ஒன்றுமில்லை

நன்பரும் பகையும் நாமே தேர்ந்தது
மணைவியும் குழந்தையும் தானே நேர்ந்தது

கண்ணையே காத்தாலும் இமையின் அருமை தெரியாது கண்ணுக்கு
தன்னையே காத்தாலும் இணையின் பெருமை புரியாது கணவனுக்கு

சிலர் மணைவியை ஆகாரம் போட்டு வளர்க்கும் 
ஆடு போல நினைக்கிறார்
சிலர் மணைவியை ஆகாரம் போட்டு வளர்த்த 
அன்னை போல நேசிக்கிறார்

முட்டையிடும் கோழியை அறுத்துப் பார்க்காதே
பெட்டையென்று தாரத்தையே வெறுத்துப் பேசாதே

உளமறிந்து கூடி உணர்வறிந்து கலப்பவன் அவனுக்கு உற்ற துனை
மனமறிந்து பேசி வரவறிந்து வாழ்பவள் அவனுக்கு உயிர் துனை

மோசமான மனிதனுடைன் பழக முடியும் 
ஆனால் பயணம் செய்ய முடியாது
மோசமான மனிதனுடைன் பிள்ளை பெற முடியும் 
ஆனால் குடும்பம் நடத்த முடியாது

சில பெண்களால் நல்லவர்கள் மிகவும் வல்லவர்களாகிறார்கள்
சில பெண்களால் கெட்டவர்கள் மேலும் கெட்டவர்களாகிறார்கள்

சரியான பதில் கிடைக்கும் போது ஆசிரியன் மகிழ்கிறான்
சரியான மனைவி கிடைக்கும் போது கணவன் மகிழ்கிறான்
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

பொருள் பழசானாலும் பழுதானாலும் கைவிடுவது மனித இயல்பு உயிர் பழசானாலும் பழுதானாலும் கைவிடுவது மனித நேயமல்ல‌ Empty Re: பொருள் பழசானாலும் பழுதானாலும் கைவிடுவது மனித இயல்பு உயிர் பழசானாலும் பழுதானாலும் கைவிடுவது மனித நேயமல்ல‌

Post by முழுமுதலோன் Wed Oct 09, 2013 9:54 am

மனைவி


பாலில் திரளும் பாலாடை போல சுவையானது 
நல்ல மனைவியின் காதல்
மோரில் திரளும் வெண்ணைய் போல 
மகிழ்வானது நல்ல மகனின் சாதனைகள்

ஆண்களோ பெண்களால் இயக்கப்படும் பொம்மைகள்
பெண்களோ ஆசைகளால் இயக்கப்படும் பொம்மைகள்

கணவனை அன்பு செய்யாத மனைவிகள் சண்டை போடுகிறார்கள்
கணவனை அன்பு செய்யும் மனைவிகள் சந்தேகப் படுகிறார்கள்

செல்வ பெண்ணை மணம் செய்தால் 
ஒரு வருட காலம் சுகமாக வாழ்வாய்
ஏழை பெண்ணை மணம் செய்தால் 
ஒரு ஆயுள் காலம் சுகமாக வாழ்வாய்

அறிவுற்ற பகையை விட அறிவுற்ற நட்பே ஆபத்தானது
அழகற்ற துணையை விட அறிவுற்ற மனைவியே ஆபத்தானது

உள்ளத்தின் உள்ளேயும் நல்லவனாய் இருந்தால் 
இயலாதது ஒன்றுமில்லை
இல்லத்தின் இல்லாளும் வல்லவராய் இருந்தால் 
இல்லாதது ஏதுமில்லை

உரமான நெஞ்சிருந்தால் வாழ்வுக்கு அது தரமன்றோ
தரமான தாரமிருந்தால் வாழ்வுக்கு அது வரமன்றோ

மதங்களில் சிறந்தது சம்மதம்
மார்க்கங்களில் சிறந்தது சன்மார்க்கம்
மொழிகளில் சிறந்தது மெளனம்
சாதிகளில் சிறந்தது பெண்சாதி

விருந்தாகவும் கசக்காத மருந்தாகவும் இருப்பது தேன் ஒன்றே
விருந்தாகவும் சலிக்காத மருந்தாகவும் இருப்பது பெண் ஒன்றே
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

பொருள் பழசானாலும் பழுதானாலும் கைவிடுவது மனித இயல்பு உயிர் பழசானாலும் பழுதானாலும் கைவிடுவது மனித நேயமல்ல‌ Empty Re: பொருள் பழசானாலும் பழுதானாலும் கைவிடுவது மனித இயல்பு உயிர் பழசானாலும் பழுதானாலும் கைவிடுவது மனித நேயமல்ல‌

Post by முழுமுதலோன் Wed Oct 09, 2013 9:54 am

அன்னை


பிறந்தது மிருகம் என்றாலும் அதைப் பேணும் கருணையே தாய்மையே
பிறந்தது பேதை என்றாலும் மனம் கோணாத பெருமையே தாய்மை

சுத்தமாய் சென்று அசுத்தமாய் வந்ததென்ன ரத்தமேயென 
சலிப்பதில்லை இதயம்
குழந்தையாய் பிறந்து கொடியனாய் வளர்ந்ததென்ன மகனேயென அலுப்பதில்லை அன்னை

கடவுள் நேயத்தில் மிஞ்சியிருப்பது உண்டியல் மட்டுமே
மனித நேயத்தில் எஞ்சியிருப்பது தாய்ப்பால் மட்டுமே

அன்பு உடையது மனிதம் என்பதற்கு அன்னையே சாட்சி
அநீதி உடையது சமூகம் என்பதற்கு வறுமையே சாட்சி

வென்றவனை பாராட்ட உலகத்தில் ஒரு கோடி கைகள்
வீழ்ந்தவனை சீராட்ட அன்னையின் ஒரு ஜோடி கைகள் மட்டுமே

விதையென்பது மழலைப்பருவம்
விளைச்சலென்பது இளமைப் பருவம்
மலரென்பது காதல் பருவம்
கனியென்பது தாய்மைப் பருவம்

வாய்மையும் தூய்மையும் கலந்ததொரு நேர்மையே தூய்மை
வளமையும் குளுமையும் கலந்ததொரு புதுமையே இளமை

ஆயிரம் கோடியை விட அன்னை மடியின் அன்பு நிழல் அமைதியானது
ஆயிரம் மருந்தை விட நண்பன் சொல்லின் மருந்து சுகமானது

                  அன்னைக்கு அபிசேகமில்லை
                  அவளில்லாமல் யாருமில்லை
                  ஆண்டவனுக்கு உருவமில்லை
                  அவனில்லாமல் எதுவுமில்லை
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

பொருள் பழசானாலும் பழுதானாலும் கைவிடுவது மனித இயல்பு உயிர் பழசானாலும் பழுதானாலும் கைவிடுவது மனித நேயமல்ல‌ Empty Re: பொருள் பழசானாலும் பழுதானாலும் கைவிடுவது மனித இயல்பு உயிர் பழசானாலும் பழுதானாலும் கைவிடுவது மனித நேயமல்ல‌

Post by முழுமுதலோன் Wed Oct 09, 2013 9:55 am

தந்தை


மங்கையால் வருவது மயக்கம் நிந்தையால் வருவது கலக்கம்
சிந்தையால் வருவது உயர்வு தந்தையால் வருவது சிறப்பு

ஏழை வீட்டில் ஓர் அறிஞன்,கரும்பலகையில் எழுதியவெள்ளை எழுத்து
ஞான வீட்டில் ஓர் கயவன்,வெள்ளை ஆடையில் சிந்திய கருப்புமை

வேர்கள் இல்லாமல் மலர்கள் மலர்வதில்லை
வேர்வை சிந்தாமல் வெற்றிகள் கனிவதில்லை

இறந்தபின் க்ண் தருகிறேன் என்றால் 
எப்போதும் இனிமையாய் புகழ்வார்கள்
இறந்தபின் சொத்து தருகிறேன் என்றால் 
எப்போது இறப்பாய் என்கிறார்கள்

ஆண்டும் வயதும் முதிர்ந்ததனால் முதியவர் எனப்படுவார்
அறிவும் அனுபவமும் முதிர்ந்தால் தான் பெரியவர் எனப்படுவார்

அன்பிலாத அன்னை
பண்பிலாத தகப்பன் குடும்பத்துக்கு கேடு
அறிவிலாத மாணவன்
செறிவிலாத ஆசிரியன் குழப்பத்தின் வீடு

தந்தைக்கு உதவி தேவைப்படும் போது பகைமை கூடாது
முதுமையிலே அவதிப்படும் போது அவமானம் செய்யக் கூடாது

கடல் போல் செல்வமிருந்தாலும் ஒரு துளி அன்புக்காக் மனம் ஏங்கும்
வான் போல் புகழிருந்தாலும் ஒரு குழந்தைக்காக உயிர் ஏங்கும்

சரியான உறவுகள் அமைந்தவருக்கு அமைதிக்கு குறைவில்லை
உயவான மகனை பெற்றவருக்கு உலகில் நிகரில்லை
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

பொருள் பழசானாலும் பழுதானாலும் கைவிடுவது மனித இயல்பு உயிர் பழசானாலும் பழுதானாலும் கைவிடுவது மனித நேயமல்ல‌ Empty Re: பொருள் பழசானாலும் பழுதானாலும் கைவிடுவது மனித இயல்பு உயிர் பழசானாலும் பழுதானாலும் கைவிடுவது மனித நேயமல்ல‌

Post by முழுமுதலோன் Wed Oct 09, 2013 9:56 am

பெற்றோர்


உங்கள் தாய் தந்தைக்கு மரியாதை செய்யுங்கள்
உங்கள் குழந்தைகள் உங்களுக்கு மரியாதை  செய்யும்

தான் பெற்றவரிடம் பாசம் வைப்பவர் மனிதர் அது பந்தம் என்போம்
தன்னை பெற்றவரிடம் பாசம் வைப்பவர் புனிதர் அது பக்தி என்போம்

நல்லவருக்கு நாம் தரும் மரியாதை அவர் சொல்படி நடப்பதே
பெற்றவர்க்கு நாம் தரும் நன்றி உலகில் நல்லபடி பெயரெடுப்பதே

மனமெனும் கல்லிலே சொல்லை பதிப்பதே கல்வி
புணர்வெனும் கலையிலே உயிரை புதிப்பிப்பதே கலவி

மலர்களையும் கவனி அதன் வேர்களையும் கவனி
பெற்றவைகளையும் கவனி உன்னை பெற்றவர்களையும் கவனி

சிலரது முற்பாதி வாழ்கை பெற்றோரால் துயரப்படுகிறது
சிலரது பிற்பாதி வாழ்க்கைகுழந்தைகளால் துயரப்படுகறது

நல்ல கண்வனின் கடமை 
மணைவியிடம் செலவை விட அதிகம் சம்பாதிப்பது
நல்ல மணைவியிடம் கடமை 
கணவனின் வரவை விட குறைவாக செலவழிப்பது

குழந்தைகளுக்கு தர வேண்டிய மகத்தான பரிசு சுதந்திரம்
முதியவர்க்கு தர வேண்டிய மகத்தான பரிசு மரியாதை

குழந்தைகள் மனதில் பண்பை விதைத்தால் பாசமென்ற மலராகும்
குழந்தைகள் மனதில் அன்பை விதைத்தால் அமைதியென்ற மலராகும்
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

பொருள் பழசானாலும் பழுதானாலும் கைவிடுவது மனித இயல்பு உயிர் பழசானாலும் பழுதானாலும் கைவிடுவது மனித நேயமல்ல‌ Empty Re: பொருள் பழசானாலும் பழுதானாலும் கைவிடுவது மனித இயல்பு உயிர் பழசானாலும் பழுதானாலும் கைவிடுவது மனித நேயமல்ல‌

Post by முழுமுதலோன் Wed Oct 09, 2013 9:56 am

குழந்தைகள்


இளம் செடியை காயப்படுத்தாதே அடியோடு ஒடிந்து விடும்
இளம் மனதை காயபடுத்தாதே வளர்வது நின்று விடும்

அங்கே குதிரைகளுக்கும் ஊக்கம் கொடுக்கிறார்கள்
இங்கே குழந்தைகளுக்கே ஏக்கம் கொடுக்கிறார்கள்

குழந்தைகளின் அழகு அவர்களின் சிரிப்பிலே
இளைஞர்களின் அழகு அவர்களின் துடிப்பிலே

வயலில் ஒரு நெல் போட்டால் நூறு நெல் வளரும்
மழலையிடம் சிறு அன்பு காட்டினால் பேரன்பாக வளரும்

குறை சொல்லாதீர்கள் அது குருத்துக்களை மடித்து விடும்
குற்றம் சொல்லாதீர்கள் அது சுற்றங்களை ஒடித்து விடும்

தட்ட தட்ட காய்ச்சிய இரும்பு நீளும்
குட்ட குட்ட குழந்தை உள்ளம் குறுகும்
பாலால் அல்ல பாசத்தால் ஊக்கம் பெருகிறது குழந்தை
உணவால் அல்ல ஊக்கத்தால் ஊட்டம் பெருகிறது குழந்தை

வழி தவறிய குழந்தை குறி தவறிய குண்டை விட கொடியது
வழிதவறிய பெண்மை தடம் புரண்ட ரயிலை விட விபத்தானது

வானத்தின் சிரிப்பு நிலவிலே
நிலத்தின் சிரிப்பு மலரிலே
இதயத்தின் சிரிப்பு காதலிலே
மனிதனின் சிரிப்பு மழலையிலே
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

பொருள் பழசானாலும் பழுதானாலும் கைவிடுவது மனித இயல்பு உயிர் பழசானாலும் பழுதானாலும் கைவிடுவது மனித நேயமல்ல‌ Empty Re: பொருள் பழசானாலும் பழுதானாலும் கைவிடுவது மனித இயல்பு உயிர் பழசானாலும் பழுதானாலும் கைவிடுவது மனித நேயமல்ல‌

Post by முழுமுதலோன் Wed Oct 09, 2013 9:57 am

இளமை


மழைக் காலத்தில் புரண்டோடும் 
வெள்ளைத்தை கரை கட்டினால் உயிர்கற்க‌லாம்
இளமைக் காலத்தில் புரண்டோடும் 
காமத்தை கரை கட்டினாலே கல்விகற்க‌லாம்

இரும்பு சூடாக இருக்கும் போதே அதை வளைக்க முடியும்
மனிதன் இளமையாக இருக்கும் போதே அவனை திருத்த முடியும்

வெயிலடிக்கும் போதே வீட்டு கூரையை சரி பார்த்து விடு
இளமையிருக்கும் போதே கல்வி கலைகளைச‌ரியாக படித்து விடு

கச்சு மீறும் இளமையில் இச்சை வைத்து திரியலாமோ இளைஞனே
அச்சு முறியும் வண்டியென இளமை தீர்த்து விழலாமோ இளைஞனே

கற்பனையே கல்வியாக கனவுகளே உணவாக 
இளமையிலே வீழ்ந்தால்
வேதனையேஉடையாகசோதனையேநடையாக
முதுமையிலே வீழ்வாயே

இனக் கவர்ச்சி ஒளியிலே விட்டிலென வீழ்ந்தார் பல இளைஞர்
காமப்புகைப்படத்தால் கருத்திழந்தார் பல இளைஞர்

கல்வியில் சிறந்த உயர்வில்லை
கலவியில் சிறந்த இன்பமிலலை
இளமையில் சிறந்த பருவமில்லை
ஈகையில் சிறந்த பண்புமில்லை

பலருக்கு வேலை தரும் திறமையிருக்கு வேலை தேடுவதேன் 
பலருக்கு அள்ளித்தரும் வளம் இருக்க கையை ஏந்துவதேன்
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

பொருள் பழசானாலும் பழுதானாலும் கைவிடுவது மனித இயல்பு உயிர் பழசானாலும் பழுதானாலும் கைவிடுவது மனித நேயமல்ல‌ Empty Re: பொருள் பழசானாலும் பழுதானாலும் கைவிடுவது மனித இயல்பு உயிர் பழசானாலும் பழுதானாலும் கைவிடுவது மனித நேயமல்ல‌

Post by முழுமுதலோன் Wed Oct 09, 2013 9:58 am

மாணவர்கள்


விரல் தேடலில் இசை பிறந்தது
வீரனின் தேடலில் வெற்றி பிறந்தது
மண்ணைத் தேடினால் பொன் பிறந்தது
மாணவன் தேடலில் ஞானம் பிறந்தது

அகல் விளக்கிலும் படித்தவர் அனுவைப் பிளந்து வென்றார்
குழல் விளக்கிருந்தும் படிக்காது குழலில் புகை விடுகிறார்

கல்விக்கு தாகமென்பது நாளை வெல்லும் இளைஞனது துடிப்பு
கலவிக்கு மோகமென்பது நாளை வீழும் இளைஞனது துடிப்பு

ஓட்டப்பந்தயம் போல மனிதர் கலவிப் போட்டி ஆகக்கூடாது
குதிரைப் பந்தயம் போல மாணவர் கல்விப் போட்டி ஆகக்கூடாது

ஒட்ட பந்தயத்திலே நிர்வான எலிகள் வென்று வீடுகின்றது
ஊழல் பந்தயத்தில் தன்மான புலிகள் நின்று விடுகின்றது

சில கற்களை புகழாக்கும் கல்வி பல வைரங்களை புதைகிறது
சில கற்களை சிலையாக்கும் கல்வி பல தேவைகளை வதைக்கிறது

காதலி முகத்தில் உள்ள ஈயை விரட்ட செருப்பை வீசாதிர்கள்
மாணவர் குணத்தில் உள்ள குறையைச் சொல்ல நெருப்பை வீசாதீர்கள்

வென்றவர்க்கு பொன்னையும் பொருளையும் 
கொடுத்து உற்சாகப்படுத்து
தோற்றத்துக்கு அன்பையும் ஆதரவையும் 
கொடுத்து ஊக்கப்படுத்து

குத்தி விரட்டினால் சில மைல் தூரம் ஓடும் குதிரை
தட்டி கொடுத்தால் பல நூறு வருடம் ஓடுவான் மனிதனே
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

பொருள் பழசானாலும் பழுதானாலும் கைவிடுவது மனித இயல்பு உயிர் பழசானாலும் பழுதானாலும் கைவிடுவது மனித நேயமல்ல‌ Empty Re: பொருள் பழசானாலும் பழுதானாலும் கைவிடுவது மனித இயல்பு உயிர் பழசானாலும் பழுதானாலும் கைவிடுவது மனித நேயமல்ல‌

Post by முழுமுதலோன் Wed Oct 09, 2013 9:58 am

முதுமை


வயது கூடகூட முகத்தின் புன்னகை தேயும்
வயது கூடகூட அகத்தின் ரசனைகளும் தேயும்

இளமையில் நிறைய அறிந்து கொள்ள முடியும்
முதுமையிலே நிறைய புரிந்து கொள்ள முடியும்

குழந்தை காலில் உற்சாக சக்கரம் 
இளைஞன் இருப்பிலே கற்பனை சிறகு
குடும்பஸ்தர் தலையிலே சம்சார பாரம் 
முதியவ்ர் கையிலே அனுபவ சங்கிலி

மனைவியை உதாசீனம் செய்த பலன் தனிமையில் கிடைக்கும்
குழந்தையை அவமானம் செய்த பயன் முதுமையில் கிடைக்கும்

வள்மையும் இளமையும் வாழ்வின் முகத்தின் பக்கம்
வறுமையும் முதுமையும் வாழ்வின் முதுகுன் பக்கம்

குழந்தைகள் இல்லாத உலகம் அன்பு வற்றிப்போகும்
முதியவர் இல்லாத இல்லம் அறிவு வற்றிப்போகும்

அபநம்பிக்கை என்பது இளமையில் தோன்றும் முதுமை
நம்பிக்கை என்பது முதுமையிலும் மலரும் இளமை

பொருள் பழசானாலும் பழுதானாலும் கைவிடுவது மனித இயல்பு
உயிர் பழசானாலும் பழுதானாலும் கைவிடுவது மனித நேயமல்ல‌

இளமையின் பெருமை காமம் விடுத்து கல்வி கற்பதே
முதுமையின் அருமை கோபம் விடுத்து குணம் கற்பிப்பதுவே

மழலையின் பசியும் மழலையில்லாத பெண்மையும் மனதுக்கு வேதனை
இளமையில் வறுமையும் முதுமையில் காமமும் மண்ணுக்கு வாதனை


http://arthamullainiyamanam.wordpress.com
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

பொருள் பழசானாலும் பழுதானாலும் கைவிடுவது மனித இயல்பு உயிர் பழசானாலும் பழுதானாலும் கைவிடுவது மனித நேயமல்ல‌ Empty Re: பொருள் பழசானாலும் பழுதானாலும் கைவிடுவது மனித இயல்பு உயிர் பழசானாலும் பழுதானாலும் கைவிடுவது மனித நேயமல்ல‌

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum